கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-1

Nilaa

Moderator
Staff member
1
காதல்!
உச்சரிக்கும் போதே
இதழ் தித்திக்கும்!
உள்நுழைந்து விட்டாலோ
உயிர் தித்திக்கும்!

ரவு நேரம்.

நிலவில்லாத வானம்
அச்சுறுத்துவதாய் இருந்தது.
இரவுப் பூச்சிகள்,தங்கள்
ரீங்காரத்தில் ஏதோ செய்தி
சொன்னது.

தன்னறையில் படுக்கையில் கால்
நீட்டி அமர்ந்தபடி,கைபேசியில்
பேசிக் கொண்டிருந்தாள் மதுரா.

“நீங்க சொல்ற இடம் ரொம்ப
தூரமா இருக்கும் போலிருக்கே.
என்னால அவ்வளவு தூரமெல்லாம்
வர முடியாது மகேன்.சாரி”

“இவ்வளவு நாள் உன்னைக்
கூப்பிட்டிருக்கனா?நாளைக்கு என்
பர்த்டே.உன்னைப் பார்க்கணும்னு
நினைக்கிறேன்.நாளெல்லாம் உன்
கூட இருக்கணும்னு ஆசைப்
படறேன்.ஏன் புரிஞ்சுக்க
மாட்டீங்கறே?”

“எனக்குப் புரியாம இல்லை
மகேன்.எனக்கும் உங்க கூட
இருக்கணும்னு ஆசையா தான்
இருக்கு.ஆனா,அவ்வளவு தூரம்
எப்படி வர்றது?என் வீட்டில என்ன
சொல்லுவேன்?”

“எதாவது பொய் சொல்லிட்டு
வா.எனக்காக இது கூட செய்ய
மாட்டியா”

“..........”

“பிரெண்ட் வீட்டுக்குப் போறதா
சொல்லிட்டு வா”

“சாரி மகேன்.என்னைத் தப்பா
நினைக்காதீங்க.நான் வரலை”

“இன்னைக்கு ஒரு விஷயம்,
எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சு”

“மகேன்...”

“உனக்குக் கொஞ்சம் கூட
என் மேல நம்பிக்கை இல்லை.
அதான் என் கூட வெளியில
வர மாட்டீங்கறே”

“இல்லை...இல்லை.அப்படி
எல்லாம் எதுவும் இல்லை
மகேன்”

“அப்படித் தான்.உனக்கு என்
மேல நம்பிக்கையும் இல்லை.
காதலும் இல்லை”

“ப்ளீஸ் மகேன்.இப்படி எல்லாம்
பேசாதீங்க.நான் உங்க மேல
உயிரையே வைச்சிருக்கேன்”

“அப்படியா?அப்ப நாளைக்குக்
காலையில,நான் சொல்ற
இடத்துக்கு வா.உன் காதல்
உண்மைன்னு நான் ஒத்துக்கறேன்.
பை”

கைபேசியைப் போட்டு விட்டு,
கண் மூடி யோசனையில்
ஆழ்ந்தாள் மதுரா.

சில நிமிடங்களில் குறுஞ்செய்தி
வந்ததை கைபேசி அறிவிக்க,
எடுத்துப் பார்த்தாள் மதுரா.

பேருந்து நிலையம் அருகில்
வெள்ளை ஸ்விப்ட்டில்
காத்திருப்பானாம்.ஒன்பதரை
மணிக்கு வரவில்லை என்றால்,
குட்பை சொல்லி விடுவானாம்.

“மது குட்டி,பால் கொண்டு
வரட்டுமா”என்ற தாயின் குரலில்
திடுக்கிட்டு விழித்தாள் மதுரா.

“என்னடா”

“அம்மா....கொண்டு வாங்கம்மா.
நான் இன்னைக்கு நேரத்திலயே
தூங்கலாம்னு இருக்கேன்”

“என்ன அதிசயமாயிருக்கு?
நடுராத்திரி வரைக்கும் செல்லை
நோண்டிட்டு இருப்பியே”

“அம்மா...”

“நல்ல விஷயம் தான்.பால்
கொண்டு வர்றேன்.குடிச்சுட்டுத்
தூங்கு”

“அம்மா...”

“என்ன மது”

“அம்மா...நாளைக்கு என்
க்ளோஸ் பிரெண்ட் இனியாவோட
பர்த்டே.அவ வீட்டுக்குக்
கூப்பிட்டிருக்கா.காலையில
நேரத்திலயே போகணும்”

“அந்தப் பொண்ணு வீடு
எங்கிருக்கு”

“இங்க இருந்து கொஞ்சம்
தூரம் தான்மா.கார் அனுப்பறதா
சொன்னா.என் கூட இன்னும்
நாலு பிரெண்ட்ஸ் வர்றாங்கம்மா”

“எப்பத் திரும்பி வருவே”

“லன்ச் சாப்பிட்டு உடனே
வந்துடுவேன்மா”

“சரி.பார்த்து ஜாக்கிரதையா
போயிட்டு வா”

“தேங்க்ஸ்மா”தாயின் கழுத்தைக்
கட்டிக் கொண்டு,கன்னத்தில்
முத்தமிட்டாள் மதுரா.

“போதும் போதும்.விடு,பால்
கொண்டு வர்றேன்”

சில நிமிடங்களில்,ராதா பால்
டம்ளரை மேஜையில் வைத்து
விட்டுச் செல்ல,அதை எடுத்து
மெதுவாகப் பருகிய மதுராவின்
முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

ழகான காலை வேளை.

கணவனைப் பணிக்கு அனுப்பி
விட்டு,மகளைச் சிற்றுண்டி உண்ண
அழைத்துக் கொண்டிருந்தார் ராதா.

“வந்துட்டேன்,வந்துட்டேன்”உணவு
மேஜை முன் அமர்ந்த மகளை
ஆராய்ச்சியாகப் பார்த்தார் ராதா.

“பங்ஷனுக்குத் தானே போறே?
சுடிதாரோ,புடவையோ கட்டறதை
விட்டுட்டு,எதுக்கு இந்தப் பேன்ட்
சட்டையும்,குதிரை வாலும் மதுரா”

“எனக்கு இதான் பிடிச்சிருக்கும்மா”
என்றாள் தட்டில் இருந்து பார்வையை
நிமிர்த்தாமல்.

“நீ எப்ப என் பேச்சைக்
கேட்டிருக்கே?அப்பா பணம்
கொடுத்திருக்கார்.உன் ஹேண்ட்
பேக்ல வைச்சுடறேன்”

“வேண்டாம்,வேண்டாம்மா”மதுரா
அவசரமாய் மறுக்க.

“என்ன மது”

“என் கிட்டப் பணம் இருக்கும்மா.
இப்ப வேண்டாம்”

“சரி”

எதற்கு இப்படி அலறுகிறாள்?
இவள் ஹேண்ட்பேக்,மொபைல்
இரண்டையும் தொட விடுவதில்லை!
ஒரு வேளை...இப்போது வேண்டாம்.
இரவு கேட்கிறேன்.

“அப்பா நேரத்திலயே ஆபிஸ்
போயிட்டாராம்மா”

“ம்.ஏதோ வேலையிருக்குன்னு
சொன்னார்.எதுக்கு இவ்வளவு
அவசரம்?மெதுவா சாப்பிடு மது”

“எனக்கு லேட்டாகுதும்மா.நான்
போகலைன்னா...என் பிரெண்ட்ஸ்
என்னை விட்டுட்டுப்
போயிடுவாங்கம்மா”

“நல்ல பிரெண்ட்ஸ் தான்”

“போதும்மா”என எழுந்தவள்,
“கோபப் படாம சிரிச்சுட்டே பை
சொல்லுங்க ராது.ப்ளீஸ்”என்றாள்
கெஞ்சுதலாக.

“கோபம் எல்லாம் இல்லை.
போனதும் போன் பண்ணு.
நேரமே வந்து சேரு.லேட்
பண்ணிடாதே”

“சரிம்மா”

தன்னறைக்குச் சென்று தன்
கைப்பையை எடுத்து வந்தாள்
மதுரா.

“கதவை நல்லா பூட்டிக்கங்க.
திறந்து வைச்சுட்டு வேலை
செய்யாதீங்கம்மா”மகளின்
கன்னத்தில் பரிவுடன் தட்டிக்
கொடுத்தார் ராதா.

கேட் வரை சென்று திரும்பிப்
பார்த்துக் கையசைத்த மதுராவின்
கைபேசி ஒலி எழுப்பியது.

யார் எனத் திரையைப் பார்த்தவள்,
புன்னகையுடன் கைபேசியைக்
காதில் வைத்தாள்.

“குட்மார்னிங் மதி.என்ன
அதிசயமா இந்த நேரத்தில
கூப்பிடறே”

“உன் கிட்ட முக்கியமான
விஷயம் பேசணும் மது.எங்க
பார்க்கலாம்?எப்பப் பார்க்கலாம்?”

“நான் வெளியில கிளம்பிட்டனே
மதி.நாளைக்குப் பேசலாமா”

“............”

“எதாவது பிரச்சனையா மதி”

“இல்லை மது.இது வேற விஷயம்.
இன்னைக்கு உன்னைப் பார்த்தா
நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
ஈவ்னிங் பார்க்கலாமா...”

“சாரி மதி.இன்னைக்கு எனக்கு
முக்கியமான வேலை இருக்கு.
நாளைக்குக் கண்டிப்பா பார்க்கலாம்.
பை.அப்புறம் பேசறேன் மதி.
ப்ளீஸ்..”பதிலைக் கூடக் கேட்காமல்
இணைப்பைத் துண்டித்தாள் மதுரா.

மகேன் கோபித்துக் கொண்டு
போய் விட்டால் என்ன செய்வது?
நிலைமை தெரியாமல் பேசிக்
கொண்டிருக்கிறான்.

“பைம்மா”கேட்டைச் சாத்தி விட்டு,
சாலையில் இறங்கி நடக்கத்
தொடங்கினாள் மதுரா.

அந்தோ பரிதாபம்!தன் மகள்
போகும் வழி அறியாது,அவள்
எதிர் கொள்ள இருக்கும்
ஆபத்தை அறியாது,சாலையில்
இறங்கிய பின்னும் திரும்பித்
திரும்பிப் பார்த்து கையசைக்கும்
மகளுக்குப் புன்னகை முகமாக
விடை கொடுக்கிறார் ராதா!



தித்திக்கும்❤️❤️❤️


ஹாய் பிரெண்ட்ஸ்,

முதல் முறையாக போட்டி
இல்லாமல் என் கதையைப்
பகிர்கிறேன்.ரீரன் கதை தான்.
நிச்சயம் உங்கள் உள்ளம்
கவரும்.

இச்சங்கமம் தளத்தில் என்றும்
என் எழுத்துக்களால் உலா வர
விரும்புகிறேன். உங்கள்
கருத்துக்களே எனை உற்சாகமாய்
உலா வரச் செய்யும். ஆதலால்
உங்கள் கருத்துக்களால் என்
உலாவலை இனிதாக்கித்
தாருங்கள் தோழமைகளே.
உங்கள் கருத்துக்களை
எதிர்பார்த்து மிகுந்த ஆவலுடன்
காத்திருப்பேன்.நன்றி🙏🙏🙏

ப்ரியமுடன்,
நித்திலா:)
 

Nandhini

New member
ஹாய் மா,

எவ்வளவு தடவை படிச்சாலும்
மதுவோட துணிச்சலும்,மதியோட
காதலும் ரொம்ப சூப்பரா இருக்கும்.
சலிக்கவே சலிக்காது.

மதுவோட தைரியம்,மதியோட
அன்பு,அக்கறை எல்லாமே ரசிக்கும்படியா இருக்கும்.

வாழ்த்துக்கள் மா 💐💐💐💐
 

Nilaa

Moderator
Staff member
ஹாய் மா,

எவ்வளவு தடவை படிச்சாலும்
மதுவோட துணிச்சலும்,மதியோட
காதலும் ரொம்ப சூப்பரா இருக்கும்.
சலிக்கவே சலிக்காது.

மதுவோட தைரியம்,மதியோட
அன்பு,அக்கறை எல்லாமே ரசிக்கும்படியா இருக்கும்.

வாழ்த்துக்கள் மா 💐💐💐💐


ஹாய் நந்தினி,

ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா.
இன்னும் மது,மதியை ஞாபகம்
வைச்சிருக்கீங்கன்னு கேட்க ரொம்ப
ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ரொம்ப ரொம்ப நன்றி மா😘😘😘😘
 

Nilaa

Moderator
Staff member
சுவாரஸ்யமான ஆரம்பம். மதுரா, தப்பு பண்ணறேயேம்மா?

வெல்கம் அம்மா💐💐💐💐

இந்தக் கதைக்கு முதல் கமெண்ட்
கொடுத்திருக்கீங்க.ரொம்ப ரொம்ப
ஸ்பெஷல் தேங்க்ஸ் அம்மா🙂

எனக்கும் முதல் கமெண்ட் கொடுக்கறீங்க.உங்க கமெண்ட் பார்த்து
அவ்வளவு சந்தோஷப் பட்டேன்.ரொம்ப
ரொம்ப நன்றி மா🙏🙏🙏

சுவாரஸ்யமான ஆரம்பம்னு கேட்க
சந்தோஷமாவும்,நிறைவாவும் இருக்கு.
ரொம்ப ரொம்ப நன்றி மா😍😍😍

மதுரா தப்பு செய்யறாளான்னு போகப்
போகத் தெரிஞ்சுக்கலாம் மா.

நன்றி மா🙂

அன்புடன்,
நித்திலா
 
Top