பின்கதை
"இன்னும் கொஞ்சம் பெட்டரா கதையை எழுதிருக்கலாம்னு தோணுதுடி! நடுவுல நியூஸ்ல கதை அடிபட்டது, அப்பாவோட சஸ்பென்ஷன், சைட்க்கு வந்த மிரட்டல் இதெல்லாம் நடக்கலைன்னா கதை வேற டைரக்ஷன்ல போயிருக்கும். நம்ம வழக்கமான ரீடர்ஸ் மட்டும் படிக்கிறாங்கன்னா போல்டா சில விஷயங்களை எழுதியிருப்பேன். இப்ப அவ்வளவா திருப்தியே இல்லை" என்றாள் அனுஸ்ரீ.
"உனக்குத் தெரியுமா? 'என்னோட சிறந்த கவிதை இன்னும் எழுதப்படவில்லை' அப்படின்னு ஒரு ஃபேமஸ் கவிஞர் சொல்லிருக்காரு. எந்த எழுத்தாளரும் தன்னுடைய வொர்க்ல முழு திருப்தி அடையவே மாட்டாங்க. அப்படி திருப்தி அடைஞ்சுட்டாங்கன்னா இன்னும் பெட்டரான படைப்பை அவங்களால உருவாக்க முடியாதாம். ஃபைனலா ஸ்டோரியை கரெக்ஷன்ஸ் பாத்து அப்லோட் பண்ணி விட்டுட்டேன்.
"ஊழலுக்கு எதிராய் இயங்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்" அப்படி ன்னு டெடிகேஷன் கூட கொடுத்திருக்கேன். கமெண்ட்ஸ் வர ஆரம்பிச்சுடுச்சு. இங்கே பார்" என்றாள் பிரகல்யா.
"ரொம்ப சுவாரசியமான கதை. நிஜமாகவே இப்படி ஸ்லீப்பர் செல்கள் இருந்தால் அவர்களுக்குத் தலை வணங்குகிறேன்", "லீட் கேரக்டர்ஸ் அடுத்து என்ன பண்ணினாங்க, வில்லன் என்ன ஆனார்னு தெரிஞ்சா நல்லா இருக்கும்", " கேரக்டர்ஸை எங்கள்ல ஒருத்தங்களா ஃபீல் பண்ண வச்சாங்க.. ஆசிரியர் மென்மேலும் நிறைய கதைகளைக் கொடுக்க எங்கள் வாழ்த்துக்கள்" இப்படி நிறைய வாழ்த்துக்கள் வந்திருந்தன.
விமர்சனங்களும் வராமல் இல்லை. "ஒரு சாதாரணக் கதைக்கு இவ்வளவு ஹைப்பா?"
"அவ்வளவு பெரிய தாதாவாம் அவனை சுண்டைக்காய் மேட்டர்ல அதுவும் லண்டன்ல வச்சு அரெஸ்ட் பண்ணுவாங்களாம், லாஜிக்கே இல்ல"
"இதைவிட பெட்டரா இந்தக் கதை இருக்கு, அந்தக் கதை இருக்கு" என்ற பட்டியல்களும்,
"கனவுல கதை தொடரா வருதாம்.. யாருக்குக் காது குத்துறாங்க", என்பது போன்ற பொறாமை கலந்த எதிர்வினைகளும் வருவதைக் கண்டு அனுஸ்ரீ கொஞ்சம் சோர்வடைந்தது உண்மைதான்.
"ஆன்லைன் எழுத்தெலாம் ஒரு எழுத்தா?" என்று சொன்ன பழம்பெரும் எழுத்தாளர்கள் கூட தங்கள் பேரப்பிள்ளைகளிடம், "தலைமைச் செயலகம்னு ஒரு கதை நெட்ல வருதாம்ல? அதை ஓபன் பண்ணிக் குடு டா" என்று கேட்டு வாங்கிப் படித்தார்களாம்.
போட்டி நிறைவடைந்து வாசகர்கள் கமெண்ட் மற்றும் ரேட்டிங் கொடுக்கலாம் என்று ஒரு டெட் லைன் அறிவிக்கப்பட்டிருந்தது. அது முடிந்தவுடன் போட்டிக் கதைகளை எழுதிய எழுத்தாளர்களின் பெயரைத் தளத்தில் உரிமையாளர் வெளியிட்டு விட்டார். ஜனார்த்தனனுக்கு இனி அனுஸ்ரீயின் பெயரை வெளியிடுவதில் தயக்கம் இல்லை. அதனால் தலைமைச் செயலகம் கதையை எழுதியவர் அனுஸ்ரீ ஜனார்த்தனன் என்று 'அஃபீஷியல்' அறிவிப்பு வந்தது.
"நான் அப்பவே சொன்னேன் பார்த்தியா, அனுஸ்ரீ தான் இந்த கதையோட ரைட்டர்னு?", என்று அடுத்து சில போஸ்ட்களும், "அந்தப் பொண்ணு அவங்க அப்பாவைக் காப்பாத்துறதுக்காகக் கனவு கினவுன்னு புருடா விடுது" என்று சில கருத்துக்களும் வந்தன. அறிவரசன் கைது செய்யப்பட்டு உள்ளே வைக்கப்பட்டாலும் அவனுடைய ஆதரவாளர்கள் வஞ்சத்தைக் கக்கியிருந்தனர்.
"ஸ்டார் ரேட்டிங் கொடுக்கலாம்" என்று இளங்காலை தளத்தின் உரிமையாளர் அறிவிக்கவும், அறிவரசன் ஆதரவாளர்கள் பலர் கும்பலாக வந்து ஒன் ஸ்டார் ரேட்டிங் கொடுத்தனர். கூடவே 'வெட்டுவேன், குத்துவேன்' என்பது போன்ற மிரட்டல்களும் அதில் இருந்தன. பலர் ஃபேக் ஐடிக்களில் வந்து கதையைத் திட்டவும் செய்தனர்.
கதை நிறைவடைந்த விஷயமும் தொலைக்காட்சி செய்திகளில் பேசு பொருளானது. "இதை மாதிரி மெடிக்கல் கிரைம்ஸ் நிறைய நடந்திருக்கா? கிட்னி டிரான்ஸ்பிளான்ட் பத்தி பேசுறாங்களே, இதுல கிட்னி திருட்டு எதுவும் நடந்திருக்கா? கதையில குறிப்பிடுவது எந்த ஹாஸ்பிடல்? அது உடனடியா சீல் வச்சு விசாரிக்கணும்!" என்பது போன்ற கண்டனக் குரல்கள் எழும்ப, முதலமைச்சர் இது தொடர்பாக ஒரு விசாரணை கமிஷனை அமைத்து உத்தரவிட்டார். மொத்தத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக 'தலைமைச் செயலகம்' கதை தலைப்புச்செய்திகளில் இருந்தது. கதையை வாசித்த வாசகர்களின் எண்ணிக்கை ஆயிரங்களைக் கடந்து லட்சத்தை எட்டிப் பிடித்தது.
"விசாரணை கமிஷன் வைக்கிறேன், விசாரணை கமிஷன் வைக்கிறேன்னு அன்னிக்கிருந்து சொல்லிட்டு இருந்தார் முதல்வர். அவர் ஆசை நிறைவேறிடுச்சு போல" என்றான் குணா.
தொடர்ந்து நிறைய வாசகர்கள் கதையில் ஒரு முடிவுறாத்தன்மை இருக்கிறது என்று சொல்லவும், "சரி ஒரு எபிலாக் வைக்கிறேன். விரும்பியவர்கள் வாசித்துக் கொள்ளுங்கள். பழைய கதை முடிவே பிடித்திருந்தால், இந்த எபிலாகை வாசிக்க வேண்டாம்" என்ற ஒரு அறிவிப்புடன் பின் கதை எழுதப் போனாள் அனுஸ்ரீ.
அனுஸ்ரீ எழுதிய தலைமைச் செயலகம் கதையின் பின் கதை:
வினோதாவும் அஜித்குமாரும் அவனது கிராமத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தனர். "தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வரேன்" என்று பேருந்தில் இருந்து இறங்கி மீண்டும் ஏறினாள் வினோதா. செய்தியை ஜெயந்த்துக்கு விற்ற தொகையில் அஜித்துக்குப் பங்காக வந்திருந்த ஐந்து லட்சம் அவன் அக்கா திருமணத்திற்கு நகைகளாக மாறியிருந்தது. அதை பத்திரமாக மடியில் வைத்துப் பிடித்திருந்தான் அஜித். கழிப்பறை செல்வதற்குக் கூட இறங்கவில்லை.
"இப்ப எழுதுற கட்டுரைத் தொடரை முடிச்சுட்டு அடுத்து இந்த மாதிரி நகை போடுறது, வரதட்சனை கொடுக்கிறது, சீர் செய்றது இதுக்கு எதிராக ஒரு தொடர் ஆரம்பிக்கப் போறேன்.. அதுக்கும் உங்க ஊர்ல இருந்தே பாயிண்ட்ஸ் எடுக்க ஆரம்பிச்சுட வேண்டியது தான்" என்றாள் வினோதா.
"அக்கா! எனக்கும் ரிப்போர்ட்டர் வேலை வாங்கித் தாங்களேன்.. நெனச்ச நேரத்துக்கு எங்கேயும் போகலாம் வரலாம். உங்கள மாதிரியே" என்றான் அஜித்.
"இந்த வேலையெல்லாம் யாரும் வாங்கித் தர மாட்டாங்க டா.. நீயா தான் சேர்ந்துக்கணும்"
"இன்னொரு விஷயம்.. எங்க ஊர்ல அடிப்படை வசதிகள் எல்லாம் கம்மியா தான் இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க"
"நான் காட்டுல கூட தங்கி வேலை பார்த்திருக்கேன் டா.. உங்க பக்கத்து ஊரு கோயில்ல அந்த சடங்குகளை எல்லாம் போட்டோ, வீடியோ எடுக்க விடுவாங்களா?.. அதைச் சொல்லு முதல்ல" என்றாள் வினோதா.
கிராமப்புறப் தெய்வங்கள் மற்றும் வழிபாடுகள் பற்றி அவள் எழுதிவரும் கட்டுரைத் தொடருக்குத் தங்கள் பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு வித்தியாசமான கொடை விழாவைப் பற்றிச் சொல்லியிருந்தான் அஜித். மரணப்படுக்கையில் இருக்கும் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அந்தக் கோவிலுக்கு சிதையில் படுக்கிறேன் என்று நேர்ந்து கொள்வார்களாம்.
"பூக்குழி, தீச்சட்டி மாதிரியா இது?" என்று வினோதா கேட்க,
"கிட்டத்தட்ட அப்படித்தான். வாழை மட்டைல பாடை மாதிரி கட்டுவாங்க.. கீழே அடுப்பு மாதிரி இருக்கும். அது மேல ஒரு கட்டில் போட்டு பாடையைப் போடுவாங்க. நேத்திக்கடன் செலுத்த வர்றவங்க அது மேல கொஞ்ச நேரம் படுத்திருப்பாங்க" என்றான் அஜித்குமார்.
"இதைக் கண்டிப்பா நான் கவரேஜ் பண்ணியே ஆகணும். வரேன்!" என்று அவனுடன் கிளம்பி விட்டாள் வினோதா.
"நாம ரெண்டு பேரும் இருந்து பவித்ரா அக்காவுக்கும் சண்முகசுந்தரம் அண்ணனுக்கும் கல்யாணம் முடிச்சுட்டே வந்திருக்கலாமோ?" அஜித் குமார் கேட்க,
"கொஞ்சம் டைம் கொடுப்போம் டா.. அவங்களே பேசிப் புரிஞ்சு அப்புறம் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுவாங்க. ரெண்டு பேரும் வாழ்க்கையோடு ரெண்டு எக்ஸ்ட்ரீம் லெவல்ல வளர்ந்திருக்காங்க. அட்ஜஸ்ட் ஆக டைம் எடுக்கும் இல்லையா?" என்றாள் வினோதா.
அதையே தான் புனே செல்லும் விமானத்திற்காக விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த பவித்ராவும் சண்முகசுந்தரமும் யோசித்துக்கொண்டிருந்தார்கள்.
"ஊரை விட்டு ஓடுற லவ்வர்ஸ் மாதிரி கிளம்பி இருக்கோம். ஆனா ஒண்ணு, நம்மைத் துரத்திட்டு வர்றதுக்கு ரிலேட்டிவ்ஸ் யாரும் இல்லை.. ரவுடீஸ் வேணா வரலாம்" என்று சிரித்தாள் பவித்ரா. அப்படி ஒரு மலர்ந்த புன்னகையை அவளிடம் அவன் பார்த்ததே இல்லை. கூடுதலாக ஒரு கணம் அவன் பார்க்க,
"இப்பவும் அதே கேள்வியைக் கேட்டீங்கன்னா ஆயிரமாவது தடவை ஆயிடும். ஏற்கனவே 999 ஆச்சு" என்றாள் பவித்ரா.
"என்ன? என்ன கேள்வி?" என்று சண்முகசுந்தரம் கேட்க, "நெஜமாவே என்னைப் பிடிச்சிருக்கா? நான் இவ்வளவு குண்டா இருக்கேனே பரவாயில்லையா? அதானே? புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புடிச்சிருக்கு போதுமா! ஆனா லண்டனை மேப்ல கூட சரியா பாக்காத நான், அங்கே இருக்கிற ஒரு எம்.பி. ஃபேமிலியோட பையனை எப்படி…" என்று இழுத்தாள் பவித்ரா.
"அப்புறம் ஆஸ்திரேலியாவோட டாப் பிசினஸ் மேன் ஃபேமிலி.. அதை விட்டுட்டியே?"
"ஆங்! தேங்க்ஸ். அந்தக் குடும்பத்துக்கு நான் செட்டாகலைன்னா சீக்கிரம் பிரேக் அப் ஆயிடுவோமோன்னு.."
"பிரேக் அப்" என்ற வார்த்தையை அவள் சொன்னவுடன் பாய்ந்து அவள் வாயைக் கைகளால் பொத்தினான் சண்முகசுந்தரம்.
"நாம ரெண்டு பேரும் தான் ஒரு ஃபேமிலியை உருவாக்கப் போறோம். அந்த ரெண்டும் நாம கெஸ்ட்டா போய் பாத்துட்டு வரப்போற குடும்பங்கள். இனிமே இந்த வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது"
"சரி சரி சொல்லலை! புனேல வெயில் அடிக்குமா, குளிரா?" என்று கேட்டாள் பவித்ரா.
***
"ஹேய்! இந்த எபிலாக் ரொம்ப புடிச்சிருக்கு. ஏற்கனவே நேத்து மட்டும் மூணு பப்ளிஷர்ஸ் உன்னோட கதையை புக்கா போடலாமா, நீ வேற எத்தனை கதை எழுதியிருக்க அப்படின்னு என்கிட்ட கேட்டாங்க. வெப் சீரிஸ் எடுத்துக்கிட்டு இருக்கிற ஒரு ஃபேமஸ் டைரக்டர் கூட உன் கதையைகா கேட்கலாமான்னு தன்னோட அசிஸ்டன்ட் கிட்ட கேட்டாராம். எனக்கு ரொம்ப எக்சைட்டடா இருக்கு. வழக்கமா உனக்கு தானே கனவு வரும். எனக்குக் கனவு வந்தாலும் அது ஞாபகமே இருக்காது. நேத்து எனக்கு என்ன கனவு தெரியுமா வந்துச்சு.. நீ நிறைய புக் எழுதுறியாம். உன்னோட புக்ஸ் இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணியிருக்காங்க. அதுல ஒரு புக் புக்கர் பரிசுக்கான ஷார்ட்லிஸ்ட்ல இருக்கு. 'புக்கருக்குப் போகிற தமிழின் முதல் பெண் எழுத்தாளர்' அப்படின்னு உனக்குப் பாராட்டு விழா வைக்கிறாங்க. நானும் குணாவும் அதுல வந்து கை தட்டுறோம்" என்று பிரகல்யா சொல்ல,
முதலில் அவள் சொல்லச் சொல்ல விரிந்த புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த அனுஸ்ரீக்கு கடைசியில் புன்னகை சுருங்கியது. அத்துடன் சட்டென்று பேச்சை நிறுத்தினாள் பிரகல்யா.
என்ன ஆயிற்று என்று அனுஸ்ரீ நிமிர்ந்து பார்க்க அவள் முகத்தையே உற்றுப் பார்த்தாள் பிரகல்யா.
அனுஸ்ரீ, "ஏய்! பொய் தானே? உனக்கு கனவு எதுவும் வரலைல்ல?" என்று கேட்க,
"நான் சொன்னது பொய்யா உண்மையாங்குறது இருக்கட்டும்.. நீ கொஞ்சம் உண்மையைப் பேசுறியா? உன் கதையை உன்னை விட தீவிரமா அனலைஸ் பண்றது நான். அதான் அன்னிக்கே கதைக்கும் நிஜத்துக்கும் உள்ள சிமிலாரிட்டியைப் புட்டுப் புட்டு வச்சேனே.. கடைசியா எழுதியிருக்கிறதைப் பத்திப் பேசலாமா?" என்று பிரகல்யா கேட்க,
"வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! என்று தன் போர்வையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு படுத்து விட்டாள் அனுஸ்ரீ. போர்வைக்குள் அவள் சிரிப்பது பிரகல்யாவிற்குத் தெரிந்தது.
"சரி உண்மையை நீ சொல்ல வேண்டாம். நானே சொல்றேன். நிஜத்துல உனக்குச் சொல்லாம நானும் குணாவும் சில பிளான்கள் போட்டப்ப, டிஸ்கஸ் பண்ணினப்ப உன் முகம் போன போக்கை அவன் கவனிச்சானோ இல்லையோ, நான் கவனிச்சேன். நான்தான் அப்பவே சொன்னேனே பவித்ரா கேரக்டர் தான் நீ. சண்முகசுந்தரம் கேரக்டர் தான் குணான்னு.. உனக்கும் அவனுக்கும் சம்திங் சம்திங் இருக்குன்னு எனக்குத் தெரியும். அவனைப் பாரு.. கிரஷ் இருக்குற பொண்ணை கரெக்ட் பண்ண முயற்சி பண்ணாம, அந்தப் பொண்ணோட அப்பாவை கரெக்ட் பண்ண முயற்சி எடுத்து சக்ஸஸும் பண்ணிக் காட்டிட்டான். உனக்காக சைக்காலஜி அது இதுன்னு என்னல்லாமோ படிச்சிருக்கான். இப்ப உங்க அப்பா வேற கட்சி ஆரம்பிக்கப் போறாரு.. குணாவுக்கு அரசியல் தான் இன்ட்ரஸ்ட், உங்க அப்பா தான் இன்ஸ்பிரேஷன்னு சொல்றான். உங்க கட்சியில பொதுச்செயலாளர் அவன் தான் போ.. வெங்கடாஜலபதிக்கு ஒரு அறிவரசன் மாதிரி ஜனார்த்தனனுக்கு ஒரு குணசேகரன். உண்மையைச் சொல்லு.. உனக்கு அவன் மேல இன்ட்ரஸ்ட் தான்னு ஒத்துக்கோ! இல்ல, பக்கெட் தண்ணியை எடுத்து மேல ஊத்திடுவேன்" என்று பிரகல்யா மிரட்ட,
போர்வையை முகத்தில் இருந்து எடுத்த அனுஸ்ரீ, "மே பீ!" (May be) என்று கூறிவிட்டு மீண்டும் முகத்தை மூடிக்கொண்டாள்.
(அகிலாண்ட பாரதி ஆகிய நான் எழுதிய இந்தக் கதை அனைத்து ஆன்லைன் எழுத்தாளர்கள் மற்றும் ஆன்லைன் வாசகர்களுக்கு சமர்ப்பணம் )

Last edited: