அத்தியாயம் 13
"இதுதான் என்னுடைய எண். அவசரமாகப் பேச வேண்டும். முடிந்தவரை விரைவில் அழைக்கவும்" என்று போட்டியை நடத்தும் 'இளங்காலை' பிரபல இணையதளத்திலிருந்து மெயில் வந்திருந்தது பிரகல்யாவுக்கு. என்னவோ ஏதோ என்று அந்த எண்ணை அழைத்துப் பேச அவள் எதிர்பார்த்திருந்த பூகம்பம் வந்தே விட்டது. இப்படி ஏதாவது நடக்கும் என்று யூகித்திருந்தாள் பிரகல்யா. ஆனால் இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை.
அனுஸ்ரீ கதையை எழுத எழுத பிரகல்யா அதைத் தன்னுடைய மொபைலிலிருந்து தான் பதிவேற்றிக் கொண்டிருந்தாள். நேற்றைய அத்தியாயத்தைப் பதிவேற்றம் செய்யப் பட்டவுடனேயே, சீக்ரெட் ஆப்ரேஷன், முன்னாள் முதல்வர், சிலைக் கடத்தல் போன்றவற்றைத் தொடர்புபடுத்தி, "இது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை போல் இருக்கிறது" என்று ரசிகர்கள் ஒன்றிரண்டு பேர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
கடைசியாகப் பதிவேற்றிய அத்தியாயத்தில் தெளிவாகவே அரசியலை இழுத்தாயிற்று. போதாக்குறைக்கு மார்க்கெட் செய்கிறேன் பேர்வழி என்று இரண்டு மூன்று ஃபேக் ஐடிக்களில் இருந்து, "கதை சூப்பரா போகுது!" "வித்தியாசமான ஸ்டோரி லைனில் ஒரு கதை" என்பது போன்ற மெசேஜ்களையும் முகநூல் குழுக்களில் பிரகல்யா தட்டி விட, அந்தக் கதையின் வாசிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் இணையவெளியில் வெளியாகும் கதைகளை எல்லாம் உடனுக்குடன் படித்து விரிவாக விமர்சனம் எழுதும் மூத்த விமர்சகர் ஒருவர், "கதை நன்றாகப் போகிறது. சமகால அரசியலுடன் பயணிப்பது புதுமையாக இருக்கிறது. நிஜ வாழ்க்கைக் கதையில் திருப்பங்கள் நிகழுமா அல்லது புனைவில் முதலில் முடிவு தெரியுமா? இரண்டும் ஒன்றாக இருக்குமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசை" என்று தன்னுடைய விமர்சனத்தைப் பதிவு செய்திருந்தார்.
அதன் பின் அந்தப் பக்கத்திற்கு வந்திருந்த வாசிப்பாளர்களின் எண்ணிக்கை இன்னும் கூடியிருந்தது. அந்த நேரத்தில்தான் இந்த மெயில்.
பிரகல்யா அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசிய போது தளத்தின் உரிமையாளரே நேரடியாகப் பேசினார். அவரைப் பிடிக்கிறது கஷ்டம். எப்பவும் "அவங்களோட அசிஸ்டன்ட் யாராவது தான் நம்ம கூட காண்டாக்ட்ல இருப்பாங்க" என்று முன்பு நண்பர்கள் சொல்லியிருந்தனர். அவரே பேசவும் பிரகல்யாவிற்கு இன்னும் ஆர்வம் கூடியது.
"அந்த தலைமைச் செயலகம் அப்படிங்கற கதை நீங்கதானே எழுதறீங்க?" என்று அவர் கேட்க,
"நாட் எக்ஸாக்ட்லி! என்னோட ஃப்ரண்ட் எழுதுறாங்க. நான் அப்லோட் பண்றேன்" என்றாள்.
