கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தக்காளித் தொக்கு

Poornima Karthic

Moderator
Staff member
நான் என்ன தக்காளித் தொக்கா அப்படின்னு இனிமே நீங்க தைரியமா கேக்கலாம். ஏன்னா அந்த அளவுக்கு இந்த தக்காளித் தொக்கு ருசியாவும் மணமாவும் இருக்கும்.

தக்காளித் தொக்கு
பழுத்த தக்காளி (நாட்டு/ பெங்களூர்) - 1/2 கிலோ
புளி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 50ml
வெல்லம் - 2 டீ ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்

தக்காளியை நான்காக வெட்டி மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 25ml நல்லெண்ணெய் ஊற்றி ஒரு டீ ஸ்பூன் கடுகு போடவும். கடுகு பொறித்த தும் அதில் அரைத்த தக்காளி விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். தக்காளியில் உள்ள தண்ணீர் வெளியே தெறிக்கும் எனவே ஜாக்கிரையாக செய்ய வேண்டும்.

பிறகு புளி பேஸ்ட்( புளிப்பு அதிகம் உள்ள தக்காளி என்றால் புளி பேஸ்ட்டின் அளவை குறைத்துக் கொள்ளலாம்), மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

தொக்கு நன்றாக சுருண்டு வரும் வேளையில் வெல்லம் மற்றும் வெந்தயப்பொடியைத் தூவ வேண்டும்.

அடுப்பை அணைத்து விட்டு மீதம் உள்ள நல்லெண்ணெயை காய்ச்சி சூடு குறைந்ததும் தொக்கில் ஊற்றிக் கிளற வைக்கவும்.

இந்த தொக்கை உடனேயும் சுவைக்கலாம். மூன்று மணி நேரம் காத்திருந்து சுவைத்தால் தக்காளித் தொக்கில் உப்பு காரம் புளிப்பு இனிப்பு என அனைத்து சுவைகளும் இறங்கி சுவையாக இருக்கும்.
 
Last edited:
Top