அத்தியாயம் 10
அனுஸ்ரீயும் பிரகல்யாவும் அந்த சிறிய விடுமுறை முடித்து மறுநாள் கல்லூரிக்கு கிளம்ப வேண்டும். பெரும்பாலான நேரங்களில் சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்த ஜனார்த்தனிடம் இருவரும் சென்றனர்.
"அப்பா! நாளைக்குக் கிளம்புறோம்" என்றாள் அனுஸ்ரீ .
எப்பொழுதும் அவளது பயணத்திட்டம், கல்லூரி அட்டவணை எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து விசாரிக்கும் ஜனார்த்தனன், வெறுமனே, "சரிடா பத்திரமா போயிட்டு வாங்க" என்றார்.
அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் அனுஸ்ரீ தயங்கி நிற்க, பிரகல்யா, "அங்கிள்!" என்றாள் ஜனார்த்தனன் நிமிர்ந்து பார்த்தவுடன்,
"அனு உங்க இஷ்யூவை நெனச்சு ரொம்ப பீல் பண்ணிட்டே இருக்கா.. எங்க பேட்ச் மேட் ஒரு பையனோட அப்பா பெரிய கார்ப்பரேட் லாயர். ஏதாவது ஹெல்ப் வேணும்னா செய்றேன்னு சொன்னான்" என்று கூறி பிரகல்யா நிறுத்த,
"நான் பார்த்துக்கிறேன்மா! நீங்க இதுல இன்வால்வாக வேண்டாம்" என்று திட்டவட்டமாகக் கூறினார். "இல்ல ஆங்கிள்.." என்பதற்குள் பேச்சு முடிந்தது என்பது போல் கையிலிருந்த ஃபைலை சும்மாவேனும் புரட்டினார் ஜனார்த்தனன். இருவரும் நகரப் போகவும்,
"அப்புறமாடா.. நீ ஏதோ கதை எழுதுறேன்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்களே.. அதெல்லாம் வேண்டாம். கேம்பஸ் வேற எதுவும் வந்தா அட்டென்ட் பண்ணப் பாரு. முடிஞ்ச அளவு நல்ல டிஸ்டன்ஸ்ல இருக்கிற ஊரா பார்த்து ஜாப் கிடைச்சா ஜாயின் பண்ணிடு. அப்ராட் (abroad) போறதுன்னா இன்னும் சந்தோஷம்" என்றார் அப்பா.
எப்போதும் இப்படி சொல்பவர் இல்லையே மேலே அதைப் படிக்கலாம், இதைப் படிக்கலாம், வேலையைப் பற்றி எல்லாம் யோசிக்காதே என்று சொல்பவராச்சே என்று யோசித்து அனுஸ்ரீக்குக் கண்கள் கலங்க, அவள் எதுவும் பேசும் முன் அவள் கையைப் பிடித்து இழுத்து வந்து விட்டாள் பிரகல்யா.
ஆங்காங்கே கிடந்த பொருட்களை எடுத்து பைகளில் அடுக்குவதும், பைகளை எடுத்து வந்து ஹாலில் வைப்பதுமாக இருக்க, எப்போதும் கிளம்பும் வகைக்கும் இன்றைக்குமான வித்தியாசம் வீட்டினர் அனைவருக்கும் நன்றாகவே தெரிந்தது. 'எக்ஸாம் முடிச்சு நான் அடுத்த வாரம் வரும்போது எல்லாம் ஸால்வ் ஆகியிருக்குமா?' என்ற கேள்வி அனுவின் வாய் வரை வந்து அப்படியே நின்றது.
