அத்தியாயம் 14
"அங்கிள்! முதல்ல தேங்க்ஸ். நீங்க வந்ததுக்கு.. அப்புறம் சாரி!" என்றாள் பிரகல்யா.
அதிகாலை ஃபிளைட்டைப் பிடித்து ஜனார்த்தனனும் காசிராஜனும் பெங்களூர் வந்து கல்லூரி விருந்தினர் இல்லத்தில் தங்கியிருக்க, பிரகல்யாவும் குணாவும் வந்து அவர்களை வரவேற்றனர்.
"அனு இன்னும் எந்திரிக்கலை அங்கிள். ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத் தான் நல்லா தூங்குறா. அதான் நான் வந்தேன். இவன் தான் குணா எங்களோட கிளாஸ் ரெப். ரொம்ப அறிவாளி. ஏகப்பட்ட டேலன்ட்ஸ் வச்சிருக்கான்" என்று பிரகல்யா குணாவை அறிமுகம் செய்ய, சட்டென்று ஜனார்த்தனனின் கால்களில் விழுந்து வணங்கினான் குணா.
"ப்ளெஸ் (bless)பண்ணுங்க அங்கிள். நீங்கதான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்" என்று அவன் சொல்ல, ஜனார்த்தனன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"எழுந்திருப்பா" என்று அவர் சொல்ல குணா அப்படியே காசிராஜன் கால்களிலும் விழுந்தான்.
"இது என்னப்பா? நீ என்ன பொசுக்கு பொசுக்குன்னு கால்ல விழுந்துகிட்டு.. உட்காரு" என்றார் அவரும்.
"உங்களைப் பத்தி நான் சின்ன வயசுல இருந்தே என்ன நியூஸ் வந்தாலும் படிச்சிடுவேன். எய்ட்த் ஸ்டான்டர்ட் அப்ப நீ என்னவாகணும் அப்படின்னு கேட்டா ஐஏஎஸ் ஆபீஸர் ஆகணும்னு சொல்லுவேன். ஏன்னா அப்ப டிவில உங்களுடைய பேட்டி ஒன்னு பார்த்தேன். நீங்க எந்த டிபார்ட்மெண்ட்ல இருந்தாலும் அங்கே அவ்வளவு நல்லது பண்ணி இருக்கீங்க. முன்னாடி நியூஸ்ல, இப்ப சோஷியல் மீடியா வந்த பிறகும் உங்களை ஃபாலோ பண்ணிட்டே தான் இருக்கேன். உங்களை நேர்ல பார்ப்பேன் பேசுவேன்னு நினைச்சதே இல்லை. என் ட்ரீம் ஹீரோவைப் பாத்த கோல்டன் மொமன்ட்!" என்றான் குணா.
"நீ பொழைச்சுக்குவடா பொழைச்சுக்குவ! என்னமா பேசறான் பாருங்க அங்கிள்!" என்றாள் பிரகல்யா காசிராஜனிடம்.
"சந்தோஷம் பா! ஆனா இப்ப நான் சஸ்பெண்ட் ஆன ஆஃபிஸர் பா. என் மேல பெரிய குற்றச்சாட்டு இருக்கு" என்று ஜனார்த்தனன் வருத்தத்துடன் கூற,
"அங்கிள் ஜுவில் இருந்தாலும் புலி புலி தான், சர்க்கஸ்ல இருந்தாலும் புலி புலி தான், காட்டுல தான் இருக்கணுமா என்ன? எப்படின்னாலும் நீங்க தான் அங்கிள் என்னோட ரோல் மாடல்" என்றான் விடாமல்.
"என்னதான் சொல்லுங்க சார்.. இந்த மாதிரி இளைஞர்கள் பேசுறதைப் பார்க்கும்போது நாம இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணுதுல்ல? நானே ஏன் இப்படி ஒரு வேலை பார்க்கணும், பேசாம சின்னதா எதாவது பிசினஸ் பார்த்துட்டு ஒதுங்கிடலாம் அப்படின்னு ஒரு நிமிஷம் நினைக்கிறேன், அடுத்த நிமிஷம் நமக்கு இருக்கிற பவரையும் மக்களுக்காக நல்லது செய்ய கிடைச்சிருக்கிற அரசாங்க வேலைங்கிற வாய்ப்பையும் விட்டுடக்கூடாதுன்னு இந்த மாதிரி பசங்க பேசுறப்ப தோணுது பாத்தீங்களா?" என்ற காசிராஜனை ஆமோதித்தார் ஜனார்த்தனன்.
