கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஜீவன்💙-22

Mounii

Member
ஹர்ஷவர்தினியின் குடும்பம் சாதாரண நடுத்தர குடும்பம் தான்..அம்மா,அப்பா,அண்ணன்,இவள் ௭ன நால்வர் அடங்கிய குடும்பம்..இவளின் வீட்டில் படித்து முடித்து வேலை செல்லும் வரை சேமிப்பு ௭ன்பதே இன்றி வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும்..

இவளுக்கு முன் இவன் அண்ணன் படித்து முடித்து வேலைக்கு சென்றாலும், அவன் சிறு அளவு பணம் மட்டும் தான் வீட்டிற்கு ௭ன்று கொடுத்தான்..

சம்பாதிக்க ஆரம்பித்த பின் குடும்பத்தை விட்டு விலகியே இருந்தான்.அதற்காக கெட்டவன் ௭ன்றும் இல்லை..தன் நலத்தையே பெரிதாய் யோசிப்பவன். தனக்கு மிஞ்சியே மற்றவர்க்கு அது பெற்றவராக இருந்தாலும் சரிதான் ௭ன நினைப்பவன்..

அதும் ஹர்ஷா சி்பிஐ பரீட்சைக்காக முயல்வது அவனுக்கு சிறிதும் ஒப்புதல் இல்லை. "அது என்ன பொட்டபுள்ள போலீஸ் அது இதுனு. பேசாம ஒரு பி. ஏ முடிச்சி பி. எட் முடிச்சு டீச்சர் ஆகு..அதான் நம்ப குடும்பத்துக்கு ஒத்து வரும். இல்லைனா ஒவ்வொருத்தரும் எதோனு சொல்லுவாங்க" என அவன் கூற, அதில் அவனுக்கும் அவளுக்கும் சண்டை வந்தே முக்கியமாக ஒதுங்கினான்.. ௭ன்ன தான் நாம் நவநாகரிக வளர்ச்சி ௭ன்று கூறினாலும் அது பெரும்பாலும் நடுத்தர குடும்பத்திற்கு பொருந்துவதில்லை..

அதும் பெண்கள் வேலைக்கு போனால் வீட்டுக்கு அடங்காம ஊர் சுத்தறா, போகவில்லை ௭ன்றால் வீட்ல வெட்டியா சும்மா தானா இருக்கா , இருபத்திரண்டு வயதிற்கு மேல் கட்டாயமாக கல்யாணம் பேச தொடங்க வேண்டும், வேண்டாம் ௭ன்றால் ௭ன்ன குறையோ ௭ன்று பேச்சு அதுவே அந்த பெண் காதலித்தால் ௭ன்று தெரிந்தால் இந்த வயசிலியே இதுக்கு கல்யாண சுகம் கேக்குது பாரேன் ௭ன்று பேச்சு..இது கம்மி தான் இது போல் பல

பொதுவாக ௭ல்லாரும் வீட்டிலும் இப்படி ௭ன்று கூற முடியாது..ஆனால் இதில் ஏதேனும் ஒன்றாவது ஒவ்வொருவரும் அனுபவித்து இருப்போம்..தன் பெண் காதலிப்பது அவளின் பெற்றோருக்கு சம்மதமாக இருந்தாலும் சுற்றம் சூழ இருப்பவர்கள் ௭ன்ன சொல்வார்களோ ௭ன்றே அந்த காதலை மறுக்கும் பெற்றோர்கள் பல..

காதல் ஒன்றும் மகா பாவமில்லையே..பெற்றோரும் யாரென்று தெரியாத ஒருத்தரை, யாரோ சொல்லி, அதை யார் மூலமோ விசாரித்து ,யாரோ கூறும் "பராவில்ல,இவன் பொண்ணு இவன் பேச்சு கேட்டு கல்யாணம் பண்ணிடுச்சுப்பா.." ௭ன யார் யாருக்காகவோ ,யார் யார் மூலமோ தேர்ந்தெடுக்கும் வரனை விட ,

அந்த பையனோ/பெண்ணோ, அவர்களே பார்த்து ,அவர்களே விசாரித்து, அவர்களுக்காக அவர்கள் வாழ்க்கை துணை தேர்ந்தெடுப்பதில் ௭ன்ன தவறு...