"அதுல.. கொஞ்சம் ஸ்டோரி லைன் மாத்தணும். இல்லன்னா கதையை ஸ்டாப் பண்ணச் சொல்லணும். அட்லீஸ்ட் இந்தக கடைசி எபிசோடையாவது கட் பண்ணிட்டு வேற டைரக்ஷன்ல போய் கதையை முடிக்கச் சொல்லுங்களேன்"
"அது எப்படிங்க? உங்க சைட்ல ஃபுல் ஃப்ரீடம் இருக்குன்னு கேள்விப்பட்டு தான் இதுல எழுத ஆரம்பிச்சாங்க. மத்த தளத்தில் தான் கதையைத் திருத்து, தலைப்பை மாத்து, இந்த மாதிரி ஸ்டோரி லைன் வேணும்னு தலையீடு ரொம்பப் பண்ணுவாங்களாம்.. நீங்களே இப்படிச் சொல்றீங்க?" என்றாள் பிரகல்யா.
"ஆக்சுவலா அதான் எங்க பாலிசி. சொல்றதுக்கு கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் எக்ஸ்டர்னல் பிரஷர் அதிகமாக வருது. நான் பத்து வருஷமாப் போராடி இப்பதான் ஓரளவுக்கு இந்த வெப்சைட்டை ஸ்டெபிலைஸ் பண்ணி இருக்கேன். அந்த ரைட்டர் நம்பர் கொடுக்க முடியுமா? நான் பேசுறேன்" என்றார் தளத்தின் உரிமையாளர்.
"அவங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தாள் பிரகல்யா. பின் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். "இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இது வேறயா? இந்தக் கதை இவ்வளவு பிரச்சனையை கொண்டு வரும்னு தெரியாது. சும்மா ஜாலிக்கு பண்றேன்னு பண்ணப் போய் இப்படி ஆயிப்போச்சே' என்று யோசித்தாள் பிரகல்யா.
நேற்றைய அத்தியாயத்தில் அதன் பின்னும் நிறைய எழுதியிருந்தாள் அனுஸ்ரீ. அவளுக்கு வந்தது மிக நீண்ட கனவு. ரயிலில் வினோதா சந்தித்த மனிதர்கள், அதன் பின்னான நிகழ்வுகள் சிலவற்றை அனு எழுதியும் பிரகல்யா சேர்க்கவில்லை. சிலவற்றைக் கட் செய்து தனியாக ஒரு ஃபோல்டரில் ஒட்டி வைத்து விட்டாள்.
'உண்மையாவே இதே மாதிரி சம்பவங்கள் வெளியே நடந்துட்டு இருக்குனு தோணுது. அதனால தான் சைட்டோட ஓனரைப் பிடிச்சு மிரட்டுற அளவுக்குப் போயிருக்காங்க. இதெல்லாம் மொத்தமா கற்பனைன்னா யாரும் இந்த அளவுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லையே.. அப்படியா எக்ஸாக்ட்டா கதையும் நிஜமும் ஒண்ணா நடக்கும்?' பலவாறு யோசித்த பிரகல்யா, மெதுவே விஷயத்தை அனுஸ்ரீயிடம் சொன்னாள். அனுஸ்ரீ அதிர்ச்சி அடைவாள் என்று பார்த்தால் அதுதான் இல்லை. நினைச்சேன் என்பது போல் தான் இருந்தது அவளுடைய பாவனை.
"எங்க அப்பாவும் கால் பண்ணினாங்க" என்றாள்.
"வாட்!"
"ஆமா! ஒரு கதை எழுதுறேல்ல பாப்பா.. அதை இனிமே எழுதாதேயேன். உனக்கும் ஆபத்து வந்துடப் போகுது அப்படிங்குறார்"
"விளக்கமாச் சொல்லு"
விளக்கம் கூற அனுஸ்ரீ வாயை திறப்பதற்கு முன் அவளது போன் அலறியது. "ஐயோ ரிங்டோனை ஏன் இவ்வளவு சத்தமா வச்சிருக்கே? இப்பப் போய் ஃபோன் பண்றது யாரு?" எரிச்சலுடன் அனுவின் மொபைலை பிரகல்யா எட்டிப் பார்க்க, அழைத்திருந்தது இவர்களின் இன்னொரு தோழி விதுஷா. ஆம், அவ்வப்போது அனுவிற்கு டிரைவர் வேலை பார்க்கும் அதே அதிரடி விதுஷா தான்.
"என்னடி விது?" என்று அனுஸ்ரீ கேட்க,
"உடனடியா டிவி ஹாலுக்குப் போ! இல்லையா, மொபைல்லயே புதுவசந்தம் டிவி லைவ்ல போடு. பரபரப்பா ஒரு நியூஸைத் திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டு இருக்காங்க பாரு.. உன்னோட கதை பத்தி தான்னு நினைக்கிறேன்.. அரசியல்ல நடக்கிறதை அப்படியே எழுதுறியாமே? தமிழ் நாட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்குற பல கேள்விகளுக்கு உன்னோட கதை முடிவுல பதில் இருக்கும்னு சொல்றாங்கடி. அந்த எழுத்தாளர் யாரு அப்டிங்கறது தான் தீவிர டிஸ்கஷன். இன்னைக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு "அலசி ஆராய்வோம்" பகுதியில நாலு பேர் உன்னோட கதையைப் பத்தித் தான் பேசப்போறாங்களாம். சீக்கிரம் நியூஸ் பாரேன்" என்றாள் விதுஷா.
மொபைலிலேயே புதுவசந்தம் செய்திச் சேனலை இயக்கி இருவரும் பார்த்தனர். விதுஷா சொன்னதையே இன்னும் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்த அரை மணி நேரத்திற்கு அதுதான் செய்தி என்பது போல் இருந்தது அந்த செய்தித் தொகுப்பு. போட்டி நடக்கும் 'இளங்காலை' தளத்தின் பெயரைச் சொல்லி இதுபோல் எத்தனை தளங்கள் இருக்கின்றன, அதில் எப்படி எல்லாம் போட்டி நடத்துகிறார்கள், விதிமுறைகள் என்னென்ன, எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்பதை எல்லாம் சொன்னார்கள்.
"இவ்வளவு டீடெயில்ஸ் எதுக்கு?" என்று அனுஸ்ரீ கேட்க,
"அப்புறம் அவனும் 24 மணி நேரமும் நியூஸ் சொல்ல வேண்டாமா? இப்படி எல்லாம் சொன்னா தான் ஆச்சு. கவனி அங்கே"
அறிவிப்பாளர் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தார். "இந்த போட்டியுடைய முக்கியமான விதிமுறை என்னன்னா, எழுதுறவங்க பேரு வெளியே தெரியாது. ஆனால் இந்த தளத்தோட உரிமையாளருக்குத் தெரியும். அவரைத் தொடர்பு கொண்டு கேட்டப்ப, பெயர் எல்லாம் சொல்ல முடியாது அது போட்டி விதிமுறைகளுக்கு எதிரானது அப்படின்னு சொல்லிட்டாங்க. இன்னைக்கு இரவு 9 மணிக்கு நம்மோட அலசி ஆராய்வோம் பகுதியில இந்த இளங்காலை தளத்தோட உரிமையாளர், அரசியல் விமர்சகர் ஒருத்தர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உடைய பிரதிநிதிகள் எல்லாரும் பேச இருக்காங்க" என்றவர், 'தலைமைச் செயலகம்' என்பது கதையோட பெயர், 'இளங்காலை' அப்படிங்கறது தளத்தோட பெயர் என்று திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டிருந்தார்.
தன் கதைக்கு வந்திருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை எடுத்து பார்த்தாள் அனுஸ்ரீ. அது பல மடங்காகக் கூடியிருந்தது. இணைய வழி கதை வாசிப்பு என்றால் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் 'தலைமைச் செயலகம்' என்று கூகுள் குரோமில் போட்டு தேடிக் கொண்டிருந்தார்கள். முன்பெல்லாம் எல்லா சர்ச் இன்ஜின்களும் 'தலைமைச் செயலகம்' என்று டைப் அடித்தால் சுஜாதா எழுதிய அறிவியல் நூலைக் காட்டும், அல்லது சென்னையில் இருக்கும் தலைமைச் செயலகத்தின் புகைப்படங்கள், விவரங்கள் இவற்றைக் காட்டும். இப்போது அனுஸ்ரீ எழுதிவரும் கதையைக் காட்டியது.
இதற்கிடையில் அலறுவது பிரகல்யாவுடைய அலைபேசியின் முறையானது. "அச்சச்சோ அந்த சைட் ஓனர் தான் பேசுறாரு. கதையை நிறுத்த முடியுமா, இல்ல வேற ஆங்கிள்ல கொண்டு போக முடியுமான்னு கேட்டாரே? என்னடி பண்றது இப்ப?" என்றாள் பிரகல்யா.
எப்பொழுதும் அனுஸ்ரீ பதற்றப்படுபளாகவும் பிரகல்யா அவளை சாந்தப்படுத்துபவர்களாகவும் இருக்க, இந்த முறை மட்டும் நிலைமை மாறியிருந்தது. அழைப்பை ஏற்காமல், "ஐ வில் கால் யூ ஷார்ட்லி!" என்ற மெசேஜை அவருக்குப் பதிலாக கொடுத்த பிரகல்யா ஒரு முடிவுக்கு வந்தவளாக அனுவின் தந்தை ஜனார்த்தனனுக்கு அழைத்தாள்.
"அங்கிள்! டிவி நியூஸ் பாத்தீங்களா?" என்க,
"ஆமாம் இந்த விஷயம் எப்படி மீடியாவுக்குப் போச்சுன்னு தெரியல" என்றார் அவர்.
"எங்களை மாதிரி ஆன்லைன்ல கதை படிக்கிறவங்களோட ஃபிரண்ட் லிஸ்ட்ல நிறைய மீடியாக்காரங்க, உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள் எல்லாம் இருக்காங்க. வாசகர்கள் பேசுவதை வச்சு அவங்க அதை நியூஸா ஆக்கியிருக்கலாம். யாராவது கூடிய சீக்கிரம் அனுவோட கதையை சுட்டு படமாவோ வெப் சீரிஸாவோ எடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை" என்றாள் பிரகல்யா.
"சின்னப் பிள்ளைங்கன்னு உங்களை நினைச்சிருந்தேன். பெரிய ஆள் ஆயிட்டீங்கம்மா. இப்ப நான் என்ன பண்றதுன்னு தான் புரியலை" என்றார் ஜனார்த்தனன்.
"சில விஷயங்களை ஓப்பனா பேசலாமா அங்கிள்?" என்று கேட்டாள் பிரகல்யா.
"என்னம்மா?"
"இப்ப உங்களுக்கு சஸ்ப்.. ஐ மீன் லீவுல தான இருக்கீங்க? நீங்க கிளம்பி பெங்களூருக்கு வாங்க.. எங்க காலேஜ்ல கெஸ்ட் ஹவுஸ் இருக்குல்ல. அதுல ரூம் புக் பண்ணி வைக்கிறேன். நாம நேரடியாவே ஆக்ஷன் ல இறங்கணும். நாங்களும் உங்ககிட்ட நிறைய விஷயங்கள் கேட்கணும் அப்படியே நிறைய விஷயங்கள் சொல்லவும் செய்யணும்" என்றாள்.
சற்று யோசித்த ஜனார்த்தனன், "சரிம்மா.. அடுத்த ஃபிளைட் எப்பன்னு பார்க்கிறேன்" என்றார்.
"ஓகே அங்கிள். தாங்க்ஸ்! அப்படியே காசிராஜன் அங்கிளையும் கூட்டிட்டு வந்திருங்க.. இந்தக் கதையில், சாரி சாரி இரண்டு கதையிலுமே அவர் ஒரு முக்கியமான ஆள். அப்புறம் ஆன்ட்டி வேண்டாம். அவங்க கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுட்டு சென்னையிலேயே விட்டுட்டு வாங்க" என்றாள் பிரகல்யா.
"காசிராஜனா…? அவருக்கு வேற எதுவும் வேலை இருக்கான்னு தெரியலை. சரி பார்க்கிறேன்"
"அப்புறம் இன்னும் ஒரே ஒரு இன்ஃபோ கேட்கணும். அது மட்டும் சொல்லிட்டீங்கன்னா நீங்க வர்றதுக்கு முன்னாடி அதுக்கான வேலைகளைப் பார்த்து வச்சுடுவேன்" என்றாள் பிரகல்யா.