"அங்கிள், அப்புறம் சாரி சொன்னேனே.. அது எதுக்காகன்னு சொல்றேன்" என்ற பிரகல்யா இதுவரை நடந்தது அனைத்தையும் சுருக்கமாகக் கூறினாள். "அனுஸ்ரீயோட கதை பத்தி கேள்வி பட்டிருப்பீங்க, ஆனா அவ கனவு எதை பேஸ் பண்ணி வருதுன்னு எதுவும் கெஸ் இருக்கா அங்கிள்?" என்றவள், அவர்களிடம் பதிலில்லாமல் போகவும்,
நிஜ வாழ்வின் எந்தெந்த சம்பவங்கள் அவளுக்குக் கனவாக வருகின்றன, அந்தக் கனவுகளை அவள் எப்படிக் கதையாக மாற்றுகிறாள் என்று எல்லாவற்றையும் சொன்னாள்.
"கதையில வர்ற செல்லப்பா அப்படிங்கற கேரக்டரும் காசிராஜன் அங்கிளும் ஒத்துப் போச்சு. அவளோட கதைல இருக்குற மர்மம் அங்கிள் கிட்ட இருக்கும்னு தோணுச்சு. உங்ககிட்ட இருந்து வார்த்தைகளை வாங்க முடியல. அன்னிக்கு நாங்க சென்னை வந்தப்ப காசிராஜன் அங்கிளோட மொபைலை நான் எடுத்து, ஐ மீன் திருடி.. ஓபன் பண்ணி சில டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன். என்னோட முக்கியமான எய்ம், ஏன் அனுவுக்கு அந்தக் கனவுகள் வருது, அதோட பின்னணி என்ன அப்படின்னு கண்டுபிடிக்குற சுவாரஸ்யம் தான். நடுவுல நீங்க சஸ்பென்ட் ஆன உடனே நாங்க இதுல தலையிடுறது தப்போன்னு கில்ட்டியா ஃபீல் பண்ணினோம். ஆனா இப்ப நாங்க செஞ்சது கரெக்ட் தான்னு தோணுது. ஏன்னா நீங்க எல்லாருமே சேஃப்கார்ட் ஆகுறதுக்கும் உங்க சஸ்பென்ஷன் கேன்சலாகுறதுக்குமான சொல்யூஷன் அனுஸ்ரீயோட கதையில இருக்கும்னு நினைக்கிறேன். அது மட்டும் இல்ல, நம்ம நாட்டு மக்களுக்கே விடை தெரியாமல் இருக்கிற சில கேள்விகளுக்கும் விடை கிடைக்க வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன்" என்றாள் பிரகல்யா.
சிந்தனை படர்ந்த முகங்களுடன் காசிராஜனும் ஜனார்த்தனனும் அவள் கூறுவது அனைத்தையும் கேட்டனர். "நேத்து எழுதின அத்தியாயத்தில் அவ சென்சிட்டிவான விஷயம் ஒண்ணை டச் பண்ணிட்டா. பாதியை பப்ளிஷ் பண்ணிட்டு மீதியை நான் கட் பண்ணி தனியா வச்சிருக்கேன். இதோ பாருங்க உங்களுக்கு அனுப்புறேன்" என்றாள்.
ஜனார்த்தனன் மற்றும் காசிராஜன் இருவரின் எண்களுக்கும் அடுத்து அனுஸ்ரீ எழுதியிருந்ததை அனுப்பினாள். காசிராஜனிடம், "அங்கிள்! உங்க நம்பர் எப்படித் தெரியும்னு யோசிக்காதீங்க. அதான் உங்க ஃபோனையே எடுத்துட்டேனே. இந்த பார்ட்டை மட்டும் படிங்க உங்களுக்குப் புரியும்" என்றாள். இதுவரை அனுஸ்ரீ எழுதிய கதையைப் படிக்கவில்லை என்றாலும் இதில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என்று இருவரும் வாசிக்கத் தொடங்கினர்.
அனுஸ்ரீ தன் கூகுள் டிரைவில் எழுதி பிரகல்யா நீக்கியவை:
'இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாமா, இல்ல தொடரலாமா, நம்ம கேரியர் வளர்ச்சிக்கு இதை பயன்படுத்தலாமா, இல்ல நம்ம பெயர் தெரியாம விஷயத்தை வெளியே லீக் பண்ணிட்டு பேசாம இருக்கலாமா' என்று பலவாறு யோசித்தாள் வினோதா. அவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த அலுப்பு இங்கேயோ ஓடிப் போயிருந்தது. கீழ் பெர்த்தில் இருந்த இருவரும் வேறு ஏதாவது பேசுகிறார்களா என்று காதைத் தீட்டி கவனித்தாள்.
அடுத்தடுத்து இன்னும் சில ஆட்கள் வர எல்லாருமாக சீட்டை விரித்துப் படுத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் சண்முகசுந்தரத்தின் எண்ணிலிருந்து தொடர்ச்சியாக மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்தன."டார்கெட் மொபைல் ஹேக்ட்" என்ற முதல் மெசேஜ்ஜைத் தொடர்ந்து வந்த தகவல்களால் வினோதாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
கிட்டத்தட்ட முப்பது சாமி சிலைகளின் புகைப்படங்கள். அனைத்தும் எங்கிருந்து திருடப்ப்பட்டது, எடை என்ன, தயாரிக்கப்பட்ட காலம், அதன் சிறப்பு அம்சங்கள், என்று எல்லா விவரங்களும் இருந்தன. ஒவ்வொரு சிலைக்குக் கீழும் இந்தத் தகவல்கள் இருக்க, அத்துடன் சங்கேத எழுத்துக்களால் ஏதோ ஒரு குறியீடும் இருந்தது. இது சிலை விற்கப்படப் போகும் இடத்தைக் குறிக்கலாம் என்பது அவளுடைய அனுமானம்.
உட்கார்ந்து அவை எதைக் குறிக்கின்றன என்று துப்பறியும் அளவுக்கு வினோதாவுக்குப் பொறுமையும் இல்லை நேரமும் இல்லை. அப்படியே எழுந்து அமர்ந்து குறிப்பு அட்டையையும் பேனாவையும் எடுத்துக் கொண்டாள். சங்கேதக் குறியீடுகளை எழுதிக் கொண்டாள். இந்த சிலைகள் எல்லாம் இப்போது எங்கு இருக்கின்றன என்று பார்ப்பதற்கு இந்த இரண்டு அப்பாடக்கர்களின் பயண விபரங்கள் உதவும் என்று தோன்ற, "அந்த மொபைலோட கூகுள் மேப்ஸை ஹேக் பண்ணு" என்று சண்முகசுந்தரத்திற்கு ஒரு மெசேஜ் அனுப்பினாள்.
அவன் அடுத்த 15 நிமிடத்திற்கு அந்த நாற்பது வயதுக்காரனின் கூகுள் மேப்ஸில் உலவி விட்டு பின் ஒரு பட்டியலை வினோதாவுக்கு அனுப்பி வைத்தான். கடந்த ஒரு மாதமாக மேப்பில் எந்தெந்த லொகேஷங்களை போட்டு அவன் தேடியிருக்கிறான் என்பதைச் சொன்ன பட்டியல் அது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பழமையான, அதிகக் கூட்டமில்லாத கோவில்களுக்குச் சென்று வந்திருந்ததை அந்தப் பட்டியல் காட்டியது. அது எந்தெந்த ஊர்கள் என்று தனியாகக் குறித்து வைத்துக் கொண்டாள் வினோதா. ஒருவேளை அடுத்து கொள்ளையிடத் திட்டமிட்டிருக்கும் கோவில்கள் இவையாக இருக்கலாம். பட்டியலை முழுமையாகப் பார்த்து அதில் எங்காவது பண்ணை வீடு தென்படுகிறதா என்று தேட, ஒரே ஒரு இடத்தில் இருந்தது.
சென்னையில் தான் கடத்தப்பட்ட சிலைகளை வைத்திருக்க வேண்டும் என்று ஏதோ உள்ளுணர்வு சொன்னது. சென்ற முறை வேறு ஒரு பண்ணை வீட்டில் வைத்து சில சிலைகள் கைப்பற்றப் பட்டது. இது வேறு கும்பலாக இருக்கலாம் அல்லது கண்டுபிடித்து விட்டார்கள் என்பதால் இந்த முறை வேறு எங்காவது மாற்றி இருப்பார்கள் என்று நினைத்தாள். பட்டியலில் இருந்த ஒரே பண்ணைவீடும் தற்போது செய்திகள் அடிபட்ட வீடும் வேறு வேறு இடங்களில் இருந்தன. 'இங்கே ஒரு தடவை தான் போயிருக்கானா?' என்று யோசித்த வினோதா தன் தலையைத் தானே தட்டிக்கொண்டாள். 'அதான் முதல் தடவை கூகுள் மேப்பைக் கேட்டு ஒரு இடத்துக்குப் போயாச்சுன்னா அடுத்தடுத்த தடவை ரூட் மேப் பார்க்காமலே போயிடலாமே.. இது கூட தெரியாத தத்தியா இருக்கேன்' என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவள், 'மேப்ல அவர் ஏதாவது போட்டுத் தேடியிருந்தாத் தானே கிடைக்கும், அதைவிட லொகேஷன் சர்வீஸைப் பார்த்தா? ஏற்கனவே அறிமுகமான இடங்களுக்குத் தானாவே போயிருப்பாரே. அது மட்டுமில்லாமல் வாட்ஸ் அப் சாட், காண்டாக்ட் லிஸ்ட், கால் டீடெயில்ஸ் இதெல்லாம் பாத்தா என்ன என்று தோன்ற, அவற்றை உளவு பார்த்துத் தருமாறு சண்முகசுந்தரத்திற்கு மெசேஜ் அனுப்பினாள்.
வந்த தகவல்களில் அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது முன்னாள் முதல்வரின் வலது கரமாக செயல்பட்ட அமைச்சர் அறிவரசனிடம் தான் இந்த நாற்பது அடிக்கடி ஃபோனில் பேசியிருந்தது. இரண்டு முறை பெரிய மேடம் என்று ஒரு எண்ணுக்கு அழைப்பு போயிருந்தது. அந்த எண்ணை எடுத்து ட்ரூ காலரில் போட்டுப் பார்க்க அது முன்னாள் முதல்வரின் மனைவி சிவகாமசுந்தரி என்று காட்டியது. இத்தனை பெரிய இடத்து தொடர்புகள் வைத்திருக்கிறானே, அதுவும் முன்னாள் முதல்வருக்கு இவ்வளவு நெருக்கமாகப் போய் வந்திருக்கிறார்கள், இருவரையும் மாட்டி விட்டாலும் எப்படியாவது தப்பித்து விடுவார்களோ என்று தோன்றியது வினோதாவுக்கு.
பாலில் நழுவி விழுந்த பழத்தை அப்படியே விட்டுவிட அவளுக்கு மனமில்லை. யாருக்கும் ஆபத்து வராத மாதிரி செய்ய வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தாள். இவர்களை மாட்டி விடவும் செய்ய வேண்டும் நானும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று யோசித்தவள், விஷயம் எதைப் பற்றியது, அது தொடர்பான ஆட்கள் சிலரைக் நடைமுறைக்குள் இழுத்து விடுவோம் என்று நினைத்தாள். சிலைக் கடத்தல் தொடர்பானவங்க, அப்புறம் போன ஆட்சிக்கு எதிரானவங்க அப்படின்னா யார் யார் என்று பட்டியலிட்டாள். மிகவும் நல்லவராக அறியப்பட்டிருந்த, காலம் சென்ற முன்னாள் முதல்வரின் மேல் தப்பு இருக்கும் என்று அவளால் நம்ப முடியவில்லை. ஒருவேளை அவருக்குத் தெரியாமல் அவரைச் சுற்றி இருந்த சதிகாரக் கூட்டங்கள் ஏதேனும் செய்திருக்கலாம் என்று நினைத்தாள்.
பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக ஏதாவது முகநூல் குழு இருக்கிறதா என்று தேட, அதில் நாலைந்து குழுக்கள் தெரிந்தன. எப்போதும் தான் வைத்திருக்கும் அடையாளங்கள் மறைத்த இன்னொரு முகநூல் அக்கவுண்ட்டைத் திறந்தாள். 'நேச்சர் லவ்வர்' என்ற பெயரில் இருந்தது அது. அதை 'கல்ச்சர் லவ்வர்' என்று மாற்றிக் கொண்டாள். அந்த ஐந்து குழுக்களிலும் சேர்வதற்காக 'ஜாயின்' என்ற பொத்தானை அமுக்க, இரண்டு குழுக்கள் open ஆக யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் என்ற நிலையில் இருந்தன. மூன்று குழுக்கள் ஒரு அட்மின் வந்து உங்கள் தரவுகளை சரி பார்த்து உங்களை சேர்த்துக் கொள்வார், அதுவரை பொறுத்திருங்கள், நன்றி என்று கூறின.
சரி இந்த ரெண்டு குரூப் போதும் என்று நினைத்தவள் அந்த இரண்டிலும் ஒரு செய்தியை பகிர்ந்தாள். ஃப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டர் என்பதால் அவளிடம் நிறைய செய்திச் சேனல்களின் டெம்ப்ளேட் பலகைகள் சிலைடுகள் வடிவத்தில் இருந்தன. வதந்திக்கென்றே பெயர் போன ஒரு சேனலின் பலகையைத் தேர்ந்தெடுத்தாள். அதில் வரும் செய்திகள் பாதி நம்பகமாக இருக்கும், பாதி பொய்யாக இருக்கும். வதந்தி பரப்புவோர் வழக்கமாக அந்த டெம்ப்ளேட்டைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். இருந்தும் நிறைய பேர் பார்க்கும் சேனல் அது. அதைத் தேர்ந்தெடுத்தவள்,
"சிலைக் கடத்தல் விவகாரத்தில் இன்னும் மீட்கப்படாத சிலைகள் நிறைய இருக்கின்றனவா? அது பதுக்கப்பட்ட இடம் எங்கே? தகவல் தெரிந்தவர்கள் சுதந்திரமாக உலவுகின்றனர். தெரிந்தும் காவல் துறை அலட்சியம்!" என்று ஒரு செய்தியை உருவாக்கியவள் அதை அந்த இரண்டு குழுக்களிலும் அனுப்பி விட்டு மணியைப் பார்த்தாள். மணி இரவு ஒன்று.
"கண்டிப்பா நைட்டு ஒரு மணிக்கு மூஞ்சி புக்ல சுத்திக்கிட்டு இருக்கிறவன் எவனாவது இருப்பான். அவன் இதைப் பார்த்து இன்னும் நாலு குரூப்புக்கு அனுப்புவான். பொழுது விடியறதுக்குள்ள ஒரு நல்ல செய்தி கிடைக்கும்" என்று நினைத்தவாறு மொபைலை அணைத்துப் பையில் போட்டாள்.
கண்ணை இறுக்கமாக மூடித் தூங்க முயன்றாள். தூக்கம் தான் வருவதாக இல்லை. 'லட்டு மாதிரி ஒரு ரெண்டு கல்ப்ரிட்ஸ் நம்ம கையில இருக்கானுங்க, அவனுங்களை அப்படியே போக விடுறதா' என்று தீவிரமாக யோசித்தவளுக்கு ஒரு திட்டம் மனதில் உதித்தது. அந்தத் திட்டத்திற்கு தன் பத்திரிக்கையாளர் நண்பர்களில் யார் யார் ஒத்து வருவார்கள் என்று மனதிற்குள்ளாகவே நட்புப் பட்டியலைப் புரட்டிப் பார்த்தாள். ஒரு நான்கு பேர் சரியாக வருவார்கள் என்று தோன்ற, 'இந்த நாலுல யாரு ஒரு மணிக்கு ஆன்லைன்ல ஆக்டிவா இருப்பா?' என்று நினைத்தவள் நான்கு பேருக்கும் தான் போட்டிருந்த போஸ்டை வாட்ஸ்அப் செய்து விட்டாள். ஏற்கனவே அந்த நான்கு பேரில் ஒருவன் இவள் புதிதாக இணைந்திருந்த பாரம்பரியம் காப்போம் என்ற குழுவில் இருப்பவன். கல்ச்சர் லவ்வரின் போஸ்டரை வாசித்து, அப்போதுதான் அங்கு ஏதோ கமெண்டை டைப் செய்து கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து வாட்ஸ் அப்பில் வினோதா அனுப்பிய அதே செய்தி வந்து குதித்தது.
"நீயும் பார்த்துட்டியா இந்த போஸ்ட்டை? அதுக்கு தான் கமெண்ட் எழுதிட்டு இருக்கேன்" என்றான் அவன் பதில் குறுந்தகவலில்.
'போஸ்ட்டை எழுதினதே நான்தான்டா மடையா!' என்று நினைத்தவள், "ம்.. பாத்தேன். நான் வெளியூர்ல இருக்கேன். இது சம்பந்தமா எனக்கு ஏற்கனவே ஒரு ஸ்கூப் நியூஸ் கிடைச்சது. உனக்கு ஷேர் பண்றேன் பண்ணவா வேண்டாமான்னு யோசிக்கிறேன்" என்று அனுப்பினாள் வினோதா.
"என்ன என்ன?" என்று அவன் கேட்க,
"இல்ல.. யாருக்கு அனுப்பலாம்னு யோசிக்கிறப்ப உன் பேரு தான் ஸ்ட்ரைக் ஆச்சு. ஆனா நீ, லேடிஸ் பண்றதெல்லாம் ஜர்னலிசமா அது இதுன்னு என்னையே முன்னாடி என்ன பேச்சு பேசின? அதான் உன்னை விட ப்ராம்ப்டா களத்துல இறங்குறவங்க யாருக்காவது அனுப்பலாமான்னு பார்த்தேன்"
"சேச்சே! உன் மேல எனக்கு எவ்வளவு மரியாதை? ஏதாவது காமெடிக்குப் பேசியிருப்பேன். அதை மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்கிடாதே.. ப்ளீஸ், என்ன ஸ்கூப் அது? எனக்கே குடு"
"சும்மா ப்ரேக்கிங் நியூஸ் போட்டா போதாது. ஏதாவது ஆக்ஷன் வேணும் எனக்கு. ஓகேவா?" என்றாள். அவன் ஒத்துக் கொண்டதும்,
"தென்னாடு எக்ஸ்பிரஸ் பி3 கோச்ல ரெண்டு பன்னாடைங்க சென்னை வருது. மார்னிங் 6.20க்கு எக்மோர் ஸ்டேஷன் ரீச் ஆகும். அதுங்களைப் புடிச்சு அதுங்களோட மொபைல் ஃபோனை சீஸ் பண்ணினாலே ஒரு 60 சிலை வரைக்கும் மீட்கலாம். அவங்க மொபைலில் இருந்து எடுத்த ரெண்டு மூணு சிலைங்களோட டீடெயில் என்கிட்ட இருக்கு. அனுப்புறேன். அதோட ரெண்டு பேரோட போட்டோஸும். நிறைய அரசியல் தலையீடு வரலாம். ஆனா நீ தைரியமாக செய்யணும் ஓகே வா" என்று டைப் செய்தாள் வினோதா.
அவன் சின்சியர் சிகாமணி என்று வினோதாவுக்கு தெரியும் உயிரே போனாலும் நினைத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டான்.
"என்ன அறுபது சிலையா!?" என்று அதிர்ச்சி தெரிவித்தான் அந்த சிகாமணி. முப்பதை இவள் தான் அறுபது என்று கூட்டிக் காண்பித்திருந்தாள். காசா, பணமா இருந்து விட்டுப் போகட்டும். அப்போதுதான் இந்த செய்திக்கு பலம் இன்னும் கூடும் என்று விட்டு,
"இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு பேட்டரி லோவாகப் போகுது. இனிமே உன் பாடு. முக்கியமான டீடெயில்ஸ் ஸ்கிரீன் ஷாட் எடுத்துட்டு இந்த சாட் முழுசும் டெலிட் பண்ணிடு" என்று கூறிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சில தகவல்களையும், பவித்ரா டைப் செய்த ஓரிரு பக்கங்களையும் இணைத்து அவனுக்கு அனுப்பிவிட்டு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டுத் தூங்கினாள் வினோதா. நன்றாகவே தூக்கம் வந்தது.
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ரயில் சென்னைப் பெருநகரத்திற்குள் மெல்ல நுழைந்தது. தாம்பரத்தில் நிறைய பேர் இறங்குவதற்கான ஆயத்தங்களைச் செய்ய, அந்த அரவத்தில் வித்த வினோதா, கீழ் பெர்த் ஆசாமிகள் இருவரும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பதில் நிம்மதியானாள். சத்தம் காட்டாமல் இறங்கி அவள் பவித்ராவின் ஹாஸ்டலை நோக்கிக் செல்ல, எக்மோர் ஸ்டேஷனில் ஒரு போலீஸ் படையும், 'தண்டிப்போம், தண்டிப்போம், குற்றவாளிகளை தண்டிப்போம்! என்று எழுதிய பதாகைகளுடன் ஒரு தீவிரமான மதச்சார்பு கட்சியின் ஆதரவாளர்கள் படையும் இரண்டு ஆசாமிகளையும் கைது செய்யத் தயாராகக் காத்திருந்தது.
கனவுகள் பூக்கும்

Last edited: