கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தலைமைச் செயலகம் 11

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 11

"இதெல்லாம் நான் இதுவரைக்கும் நான் கண்டுபிடிச்சு நோட் பண்ணி வச்சிருக்கிறது. இப்ப உன்னோட அப்ஸர்வேஷன் சொல்லு"

"நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல ஜனார்த்தனன் சார் என்னோட ரோல் மாடல். அதனால அப்பப்ப அவரைப் பத்தி ஆர்வமா படிச்சது கேள்விப்பட்டதுன்னு என் மைண்ட்ல இருக்கிறதெல்லாம் சொல்றேன். அவர் தமிழ் வளர்ச்சித் துறையில் இருந்திருக்கார். அப்ப நிறைய சிறந்த ஏழை எழுத்தாளர்களோட புக் எல்லாம் நாட்டுடைமையாக்க முயற்சி பண்ணி செஞ்சும் இருக்காரு. அப்புறம் ஹேண்ட்லூம் டெவலப்மென்ட்க்கான கதர் துறையில் இருந்தாரு. அப்ப அரசு ஊழியர்களை கைத்தறி வேஷ்டி, சேலை வாங்குங்க, அதை அடிக்கடி பயன்படுத்துங்க அப்படி சொல்லி நஷ்டத்தில் இருந்த துறையைத் தூக்கி விட்டார். நூல் விலையைக் குறைக்கிறது, மானியம் குடுக்கிறது, சாயப் பட்டறைகள் தொடர்பான சிக்கல்கள் இதெல்லாம் தீர்த்து வச்சதா சொல்லுவாங்க. ஆனா இதெல்லாம் பழைய கதை. இப்ப சமீபமா கொஞ்ச நாள் பள்ளிக் கல்வித்துறையில் விட்டு வச்சிருந்தாங்க. அதுக்கப்புறம் தூக்கிட்டாங்க. மே பீ நமக்குத் தேவையான விஷயம் அங்கே இருக்கலாம். ஆனால் அங்கே இருந்த கொஞ்ச நாள்ல கம்ப்ளைன்ட் வந்து சஸ்பெண்ட் ஆகுற அளவுக்கு எதுவும் பண்ண வாய்ப்பு இருந்திருக்குமான்னு தெரியவில்லை. இன்னொன்னு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுல ஒரு ஸ்பெஷல் ஆபீஸரா கொஞ்ச நாள் இருந்திருக்காரு. சிலை கடத்தல் சம்பந்தமாக நியூஸ் வரும்பொழுது, அதாவது வெளிநாட்டிலிருந்து மியூசியத்தில் இருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட சிலைகள் அப்படின்னு செய்தி வரப்ப இவர் பேரும் அதுல வரும். போட்டோஸ்ல இருப்பார். இதுல எதுவுமா இருக்கலாம்" என்றான் அவர்களுடைய பேட்ச் மாணவர் தலைவன் குணசேகர். கோக்கு மாக்கு குணா என்று இவர்கள் பிரியமாக அழைக்கும் அறிவாளி.

"டேய்! பின்றடா நீ! என்ன எதுவும் சைடு பிசினஸா பத்திரிக்கை நடத்துறியா?" என்று கேட்டாள் பிரகல்யா. பெங்களூர் திரும்பிய பின் அனுஸ்ரீ தனக்கு மீதமிருக்கும் தேர்வுகளில் மூழ்கி விட, அப்போதைக்கு தேர்வு இல்லாத இவர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் ஒரு மரத்தடியில் தங்கள் விவாதத்தைத் தொடங்கியிருந்தனர்.

"நான்தான் சொன்னேன்ல.. எனக்கு ஐஏஎஸ் ஆகணும்ங்கிறது கனவு. கூடவே பாலிடிக்ஸ்ல இன்ட்ரெஸ்ட். என்னைப் பத்தி சொல்லாத விஷயம் இன்னும் இருக்கு. எனக்கு ஜர்னலிசம்ல இன்ட்ரெஸ்ட். அதுவும் இந்த தனி
ஒருவன் படம் பார்த்ததிலிருந்து பல செய்திகளை சேகரிச்சு வச்சிருப்பேன். ஜெயம் ரவி சார் சொல்லுவாரே ஒரே நாள்ல வர்ற இரண்டு வேற செய்திகளுக்கும் தொடர்பு இருக்குன்னு.. அதே மாதிரி நானும் தொடர்பு படுத்தி பார்ப்பேன். சில சமயங்களில் ஒரே நாளில் நியூஸ் பேப்பர்ல முதல் பக்கத்தில் இருக்கிற ஒரு செய்திக்கும் மூன்றாம் பக்கத்தில் இருக்கிற இன்னொரு செய்திக்கும் தொடர்பு இருக்கும். பத்தாவது பக்கத்தில் இருக்கிற சினிமா செய்திக்கு அதைவிட நெருங்கின தொடர்பு இருக்கும். இதெல்லாம் கவனிச்சிருக்கேன்" என்றான்.

"நம்புற மாதிரி இல்லையே டா! என் வயசு தானே உனக்கும்? நான் கூட நீ அடிக்கடி மெசேஜ் பண்ணி இன்ட்ரஸ்ட் காட்டினதால, சரி சும்மா உன்கிட்ட ஷேர் பண்ணலாம்.. புதுசா ஏதாவது ஐடியா உனக்குத் தோணலாம் அப்படின்னு நினைச்சு தான் வந்தேன். இங்கே வந்து பார்த்தா நீ தகவல் சுரங்கமா இருக்கியே!" என்று ஆச்சரியப் பட்டாள் பிரகல்யா.

"நம்பு! நம்பித்தான் ஆகணும். இது தவிர இந்த விஷயத்துல எனக்கு இன்னொரு இன்ட்ரெஸ்ட்டும் இருக்கு. அதை நீயே கடைசியில் தெரிஞ்சுக்குவ"

"ஆமா.. எல்லா ஐஏஎஸ் ஆபிஸர் பத்தியும் இப்படித்தான் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணுவியா?"

"இல்ல இல்ல.. எனக்குப் பிடிச்ச துறைகள், அப்புறம் ஜனார்த்தனன் சார் எங்கே போனாலும் அவரை ஃபாலோ பண்ணுவேன். இதோ பாரு, அவரோட ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா எல்லாத்துலயும் நான் ஃபாலோயர்"

"ஆனா அவரு அதுல எல்லாம் ஏதோ அரசியல் சம்பந்தமா போட்டிருக்க மாட்டாரேஃ? கவிதைகள், பாரம்பரியம் அந்த மாதிரி தானே எழுதி இருப்பாரு?"

"ஆமா. நீயும் அதெல்லாம் ஸ்பை பண்ணிட்டியா?"

"பின்ன? இப்ப எந்த விஷயத்தையாவது இருந்த இடத்துல இருந்தே கண்டுபிடிக்கணும்னா அது இந்த சமூக ஊடகங்களில் இருக்கிற ஐடிக்களை சர்ஃப் பண்ணினா போதும். நீ நம்ம செட்லயே ரொம்ப எக்சன்ட்ரிக்கா
இருந்ததால உன்னைப் பத்தி கூட நாங்க சர்ஃப் பண்ணினோம்னா பாத்துக்கோயேன்" என்றாள் பிரகல்யா வாய்க்குள் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

"செஞ்சிருப்பீங்க செஞ்சிருப்பீங்க.. ஒரு பையன் பிரில்லியன்ட்டா இருந்தா பிடிக்காதே! சரி சரி இந்த டாபிக் அப்புறமா பேசலாம். இப்ப நம்ம ரெண்டு பேரோட அப்ஸர்வேஷனும் கம்பேர் பண்ணிப் பாக்கலாம். நீ ஜனார்த்தனன் சாரோட ரைட் ஹாண்ட்னு சொன்னியே.. அவர் மொபைலில் இருந்து எடுத்த போட்டோஸ் காட்டு" என்றவன் அதை ஆராய்ந்து விட்டு,

"அவரோட கூகிள் குரோம் பக்கத்துல tnidols.com அப்படிங்கிற பக்கத்தை இரண்டு மூணு டேப்ல திறந்து வச்சிருக்கார்.. அதுவும் இந்த சிலைக் கடத்தல்ல ஜனார்த்தனன் சார் இருந்தாருங்குற விஷயமும் ஒத்துப் போகுது. இந்த வெப்சைட்ல இதுவரை வெளியூர்ல இருந்து மீட்கப்பட்ட நம்ம தமிழ்நாட்டு சிலைகளோட புகைப்படங்களும் 360 டிகிரியில இருக்கு. இத வச்சு தான் இது எங்க ஊர் கோவிலில் திருடப்பட்ட சிலை அப்படிங்கற மாதிரி பல ஊர்க்காரங்க விண்ணப்பிச்சு வாங்கி இருக்காங்க. அதுபோக இந்த சிலைகள் எல்லாம் இப்ப எங்கெங்கே இருக்கு அப்படிங்கற டீடைல்சும் இருக்கு. நான் கூட இதெல்லாம் வெப்சைட்ல போடணுமா.. திருடுறவங்களுக்கு இது ஈசியா ஆயிடாதான்னு யோசிச்சிருக்கேன்" என்றான்.

"அப்ப, இது யோசிக்க வேண்டிய பாயிண்ட் தான். இதை மனசுல வச்சுப்போம். அப்புறம் வேற என்ன.. காசிராஜன் நிறைய பேர் கிட்ட பேசி இருக்காரு. அதுல அவரோட பர்சனல் கால்சும் இருக்கு. பெரும்பாலும் சிம் 2 ல இருந்து தான் பர்சனல் கால் பேசி இருக்காரு. அதெல்லாம் ஏதாவது ஷார்ட் நேம், செல்லப் பெயர்களோட இருக்கு. சிம் 1ல சமீபமா பேசின கால்கள் எல்லாமே ஜனார்த்தனன் சாரை எப்படி வெளியே கொண்டு வரலாம் அப்படிங்கிறது சம்பந்தமா இருக்கு. அதுல சில நம்பர்களை எடுத்து ட்ரூ காலர்ல போட்டுப் பார்ப்போம்" என்றான் குணா.

அலைபேசி எண்களை ஒவ்வொன்றாக அவள் சொல்லச் சொல்ல, ட்ரூகாலரில் அடித்து பார்த்தால் சிலர் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் வக்கீல்களாகவும் இருந்தனர். ஒன்றிரண்டு அழைப்புகள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும்
சென்றிருந்தன. சில எண்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

"சரி இந்த காசிராஜன் என்கிறவருடைய நம்பர் இருக்கா? நானே ஏதாவது ராங் நம்பர் மாதிரியோ, ரிப்போர்ட்டர் மாதிரியோ ஃபோன் பண்ணி அவர்கிட்ட டச் வச்சிக்கிறேன். அப்புறம் ஏதாவது வாய்ப்பு கிடைச்சா இப்ப இல்லேன்னாலும் நல்லா பிரண்ட்ஷிப் டெவலப் பண்ணி ஒன் மன்த் கழிச்சாவது டீடைல் வாங்கலாம்" என்றான்.

"தெய்வமே! நீ எங்கேயோ போயிட்ட!" என்றபடி கையெடுத்துக் கும்பிட்டாள் பிரகல்யா.

"சரி சரி.. நம்பர் இருக்கா இல்லையா? அதைச் சொல்லு!" என்க,

"உன் அளவுக்கு இல்லைன்னாலும் அதுல பாதி அளவுக்காவது நான் வர வேண்டாமா.. அனுஸ்ரீ மொபைல்ல இருந்துச்சு.. இதோ நான் எடுத்து சேவ் பண்ணி வச்சிருக்கேன்" என்று அந்த எண்ணையும் பகிர்ந்து கொண்டாள்.

"ஓகே! அது இப்போதைக்கு இருக்கட்டும். இப்போ வேற ஆங்கிள்ல யோசிப்போம்" என்றான் குணா.

"டேய் இவ்வளவு யோசிக்கிறதுக்கு பேசாம ஜனார்த்தனன் சார் காலிலேயே விழுந்து விஷயத்தை கேட்கலாம்.."

"அவர் சொல்லுவார்னு நம்பிக்கையே இல்லை. நீங்க சொல்றதைப் பார்த்தா அவர் அனுவை இதுல இன்வால்வ் பண்ணவே விரும்பலன்னு தோணுது. சொல்லப்போனா அனேகமா பனிஷ்மென்ட் கிடைக்கும், ஜெயிலுக்குப் போயிடுவோம்னு நினைக்கிறாரு" என்றான் குணா.

"அதே தான் எங்க டவுட்டும்.. நாங்க பேசாம வச்சிருந்த விஷயத்தை எல்லாம் நீ இப்படி பட்டு பட்டுன்னு போட்டு உடைக்கிறியே!"

"இந்த.. ஹேக்கிங் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா காசிராஜனோட போன் நம்பர், ஜனார்த்தனன் அங்கிளோட போன் நம்பர் கொடுத்து ஹேக் பண்ண சொல்லிடுவோமா? விஷயம் சட்டுன்னு முடிஞ்சிடும்" என்றான் குணா.

"பேசாமல் சண்முகசுந்தரத்தைப் பண்ணச் சொல்லலாம்!" என்றாள் பிரகல்யா.

"யாரு சண்முகசுந்தரம்?" என்று குணா கேட்க,

"ஐயோ நானும் மண்டை குழம்பிப் போய் அலையிறேனே.. நீ அனுவோட கதையைப் படிக்கலையே?"

"இல்ல இனிமேதான் படிக்கணும்"

"இப்போதைக்கு படிச்சுடாதே! இந்த விஷயத்தை எல்லாம் முடிச்சு எல்லாம் செட்டிலான பிறகு உட்கார்ந்து படி. அந்த கதையில வர்ற ஒரு கற்பனை கேரக்டர் தான் சண்முகசுந்தரம். நான் கதையையும் நிஜ வாழ்க்கையும் கம்பேர் பண்ணிப் பார்த்து திருப்பித் திருப்பி அனலைஸ் பண்றதுல சண்முகசுந்தரம், பவித்ரா, அஜித் இவங்கள்லாம் நிஜ கேரக்டர்னு என் மனசுல பதிஞ்சுது போல.. கதையில இப்ப நாலு பேர் துப்பறியிறாங்க. இங்கே நானும் அனுவும் தான் இவ்வளவு நாள் மண்டையை ஒடச்சிட்டு இருந்தோம். இப்ப மூணாவதா நீ வந்திருக்க" என்றாள்.

"என்னோட ஃப்ரண்டு ஒருத்தன் இருக்கான்பா சென்னைல.. அவங்க அப்பா ரிப்போட்டர். அவனை இன்வால்வ் பண்ணலாமான்னு எனக்கு ஐடியா இருக்கு"

"ஐயையோ வேண்டாம் தெய்வமே.. நிறைய கேரக்டர்ஸ் இன்வால்வ் பண்ணப் பண்ண நமக்கு சிக்கல் கூடிடும்"

"இந்த கதை விஷயத்தை குழப்பம் இல்லாத படி லைட்டா எனக்குச் சொல்லு" என்றான் குணா. அனுவிற்கு அடிக்கடி கனவுகள் வந்ததும், அது சுவாரசியமாக இருப்பதால் கதையாக அவள் எழுத ஆரம்பித்ததும், அந்தக் கதையைத் தான் சைட்டில் போட்டதையும் சொன்ன பிரகல்யா,

"அனுவுக்கு ஏற்கனவே தூக்கத்திலேயோ மயக்கத்திலேயோ இருந்தப்ப அவ காதுல விழுந்த விஷயங்கள்தான் தொடர்ச்சியா இந்த செக்ரட்டரியேட் கனவாக வந்திருக்குன்னு எனக்கு இப்ப டவுட். இப்ப அடுத்த பிரச்சனை என்னன்னா, சமீபமா அவளுக்கு இந்த சம்பவம் தொடர்பான கனவுகளே வர மாட்டேங்குது. அது வந்தா கூட அடுத்தடுத்து நிஜத்திலும் என்ன பண்ணலாம்னு ஒரு ஜட்ஜ்மெண்ட்க்கு வரலாம்" என்றாள் பிரகல்யா.

"உன்கிட்ட நான் இன்னொன்னு சொன்னேனா? நான் சைக்காலஜி கொஞ்சம் படிச்சிருக்கேன்"


"உன்னை நூறு வருஷம் வாழ விட்டா, உலகத்துல இருக்குற ஃபீல்ட் ஒன்னு விடாம படிப்பே போல" என்று ஆச்சரியப்பட்டாள் பிரகல்யா‌

"அதை விடு.. சைக்காலஜில என்னோட பெட் சப்ஜெக்டும் கனவுகள் தான். எப்பயோ கேட்ட, பார்த்த சம்பவங்கள் ஆழ்மனசுல இருக்கும்போது அதுக்கு லேசான ஒரு தூண்டுதல் கிடைச்சா அன்னைக்கு நைட் அது கனவா வரும். எங்க தாத்தா சொல்லி இருக்காரு தூங்குறதுக்கு ஜஸ்ட் முன்னாடி ஒரு விஷயத்தை நினைச்சா அது கனவா வராதுன்னு.. உதாரணமா, அய்யோ இன்னைக்கு பேய் படம் பார்த்துட்டேனே, இன்னைக்கு பேய் கனவா வரப்போகுது அப்படின்னு உனக்கு பயமா இருக்கா, தூங்குறதுக்கு ஜஸ்ட் முன்னாடி அதைப் பத்தி ஃபுல்லா உன் மனசுல ஓட்டி பாரு.. ஆழ்மனசுல இருக்குற எண்ணங்கள் வெளியே வந்துடும்.. அதனால கனவு வராதாம்"

"அட!"

"இந்த விஷயம் தொடர்பா திருப்பி அனுவுக்குக் கனவுகள் வர வைக்கலாம். ஒரு ரெண்டு நாள் அவகிட்ட பழைய இன்சிடென்ட் எல்லாத்தையும் பத்தி பேசணும். அதுக்கப்புறம் ஒரு நாள் முழுக்க அவளை கம்ப்ளீட்டா வேற விஷயத்துல இன்வால்வ் ஆக்கி மைண்டை அந்த விஷயத்தை விட்டு டைவர்ட் பண்ணனும். இப்ப அந்த பழைய விஷயங்கள் எல்லாம் ஆழ்மனசுல இருந்து கொஞ்சம் அடுத்த லெவலுக்கு வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கும்.. அப்புறம் தூங்குறதுக்குக் கொஞ்சம் முன்னாடி இது தொடர்பா வேற எதாவது பேசி ட்ரிக்கர் (trigger) கொடுத்தோம்னா அன்னிக்கு கனவு வர வாய்ப்பு இருக்கு" என்றான்.


"அடேய்! கனவைக் கூட இப்படி ஸ்கீம் பண்ணி, ப்ரோக்ராம் பண்ணி வர வைக்க முடியுமா?" என்றாள் பிரகல்யா.

"முடியும் நான் எனக்கே அந்த மாதிரி ட்ரை பண்ணி இருக்கேன்.. சில சமயம்
சக்சஸா ஆயிருக்கு" என்றான் குணசேகர்.

"இதால அவ ஹெல்த்துக்கு எதுவும் பாதிப்பு வந்துடாதே? அவ ஏற்கனவே கனவுகளை நினைச்சுக் குழம்பிப்போய் இருக்கா"

"நான் சொல்ற மாதிரி ட்ரை பண்ணிப் பாரேன் இந்த தடவை தீர்வு கிடைக்கும்னு நினைக்கிறேன். இதுக்கு ஒரு கதை வசனம் எழுதுவோம். எக்ஸாம் முடியட்டும். நாலு அஞ்சு பேரை கூட்டிட்டு பக்கத்துல மலைக் கோயிலுக்குப் பிக்னிக் போகலாம். அங்கே வச்சு எல்லாரோட சின்ன வயசுக் கதைகளையும் பேசுற மாதிரி பேசி, அனு கிட்ட எந்தெந்த ஊர்ல இருந்தாங்க, அவங்க அப்பா என்ன டிபார்ட்மெண்ட்ல வேலை பார்த்தாங்க, அதுல புடிச்சது என்ன அப்படிங்கற மாதிரி எல்லாம் கேட்டு அவ மனசை அவளுக்கே திறந்து காட்டுவோம்" என்றான் குணா.

"நீ அரசியல்ல புகுந்திடலாம். இப்படி மைண்ட் கேம் விளையாடி மக்கள் எல்லாரையும் உனக்கு ஓட்டு போட வச்சுடுவே.. ஜனார்த்தனன் அங்கிளே எதுவும் தேசிய கட்சியில் சேர்ந்திடுவாரு, கவர்னர் ஆயிடுவாருன்னு நான் கிண்டல் பண்ணிட்டு இருக்கேன். உன் காலிபருக்கு நீ நாட்டோட பிரைம் மினிஸ்டரே ஆயிடலாம்" என்றாள் பிரகல்யா.


அனுஸ்ரீயின் தேர்வுகள் முடியும் வரை வேறு எந்த இடையூறுகளையும் இருவரும் அவளுக்கு ஏற்படுத்தவில்லை. தேர்வு முடிந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் "பிரகல்யாவைக் கூப்பிட்டாள் அனுஸ்ரீ. பிரகல்யா தன் டிரைனிங்கிற்கு நீண்ட விடுப்பு போட்டுவிட்டு ஹாஸ்டலில் இருந்தபடியே தீவிரமாக சில துப்பறியும் நாவல்களைப் படித்தாள். அருகிலிருந்த லைப்ரரியில் அரசியல் தொடர்புடைய துப்பறியும் நாவல்களைத் தனியாக அடுக்கி வைத்திருந்தது பிரகல்யாவுக்கு வசதியாகப் போனது.

"எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணி இருக்கேன் டி! கதையை டெவலப் பண்ணி எழுதினா இன்னும் நல்லா ஃபீல் ஆகும்னு தோணுச்சு. கொஞ்சமா எழுதி இருக்கேன் படிச்சு பாரேன்" என்றபடி இணைப்பை அவளுக்கு அனுஸ்ரீ அனுப்ப,

"அதைவிட வேற எனக்கு என்ன வேலை? இப்பவே படிக்கிறேன்!" என்றாள் பிரகல்யா.



அனுஸ்ரீ தன் கதையில் இணைத்தவை:

"உன்னோட ஆஃபீஸ் விஷயத்துல எனக்கு ஏன் நிறைய இன்ட்ரஸ்ட் தெரியுமா? இதே மாதிரியான ஒரு இன்சிடென்ட்ல நானும் இதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்டிருக்கேன்" என்றாள் வினோதா.

"என்ன வினோ இவ்ளோ லேட்டா சொல்ற?" என்று பவித்ரா கேட்க,

"கோவிட் டைம்ல நிறைய நாள் நான் யார் கூடவும் காண்டாக்ட் இல்லாம இருந்தேன் தெரியுமா?"

"ஆமா.. ஆன்லைன் வரவே இல்லை.. உன் நம்பரும் ரீச் ஆகல. கேட்டதுக்கு கோவிட் பாசிட்டிவ் ஆயிட்டேன், தனிமைல வச்சிருக்காங்க.. ஃபோனை வீட்ல வச்சுட்டு போயிட்டேன்னு சொன்னியே?" என்று பவித்ரா ஞாபகமாகக் கேட்க,


"அறிவுக்கொழுந்து! அப்படியே ஞாபகம் வச்சிருக்க.. அதே தான். அப்ப ஒரு சீக்ரெட் ஆபரேஷனுக்கு நாங்க போயிருந்தோம். நானும் இன்னும் மூணு ரிப்போட்டர்சும். ஒரு பெரிய ப்ராஜெக்ட் சில உண்மைகளை வெளியே கொண்டு வந்து எல்லா பத்திரிகைகளையும் அது ஃபிளாஷ் ஆச்சு. ஆனா எங்க பேர் எங்கேயும் வெளியே வரல. ரிஸ்க்கான ஜாப். ஆனா ஓரளவு நல்ல பேமென்ட் கிடைச்சது. அதுல தான் இந்த புது ஸ்கூட்டி வாங்கினேன்" என்றாள் வினோதா.

"சரி விஷயத்துக்கு வா! சஸ்பென்ஸ் தாங்கல!"

"ஒரு பெரிய கார்ப்பரேட் ஹாஸ்பிடல். அதுல சீக்ரெட்டா ஒரு ப்ளோர்ல பாதி ரூம்கள் மட்டும் ஹிட்டனா இருந்துச்சு. ஆஸ்பத்திரி முழுசும் கோவிட் ஹாஸ்பிடல், வேறு எந்த நோயாளியும் அங்கு அனுமதிக்க மாட்டோம் அப்படின்னு சொல்லிட்டு வச்சிருந்தவங்க, அந்த இடைப்பட்ட அறைகள்ள மட்டும் வேறு சில நோயாளிகளை அனுமதிச்சு இருந்தாங்க. அங்க தான் நாங்க நாலு பேரும் வேலைக்குப் போனோம். ரிசப்ஷனிஸ்ட், நர்ஸ், வார்ட் பாய் இப்படி. அங்க நாங்க இருந்தப்ப எங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைச்சுது. அதைக் கொஞ்சம் கொஞ்சமா வேற வேற ஃபார்மட்ல நியூஸ் ஆக்கினோம். உன் கதையிலிருந்த அதே ஒற்றுமை என் கதையிலையும் இருக்கு பாத்தியா.. குறிப்பா அந்த சில அறைகள் மட்டும் மறைவா இருக்குறது, அவ்வளவு பழைய காலத்து பில்டிங்கான செகரட்டரியேட் பில்டிங்ல நீங்க அதை கண்டுபிடிச்சிருக்கீங்க. ரீசண்டா கட்டின கட்டிடமான ஒரு கார்ப்பரேட் ஹாஸ்பிடல் செட்டிங்லயும் நாங்க அதே மாதிரி இடத்தில் வேலை பார்த்திருக்கோம். ஆனா சில விஷயங்களை விள்ககி, எங்க சம்மதத்தோட அப்படியான ஒரு இடத்துல நாங்க சகல வசதிகளோடு அடைச்சு வைக்கப்பட்டோம். அதைப் பண்ணினது யாரு அதெல்லாம் எனக்கும் டீடைல் தெரியாது. ஆனால் ஹெல்த் டிபார்ட்மெண்ட்ல நடந்த சில ஊழல்களை வெளியே கொண்டு வரணும்னு நினைச்ச சில நல்ல அதிகாரிகள் தான் என்கிறது எங்களுடைய கெஸ்.‌ என்னோட மெண்டர்னு நினைக்கிற ஒரு மூத்த பத்திரிக்கையாளர் தான் எங்கள கூப்பிட்டு இந்த வேலையை கொடுத்தார். அவங்க எதிர்பார்த்த மாதிரியே அந்த ஊழல்கள் வெளியே வரவும் செஞ்சது. இப்பவும் அதே மாதிரி வேற சில டிபார்ட்மெண்ட்ல இருந்து சில ஊழல்களையோ அரசுடைய பிரச்சனைகளையோ வெளியே கொண்டு வரணும்னு அதிகாரிகள் நினைச்சிருக்கலாம்" என்றாள் வினோதா.

"இருக்கலாம்" என்ற பவித்ரா வேறு ஏதோ கேட்க வாய் எடுக்க,

"நீ என்ன கேட்கப் போறேன்னு தெரியும். அதை மட்டும் கேட்காதே.. எங்களுக்கு வேலை கொடுத்த சீனியர் ஜர்னலிஸ்ட் யாருன்னு நான் சொல்ல முடியாது. ஆனா அந்த ஹாஸ்பிடல் யாருடையது அதுக்கு வந்துட்டு போன சீப் கெஸ்ட் யார் யாரு அப்படின்னு நிறைய டீடெயில்ஸ் இதுல இருக்கு. இதையும் உங்களோட கேஸ்ல வர்ற டீடைல்ஸையும் கம்பேர் பண்ணிப் பார்ப்போம். ஏதாவது ஒரு ஒற்றுமை, லூப்ஹோல் கண்டிப்பா சிக்கும்" என்றாள் வினோதா.


பவித்ராவுக்கு நம்பிக்கை பிறந்தது. வேகமாக அவள் கொடுத்த பட்டியலை வாங்கி பார்த்துத் தன் கண்களை அதன் மேல் ஓட்டினாள்.

கனவுகள் பூக்கும் ❤️
 
Last edited:

Latha S

Administrator
Staff member
அப்படித்தான் ஏதோ தப்பு அந்த தலைமை செயலகத்தில் நடந்திரு க்கனும்..

ஜனார்த்தனன் தன் மகள் அனுவை அதற்காகத்தான் ஒதுங்கி இருக்க சொல்லி இருக்கலாம்.

Interesting.. குணா படுபுத்திசாலி.. நிச்சயம் future கலெக்டர் வாய்ப்பிருக்கு
 
Top