ஹாய் ஃபிரண்ட்ஸ்!
நான் மீராஜோ…
இது என்னுடைய கதைக்கான புனைப்பெயர்…
தமிழாசிரியை பத்மாவதி அவர்களால் எனது முதல்கதையை பதினைந்தாவது வயதில் எழுத ஆரம்பித்தேன்… அந்த வயதில் என்ன கதை எழுதியிருப்பேன்? ஆன்மீக கதையோ சமூக அவலங்களோ அவ்வளவாக அறியாத வயது சினிமாக்களை பார்த்து புத்தகம் படித்து ஒரு அழகாண காதல்கதை ஒரு பக்கம் தான் எழுதியிருப்பேன்…
என் பெற்றோர்களினால் அன்று தடைபட்ட என் எழுத்து இன்று என் இரு குழந்தைகள் மூலமாக வாட்பேடில் எழுத ஆரம்பித்து, இன்று உங்கள் முன் வளர்ந்து வரும் எழுத்தாளராக நிற்கிறேன் என்று நினைக்கிறேன்…
என் கதைகளைப் படித்து, உங்கள் கருத்துக்களை கூறினால் மென்மேலும் என்னை வளர்த்துக் கொள்ள உதவும்...
உங்கள் மீராஜோ வின் அடுத்த காதல்!
கதை னு சொல்ல வந்தேன் பா!
என்னுடைய "உன் மனத் தோட்டத்து வண்ணப்பறவை!" முழுவதும் கற்பனை அல்ல! அந்த கதை அமேசான் ல் பதிப்பித்துள்ளதால் நம் தளத்தில் பதிவிட முடியவில்லை மன்னிக்கவும்...
ஆனால் இந்த கதை முழுவதும் கற்பனையே!
நீங்கள் எனக்கு தரும் ஆதரவிற்கு நன்றி கூறி, என் பயணத்தை தொடர்கிறேன்... என்றும் உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்!
கதையின் பெயர்


இதற்கு அர்த்தம் கண் சிமிட்டாமல் பார்க்க வைப்பவன்!
நான் புற அழகை மட்டும் கூறவில்லை... ஏனென்றால் அழகு என்பது மனதைப் பொறுத்த விசயம்! நமக்கு பிடித்தவர்கள்தான் உலகிலேயே மிக அழகாகத் தோன்றுவர். இல்லையா!?
நம் வாழ்வில் நாமும் கண் சிமிட்ட மறந்து யாரையேனும் பார்த்திருப்போம்! அதற்கு காரணம், அவர்கள் நம் மீது கொண்ட அன்பாக இருக்கலாம்!.. அக்கறையாக இருக்கலாம்! அவர்களின் திறமையாக இருக்கலாம்! இத்யாதி... (etc ... பா!)
நம் "சிம்டாங்காரன்" னும் அப்படித்தான்! புற அழகில் மட்டுமல்ல, அக அழகிலும் கண் சிமிட்டாமல் பார்க்க வைப்பான்.
நம் கதாநாயகன் பெயர் ஸ்ரீமேகன்.
மேகத்தைப்போல மென்மையானவன். (பிறந்ததும் அவன் பெற்றோர் தூக்கிப் பார்த்து உணர்ந்து பெயர் வைத்திருக்கலாம்! அல்லது மனதால் மென்மையாக இருப்பான் என்றும் பெயர் வைத்திருக்கலாம்), மேகத்தைப்போல போல கருணை மிகுந்தவன், மேகத்தைப்போல குளிர்ந்த மனம் உடையவன், இத்யாதி, இத்யாதி!
ஸ்ரீ மேகனுடைய காதலை சொல்வதுதான் நம் கதை. ..
இந்த கதையில் காதலுடன் சிறிது சஸ்பென்ஸ் சும் இருக்கும்...
கதையை நீங்கள் படித்து, ஓட்டு போடுங்கள். .. comment பண்ணுங்க! நன்றி!
ஓகே ஃபிரண்ட்ஸ்! இனி கதைக்குள் செல்வோம்...
நன்றி!
------******------