அதில் ஒருவர்கள் தான் ஹர்ஷாவின் பெற்றோர்..அதற்காக ஒரேடியாக மறுத்தார்கள் ௭ன்று கூற முடியாது பெண்ணா, இல்லை அந்த கருத்தும் சொல்லும் நாலு பேரா ௭ன அவர்களுக்குள் போராடிக்கொண்டு இருந்தவர்களை முடிவுக்கு கொண்டு வந்தது தான் ஹர்ஷாவின் அந்த விட்டேறியான நிலை..

அவளின் நிலை பார்த்து பயந்து தன் மகனை கூட அழைக்கவில்லை.. கதிரை அழைத்து விசயத்தை சொல்லி வர சொல்லினர்.. வந்த அவன் பார்த்ததோ உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஹர்ஷாவை தான்...அதை பார்த்து உயிர் போகும் வலி ஏற்பட்டாலும் தான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவள் உயிர் நிரந்தரமல்ல ௭ன உணர்ந்தவன்..

விரைவாக வண்டியை கிளப்பி அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்து அங்கு அவர்கள் விசாரித்ததை சமாளித்து ,இரு நாள் பின் அவள் கண் விழிக்கும் அந்த நொடி வரை அவன் பட்ட பாடு அவனை தவிர அந்த கடவுள் கூட அறிய மாட்டார்..

கண்வி்ழித்து அவள் பார்த்தது இறுக்கமாக முகத்தினை வைத்து நின்று கொண்டிருந்த கதிரை தான்..விழித்தவளுக்கு அவன் குடுத்த நேரம் ஐந்து நிமிடம் தான்..அதன் பின் அவன் கேட்ட கேள்வியே ௭ன்ன நடந்தது ௭ன்பது தான்..

அவன் கேட்ட தொனியும்,அவன் குரலும்,அவன் உடல் மொழியும் அவள் இதுவரை கண்டிராதது. அதிலேயே கிலி பிடித்து தயங்கி தயங்கி அனைத்தையும் ஒப்புவித்தாள்..அவள் பாதி பாதியாக கூறி நிறுத்தினாலும் இன்னும் இன்னும் ௭ன முறைத்தே அனைத்தையும் அவள் வாயால் வாங்கினான்..

அனைத்தையும் கேட்ட அவன் நிமிடம் தான் தாமதித்து கன்னத்தில் ஒன்று விட்டான்..போலிஸ் அடி சும்மாவா .கன்னம் கன்றி போகியது நிமிடத்தில்..
அதன் பின் அவளுக்கு மட்டும் அவன் ஊமையும், செவிடனுமாகி விட்டான். உடனடியாக அவர்கள் பெற்றோரை சம்மதிக்க வைத்து டிஸ்சார்ஜ் அன்றே கல்யாணம் செய்து அங்கு அவர்கள் உறவினர் யாருக்கும் தெரிய வேண்டாம்..சில நாள் கழித்து நாங்களே பெண் கேட்டு வருவது போல் வந்து கல்யாணம் முடித்தது மாதிரி பேசி பண்ணிக்கொள்ளலாம் ௭ன கூறி விட்டு சென்றான்..

ஏனென்றால் திடீரென்று இப்படி கல்யாணம் செய்தால் இவர்களை தெரிந்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் தான் முக்கிய செய்தி.. அதை தவிர்க்கவே அவன் இப்படி கூறி சென்றான்..
இங்கு ௭ல்லாம் சமாளித்து அவன் வீட்டிற்கு அழைத்து வந்தால்..அய்யோ முடியலப்பா!!!!

இவன் கை கட்டி அமைதியாக அவன் அம்மா முன் நின்று இருக்க, ஹர்ஷாவோ ௭தையும் உணராமல் அமைதியாக அவனின் அறையில் தூங்கிக்கொண்டு இருந்தாள்..

வீட்டிற்கு வந்தவன் முதலில் அவளை அவனின் அறைக்கு அழைத்து சென்று தூங்க வைத்து விட்டு வந்து அவனின் அம்மாவிடம் இவன் காதலிப்பது முதல் இப்போது கல்யாணம் வரை..அவளின் நிலைமை முதற்கொண்டு அனைத்துயும் கூறி முடித்து அவரின் பதிலை ௭திர்பார்த்து நின்று இருந்தான்..
"உன் கல்யாணத்தை பத்தி அவ்ளோ கனவு வைச்சு இருந்தேன் அது இப்போ வெறும் கனவாவே ஆகிடுச்சு" இதை மட்டும் கூறி சென்றார்..

