அத்தியாயம் 12
"முடியலடா! டேய் குணா, இவ்வளவு குட்டி மலையில் ஏற நானே சிரமப்படுகிறேனே நீ எப்படிடா பெரிய உடம்பை வச்சிட்டு கடகடன்னு ஏறுற?"
"பழக்கம் தான் டா.. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை இங்க வந்துருவேன் தெரியுமா? சரி சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல? நீ பாட்டுக்கு ஓவர் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து வம்புல மாட்டிவிட்டுடாத. கான்செப்ட் புரிஞ்சுதுல்ல?"
"அனுஸ்ரீ அவங்க அப்பா விஷயத்துல அப்செட்டா இருக்கா. அவ இப்ப எழுதிட்டு இருக்கிற கதையை எப்படிக் கொண்டு போறதுன்னு அவளுக்குத் தெரியல. அதனால அவ கிட்ட இயல்பா பேச்சுக் கொடுத்து அவளைக் கலகலப்பாக்குறோம். அப்படியே எல்லாரும் அவங்க அவங்களோட சின்ன வயசு ஞாபகங்களைப் பேச ஆரம்பிச்சா அவளுக்கு அதிலிருந்து ஏதாவது பாயிண்ட் வரலாம். அப்படித்தானே? நீ சொல்லிக்கொடுத்த படியே பேசி அசத்திடுறேன். நீ கவலையே படாதே. ஆனா நீ சொன்னபடி மத்தியானம் பிரியாணி வாங்கித் தந்துடனும்.
"வாடா! ஒன்னுக்கு ரெண்டு பிரியாணி வாங்கித் தரேன் மட்டன் ஒன்னு சிக்கன் ஒன்னு ஓகேவா? கோவிலுக்குப் போயிட்டு வந்து நான் வெஜ் சாப்பிட மாட்டேன்னு நீ சொல்லாம இருக்கணும்"
"சே சே! அந்தத் தப்பெல்லாம் பண்ண மாட்டேன் பா"
கல்லூரியின் அருகில் இருந்த குட்டி மலைக் கோவிலுக்குச் சென்று, அங்கே அமர்ந்து அனுஸ்ரீயிடம் பேச்சுக் கொடுத்து அவளுக்கு கனவுகளை வரவழைக்கும் திட்டத்தின் முதற்படியில் இருந்தனர். கலகலப்புக்குக் குறைவில்லாத ராகுலைத் தேர்ந்தெடுத்து உடன் கூட்டி வந்திருந்தான் குணா. ராகுல் தான் கேள்வி கேட்காமல் வரும் ஆள். கூடவே இங்கே பேசுவதை வெளியில் போய்ப் பேச மாட்டான். பிரகாரத்தைச் சுற்றி சுற்றிவிட்டு பிரகல்யா, அனுஸ்ரீ, குணா, ராகுல் நால்வரும் வட்டமாக அமர்ந்தனர்.
"அதிகாலையில பிரிஸ்க்கா எந்திரிச்சு இப்படி குட்டியா ட்ரக்கிங் மாதிரி வர்றதும் நல்லா இருக்குல்ல? காத்து வேற பிச்சுக்கிட்டுப் போகுது. தேங்க்ஸ் குணா! நீ வாரா வாரம் வருவியாமே? கிரேட்! இப்படி ஆக்டிவா, வெர்சடைலா இருக்குறதால தான் நீ எப்பவுமே நல்லா படிக்கிறியோ? இங்க வந்தாலே பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குது. நானும் எவ்வளவு நாளா இங்கே வரணும்னு நினைச்சேன் தெரியுமா? தள்ளித் தள்ளிப் போயிடுச்சு" என்றாள் அனுஸ்ரீ.
"அப்படியே சர்க்கரைப் பொங்கலும் கிடைச்சா நல்லா இருக்கும்ல" என்று பிரகல்யா அனுவின் சர்க்கரைப் பொங்கல் கதையை நினைவு படுத்த, "போடீ.. கலாய்க்காதே" என்று வெட்கத்துடன் சொன்னாள் அனுஸ்ரீ.
"நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போது எங்க ஊர்ல இருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தள்ளி இதே மாதிரி மலைக் கோயிலுக்கு அடிக்கடி போவோம். இங்கே இருக்கிறது விநாயகர்ல.. அங்க இருக்கிறது முருகர். எங்க ஊர்ல இருந்து நடந்தே போவாங்க இப்ப கூட லீவுக்குப் போறப்ப அந்தக் கோவிலுக்குப் போவோமான்னு அம்மா கேட்பாங்க.. நான்தான் போர் அடிக்குதும்மா அப்புறம் போகலாம்னு சொல்லிடுவேன்" என்று ராகுல் திவ்யமாக உரையாடலைத் துவங்கினான்.
"பாத்தீங்களா இது சமீபமா கட்டின கோயில்னாலும் அழகா கலைநயத்தோடு கட்டி இருக்காங்க. நாமக்கல்ல பெரிய ஆஞ்சநேயரை பார்த்திருக்கீங்களா? பார்த்தாலே பிரமிப்பா இருக்கும். அப்புறம் பிள்ளையார்பட்டி. இப்ப அதைவிட பெரிய பெரிய சாமி சிலைகள் எங்கேயோ நிறைய இடங்களில் இருக்குன்னு கேள்விப்பட்டேன்"
"ஆமாம் சிறுசு ஒரு அழகுன்னா பெருசு ஒருவிதமான பிரம்மாண்டமான அழகு. போன மாசம் எங்க சொந்த ஊர்ல நடந்த கதை தெரியுமா. குளத்துக்குப் பக்கத்துல ஒரு பிரபலமான பிள்ளையார். தினசரி குறைஞ்சது 200 பேராவது அவரைக் கும்பிட வருவாங்க. நான் லீவ் விட்டப்ப பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். 'நமது குளத்தங்கரை விநாயகரைக் கண்டுபிடித்துத் தந்த போலீசாருக்கு நன்றி! நன்றி!'னு ஊர் பூராவும் போஸ்டர் ஒட்டி இருந்தாங்க. என்ன விஷயம்னு பாட்டி கிட்ட கேட்டா காமெடியா இருந்துச்சு. திடீர்னு ஒரு நாள் காலைல விநாயகர் காணாமப் போயிட்டாராம். திருட்டுப் பிள்ளையார் வச்சா ராசின்னு ஊர் பூரா பேச்சு இருக்கே.. அதை நம்பிகிட்டு மூணு குடிகார லூசுங்க சிலையைத் திருடிட்டுப் போயிருக்காங்க. ஆனா அதை யாரும் வாங்கத் தயாரா இல்லை. இவங்க திருடிட்டுப் போய் ஒவ்வொரு ஊரா வாங்கிக்கிறீங்களா, வாங்கிக்கிறீங்களான்னு கேட்டும் யாரும் வாங்கலை போல. குளத்தங்கரைப் பிள்ளையார் தானே, ரெண்டு மூணு பேர் அதை ஏற்கனவே ஃபோட்டோ எடுத்து வச்சிருக்காங்க. அவங்க எல்லாம் நம்ம பிள்ளையாரைக் காணும்னு ஃபோட்டோவைப் போட்டு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், மெசேஜ்னு போட, திருட்டுப் பசங்கள்ல ஒருத்தன், திருடின பிள்ளையாரை ஃபோட்டோ எடுத்து இது யாருக்காவது வேணுமா அப்படின்னு வாட்ஸ் அப்ல போட்டிருக்கான். அது அங்க சுத்தி, இங்கே சுத்தி போலீஸ் கைக்கே வந்துடுச்சு. மூணாவது நாள் அவங்களைப் பிடிச்சுட்டாங்க. சாமியை ஃபோட்டோ எடுக்கக் கூடாதுன்னு சொல்றோம். ஆனா இந்த விஷயத்துல போட்டோஸ் எவ்வளவு உதவியிருக்கு. பாத்தீங்களா?" என்று குணா உரையாடலைத் தான் விரும்பும் பக்கமாகத் திசை திருப்பினான்.
"கரெக்ட் தான். நான் கூட நினைச்சிருக்கேன். இப்ப நியூஸ் பேப்பர்ல வருதுல்ல.. இந்த சிலைக் கடத்தல், அதை மீட்குறது.. இது சம்பந்தமான நியூஸ் எல்லாம் படிச்சிருக்கீங்களா. ஏதோ ஃபாரின் கன்ட்ரில வசிக்கிற ஒரு என்.ஆர். ஐ. தான் இந்த மாதிரி ஃபோட்டோஸ் வச்சு பழைய காணாம போன சிலை எல்லாம் வேற எந்தெந்த நாட்டு மியூசியம்ல இருக்கு அப்படிங்கிற தகவலை கண்டுபிடிச்சு நம்ம ஊர் போலீஸ்க்கு சொல்லி இருக்காரு. அதை வச்சு 30, 40 வருஷம் முன்னாடி காணாமப் போன சிலைகளைக் கூட மீட்டிருக்காங்க. எங்கிட்ட கேட்டா இப்படி பாரம்பரியமான பொது சொத்துக்களைப் பூட்டிப் பூட்டி யார் கண்ணுக்கும் படாம உள்ளே வைக்கிறதை விட பப்ளிக்கா எல்லாருக்கும் தெரியிற மாதிரி டீடெயில்ஸ் இருந்தாத் தான் திருட்டுக் குறையும்" பிரகல்யா இலக்கை நோக்கி நகர்வதில் தானும் சளைத்தவள் இல்லை என்று நிரூபித்தாள்.
சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த அனுஸ்ரீயை யாரும் தொந்தரவு செய்யவில்லை. ஓரிரு நிமிடங்களுக்குப் பின்பு அவளாகவே, "மத நம்பிக்கை இருக்கு இல்லங்கிறது வேற விஷயம். ஆனா நமக்குப் பழகின இடங்களில் இருக்கிற பாரம்பரியமான சில விஷயங்களை நம்ம எப்போ போனாலும் பாக்கணும்னு தோணும். நம்ம காலேஜ் வாசல்ல இருந்த பெரிய மரத்தை வெட்டினப்ப நாம எல்லாரும் எவ்வளவு கவலைப்பட்டோம்.. இத்தனைக்கும் வெறும் நாலு வருஷமா தான் அதைப் பாக்குறோம். எங்களுக்கும் ஒரு பூர்வீக கிராமம் இருக்கு. கும்பகோணம் பக்கத்துல தொண்டர் மங்கலம்னு பேரு. எங்க பாட்டி அந்த ஊர்ல தான் இருக்காங்க. நாங்க போகும் போதெல்லாம் கோவிலில் சிறப்பு பூஜை செய்வாங்க. குறிப்பா நடராஜர் சிலைக்கு. அந்த நடராஜர் சிலையை ஒரு நாள் காணாமப் போச்சு. நான் அந்த நியூஸ் கேட்டு அழவே செஞ்சிட்டேன். அப்புறம் அப்பா அவரோட இன்ஃப்ளுயன்ஸை கொஞ்சம் யூஸ் பண்ணி வெளிநாட்டுக்குக் கடத்த இருந்த சிலையை, கப்பல்ல ஏத்துறதுக்குக் கொஞ்சம் முன்னாடி ஹார்பர்ல வச்சுப் பிடிச்சிட்டாங்க. அப்புறம் ஸ்பெஷல் பூஜை எல்லாம் வச்சு அதை மறுபடியும் கோயில்ல பிரதிஷ்டை பண்ணினாங்க. இது நடந்து ஒரு பத்து வருஷம் இருக்கும். ஃபாரின்ல நிறைய பணக்காரங்க பிரைவேட் கலெக்ஷனுக்காக கோடிக் கணக்கா பணம் கொடுத்து இந்த மாதிரி சிலைகளை வாங்கத் தயாரா இருக்காங்க. அவங்களுக்கு அது அப்பப்ப தூசி துடைச்சு ஷோ கேஸ்ல வைக்கக்கூடிய ஒரு அழகுப் பொருள். அவ்வளவுதான். ஆனா நம்ம ஊர்ல நிறைய பேருக்கு அது எமோஷனலா கனெக்ட் ஆகுறது. எனக்கு இப்பவும் கூட நீங்க எல்லாம் சொல்ற மாதிரி பெரிய பெரிய சாமி சிலைங்களைப் பாக்குற அன்னிக்கு எல்லாம் எங்களோட அந்த குட்டி நடராஜர் பெரிய சிலையா மாறி கடத்தினவங்களைக் காலுக்குக் கீழே போட்டு மிதிக்கிற மாதிரி கனவு வந்திருக்கு" என்றாள் அனுஸ்ரீ.
குணாவும் பிரகல்யாவும் 'டார்கெட் அச்சீவ்ட்' என்பதைப் போல ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தனர். "நீ ஒரு நாள் அந்த ஊருக்குப் போகும் போது என்ன கூட்டிட்டுப் போறியா? அந்த நடராஜரை எனக்கும் பாக்கணும் போல இருக்கு" என்றான் ராகுல்.
"கண்டிப்பா! ஆனா இப்போதைக்கு எப்பப் போவோம்னு தெரியலை" என்றாள் அனு.
"நாமும் இந்த மாதிரி வாலண்டரியா ஆர்கனைசேஷன் எதோடையாவது சேர்ந்து பாரம்பரியப் பொருட்களை பாதுகாக்கிற முயற்சியில் ஈடுபடலாமா? அட்லீஸ்ட் அப்பப்ப இந்த மாதிரி ப்ளேஸஸ் விசிட் பண்ணி, நமக்குத் தெரிஞ்ச விஷயங்களை எல்லாம் நெட்ல போட்டு பப்ளிசிட்டி பண்ணினோம்னா நிறைய பேர் வருவாங்க. அப்ப திருடுறவங்க கொஞ்சம் யோசிப்பாங்கல்ல. இந்த திருட்டுகளுக்கு எல்லாமே டார்கெட்டா இருக்கிறது, முன்னாடி ஃபேமஸ்ஸா இருந்து இப்ப காலப் போக்கினால் மக்கள் வர்றது ரொம்பவே குறைஞ்சு போன கிராமத்துக் கோயில்கள் தான். ஆயிரம் வருஷம் பழமையான கோயில்னு சொல்லுவோம். ஆனா அங்க ஒரு வேளை பூஜை பண்றதுக்கே அவ்வளவு கஷ்டப்படுவாங்க. கதவு, பூட்டு, சாவி எதுவும் சரியா இருக்காது. அப்ப ஈசியா திருடிடலாம் தானே? நம்ம நாலு பேரும் அட்லீஸ்ட் நம்ம ஊர் பக்கம் இருக்கிற கோயில்களை சிறப்பெல்லாம் எடுத்துச் சொல்லி ஃபேமஸ் ஆக்கிவிட்டா சுற்றுப்புறத்தில் இருக்கிறவங்க அப்பப்ப வந்து போவாங்க இல்ல?" என்றான் குணா.
"கரெக்ட் தான்.. ஆனா நாம டீடைலா போடுறதைப் பார்த்து நெட்ல படிச்சிட்டு, எவனாவது 'அட இது சூப்பர் சிலைடா.. இதைத் திருடலாம்னு வந்துட்டான்னா?" என்று பிரகல்யா தன் சந்தேகத்தை முன்வைக்க,
"அதுவும் கரெக்ட் தான். யோசிச்சுப் பண்ணுவோம்" என்றான் குணா.
ராகுல் உடனேயே, "இன்னைக்கு இங்க வந்ததுனால இதை ஆர்வமா ஒரு ப்ராஜெக்ட்டா பேசுறோம். இங்க இருந்து போயிட்டா அடுத்து நம்ம வேலை, கடமை அதுஇதுன்னு மூழ்கிடுவோம். ஆகுற கதையைப் பேசுடா.. வேணும்னா அப்பப்ப போற ஊர்கள்ல இருந்து நிறைய டீடைல் கலெக்ட் பண்ணி வச்சுக்கலாம். கூடவே ஃபோட்டோஸ் எடுத்து ஒரு ஃபோல்டரில் போட்டு வச்சுப்போம். அப்புறமா ஏதாவது வெப்சைட் கிப்சைட் க்ரியேட் பண்ணி ஒண்ணா ஆர்கனைஸ்டா போடுறதைப் பத்தி யோசிப்போம்"
"நீ எப்படா இவ்ளோ அறிவாளியான?" என்று பிரகல்யா அதிசயிக்க,
அதைக் கண்டுகொள்ளாத ராகுல்
"இந்த மாதிரி எல்லாம் நடக்காம நீ தான் பார்த்துக்கணும்னு கடவுள் கிட்ட தான் வேண்டணும். அது ஒண்ணு தான் இப்போதைக்கு நம்மால செய்ய முடியும். சாமி! உன்னை நீயே காப்பாத்திக்கோப்பா!" என்று இருந்த இடத்தில் இருந்தே கோவில் இருந்த திசையைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி வணங்கினான் ராகுல். அனைவரும் மனம் விட்டுச் சிரித்தனர். குணாவின் சீரிய திட்டமிடல் காரணமாகவா, அல்லது கடவுள் அருள் காரணமா என்று தெரியவில்லை அனுஸ்ரீக்கு அன்று பயங்கர விரிவாக ஒரு கனவு வந்தது. அதை அப்படியே எழுதியும் வைத்தாள்.
அனுஸ்ரீயின் கூகுள் டிரைவில் இருந்து:
வினோதா இரண்டு பேர் குசுகுசுவென்று பேசும் சத்தம் கேட்டு விழித்தாள். தன் புதிய ஃப்ரீலேன்ஸ் ப்ராஜெக்ட்டான 'கிராமப்புற தெய்வ வழிபாடுகள்' குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதற்காக திருநெல்வேலிப் பக்கம் போய்விட்டு கிடைத்த ட்ரெயினில் தட்கல் டிக்கெட் போட்டு ஏறி அமர்ந்திருந்தாள். அவளுக்கு கிடைத்திருந்தது அப்பர் பர்த் என்பதால் இரண்டு நாட்களின் அலைச்சல் தந்த அசதியில் அப்படியே மேல் பெர்த்தில் ஏறித் தூங்கிவிட்டாள். மெல்ல மெல்ல ரயில் நகர்ந்து மதுரையைத் தாண்டி வேகம் பிடிக்க ஆரம்பித்த நேரத்தில் சற்று உறக்கம் கலைய, கீழிருந்து வந்த குரல்கள் அவள் உறக்கத்தை முழுவதுமாகத் தெளிய வைத்தன.
"அதான் சொல்றேன் இல்ல? அந்த ஐஏஎஸ் பயலை அது இதுன்னு புகார் போட்டு வேலையை விட்டுத் தூக்கியாச்சு. இனிமே அவன் தொந்தரவு இருக்காது. அந்த ஃபார்ம் ஹவுஸில் இருக்கிற சரக்கை எல்லாம் கை மாத்தி விட்டுடுங்க. கூலிக்காரங்க நிறைய பேர் காசு கேட்டு நெருக்குறாங்க" என்றான் ஒருவன். சுமார் நாற்பது வயது இருக்கலாம் அவனுக்கு.
"உனக்கென்ன? நீ சாதாரணமா சொல்லிடுவ.. இப்ப எங்கே பார்த்தாலும் சிசிடிவி, டோல்கேட் அது இதுன்னு நிம்மதியா தொழில் பண்ண முடியல. செஞ்சு வச்ச போலி நம்பர் பிளேட் எல்லாம் சும்மா கிடக்கு. ஐஏஎஸ் ஆபிசரை வேலையை விட்டு தூக்கினாலும் அவனோட அல்லக்கையில் ஒண்ணு இருக்குல்ல.. செல்லப்பா. அவனை என்ன பண்றது?" என்றான் ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த மற்றவன்.
'என்ன ஐஏஎஸ் ஆபிசரை வேலை விட்டுத் தூக்கினாங்களா? இவங்களா? செல்லப்பான்னு வேற பேசுறாங்க? காமாலைக் காரனுக்குப் பார்க்கிறதெல்லாம் மஞ்சளா தெரியும்னு சொல்லுவாங்க. நமக்கு எல்லாமே இந்த பவித்ரா விஷயமாவே தோணுதோ? இல்ல.. நிஜமாவே ஜாக்பாட் அடிச்ச மாதிரி எதுவும் நடக்குதா?' அவர்கள் சொன்ன விஷயத்தில் பரபரப்பாகி காதை தீட்டிக்கொண்டு நடப்பதை கவனித்தாள் வினோதா.
"செல்லப்பாவை செல்லாத டப்பாவா ஆக்கிடலாம். ஒரு ஓட்டை டூ வீலர்ல இங்கேயும் அங்கேயும் போயிட்டு வரான். அவனைத் தட்டுறது ரொம்ப ஈசி. இவனுங்க எல்லாம் ஒரு ஆளா? நம்ம வழிக்கு வந்த முன்னாள் முதல்வரையே நேக்கா அப்புறப்படுத்திட்டாரு நம்ம தலைவரு. இவன் எல்லாம் ஒரு சுண்டைக்காய்" என்றது அந்த நாற்பது.
வினோதாவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. இது இவள் முற்றிலும் எதிர்பாராத விஷயம் இல்லை. இருந்தும் இவ்வளவு கவனக்குறைவாக ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் இரண்டு பேர் அமர்ந்து கொண்டு தங்கள் தலைவர் தான் முன்னாள் முதல்வரை காலி செய்ததாகக் கூறுவார்களா? ஒருவேளை மிதமாக மது அருந்தியிருக்கலாம். என்ன டீலிங் பத்தி பேசுகிறார்கள் என்று சட்டென்று புரியவில்லை. கீழே இறங்கி உணவை சாப்பிடலாம் என்றிருந்தவள் அப்படியே கண் மூடி படுத்துக் கொண்டாள்.
அதில் ஒருவனின் ஃபோன் அடிக்க, எடுத்தவன், "என்ன இப்படி சொல்லிட்டீங்க? எத்தனை வருஷமா என் கூட பழகுறீங்க? எத்தனை டீல் முடிச்சுக் குடுத்திருக்கேன்.. என்னைக்காவது தப்பு விட்டிருக்கேனா? நான் தொட்டதெல்லாம் சக்சஸ் தான். ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க தல.. முடிச்சிருவோம்" என்றான் அதன் பின் இருவரும் அமைதியாக ஆகிவிட்டனர். கொண்டு வந்திருந்த பார்சலை பிரித்து சாப்பிட்டார்கள்.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் வினோதா அப்போதுதான் எழுவது போல் எழுந்து கீழே இறங்கி கை கழுவி விட்டு வந்தாள். வினோதா தாங்கள் பேசியதைக் கேட்டிருப்பாளோ என்று சந்தேகம் அவர்களுக்கும் இருந்திருக்கும் போல அவளையே குறுகுறுவென்று பார்த்தது அந்த ஐம்பது.
"எக்ஸ்கியூஸ் மீ அண்ணா! என்னோட மொபைல்ல சார்ஜ் போயிடுச்சு. உங்க சார்ஜர் கொஞ்ச நேரம் யூஸ் பண்ணிக்கட்டுமா?" என்று ஜன்னல் அருகே இருந்த ஸ்விட்ச் போர்டில் மாட்டி இருந்த சார்ஜரைப் பார்த்துக் கேட்டாள். அங்கிளாக இருந்தவன் தன்னை அண்ணா என்று ஒரு இளம் யுவதி அழைத்தவுடன் நெக்குறுகிப்போய் விட்டான். "அதுக்கு என்னம்மா தாராளமா போட்டுக்கோங்க" என்றான்.
"அவசரமா கிளம்பினேன். நிறைய வேலை வேற.. அதான் சார்ஜ் போட்ட டைம் இல்ல. ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு" என்று வினோதா கூற,
"யாருக்கும் அவசியமா போன் பண்ணனும்னா என்னோட போன வச்சுக்கோ பாப்பா" இன்று வலிய வந்து பேசினான் அந்த நாற்பது. சற்று யோசித்தவள், பழம் நழுவிப் பாலில் விழுகிறதே, அதை ஏன் வேண்டாம் என்று சொல்வானேன் என்றெண்ணி, "எங்க அண்ணனும் உங்களை மாதிரியே தான் இருப்பாரு.. அவருக்கு தான் ஃபோன் பண்ணனும். தேங்க்ஸ்!" என்றவாறு அவனுடைய ஃபோனுடன் வாசற்புறமாக வந்தாள்.
திடீரென்று சண்முகசுந்தரம் ஞாபகம் வர அவனுக்கு அழைத்தவள், "இந்த நம்பரை உடனடியாக ஹேக் ஹீக் எதாவது பண்ணு.. இதுல இனிமே பேசுறது, ஏற்கனவே இருக்கிற விஷயங்கள் எல்லாம் நம்ம கைக்கு வந்தாகணும்" என்றாள்.
ஏற்கனவே இதைப் போன்ற வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கும், முடிந்தால் மேனே'ஜர்'ரின் ஃபோனை ஹேக் செய்யலாம் என்று திட்டம் வைத்திருந்ததால் அதற்கான முன்னேற்பாட்டுடன் தான் இருந்தான் சண்முகசுந்தரம். 'எத்திக்கல் ஹேக்கிங்'கில் சிலபல சான்றிதழ்கள் வாங்கியவன் அவன். விரைந்து செயலாற்றி ஒரு லிங்க்கை அனுப்ப, உடனேயே இன்பாக்ஸில் அது வந்து குதித்தது. அதை வினோதா அழுத்தியதும் அந்த ஃபோன் முழுவதுமாக சண்முகசுந்தரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கவனமாக அந்த லிங்க் வந்த மெசேஜை டெலிட் செய்து விட்டு மீண்டும் நடந்து வந்து திடீர் அண்ணன்களிடம் ஃபோனைக் கொடுத்தாள் வினோதா.
மீண்டும் தன் அப்பர் பர்த்தில் ஏறிப் படுத்து ஏற்கனவே தங்கள் சந்தேகப்பட்டியலில் இருக்கும் நபர்களை மனதில் ஓட்டிப் பார்த்தாள். சிலைக் கடத்தல், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்ததில் உள்ள ஊழல்கள் தொடர்பான ஃபைல்கள் தான் பவித்ரா, அஜித் சண்முகசுந்தரம் இவர்கள் மூவருக்கும் கொடுத்திருந்தார்கள். இவர்கள் வெளியில் கசிய விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆரம்பம் முதலே அவளது தீவிரமான நிலைப்பாடு. இவர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த ஃபைல்களில் அந்த மூன்றாவது விஷயம் எந்தக் காரணம் கொண்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவிடக் கூடாது என்பது வினோதா மற்றும் பவித்ராவின் பிரார்த்தனையாக இருந்தது.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகி விட்டதோ என்று பயமாக இருந்தது வினோதாவுக்கு. பண்ணை வீடு சரக்கு என்று பேசுவதை பார்த்தால் சமீபத்தில் ஒரு பண்ணை வீட்டில் ஏகப்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்ட செய்தி வந்ததே அதற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்று தோன்றியது. அப்படி என்றால் மாட்டி விட்டார்கள் என்று தானே அர்த்தம்? பின் என் வேறு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நினைத்தாள்.
சின்னப் பிள்ளைத்தனமாக ஏதோ இருக்கும், மிஞ்சிப் போனால் மூன்று நான்கு வாரங்களுக்கு ஸ்கூப் நியூஸ் என்று புலனாய்வு பத்திரிக்கைகளும் பிரேக்கிங் நியூஸ் என்று செய்திச் சானல்களும் அலறும் வகையில் ஏதாவது தேறும் என்று இவர்கள் நினைத்திருக்க, அந்த ஃபைல்களில் இருந்த மூன்றாவது விஷயம் பயமுறுத்தியது. அது வெளிவந்தால் தேசிய அரசியலில் முக்கியமானதாக இருக்கும். பலப்பல அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று தோன்றியது. சிலைக்கடத்தல், தனியார் பள்ளி, முன்னாள் முதல்வர் மூன்றுக்கும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு இருக்கும் போல் இப்போது தோன்றுகிறது. ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. புலி வாலைப் பிடித்தாகி விட்டது. இனி விட முடியாது என்பது தான் அது.
கனவுகள் பூக்கும்

Last edited: