அத்தியாயம்-41
இரண்டு நாள் தங்கி விட்டு, மீனாட்சி கிளம்பி சென்றிருந்தார்..பகல் வேளைகளில், மாமி உதவியாய் இருந்தார் குழந்தைகளை பார்த்துக் கொள்ள,இரவில் பார்த்தி பார்த்துக் கொள்வான்..
அகிலாண்டத்தை, ஒரு வழி செய்து கொண்டிருந்தாள், கீர்த்தி..
அன்று காலையில்,
பார்த்தி, சீக்கிரமே கிளம்பி, கம்பெனி வேலையாய் சென்றிருந்தான்..
டைனிங் ஹாலில் கீர்த்தி,
"மாமி,மாமி…"
அவள் கத்தலில், அவசரமாய் வந்தார் மாமி..
"என்னடி மா.."
"காலையில, என்ன டிபன் செய்ய சொன்னேன்..நீங்க, என்ன செஞ்சுருக்கிங்க..??"
"இல்லடி மா..குழந்தே..அகிலா மா தான்.. இன்னிக்கு பூரி வேண்டாம்..இட்லி செஞ்சுடுன்னு சொன்னாங்க.."
"அவங்க சொன்னா, செய்விங்களா..??என்னை கேட்டு சொல்லுறேன்னு
சொல்ல வேண்டியது தானே..??"
மாமி, என்ன சொல்லுவது என்று தெரியாமல் விழித்தார்..
அப்பொழுது, அங்கு வந்த அகிலாண்டம்,
"என்னடி சத்தம் போடுற..??நான் தான் இட்லி செய்ய சொன்னேன்..இப்போ என்ன அதுக்கு??என் வீடு..என் விருப்பம்.."
"இது, உங்க வீடு மட்டும் இல்ல..என் வீடும் தான்.. சொல்ல போனா, எனக்கு தான் முதல் உரிமை..என் மாமியார் தான், முதல் மனைவி..இவ்ளோ நாள் அதிகாரம் பண்ணீங்க தானே..இப்ப, வயசான காலத்துல, கொஞ்சம் ஒதுங்கி, இளையவர்களுக்கு வழி விடுங்க..யானை மாதிரி, வழியை அடைக்காம.."
"யாரடி, யானைன்னு சொன்ன..??"
அப்பொழுது, அந்த பக்கம் வந்த பந்தை, எடுக்க வந்த மலர்விழியிடம்,
"பாப்பு, இது யாரு..??"
அகிலாண்டத்தை காட்டி கேட்டாள் கீர்த்தி,
"வெதை யாயை.."
"சூப்பர்,சூப்பர் பட்டு..சித்தி..உனக்கு சாக்கி தரேன்.."
"ஐ.. சாக்கி.."
சந்தோசமாய் கூறிவிட்டு சென்றது குழந்தை..
"அவ சொன்னது புரிஞ்சுதா..??உங்களை தான், வெள்ளை யானைன்னு சொல்லுறா..??"
வாய் மூடி சிரித்தாள், கீர்த்தி..
அவள் தான் சொல்லிக் கொடுத்து இருந்தாள், அக்கா மகளிடம்,முழு பயிற்சி, இவளிடம் பெற்று வளர்ந்தாள், மலர்..ஆர்த்தி, கடைக்கு செல்வதால்,இவள் பொறுப்பில் தான், குழந்தை.
முகம் சிவக்க, காதில் புகை வராத குறையாய்,
"ஏய்,யாருகிட்ட உன் வேலை எல்லாம் காட்டுற.. உன் மாமியாரே, என்னை பார்த்தா பயப்படுவா. நீ, நேத்து பெஞ்ச மழையிலே, இன்னிக்கு முளைச்ச காளான். என் கிட்டேயே துள்ளுரியா..??அடக்கி வாசி.."
"உஷ்..ஹப்பா.. ஏன் கத்துறீங்க..??பக்கத்துல தானே நிக்குறேன்..மெதுவா பேசுங்க..பிபி ஏறி, போய் சேர்ந்துறாதிங்க..அப்புறம் எனக்கு பொழுது போகாது.
என் மாமியார் அப்பாவி,நீங்க அடப்பாவி..அதான், அவங்க பயந்துட்டாங்க..
நான் அப்படி இல்ல..நீங்க யானைன்னா, நான் சித்தெறும்பு..காதுக்குள்ள போனேன்..சோலி முடிஞ்சது..பி கேர் ஃபுல் அத்தை.."
"ஏய்,ரொம்ப பேசாத டி.. என் விருப்பப்படி தான் இங்க எல்லாம் நடக்கும்.. பிடிச்சா இரு..இல்ல..புருஷனும் பொண்டாட்டியும், பொட்டி கட்டுங்க.."
"நாங்க ஏன் கட்டணும்..ரொம்ப பேசுனீங்க..உங்கள கட்ட வைச்சுடுவேன்..உங்க கடைல, உங்களுக்கு சமமான ஷார்ஸ், இப்போ என் பேர்ல..வீடும், என் மாமனார் கட்டுனது..சட்டப்படி, தாத்தா சொத்து, பேர பசங்களுக்கு,ஒரு கேஸ் போட்டேன்னு வைங்க..மொத்த சொத்துக்கள் மேலேயும்..
நீங்க அம்பேல்.கடைக்கு கூட, ஸ்டே வாங்கிட்டா.. அப்புறம் நீங்க, ஈ ஓட்டனும்..சொ..இனி, எல்லா இடமும், நான் வைச்சது தான் சட்டம்..
வருது வருது..விலகு விலகு..
வேங்கை வெளியே வருது.."
கோபமாய் மூச்சு விட்டார், அகிலாண்டம்.
"மாமி,இனி நான் சொல்லுறது தான், மூணு வேளையும், அப்புறம், மளிகை சாமான், காய் எல்லாம், என்னை கேட்டு வாங்குங்க..பணம் மட்டும், அத்தை கிட்ட வாங்கிகோங்க..பிகாஸ், அத்தைக்கு மரியாதை கொடுக்குற பொண்ணு நான்..அதுனால, உங்க பண பெட்டில கை வைக்கல அத்தை.
இவங்களுக்கு வேணா தனியா,இவங்க கேட்குற, காஞ்சியோ, கூலோ..செஞ்சு கொடுங்க..பெர்மிஷன் கிராண்ட்டட்.."
"யார் கிட்ட பேசுறோம்னு, தெரிஞ்சு தான் பேசுரியா..??என் கிட்ட, என் புருஷனே, இவ்ளோ தைரியமா பேச மாட்டார்..நான், அகிலாண்டேஸ்வரி டி.."
"நான் என்ன, எல்.ஆர். ஈஸ்வரி ன்னா சொன்னேன்..உங்க பேரை, நீங்களே சொல்லிக்கிட்டு, சீரியல் வில்லி மாதிரி காமெடி பண்ணாம..ஓரமா உட்காருங்க..கஞ்சி தர சொல்லுறேன்..குடிச்சுட்டு தூங்குங்க.."
"ஏய்..உன்னை.."
அப்பொழுது ஆரவ்,அங்கு வந்தான்.கூடவே ஆர்த்தியும்,
"பாரு டா ஆரவ்..இவ என்னை, கஞ்சி குடிச்சுட்டு, ஓரமா இருக்க சொல்லுறா.. என் வீட்டுல..என்னனு கேட்க மாட்டியா…??"
"ஏன் மா..கீர்த்தி..??"
'நல்ல கேட்குறீங்க டா, ஏன்னு..'
"அச்சோ,அத்தான்.. அத்தைக்கு பிபி,கொலஸ்ட்ரால், சுகர், எல்லாம் ஜாஸ்தி இருக்கு..அதான், பத்தியமா, கஞ்சி குடிச்சிட்டு, ஓய்வெடுங்கன்னு சொன்னா, அத்தை, தப்பா புரிஞ்சுகிட்டாங்க.."
"ஓ..அப்படியா மா.."
"ஆமாம் அத்தான்.."
"இல்ல டா.. அவ,பொய் சொல்லுறா.."
"கடைல கொஞ்சம் வேலை இருக்குமா..சாயங்காலம் வந்து கேட்குறேன் மா.."
வேகமாய் சாப்பிட்டு விட்டு,கிளம்பினான்..கூடவே ஆர்த்தியும்..
தினமும் பஞ்சாயத்து வந்தால், அவனும் என்ன செய்வான்..இரண்டு பேரை பற்றியும் தெரியும் அவனுக்கு,அதனால், பொதுவாய் பேசி விட்டு, கிளம்பி விட்டான் வழக்கம் போல..
"சதிகாரி, என் பிள்ளைங்க ரெண்டு பேரையும், எனக்கு எதிரா திருப்பிட்டா.."
"ஆமாம், இவங்க ஆளும் கட்சி..நாங்க எதிர் கட்சி..இவங்க பிள்ளைங்களை,என் கட்சில சேர்த்துட்டோம்..போவீங்களா.."
"இருடி, உன்னை பார்த்துக்குறேன்.."
"பாருங்க,பாருங்க..உங்களுக்கு ஞாபகம் இருக்கா, அரூ மாசமா இருந்தப்போ, கிருஷ்ணா ஜெயந்தி அன்னைக்கு, ஹாஸ்பிடல்ல கிடந்திங்கல்ல.."
சற்று யோசித்தவர்,
"ஆமாம் அதுகென்ன..??"
"அதுக்கு, நான் தான் காரணம்.."
அதிர்ந்து நின்றவரிடம்,
"இனியும், ஏதும் அழும்பு பண்ணா, பேதி மாத்திரை எல்லாம் கலக்க மாட்டேன்..நேரா, சைநட் தான்..அப்புறம், என் மாமனார் மாமியாரை மீட் பண்ணலாம் நீங்க.."
வாய் அடைத்து நின்றார், அகிலாண்டம்..
"ஓ..சாரி, சாரி.. அவங்க, சொர்க்கத்துல இருப்பாங்க..உங்களை அங்க விட மாட்டாங்கல்ல.. அங்கயாவது அவங்களை சந்தோசமா இருக்க விடுங்க.."
"மாமி,நான் சொன்னது கேட்டுச்சா..
இனி எல்லாம், என் முடிவு கேட்டு செய்யுங்க..அப்புறம், நான் சாப்பிடும் முன்,இவங்களுக்கு கொடுங்க..பிகாஸ், இவங்களை நம்ப முடியாது..கேடி, எதுவும் கலந்துட்டா.. அதுனால, டெஸ்ட் ராட்.. இல்ல இல்ல..யானை இவங்க..சாப்பிட்டதும் நான் சாப்பிடுறேன்.."
சொல்லிவிட்டு, மாடிக்கு சென்றாள்..
இப்படி, ஒவ்வொரு நாளும், பொழுதை ரணகளம் ஆக்கினாள்,அகிலாண்டதுக்கு..
அவரும், பிள்ளைகள் சப்போர்ட் இல்லாமல்,ஒன்றும் செய்ய முடியாமல், அடக்கி வசித்தார்..கடுப்புடன்..
ஆரவ், முன் போலவே, இவரை எதிர்த்து பேசுவதில்லை..அதே நேரம், நழுவும் மீனாகி இருந்தான்..
பார்திக்கு, பொழுது எப்பொழுதும் வெளியே கழிவதால், வீட்டு அரசியல் தெரியவில்லை..
ஆறு மாதம் கடந்தது..
மறுநாள், கம்பெனி திறப்பு விழா..அதற்கு மறுநாள், புது வீடு கிரக பிரவேசம்..வைத்து இருந்தான்..
மறுநாள், அனைவரும் கிளம்பி சென்றனர். கம்பெனி திறப்பு விழாவுக்கு..அகிலாண்டத்தை தவிர.. அவரை அழைத்தாலும் வர மாட்டார் என தெரிந்து..சத்தமில்லாமல் கிளம்பி சென்றான், ஆரவ்..
தடுக்க முடியாமல் நின்றார், அகிலாண்டம்..சொன்னால் தானே, போகாதே என்று சொல்வதற்கு..சொல்லாமல் செல்பவனிடம், என்ன செய்ய முடியும்..
நல்ல படியாக, ஒரு மந்திரியை கூப்பிட்டு, கம்பெனியை திறந்து,ரேணுகா, கீர்த்தி, இன்னும் சில முக்கிய பெண்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்..
கேசவனும் மீனாட்சியும், வந்திருந்தார்கள்..
அன்றைய விழா, நல்ல படியாய் முடிந்தது..
மறுநாள், புது மனை புகு விழாவும் சிறப்பாய் முடிந்தது..
ஆகாஷ்,தணிகா,ரேணுகா, எல்லோரும் இருந்து, விழாவை முடித்து விட்டே கிளம்பினர்..
புது வீட்டுக்கு குடி புகுந்தர்கள், பார்த்தி,கீர்த்தி..
மாமியையும் கூட்டி கொண்டாள், அவளுடன், குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று..
மலரையும், ஆரவ் தினமும் இவர்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு, கடைக்கு சென்றான்..
அகிலாண்டம், நிம்மதி பெரு மூச்சு விட்டார்..கீர்த்தி சென்றதால்.
அப்படி எல்லாம் விட்டு விடுவேனா என்று, மறுநாள் கடைக்கு வந்தாள், நிர்வாகம் பார்க்க..
அகிலாண்டத்தின் முடிவில் எல்லாம் தலையிட்டு, தலை வலி வர வைத்தாள்..
அவர் சொல்வது சரியான முடிவென்றாலும்,அவரை தலையால் தண்ணி குடிக்க வைத்தே, சரி என்று கூறுவாள்..
போர்டு ஆப் டைரக்டர்ஸ் மீட்டிங் என்றால், அனைவரும், இவர்கள் வாக்குவாதத்தை எதிர் பார்த்து வரும் அளவுக்கு..இவர்கள் (விதண்டா)(வி)வாதம், சுவாரசியம் கொடுத்தது, அனைவர்க்கும்..
பார்த்தியின் கம்பெனியும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய், வளர்ந்தது..
மூன்று வருடங்களுக்கு பிறகு,
மாதுவுக்கு, திருமணம் ஆகி இருந்தது..பெண்ணும் திருச்சியே....
திருமணத்தை, முன் நின்று நடத்தினார்கள், பார்த்தியும்,கீர்த்தியும்..
பரமேஷ்க்கும்,ஆகாஷ்க்கும், திருமணம் ஆகி இருந்தது..அனைத்து திருமணத்திற்கும் சென்று,
சிறப்புற நடத்தி வந்தார்கள், பார்த்தி,கீர்த்தி தம்பதியர்..
பார்த்தியின் புதல்வர்கள் இருவருக்கும், சிற்சில வித்தியாசம் மட்டுமே, உண்டு..
அது, பார்த்தி கீர்த்தி இருவருக்கு மட்டுமே புரியும்..மற்றவர்களுக்கு, அவர்கள் புரியாத புதிர் தான்..
கூட இருந்து, அவர்களை வளர்க்கும் மாமியே, பல நேரம் குழம்பி விடுவார்..
"ஏன்டா தருண்.. நோக்கு இப்போ தானே லட்டு தந்தேன்..திரும்ப கேட்குற..ஒரு நாளைக்கு, ஒன்னு தான்.."
"பாத்தி மாமி..அது, நான் இல்ல..நான் வருண்..எனக்கு நீங்க தரவே இல்ல.."
"ஓ..அப்படியா டா குழந்தை..சரி இந்தா.."
"அச்சோ, பாத்தி மாமி..அவனுக்கு எதுக்கு ரெண்டு லட்டு கொடுத்திங்க..??நான் தான், வருண்.."
"அட படுவா, என்னை ஏமாத்திட்டானே..இந்த புள்ளையாண்டான்.."
"சரி,சரி..எனக்கும், ரெண்டு லட்டு கொடுங்க..??"
"எதுக்கு டா..??"
"அவனுக்கு மட்டும் ரெண்டு..எனக்கு ஒன்னா..??
ரெண்டு வேணும்.."
"ரெண்டும், ரெட்டை வாலுங்க..பார்க்க தான் பார்த்தி மாதிரி..குணம் முழுக்க கீர்த்தி மாதிரி..இந்தா பிடி..ஓடு.."
அங்கு மாடியில்,
லேப்டாப்பில், கம்பெனி வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் பார்த்தி..
கொஞ்ச தூரம் தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்து ,ஆர்த்தியோடு போனில் பேசிக் கொண்டிருந்தாள், கீர்த்தி..
"அந்த பூசணி சொல்லுச்சா..அப்போ, ஒத்துக்க முடியாது.."
"ஏய்,ஏண்டி படுத்துற..அவங்க சொன்னாங்கன்னு, ஒரே காரணத்துக்காக, இப்படி செய்யாத டி.. ஒத்துக்கோ டி.. இதுனால, கடைக்கு வியாபாரம் கூடும் டி.. உன்னை கெஞ்சி கேட்குறேன்..நாளைக்கு மீட்டிங்ல, சம்மதம் சொல்லு.."
"ஹ்ம்ம்…"
"என்னடி யோசிக்குற..??"
"ச்செய் …சும்மா நை நைன்னு பேசாத,யோசிக்க விடு.."
"எல்லாம் என் நேரம்..யோசி டி.. மா..யோசி.."
அப்பொழுது, அங்கு வந்த அவள் தவபுதல்வர்கள் இருவரும்,
"அம்மா..இவன், என் பென்சில் பாக்ஸ் தூக்கிட்டு, தர மாட்டேங்குறான்.."
"எனக்கு வேணும் இது, தர மாட்டேன்.."
"டேய்,ரெண்டு பேரும்,உங்க பஞ்சாயத்துக்கு, உங்க அப்பா கிட்ட போங்க..அம்மா, முக்கியமான போன் கால் பேசுறேன்..உங்க அப்பா தான், வெட்டியா இருக்கார்.."
'அடிப்பாவி..அக்கா கூட வெட்டி அரட்டை அடிச்சுக்கிட்டு, இவ வேலையா இருக்காளாம்..நான், வெட்டியா இருக்கேனாம்..கால கொடுமை நாராயணா..'
"அப்பா..இவன்.."
"டேய்,உங்களுக்கு தான், ஆளுக்கு ஒரு பாக்ஸ் வாங்கி கொடுத்தேன் இல்ல..இப்போ ஏன் அடுத்தவன் பாக்ஸ் அஹ் எடுக்குறீங்க..??"
"எனக்கு, பிங்க் தான் பிடிச்சிருக்கு..என்னோட ப்ளூ கலர் பிடிக்கல.."
"நான் என் பிங்க் பாக்ஸ் அஹ் தரமாட்டேன், குடுடா.."
இரண்டு பேரும், உருண்டு புரள ஆரம்பித்தார்கள்..
"டேய், டேய், எழுந்திரிங்க டா.. ஏன்டா, இந்த பாடு படுத்துறீங்க..இனிமே ரெண்டு பேருக்கும், ஒரே கலர் அஹ் வாங்கி கொடுக்குறேன்..இப்போ போய், சண்டை போடாம விளையாடுங்க.."
ஒரு வழியாய் சமாதானபடுத்தி அனுப்பி வைத்தான்..
போன் பேசி முடித்து, எழுந்து வந்தாள் கீர்த்தி.
இவன் அருகில் அமர்ந்தாள்.
"ஏண்டி, பெத்தது தான் பெத்த, ரெண்டும் பொண்ணா பெத்துருக்க கூடாது..இவனுங்க கூட போராட முடியல..தினமும் ஒரு சண்டை போடுறாங்க.."
"அதான், அடுத்து பெத்து தர போறேன் தானே.."
மேடிட்டு இருந்த தனது ஆறு மாத வயிற்றை தடவிய படி கூறினாள்..
புன்முறுவலோடு, அவளை பார்த்தான் பார்த்தி.
இந்த குழந்தை உருவாகி, முதல் ஸ்கேன் எடுக்க போன போது ஏற்பட்ட அனுபவம்.. இப்பொழுதும் நினைக்கும் போது, மென்னகை தோன்றும் இவனுக்கு..
ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர்,
"ஹ்ம்ம்…எல்லாம் நார்மல்..பேபி இஸ் பைன்.."
"எத்தனை குழந்தை டாக்டர்..??"
அவளை நிமிர்ந்து பார்த்த டாக்டர்..
"ஒன்னு தான் மா.."
"எங்களுக்கு, முதல்ல ட்வின்ஸ் டாக்டர், அதான் கேட்குறா.."
"ஓ…"
"நல்லா, பார்த்து சொல்லுங்க..டாக்டர்..ஒன்னு தானா..??"
அவளை ஒரு மாதிரியாய் பார்த்த டாக்டர்,
"ஒன்னு தான் மா...நான் சொன்ன இன்ஸ்டரக்சன்
அஹ் பால்லொவ் பண்ணுங்க.."
வெளியே வரும் போது, அவள் முகம் சோர்ந்து போய் இருந்தது..
"என்னாச்சு பொம்மு..??"
"மாமா..இந்த டாக்டர் சரி இல்ல..வாங்க மாமா, இன்னொரு நல்ல டாக்டர் அஹ் பார்ப்போம்.."
"உங்க அக்காக்கு பிரசவம் பார்த்த டாக்டர் இவங்க..பெரிய டாக்டர். இவங்க சரி இல்லியா..??"
"பின்ன, ஒரு குழந்தைன்னு சொல்லுறாங்க.."
முகத்தை தூக்கியவளை நினைத்து,இப்பொழுதும் சிரிப்பு வந்தது..
அதை நினைத்து, இப்பொழுதும் சிரித்தான்..
"என்ன மாமா..நீங்களா சிரிக்குறிங்க..??"
அவளை,இன்னும் அருகில் அமர்த்திக் கொண்ட பார்த்தி,அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
"தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே!!
தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே!!
இது, வேறாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே!!
யாராலும் படிக்காத மங்கல ராகமே!!
வண்ண, வண்ண வளவி போட்டு
வசமாக வளைச்சு போட்டு,
என்னை கட்டி இழுத்து போகும், இளந்தேகமே!!
கூரப்பட்டு களைஞ்சிடாம,
குறை ஏதும் நடந்துடாம
ஆசைப்பட்டு அணைக்க வேண்டும் மகராசனே!!
முன்னே பின்னே அறிஞ்சதில்லை
முறையாக தெரிஞ்சதில்லை
சின்ன சின்ன தவறை நீயும் பொருத்தாக வேணுமே!!
புத்தகத்தில் படிக்கவில்லை, புரியாமல் நடிக்கவில்லை,
வித்தைகளை வெவரமாக, வெளியாக்க வேணுமே!!
இந்த மேனி, இன்ப தோனி
ராணி, இந்த ராணி
இந்த ராஜனோட விருப்பமே!!
முத்து நவ ரத்தினத்தோடு, முழுசான லட்சணத்தோட,
மெத்தையில நானும் கூட, வரவேண்டுமே!!
முன்னம் ரெண்டு பவளத்தோட, முன் வாயில் மதுரத்தோட!!
கண்ணனுக்கு, காதல் விருந்து தரவேண்டும் நீ!!
தொட்டு தொட்டு, சுகமும் கூட சுதியோடு கலந்து பாட,
விட்டு விட்டு விலகி ஓடா, முடியாமல் போகுமே!!
கொத்து மல்லி கொண்டையில் ஆட
குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட
புத்தம் புது செண்டுகள் ஆட
புது தாகம் தோணுமே!!
மெல்ல ராசா, சொல்லு லேசா
ராசா இந்த ராசா
இந்த ராணியோட பொருத்தமே!!"
அவன் பாடலில் மயங்கி, அவன் தோளில் சாய்ந்தாள் பாவை..அவன் தோள், என்றும் அந்த பாவைக்காக.. இந்த சந்தனம், என்றும் பார்த்திக்காக..
அவர்கள் பல்லாண்டு காலம் இன்று போல என்றும் இன்புற்று வாழ, இறைவனை வேண்டிக் கொண்டு, விடை பெறுவோமாக..
சுபம்..