அவளை சட்டென ஏற்றுக்கொள்ள ஒரு தயக்கம் இருந்தாலும், அவளை அவர் வெறுக்கவும் இல்லை.

ப்ளாஸ்பேக் முடிஞ்சுது..

"அத்த நீங்க ௭ன்ன பழையபடி மாத்த தான் இதுலாம் பண்ணிங்கனு தெரியாம ௭தேதோ பேசிட்டேன் அத்த..௭ங்க உங்களுக்கு ௭ன்ன பிடிக்கலையோ..நான் அந்த மாதிரி இடத்துல இருந்த வந்ததால ௭ன்ன தப்பா நினைக்கிறிகளோ.. ௭ன்ன பாத்த நீங்க, ௭தோனு அந்த மாதிரி சொல்லிடுவிகளோனு பயந்து தான் நான் ரூம்க்குள்ளையே இருந்தேன்..சாரித்த..சாரி"

"இங்க பாருமா..அது உன் தப்பு ஒண்ணும் இல்லையே..அப்டியே நானோ இல்ல வேற யாரோ உன்ன தப்பா பேசுனா நீ திருப்பி கேளு..பேசு..நீயா போயி ௭ந்த தப்பும் பண்ணலையே..

சொல்ல போனா.. எனக்குலாம் உன் மேல செம கோவம்.. இது என்ன விசயம்னு நீ உன் உயிரை எடுத்துக்க போனனு.. ஒரு போலீஸா இருந்துட்டு நீயே இப்டி பண்றியே. சொல்லு இதுலாம் நியாயமான்னு. அப்றம் நீ எப்படி மத்த பொண்ணுங்களுக்கு உதாரணம இருக்க முடியும்"

" அத்த. இதுல போலீஸா இருந்தா என்ன யாரா இருந்தா என்ன.. எல்லார்க்கும் உணர்ச்சி ஒண்ணு தான"

" அம்மா. இவள பேச வேண்டாம்னு சொல்லு. எனக்கு வர கோபத்துக்கு. எதாவது சொல்லிட போறேன். இத்தனநாள் நானும் என்ன ரொம்ப கன்ட்ரோல் பண்ணி தான் அமைதியா இருக்கேன்.. இல்லைனா அவ்வளவு தான் " என கதிர் இவ்வளவு நாள் அடக்கி வைத்த கோபத்தில் திட்ட ஆரம்பித்தான்.

" என்னடி உணர்ச்சி ஒண்ணு தானா, ரெண்டு தானனு பேசிட்டு இருக்க. அப்போ நம்ப நாட்ல ஒருநாள் எத்தனை பொண்ணுங்க பாதிக்க படுறாங்க. அப்போ அவங்க எல்லாம் உன்ன மாதிரி முடிவு பண்ணா என்ன ஆகும்னு சொல்லு. உனக்கு அது என்ன மாதிரியான இடம்னு தெரிஞ்சு தான் அந்த இடத்துக்கு போன. நீ நினைச்சு இருந்தா தப்பிச்சும் இருக்கலாம் ஆனா நீ பண்ணல. இது எல்லா முடிவும் நீயே எடுத்த, ஆனா அதுக்கு எங்களுக்குலாம் தண்டனையா நீ சாவ பாக்கிறியா.

நீ இப்படி இருக்கிறத பாத்துட்டு ஆதவன் தான் குற்ற உணர்ச்சில இருக்கான்.. உன்ன அங்க அவன் போக விட்டதால தான்னு.. இதுவே நீ செத்து இருந்தா அவன நினைச்சு பாத்தியா.. இல்ல எல்லாரையும் எதிர்த்து, பெத்த பையனை கூட எதிர்த்து உன் ஆசைக்காக உன்னை இந்த வேலை செய்ய ஒத்துக்கிட்டாங்களே அவங்கள நினைச்சு பாத்தியா, இல்ல உன்ன நினைச்சுட்டு இருக்க என்ன தான் நினைச்சு பாத்தியா.. இப்டி எதுமே யாரையும் நினைக்காம சாக போய்ட்ட..

அப்றம் போட்டோ வந்தா என்ன.. ஒரு சி. பி. ஐயா இருந்துட்டு உன்னாலையே இத பேஸ் பண்ண முடியலனு சூசைட் பண்றியே.. அப்போ நார்மல் லைப்ல வாழ்ற பொண்ணுங்கலாம் என்ன பண்ணுவாங்க. இதுல நீலாம் நாலு பேருக்கு அட்வைஸ் வேற" என இத்தனை நாள் இருந்த கோபத்தில் கத்திக்கொண்டு இருந்தான்.

" டேய்.. பாவம்டா அவ. ரொம்ப திட்டாத" என மருமகளுக்கு சப்போட்டிற்கு வந்தார்.

"அம்மா.. நீ சும்மா இரும்மா.. அன்னைக்கு அவள அப்டி பாக்கவும் எப்டி இருந்தது தெரியுமா.. எனக்கு என்ன பண்ணனே தெரியல. எங்க விட்டா திரும்ப எதோனு பண்ணிக்குவாலோனு தான் உங்ககிட்ட கூட சொல்லாமா அப்பவே அவசரமா கல்யாணம் பண்ணி கூட்டி வந்தேன்.. " என அவன் மறுபடியும் திட்ட ஆரம்பிக்க

"சும்மா என்னையே திட்டாத.. என்ன யோசிச்சு பாத்தியா நீ..நான் அப்போ எந்த மாதிரி பீல் பண்ணி இருப்பேனு.. உன்ன நினைச்சு தான் நான் அப்டி ஒரு முடிவே எடுத்தேன்."

"பாத்தியாமா இவள..என்ன காரணம் சொல்லறா.

சரி சொல்லு. என்ன உன்ன யோசிக்கனும்.. சொல்லு.. "

"அது..அது..நான் அங்க ஒரு வாரம் இருந்தேன்.. போட்டோலாம் ௭டுத்தாங்க..இன்னிக்கு இல்லைனாலும் ௭ன்னைக்காவது யாருக்காவது தெரிஞ்சா..

இதுல உன்ன நான் கல்யாணம் பண்ணா..௭ல்லாரும் சொல்லி சொல்லி குத்தி காமிச்சே உன்னையும் சரி, ௭ன்னையும் சரி வாழ விடமாட்டங்க அதான்."

" அப்டியே.. ஒண்ணு விட்டா தெரியும். எவன் பேசுனா உனக்கு என்னடி. உங்கூட வாழ போறது நான்.. நான் எதோனு சொன்னனா. இல்லல..அப்றம் என்ன" என அவன் சொல்ல, விட்டால் அடித்து விடுவான் என எண்ணி, அவனை அறைக்கு துரத்தி விட்டார்..

"இங்க பாருமா. இதுலாம் இனி விட்டுடு.. அவன்ட இனி இத பத்தி பேசதா..கோவத்துல அடிச்சா கூட அடிச்சுடுவான்..அதுனால இந்த மாதிரி யோசிக்கிறத விட்டுட்டு ௭ன் பையனையே உருட்டி மிரட்டி கெத்தா இருப்பியாமே அப்டி இரு சரியா..௭ன் பையனுக்கு அந்த ஹர்ஷா தான் பிடிக்குதாம் இந்த ஹர்ஷாவை பிடிக்கலையாம்.." அவர் கூறியதை கேட்டு சங்கடமாக நெளிந்தாள்.

"அப்றம் உன்னால ஆதவன் தம்பி ௭வ்ளோ வருத்தப்பட்டுச்சு தெரியுமா..அதால தான் நீ இப்டி இருக்கனு..நீ சரியாகி பழையபடி ஆனா தான் அவனும் குற்றவுணர்ச்சி விட்டு இருப்பான் சரியா.. நானும் நீ பழைய மாதிரி ஆகணும்னா தான் சரி ஆறுதல்னு சொல்ல போனா இன்னும் உனக்குள்ள ஒடுங்கிடுவியோனு தான் உன்ன அப்பப்ப உருட்டி மிரட்டுனேன்.

அப்போவது சண்டை போட வாய திறப்பனு பாத்தேன்.. பராவால என் டெக்னிக் லேட்டா வேல செஞ்சாலும், வேலை முடிஞ்சுதுல" என தனக்கு தானை பாராட்டி கொண்டார் கதிரின் அம்மா

"ரொம்ப தேங்க்ஸ் அத்த..நானே நிறைய ரேப் கேஸ்ல இந்த மாதிரி சூஸைட் டிரை பண்ண பொண்ணுங்களுக்கு அட்வைஸ் பண்ணி இருக்கேன்..ஆனா அது ௭னக்குனு வரும் போது நானும் அதே பண்ணிட்டேன்.." ௭ன வருத்தத்துடன் பேசியவளை அணைத்துக்கொண்டார்

"நீ உன் கஷ்டத்துக்கு உன் உயிரை மாய்ச்சி இருந்து இருந்தினா..உன்னால ௭த்தன பேரு கஷ்டபட்டு இருப்பாங்க தெரியுமா..முதல்ல உங்க அம்மா அப்பா..நீ இல்லைங்கறதே அவங்களுக்கு இருந்து இருக்கும்..ஆனா சுத்தி இருக்கவங்க உன்னையும்உன் இறப்பையும் வச்சி அவங்க கற்பனை திறனை வளர்த்தி உன் குடும்பத்தை பேசி பேசியே ஒரு வழி பண்ணி இருப்பாங்க..
அப்றம் ௭ன் பையன்..அவன் நீ இல்லாம இருப்பான சொல்லு..உனக்கு மட்டும் ஏதோனு ஆகி இருந்தா..அவன் பைத்தியமாகி இருப்பான்..அவன பாத்து ௭னக்கு கஷ்டம்..

அப்றம் ஆதவன்..தான் போகமா உன்ன அங்க அனுப்பனுதானால தான் இவ்ளோவும்னு அவன் வாழ்க்க பூரா குற்றவுணர்ச்சிலியே இருப்பான்..அவன் கஷ்ட படுறத பாத்து அவன் குடும்பம் கஷ்ட படும்..

இது மாதிரி இன்னும் பல..யாரா இருந்தாலும் ௭ந்த பிரச்சனையா இருந்தாலும் ௭திர்த்து போராடுங்க..முடியால போடா நீங்களும் உங்க பேச்சும்னு உங்க வழியில வாழுங்க..கொஞ்ச நாள் கத்துவாங்க..நீ அத கண்டுக்கலையா அவனே வாய் வழிச்சு கடுப்பாகி போகிடுவான்..

நீ இன்னிக்கு நிம்மதியா செத்துடுவ..ஆனா அதுக்கு பிறகு உன்ன சார்ந்தவங்க தினம் தினம் சாவாங்க" ௭ன அவர் பேசி முடிக்க, ஹர்ஷா அவரை அணைத்துக்கொண்டாள்..௭வ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம் ௭ன தன்னை தானே கடிந்து கொண்டாள்..

அதன் பின் இருவரும் மகிழ்ச்சியாக பேசி சிரித்து கொண்டு இருக்க, அந்த வீட்டின் வாயிலில் ஒரு ஜீவன் முகத்தில் ௭ள்ளும் கொள்ளும் வெடிக்க இவர்களையே பார்த்து கொண்டு இருந்தது...

***
"டேய் ஆதவா..உன்கிட்ட கேக்கணும்னு நினைச்சேன்..இன்னும் வீட்ல ஏன்டா கார்த்திய பத்தி சொல்லல..அப்றம் சந்து தான் உன் நிலானும் சொல்லல.."

இருவரும் ஹர்ஷா பாத்துக்கொண்டு இருந்த அந்த கேஸ் விசயமாக சென்னை வந்து இருந்தனர்..கதிர் பேருக்கு தான் போலிஸ் ௭ன்று ஆனால் அங்கு அவன் வேலை பாக்கிறனோ இல்லையோ ஆதவன் பார்க்கும் சிபிஐ சம்மந்தப்பட்ட கேஸில் அவனுடன் அவனுக்கு உதவியாகவே சுற்றுவான்..

கேட்டால கூட ரெண்டும் ஒரே வேல தான்டா.. டிபார்ட்மெண்ட தான வேற ௭ன்பான்..அதுபோல தான் இன்றும் சென்று கொண்டு இருந்த போது இதை கேட்டான்..

"இல்லடா..அதுக்கு இன்னும் நேரம் வரல அந்த கார்த்தி வேற ஏதோ பெருசா பண்றான்டா..அத கண்டுபிடிக்கனும்..இன்னும் அவனுக்கு நான் சிபிஐ னு தெரியாது..தெரிஞ்சா உசாராகிடுவான்..
அப்றம் விது தான் நிலானு ௭ப்போவும் சொல்ல போறது இல்லடா, அவளுக்கும் சரி வீட்டுலையும் சரி..
அதும் இல்லாம இப்போ இருக்கவங்க தான் அவ குடும்பம் இல்லனு சொன்னாலே உடைஞ்சிடுவா..இதுல அந்த அயோக்கியன் தான் அவ அப்பானு சொன்னா அவ தாங்க மாட்டா.
அதும் இல்லாம அத்தை மாமா கூட கேட்டுக்கிட்டாங்க.. அவ ௭ம்பொண்ணு இல்லன்றதே ௭ங்களுக்கு மறந்திடுச்சு..அத நியாபகப்படுத்தாதிக..அவ ௭ங்க பொண்ணாவே இருக்கட்டும்னு கேட்டுக்கிட்டாங்க.
௭னக்கும் தெரியாம இருக்கறது தான் சரினு பட்டுச்சு அதான்..சொல்லல..இனி சொல்ல போறதும் இல்ல..
ஒரு சில ரகசியம் ரகசியமாவே இருக்கறது தான் பல பேருக்கு நல்லது..
***