ஜனார்த்தனன் விவகாரத்திற்கும் அனுவின் கனவுகளுக்கும் தொடர்பு உண்டு என்ற எண்ணம் வலுவாகிக் கொண்டே போனது பிரகல்யாவிற்கு. "அனுஸ்ரீ தூங்குறான்னு நினைச்சு பேசியிருக்கக் கூடாது" என்று அவர் சொன்னதை மனதில் அசை போட்டபடியே இருந்தாள். 'அனு சமீபமா எப்பவாவது ஹாஸ்பிடல்ல இருந்தாளா? அதுவும் மயங்கின நிலைமையில?' என்று தன் ஞாபகப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு செமஸ்டர் லீவில் வீட்டுக்கு வந்திருந்த போது டூவீலர் ஓட்டப் பழகுகிறேன் என்று அனு கீழே விழுந்து வைத்தது நினைவுக்கு வந்தது. தலையில் லேசாக அடிபட்டு விட ஒருநாள் வரை மருத்துவமனையில் கவனிப்பில் இருந்ததாகக் சொல்லியிருந்தாள்.
அத்துடன் டூவீலர் ஓட்டும் ஆசையையே விட்டாள் அனுஸ்ரீ. 'அப்பதான் அங்கிளும் அவரோட ரைட் ஹேண்டும் எதோ பேசி இருக்காங்களோ? அதைக் கேட்டுட்டுத் தான் இந்தப் பொண்ணுக்குக் கனவா வருதோ?' என்று எண்ணினாள்.
"அப்பாவை வேணா கார் எடுக்கச் சொல்லவாடா? பஸ்ஸுக்கு டைமாச்சு!" என்று பூரணி கேட்க, "அம்மா ஓலா புக் பண்ணிக்கிறோம்மா.. இதுக்கெல்லாம் எதுக்கு நீ ஒர்ரி பண்ற" என்ற அனுஸ்ரீயின் பதில் கேட்டது.
"நான் புக் பண்றேன் டி!" என்று பிரகல்யா சொல்லவும் ஓலா, உபேர் என்று எந்த வாகனம் பக்கத்தில் இருக்கிறது என்று துளாவ, அவளுக்கு அருகில் இருந்த வரவேற்பறை சோஃபாவில் காசிராஜன் வந்து அமர்ந்தார். அவரை வரவேற்ற பத்மாவதி, "கொஞ்சம் இருங்க அண்ணா! இவங்க அப்பா ஃபோன்ல இருக்காங்க, காஃபி போடறேன்" என்று செல்ல,
காசிராஜனும் தன் மொபைலை எடுத்து இலக்கின்றி எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். பேசாமல் இவரிடமோ ஜனார்த்தனனிடமோ விவரம் கேட்டுவிட்டால் என்ன என்று யோசித்தவாறு நிமிர்ந்தாள் பிரகல்யா. அவருடைய அலைபேசியும் காசிராஜனுடையதும் ஒன்று போல இருப்பது சட்டென்று அவள் கண்ணில் தென்பட்டது. "அட! ரெண்டு பேர் ஃபோனும் ஒண்ணு போல இருக்கு! இது நல்லதா, கெட்டதா?" என்று யோசித்தவள் இரண்டு பேருக்கும் நடுவில் இருந்த இருக்கையில் தன் அலைபேசி வைத்துவிட்டு எதேச்சையாகச் செல்வது போல் உள்ளே எழுந்து சென்றாள்.
"கடவுளே கடவுளே! அவர் ஃபோனைக் கீழே வைக்கணும். கீழ வச்சிட்டு அப்படியே எழுந்து போகணும்" என்று அவள் வேண்ட, ரொம்ப நேரம் அங்கேயே அமர்ந்திருப்பது அசௌகரியமாக இருந்ததோ என்னவோ, காசிராஜன் மெல்ல எழுந்து போர்ட்டிக்கோ பக்கமாக நடந்தார். உள்ளிருந்து, 'ஐயோ! ஃபோனைக் கையில வச்சிருக்காரா, கீழே வச்சிருக்காரா தெரியலையே!' என்று லேசாக பிரகல்யா எட்டிப் பார்க்க அன்று காற்று அவள் பக்கம் வீசியது.
இவளது அலைபேசிக்குக் கொஞ்சம் தள்ளி காசிராஜன் தன்னுடையதை வைத்திருந்தார். ஒரு நொடியும் யோசிக்காமல் விறுவிறுவென்று அதனருகே போன பிரகல்யா, தன் அலைபேசியை அவரிடத்தில் வைத்துவிட்டு அவருடையதை எடுத்துக்கொண்டு உள்ளறைக்குள் வந்தாள்.
"கடவுளே இன்னும் கொஞ்ச நேரம் மாட்டிக்காமப் பார்த்துக்கோ!" என்று தனக்குத் தெரிந்த கடவுள்களிடம் எல்லாம் மனு போட்டவள், அந்த போனை திறக்க முயல, அதில் நம்பர் லாக் போட்டிருந்தது. முந்தைய நாள் தான் அவளுக்கு ஒரு மீம் ஃபார்வேர்டாகி வந்திருந்தது. உலகில் 90% பேர், அதுவும் ஐம்பதைத் தாண்டியவர்கள் 98 சதம் பேர் வைத்திருக்கும் பாஸ்வேர்ட் 12345 என்பது தானாம். அதையே முயற்சி செய்து பார்ப்போம், நடுவில் மாட்டிக்கொண்டால், 'ரெண்டு பேர் ஃபோனும் ஒன்னு போல இருந்துச்சு அங்கிள்.. என்னோடதுன்னு நினைச்சுட்டேன்.. கிளம்புற அவசரம்" என்று ஒரு அசட்டுச் சிரிப்பை சிரித்துக் கொள்ளலாம் என்று விறு விறுவென்று ஒன் டூ த்ரீ ஃபோர் ஃபைவை அழுத்தினாள்.
1 2 3 4 என்று முதல் நான்கு இலக்கங்களைப் போட்டவுடனேயே காசிராஜனின் அலைபேசி திறந்து கொண்டது. எந்த சாளரத்தில் நுழைந்து சென்று பார்க்கலாம் என்று ஒரு நிமிடம் அவள் கையும் காலம் பரபரக்க, அனுஸ்ரீயிடம், "டீ! ஃபோனைக் குடு!" என்று கேட்டவள், டயலர் பகுதிக்குள் சென்று லாஸ்ட் டயல்ட் பகுதியில் கடந்த நான்கு ஐந்து தினங்களை ஸ்க்ரோல் செய்து எத்தனை போட்டோக்கள் எடுக்க முடியுமோ அத்தனையும் எடுத்துக் கொண்டாள். மேல் whatsapp சாட் எதுவும் போய் பார்க்கலாமா என்று நினைத்தவள், தன் முயற்சியை கைவிட்டு கூகிள் குரோம் உள்ளிட்ட ஏதாவது பிரவுசர்களில் ஏதும் பக்கங்கள் திறந்து வைத்திருக்கிறாரா என்று விறுவிறுவென்று போய் பார்த்தாள். மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.
பரிட்சையில கூட பக்கத்தில் இருக்கிறவனைப் பார்த்து நான் காப்பி அடிச்சதில்லையே! இப்படி தப்பு மேல தப்பு பண்றனே.. கடவுளே! மன்னிச்சுடு, மன்னிக்கிறதுல உனக்கு எதுவும் அப்ஜக்ஷன் இருந்தா, திருவள்ளுவர் தாத்தா கிட்ட கேட்டுக்கோ.. அவர் நல்ல காரியத்துக்காக இதெல்லாம் பண்ணலாம்னு ஏதோ சொல்லி வச்சிருக்காரு.. டீடைலா ரூல் செக்க்ஷன், கிளாஸோட (clause) சொல்லுவார்" என்று கடவுளிடம் மனு போட்டவள் கூகிள் குரோமை திறந்து பார்த்தாள். அதில் tnidol.com என்ற தளத்தின் இரண்டு மூன்று பக்கங்கள் திறந்து பார்க்கப்பட்டிருந்தது. அவசர அவசரமாக கேமராவில் சிறைப் படுத்திக் கொண்டாள்.
வாசற்புறம் நடந்து கொண்டிருந்தத காசிராஜன், "அனு பாப்பா! கேப் சொல்லி இருந்தீங்களா? வந்துடுச்சு" என்றபடியே உள்ளே வந்து அமர்ந்தார். அமர்ந்தவர் அனிச்சையாகத் தன் போனைத் தேட, அனுஸ்ரீ,
"ஆமா அங்கிள்! ஊருக்குக் கிளம்பிட்டோம். இன்னும் ரெண்டு எக்ஸாம் இருக்கு. முடிச்சிட்டு வரேன். நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க. பாய்!" என்று உற்சாகமாக ஆரம்பித்து உடைந்த குரலில் முடிக்க, அவரது கவனம் சற்றே அனுவிடம் திரும்பியது.
பேசாமல் இந்த ஃபோனையே கொண்டு போய் விடுவோமா, பஸ் ஸ்டாப் போகும் வரைக்கும் நிறைய தகவல்கள் திரட்டலாம் என்று பிரகல்யாவிற்குத் தோன்ற, வேண்டாம் என்று நினைத்தவள் காசிராஜன் அருகில் கிடந்த தன்னுடைய துப்பட்டாவை எடுக்க வருவது போல் வந்து கச்சிதமாக அலைபேசியை மீண்டும் இடம் மாற்றினாள்.
அனைவரிடமும் விடை பெற்று காரில் ஏறி அமரும் வரை படபடப்பாகவே இருந்தது பிரகல்யாவிற்கு. அமர்ந்தவுடன் அனுஸ்ரீயின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் தோளில் சாய்ந்தாள் பிரகல்யா. "டீ! என்னாச்சு பிரகல்? உடம்புக்கு எதுவும் பண்ணுதா? கொஞ்சம் கழிச்சுக் கிளம்பலாமா" என்று அனுஸ்ரீ கேட்க, காப் டிரைவரும் சற்றே தாமதித்தார்.
"அண்ணா! சீக்கிரம் போங்க, உங்களுக்குப் புண்ணியமா போகும்" என்று பிரகல்யா கூற, அவளை வித்தியாசமாகப் பார்த்தாள் அனுஸ்ரீ.
"நிறைய மேட்டர் ஸ்பை பண்ணிருக்கேன், பஸ்ல போய் உட்கார்ந்ததும் சொல்றேன்.. நம்ம கோக்குமாக்கு குணா உனக்கு ஹெல்ப் பண்ணியே தீரணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கான். இதோ பாரு அவன் ரெண்டு நாளா எனக்கு வரிசையாக கொடுத்திருக்கிற மெசேஜஸ்" என்று தன் ஃபோனை நீட்டிய பிரகல்யா,
"இதைப் பாத்துட்டு இரு. உன்னோட ஃபோன்ல நான் எடுத்திருக்கிற ஃபோட்டோஸைக் கொஞ்சம் நானே திருப்பிப் பார்த்துக்கிறேன்" என்றபடி அனுவின் போனை வாங்கினாள்.
குணா, "ஜனார்த்தனன் என்னுடைய இன்ஸ்பிரேஷன். சின்ன வயசுல இருந்து அவர் பத்தின நியூஸ் எல்லாம் படிச்சு அவரை மாதிரி நேர்மையான ஐஏஎஸ் ஆகணும்னு நானும் நெனச்சிருக்கேன். இப்ப கூட எனக்கு அந்த பிளான் இருக்கு. யூ நோ ஒன் திங்க்? அது போக பாலிடிக்ஸ்லயும் எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு. நாம மீட் பண்ணலாம். கண்டிப்பா அனுக்கும் அவ ஃபேமிலிக்கும் ஏதாவது ஹெல்ப் பண்ணனும்" என்று என்னவெல்லாம் வரிசையாகச் சொல்லி இருந்தான்.[/SIZE][/SIZE]
பிரகல்யா அவனை மறுப்பது போலும் இல்லாமல் அவன் உதவியை இருகரம் நீட்டி வரவேற்பது போலும் இல்லாமல் பொதுப்படையாக பதில் சொல்லிக் கொண்டே வந்திருந்தாலும் குணா விடுவது போல் தெரியவில்லை.
