தனிமையைத்
துணையாக்கி
வாழ்ந்திடுவோம்
தரணியிலே
தவிக்க வைக்கும்
காத்திருப்போ..
கண்ணீரை
வரவழைக்கும்
ஏமாற்றமோ..
காதல் வேண்டி
அடுத்தவரை
இறைஞ்சுதலோ..
இரக்கமின்றி
அவர் வீசிடும்
அம்பு வார்த்தைகள்
தைத்தலோ..
அது தரும்
ஆராத ரணங்களோ..
நெஞ்சத்தில்
நீங்காத வலிகளைத் தரும்..
நிம்மதியற்ற
நினைவுகளோ..
இனியில்லை..
என்றுமே
தனிமை ஒரு
தரமான ஆசிரியன் தான்
தன்னிலை உணர்தலை..
ஒரே கணத்தில்
புரியவைத்து
புன்னகையைப்
புகுத்தவில்லை
என்றாலும்
அமைதியை
உள்ளத்துள்
ஊற்றிவிடும்
மௌனமான..
நிசப்தமான
தனிமையை
நேசிப்போம்
அதன் அரவணைப்பிலே
ஆறுதல் பெறுவோம்.
இன்
துணையாக்கி
வாழ்ந்திடுவோம்
தரணியிலே
தவிக்க வைக்கும்
காத்திருப்போ..
கண்ணீரை
வரவழைக்கும்
ஏமாற்றமோ..
காதல் வேண்டி
அடுத்தவரை
இறைஞ்சுதலோ..
இரக்கமின்றி
அவர் வீசிடும்
அம்பு வார்த்தைகள்
தைத்தலோ..
அது தரும்
ஆராத ரணங்களோ..
நெஞ்சத்தில்
நீங்காத வலிகளைத் தரும்..
நிம்மதியற்ற
நினைவுகளோ..
இனியில்லை..
என்றுமே
தனிமை ஒரு
தரமான ஆசிரியன் தான்
தன்னிலை உணர்தலை..
ஒரே கணத்தில்
புரியவைத்து
புன்னகையைப்
புகுத்தவில்லை
என்றாலும்
அமைதியை
உள்ளத்துள்
ஊற்றிவிடும்
மௌனமான..
நிசப்தமான
தனிமையை
நேசிப்போம்
அதன் அரவணைப்பிலே
ஆறுதல் பெறுவோம்.
இன்
