அத்தியாயம்-23
சமையல் அறையில், வேலை பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியிடம் வந்தாள் ஆர்த்தி.
அவளை நிமிர்ந்து பார்த்த மீனாட்சி,அவள் முகம் பார்த்து,
"என்னாச்சு டி.. முகம் எல்லாம் வேர்த்து போய் இருக்கு..என்ன பண்ணுது..டாக்டர் கிட்ட போலாமா??"
பதறிய படி கேட்டார்.மாசமாக இருக்கும் மகளுக்கு, ஏதும் வலியோ?? என்று.
"உடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்லம்மா.."
"அப்புறம் ஏன், இப்படி இருள் அடிச்ச மாதிரி இருக்க??"
"இந்த கீர்த்தி ஏதேதோ சொல்லுறா ம்மா.."
"என்ன சொன்னா..??"
'அம்மாவிடம் சொல்லலாமா??வேண்டாமா..??அம்மா பயந்துவிட்டால் என்ன செய்வது??அவள் சொல்வது உண்மையா??பொய்யா??'
குழப்பத்தில் இருந்தாள்.
"என்னடி, பதில் சொல்லாம நிக்குற??"
"அது..அவ…என்ன என்னமோ உளருறா ம்மா.."
"அதான், உளருறானு நீயே சொல்லிட்ட,அப்புறம் என்ன பதட்டம்??"
"அதில்லம்மா.."
"அவ,இங்க வந்ததுல இருந்து ஏடாக்கூடமா தான் பேசுறா.. அதெல்லாம் பெரிசா எடுத்துக்காத.."
"இல்லம்மா, அவ தலைக்கு ஊத்திட்டாளா??"
"ஹ்ம்ம்..இங்க வந்துட்டு இல்ல.."
ஆர்தியின் பதட்டம், அதிகம் ஆனது.
"எதுக்குடி கேக்குற??"
"அம்மா.. அவ..அவ.."
"ஹ்ம்ம்…"
"அவ..மாசமா இருக்கேன்னு சொல்லுறா ம்மா.."
அவளை வினோதமாய் பார்த்த மீனாட்சி
"எப்போ சொன்னா??"
"இப்போ தான் ம்மா.."
"நான் சொல்ல சொன்ன விஷயத்தை சொன்னியா??"
"அதை சொல்லும் போது தான் ம்மா, சொன்னா.."
"அப்புறம் என்ன??இதுல இருந்தே தெரியலையா,அவ பொய் சொல்லுறான்னு.."
"எப்படி ம்மா சொல்லுற??"
"அவ அம்மா டி நானு..அவளை பத்தி தெரியாதா??சின்ன வயசுல, ஸ்கூல்க்கு போக பிடிக்கலைனா, இப்படி தான், வயிறு வலி,காய்ச்சல்ன்னு, சாக்கு சொல்லுவா.. சரியான புளுகு மூட்டை.. மாசமா இருக்கிற பொண்ணு எப்படி இருப்பான்னு, எனக்கு தெரியாதா??நீயும் மாசமா தான் இருக்க…உனக்கே தெரியலையா, அவளை பார்த்தா..??"
"இல்ல..ம்மா.. சந்தேகம் வந்துச்சு..இருந்தாலும்..குழம்பிட்டேன்.."
"சின்ன பிள்ளையில இருந்து ஒன்னா வளந்துருக்கிங்க, அவளை பத்தி இன்னும் தெரியாம முழிக்கிற.. அதான், உன்னை ஏச்சுப்புட்டு, ஒரே வீட்டுக்குள்ள,உன் கொழுந்தனை காதலிச்சுருக்கா..
ரெண்டு பெத்தேன்..ரெண்டுக்கும் புத்தி இல்லை.. ஒன்னு சூட்டிக்கை பத்தல..இன்னொன்னு, கூறு இல்லாம இருக்கு.."
தலையில் அடித்து கொண்டு,தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு,கீர்திக்கு உணவு கொடுக்க, அவள் அறைக்கு சென்றாள், ஆர்த்தி.
எதுவுமே நடக்காதது போல,அவள் கொடுத்த உணவை உண்டாள்.
"ஏண்டி, பொய் சொன்ன??"
"என்ன சொன்னேன்..??"
அவளை முறைத்து விட்டு,
"மாசமா இருக்கேன்னு..ஏன் பொய் சொன்ன??"
"நான் எப்போ, அப்படி சொன்னேன்..??"
"ஏண்டி,என்ன பார்த்தா எப்படி தெரியுது??வாந்தி வருது,தலை சுத்துது..இன்னொருத்தன் பிள்ளை..அப்படி,இப்படின்னு சொன்ன"
"அதை சொல்லுறியா..??இப்போ கூட, மாங்காய் சாப்பிடனும் போல தான் இருக்கு..அம்மா கடைக்கு போகையில, வாங்கிட்டு வர சொல்லுறியா??இப்போ சீசன் இல்லைல??அப்போ, மாங்காய் ஊறுகாய் வாங்கிட்டு வர சொல்லு.."
"ஏய்,ஏண்டி படுத்துற??"
"நானா..??நான் என்ன பண்ணேன்??"
அப்பாவியாய், கண் சிமிட்டி கேட்டாள்.
"நீ சொன்னது பொய் தானே??"
"எது??"
"ஏய்,படுத்தாத டி.. நீ கர்ப்பமா இல்லைல..??"
"தெரிலியே..
அதுக்கு, டாக்டர் கிட்ட போனும்..நீ தான் கூட்டிட்டு போக மாட்டேங்குற..அப்புறம் கேள்வி கேட்டா, எனக்கு எப்படி தெரியும்..??"
ஆர்திக்கு, தலையை கொண்டு போய்,எங்காவது முட்டலாம் போல வந்தது.
அங்கிருந்து கீழே சென்றாள்.
அதன் பின், அவள், இது பற்றி பேசினாலோ,மாப்பிள்ளை பற்றி பேசினாலோ, அவளை, இப்படி பேசி குழப்பி விட்டாள், கீர்த்தி.
"வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை,
ஒரு வட்டம் இல்லை,
தடை யாரும் இல்லை,
எங்கள் அன்புக்கு, தோல்வி இல்லை,
ஒரு கேள்வி இல்லை,
மலர் மாலை நாளை..
முள்ளை யார் அள்ளி போட்டாலும்,
முல்லை பூவாக மாறாதோ,
ஆஹா....பூவுக்கு, யார் இங்கே தீ வைப்பது..??
பகையே,பகையே, விலகு, விலகு ஓடு.."
ஆர்தியை பார்த்து,கை அசைத்து, அவள் அறையை விட்டு வெளியே செல்ல சொன்னாள்.
அதன் பிறகு,ஆர்த்தி இது பற்றி பேசவில்லை, அவளிடம்.
நாட்கள் விரைந்தது. நாளை மாலை பெண் பார்ப்பது என்ற நிலையில், முதல் நாள்,
மாதுவின் மெக்கானிக் ஷெட்டில்,
"பார்த்தி..நாளைக்கு, அந்த புள்ளையை பொண்ணு பார்த்து,பூ வைச்சுடுவாங்க டா.. இன்னும் முடிவு எடுக்கலையா நீ??"
மாது, ஆதங்கத்துடன் கேட்டான்.
ஒரு பெரு மூச்சோடு,
தன் திட்டத்தை கூறினான், பார்த்தி.
கண்கள் ஒளிர அதை கேட்ட மாது.
"நல்ல ஐடியா தான் டா.. ஆனா, அதுக்கு ஏன், இவ்ளோ நாள் காத்திருக்கனும்??கீர்த்தி அப்பா, கூட்டிட்டு போனப்போவே, செஞ்சுருக்கலாம்.."
"இல்ல.. இது தான் சரியான நேரம்..எனக்கு, முழு வெற்றி, கிடைக்குதோ இல்லையோ..அவங்க திட்டம் பலிக்காது.."
"சரி டா.. நாளைக்கு வேண்டிய எல்லா ஏற்பாடும் செய்ஞ்சுறேன்.."
"ஹ்ம்ம்…"
என்று விட்டு, யோசனையில் ஆழ்ந்தான் பார்த்தி.
வெளியே தைரியமாய் காட்டி கொண்டாலும், உள்ளே, நடுக்கத்துடன் கழித்தாள் கீர்த்தி.
இரவு வேளை,
கோடை பண்பலையில்,இவர்களுக்கென்றே பாடல் ஒளிபரப்ப பட்டது போல,பாடல் ஒலித்தது.
பார்த்தியும்,மாதுவின் மெக்கானிக் ஷெட்டில்,அந்த பாடலை தான் கேட்டிருந்தான்.
கீர்த்தியும்,பக்கத்து வீட்டில் இருந்து, ஜன்னல் வழியாக கசிந்த இசையை, மனம் உருக கேட்டிருந்தாள்.. அதில் பாடிய ஆணும் பெண்ணும், பார்த்தியும் இவளுமாக தோன்றியது இவளுக்கு..அவனுக்கும், அதே போல தோன்றியது.
"தென்றல் காற்றே, கொஞ்சம் நில்லு!!
அங்கே சென்று, அன்பைச் சொல்லு!!
தனிமை கொதிக்குது ,நினைவினில் அனலும் அடிக்குது,
இதயம் துடிக்குது ,உனை வரத்தான்!!
தென்றல் காற்றே, கொஞ்சம் நில்லு!!
அங்கே சென்று, அன்பைச் சொல்லு!!
தனிமை கொதிக்குது, நினைவினில் அனலும் அடிக்குது,
இதயம் துடிக்குது, உனை வரத்தான்!!
மேடையேற கூடுமோ, மீண்டும் நமது நாடகம்,
நானும் நீயும் சேர்வதால், யாருக்கென்ன பாதகம்!!
யாரைச் சொல்லி நோவது, காலம் செய்த கோலம்,
உன்னை என்னை வாட்டுது, காதல் செய்த பாவம்!!
கண்ணும் நெஞ்சும், என் வசம் இல்லையே!!
என்ன செய்வது, சொல்லடி முல்லையே!!
கனவில் மட்டுமே ,கைகள் சேரலாம் கண்ணா!!
தென்றல் காற்றே, கொஞ்சம் நில்லு!!
அங்கே சென்று ,அன்பைச் சொல்லு!!

ஜீவன் ரெண்டும் சேர்ந்தது, தேவன் வகுத்த சாசனம்!!
காதல் எந்த நாளிலும், கவிதை போல சாஸ்வதம்!!
என்று வந்த நேசமோ, பூர்வ ஜென்ம யோகம்!!
இன்னும் ஏழு ஜென்மமும், வளரும் இந்த யாகம்!!
மீண்டும் மீண்டும், பூமியில் தோன்றலாம்!!
காதல் ஓவியம், பார்வையில் தீட்டலாம்!!
பிரிவு என்பதே ,உறவுக்காகத்தான் கண்ணே!!
தென்றல் காற்றே, கொஞ்சம் நில்லு!!
அங்கே சென்று ,அன்பைச் சொல்லு!!
தனிமை கொதிக்குது ,நினைவினில் அனலும் அடிக்குது!!
இதயம் துடிக்குது, உனை வரத்தான்!!"
கண்களில் வழிந்த நீரை, இருவரும் துடைத்துக் கொண்டு, விடியலுக்காய் காத்திருந்தார்கள்..
அவர்கள் வாழ்வின் விடியலுக்காய் .
மறுநாள் காலையில், தன் வீட்டிற்கு சென்ற பார்த்தி, தன் உடமைகளை எடுத்து கொண்டு, மாமியிடம், அங்கிருந்து செல்வதாக கூறி விட்டு, கிளம்பினான்.
கண்ணீருடன், விடை கொடுத்தார் மாமி.
"நீங்க ரெண்டு பேரும், சேமமா இருக்கனும்.."
அவனை, ஆசிர்வதித்து அனுப்பினார்.
அகிலாண்டம் அங்கு இல்லை..கேசவனின் இல்லத்திற்கு கிளம்பி இருந்தார்.
மாதுவின் மெக்கானிக் ஷெட்டிற்கு வந்தவன்.
அவனை அழைத்து, தான் சொன்னதெல்லாம் தயாரா ??என்று கேட்டுக்கொண்டான்.
அன்று காலையில் இருந்து, கீர்த்தியின் முகம், நிர்மலமாய் இருந்தது..எந்த உணர்வும் காட்டாது.
ஆர்த்தி கொண்டு வந்த அவள் உடமைகளை, அன்று தான் பிரித்தாள்.அதில், அவள் தேடியது கிடைத்தது..அதை அள்ளி, நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
அவள் மனதை மாற்றும் பொருட்டு, ஆர்த்தி அடிக்கடி அவள் அறைக்கு வந்து, ஏதாவது பேசிக்கொண்டிருந்தாள்.
"எந்த புடவை டி கட்ட போற??இந்த ரோஸ் கலர் நல்லா இருக்குல்ல??"
அவர்கள் அலமாரியை திறந்து, அதில் இருக்கும் புடவைகளை காட்டி,கீர்த்தியின் முகத்தை கூர்மையாய் ஆராய்ந்து கொண்டே கேட்டாள்.
"நான் எடுத்துட்டேன்.."
"எங்க காட்டு.. நான் பார்க்குறேன்.."
அவள் பிறந்த நாள் அன்று கட்டிய, மயில் கழுத்து நிற, சில்க் காட்டன் புடவையை எடுத்துக் காட்டினாள்.
"ஹ்ம்ம்..இது நல்லா இருக்கு..ஆனா, பட்டு கட்டிக்கோ..என்னோடது கூட கொஞ்சம் கொண்டு வந்துருக்கேன்..இல்லைன்னா, உன் பிறந்த நாளுக்கு, என் மாமியார் கொடுத்த, வெந்தய கலர் பட்டு புடவை,அதை கட்டேன்.. உன் நிறத்துக்கு எடுப்பா இருக்கும்.."
கீர்த்தியின் முகம் மாறியது..ஒரு உறுதியுடன்..
"இல்ல..இது தான் கட்ட போறேன்.."
தன் கையில் இருக்கும், சில்க் காட்டன் புடவையை அணைத்துக் கொண்டாள்.
அவள் முக மாற்றத்தை கவனித்து,
"சரி,சரி கட்டிக்கோ.."
அதன் பிறகு, எதற்கும் மறுத்து சொல்ல வில்லை கீர்த்தி.
மாலை நெருங்கியது.மீனாட்சியின் நகைகளை போட்டு, அவளை அலங்கரித்தாள் ஆர்த்தி.
ஒரு அமைதியுடன்,அனைத்திற்கும் ஒத்துழைத்தாள் கீர்த்தி.
ஆர்த்தியும் மீனாட்சியும்,நல்லபடியாய் அனைத்தும் முடிய வேண்டும் என்ற வேண்டுதலுடன் இருந்தார்கள்.
அலங்காரம் முடித்து, அமைதியாய் அமர்ந்திருந்தாள் கீர்த்தி.எந்த பரபரப்பும் இல்லை அவளிடம்.
'என்னை பொண்ணு பார்க்க வந்தப்போ,எப்படி இருந்தா??ஒரு இடத்துல நிக்கல.. இன்னிக்கு எப்படி இருக்கா??ஜன்னலுக்கும் கதவுக்கும் பல தடவை நடந்து,எல்லார் பத்தியும் கருத்து சொல்லி..'
பெரு மூச்சு விட்டாள், ஆர்த்தி.
அகிலாண்டம், மாடி ஏறி, இவர்கள் அறைக்கு வந்தார்.
காலையிலேயே இங்கு வந்திருந்தார்.இப்பொழுது தான், இவளை பார்க்க..மாடிக்கு வந்தார்.
"என்னம்மா கீர்த்தி..நல்லா இருக்கியா??"
அவரது கேள்வியில்,அவரை நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தி.
ஒரு நொடி, அவள் கண்களில் சீற்றம் வந்தது.மறு நொடி ,அது பொய்யோ எனும் படி, உணர்ச்சி துடைத்து காணப்பட்டது.
அவளிடம், கோபம்,ஆத்திரம்,அழுகை, வருத்தம், இதனை எதிர் பார்த்து வந்தவருக்கு, பெரிய ஏமாற்றம்.
"உனக்கு,என் தங்கச்சி பையனை தான் பார்த்துருக்கேன்..எங்க அளவு வசதி இல்லைனாலும் ,வசதியான இடம் தான்..இன்னும் பெரிய இடமே பார்த்துருப்பேன்..நீ தான் அவசர பட்டுட்ட..
வெட்டி ஆபிஸரை விரும்பிட்ட.. பரவால்ல,சரியான நேரத்துல சுதாரிச்சுட்ட..
என் தங்கச்சி பையன்,சொந்தமா வீடு,கார் எல்லாம் வச்சுருக்கான்.. மாசம், ரெண்டு லட்சம் சம்பதிக்கிறான்..வீட்டுக்கு அடங்குன பையன்..உன்னை நல்லா பார்த்துக்குவான்..என் மேல ரொம்ப மரியாதை..நான் கட்ட சொன்னா.. கழுதையை கூட கட்டுவான்.."
நமட்டு சிரிப்போடு சொன்னார்.
'என்னை, கழுதை கூட ஒப்பிட்டுருச்சாமா..அல்ப சந்தோஷ பட்டுக்குது...வெள்ளை யானை...'
எதற்கும், அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை கீர்த்தி..சுவற்றை வெறித்தாள்.
"வீட்டுக்கு, ஒரே பிள்ளை அவன்..என் தங்கச்சி புருஷன், அரசாங்க அலுவலகத்துல, பெரிய ஆபீசர்..ஏகப்பட்ட சொத்து வச்சுருக்கார்.. பொண்ணு, வேலைக்கு போகணுமுன்னு எல்லாம் எதிர் பார்க்கல.. வீட்டுக்கு அடங்கி இருந்தா போதுமுன்னு நினைக்குறாங்க.."
அடக்க ஒடுக்கமா இரு என்று, மறைமுகமாய் அறிவுறுத்தினார்
"எனக்கு, உன்னை ரொம்ப பிடிக்கும்..எனக்கு பிடிச்சவங்களுக்கு எப்போவும் நல்லதே கொடுப்பேன்..அதான், உனக்கு சிறந்ததை கொடுத்துருக்கேன்.."
'இதுக்கு, என்னை உனக்கு, பிடிக்காமையே இருந்துருக்கலாம்..நான் தப்பிச்சுருப்பேன்..'
"எனக்கு பிடிக்காதவங்களுக்கு ,மறக்க முடியாத பரிசு தான் கொடுப்பேன். நான் அப்படி தான்…என் தங்கச்சி மகன்..உங்க அப்பா மாதிரி, உன்னை, நல்லா பார்த்துக்குவான்.."
'விளங்கிடும்…'
என் பகையை சம்பாதித்து கொள்ளாதே,அது உனக்கு நல்லதில்லை, என்று எச்சரித்தார் அகிலாண்டம்.
அங்கிருந்த மீனாட்சியை பார்த்து,
"உங்க பொண்ணுங்களுக்கு,அழகு மட்டுமில்ல,அறிவும் நிறைய இருக்கும்னு நெனைக்குறேன்.."
கீர்த்தியின் புறம் பார்வையை திருப்பி,
"புத்தியோட பிழைச்சுக்க.. புரியுதா..??"
மீனாட்சி, சிரித்து சமாளித்தார்.
கீர்த்தி,சுண்டு விரல் கொண்டு காது குடைந்து,முகத்தை சுழித்துவிட்டு, மீண்டும் சுவற்றை வெறித்தாள்.
அவள் செய்கையில் கடுப்பான அகிலாண்டத்தை பார்த்து, ஆர்த்தி,
"ஜூஸ் குடிக்கிறீங்களா அத்தை.. வாங்க தரேன்.."
அவரை, அவ்விடம் விட்டு அகற்ற முயன்றாள்.
"உங்க அப்பா, கீழ தானே இருக்கார்..??"
ஆர்தியிடம் கேட்டு விட்டு ,கீர்த்தியை அர்த்ததோடு பார்த்துவிட்டு, அவ்விடம் விட்டு சென்றார்.
'உன் அப்பாவை மீறி விடுவாயா??என்னும் கேள்வி அதில் இருந்தது..உன் அப்பா, என் கை பொம்மை, என்னும் குறிப்பும்..'
அவர் போன திசையை முறைத்தாள் கீர்த்தி..
'இவளே,இப்போ தான் கொஞ்சம் அமைதியா இருக்கா.. இந்த அத்தை வேற..ஏத்திவிட்டு போறாங்க..ஆண்டவா,எல்லாம் நல்ல படியா முடியனும்..'
அவசரமாய்,ஒரு வேண்டுதல் வைத்தாள், ஆர்த்தி.
ஆரவ், சற்று பதட்டத்தில் இருந்தான்.
'இவ்ளோ சொல்லியும்,இந்த கீர்த்தி எதுக்கும் ஒத்துக்கலையே.. இன்னிக்கு நிச்சயம் முடிஞ்சா என்ன??எப்படியும், நாளைக்கு பேசி,பார்த்தியோட இவ கல்யாணத்தை முடிக்கனும்..இன்னிக்கு தனியா பேச முடியாது..நாளைக்கு பேசிடனும்..'
மனதுள் கணக்கு போட்டு, அமர்ந்திருந்தான்.
"உங்க பெரிய மகன்,மருமக, வரலியா சம்பந்தி..??"
"கல்யாணத்துக்கு வருவாங்க..ப்ரியாவுக்கு ஸ்கூல் இருக்கு.."
"ஓ..சரி,சரி.."
மீனாட்சி, மாடியில் ஒரு கண்ணும்,சமையலில் ஒரு கண்ணும் என்று, பரபரப்பாய் இருந்தார்.
ஆர்த்தி,கீர்த்தியை விட்டு இம்மியும் நகராமல்,கூடவே இருந்தாள்.
'இவ ஏன், இங்கயே உட்காந்துருக்கா..??எனக்கு காவலா..??இவ மாமியார்..இம்புட்டு நேரம், அந்த மாப்பிள்ளையை..கூவி, கூவி வித்துச்சு..
அவன் நல்லவன், வல்லவன்..கூகிள்ல சர்ச் பண்ணா கூட, இப்படி குட் பாய் கிடைக்காதுன்னு..இவ, எனக்கு, பிரீ,வாட்ச் வுமன் வேலை பார்க்குறா..
குடும்பத்துக்கே, பெரிய புத்திசாலினு நினைப்பு...இன்னிக்கு, உங்க நேரம், நடத்துங்க..கடைசில, உங்க எல்லோர் மூஞ்சிலையும் கரி பூசலை.. நான், என் மாமாவோட பொம்மு இல்லடி..'
"கீர்த்தி,ஏதும் சாப்பிடுறியா..??"
"ஹ்ம்ம்..சூடா..மசாலா பொரி சாப்புடனும் போல இருக்கு..கேரட்,வெங்காயம்,கொத்தமல்லி எல்லாம் போட்டு..செஞ்சு கொண்டு வரியா..??கிளைமாட் வேற நல்லா இருக்கு.."
ஆர்த்தி பே.. வென முழித்தாள்.
'இவ விளையாடுறாளா.. ??பிடிக்காத கல்யாணமுன்னு, கொஞ்சம் கூட பதட்டம் இல்லாம..பிக்கினிக் வந்தவ மாதிரி,வகையா கேக்குறா..'
"என்ன முழிக்குற..??என்ன சாப்பிடுறன்னு கேட்ட, சொன்னா.. இந்த முழி முழிக்குற..என்னமோ..கேட்க கூடாததை.. கேட்ட மாதிரி.."
"இல்லடி..இப்போ போய்.. பொரி கேக்குற..வேற..வடை,கேசரி..இப்படி, கொண்டு வரவா..அம்மா..அதான் செஞ்சுருப்பாங்க.."
"உங்க அம்மா செஞ்சதெல்லாம், என்னால சாப்பிட முடியாது..எனக்கு பிடிச்சதை தான் சாப்பிட முடியும்..பிடிச்சது கிடைக்கலைனா.. கிடைச்சதை ஏத்துக்க,வேற ஆள் தான் பார்க்கனும், நீங்க..பிடிக்கலைனா.. பட்டினி தான்..மாத்திக்க மாட்டேன்..என் முடிவை.."
இது, சாப்பாட்டுக்காக கூறப்பட்டதாக தோன்றவில்லை ஆர்திக்கு..
அவளை கூர்ந்தாள்..ஆர்த்தி..
அவளை பார்த்து, அத்தனை பற்களையும் காட்டி..
"என்னடி..??சாப்பாட்ல கூட..பிடிச்சது தர மாட்டீங்களா..??நல்ல குடும்பம்.."
கூறிவிட்டு..அருகில் இருந்த வார இதழை திருப்ப ஆரம்பித்தாள்.
இவளிடம் பேசினால் தானே வம்பு என்று, அமைதியாய் இருந்தாள் ஆர்த்தி..
மாப்பிள்ளை வீட்டின் கார் வரும் ஒலியில், ஜன்னலின் அருகே சென்று பார்த்தாள், ஆர்த்தி..
"ஏய்..மாப்பிள்ளை வீடு வந்தாச்சு டி.."
உற்சாகத்துடன், குரல் கொடுத்தாள்.
கீர்த்தியின் உடல் விறைத்தது..ஒரு நிமிடம்..பின், யாரோ, யாரையோ பார்க்க வந்தது போல..உணர்வு துடைத்து சகஜமானாள்.. கீர்த்தி.