கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-5

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-5

"புருஷன் பொஞ்சாதி, பொருத்தம் தான் வேணும்!!
பொருத்தமில்லாட்டி, வருத்தம் தான் தோணும்!!
அமைஞ்சா அது போல, கல்யாணம் பண்ணு!!
இல்ல நீ வாழு, தனி ஆளா நின்னு!!
முதலில் யோசிக்கணும், பிறகு நேசிக்கணும்!!

மனசு ஏத்துகிட்டா, சேத்துகிட்டு வாழு!!
உனக்கு தகுந்த படி, குணத்தில் சிறந்த படி,
இருந்தா, ஊறரிய மாலை கட்டி போடு!!
சொத்து, வீடு ,வாசல் இருந்தாலும்,
ஏய்!! சொந்தம், பந்தமெல்லாம் ,அமைஞ்சாலும்
அட, உள்ளம் ரெண்டும் ஒட்டா விட்டா
கல்யாணம் தான் கசக்கும்!!.

அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் முழுக்க கேட்டுக்கும் படி, வெளியே ரெகார்டில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
உள்ளே, நிச்சய விழா நடந்து கொண்டிருந்தது.தான் தேர்ந்தெடுத்த பாட்டை தான் போடுகிறார்களா?? என்று கவனித்து கொண்டே, நிச்சய விழாவில் நின்றிருந்தாள் கீர்த்தி.

அழகிய ஆகாய வண்ண, பாவாடை தாவணியில், அதற்கு தகுந்த குந்தன் செட் நகைகளுடன்,வானத்து தேவதை இறங்கி வந்தது போல ஜொலித்தாள்.
நிச்சய பட்டு மணமகள் கையில் கொடுக்கப்பட்டு,அதை மாற்றி வர சொல்லி, ஆர்த்தி அனுப்பபட்டாள்.
சிறிது நேரத்தில் மாற்றி வந்து, மணமேடையில் ஆரவின் பக்கத்தில் அமர வைக்கப்பட்டாள்.

நிச்சயபத்திரிக்கை வாசிக்கபட்டு,நிச்சயதாம்பூலம் மாற்றிக்கொள்ளபட்டது.
அகிலாண்டேஸ்வரி தன் பெரிய மகனையும், மருமகளையும் முன்னிறுத்தி தட்டை வாங்கிக்கொள்ள செய்தார்.

பின், மணமக்கள் இருவர் கையிலும் மோதிரம் கொடுத்து ,மாற்றிக்கொள்ள சொல்லப்பட்டது.
ஆர்த்தியின் கையை அழுந்தப்பற்றி, மோதிரத்தை போட்டான் ஆரவ்.அவள் கைகளை பிடித்தபடி, விரல்களால், அவள் உள்ளங்கையை வருடி குறுகுறுபூட்டினான்.

தள்ளி நின்று பார்ப்பவர்களுக்கு, அவன் மோதிரம் போடுவது மட்டுமே தெரியும்.
அவன் சீண்டலில், ஆர்த்தி கூச்சத்தில் நெளிந்தாள்.அருகில் நின்ற கீர்திக்கு மட்டும் இவன் சீண்டல் புரிந்தது.

"அத்தான், உங்க அம்மா முறைக்குறாங்க"
என்று மென்குரலில் கூறினாள்.

உடனே பதறி, ஆர்தியின் கையை விட்டு ,இரண்டடி பின்னால் நகர்ந்தான்.
கீழே அமர்ந்திருந்த ஐயர் மேல் மோதி, தடுமாறி,சமாளித்து நின்றான்.பிறகு, தன் அன்னையின் பக்கம் பார்வையை திருப்பினான்.அவர், ஒரு உறவுக்கார பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

நிம்மதி பெருமூச்சு விட்டு, கீர்த்தியின் புறம் திரும்பி முறைத்தான்.
கீரித்தி, அவனை பார்த்து அலகு காட்டி விட்டு, குனிந்து கொண்டாள்.
ஆர்த்தி, வந்த சிரிப்பை அடக்க, முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டாள்.

அவன் கடுப்பு தெரியாமல், ஐயர் வேறு,
"மாப்பிள்ளை,தெளிவா இருக்கேளா, இல்லியா??பார்த்து நில்லுங்கோ."
என்று சலித்துக்கொண்டார்.

பின் ஆர்த்தி,அவனுக்கு மோதிரத்தை அணிவித்து விட்டாள். எந்த சேட்டையும் செய்யாமல் நல்ல பிள்ளையாய் நின்றான்.
நிச்சயம் முடிந்து, அனைவரும் உணவருந்த சென்றார்கள்.

பொண்ணும், மாப்பிள்ளையும் சாப்பிட செல்லும்போது ,அகிலாண்டம் வந்து,

"நாளைக்கு ரெண்டு பேரும் ஒண்ணா உக்கார்ந்து சாப்பிட்டுக்கலாம்.,இப்போ, அண்ணா பக்கத்துல போய் உக்காரு"

என்று ஆரவை, ஆதவ் உடன் அனுப்பி வைத்தார்.

'வடை போச்சே….'
முகபவத்தோடு சென்றான் ஆரவ்.

'இதோட வில்லத்தனம் ஸ்டார்ட்ஸ்'
கீர்த்தி தான் ,வேற யாரு…

ஆர்த்தியும்,கீர்த்தியும் அருகில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.கீர்த்தி இலையை பார்க்காமல்,சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

அவளை கவனித்த ஆர்த்தி,
"யாரடி பார்க்குற??"

"ஹ்ம்ம்..என் ஆள காணும்…"

"ஏது…உன் ஆள??யாருடி??"

"ச்சு.. ஷாக் அஹ் குறை…உன் சின்ன கொழுந்தனை தான். வந்ததுல இருந்து பார்க்குறேன்,கண்ணுல சிக்க மாட்டேங்குறான்"

"அடி வாங்க போற..யார் காதுலையாவது விழ போகுது.பேசாம சாப்பிடு."

"இருடி,இங்க வம்பு பேசனே, சில பேர் வருவாங்க.அவங்க மூலம் ஏதும் நியூஸ் கிடைக்குத்தானு பார்ப்போம்."

"உன் போக்கே சரி இல்ல..ஒழுங்கா இரு."

"அத்தான், உன் கையை பிடிச்சு இழுத்தாரே, அது பத்தி பேசுனேனா?? நீயும் இதை கண்டுகாதா."

"என்னாது??கையை பிடிச்சு இழுத்தாரா??இது எப்போ??"

"மோதிரம் போடும்போது…"

"அம்மா,தாயே..புது புரளி ஏதும் கிளப்பிடாத.. நீ யாரை வேணாலும் தேடு.."

"ஹ்ம்ம்…அது..அந்த பயம் இருக்கனும்…"

"எல்லாம் என் நேரம்…"

"சரி, சரி ,சீக்கிரம் சாப்பிடு..அப்புறம், இம்புட்டு நேரம் சாப்பிடக்கூடாதுன்னு..வெள்ளை பூசணி இலையை புடிங்கிடும்.."

"ஆண்டவா…"

என்று விட்டு, ஆர்தி சாப்பிடும் வேலையை தொடங்கினாள்.
கொஞ்ச நேரத்தில் ,மண்டபம் காலியாகி, அங்கொன்றும் ,இங்கொன்றும் என்று ஆட்கள் அமர்ந்திருந்தார்கள்.

பலர் மறுநாள் வருவதாய், சென்றிந்தார்கள்.சில சொந்தங்கள் ,தூங்க சென்றிந்தார்கள்.சில சொந்தங்கள், அங்கங்கே உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆர்த்தி, மணமகள் அறைக்கு சென்று விட்டாள்.மீனாட்சியும்,கேசவனும், மறுநாளுக்கு தேவையான பொருட்கள்,தாம்பூலம் எல்லாம் சரி பார்க்க, இன்னொரு அறையில் இருந்தார்கள்.

கீர்த்தி பொழுது போகாமல், ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.அதற்கு இரண்டு வரிசை முன்னே, அகிலாண்டமும், இன்னொரு பெண்மணியும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

"எங்க,பார்த்தியை காணும் அகிலா??"

"அவன் எங்க தொலைஞ்சானோ, யாருக்கு தெரியும்."

"என்ன..இப்படி சொல்லுற??அண்ணன் கல்யாணத்துக்கு, தம்பி வர்றதில்லையா??மூத்தாள் பிள்ளைன்னு, இப்படியா விடுறது.அம்மா,அப்பா இல்லாத பிள்ளை.நீ தானே பார்த்துக்கணும்."

"நான்,என்ன பண்ணுறது அத்தை, அவன் சொன்ன பேச்சு கேக்குற பிள்ளையா??,நாங்க கிளம்புற நேரம், எங்கயோ போய்ட்டான்.நல்ல நேரத்துக்குள்ள கிளம்பணும்னு,நாங்க வந்துட்டோம்."

"அதுக்காக??சரி,இப்போ ஒரு போன் பண்ணி வர சொல்லலாம்ல.உன் பிள்ளைக யாரையாவது கூப்பிட்டு ,போன் பண்ண சொல்லு."

"கூப்புடுறேன் அத்தை. நீங்க இருங்க.ஒரு வேலை இருக்கு வரேன்."
என்று எழுந்து, அவ்விடம் விட்டு அகன்றார்.

அந்த அத்தை கொஞ்சம் வயதானவர்,கணவன் வழி சொந்தம்.அதனால் தான், அவரை எதிர்த்து பேசமுடியாமல்,பதில் சொல்லிவிட்டு சென்றார் அகிலாண்டம்.

'ஓ..நம்மாளு பேரு பார்த்தியா??முழு பேர் என்னவா இருக்கும்??அவரை பத்தி பேசுனாலே,இந்த பூசணி தெறிச்சு ஓடுது.'

இப்பொழுது அந்த அத்தையின் பக்கத்தில், இன்னொரு பெண்மணி அமர்ந்தார்.

"என்ன பெரியம்மா??இன்னும் தூங்கலியா.."

"தூங்கனும் டி மா…இந்த அகிலா பண்ணுற அநியாயத்தை பார்த்தியா??.அந்த பிள்ளையை வீட்டுல தான் ஒழுங்கா நடத்தலைன்னா, கல்யாணத்துக்கு கூட, கூட்டிட்டு வரல.எல்லாம் இந்த பர்வதம் பண்ண வேலை.இவளை பிடிச்சு மகனுக்கு கட்டி,அவ போய்ட்டா.இவ, இந்த பாடுபடுத்துறா,அந்த பிள்ளையை."

"நான் சம்யு கிட்ட கேட்டேன் பெரியம்மா,கல்யாண விஷயத்தையே, பார்த்தி கிட்ட சொல்லலியாம். யாரையும் சொல்ல கூடாதுன்னு சொல்லிடுச்சாம்.என்னத்தை சொல்லுறது.நமக்கு எதுக்கு ஊர் வம்பு,வாங்க தூங்க போலாம்."

இவ்ளோ நேரம் வம்பு பேசிவிட்டு,ஏன் வம்பு என்று வேறு கேட்டுவிட்டு, அங்கிருந்து அகன்றார்கள் இருவரும்.

அதன் பிறகு, இவள் மணமகள் அறைக்குள் சென்றாள்.
அங்கு ஆர்த்தியும், இன்னும் இரண்டு பெண்மணியும் இருந்தார்கள்.ஆர்த்தி, மொபைலை கையில் வைத்து கொண்டு,ஆரவ் அனுப்பும் மெசேஜ்களுக்கு, பதில் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

தங்கை வந்து கொஞ்சநேரம் ஆகியும் சத்தமில்லாததால், நிமிர்ந்து பார்த்தாள் ஆர்த்தி.
எதையோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள் கீர்த்தி.முகத்தை உம்மென்று வைத்திருந்தாள்.

உறவு பெண்கள் இருந்ததால், எதுவும் கேட்காமல் மொபைலில் கவனத்தை செலுத்தினாள்.

சிறிது நேரத்தில் மீனாட்சி வந்து,
"அக்கா,நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் அங்க வாங்க..ஏதோ சீர் அடுக்கணுமாம்."
என்று அழைத்து சென்றார்.

போகையில்,
"நாளைக்கு விடிகாலை முகூர்த்தம்.சீக்கிரம் தூங்குங்க ரெண்டு பேரும்."
என்று கூறிவிட்டு சென்றார்.

அவர்கள் சென்றதும்,
"ஏண்டி, உம்முன்னு இருக்க??"

"இந்த பூசணி,ரெம்ப மோசம் டி, இந்த சித்தி கொடுமை எல்லாம்,கதை,சினிமால தானே பார்த்துருக்கோம்.இது, அதை விட மோசமான சித்தி போல.."

இவள் புலம்பிவிட்டு,பதிலுக்காக ஆர்த்தி முகம் பார்த்தாள். அவள் கவனம் எங்கே ,இங்கு இருந்தது.அவள் மொபைலை, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதில் கடுப்பான கீர்த்தி, அவள் கையில் இருந்து மொபைலை பறித்தாள்.

"ஏய்!!ஏண்டி??அதை கொடுடி.."

"இங்க ஒருத்தி, கரடியா கத்திட்டு இருக்கேன்.நீ கடலை வறுத்துட்டு இருக்க"

"எனக்கு, கரடி பாஷை எல்லாம் தெரியாது."

"ஜோக் அஹ்..ஈ….சிரிச்சுட்டேன் போதுமா??இன்னிக்கு விட்ருந்தா,உன் ஆளு, ஐயர் மடில உக்காந்து, டூயட் பாடி இருப்பார்.அவ்ளோ பயம் அம்மாக்கு.இந்த லட்சணத்துல, கடலை வறுக்குறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை"
என்று உதட்டை சுளித்தாள்.

"இப்போ ஏண்டி,இவ்ளோ கோவம்.."

"ஹ்ம்ம்..வேண்டுதல்..அம்மா தூங்க சொன்னாங்கல்ல..போய் தூங்கு."

அவளை பாவமாய் பார்த்த ஆர்த்தி,
"ப்ளீஸ் டி, மொபைல் தாடி.. ஒரு குட் நைட்..சொல்லிக்கிறேன்."

"அதை,நாளைக்கு நைட் நேரடியா சொல்லிட்டு.தூங்குங்க.."

"என் செல்லமில்ல…"

"இல்ல..இப்போ நீ தூங்கலை.. கேஸுவை கூட்டிட்டு வந்துடுவேன்."

'இவளை நம்ப முடியாது.செஞ்சாலும் செய்வா'
என்று நினைத்துக்கொண்டு, முகத்தை சுளித்துக் கொண்டு படுத்தாள்.

இங்கே மெசேஜ் டோன், டொயின்,டொயின் என்றது.

"தூங்குடா.. என் டோமாட்டோ.."
என்று மெசேஜ் அனுப்பிவிட்டு,போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு படுத்தாள்.
ஆரவ் முகம் எப்படி இருக்கும்?? இதை பார்த்த பின்பு, என்ற கற்பனையில், பொங்கிய சிரிப்பை அடக்கி விட்டு தூங்கினாள்.

மறுநாள் அழகாக விடிந்தது.
அதிகாலை முகூர்த்தம் என்பதால்,மண்டபம் விடியலிலேயே,பரபரப்புடன் காணப்பட்டது.

அரக்கு நிற பட்டுடுத்தி, ஆர்த்தி, அப்சரஸ் போல காட்சி அளித்தாள். அதற்கு தகுந்த மணப்பெண் அலங்காரத்தில்,அழகுநிலைய பெண்களின் கைங்கர்யத்தில், ஜொலித்தாள்.

கீர்த்தியும் ,கருநீல பாவாடை, பேபி பிங்க் தாவணியில், அழகோவியமாய் திகழ்ந்தாள்.

"மாலைகள் இடம் மாறுது, மாறுது
மங்கள நாளிலே!!
மங்கையின் தோள்களை கூடுது, கூடுது ஆனந்தமாகவே,
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்!!
தங்குக,தங்குக என்றென்றும் !!
மங்களம், மங்களம், மங்களம்…!!"

மண்டபத்தின் வெளியே பாடல் ஒலிக்க,உள்ளே ஆரவ் தன் கைகளால், மங்கள நாணை, ஆர்தியின் கழுத்தில் பூட்டி ,அவளை, தன்னில் சரி பாதி ஆக்கிக்கொண்டான்.

உறவினர்களின் ஆசிகளுடன், நண்பர்கள்,தோழிகளின், கிண்டல் ,கேலிகளுடன் அவர்கள் திருமணம் இனிதே முடிந்தது.
அதன் பிறகான சடங்குகள் முடிந்து,மணமக்கள், மணமகன் இல்லத்துக்கு செல்ல தயாரானார்கள்.

புறப்படும் நேரம், ஆர்த்தியும்,கீர்த்தியும் கட்டிப்பிடித்துக்கொண்டு, அழுது தீர்த்துவிட்டார்கள்.
இவ்வளவு நாள், ஒருவருக்கொருவர் என்று இருந்து விட்டு, பிரிவதை நினைத்து, இருவருக்கும் வருத்தம் தாளவில்லை.

மீனாட்சியும், அவர்களுடன் கண்ணீரில் கரைந்தார்.கேசவனுக்கு கூட கண்கள் கலங்கியது.
உறவு பெண்கள், அனைவரையும் சமாதானப்படுத்தி விட்டு ,ஆர்தியை, ஆரவ் வீட்டினருடன் அனுப்பி வைத்தார்கள்.

ஆர்த்தியுடன், மீனாட்சியின் அண்ணனும்,அண்ணியும் சென்றார்கள்.
அன்று, மாப்பிள்ளையின் வீட்டில் தங்கி இருந்து விட்டு, மறுநாள் பெண்ணையும்,மாப்பிள்ளையையும் மறுவீட்டிற்கு அழைத்து வருவதற்காக.

மறுநாள் வந்த ஆர்தியை,மீனாட்சி தனியே அழைத்து சென்றார்.அவர்கள் பின்னோடு சென்ற கீர்த்தியை,

"நீ ஏண்டி,இப்போ பின்னாடி வர்ற??அங்க போய்,சமையல் தயாரானு கேளு போ."

"அதெல்லாம் எப்போவோ ரெடி,நானே ரெண்டு டம்ளர் பாயசம் குடிச்சுட்டு தான் வரேன்.செம்ம டேஸ்ட்.என்னை எதுக்கு நீ, இப்போ துரத்துர??"

"சும்மா..கேள்வி கேட்காம…போய்.. பெரியம்மா கூட உக்காரு…ஆளு தான் வளர்ந்துருக்க.ஒரு கூறும் இல்ல."

"வேற ஒன்னும் இல்ல..வளர்ப்பு சரி இல்ல…"

"அடி கழுதை.."

என்று கை ஓங்கியவரிடம் இருந்து தப்பித்து, ஹாலில் தஞ்சமடைந்தாள்.
அங்கு ,ஒரு உறவினரோடு அமர்ந்து, ஆரவ் பேசிக்கொண்டிருந்தான்.

"அப்புறம்..அத்தான் எப்படி இருக்கீங்க.??"

'இவ.. கொஞ்சம் டேஞ்சேர் ஆச்சே…எதுக்கு இப்போ பேச்சு கொடுக்குறா??'

அவளை சந்தேகத்துடன் பார்த்தான் ஆரவ்.

"என்ன அத்தான், கேள்வி கேட்டா, பதில் சொல்லாம, ஆந்தை மாறி முழிக்குறீங்க.."

இதானே ஸ்டார்டிங்…

"நேத்து தானே பார்த்த, அப்புறம் என்ன??"

"இல்ல..நேத்து நீங்க வெறும் ஆரவ்..இன்னிக்கு, மிஸ்டர் ஆர்த்தி. அதான், ஒரு பாசம்…"

"ஹ்ம்ம்…நல்லா இருக்கேன்…"

"அப்புறம்…நீங்க இங்க பிரீ பேர்ட்,நல்லா சாப்டலாம்,தூங்கலாம்,அப்புறம், ஆர்தியை கூட சைட் அடிச்சுக்கலாம்".

கடைசி வரியை மட்டும், சற்று மெதுவாக சொன்னாள்.

"உன்னை…??"

"போகையுல கண்ணு முழி வேணுமுன்னா…,ஆர்த்தியோட நிறுத்திக்குங்க…கண்ணு முழி பத்திரம் அத்தான்.."

அத்தனை பற்களையும் காட்டி, புன்னகைத்து சொன்னாள்.

'ஆத்தி…'
இதுக்கு மேல வாயை திறப்பான், ஆரவ்.
அவனை காப்பாற்றும் தெய்வம் போல, கேசவன் வந்தார்.

"இங்க என்ன பண்ணுற??…உள்ள போ…போய் அம்மா கிட்ட கேட்டு,ஏதாவது வேலை இருந்தா பாரு.."
என்று, அவளை துரத்தினார் கேசவன்.

"சரிங்க பா.."

என்று விட்டு,
'அங்க போனா, மம்மி துரத்துது.. இங்க வந்தா ஹிட்லர்…எங்க தான் போறது.ஓ..மை காட்..'
என்று மனதுக்குள் புலம்பி விட்டு, மாடிக்கு, அவள் அறைக்கு சென்றுவிட்டாள் கீர்த்தி.

'மாமனாருக்கு தான், மச்சினிச்சி பயம் போல'

…..தொடரும்.


 

Padma

Active member
கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது. அம்மாவுக்கு பயந்த ஆரவ் ஆர்த்தியிடம் எப்படி நடந்துக்க போறான்னு பார்க்கனுமே
 

Sundarji

Active member
அச்சச்சோ ஆரவ் கீர்த்தி யோட கேசு வீக் பாய்ண்ட் டை கண்டுபிடிச்சு...
 
Top