பெரியப்பாவிடம் இருந்து ஏதேனும் நல்ல செய்தி வந்துவிடாதா! என அவர் ஊருக்குக் கிளம்பும் போது ஆவல் மேலோங்க அவர் வாயையேப் பார்த்திருந்தான் யாழினியன்.
அவரின் சோழிப் பற்களைப் பூட்டி வைத்திருக்கும் வாய், தன் காதலுக்கு நல்லதொரு ஜோதிடம் சொல்லாதா என ஏங்கியபடிக் காத்திருந்தான்.
ஒன்றும் சொல்லாமல், "தம்பிங்களா நாங்க கிளம்பறோம் பத்திரமா இருங்க, நைட்ல லேட்டா வராதீங்கடா! ஆம்பிளைப் பசங்க சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வந்துட்டாலே நாட்டுல நடக்குற கொலை, கொள்ளை கற்பழிப்புன்னு எல்லாம் முக்கால்வாசி குறைஞ்சுடும். என்னடா நான் சொல்றது வரட்டா!" என்று கூறி பிரதாப் இரு மகன்களின் முதுகிலும் ஒரு தட்டு தட்டினார்.
பல வருடங்களாக, மர மேஜையில் தட்டித் தட்டி மாணவர்களை அடக்கிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் கையின் பலம், அந்த அடியில் தெரிந்தது.
தாங்கள் கொண்டு வந்திருந்த சிறு பையோடு தெய்வானைக் கிளம்ப, அதை ஓடிச்சென்று வாங்கிக் கொண்டார் பிரதாப்.
"என்ன தெய்வா நீ! நான் இருக்கும் போது நீ இவ்வளவு வெயிட்டைத் தூக்கலாமா!" என கைக்கு அடக்கமாக இருந்த சிறு பையை தெய்வானையிடம் இருந்து கைப்பற்றிய பிரதாப்பைப் பார்த்து உதிரன் முறைக்க, யாழினியனோ ஏக்கத்துடன் பார்த்தான்.
"இப்ப என்னடா நீயும் இதே மாதிரி, தம்மாத்துண்டு பையை உன் பொண்டாட்டிக்கிட்டேர்ந்து பிடிங்கி தூக்கிட்டுப் போகணும் அப்படித்தானே!" என அவனருகே வந்து நின்று காது கடித்தான் உதிரன்.
அதற்கு ஆமாம் என்று மேலும் கீழுமாக இனியன் தலையசைக்க, "ஏன்டா ஏன்டா இப்படி இருக்கீங்க! அவங்களால முடிஞ்ச பாரத்தை அவங்க தூக்கட்டுமே! எதுக்கு இந்த வெட்டி வேலை. நான் உன்னைத் தாங்குறேன், உனக்காகத் தான் செய்யறேன்னு சொல்லாம சொல்லணுமா! இப்படி தாங்கு தாங்குன்னு தாங்கிட்டு, திடீர்னு ஒருநாள் தூக்கி டமால்னு கீழ போட்டுருவீங்க அப்படித்தானே!
மனைவியை அவங்களாவே இருக்கவிடுங்களேன் டா! உண்மையிலயே பாரம் சுமக்கும் போது ஷேர் பண்ணிக்குங்களேன்!"
"ம்ம், உனக்கு எங்கத் தெரியப் போகுது அன்போட மகத்துவம். எல்லாரும் நீ சொல்றா மாதிரி சந்தர்ப்பவாதிகள் இல்லை, உன் அப்பா அன்னிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் அம்மாவை தாங்கிக்கிட்டுத் தானே இருக்காரு. உங்க அம்மாவும் அன்புல சளைச்சவங்க இல்லை. அவரை மாதிரி நானும் இருப்பேன்டா!" என தன் மன உறுதியை வார்த்தைகளின் உச்சரிப்பில் காட்டினான் யாழினியன்.
"ஹேய் கூல்! சரி நீ காதல் தீவிரவாதின்னு நான் ஒத்துக்குறேன் போதுமா!" என மெல்ல தோளில் கை வைத்த உதிரனின் கைகளை விலக்கிய படி, அவனின் பெற்றோரை நோக்கிச் சென்றான்.
"பெரியப்பா அந்த விஷயம் பத்திப் பேசுனீங்களா?" என மென்குரலில் அவன் கேட்டது அவரது காதில் விழாமல் போக, சரியாக தெய்வானையின் காதில் விழுந்தது.
"ம்ம்!" என சூளத்தைக் கையில் ஏந்தி முறைக்கும் காளியைப் போல் அவர் கோபப் பார்வை பார்க்க, சட்டென்று தலையைத் தாழ்த்திக் கொண்டு உதிரனின் பின்னால் ஒளிந்து கொண்டான் யாழினியன்.
தம்பதியர் இருவரும் ஜோடியாக மாடியில் இருந்து இறங்கி வருவதற்காகவே காத்திருந்ததைப் போல, கீழ் படியில் சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள் ஆத்மிகா.
"ஆன்ட்டி, நீங்க ஆசைப்பட்ட செடிகளோட சேர்த்து காசி தும்பை விதை, பவளமல்லி விதை, ரெண்டு சின்ன ரோஜா கண்ணு எல்லாம் வெச்சிருக்கேன்" என மிகப்பெரிய துணிப்பையை தந்தாள். துணிப்பையின் உள்ளே நிறைய சிறிய சிறிய அறைகள் இருக்க, அதில் ஒவ்வொன்றிலும் பதியம் போட்ட செடிகள் இருந்தன.
'நாம் கேக்காமலேயே இவள் எப்படி இதைத் தந்தாள்!' என ஆவலும் ஆச்சியமுமாக தெய்வானை விழிக்க, "மா நீ வேற லெவல்மா! உன் சிந்தனையும், செய்கையும் ரொம்ப ரொம்ப தெளிவும்மா. இந்த காலத்து பொண்ணுங்க எவ்வளவு தெளிவா இருக்கீங்கன்னு நினைக்கும் போது ரொம்பப் பெருமையா இருக்கும்மா!" என்று கூறி ஆத்மிகாவின் தலையில் தன் வலது உள்ளங்கையை வைத்து அழுத்தி, "எந்த குறையும் இல்லாம நல்லா இரும்மா!" என்று ஆசிர்வதித்தார் பிரதாப்.
உள்ளங்கையில் நம் உடலின் மின்காந்த அலைகள் இருக்கும் என்றும், அதனால் அவ்வளவு எளிதில் யாரிடமும் கையைக் கொடுக்கக் கூடாது, யார் தலையிலும் கையை வைக்கக்கூடாது என்றும் கொள்கை உடையவர், ஆதுவின் தலையில் கை வைத்தது அவரை நன்கு தெரிந்தவர்களுக்கு ஆச்சரியமே!
'நம்ம எதிர்ல இருக்குறவங்க மனசுல என்ன எண்ணமெல்லாம் ஓடுமோ! ஒருவேளை அவங்க மனசுல கெட்ட எண்ணங்கள் இருந்தால், நம்ம கை கொடுக்கும் போது நம்ம உடம்புல உள்ள பாசிட்டிவிடி குறையும்' என்று வித்தியாசமான தத்துவம் பேசும் தந்தையா இது என ஆவென உதிரன் பார்த்திருக்க, "இந்த பை நீயே தைச்சியா மா! ரொம்ப நல்லா இருக்கு நன்றிம்மா!" என்றபடி அவள் தந்த பையில் இருந்த செடிகளை புதிதாய் பிறந்த குழந்தையைத் தொடுவது போல், ஒற்றை விரலால் மென்மையாகத் தொட்டுப் பார்த்தார் தெய்வானை.
வாயிலில் காத்திருந்த ஆட்டோவில் பெற்றோர்களை ஏற்றிவிட்டு அவர்களின் பின்னே வண்டியில் இரு மகன்களும் தொடர்ந்து சென்று பேருந்தில் ஏற்றிவிட்டு வந்தனர்.
கடைசி வரை பெரியப்பாவிடம் உண்மையைத் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையில் யாழினியன் வேகமாக மாடிக்குச் சென்றுவிட, கீழே தோட்டத்தில் செடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஆத்மிகா, உதிரனின் கண்ணில் பட்டாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அணிந்திருந்த அதே ஊதா நிற சுடிதாரைப் பார்க்கவும் தான், உதிரனுக்கு அய்யோ என்று ஆனது. உடனே அவளை அழைத்தவன், "ஆத்மிகா! ஹேப்பி பர்த்டே, சாரி ஃபார் தி பிலேட்டட் விஷஸ்!" என்றான் சிறு குற்றவுணர்வோடு.
தன் பெற்றோர் படி ஏறுகையில் பேசுவதை வைத்தே, அவர்கள் கேட்காமல் பை நிறைய செடிகளைத் தந்தவளுக்கு, ஒரு சிறு பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லத் தவறிவிட்டோமே என்ற தவிப்பு மேலோங்க நின்றிருந்தான்.
'ஏன் அன்னிக்கே சொல்லலை! அடுத்த வருஷத்துக்கான பிறந்தநாள் வாழ்த்தை ரொம்ப சீக்கிரமா சொல்லிட்டீங்களே!' என்றெல்லாம் பதில் வருமோ என்று எதிர்பார்த்து நின்றிருந்தவனுக்கு, "ரொம்ப நன்றிங்க!" என்று சிரித்த முகத்தோடு பதில் கூறிவிட்டு, விட்ட இடத்தில் இருந்து செடிகளிடம் உரையாடத் தொடங்கினாள் ஆத்மிகா.
"ஏங்க சாரிங்க! அன்னிக்கே பர்த்டே விஷ் பண்ணலைன்னு தப்பா நினைச்சுக்காதீங்க!" என தான் செய்ததன் தாக்கம் இன்னமும் குறையாமல் அவன் அலைபாய, "ச்சுப் இதுல என்னங்க இருக்கு? யாரும் யாருக்கும் பர்த்டே விஷ் பண்ணாலும், பண்ணலைன்னாலும், பர்த்டே பாட்டுக்கு வரும், போகும். எனக்கு யாருமே விஷ் பண்ணாம இருந்தாக் கூட நான் கவலைப்படமாட்டேங்க! ஏன்னா நம்ம சந்தோஷம் நம்ம கையில தானே இருக்கு!" என லேசாக தோள்களைக் குலுக்கி சொல்லிவிட்டு, செடியில் பழுத்திருந்த இலைகளைப் பறித்துக் கீழே போட்டாள்.
"தேவையில்லாம இதெல்லாம் சேர்த்து வெச்சுக்காதன்னு எவ்வளவு தடவை சொல்றது. காத்து அடிக்கும் போதே, பழுத்த இலையை எல்லாம் கீழே போட்டுடறது தானே! ஒவ்வொரு முறையும், நானா வந்து தேடி எடுத்து கீழ போடுற வரைக்கும் இப்படியே இருந்தா, என்ன செய்யுறது ம்ம்!" என ஆத்மிகாவின் குரல் படியேறிக் கொண்டிருந்த உதிரனின் காதில் விழுந்தது.
'உண்மை தானே! தேவையில்லாத பாரத்தை எதற்கு சுமந்து கொண்டு திரிய வேண்டும். அவ்வப்போது அவைகளை இதயத்தில் இருந்து உதிர்த்துவிட்டால் நிம்மதியா இருக்கலாம் அல்லவா!' என்ற உதிரனின் மூளை தத்துவம் சொல்ல, 'இவ இப்படி இந்த செடி கூட எல்லாம் கொஞ்சுறதால தான், இந்த வீட்டு செடியும், பூவும் மட்டும் ரொம்ப அழகா நிறைய பூக்குது போல, சும்மாவா சொன்னாங்க செடிகளுக்கும் உயிர் இருக்குன்னு' என்று அவனின் இதயம் நினைத்துக் கொண்டது.
"இது உனக்கே ரொம்ப ஓவராத் தெரியல!" என்று ஒரே நேரத்தில் இனியன் உதிரனைப் பார்த்தும், அமரிஷா ஆத்மிகாவைப் பார்த்தும் கத்தினார்கள்.
"என்ன அமர்? நான் அப்படி என்ன ஓவராப் பண்ணிட்டேன்!" என்றபடி தோட்டத்தின் தரையில் கிடந்த இலைகளை எல்லாம் கூட்டி அள்ளியவள், இயற்கை உரம் தயாரிக்கும் பெட்டியில் அதை போட்டாள்.
"ம்ம், அன்னிக்கு நீதானே சொன்ன பர்த்டேக்கு விஷ் பண்ணனும்னு இங்கிதம் தெரியாத இடிமுட்டின்னு, ஆனா இன்னிக்கு எதையும் கேர் பண்ணிக்காத மாதிரி அவர்கிட்ட பேசுற!" என கண்களாலேயே அவளை விழுங்கி விடுவது போலக் கேட்டாள் அமரிஷா.
"ஹா! ஹா! அதுக்காக அவங்கிட்டயே போய் நீ பர்த்டேக்கு விஷ் பண்ணலைன்னு, நான் ஃபீல் பண்ணேன்னு சொல்ல முடியுமா என்ன! நெவர் இந்த ஆது அவளோட எமோஷனை யாருக்காகவும் எதுக்காகவும் வெளிக்காட்டமாட்டா!" என ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பேசியவளை முறைத்த அமரி,
"ஓ! அதுனால தான் நேத்து ராத்திரி முழுக்க தூங்காம, கண்ணம்மா ஆச்சிக்கு என்ன பதில் சொல்லப் போறேன்னு புலம்புக்கிட்டு இருந்தியா?"
ஆம், முதல் நாள் இரவு முழுவதும் ஆச்சியை நினைத்து ஆதுவிற்கு உறக்கம் வரவில்லை. 'ஒரு பொய், பயந்து கொண்டு எத்தனை பொய்களைத் துணைக்கு அழைத்து வருகிறது, ஆனால் உண்மையோ என்றுமே திடமாக, தெம்பாக, தனியாக வந்து எதிரில் நிற்குமே, தேவையில்லாமல் பொய் சொல்லிவிட்டோமோ!' என நினைத்து உறக்கம் வராமல் உருண்டு கொண்டிருந்தவளுக்கு வழக்கம் போல் நள்ளிரவில், நடு மண்டையில் விளக்கு எரிந்து ஒரு யோசனையைக் கொடுக்க நிம்மதியாக உறங்கிப் போனாள்.
"ஆமாம் அமர்! நேத்து கொஞ்ச நேரம் தூக்கம் வராம நான் உருண்டது என்னவோ உண்மை தான், ஆனா அதுக்கு அப்புறம் ஒரு நல்ல ஐடியா கிடைச்சது. நான் கண்ணம்மா ஆச்சியோட பொண்ணு, ஜமுனா அக்காவோட போட்டோவைக் கண்டு பிடிச்சுட்டேன்" என்றபடி தன் அலைபேசியில் உள்ள ஒரு புகைப்படத்தைக் காட்டினாள்.
அதில் ஒரு பெண் வட இந்தியர்கள் அணிவது போல் புடவை, நகைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொண்டு முகம் நிறைய சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு குத்து மதிப்பாக நாற்பது வயது இருக்கலாம் என்று அனுமானிக்க முடிந்த அமரிஷாவால், அது யார் என்று கண்டறிய முடியவில்லை.
"ஏய் இது நிச்சயம் ஜமுனா அக்கா இல்ல! யார் இவங்க?"
"அப்பாடா! இவங்க யார்னு உன்னால கண்டுபிடிக்க முடியலைல்ல அது போதும். ஜமுனா அக்கா இந்த உலகத்துல இல்லைன்னு உனக்கு மட்டும் தானே தெரியும். ஆச்சிக்குத் தெரியாது இல்ல! சோ இனி இவங்க தான் ஜமுனா அக்கா" என மனநிறைவுடன் கூறிவிட்டு செல்லும் ஆத்மிகாவை தலைமுடியைப் பிய்த்துக் கொண்டபடி பார்த்தாள் அமரிஷா.
*****
"இது உனக்கே ரொம்ப ஓவராத் தெரியல!" என வீட்டிற்குள் வந்தவனிடம் வள்ளென்று விழுந்த யாழினியனைக் கண்டு விழித்தான் உதிரன்.
"எதுடா ஓவர்! புரியலியே!" என உண்மையாகவே ஒன்றும் விளங்காத குழப்பத்துடன் உதிரன் கேட்க,
"ம்ம் போற போக்க பார்த்தா எனக்கு முந்தி, உனக்கு கல்யாணம் முடிஞ்சுடும் போல! பாத்துப் பாத்து, பொத்திப் பொத்தி வளக்குற செடியை எல்லாம் பதியன் போட்டுக் குடுக்குறது என்ன! யாரையும் ஆசிர்வதிக்காத பெரியப்பா ஆதுவை ஆசிர்வதிக்கிறது என்ன! வாயைத் திறந்து யாரையும் பாராட்டாத பெரியம்மா ஆதுவைப் பாராட்டுறது என்ன!" என ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடமிருந்து வலமும், வலமிருந்து இடமுமாக கையை அசைத்துப் பேசியவனைக் கண்டு, வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் உதிரன்.
"ஹேய் யாழினி! நீ இப்படி பேசுறதைப் பார்த்தா நம்ம ஊர்க்கிழவி செந்தாமரைப் பாட்டி பேசுறா மாதிரியே இருக்குடா!" என சிரித்திக் கொண்டே வார்த்தைகளைத் துப்பினான்.
"ம்ம் இருக்கும் இருக்கும், என்னிக்கோ முடிஞ்சு போன பிறந்தநாளுக்கு இன்னிக்கு வாழ்த்து சொல்லுவீங்களாம்! என்னடா நடக்குது இங்க! பெரியப்பா ஆச்சிக்கிட்ட பேசுறேன்னு சொன்னாரேடா!" என விட்டால் அழுதுவிடும் தொனியில் பேசினான்.
"ஏய் யாழினி என்னடா நீ! எல்லாத்துக்கும் கொஞ்சம் பொறுமை வேணும்டா. புயலை ரசிக்கிற நானே பொறுமையா இருக்கேன், பூவை ரசிக்கிற நீ அவசரப்படலாமா! ஊருக்குப் போயிட்டு அப்பா போன் செய்யறேன்னு சொல்லிருக்காரு. என்னன்னு கேட்போம் பொறுமையா இருடா" என்று சமாதானப்படுத்தியவன், இனியனின் முகமும், மனமும் சாந்தம் அடைந்ததும், "ஆனாலும் யாழினி நீ ரொம்ப ஸ்பீடு டா! அமரிஷாவைப் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க, இன்னும் நிறைய லவ் பண்ணு, சொல்லாம லவ் பண்றதும் ஒரு வித கிக் தான்டா!" என எங்கோ பார்த்துக் கொண்டு, கண்களில் மின்னல் தெறிக்கப் பேசும் உதிரனைக் கண்டு, "ம்ம் சர்தான்" என்றான் இனியன்.
பெரியப்பா ஆத்மிகாவுடன் என்ன பேசினார் என்று அதன் பிறகு இனியன் கேட்கவில்லை. 'நம்ம லவ், நம்ம வாழ்க்கை நம்ம தான் பாத்துக்கணும்' என்ற அசட்டு வைராக்கியம் அவனுள்ளே எழுந்திருந்தது. ஆனால் இவன் மேல் அக்கறை கொண்டிருந்த உதிரனோ, தன் தந்தையிடம் பேசி அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டிருந்தான். அதைப் பற்றி ஆத்மிகாவுடன் தனிமையில் பேசத் தயாராயிருந்தான்.
சில நாட்கள் கடந்திருந்த வேளையில், ஆத்மிகாவை அவர்களின் வீடு இருந்த தெருமுனையில், வீட்டிற்கு வரும் வழியில் சந்தித்தான் உதிரன். நடந்து சென்று கொண்டிருந்த அவளருகில் வண்டியை மெதுவாக ஓட்டியபடி வந்தவன், "ஆத்மிகா! எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்றான்.
இவன் எதைப் பற்றி, யாரைப் பற்றி பேசப் போகிறான் என யூகித்து வைத்திருந்தவள், "சாரி உதிரன், எனக்கு உங்ககிட்ட பேச எதுவும் இல்லை" என பட்டென்று உரையாடலை வெட்டிவிட்டு வேகமாக முன்னேறினாள்.
"ஓ அப்படியா அப்ப சரி! ஆனா இந்த ஜமுனா அக்கா இருக்காங்கள்ள ஜமுனா அக்கா, அவங்க க்யூ- டிவில, மதியம் மூணு மணி சீரியல்ல நடிக்கிறாங்க, நீங்க பார்த்துருக்கீங்களா!" என தன் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி, அதைத் தள்ளிக் கொண்டு நடந்தபடி கேட்டான்.
ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவள், மறுபடி இறுகி, "என்ன என்னை மிரட்டுறீங்களா? இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம்" என உறுமினாள்.
"நான் ஏங்க உங்களை மிரட்டப் போறேன். மிரட்டுற அளவு நான் ஒண்ணும் சீப்பானவன் இல்ல! தனியா பேசணும்னு தானே கேட்டேன் அதுக்கேன் இவ்வளவு கோபப்படுறீங்க! வேண்டாம்னா விடுங்க நான் அமரிஷாக்கிட்ட பேசிக்கிறேன்!" என வண்டியில் ஏறி அமர்ந்து அதைக் கிளப்பப் போனவனை,
"அவக்கிட்ட என்ன பேசப் போறீங்க! நான் இல்லாம அவ வாழ்க்கையில எந்த அணுவும் அசையாது. சரி இன்னிக்கு ஈவினிங் அஞ்சு மணிக்கு பக்கத்துல உள்ள சூப்பர் மார்கெட்ல பார்க்கலாம்" என்றவள் விடுவிடுவென அவனைக் கடந்து முன்னேறிச் சென்றாள்.
'கோவில்ல, பார்க்ல, மொட்டை மாடியில, ரெஸ்ட்டாரெண்ட்ல இப்படி எல்லா இடத்துலயும் தனியா உக்காந்து பேசுவாங்க. ஆனா இவ என்ன சூப்பர் மார்க்கெட்ல பேசலாம்னு சொல்றா! ஒண்ணுமே புரியல, எங்கயோ ஒண்ணு பேசுனாப் போதும்!' என்ற தித்திப்பான குழப்பத்தில் உதிரன் இருக்க,
'இவனுக்கு எப்படி ஜமுனா அக்கா பத்தி தெரிஞ்சுச்சு! யார் சொல்லி இருப்பா!' என்ற குழப்பத்தில் இருந்ததால் தான் அவனுடன் தனிமையில் பேச ஒப்புக் கொண்டிருந்தாள் ஆத்மிகா.