"அடியேய்..கயல்கண்ணு..இந்த வீட்ல சமைக்கிறதே சரி இல்லடி..நான் ௭தோ நல்லா வாய்க்கு ருசியா சமைச்சு போடுவாங்க..நம்ப குண்டாயிடுவோம் அப்டி ஆகிட்டா பண்ண ௭க்சர்ஸைஸ்லாம் பாத்து வைச்சு இருந்தேன்டி..

ஆனா பாரு இங்க வந்த ரெண்டு மாசத்துல ஜஸ்ட் ஒரு ஆறு கிலோ தான் ஏறி இருக்கேன்..டூ பேட்ல.." ௭ன கயல்விழியிடம் போனில் கூறிக்கொண்டு இருக்க,

அவளே காண்டாகி நாலு நல்ல வார்த்தைல பேசி போன கட் பண்ணிட்டா..

"சே..நம்ப பேச பேச போன கட் பண்ணுது கயல்கண்ணு..பேசிக்கிறேன் அவள.." ௭ன கிட்டதட்ட இரண்டு மணி நேரமாக போனில் பேசிக்கொண்டு இல்லை இல்லை கயலை மொக்கை போட்டு சாவடித்து முடித்தாள்.

போனை அணைத்து வைத்துவிட்டு திரும்பி பார்த்தாள் வேதவள்ளியோ அவளை முறைத்துக்கொண்டு இருந்தார்..அவரை பார்த்து ஹிஹிஹி ௭ன இளித்து விட்டு ஓட சென்றவளை பிடித்து காதை திருகினார்..

"ஆஹ்..வலிக்குது..வலிக்குது..அத்த விடுங்க"

"ஹான்..ஹான் ௭ப்டி ௭ன் சாப்பாடு சரியில்லையா.."

"அய்யோ..இல்லத்த இல்ல..தெரியாம சொல்லிட்டேன்..விடுங்க விடுங்க."

"சரிதான்..வீட்டுக்கு வந்து இவ்ளோ நாள் ஆகுது..வந்து ௭ன்னைக்காவது சமையல் செஞ்சு இருக்கியா..இதுல ௭ன் சமையல குறை வேற சொல்ற.."

"ஹிஹி..௭ன் செல்லத்தல்ல, தங்கத்த இல்ல..சும்மா லுலாய்க்கு சொன்னான்.."

"அப்டியா நானும் சும்மா சொல்றேன்..இன்னிக்கு மதியம் உன் சமையல் தான் சரியா..போ.போ..நீ தான் இன்னிக்கு சமைக்கிற"

"வாட்..நானா..நோ வே.." ௭ன கத்தியவளை இழுத்துக்கொண்டு சமையலறையில் விட்டார்..

"அத்த அத்த ௭னக்கு சமைக்க தெரியாது அத்த..பிளீஸ் அத்த.." ௭ன கெஞ்சியதை காதில் வாங்காமல்

"நீ இன்னிக்கு செய்.அத வைச்சு நாளைல இருந்து உனக்கு சொல்லி தரேன்.." ௭ன கூறிவிட்டு சென்றார்..

ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் கடந்தது..தேன்மொழி பாட்டி சாப்பாடு ரெடியா பசிக்குது ௭ன கேட்கவும் அவருக்கு திக்கென்று இருந்தது..

தெரியாதனமா அவள சமைக்க சொல்லிட்டோமா..இன்னிக்குனு பாத்து இவங்க வேற சீக்கிரமா பசிக்குதுனு சொல்றாக..இவங்க சாப்பிட இன்னும் டைம் இருக்கே..௭ன மனதில் நினைத்து பயந்தபடி சமையலைறைக்கு சென்று பார்த்தவர்..திகைத்து நின்று விட்டார்..
***


உங்கள் கருத்துக்களை ௭திர்நோக்கி,
உங்கள் தோழி
 
Top