"ஐயா நமக்கு இந்த உள்ளாட்சி தேர்தல்லயும் சாதகமான சூழல் இல்லைங்க. என்னோட எண்ணம் என்னன்னா, நம்ம தம்பியை அரசியலுக்கு கொண்டு வந்தா இளைஞர்கள் எல்லாம் நம்ம பக்கம் சீக்கிரமா வர வாய்ப்பு இருக்குங்க" என்று முதுகை அரை வட்டமாக குனிந்து நின்று தன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தற்போதைய எதிர்கட்சித் தலைவரான திருமூர்த்தியிடம் கூறிக் கொண்டிருந்தார் அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான கோதண்டம்.
"நீ சொல்றது நல்ல யோசனை தான் கோதண்டம். ஆனா தம்பி அரசியல் பக்கம் வர மாட்டேன்னு ரொம்ப தெளிவா சொல்லிட்டான். அதுவும் இல்லாம எனக்கு அரசியல் வாரிசா என் மக அஞ்சனா இருக்கும் போது அவனை இப்போ கூப்பிடுறது நல்ல முடிவா எனக்கு தோணல." என்று திருமூர்த்தி முடிவாகக் கூறிவிட்டார்.
"புரியுதுங்க ஐயா. ஆனாலும் தம்பி கிட்ட கடைசியா ஒரு தடவை பேசிப் பாருங்க. இள ரத்தம் உள்ள வந்தா கட்சிக்கு பெரிய பலம்." என்று அவர் சொல்லும்போதே தொண்டையை கணைத்தபடி உள்ளே நுழைந்தாள் அஞ்சனா தேவி ராக்கேஷ் குமார்.
திருமூர்த்தியின் மூத்த புதல்வி.
ராக்கேஷ் அவளின் கணவன். திருமூர்த்தியின் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்று வீட்டோடு மருமகனாக பேருதவி ஆற்றி வருகிறார்.
"என்ன கோதண்டம் அண்ணே. ரொம்ப நேரமா ஏதோ பலமான ஆலோசனை போல. நான் வந்ததும் அப்படியே அமைதியா ஆனா மாதிரி தெரியுதே!" என்று தன் பட்டுச் சேலையை சரி செய்தபடி அஞ்சனா தேவி வினவ,
"இல்லங்க மா, நம்ம தம்பி... அரசியலுக்கு வந்தா.." என்று இழுக்க,
"அதெல்லாம் நான் கூப்பிட்டு பார்த்துட்டேன். அவன் வர முடியாதுன்னு சொல்லிட்டான். இப்போ உங்களுக்கு என பிரச்சனை? உள்ளாட்சி தேர்தலா இல்ல எந்தம்பி அரசியலுக்கு வர்றதா?" என்று நேரடியாக அவள் கேட்டதும் ஏதும் பேசாமல் தலையை தொங்க விட்டபடி நின்றுவிட்டார் அவர்.
"நீ கிளம்பு கோதண்டம்" என்று அவரை அனுப்பிவிட்டு தன் மகள் புறம் திரும்பினார் திருமூர்த்தி.
"விடு அஞ்சு. எல்லாரும் ஆசைப்படுறது தான். ஆனா அவன் தான் சொல்லிட்டான்ல எனக்கு விருப்பம் இல்லாததை நீங்க தலைகீழா நின்னாலும் செய்ய மாட்டேன். நான் விரும்பறதை நீங்க நடுவுல பூந்து கெடுத்தாலும் நடத்தாம விடமாட்டேன்னு.
சின்ன வயசுல இருந்தே அவன் பிடிவாதம் நமக்கு தெரியாதா. அடங்குற ரகமா அவன். அதுவும் இல்லாம சொல்பேச்சு கேட்காதவன் அரசியலுக்கு லாயக்கு இல்லம்மா. நீ அப்பா சொன்னா சரியா இருக்கும்ன்னு கேட்ப, ஆனா அவன் அப்படி செய்ய மாட்டான். அதுனால எப்பவும் நீ தான் மா என் அரசியல் வாரிசு." என்று எழுந்து மகளை தோளோடு அணைக்க,
"இப்போ இப்படி சொல்லிட்டு நாளைக்கே உங்க அந்த பொண்டாட்டி மக அரசியலுக்கு வர ஆசைப்பட்டான்னு இழுத்துட்டு வர மாட்டீங்களே!" என்று கறார் குரலில் வினவினாள் அஞ்சனா.
திருமூர்த்தி சிரித்தபடி, "அவ அவங்க அண்ணன் மாதிரி தான் மா, இதுல எதுலையும் நுழைய அவளுக்கு விருப்பமும் இல்ல, இதைப் பத்தின அறிவும் இல்ல. அவ கம்பியூட்டரை தட்டி கோடில சம்பாதிக்க தான் லாயக்கு." என்று அகலாமாகச் சிரித்தார்.
தந்தையுடன் சிரிப்பில் இணைந்த அஞ்சனாவுக்கு தெரியவில்லை அவர்களை தானே இதற்குள் இழுத்து வருவோம் என்று.
****
"சத்தியமா சொல்லு மச்சி இந்த ஜீன்ஸ் இந்த டாப்புக்கு மேட்சிங்கா இருக்கா? அவர் பார்த்தா அப்படியே அசந்து போய்டுவாரா?" என்று தன்னிடம் நூறாவது முறையாகக் கேட்கும் தோழியை எதைக் கொண்டு அடிக்கலாம் என்று தேட ஆரம்பித்தான் அவளது ஆருயிர் தோழன் ஆனந்த்.
"பூமிகா, போதும். நீ ஜீன்ஸ், டாப் போட்டாலும் சரி, புடவை கட்டிகிட்டு போனாலும் சரி, ஏன் பிகினிலயே போய் நின்னாலும் சரி அவரு உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டார். அப்பறம் ஏன் என்னை இப்படி பாடு படுத்துற?" என்று சலிக்க,
"என்னடா இப்போவே சலிப்பா பேசுற. நோ டா கண்ணா... இப்படி எல்லாம் நீ பேசவே கூடாது. என்ன நடந்தாலும் நான் 'பூமிகா நீரூபன்' னா மாறுற வரைக்கும் எனக்கு நீ உறுதுணையா இருக்கணும். புரிஞ்சுதா டா கண்ணா" என்று விசு பாணியில் அவன் கன்னத்தில் தட்டி அவள் வசனம் பேசினாள்.
"ஓங்கி விட்டேன்னு வை வாய் வாரணாசிக்கு டிக்கெட் வாங்கிக்கும். மூணு வருஷமா நீயும் அவரை பார்த்து லவ் சொல்ல போறேன்னு தான் கிளம்புற. ஆனா ஒருநாளாவது அவர்கிட்ட சொல்லி இருக்கியா டி. உனக்காக வெளில வெயிட் பண்ணியே என் இளமை முடிஞ்சிடும் போல." என்று புலம்பினான்.
"நான் மட்டும் ஆசைப்பட்டா டா சொல்ல மாட்டேன்றேன். அவரைப் பார்த்தாலே வாயெல்லாம் உளருது டா. லவ் யூ சொல்ல போனா வெறும் காத்து தான் மச்சி வருது" என்று கண்ணில் இல்லாத கண்ணீரை அவள் துடைக்க,
"எடு அந்த துடைப்பக்கட்டையை.. எனக்கு தெரியாது. இன்னும் ஒரே வாரத்துல நீ உன் லவ்வை சொல்லி ஓகே வாங்கல.. நம்ம ஃப்ரெண்ட்ஷிப் கட்.." என்று சொல்லி அவன் காரில் இருந்து இறங்கிச் செல்ல,
தன் டாப்ஸை முன்னூறாவது முறையாக கார் கண்ணாடியில் சரி பார்த்துவிட்டு அந்த பண்ணைக்குள் நடக்கலானாள் பூமிகா.
வேலையாட்கள் சீரான இடைவெளியில் நின்று தாங்கள் பணியில் ஈடுபட்டிருக்க, பண்ணையின் மத்தியில் இருந்த கட்டிடத்தின் முன்னே நின்ற தார் ஜீப்பின் மீது ஏறி அமர்ந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் நீரூபன்.
அவன் கண்களில் இருந்த கூர்மையை ரசித்தவண்ணம் நடந்து வந்தவள், இடையில் வேலையாட்கள் குவித்து வைத்திருந்த ஆரஞ்சுப் பழங்களை கவனிக்காமல் தடுக்கி அதன் மேலேயே விழுந்தாள்.
அவள் ஆசையாக அணிந்திருந்த வெண்ணிற டாப் பாதி ஆரஞ்சு வண்ணத்தில் மாறி இருக்க, அவள் விழுந்ததை கவனித்து தாவி இறங்கி வந்தான் நீரூபன்.
"பேரு தான் பூமி, ஆனா பூமியை பார்த்து நடக்கவே மாட்டியா டி குள்ளக்கத்திரிக்கா" என்று எழுப்பி விட,
சிணுங்கலாக அவனைப் பார்த்தபடி எழுந்த பூமிகா "போங்க மாமா, நானே என் ட்ரெஸ் இப்படி ஆயிடுச்சேன்னு ஃபீலிங்ல இருக்கேன்.." என்று உடையை முன்னும் பின்னும் பார்த்து வருந்த,
"ஏய் குள்ளப்பிசாசு, என்னோட ஒரு பாக்ஸ் ஆரஞ்சை நிலத்துக்கு ஜூசாக்கிட்டு நீ ஃபீல் பண்றியா?" என்று தலையில் குட்டினான்.
அவன் குட்டிய இடத்தில் ஐஸ் வைத்தது போல கண்களை சிமிட்டி அவனையே அவள் பார்த்து பல்லைக் காட்டிக் கொண்டிருக்க,
"தம்பி லோடுக்கு லாரி வந்தாச்சு" என்ற சூப்பர்வைசர் அழைக்கவும்,
"இதோ வர்றேன் சுப்பு அண்ணா" என்று அவளிடமிருந்து விலகி நடந்தான் அவன்.
இத்தனை நேரம் அவன் அருகில் இருந்த மகிழ்ச்சி கானலாக கலைந்து போக வருத்தம் படிந்த முகத்துடன் தன் காருக்கு திரும்பி வந்தவளை,
"சரி விடு டி. நாளைக்கு பேசி லவ்வை சொல்லிடு." என்று உற்சாகம் கொடுத்தான் ஆனந்த்.
****
பொங்கல் முதல் உங்களை சந்திக்க இவர்கள் அனைவரும் வர இருக்கிறார்கள் நண்பர்களே.. கொண்டாட்டமாக இவர்களுடன் நாமும் இணைவோம் வாருங்கள்...