"என்னம்மா?" என்ற அவர் கேட்க,
"என்னோட டவுட் கரெக்ட்னா, அனு முன்னாடி வச்சு நீங்களும் காசிராஜன் அங்கிளும் ஏதோ உங்க அஃபிஸியஜஜல் மேட்டர் டிஸ்கஸ் பண்ணி இருக்கீங்க. அது அவ அடிப்பட்டு இருந்த ஹாஸ்பிடல்ல வச்சுப் பேசி இருக்கலாம்னு எனக்கு ஒரு எண்ணம். நான் சொல்றது கரெக்ட் தானா? அது எந்த ஹாஸ்பிடல்? எக்ஸாக்ட்டா என்ன பேசினீங்க? இது மட்டும் இப்ப சொல்லுங்களேன்.. மத்ததை நீங்க வந்த அப்புறம் பேசிக்கலாம்" என்றாள்.
ரொம்பவே தயங்கியவர், "அது ஆத்மா ஹாஸ்பிடல். இந்த மாதிரி.. நாட்டோட இறையாண்மையை பாதிக்கிற மாதிரி கவர்மென்ட்ல நிறைய திரைமறைவு வேலைகள் நடந்துகிட்டு இருக்கு.. எல்லாம் தெரிஞ்சும் அதைப் பார்த்துக்கிட்டு பேசாம கையைக் கட்டி இருக்க முடியல அப்படின்னு நான் சொன்னேன்.. 'பேசாம மீடியாவுக்கு லீக் பண்ணிடுவோமா சார்? ஊரே கேள்வி கேட்க ஆரம்பிச்சா அப்புறம் இந்த விஷயங்களை நியாயமா டீல் பண்ணித் தானே ஆகணும்'னு காசிராஜன் சொன்னார். அதை எப்படி எக்ஸிக்யூட் பண்ணலாம்னு ஒரு சில ஐடியாஸ் சொன்னார்" என்க,
"அது சிலைக் கடத்தல் பத்தின விஷயம் தானே அங்கிள்?" என்றாள் பிரகல்யா.
பெரிய பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர், "ஆமாம்மா.. இப்ப மீடியாவுலையும் அதை சொல்லத் தொடங்கிட்டாங்களே.. இன் ஃபேக்ட் நான் சஸ்பெண்ட் ஆனப்பவே ஒரு சில சேனல்கள், பத்திரிகைகள்ல சிலைக் கடத்தல் சம்பந்தமா இருக்குமோன்னு சந்தேகம் எழுப்பி இருந்தாங்க.. இனிமே உங்ககிட்ட மறச்சு என்ன பிரயோஜனம்? சிலைக் கடத்தல்ல ஆரம்பிச்சு சீரியஸா சில விவகாரங்களும் அதில் இருக்கு" என்றார்.
"சரி அங்கிள் இந்த ஒரு தடவை நான் சொல்ற மாதிரி செஞ்சு பாருங்க.. நல்லது நடக்கும்"
"தலைக்கு மேல வெள்ளம் போயிடுச்சு.. இனிமே ஜாண் போனா என்ன, முழம் போனா என்ன? எனக்கு இப்ப யோசிக்கவே முடியலை. என்னை வந்து பாக்குற அரசியல்வாதிங்க, வக்கீலுங்க யார் சொல்றதையும் என்னால சட்டுன்னு ஏத்துக்க முடியல. நெக்ஸ்ட் ஜெனரேஷன் நீங்க நான் நினைச்சதை விட நாலட்ஜபிளா இருக்கீங்க. நீங்க சொன்னது படி செஞ்சு தான் பார்க்கிறேனே.. கிளம்பி வரேன்மா" என்றார்.
தெளிந்த முகத்துடன் மீண்டும் அனுஸ்ரீயிடம் வந்த பிரகல்யா, "அனு! உங்க அப்பா காசிராஜன் அங்கிளோட வரேன்னு சொல்லி இருக்கார். நானும் நம்ம ஃப்ரெண்ட்ஸை வரச் சொல்றேன்"
"ஃப்ரண்ட்ஸா? யாரு?!" என்று அனுஸ்ரீ கேட்க,
"ஃப்ரண்டு தான்.. குணசேகர் மட்டும்தான். தேவைப்பட்டா வேற யாரையும் கூப்பிட்டுக்குவோம்"
"குணாவா அவனுக்குத் தெரியுமா? அவன்கிட்ட இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணினியா? ஏன் டீ?" என்று கோபத்துடன் அனு கேட்க,
"அதெல்லாம் அப்புறம் சொல்றேன். ஊருக்கே தெரிஞ்சு போச்சு, இப்ப அவனுக்குத் தெரிஞ்சா என்ன? நான் செஞ்சா உன் நல்லதுக்காகத் தான் இருக்கும்னு தெரியும்ல? அப்புறம்.. எனக்கு உன்னோட கதைல வர்ற கேரக்டர்ஸ் எல்லாம் யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன். நிஜ வாழ்க்கையில் இருக்குற யார் யாரை உன் கனவு கேரக்டரா மாத்தி இருக்க.. அதாவது யார் யாரு உன் கனவுல வேற காரெக்டர்ஸா மாறி வந்திருக்காங்கன்னு எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு. இருந்தாலும் இந்த சில்வண்டு விதுஷா எல்லாம் உன் கனவுக்குள்ள வருவான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல டி!" என்று சிரித்தாள் பிரகல்யா.
"விதுஷாவா? என்ன சொல்ல வர்ற? புரியலையே!" என்றாள் அனுஸ்ரீ.
"உக்காரு.. உன்னோட கனவைப் பத்தி அனலைஸ் பண்ணினதை சொல்றேன். இது கரெக்டா தப்பான்னு யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதே! இதுதான் கரெக்ட்டு. புரியுதா? கேக்குறியா?"
"ம்.. சொல்லு" என்று அனுஸ்ரீ ஆர்வமாக,
"இந்த நிமிஷத்தோட கதையையும் நிஜத்தையும் ஒண்ணா கலக்குறோம். நான் இப்ப என்ன பண்றேன்னா, இளங்காலை சைட்டோட ஓனர் கிட்ட பேசுறேன். அவர் வேற டென்ஷனா காத்துகிட்டு இருப்பார். போட்டில கதையை முடிக்கிறதுக்கான டெட் லைன் இன்னும் பத்து நாள் தானே இருக்கு? கூட பத்து நாள் எக்ஸ்டெண்ட் பண்ணச் சொல்றேன். நீ வேற வேலைகள்ல பிஸியா இருக்குறதால தினசரி எபிசோட் கொடுக்க முடியாது, மூணு நாளைக்கு ஒருக்கா கொடுக்கிறேன்னு ஒரு அனௌன்ஸ்மன்ட் குடு. அடுத்த பத்து நாளைக்குள்ள நிஜத்துல என்னென்ன நடக்குது, அடுத்து என்னென்ன நடக்கப் போகுதுன்னு நாம முடிவு பண்ணி அதை எழுதப் போறோம். ஓகேவா? இந்தக் கதை புத்தகமா வரும் போது சக்கைப் போடு போடப் போகுது.. கண்டிப்பா நீ எனக்கு கிரெடிட் கொடுக்குற. சரியா?" என்றாள்.
"அதுக்கு என்னடி? தாராளமா கொடுத்துட்டா போச்சு. இப்ப சொல்லு. நிஜ வாழ்க்கை கேரக்டர்ஸ் யார் யார் கதையில வராங்க?"
"அதாவது அனுஸ்ரீ தான் பவித்ரா. அதுல மாற்றமே இல்லை. நீ அம்மா, அப்பா, நல்ல படிப்புன்னு ஆதரவோட இருந்தாலும் உன் மனசுல ஏதோ ஒரு இன்செக்யூர்ட் ஃபீலிங். அதான் உன்னை மாதிரியே கேரக்டர் இருக்கிற பவித்ராவை அனாதைப் பொண்ணா உருவகம் பண்ணியிருக்க. உனக்குள்ள நீ தேடிக்கிட்டு இருக்குற போர் குணம் தைரியம் அதெல்லாம் அந்த கேரக்டருக்கு கொடுத்து உலவ விட்டுருக்க. அப்புறம் கதையில வர்ற சண்முகசுந்தரம் நம்ம குணசேகரோட பாதிப்புல உருவானவன். நிறைய தடவை நீ குணசேகரைப் பத்திப் பேசுறதை நான் கேட்டுருக்கேன். அதை வச்சு சொல்றேன், ஏதோ விதத்துல அவன் உன்னோட சிந்தனையை இன்புளுயன்ஸ் பண்ணியிருக்கான். அவனை முக்கியமானவனா நீ நினைக்கிற. குணசேகரும் கதைல வர்ற சண்முகசுந்தரமும் அறிவாளிகளா, நிறைய விஷயத்துல கில்லாடிகளா இருக்காங்க. ரெண்டு பேரும் கொஞ்சம் குண்டான உடல்வாகோட இருக்காங்க. இந்த வினோதா கேரக்டர் யாருன்னு இப்பவரை யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு தான் டக்குனு ஸ்ட்ரைக் ஆச்சு. நம்ம விதுஷா தான் அந்த வினோதா. விதுஷாவும் நான் ரிப்போர்ட்டர் ஆகப் போறேன்னு சொல்லுவா. நான் இல்லாத நேரம் நீ அவ கூட தானே சுத்தினே? அதனால ரொம்ப ஈஸியா விதுஷா வினோதாவா மாறி கதைக்குள்ள நுழைஞ்சுட்டா"
"அப்புறம் அஜித் குமார்? அந்த கேரக்டர் யாருன்னு சொல்லவே இல்லையே நீ?"
"வேற யாரு? நான்தான். நீ கதையை எழுத எழுத அதை கூரியர் பாய் மாதிரி வாசகர்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கிறேன். அப்புறம் சட்டு சட்டுன்னு முடிவெடுக்கிறேன், படபடப்பா பேசுறேன், அதனால அஜித்குமார் ஆகிய பிரகல்யா நான் தான். இனிமே தான் நீ கதையில் அஜித்குமாருக்கு முக்கிய ரோல் கொடுக்கணும். ஏன்னா இப்ப உன்னோட முக்கியமான டெசிஷன் எடுக்கிறது பூரா நான் தான். தெரியுதுல்ல?" என்று அவள் தோளில் கை போட்டபடி கூறினாள் பிரகல்யா.
அனுஸ்ரீ, "நீ சொல்றதெல்லாம் கரெக்ட் மாதிரி தான் டி தோணுது! உன் ப்ளான் படி அடுத்து என்ன ஸ்டெப்?"
"இப்போதைக்கு நம்மளோட தற்காலிக தலைமைச் செயலகம், அதாவது நாம செயல்பட போற செக்ரட்டரியேட் நம்ம காலேஜ் கெஸ்ட் ஹவுஸ் தான். உங்க அப்பா வரட்டும். அதுக்காகத் தான் வெயிட் பண்றேன். அப்புறம் சொல்றேன். இப்ப சைட் ஓனர் கிட்ட பேசுறேன்"
"காம்படிஷன் ரூல்ஸ் சேஞ்ச் பண்ண ஒதுக்குவாராடி?"
"ஒத்துக்கிட்டு தான் ஆகணும். இல்லன்னா இந்தக் கதையை அப்படியே வேற சைட்ல போடப் போறோம். அதுவும் அவரோட போட்டி சைட்லன்னு சொல்லுவேன்" என்று வில்லத்தனமாக சிரித்தபடி 'இளங்காலை' இணைய தளத்தின் உரிமையாளரை ஃபோனில் அழைத்தாள் பிரகல்யா.
அன்று இரவு அனுவின் கனவில், கதையில் வரும் அஜித்குமார் அப்படியே அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அளவிற்குப் பிரபலமாகி பெரிய ஹீரோவாக உயர்வது போல் கனவு வந்தது.
கனவுகள் பூக்கும்

Last edited: