அத்தியாயம்-9
அறைக்குள் சென்ற கீர்திக்கு, இருப்பு கொள்ளவில்லை.அறையிலே குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்.
அரை மணி நேரம் கழித்து, மெதுவாய் வெளியே எட்டி பார்த்தாள். வாசல் கதவு மூடி இருந்தது.ஹாலில் வழக்கம் போல விடிவிளக்கின் ஒளி மட்டும்.
'ரூம்குள்ள போய்ட்டானா??'
மெதுவாக இறங்கி கீழே வந்தாள். கண்கள் அந்த வெளிச்சத்திற்கு பழகியதும் பார்த்தாள். ஏகாம்பரம் புகைப்படத்தின் கீழ், மசமசப்பாய் ஒரு உருவம் தெரிந்தது.
'இவன் இன்னும் உள்ள போகலியா??தினமும் இந்த போட்டோவை பார்க்காம தூக்கம் வராது போல இவனுக்கு..'
தன் சுடிதார் துப்பட்டாவை எடுத்து, முகத்தை பாதி மறைத்து மூக்கொடு சேர்த்து கட்டி கொண்டு, அவனை நெருங்கினாள்.
"ஏய்!!தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்!!
ஓ!!தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்!!
அந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி!!
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி, சாமி, சாமி…!!
சாராயத்தை ஊத்து, ஜன்னலை தான் சாத்து!!
சாராயத்தை ஊத்து, ஜன்னலை தான் சாத்து!!
திடீரென்று அவன் பாடுவான் என்று எதிர் பார்க்காததால்,பயந்து இரண்டடி பின் சென்று தடுமாறி, மல்லாந்து விழுந்தாள்.
'பரதேசி,இப்பிடி பயமுடுத்திட்டானே..'
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,
'விட்ரி ,விட்ரி கீர்த்தி, நாம அசிங்க பட்டதை யாரும் பார்கலை..'
மெதுவாக எழுந்து கைகளை தேய்த்து விட்டு கொண்டு, மீண்டும் ஜாக்கிரதையாக அவனை நெருங்கினாள்.
இரண்டடி தள்ளி நின்று கொண்டு, அவன் தோளில் கை வைத்து, மெதுவாய் அசைத்தாள்.
போதையில் அரை விழி திறந்து இவளை பார்த்தான்.
மறுநொடி,
"பேய்…பேய்.. பேய்…"
யாரும் வந்து விட போகிறார்கள் என்ற பதட்டத்தில், சுற்றிலும் பார்த்துவிட்டு,
"ஏய்…ஸு.. ஸு.. வாயை மூடு.."
உதட்டின் மேல் ஒரு விரல் வைத்து, அவனை அமைதி படுத்தி விட்டு, தன் முகத்தில் மூடி இருந்த துப்பட்டாவை எடுத்து விட்டு, தன் முகத்தை காட்டினாள்.
அவள் முகத்தை பார்த்ததும் அமைதி ஆனவன்.மெதுவாக தட்டு தடுமாறி சுவற்றை பிடித்துக்கொண்டு எழுந்து, அவன் அறை நோக்கி தள்ளாட்டத்துடன் சென்றான்.
அவன் சென்றதும் மீண்டும் தன் பார்வையை ஹாலை சுற்றி ஓட்டினாள். யாரும் இல்லை.
பூசணி, இரவில் தூக்க மாத்திரை போட்டு தூங்கும், என்று ஆர்த்தி சொன்னது ஞாபகம் வந்தது.
மனதில் சிறிது தைரியம் வந்தது.
சமையல் அறையினுள் சென்றாள்.
இரவில் செய்த சப்பாத்தி ஹாட் போக்கில் இருந்தது.
பிரிட்ஜ்ஜில் இருந்த குருமாவை எடுத்து சூடு செய்து,ஒரு தட்டில் அந்த சப்பாத்தியும்,குருமாவும் வைத்து எடுத்துக்கொண்டு, அவன் அறை நோக்கி சென்றாள்.
அவன் அறை வாசல் வரை சென்றவளுக்கு, உள்ளே செல்ல சிறிது தயக்கம் வந்தது.
அறையை பூட்டி வைத்திருப்பானோ?? என்று நினைத்து ,மெதுவாய் கதவில் கை வைத்தாள்.
உடனே திறந்து கொண்டது.
'பூட்ட மாட்டான் போல'
உள்ளே நுழைந்து அறையை பார்த்தாள். சிறிய அறை தான்.. வெகு நேர்த்தியாக இருந்தது.
ஒரு பீரோ,ஒரு மர ஸெல்ப்..ஒரு மேஜை நாற்காலி,கட்டில்.. உள்ளே இன்னொரு கதவு இருந்தது,குளியலறை போல..ஜன்னலுக்கு திரை போட்டிருந்தது.வீட்டிற்குள் வராமல், இங்கிருந்தே வெளியே போக,உள்ளே வர, ஒரு கதவு இருந்தது.
'அதான்.. இவன் எப்போ வரான், போறான் ஒன்னும் தெரியலையா??'
அறையை நோட்டம் விட்டு முடித்து விட்டு, அவனை பார்த்தாள். கட்டிலில் குறுக்காக படுத்திருந்தான்.
'எப்படி படுத்துருக்கு பாரு..??பக்கி..'
அருகில் இருந்த மேஜையில் தட்டை வைத்து விட்டு,
அவனிடம் சென்று அவன் தோள் தொட்டு அசைத்தாள்.சட்டென்று விழித்துக்கொண்டான்.
'பரவால்ல பையன், போதைலையும் உஷாரா தான் இருக்கான்.'
விழித்து எழுந்தவன், வேகமாய் எழுந்து அமர்ந்து கொண்டான்.
'என்ன…??'
என்பது போல் மலங்க, மலங்க விழித்தவனை பார்த்து,அவன் குடித்துவிட்டு வந்த கோபத்தை விட ,பரிதாபம் தான் வந்தது.
அவள் தாய்மை உணர்வு விழித்துக்கொண்டது.
தட்டை கையில் எடுத்து அவன் புறம் நீட்டி,
"சாப்பிடுங்க…"
என்றாள்.
அவளையும் தட்டையும் மாறி மாறி பார்த்து விட்டு, ஒன்றும் கூறாமல் மறுபடியும் படுக்க சென்றான்.
"உங்களை சாப்பிட சொன்னேன்.."
குரலில் அழுத்தத்துடன் கூறினாள்.
"இல்ல..வேண்டாம்.."
"ஏன்..??"
அவனிடம் பதிலில்லை.
"குடிச்சுட்டு சாப்பிடாம படுக்க கூடாதுன்னு கேள்வி பட்டுருக்கேன்.. சாப்பிடுங்க.."
"இல்ல..வேண்டாம்..நான் சாப்பிட்டேன்.."
இவ்வளவு பேச்சு வார்த்தைக்கும், அவள் முகத்தை பார்க்கவில்லை அவன்,குனிந்து கொண்டே பேசினான்.
அவன் கூறுவது பொய் என்று அவன் உடல் மொழியிலேயே தெரிந்தது.
"பரவால்ல, இன்னொரு முறை சாப்பிடுங்க.."
அவன் நிமிரவில்லை,பதிலும் சொல்லவில்லை.
இவனிடம் பேசினால் வழிக்கு வரமாட்டான் என்று உணர்ந்து,சப்பாத்தியை பிட்டு குருமாவில் தொட்டு, அவன் வாய் அருகே கொண்டு சென்றாள்.
ஒரு நிமிடம் அவனிடம் அசைவில்லை, பின் நிமிர்ந்தவன் கண்கள் கலங்கி இருந்தது.அவன் உதடுகள் அவள் தரும் உணவிர்க்காக தாமாக திறந்து கொண்டது.
நான்கு வாய் அவள் ஊட்டியதும், தட்டை வாங்கி, மீதியை அவன் உண்டான்.அவன் உண்ணும் வேகத்தை பார்த்தாலே,அவனுக்கு எவ்வளவு பசி என்று தெரிந்தது.
அவன் முகத்தை தாய்மையோடு பார்த்துக்கொண்டிருந்தவள், கண்கள் நிமிர்ந்த போது ,அறையின் சுவற்றில் மாட்டி இருந்த புகைப்படம், கண்ணில் பட்டது.
சிறிய அளவிலான படம்.அருகில் நெருங்கி சென்று பார்த்தாள். ஒரு பெண்ணின் படம்.முப்பதில் இருந்து முப்பத்தைந்து வயதுக்குள் இருக்கலாம்.பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும்,ஒரு ஈர்ப்பு சக்தி ,அந்த முகத்தில் இருந்தது.குழந்தை சிரிப்போடு இருந்தாள் அப்பெண்.
மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல, அம்முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் கீர்த்தி.
"அவங்க என் அம்மா.."
பார்த்திபனிடம் இருந்து பதில் வந்தது.
"ஓ…"
'இவங்க தான் பவித்ரா போல..குழந்தை முகம்.இவங்களை கொடுமை பண்ண ,எப்படி தான் மனசு வந்துச்சு..அந்த பாட்டிக்கு..'
ஒரு பெரு மூச்சோடு நிமிர்ந்தாள். பார்த்தி சாப்பிட்டு முடித்திருந்தான்.
"போதுமா..??இன்னும் கொண்டு வரவா..??"
"இல்லை..போதும்.."
எழுந்து சென்று ,குளியல் அறையில் போய் கைகளையும், தட்டையும் கழுவி, எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.
அதை வாங்கிய பிறகு, என்ன செய்வது என்று தெரியவில்லை.அங்கிருந்து செல் என்று மூளை அறிவுறுத்தியது.மனம், அங்கேயே நில் என்றது.
அவனுக்கும், அந்த தயக்கம் இருந்தது போல..தூங்காமல் அமர்ந்து இருந்தான்.
சில நிமிடம் அவ்வாறே கடந்தது.பிறகு நிமிர்ந்து அவள் முகம் பார்த்த பார்த்தி.
"நீ போ பொம்மு,நான் தூங்கிக்குறேன்.."
சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
'இப்போ என்ன கூப்பிட்டான்??யாரை இப்போ பொம்முன்னு கூப்பிட்டான்.??'
அவள் கண்களில் ஆச்சர்யத்தை பார்த்ததும் தான், அவன் கூறியது அவனுக்கு ஞாபகம் வந்தது.
என்ன சொல்லுவது என்று தெரியாமல்,
கட்டிலில் படுத்துக்கொண்டான்.
"என்ன சொல்லி கூப்பிட்டிங்க..??"
"அது…சும்மா.."
என்ன சொல்லுவது என்று தெரியாமல் தடுமாறினான்.
"சும்மா..தான்.. என்ன சொன்னிங்க..??"
"ஹ்ம்ம்…பொம்முன்னு.."
"ஓ..நல்லா இருக்கு.."
ஒரு மென்னகையுடன் கூறினாள்.
அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் முகத்திலும் மென்னகை.
கொஞ்ச நேரம் இருவரிடமும் மௌனம், ஒரு மோன நிலை.
சிறிது தயக்கத்துக்கு பின், பார்த்தி நிமிர்ந்து,
"பொம்மு உன் கையை கொஞ்ச நேரம் பிடிச்சுக்கட்டுமா??ரெண்டு நிமிஷம்.."
அவள் பதில் சொல்ல எடுத்து கொண்ட ஒரு நொடி கூட பொறுக்காமல்,
"உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்.."
அதுவரை, என்ன சொல்லுவது என்று யோசித்த கீர்த்தி..அவன் பதட்டம் பார்த்து,ஒன்றும் கூறாமல் தன் கையை அவன் புறம் நீட்டினாள்.
மகிழ்ச்சியுடன் அவள் முகம் பார்த்தவன்.அவள் கையை பிடித்து, கழுத்தின் அடியில் வைத்துக் கொண்டு, படுத்துக்கொண்டான்.
சில நிமிடங்களில் தூங்கிப்போனான்.
ஒரு ஆண் மகனின் கைக்குள், தன் கை இருப்பது கீர்திக்கு சிறிது கூச்சத்தை கொடுத்தது.ஒரு ஆணின் ஸ்பரிசம் புதிது.கூச்சத்தை மீறி தாய்மை முன் நிற்க,அப்படியே நின்றாள்.
அவன் தூங்கியதை உறுதி படுத்திக்கொண்டு தன் கைகளை மெதுவாக எடுத்துக்கொண்டு, அவன் அறையை விட்டு வெளியே சென்றாள். தட்டை சமையல் அறையில் வைத்து விட்டு, மாடிக்கு அவள் அறைக்கு சென்றாள்.
படுக்கையில் புரண்டவளுக்கு தூக்கம் வரவில்லை.
'குடித்தவர்கள் இருக்கும் திசை பக்கமே செல்லாத நானா, அவனுக்கு உணவு கொடுத்தது.?? எனக்கு அவன் மேல் இருப்பது என்ன??இரக்கமா??பரிதாபமா??ஏன் அவனை பற்றி அறிந்து கொள்ள துடிக்கிறேன்??'
விடை தெரியாத பல கேள்விகளுடன், விடை தேடி களைத்து, விடை காண முடியாமல், விடிய விடிய யோசித்து, விடிந்த பின் தூங்கி ,அரக்க பறக்க எழுந்து, கீழே சென்றாள்.
கீழே ஹால் முழுக்க கோப்புகள் பரப்பி, சுற்றி அகிலாண்டம்,ஆர்த்தி,ஆரவ்,இன்னும் ஒரு புதியவர், அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.
'இன்னிக்கு இங்க ஏதும் மாநாடா??எல்லாரும் இங்க குழுமி இருக்காங்க..'
கண்ணில் கேள்வியுடன், டைனிங் ஹாலுக்கு வந்தாள்.
"தலை வலி எப்படி இருக்குடி குழந்தே??"
இந்த பத்து நாட்களில், மாமி மிகவும் நெருங்கி இருந்தார்.
'ஹால்ல தான் உக்காந்திருக்கு..'
மெதுவாக முணுமுணுத்தாள்.
அவள் முணுமுணுப்பு காதில் விழாமல்,
"என்னடி குழந்தே சொல்லுற..??"
"ஹான்…பரவால்லன்னு சொன்னேன் மாமி.."
"சரிடி குழந்தே. சாப்பிடு.."
'இதுங்க எதுக்கு உக்காந்திருக்கு தெரியலையே..'
அவள் கவனம் முழுதும் ஹாலில் தான் இருந்தது.
அப்பொழுது ஆர்த்தி அங்கு வந்தாள்.
"தலை வலி சரி ஆகிடுச்சா டி??"
"ஹ்ம்ம்..அது கிடக்கட்டும்…ஹால்ல என்ன மாநாடு..??"
"மெதுவா பேசுடி..இன்னிக்கு ஆடிட்டிங்..இன்னிக்கு முழுக்க இங்க தான்.. கணக்குவழக்கெல்லாம் சரி பண்ணிட்டு இருகாங்க.."
"சரியாய் இருக்க கணக்கை, அவங்களுக்கு தகுந்த மாதிரி மாத்துறாங்கன்னு சொல்லு..கொஞ்சம் கருப்பு,கொஞ்சம் பினாமின்னு.."
"சும்மா இருக்க மாட்டியாடி.."
ஹாலை ஒரு பார்வை பார்த்துக்கொண்டு சொன்னாள்.
"உண்மையை தானே சொன்னேன்..எந்த பணக்காரங்க, ஒழுங்கா கணக்கு கொடுத்து, முழு வரி கட்டுறீங்க அரசாங்கத்துக்கு..??ஒன்னு,ரெண்டு பேர் இருந்தாலே அதிசயம்.."
"மேடையிலே பிரச்சாரம் பண்ணும் போது பேசுற மாறி பேசு.."
"உண்மை பேசுனா, அப்படி தான் தோணும்.."
"உன் கிட்ட போய் பேச வந்தேன் பாரு..என்னை சொல்லணும்.."
"நீயும் அவங்க கூட்டத்துல ஒருத்தி ஆயிட்டில்ல, அப்படி தான் பேசுவ.. போ..போய்.. அந்த பூசணிக்கு வெண்சாமரம் வீசு.."
அவளை முறைத்து விட்டு, அங்கிருந்து சென்றாள் ஆர்த்தி.
'எதுக்கு உனக்கு இவ்வளவு கோவம்..??இன்னிக்கு லீவு போட்டு, அவனை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்ற உன் திட்டம் சொதப்பியதாலா??இல்லை, பார்திக்கு இங்கு நடக்கும் அநியாயம் பார்த்தா??எதுவாக இருந்தாலும், அது முடியும் ஒரே இடம் பார்த்தி.உன் எண்ணம் சுற்றுவதும் அவனை தான்.. உன் எண்ணம் முழுதும் நிறைந்திருப்பவனும் அவன் தான்.. எங்கு ஆரம்பித்தாலும், அவனிடம் தான் முடிக்கிறாய்..'
எண்ணத்தை கட்டுப்படுத்த முடியாமல், அரைகுறையாய் சாப்பிட்டு விட்டு, மாடிக்கு சென்றாள்.
'இப்படியே யோசிச்சுட்டு இருந்தா, பைத்தியம் தான் பிடிக்கும்.பேசாம கிளாஸ்க்கு போக வேண்டியது தான்.இங்கிருந்தாலும் ஒரு பயனும் இல்லை.இன்று மாமியிடம் எதுவும் கேட்க முடியாது.'
வகுப்புக்கு சென்றாலும் மனம் மாறும் என்று, மதிய வகுப்பிற்கு கிளம்பி சென்றாள்.
கீழே வந்தவளை பார்த்து அகிலாண்டம்,
"இன்னிக்கு லீவு போடுறேன்னு சொன்னியே மா.தலைவலி பரவால்லியா??"
'அதுகிட்ட இருந்து தப்பிக்க தான் போறேன்..'
"பரவால்ல அத்தை. இன்னிக்கு ஒரு முக்கியமான வகுப்பு, அதான் போறேன்.."
அவளை நம்பாமல் ஆர்த்தி பார்த்தாள்.
'அப்படி படிக்குற ஆளா இவ??'
மாமியார் இருந்ததால் ஏதும் கேட்க முடியாமல் அமைதி காத்தாள்.
"சரி போய்ட்டு வா.. முடியலைனா.. உடனே கிளம்பி வந்துடு.."
"சரி அத்தை.."
சாப்பிட்டு போக சொன்ன மாமியிடம்,உணவை டப்பாவில் போட்டு தருமாறு, கேட்டு வாங்கிக்கொண்டு சென்றாள்.
வகுப்பிலும் கவனம் செல்லவில்லை.முந்தைய வகுப்பில் திட்டு வாங்கியதால் ,கவனமாக கவனிப்பது போல இருந்து விட்டு, வழக்கமான நேரத்திற்கு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள்.
'பீம் பாய் இந்த நேரத்துக்கு தானே இந்த பக்கம் போவான்..'
மானசீகமாய் தலையில் கொட்டி கொண்டு,
'எப்போ பாரு அவன் நினைப்பு தான்..' அவள் நினைத்து முடிக்கும் தருவாயில், அவள் நினைவின் நாயகனே அவள் எதிரே வந்தான்.
வழக்கம் போல அவளை கடந்து போகாமல், பைக்கை அவள் பக்கத்தில் நிறுத்தினான்.
யாரோ பைக் நிறுத்தும் அரவம் கேட்டு நிமிர்ந்தவள் முன் அவன்,அவள் எண்ணத்தின் நாயகன் பார்த்தி..
அவள் கண்களில் ஆச்சர்யம்..எப்பொழுதும் கண்டுகொள்ளாமல் செல்பவன், இன்று நிற்கவும்,கண்களில் கேள்வி தேக்கி அவனை பார்த்தாள்.
அதற்கு பதில் அளிப்பது போல,
"வீட்டுக்கு தானே போற??வா, வந்து ஏறு.கொண்டு போய் விடுறேன்."
அவன் உடல் மொழியில், பேச்சில் ஒரு உரிமை உணர்வு.
இவளுக்கு 'திக்' என்று இருந்தது.
"நானா??உங்க பைக்லையா??"
முகத்தில் ஒரு முறுவலோடு,
"ஆமாம்.."
என்றான்.
"இல்ல..நான் வரலை.."
"ஏன்..??"
அப்பொழுதும் அவன் முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை.
"இல்ல..நீங்க போங்க நான் வரல.."
"அதான் ஏன்??"
இப்பொழுது, அவன் கேள்வியில் அழுத்தம் கூடி இருந்தது.புருவம் நெறிந்து இருந்தது.அவன் முகம் சிறிது பயம் கொடுத்தாலும்,
"உங்க கூட வந்தா, அத்தை திட்டுவாங்க.."
என்று சொல்லியே விட்டாள்.
மறுநொடி அவன் அங்கு இல்லை..மின்னல் வேகத்தில் ,அவ்விடம் விட்டு பைக்கில் பறந்திருந்தான்.அவ்வளவு வேகம்.
கீர்த்தி ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.
…தொடரும்..