அத்தியாயம்-28
மதியம் உறங்கியதால், இருவருக்கும் உறக்கம் வரவில்லை..பார்த்தி விட்டத்தை பார்த்தும்,கீர்த்தி சுவரை பார்த்தும், படுத்திருந்தார்கள்.
கீர்த்தி,அசையாமல்,மூச்சு விடும் ஒலி கூட கேட்காமல்,படுத்திருந்தாள்.எங்கே அசைந்தால், முழித்திருப்பது தெரிந்து விடுமோ, என்று.
சிறிது நேரம் கடந்தது,கீர்த்தியின் கணுக்காலின் மேல், ஏதோ ஊர்வது போல தெரிந்தது.சட்டென்று காலை உதறி விட்டு, சற்று நிமிர்ந்து பார்த்தாள்,ஒரு கரப்பான் பூச்சி..மெதுவாய் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
"ஆ…ஆ…ஆ…"
அலறி அடித்து எழுந்தவள், பார்த்தியின் மேல் விழுந்து,அவன் கழுத்தை கட்டி கொண்டு,அவன் கழுத்தடியில் முகம் புதைத்தாள்.
இவள் கத்தலில், அவனும் பயந்து,
"என்னாச்சு..பொம்மு.."
"கரப்பான் பூச்சி..மாமா.."
"எங்க..??"
கை நீட்டி,அது இருக்கும் திசையை காட்டினாள்.
"சரி எழுந்துக்கோ..அதை அடிக்குறேன்.."
"ஹ்ம்ம்.."
அரை மனதாய்,கைகளை விலகியவள், எழும் முன்,அந்த கரப்பான் பூச்சி,உற்சாகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது,பறந்து வந்து இவள் மேல் விழ, இவள் பார்த்தி மேல் மறுபடியும் விழ, எழ முயன்று கொண்டிருந்தவன் மறுபடியும் பாயில் விழ.. கண் கொள்ளா காட்சி ஆகி இருந்தது.
"மாமா..மாமா..என் மேல விழுந்துடுச்சு..மாமா.."
வேகமாய்,சேலையை உதறினாள்.
சேலையில் இருந்து ,வெளி வந்த கரப்பான் பூச்சி,மறுபடியும் இவள் முகம் நோக்கி வந்தது..
அதன் பின், கீர்த்தியின் கத்தல்களை கேட்கவும் வேண்டுமா..??
பார்த்தியை, ஒரு வழி ஆக்கி விட்டாள்.
போராட்டத்தின் முடிவில், கரப்பான் பூச்சி எங்கு போனதென்று தெரியவில்லை..இவள், பார்த்தியின் மீது படுத்திருந்தாள்.
"பொம்மு,அந்த பூச்சி எங்கயோ போய்டுச்சு..இறங்கி படு.."
"ம்ம்..ஹ்ம்ம்..அது மறுபடியும் வரும்.."
"அதுக்காக,எவ்ளோ நேரம் இப்படியே இருப்ப..??இறங்கு.."
"முடியாது.."
"நீ இப்படியே இருந்தா, உன் சபதத்தை என்னால காப்பாத்த முடியாது.."
"என்ன சபதம்??,யார் போட்டா..??"
அவள் குரலின் பேதத்தில், அவள் முகம் பார்த்தவன்..அங்கு தெரிந்த மயக்கத்தில்,அவள் மனநிலையை உணர்ந்தான்.
அதன் பின் கேள்வி கேட்டு கொண்டிருக்க, பார்த்தி என்ன முட்டாளா??
மெது மெதுவாய் தன் ஆளுகைகுள் அவளை கொண்டு வந்தான்..அவள் பயம் உணர்ந்து,பூவை கையாளுவது போல, மென்மையாய், பூவையை கையாண்டான்..
ஒரு விரல்
என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா!!
மறு விரல் வந்து
தொடுகையில் விட்டு
விலகுதல் அழகா!!
உயிர் கொண்டு
வாழும் நாள் வரை, இந்த
உறவுகள் வேண்டும்
மன்னவா!!
நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா!!
இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன்
நீ அல்லவா!!
முத்தத்திலே
பலவகை உண்டு, இன்று
சொல்லட்டுமா கணக்கு!!
இப்படியே என்னை
கட்டி கொள்ளு, மெல்ல
விடியட்டும் கிழக்கு!!
அச்சம் பட வேண்டாம்
பெண்மையே, எந்தன்
ஆண்மையில் உண்டு
மென்மையே!!
நூறாண்டுக்கு ஒரு
முறை பூக்கின்ற பூவல்லவா!!
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா!!
இதழோடு இதழ் சேர்த்து,
உயிரோடு உயிர் கோர்த்து
வாழவா!!
நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா!! இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன் நீ
அல்லவா!!
கண்ணாளனே,
கண்ணாளனே, உன்
கண்ணிலே என்னை
கண்டேன்!!
கண் மூடினாள்,
கண் மூடினாள், அந்நேரமும்
உன்னை கண்டேன்!!
அவர்கள் இருவரும் உறங்கையில்,கீழ் வானம் சிவக்க தொடங்கி இருந்தது.
சூரியவம்சம், சரத்குமார் தேவயானி போல..போட்ட சபதத்தை சில நிமிடங்களிலேயே உடைத்து,சாதனை படைத்திருந்தனர் இருவரும்..
அரசியல்ல இதெல்லாம், சாதரணமப்பா!!
ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த சூரிய கதிரின் ஒளியில் கண் விழித்த பார்த்தி,தன் மேல் பூமாலையாக இருந்தவளை,இறக்கி படுக்க வைத்து விட்டு, மொபைலில் மணி பார்த்தான்.
ஏழு மணி ஆகி இருந்தது.
இன்று வேலைக்கு செல்ல வேண்டும் என்று மூளைக்குள் மணி அடிக்க,வேகமாய் எழுந்து, குளியல் அறைக்குள் நுழைந்தான்.
அவன் குளித்து தயாராகி வரும் வரை, கீர்த்தி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
மென் நகையோடு அவளை பார்த்தவன்..
'என் பொம்மு குட்டி,நேத்து கொஞ்ச நேரத்துல,மனுஷனை என்ன பாடு படுத்திட்ட.. அவ்ளோ பயம்..பூஜ்ஜூ குட்டிக்கு.அதை ஒழுங்கா, நேரடியா சொல்லாம..மங்கம்மா சபதம் வேற..நட்சத்திர ஜன்னலில்ன்னு, ஒரு பாட்டுல பெரிய ஆள் ஆக, இது என்ன சினிமா வா??..இவளோட..'
மனதோடு அவளை கொஞ்சி கொண்டு,அவள் கன்னத்தில் முத்தமிட்டு,அவளை எழுப்பினான்.
"பொம்மு..எழுந்திரு.."
"ஹ்ம்ம்..போங்க..மாமா..நைட் எல்லாம் தூங்கலை.. இப்போவாச்சும் தூங்க விடுங்க.."
கண்விழிக்காமல், தூக்க கலக்கத்தில் பதில் சொன்னாள்.
'நல்ல வேளை..பக்கத்துல யாரும் இல்லை..இவளோட..இவ.. இதுக்கெல்லாம் சரியா வர மாட்ட..ஷாக் ட்ரீட்மெண்ட் தான் சரி..'
"மரகதம்மா வந்துருக்காங்க பாரு.."
அந்த வார்த்தை அவள் மூளைக்குள் சென்று அடைந்த மறு நொடி,அடித்து பிடித்து எழுந்தாள்.
எழுந்து, திரு திருவென விழித்து, சுற்றும் முற்றும் பார்த்தவளை பார்க்க, அவனுக்கே பாவமாய் இருந்தது.
சற்று தெளிந்ததும்,அவன் கூறியது பொய் என்று புரிந்து,அவனை முறைத்தாள்.
"கோவத்துல, ரொம்ப அழகா இருக்கடா பொம்மு..போ..போய்.. குளி, இல்லைனா, மரகதம் அம்மா நிஜமாவே வந்துடுவாங்க.."
அவனுக்கு அழகு காட்டி விட்டு,குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குளிக்கும் போது தான்,நேற்றைய இரவின் ஞாபகம் வந்தது..
தலையில் லேசாக அடித்துக் கொண்டாள்.
வெட்கத்தில் முகம் சிவந்தது..
'நேத்து, என்ன பாடு படுத்திட்ட மாமாவை.. ??பாவம் மாமா..மாமா என்ன நினைச்சுருப்பார்..??"
இப்பொழுது, பார்த்தியின் முகம் பார்க்க,கூச்சம் நெட்டித் தள்ளியது.
எப்படி இருந்தாலும், குளித்து விட்டு வெளியே வந்து தானே ஆக வேண்டும்..
அறைக்குள் அவன் இருப்பானோ?? என, தயக்கத்துடன் வெளியே வந்தாள்.
அவள் கூச்சம் உணர்ந்து, வெளியே போய் இருந்தான் பார்த்தி.
அவனை மனதுள் பாராட்டி கொண்டு,வேகமாய் உடை மாற்றினாள்.
மாற்றி விட்டு கதவு திறந்தாள்.
அவளை பார்த்து கொண்டே, பார்த்தி உள்ளே நுழைந்தான்.
மறுபடியும்,நேற்று போல தலை குனிந்து நின்றாள்.
'ஹ்ம்ம்..ஆரம்பிச்சுட்டா..இவ வெட்கத்தை..'
மனதுள் சிரித்த பார்த்தி,உள்ளே வருவதற்கும்,மரகதம் அம்மா வருவதற்கும் சரியாய் இருந்தது.
"எழுந்துட்டீங்களா..??நான் நேரமாகும்னு நெனச்சு, மெதுவா வந்தேன்.."
அவர் பேச்சில்,இருவர் முகமும் சிவந்தது.
"சரி, சாப்பிட வாங்க.."
இருவரும் சாப்பிட்டதும்,
"பொம்மு, நான் வேலைக்கு கிளம்புறேன்..போய்ட்டு, வேலையில சேர்ந்துட்டு, வீட்டு சாவி வாங்கிட்டு, பெர்மிசன் போட்டு வரேன்..கிளம்பட்டுமா..??"
சட்டென்று அவள் முகம் சோர்ந்தது, தனியே, புது இடத்தில,அவன் இல்லாமல்,ஏனோ கஷ்டமாய் இருந்தது..
அவள் முகம் பார்த்து,அவள் மனநிலை புரிந்தாலும்,அருகில் மரகதம் இருந்ததால்,அவளை அணைத்து ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் பார்த்தி இருந்தான்.
"உடனே வந்துடுறேன் டா.. கொஞ்ச நேரம் தான்.."
கண்ணில் கெஞ்சல்,கொஞ்சம் சிரியேன் என்று..
"நீங்க போங்க தம்பி,நான் கூட இருக்கேன்..நீங்க வர்ற வரை."
மரகதத்தின் ஆறுதலில்,மனபாரம் குறைந்தது.
இப்பொழுது, கீர்த்தியின் கண்களில் முழு தெளிவு இல்லாவிட்டாலும்,ஒரு நிம்மதி தெரிந்தது.
"கிளம்பவா..??"
"ஹ்ம்ம்.."
ஒரு மென் நகையோடு தலையாட்டினாள்.
அவள் கன்னம் தட்டி விட்டு,மனநிறைவோடு கிளம்பி சென்றான்.
கம்பெனியில் நுழையும் போதே, ஆகாஷ் இவனை எதிர் கொண்டு வரவேற்றான்.
அவனை அழைத்து கொண்டு,தன் அறைக்கு சென்று,பார்மாலிட்டிஸ் எல்லாம் சீக்கிரம் முடித்து,அவன் கையில் வீட்டு சாவி கொடுத்தான்.
"எல்லாம் தயாரா இருக்குடா..சுத்தம் செஞ்சு ரெடி பண்ணிட்டேன்.."
"தேங்க்ஸ் டா.."
"ச்சு.. நேத்தே..என்ன சொன்னேன்..அதெல்லாம் நான் சொல்லனும்.. இனி..இங்க உள்ள பிரச்சனை எல்லாம் நீ பார்த்துக்கோ..ஒரே தலைவலி எனக்கு.."
"கண்டிப்பா டா.. என்ன பிரச்சனையா இருந்தாலும் சரி பண்ணுவோம்.."
"ஹ்ம்ம்..சீக்கிரம் செய் டா.. இதுனால, அப்பா கிட்ட ஒரே திட்டு,அடிக்கடி..சரி..அப்பாவை பார்த்துட்டு போய்டு..இல்ல..அதுக்கும் ஏதாவது சொல்லுவார்.."
"சரி டா.."
"அவர் ஏதாவது பேசுனா..பெருசா எடுத்துக்காத..எனக்காக.."
"சரி டா.."
பார்த்தியின் சித்திக்கும்,ஆகாஷின் அப்பாவுக்கும், சற்று அறிமுகம் உண்டு,தொழில் சம்பந்தமாய்.அவருக்கு தான், எல்லோரிடமும் பார்த்தியின் பெருமை பேசுவதில் நாட்டம் உண்டே....அது போல, இவரிடமும் சில விஷயம் சொல்லி இருந்தார்..
அதனால், அவன் தந்தை, இவனை ஏதாவது சொல்லி விடுவார் என்று அறிந்தே,ஆகாஷ்,பார்த்தியை சமாதானம் செய்து கூட்டி சென்றான்.தந்தையின் குணம் அறிந்து..
பார்த்தியை சேர்ப்பதில்,அவருக்கு அவ்வளவு விருப்பம் இல்லை..பார்த்தியின் திறமை அறிந்த ஆகாஷ்சின் வற்புறுதலில்,இதற்கு ஒத்து கொண்டார்..இருந்தாலும்,முணுமுணுப்பார்..
"அவன், ஒரு வேலையில கூட உருப்படியா இல்லையாம்..அவனை நம்பி வேலை கொடுக்குற.."
இப்படி,சில பல பேச்சுக்கள்..அதெல்லாம் மீறி, இங்கு வேலைக்கு சேர்த்துள்ளான் ஆகாஷ்..
அது ஓரளவுக்கு புரிந்து,பார்த்தியும் தலை அசைத்தான்..அவன் பேச்சுக்கு..
ஆகாஷின் அப்பா,தணிகாசலம்..கொஞ்சம் காரர் பேர்வழி,ஒருத்தரை பிடித்தால் கொண்டாடுவார், இல்லையெனில்,தூக்கி எறிவார்..
அவர் அறை கதவை தட்டி விட்டு,உள்ளே நுழைந்தான் ஆகாஷ்,பின்னால் பார்த்தி..
"அப்பா..பார்த்தி..சேர்ந்துட்டான்.."
"ஹ்ம்ம்.."
என்று, அவனை பார்த்து தலை அசைத்தார்.
"குட் மார்னிங் சார்.."
"ஹ்ம்ம்..சரி சரி..ஒழுங்கா வேலை பார்த்தா சரி.."
பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டே கூறினார்.
ஆகாஷ் கெஞ்சாலாய், இவனை பார்த்தான்.இவன் கண் மூடி, நான் தவறாய் நினைக்கவில்லை என்று கூறினான்.
அவரை நோக்கி,மென் நகையோடு,
"கிளம்புறேன் சார்.."
"ஹ்ம்ம்.."
அவர் அனுமதியில், இருவரும் வெளியே வந்தனர்.
பிறகு, ஆகாஷிடம் பர்மிஷன் வாங்கி கொண்டு,வீட்டுக்கு சென்றான்.
கீர்த்தியும் மரகதமும் பேசிக்கொண்டிருந்தார்கள்.இவனை பார்த்ததும்,அவள் கண்ணில் மகிழ்ச்சி மின்னியது.
பார்த்தியும், புன்னகையுடன் அவர்களிடம் வந்து,
"சாவி வாங்கிட்டேன்..கிளம்புவோமா..??"
சரி என்ற அவள் தலை அசைப்பில்,மூவரும் கிளம்பினார்.
பரமேஷ், ஒரு ஆட்டோ பிடித்து வந்தான்.அதில்,அவர்கள் சாமான்கள் ஏற்றப்பட்டு,இவர்களும் ஏறி கொண்டார்கள்,தன் பைக்கில், இவர்களை தொடர்ந்தான் பரமேஷ்.
வீட்டை அடைந்து,கதவு திறந்து உள்ளே சென்றார்கள்.இரண்டு படுக்கை அறையுடன் கூடிய வீடு..மிக பெரியது இல்லை..அதே நேரத்தில் ,சிறிய வீடும் இல்லை..இவர்கள் இருவருக்கும், தாராளமாய் இருந்தது.
மரகதம் சொன்னபடி, பால் காய்ச்சி,அங்கு உள்ள பூஜை அறையில் வைத்து, அனைவரும் சாமி கும்பிட்டார்கள்.
மதிய சமையலுக்கு, வரும் போதே காய் வாங்கி வந்திருந்தபடியால், சமையல் செய்தார் மரகதம்.
கீர்த்தி,கூட, உதவி மட்டும் செய்தாள்.
மதியம் சாப்பிட்டதும்,பார்த்தியும், பரமேஷும் கிளம்பி விட்டார்கள்.அவன் வரும் வரை, கீர்த்தியுடன் இருப்பதாய் கூறி, பார்த்தியை அனுப்பினார் மரகதம்.
அன்று முதல் நாள் என்றபடியால்,எப்படி,என்ன வேலை,என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டான், பார்த்தி.
மாலை, சற்று விரைவாக வீடு திரும்பினான். அவன் வந்ததும்,தான் கிளம்புவதாய் கூறி கிளம்பினார், மரகதம்.
"தம்பி,நைட்க்கு சமைச்சு வச்சுட்டேன்..நான் கிளம்புறேன்..என்ன உதவி வேணுமுனாலும், தயங்காம கேளுங்க.."
"சரிங்க மா..இருங்க, நான் உங்களை, கொண்டு வந்து விடுறேன்.."
"இல்ல தம்பி,பரமேஷுக்கு போன் பண்ணிட்டேன்,வர்றேனான்.."
"ரொம்ப நன்றி மா..நீங்க செஞ்சது பெரிய உதவி,பெரியவங்க இல்லாத குறையை தீர்த்து வச்சுட்டீங்க.."
"இதுல என்ன இருக்கு தம்பி,மனுசருக்கு மனுஷன், சின்ன உதவி.."
"எங்களை பொறுத்த வரை, பெரிய உதவி ம்மா.."
அவர் புன்னகைத்து கொண்டார்.பிறகு, பரமேஷ் வந்ததும் இருவரும் கிளம்பி சென்றார்கள்.
அவனுக்கு காபி போட்டுக் கொண்டு வந்தாள், கீர்த்தி..
இருவர் மட்டும் இருக்கவும், மறுபடியும் அவளிடம் தயக்கம் வந்தது.
சமையல் அறைக்குள்ளேயே நின்றிருந்தாள்.
அதை கவனித்த பார்த்தி,அவளை சகஜமாக்கும் பொருட்டு,சமையல் அறைக்குள் சென்று,காபி குடித்த டம்ளரை வைத்து விட்டு,
"அடி அரைச்சு,அரைச்சு..
குலைச்சு குலைச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே!!
உன்னை நினைச்சு, நினைச்சு
இளச்சு, இளச்சு தவிச்சு ,தவிச்சு
கிடக்கும் என் மனமே!!
இள மானே மல்லிகையே,
நல்ல முக்கணி சர்க்கரையை,
அந்தி நேரம் வந்தா, ஓரம் கட்டி நிற்குறியே..!!
பட்டு பாயை போடட்டுமா??
புது பல்லவி பாடட்டுமா??
சிறு பூவே உன்னை தோளில் வச்சு ஆடட்டுமா.!!."
அவன் பாடலில் தோன்றிய நாணத்தையும், கன்ன சிவப்பையும் காட்டாமல், முதுகு காட்டி நின்றாள்..உதடு கடித்து, சகஜ நிலைக்கு வர முயன்றாள்.
அவள் தோள் தொட்டு திருப்பி,ஒரு விரலால்,அவள் முகம் நிமிர்த்திப் பார்த்தான்.
"என்னடா பொம்மு..இவ்ளோ வெட்கம்..உனக்கு அதெல்லாம் தெரியுமா..??"
அவன் கேள்வியில்,அவனை முறைத்தாள்.
"ஹ்ம்ம்..இதான் என் பொம்மு..நேத்துல இருந்து வேற யாரோ போல இருக்க.."
அவன் பேச்சில், நேற்றைய ஞாபகம் வர,மறுபடியும் முகம் சிவந்தது..
"போச்சு..மறுபடியும் வெட்கப்பட ஆரம்பிச்சுடாத..??"
அவளை அழைத்து கொண்டு ஹாலுக்கு வந்தான்.
"உனக்கு,சேலை மட்டும் தான் எடுத்தேன் டா.. நாளைக்கு சாயங்காலம் போய், சுடிதார்,நையிட்டி, எல்லாம் வாங்கிட்டு வரலாம்.."
"ஹ்ம்ம்..சரிங்க மாமா..வேலை பிடிச்சிருக்கா..??"
"ஹ்ம்ம்..இன்னிக்கு தானே முதல் நாள்.போக போக தெரியும்..எப்படி இருந்தாலும்,இதை விடுறதா இல்ல..பிரச்சனையை பார்த்து ஓடி ஒளிஞ்சா,அது எப்போவும் துரத்தும்..எதிர்த்து நிற்கனும்.. அப்போ தான்,போராடி ஜெயிக்க முடியும்னு புரிஞ்சுகிட்டேன்.."
அவன், எதை நினைத்து கூறுகிறான் என்று புரிந்தது.அவன் கைகளை எடுத்து,ஆதரவாய் அழுத்திக் கொடுத்தாள்.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.அவன் மனநிலையை மற்றும் பொருட்டு,
"என்ன போஸ்டிங் மாமா..??"
"குவாலிட்டி அசுரன்ஸ் மேனேஜர்.."
இரவு உணவு வேளை நெருங்கியது.
மரகதம் அம்மா சமைத்து வைத்த உணவை, இருவரும், மற்றவருக்கு பரிமாறிக் கொண்டு உண்டார்கள்.
உணவு முடித்ததும்,சமையல் அறைக்கு சென்று, எல்லாம் ஒழுங்கு செய்துவிட்டு,அவனுக்கு பால் கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலை வாங்கி கொண்டவன்..அவள் கை பிடித்து இழுத்து ,அருகில் அமர்த்திக் கொண்டான்.
பேபி பிங்க் வண்ண புடவையில்,அவன் முதல் முறை அவளை பார்க்கையில் இருந்தது போல,பார்பி டால் போல இருந்தாள்.
அவளை கண்களால் பருகினான், பார்த்தி.
அவன் பார்வையில் நெளிந்தவளை பார்த்து,
"இவள் ரதி என்னும் அழகியின் மகளா!!
அந்த ரவிவர்மன் வரைத்ததன் நகலா!!
அந்தி மயக்கத்தில் கவிதைகள் வருமா!!
இந்த கவிதைக்கு பரிசோன்று தரவா!!
அழகாக ஆடை கட்டி, கைகள் வீசி,
நிலவொன்று மண்ணில் வந்தது!!
இமை மூட நேரமின்றி போன போதும்,
கனவொன்று கண்ணில் வந்தது..!!
விண்ணில் போகும் வெள்ளை மேகம்,
பன்னீர் துவுதே!!
இன்பம் தன்னில், கண்ணகள் ரெண்டும், கண்ணீர் துவுதே..!!
வா, வா, வா, வானம் இங்கு தூரம் இல்லை!!
மனசுக்குள் உன்னையன்றி, யாருமில்லை!!
இதமான சங்கீதம், அது தானா உன் தேகம்!!
விரல் மேவும் பக்கம் எங்கும், ஏழு ஸ்வரம்..!!"
பாடலின் முடிவில், அவளை கைகளில் ஏந்திக்கொண்டு படுக்கை அறைக்கு சென்றான்.
அதன் பின் நமக்கு அங்கு என்ன வேலை,அவர்களை தனியே விட்டு கிளம்புவோம்..அவர்களுக்கு இடையூறு இல்லாமல்..