இதை எல்லாம் வாசித்த அனுஸ்ரீ, "எப்படியாவது சால்வ் பண்ணிடனும் டி! நேத்து அப்பா சொன்னதைக் கேட்ட இல்ல? என்னை வேலைக்குப் போகச் சொல்றாரு.. அவர் சொல்றதைப் பார்த்தா என்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்க, நீ வேலைக்குப் போய் உங்க அம்மாவைக் கூட வச்சுக்கோ அப்படின்னு சொல்ற மாதிரி தோணுதுடி" என்று சொல்ல,
"அம்மா தாயே! வாட்டர் டேங்க் ஓபன் பண்ணாதே.. கண்டிப்பா ஏதாச்சும் பண்றோம், இதை முடிக்கிறோம்! இன்னொன்னு கவனிச்சியா? நான் எப்பவும் சொல்லுவேனே நான் ஒரு தீர்க்கதரிசின்னு.. நீ தான் நம்ப மாட்டே.. நேத்து ரெண்டு மூணு கரைவேட்டிங்க அங்கிளைப் பாக்க வந்துட்டுப் போச்சு பாக்கலையா? அநேகமா எல்லாம் தற்போதைய எதிர்க்கட்சிக்கும், ஆளுங்கட்சிக்கும் எதிரா இருக்குற மூணாவது அணி மாதிரி தான் தெரிஞ்சுச்சு. நான் சொன்ன மாதிரி உங்க அப்பாவை அவங்க கட்சிக்குக் கூப்பிடுறாங்க போல.. நான் சொன்ன மாதிரி சிஎம் தான், கவர்னர் தான், லக் இருந்தா பிஎம்மா கூட ஆகலாம்" என்றாள் பிரகல்யா.
"சும்மா இருடி.. பேசாம அந்தப் போட்டியில இருந்து வித்ட்ரா பண்றேன்னு மெயில் அனுப்பிடவா? அப்பா கதை எழுதாதேன்னு ஏன் சொல்றார்?" என்று அனு கேட்க,
"அதெல்லாம் வேண்டாம்.. உனக்கு எந்த பிராபளமும் வராது. யாரும் கேட்டா நான் தான் கதை எழுதுறேன் அது என்னோட கதைன்னே நான் சொல்லிக்கிறேன். இந்த கதைக்கு நம்ம ஃபேன்ஸ் கிட்ட இருக்கிற ரெஸ்பான்ஸ் உனக்கு தெரியாது.. எக்கச்சக்கமா இருக்கு. நீ கதையை பில்டப் பண்ணப் பாரு.. இப்ப ரெண்டு நாளா எபிசோட் எதுவும் போஸ்ட் பண்ணலை. இன்னைக்காவது போடப் பாரு" என்றாள் பிரகல்யா.
அனுஸ்ரீ கற்பனைக் கடலில் மூழ்க, பிரகல்யா காசிராஜனின் அலைபேசியில் இருந்து திருடிய தகவல்களை பரிசோதிக்க ஆரம்பித்தாள். கூடவே அனுஸ்ரீ தூக்கத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றிய தன் அனுமானங்களை இப்போது அவளிடம் விவாதிக்க வேண்டாம், அடுத்தடுத்து எதுவும் கனவுகள் வருகிறதா அதைக் கதையாக எழுதுகிறாளா என்று பார்ப்போம் என முடிவெடுத்தாள்.
அனுஸ்ரீ எழுதும் கதையில் இருந்து:
"சேர்ந்தே செல்வோம் செந்தூரா!" என்று ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் கலர் கலரான பின்னணியில் பாடி ஆடிக்கொண்டிருக்க, அதை சோகம் கலந்து "சேர்ந்தே செல்வோம் சுந்தரா! சீக்கிரம் ஜெயிலுக்கு போவோம் சுந்தரா! சைரன் வச்ச போலீஸ் ஜீப்பில் போய் கம்பி எண்ணுவோம் சுந்தரா!" உளறிக் கொண்டிருந்தான் அஜித்.[/SIZE]
லேசாக சரக்கடித்து விட்டு வந்திருப்பான் போலும், டிவியில் எந்தப் பாடலை வைத்தாலும் அதைக் கேவலமாக வார்த்தை மாற்றம் செய்து, போலீசில் மாட்டப்போகிறோம் என்றே பாடினான். பொறுமையின் சிகரமாய் அவன் பேச்சுக்களை ரசிக்கும் சண்முகசுந்தரத்திற்கே கடுப்பாக வந்தது. "பேசாமல் டிவியை ஆஃப் பண்ணிட்டுத் தூங்கு" என்று தன் கணினித் திரையைப் பார்த்தவாறே ஒரு அதட்டல் போட்டான்.
ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த அஜித்தை சரவணன் தன் அறைக்குள் படியேற்ற மாட்டேன் என்று சொல்லி, பூட்டையே மாற்றிக் கொண்டு போய் விட, சண்முகசுந்தரத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி அவன் நாட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து நுழைந்திருந்தான் அஜித்.
"அண்ணா! இப்படியாடா நமது ஜர்ரு சத்தம் மூச்சு இல்லாமல் போவாரு? இந்த பவித்ரா அக்கா ஃப்ரெண்ட் வினோதாக்கா வேற என்னல்லாமோ பேசுது? ஒன்னுமே புரியல.. டேய் அண்ணா, உனக்கு என்னடா தோணுது? அடுத்த மாசம் வர்ற ஐபிஎல் மேட்ச்க்கு எப்படியும் கிரிக்கெட் வாங்கிடலாம்னு சரவணன் சொன்னான். அதைப் பாப்பேனா.. இல்ல ஜெயிலுக்குப் போயிடுவேனா? அக்கா கல்யாணத்துக்கு ஜீன்ஸ் பேண்ட் கேட்டிருந்தேன். அதைப் போட முடியுமா? முடியாதா?" என்று சண்முகசுந்தரத்திடம் கேட்டான்.
"நீ அடிக்கடி போய் பென் டிரைவ் கொடுக்கப் போனியே.. அந்தத் தெருவுல சிசிடிவி கேமரா எங்க எங்க இருக்குன்னு எதுவும் நோட் பண்ணி இருக்கியா?* என்று அந்த ஏரியாவை விபரங்களை இணையத்தில் தேடிக் கொண்டிருந்த சண்முகசுந்தரம் அஜித் குமாரிடம் கேட்டான்.
"அட போடா! அரசாங்க விவகாரம். மேலிடத்துல சிக்கியிருக்கோம். கண்டிப்பா எப்படியும் களிதான். அது வரைக்கும் ஜாலியா இருப்போம், முதல்ல மூணு பேரும் துப்பறியிற வேலையை விடுங்க" என்ற அஜித்,
அடுத்த நொடியே தடம் மாறி, "டேய் அண்ணா! துப்பறிஞ்சு அந்த ஜர்ரை முதல்ல கண்டுபிடிங்கடா.. அப்புறம் அவர் கைல கால்ல விழுந்தாவது நம்மை வம்புல மாட்டி விடாம இருக்கச் சொல்லி கேட்கிறேன். ஒத்துக்கலையா.. கடத்திடுவோம்" என்றான்.
"ஐயா தம்பி! இன்னொரு கட்டிங் கூட போட்டுட்டு வா.. தயவுசெய்து படு. உன் தொல்லை தாங்கலை. நீ தூங்குறியோ இல்லையோ நான் தூங்கப் போறேன்" என்று சண்முகசுந்தரம் இன்னொரு அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
பவித்ராவும் வினோதாவும் உருப்படியாக சில விஷயங்களில் முன்னேறி இருந்தனர். "நமக்கு ரெண்டு ஹோல்ட் இப்ப இருக்கு.. ஒன்னு சரோஜா அக்கா. அவங்களைக் கூட நாலு நாள் ரெஸ்ட் எடுத்துக்க சொல்லிட்டு நீயே அந்தப் பாட்டி வீட்டுக்குப் போ. அங்கே உங்க ஜர் பத்தி ஏதாவது தகவல் கிடைக்குதான்னு பாரு. இன்னொன்னு அஜித்குமார் பென்டிரைவ் டெலிவர் பண்ண போற அட்ரஸ். அந்த அட்ரஸுக்கு ஏதாவது டொனேஷன் சேல்ஸ் அந்த மாதிரி போய் நானே அங்க நோட்டம் பாக்குறேன். அரதப் பழசான டெக்னிக்கா இருக்கேன்னு பாக்குறியா? ஓல்ட் இஸ் கோல்ட். சில சமயம் அதிரடி நடவடிக்கைகள் பயனுள்ளதா இருக்கும். இங்க பாத்தியா?" 'அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லம்' என்று போட்டிருந்த ஒரு நன்கொடை வசூலிக்கும் பில் புக்கை எடுத்து நீட்டினாள் வினோதா.
"இது என்னடி புதுசா எனக்குத் தெரியாம?" என்று பவித்ரா கேட்க, "அது ஒரு டுபாக்கூர் அனாதை இல்லம். சும்மா ஏமாத்தி டொனேஷன்கிற பேர்ல காசு அடிச்சுட்டு இருந்தாங்க.. நான் ஒரு ஸ்டிக்கர் ஆபரேஷன்ல அவங்கள எக்ஸ்போஸ் பண்ணி அரெஸ்ட் பண்ண வச்சேன். எதுக்கும் இருக்கட்டும்னு அவங்களோட ரெண்டு ரசீது புக்கை எடுத்து வச்சிருந்தேன். இப்பப் பாரு அது யூஸ் ஆகுது. இதை எடுத்துக்கிட்டு டொனேஷன் கலெக்ட் பண்ணப் போறேன். சந்தேகம் வராம இருக்கணும் இல்ல. அதனால முதல்ல ஒரு ரெண்டு நாள் அதே ஏரியால வேற வேற தெருக்கள்லயும் அடுத்து இந்த அட்ரஸ் இருக்குற தெருவுலயும் போயி இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்றேன்" என்றாள்.
"இவ்வளவு ரிஸ்க் தேவையா?" என்றாள் பவித்ரா.
"உனக்கு உன்னை யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டிவிட்ட ஒரு ஆளையோ டீமையோ பிடிக்கணும். எனக்கு என்னோட கேரியர்ல இது அடுத்த ஸ்டிங் ஆபரேஷன். யாரு கண்டா? இதுவே என்னை அடுத்த லெவலுக்குக் கொண்டு போற டர்னிங் பாயிண்ட் கேஸோ என்னமோ.. எப்படியா இருந்தாலும் உங்க மூணு பேத்துக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம நான் பாத்துக்குறேன். அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தாலும் எனக்கு இருக்கிற காண்டாக்ட் மூலமா உங்களை காப்பாத்திடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று வினோதா கூற,
"என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே?!" என்றாள் பவித்ரா.
கனவுகள் பூக்கும் [/ICODE]

Last edited: