கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-14

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-14

மொபைல் வாங்கிய பிறகு, அவர்கள் பேச்சு நேரம் காலம் இன்றி தொடர்ந்தது.இரவு மொட்டை மாடியில் இருந்து வந்த பின்னும் விடிய, விடிய பேசினார்கள்.
அன்று பௌர்ணமி,நிலவை ரசித்து கொண்டே இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

"எங்க அக்கா கல்யாணத்துலேயே என்னை பார்த்துட்டீங்களா..??எப்போ பார்த்திங்க??நான் உங்களை பார்க்கலியே.அப்போவே என்னை பிடிச்சுதா??அப்போ இருந்து லவ் பண்ணுறீங்களா??மாது அண்ணா சொன்னாங்க, தினமும் என்னை பத்தி பேசுவீங்கன்னு,என்ன பேசுவீங்க??"

படபட பட்டாசாய் கேள்விகளை அடுக்கினாள்.

"கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசு.இவ்ளோ கேள்வி கேட்டா, எப்படி பதில் சொல்லுறது??."

"ச்சு.. சரி.மெதுவா கேட்கவா..??"

"அதெல்லாம் வேண்டாம்..நானே சொல்லுறேன்.."

"ஆரவ் கல்யாணம்னு தெரியாம தான் அங்க வந்தேன்.அங்க வந்தபுறம் தான் தெரிஞ்சுது.என்னனே சொல்ல முடியாத மனநிலை.

ஒரு மாதிரி, வெறுமையான பீலிங்.ஆதவ் கல்யாணத்தப்போ,அப்பா இருந்தார்.அதுனால விஷயம் தெரியும்.அப்போ டெல்லில படிச்சுட்டு இருந்தேன்.அதுனாலே கல்யாணத்துக்கு வரணுமுன்னு தோணலை.

அப்பா விஷயம் சொல்லி, வர சொன்னார்.நான் லீவு போட முடியாதுன்னு சொன்னதும்,கட்டாய படுத்தலை.விட்டுட்டார்.

ஆனா இந்த தடவை இங்க இருந்தும்,எனக்கு எந்த விஷயமும் தெரியலை.வீட்டுல எப்போவும் ஒதுக்கி வைப்பாங்க.

அதே கல்யாணத்துக்கும் செஞ்சப்போ,எங்கேயாவது போயிடலாம்,நமக்குன்னு யாரும் இல்லைன்னு தோணுச்சு.

அப்போ மாது, ஏதேதோ ஆறுதல் சொன்னான்.எதுவும் என் மனசுல ஏறலை. ஆனா அவன் பேசுறது, காதுல மட்டும் விழுந்துச்சு.

என் கிட்ட பேசிட்டு, உள்ள கார் ஓனர்ரை பார்த்துட்டு வரேன்னு போனான்.சொந்தக்காரங்க, யார் கண்ணுலயும் பட கூடாதுனு, கார்க்கு உள்ளேயே இருந்தேன்.

அப்போ தான் நீ வந்த,பேபி பிங்க் தாவணில,பார்பி டால் மாதிரி.
பொம்மை மாதிரி இருந்த,அதான், உன் பேரு பொம்முன்னு மனசுல பதிஞ்சுருச்சு.அப்போ உன் பேரும் தெரியாது.

உன்னை பார்த்ததும், மனசு லேசான உணர்வு.
நான் இருந்த கார் கிட்ட தான், நீயும் உன் தோழியும் நின்னு பேசுனீங்க.

நீ, உன் தோழி யாரையோ வழி அனுப்ப வந்த,உன் கையில ஒரு ஸ்வீட் பாக்ஸ்.
அதை அந்த பொண்ணு கையில கொடுக்குறதுக்கு முன்ன, அதை திறந்து,அதில் உள்ள ஜாங்கிரியை எடுத்து சாப்பிட்ட."

இப்பொழுது அவன் முகத்தில் ஒரு புன்னகை.

"அப்போ, அந்த பொண்ணு முகத்தை பார்க்கணுமே. இப்போ நெனச்சாலும் சிரிப்பு வருது.
அந்த பொண்ணு கேட்டா,
"ஏண்டி, உங்க அக்கா கல்யாணத்துக்கு வந்ததுக்கு,உங்க அம்மா, எனக்கு ஸ்வீட் கொடுக்க சொல்லி கொடுத்தா, நீ, அதுல இருந்து ஆட்டையை போடுற.."
அப்படின்னா,

அதுக்கு நீ சொன்ன பாரு பதிலு,

"ஸ்வீட்ல, உப்பு,உரைப்பு எல்லாம் சரியா இருக்கானு பார்த்தேன் டி. நாளைக்கு ஊருக்குள்ள போய், நீ, கீர்த்தி அக்கா கல்யாணத்துல கொடுத்த ஸ்வீட் ,நல்லா இல்லைன்னு சொன்னா, ஊர் தப்பா பேசாது.அந்த அவப்பெயர் வரக்கூடாதுன்னு தான், டேஸ்ட் பண்ணேன்னு சொன்ன."

இப்பொழுது அவன் சிரித்து முடிக்க, சில நிமிடம் ஆனது.

"பாவம் அந்த பொண்ணு,
"ஸ்வீட் வேணுமுன்னு சொல்லு,டப்பாவோட தரேன்.அதுக்காக இப்போ சொன்ன பாரு காரணம். அதை பொறுத்துக்கவே மாட்டேன்னு சொன்னா."
நீ அசடு வழிய சிரிச்சு,
"மம்மி ஸ்வீட் அஹ் கண்ணுலயே காட்ட மாட்டேங்குது டி. நெறைய சாப்பிட்டுடே, உறவுக்காரங்களுக்கு கொடுக்கணும்.அப்டின்னு சொல்லி,ஸ்வீட் அஹ் ஒளிச்சு வச்சுட்டாங்க. அதான்."அப்படின்ன.

அந்த பொண்ணு உன்னைய, கேவலமா ஒரு லுக்கு விட்டுட்டு, ஸ்வீட் பாக்ஸ்ஸ பிடுங்காத குறையா வாங்கிட்டு போய்ட்டா."

கண்ணில் நீர் பொங்க சிரித்தான் பார்த்தி.
அவன் சிரிப்பதை ,ஆசையாய் பார்திருந்தாள் கீர்த்தி.

அவன் சிரித்து முடித்து இவள் புறம் திரும்பியதும்,முகத்தை மாற்றி கொண்டு,முறைப்பாய் வைத்து கொண்டு,

"என்ன,என்னை பார்த்தா கிண்டலாஹ் இருக்கா??"
நாலா பக்கமும் தலையாட்டினான்.அவன் கண்கள் சிரித்தது.

"என் மனநிலையே சுத்தமா மாறிப்போச்சு.நீ, கல்யாண பொண்ணுக்கு தங்கச்சின்னு புரிஞ்சுது.
அந்த பொண்ணு போனதும்,நீயும் உள்ள போய்ட்ட. கொஞ்ச நேரத்துல மாது வந்தான்.கார் ஓனர் கிட்ட காரை ஒப்படச்சுட்டு கிளம்பிட்டோம்.

சந்தோசமா இருந்த
என் முகத்தை பார்த்து காரணம் கேட்டான்.உன்னை பத்தி சொன்னேன்.என் சந்தோஷத்தை பார்த்துட்டு,உன்னை பார்க்காமலே,அந்த பாச மலருக்கு, பாசம் வந்துடுச்சு.

அப்புறம், தினமும் ஒரு தடவையாவது,நீ என் நியாபகத்துல வந்த.அப்போலாம்,மாது கிட்ட உன்னை பத்தி பேசுவேன்."

"ஓ…அதான், எனக்கு ஜாங்கிரி பிடிக்கும்னு,கரெக்டா வாங்கிட்டு வந்திங்களா..??சோ ஸ்வீட்.."
அவன் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள்.

ஒரு புன்னகையுடன், தொடர்ந்தான் அவன்,

"மாது கூட, உன்னை போய் பார்த்து,பேசு, அப்டின்னு சொன்னான்.
எனக்கென்னமோ தோணுச்சு,நீ என்னை தேடி வருவேன்னு.

அதோட, உனக்கு என்னை யாருனே தெரியாது அப்போ.நான் உன்னை தேடி வந்து பேசி,உனக்கு என்னை பிடிக்கலைன்னா??
உன் வெறுப்பை தாங்கிக்க முடியுமுன்னு தோணலை.அதான், அப்படியே விட்டுட்டேன்.

அப்புறம் திடீருன்னு ஒரு நாள்,நீ எங்க வீட்டுக்கு வந்த,டைனிங் ஹால்ல சாப்பிட்டுட்டு இருந்த,மாமி கிட்ட பேச வந்த நான்,உன்னை பார்த்ததும்,என்னை அறியாமல், உன் முன்னாடி உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.

அந்த கொஞ்ச நேரமாவது உன் கூட இருக்கலாம்னு,எப்போவும் இந்த வீட்டுல சாப்பிடாத நான்,அங்க சாப்பிட்டேன்."

ஒரு பெரு மூச்சு விட்டுக்கொண்டான்.

"அப்புறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே.அவங்க ஒன்னு சொல்ல,எனக்கு வந்த கோவத்தை அப்படி எக்ஸ்போஸ் பண்ணிட்டு போய்ட்டேன். அப்புறம் தான் யோசிச்சேன்.
ஃபஸ்ட் இம்ப்ரஸ்ஸன் இஸ் பெஸ்ட் இம்ப்ரசன்,உனக்கு என்னை பத்தி என்ன தோனி இருக்கும்னு நெனச்சேன்.
மனசே ரொம்ப கஷ்டமா போயிடுச்சு.

அப்புறம் அன்னைக்கு சாயங்காலம், மாது மெக்கானிக் ஷெட் கிட்ட இருக்க பஸ் ஸ்டாப்ல உன்னை பார்த்தேன்.

ஏன் இங்க நிக்குறேணு யோசிச்சேன்.உன் கிட்ட உரிமையா பேச முடியாத நிலையை நினைச்சு,அன்னைக்கு நைட் ஹால்ல அப்பா போட்டோ முன்ன உட்கார்ந்திருந்தேன்.

ஏன்?? எனக்கு இப்படி ஒரு நிலைமைன்னு கேட்டு,இன்னும் பல கேள்வியோட, என் கடந்த காலத்தை நினைச்சு யோசிச்சுட்டு இருந்தேன்.அப்போ தான் நீ வந்த,உன்னை பார்த்ததும் தயக்கம் வந்துச்சு.அதான், உடனே உள்ள போய்ட்டேன்."

"ஓ…அதான், அன்னைக்கு கண்ணு கலங்கி இருந்துச்சா ??உங்களுக்கு.."

"கவனிச்சியா..??"

"லேசா ஒரு டவுட்.அந்த வெளிச்சத்துல சரியா தெரியல.."

"ஹ்ம்ம்…அப்புறம்,மறுநாள் சீக்கிரமே வந்தேன்.நீ, அந்த கம்ப்யூட்டர் சென்டர்குள்ள இருந்து வர்றதை பார்த்தேன்.அங்க தான் நீ படிக்குறேன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

அங்க எனக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் வேலை பார்க்குறான்.அவன் மூலம், என்ன கோர்ஸ்,என்ன டைம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.

தினமும் உன்னை பஸ் ஸ்டாப்ல பாக்கவே அந்த நேரம் போவேன்.நீ பஸ் ஏறுற வரை,கொஞ்ச தூரத்துல இருக்குற சந்துல நின்னு பார்ப்பேன்.

மறுபடியும் உன்னை,என் அம்மா நினைவு நாள் அன்னைக்கு தான் வீட்டுல பார்த்தேன்."

அந்த நினைவில் அவன் கண்கள் கலங்கியது.

"பாட்டி இருந்த வரை,அம்மாவுக்கு படையல் போட்டு, சாமி கும்பிட்டு,பத்து பேருக்கு சாப்பாடு போடுவாங்க.அவங்களுக்கு அப்புறம் யாரும் எதுவும் பண்ணல.
அவங்களுக்கு செய்ய, இங்க யாருமில்லைன்னு ஒரு நினைப்பு.அதான், அந்த வருத்தத்தில…"

"குடிச்சுட்டு வந்திங்களா…??"
அவனை முறைத்து கொண்டே கேட்டாள், அவள்.

அவளை பார்த்து ஒரு சங்கடமான முறுவலை கொடுத்தான்.

"அன்னைக்கு தான் முதல் முதலா குடிச்சேன்.ரொம்ப மனகஷ்டமா இருந்துது.மாது தான் கட்டாய படுத்தி, ஒரு மனஆறுதலுக்காக குடிக்க சொன்னான்."
தயக்கத்துடன் சொன்னான்.

"அது தான் முதலும், கடைசியுமா இருக்கனும்,திரும்பி குடிச்சீங்க.."

"என்ன பண்ணுவ??கோச்சுக்கிட்டு உங்க அம்மா வீட்டுக்கு போய்டுவியா..??"

"நான் ஏன் போனும்??குடிக்குற உங்களை தான், யார், உங்களுக்கு ஊத்தி கொடுத்தாங்களோ, அவங்க வீட்டுக்கு அனுப்பிவிட்டுடுவேன்.
அதையும் மீறி குடிச்சா, குடிச்ச உங்க மண்டையையும்,குடிக்க வச்ச உங்க பிரெண்ட் மண்டையையும் சேர்த்து உடைச்சுடுவேன்.

ஆம்பளைங்களுக்கு ஏதோ ஒரு சாக்கு குடிக்க,
எங்களுக்கெல்லாம் கஷ்டம் இல்லாத மாதிரி,நாங்களும் குடிக்க ஆரம்பிச்சா, நீங்க தாங்குவீங்களா??இல்ல நாடு தான் தாங்குமா??"

"அம்மா,தாயே, மலை இறங்கு.தெரியாம குடிச்சுட்டேன்.இனி குடிக்க மாட்டேன்."

"இதுக்கெல்லாம் அந்த மாது அண்ணா தான் காரணமா..??நாளைக்கு இருக்கு அவருக்கு.."

"ஏய்,அவனை ஒன்னும் சொல்லாத,என் கஷ்டம் பொறுக்காமா தான், அவன் இப்படி செஞ்சான்."

"பிரெண்ட்னா ஆறுதல் சொல்லி, கஷ்டத்தை ஆத்தானும்.இப்படி பாட்டில் பாட்டில்லா ஊத்த கூடாது."

"என்னாமா,எதுகை மோனையோட பேசுற..டி.ஆர். ஃபேன் அஹ் நீ..??"

"நக்கலா..??பேச்சை மாத்தாதிங்க.."

"அவனை ஒன்னும் சொல்லாத.அவன் எப்போவுமே என் நல்லது மட்டுமே யோசிப்பான்.எனக்காக அவனை மன்னிச்சுடு.அவன் அப்படி செய்ததால தான், தேவியின் கடை கண் பார்வை என் மேல் பட்டது.அன்னைக்கு நைட் தானே, எனக்கு சாப்பாடு எடுத்துட்டு என் ரூம்க்கு வந்த.."

"ஹ்ம்ம்….எனக்கு குடிக்கிறவங்களை கண்டாலே பிடிக்காது.ஆனாலும், உங்களை அப்படியே விட மனசில்ல..அதான் வந்தேன்."

"அப்போ தான், எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு.நீ என் அன்பை புரிஞ்சுக்குவன்னு.."

"ஹப்பா.. அதுக்கு மறுநாள், உங்களுக்கு எவ்வளவு கோவம்,நான் உங்க கூட பைக்ல வர்லைனு..அன்னைக்கு நைட் சமாதானபடுத்த வந்தா, ரொம்ப முறுக்கிக்குறிங்க..எப்படி அழுதேன் தெரியுமா..??"

அவள் கைகளை பற்றி, அழுத்தம் கொடுத்து விட்டு,
"ஹ்ம்ம்…மறுநாள் உன் முகம் பார்த்தே தெரிஞ்சுது.
நீ, அவங்க பேர் சொல்லி மறுத்ததும், பயங்கர கோவம்.மத்தவங்க மாதிரி, நீயும் என்னை ஒதுக்குறன்னு,அது எப்படி?? நீ என்னை ஒதுக்கலாம்னு,

அடுத்தவங்களும், நானும் ஒன்னா,?? அப்படின்னு, காரணம் புரியாம கோவம்.
மத்தவங்க ஒதுக்கையில கண்டுக்காம விட்ட மாதிரி, விட முடியல.
நான் உனக்கு தனி இல்லியானு,ஏதேதோ எண்ணம்.

நீ வந்து பேசுனப்போவும் சட்டுனு கோவத்தை விட முடியல.

அப்புறம், மறுநாள் உன்னை பஸ் ஸ்டாப்ல பார்க்காம கஷ்டமாயுடுச்சு.

நிதானமா யோசிச்சப்போ,உன் பக்க நியாயம் புரிஞ்சுது.அப்புறம், மாமி கிட்ட கேட்டு,உன்னை எப்படி பார்க்குறதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்போ,நீ மொட்டை மாடிக்கு போறதை,ஹால்ல இருந்து பார்த்தேன்.அப்புறம் அங்க வந்தேன்.

உன் அழுகை பார்த்து ரொம்ப கஷ்டமாயுருச்சு.அந்த அழுகைக்கு, என் கிட்ட ஆறுதல் தேடுனப்போ,ஏதோ சாதிச்ச பீல்..அப்புறம், மறுநாள் கிளாஸ் முடிச்சு,நீ எனக்காக காத்திருப்பன்னு யோசிச்சு,அங்க வந்தேன்.நான் நினைச்ச மாதிரி என்னை எதிர்பார்த்துட்டு இருந்த,அப்புறம் மாது கிட்ட, உன்னை கூட்டிட்டு போய் காட்டனுமுன்னு தோணுச்சு.அதான், அங்க கூட்டிட்டு போனேன்.

அவன், உனக்கு எல்லாம் தெரியும்னு நெனச்சு உளற ஆரம்பிச்சுட்டான்.அதான், அவன் கிட்ட ஏதும் சொல்லாதன்னு ஜாடை காமிச்சேன்.ஏதும் தெரியாம, நீ என்னை காதலிக்கனும், என் கிட்ட சொல்லணும். நான் உன்னை பார்த்தது,விரும்புனது, உன்னை பத்தி பேசுனது,எல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்தா, அதுக்கு பேர் லவ் இல்ல.

உன் அன்பு உண்மையா வேணும்,முழுசா எனக்கு மட்டும் வேணுமுன்னு தோணுச்சு.அதான், அத்தனை தடவை, அன்னைக்கு உன் காதல் பத்தி கேட்டேன்."

மடை திறந்த வெள்ளம் போல,இத்தனை நாள் மனதில் இருந்த அத்தனையும் கொட்டி தீர்த்தான்.

வழக்கத்திற்கு மாறாக, அவன் பேசுவதை,அமைதியாய் கேட்டு கொண்டிருந்தாள் கீர்த்தி.
அவன் சொல்லி முடித்ததும்,அவன் தோளில் சாய்ந்து கொண்டு,

"ஏன் மாமான்னு கூப்பிட சொன்னிங்க??சின்ன அத்தான்னு கூப்பிட கூடாதுன்னு சொன்னிங்க??"

"சின்ன அத்தான்னு கூப்பிட்டா,ஆரவ்க்கு அடுத்தபடியா இருக்க பீல்.அவனுக்கு அடுத்த இடம் கொடுத்த மாதிரி,அதான்.

அதோட மாமி சொன்னாங்க,என் அம்மா,என் அப்பாவை, மாமான்னு தான் கூப்பிடுவாங்களாம்.நீயும் என்னை அப்படி கூப்பிடனுமுன்னு தோணுச்சு."

அவன் பதிலில் முகத்தில் தோன்றிய ஒளியுடன்,

"இங்க இருக்க பிடிக்காம தான் வந்தேன்.ஆனா இப்போ, இங்கிருந்து போக பிடிக்கல.
இங்க வராம போய் இருந்தா, உங்களை பார்த்திருக்கவே முடியாது.
உங்க அன்பும் கிடைச்சுருக்காது."

அவள் கைகளில் அழுத்தம் கொடுத்து,
"நீ இங்க வர்லைன்னாலும்,என் அன்பு உனக்கு தான், முழுக்க,முழுக்க உனக்கு மட்டும் தான்."

"உங்க அன்பு தான், என்னை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்துருக்கு..
ஒரு வேளை, நான் உங்களை விரும்பாம போய் இருந்தா, என்ன செஞ்சுருப்பிங்க..??"

"ஏமாற்றம் எனக்கு பழக்கம் தான். இதையும் பழகி இருப்பேன்.."

உணர்வுகள் துடைத்த குரலில் கூறினான்.

இவள் தான் பதறிப்போனாள்.

"உங்க கிட்ட கூட்டிட்டு வந்த அன்பு,அதை புரிய வைக்கமா போகுமா..??
எனக்கு புரிஞ்சுடுச்சு.."

"என்ன புரிஞ்சுது..??"
இப்பொழுது அவன் குரலில்,குறும்பு வந்திருந்தது.

"ஹ்ம்ம்…இந்த பீம் பாய்க்கு, என்னை விட்டா, எவளும் கிடைக்க மாட்டா. அதான், நானே, உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு, முடிவு பண்ணிட்டேன்."

"பெரிய மனது தங்களுக்கு தேவியாரே.."

"புரிந்தால் சரி,மஹாராஜாவே.."

இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

கொஞ்ச நேரம் பௌர்ணமியை அமைதியாய் ரசித்து விட்டு, இருவரும் தங்கள் அறை நோக்கி சென்றார்கள்.

மேலும் ஒரு வாரம் கடந்த நிலையில்,அன்று மாலை,பார்த்தி,அலைபேசியில் அவளிடம்,

"இன்னிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு பொம்மு.அதுனால நைட் மொட்டை மாடிக்கு வர முடியாது.நீ சீக்கிரம் தூங்கு.சரியா..??"

"ஏன்??என்ன வேலை??எவ்ளோ நேரம் ஆனாலும் சரி, காத்திருக்கேன்."

"ச்சு.. சொன்னா புரிஞ்சுக்கோ பொம்மு.இன்னிக்கு வர முடியாது.."

ஒரு சலிப்பான உச்சுகொட்டலோடு,
"சரி, காரணமாவது சொல்லுங்க.."

"அதான் வேலைன்னு சொன்னேன்ல.."

"அது தான் என்ன வேலை..??"

கடுப்பான அவன்,
"நடுகடல்லா கப்பல் நிக்குதாம், அதை தள்ளி விடுற வேலை…"

"ஓஹோ..அப்போ தள்ளி விட்டுட்டு, நீங்களும் கிளம்புங்க அந்த கப்பல்ல.."

என்று கூறிவிட்டு, கோபமாய் கால்லை கட் செய்தாள்.

அவள், அந்த பக்கம் வைத்ததும், இந்த பக்கம் புன்னகையுடன் இவன் நின்றான்.

அன்று இரவு, வெகு நேரம் அவனுக்கு அர்ச்சனை செய்து விட்டு,தூக்கம் வராமல் புரண்டு,நள்ளிரவு நெருங்கும் வேளையில், சற்று கண்ணயர்ந்தவள்,பின் கழுத்தில், சூடான மூச்சு காற்று பட்டது.

கழுத்தில் ஏற்பட்ட குறுகுறுப்பில்,
அரைத் தூக்கத்தில், தூக்க கலக்கத்தில், தலையை திருப்பிப் பார்த்தாள்.

அவள் அருகே, படுக்கையில் ஒரு உருவம் படுத்திருந்தது.

தூக்க கலக்கம் பறந்தோட..
"ஆ…..ஆ….ஆ…."
கீர்த்தியின் குரல் அறை முழுவதும் எதிரொலித்தது.

அறையை தாண்டி வெளியேயும் கேட்டது.

….தொடரும்..


 
Top