15
உன் நிழலாக
உடன் வரும்
வரம் கொடு!
உனை என் நெஞ்சுக்குள்
பூட்டிக் கொண்டு
வாழ்ந்திட சரண் புகு!
இரவு ஏழு மணியாகி உன் நிழலாக
உடன் வரும்
வரம் கொடு!
உனை என் நெஞ்சுக்குள்
பூட்டிக் கொண்டு
வாழ்ந்திட சரண் புகு!
இருந்தது.
அந்த ஐஸ்கிரீம் பார்லரில்
இருந்து வெளி வந்த
மதுராவும்,பவித்திரனும்
தங்களுடன் வந்த வசந்தனை,
மதிவதனன் வீட்டில்
இறக்கி விட்டு விட்டு,
வீடு நோக்கிச் சென்றனர்.
“என்ன பவி,நம்ம
வீட்டு முன்னாடி
இவ்வளவு கார் நிற்குது”
“நம்ம மொத்தக்
குடும்பமும் வந்திருக்குன்னு
நினைக்கிறேன் மதுக்கா”
ஊருக்குத்தான்
சென்றிருக்கிறார்கள்.
ஏன் என்னிடம்
சொல்லவில்லை?
“எதுக்கு திடீர்னு
எல்லாரும் வந்திருக்காங்க?
இந்த ராதா என்ன
பண்றாங்கனே தெரிய
மாட்டீங்குது”
காரை சாலையில்
ஓரமாக நிறுத்தி விட்டு,
உள்ளே சென்றனர்
மதுராவும்,பவித்திரனும்.
“ரெண்டு தாத்தா,பாட்டி,
பெரியப்பா,சித்தப்பா,
மாமா எல்லாரும்
பேமிலியோட
அட்டென்டன்ஸ்
போட்டிருக்காங்க.
என்ன விஷயமா இருக்கும்கா?”
“எனக்கு எப்படிடா தெரியும்”
“புள்ளைக வந்துட்டாங்க.
அக்காவும்,தம்பியும்
அங்கயே நின்னு என்ன
ரகசியம் பேசறீங்க?”
“ஒண்ணும் இல்லை சித்தப்பா”
“வீட்டுக்குள்ள வராம
எதுக்கு அங்கயே
நிற்கறீங்க.உள்ள வா மது”
“எல்லாத்தையும் திடீர்னு
ஒண்ணா பார்த்து புள்ளை
பயந்துடுச்சு”
“பாவம்!பச்சைப் புள்ளை”
என்று முணுமுணுத்தான் பவித்திரன்.
“அடி வேணுமா உனக்கு”
“எதுக்கு ரெண்டு பேரும்
இப்படி முழிக்கறீங்க”
“ஒண்ணும் இல்லை
பெரியம்மா.திடீர்னு
எல்லாரையும் பார்த்ததும்
ஒண்ணும் புரியலை”
அனைவருக்கும் பொதுவாகப்
புன்னகைத்து விட்டுத் தன்
தாய் வழிப் பாட்டியின்
அருகில் மதுரா அமர,தன்
தந்தை வழிப் பாட்டியின்
அருகில் அமர்ந்தான் பவித்திரன்.
“என்ன பவி இப்படி
இளைச்சுப் போயிருக்கே?
அம்மா,அப்பாவை வந்து
பார்த்தா போதுமா?லீவ்வு
கிடைச்சா ஊர் பக்கம்
வந்துட்டுப் போ”
“சரிங்க சித்தி”
மதுராவின் தாய்தந்தைக்கு
சொந்த ஊர் சேலம் என்றாலும்,
கோவிந்தன் கோவையில்
பணியாற்றியதால்,
திருமணத்திற்குப் பிறகு
கோவையில் வசிக்கத்
தொடங்கினர்.அப்போது
ஏற்பட்ட ராதா,சாரதா
இடையேயான நட்பு இரு
குடும்பத்தையும்
நெருக்கமாக்கியது.மதுராவின்
பதினாறாவது வயதில்,
பதவி உயர்வு கிடைக்கப்
பெற்று,சென்னைக்குக்
குடி பெயர்ந்தது ராதாவின்
குடும்பம்.
தற்போது,கோவிந்தன்
விருப்ப ஓய்வு பெற்றதால்
கோவைக்குத் திரும்பியுள்ளனர்.
ஓய்விற்குப் பிறகு,நண்பர்
ஒருவரின் வேண்டுகோளுக்கு
இணங்கி,அவருடைய
நிறுவனத்தில் பணியாற்றி
வருகிறார் கோவிந்தன்.
உறவுகள் தொடர்ந்து
பேசிக் கொண்டிருக்க,
அவர்கள் வந்த காரணம்
மட்டும் மதுராவிற்குத்
தெரியவே இல்லை.
அம்மா அழைத்து தான்
இவர்கள் வந்திருக்க
வேண்டும்.என்ன
காரணம் என்று எங்களிடம்
சொன்னால் தான் என்ன?
“மதுக்கா”என்று அழைத்து
மதுராவின் சித்தப்பா பெண்
பேசத் தொடங்கியதில்,
மதுராவின் சிந்தனையோடு,
அவளுடைய நேரமும்
அவளுக்குச்
சொந்தமில்லாமல் போனது.
இரவு பதினொன்று.
வசந்த் இரண்டு முறை
அழைத்திருக்கிறான்.
ஆனால்,மதி ஏன்
இத்தனை முறை
அழைத்திருக்கிறான்?
இவ்வளவு பேரை வைத்துக்
கொண்டு,என்னால் போனில்
ஒரு வார்த்தை கூடப் பேச
முடியாது.லேப்டாப்பைத்
தொடக் கூட முடியவில்லை.
ஒரு வழியாக வீடு
அமைதியாகி விட்டது.எதோ
சுதந்திரம் கிடைத்தது
போல் இருக்கிறது.
மதி தூங்கி இருப்பானா?
அவனுடன் பேசவே
முடிவதில்லை.இனி
இவர்கள் அனைவரும்
சென்ற பிறகு தான்
பேச முடியும்.
படுத்தபடியே
மடிகணினியைப் பார்த்துக்
கொண்டிருந்த மதுரா,
புதிதாக வந்திருந்த
மின்னஞ்சல் ஒன்றைக்
கண்டு துள்ளி எழுந்து
அமர்ந்தாள்.உடனே
கைபேசியை எடுத்து
வசந்தனை அழைத்தாள்.
“வசந்தா”
“ஏய்!தூங்காம என்ன பண்றே”
“பாஸ் மெயில் அனுப்பி
இருக்கார் பாரு.நீ நாளைக்கே
சென்னைக்குக் கிளம்பணும்.
புதுசா ஒரு...”
“நாளைக்கா?அதெல்லாம்
முடியாது.நான் தினுவை
அனுப்பறேன்.இப்பத்
தூங்கறேன்.குட்நைட்”
“தூங்குமூஞ்சி!குட்நைட்”
சார்ஜ் சுத்தமாக குறைந்து
விட்டதைப் பார்த்து,
மடிகணினியை அணைத்து
வைத்து விட்டுத் தானும்
உறங்கத் தொடங்கினாள் மதுரா.
காலைப் பொழுது.
மதுரா இல்லம்,பண்டிகைக்
கால வீடு போல கலகலப்புடன்
காணப் பட்டது.எங்கும்
உற்சாகம் நிரம்பி வழிந்தது.
நகைப் பெட்டிகளோடு மதுரா
அறைக்குச் சென்ற ராதா,
கண்ணாடி முன்
அமர்ந்திருந்த மகளைப்
பார்த்து எப்படிப் பேச்சை
ஆரம்பிப்பது என யோசித்தார்.
“என்னம்மா?எதாவது
வேலை செய்யணுமா”
“இல்லைடா.நீ நல்ல
பட்டுப் புடவையா எடுத்துக்
கட்டிக்கோ மது”என்றார்
நகைப் பெட்டிகளை
டிரெஸ்ஸிங் டேபிளில்
வைத்தபடி.
“ஏன்மா?கோயிலுக்குப் போறமா?”
தன் கோபக்கார மகளின்
கன்னத்தை வருடி திருஷ்டி
கழித்தார் ராதா.
“எங்க வீட்டு ராஜகுமாரியைப்
பார்க்க,ஒரு அழகான
ராஜகுமாரன் வரப் போறார்.அ..”
“அம்மா!!என்ன சொல்றீங்க
நீங்க?என் கிட்ட ஒரு வார்த்தை
கூடக் கேட்காம...ஏன்மா
இப்படிப் பண்றீங்க?எனக்குப்
பிடிச்ச வேலையை நீங்க
பார்க்க விடலை.இப்பக்
கல்யாணமும் என்னைக்
கேட்காம முடிவு பண்ணி
இருக்கீங்க.ஏன்மா நீங்க எ...”
“மது,மாப்பிள்ளை வீட்டில
இருந்து கொஞ்ச நேரத்தில
வந்துடுவாங்க.சீக்கிரம்
ரெடியாகு.அவங்க
போனதுக்கப்புறம்,நீ
பேசறதைக் கேட்கறேன்”
“ராதாம்மா”
“வர்றேன்ணா"எனக்
குரல் கொடுத்த ராதா,
மகளின் கோபத்தை
ரசிப்பவர் போல சிரித்தார்.
“உனக்கு என் மேல
இருக்கிற கோபம் எல்லாம்,
இன்னைக்குத் தீர்ந்துடும்
மது.அம்மா உனக்கு
அவ்வளவு பொருத்தமான
மாப்பிள்ளை பார்த்திருக்கேன்”
“............”
“மாப்பிள்ளையை எப்படித்
துரத்தலாம்னு பிளான்
பண்ணாம,நல்ல புடவையா
கட்டி,நகை எல்லாம்
போட்டு,நல்லா அலங்காரம்
பண்ணிக்கோ.என் மது
அப்சரஸ் மாதிரி இருக்கணும்”
மகளின் கன்னத்தை
ஆசையுடன் வருடி விட்டு,
கதவைச் சாத்தி விட்டுச்
சென்றார் ராதா.
இந்த அம்மா என்ன
நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்?
வழக்கம் போல,
பிளாக்மெயில் செய்து
சம்மதம் வாங்கி விடலாம்
என்ற தைரியம்!
வரட்டும் அவன்.பார்த்துக்
கொள்கிறேன்.எங்கிருந்து
திடீரென்று வந்தான் இந்த
மாப்பிள்ளை?இந்த
அம்மாவை...அனைவரும்
சென்ற பிறகு உங்களை
கவனித்துக் கொள்கிறேன்.
உங்கள் மாப்பிள்ளையையே
என்னை வேண்டாமென்று
சொல்ல வைக்கிறேன்
பாருங்கள்.
முன் செய்தது போல,
என்னை மிரட்டிப் பணிய
வைக்கலாம் என்று
நினைத்தீர்களா?நிச்சயம்
நடக்காது.உங்கள்
மாப்பிள்ளையை எப்படி
ஓட வைக்கிறேன் என்று
பாருங்கள்.
அம்மா தான் இப்படி
என்றால்,அப்பாவும்
என்னை ஒரு வார்த்தை
கேட்கவில்லை.
நேரம் கடந்து கொண்டிருக்க,
அணிந்திருந்த பழைய
சுடிதாரோடு, அசையாமல்
அமர்ந்திருந்தாள் மதுரா.
“மதுக்கா”என்ற
அழைப்புடன் கதவைத்
தட்டினான் பவித்திரன்.
“நான் பயங்கரக்
கோபத்தில இருக்கேன்.
இங்கிருந்து போயிடு பவி”
“கதவைத் திறக்கா.யார்
வந்திருக்காங்கன்னு பாரு”
“நான் யாரையும் பார்க்க
விரும்பலை பவி.ஒழுங்கா
போயிடு”
“கோபப் படாமக் கதவைத்
திறக்கா”
“நான் திரும்பிப்
போயிடட்டுமா மது”
இது மதியின் குரல்
ஆயிற்றே...மனதில் உவகை
பொங்க, துள்ளி எழுந்து
சென்று தாழ் நீக்கி,
கதவைத் திறந்தாள் மதுரா.
“என்னோட பேவரைட் மதி
அண்ணா தான்,என்னோட
மாமாக்கா.எனக்கே இப்ப
தான் தெரிஞ்சுதுக்கா”
தன் காதில் கேட்டதை
நம்ப முடியாமல்,மதுரா
அசையாமல் நிற்பது
கண்டு,அறையினுள்
காலெடுத்து வைத்தான்
மதிவதனன்.
“அஞ்சு நிமிஷம் தான்
மாமா.அதுக்குள்ள
பேசிடுங்க.என்னை
மாட்டி விட்டுடாதீங்க”
“தேங்க்ஸ் பவி”
கதவைச் சாத்தி விட்டுக்
காவலாக அங்கேயே
நின்று கொண்டான்
பவித்திரன்.
“மாப்பிள்ளை வந்துட்டார்.
ஆனா பொண்ணு இன்னும்
ரெடியாகலை. எனக்கு இந்த
சுடிதாரே போதும்.ஆனா
நம்ம குடும்பத்துக்குப்
போதாதே மது.நான்
உனக்கு அலங்காரம்
பண்ணட்டுமா மது”
“மதீ...இது நிஜம்மா...”
அளவில்லாத மகிழ்ச்சியுடன்
எதிரில் நின்றவனைத்
தாவி அணைத்துக்
கொண்டாள் மதுரா.
“ஹேய்..மதூ...”எதிர்பாராத
அணைப்பில் முதலில்
திகைத்தாலும்,பின்
மெல்லக் கை உயர்த்தி,
அணைப்பைத் தனதாக்கினான்
மதிவதனன்.
“மதீ...”
“மதூ...அழறயா?என்னம்மா?
என்னாச்சுடா”
“.......”
“எதுக்குடா அழுகறே”
அவள் முதுகை இதமாகத்
தடவிக் கொடுத்தபடியே
யோசித்த மதிவதனனுக்கு
அவள் அழுகையின்
காரணம் புரிந்தது.
“நீ ரெஜீஸ்ஸைக்
காதலிக்கிற மாதிரி
நடிச்சதுக்காக,நான் உன்னை
வெறுத்துடுவேன்,வேண்டாம்னு
சொல்லிடுவேன்னு
நினைச்சியா மது?”
சட்டென்று அவனிடம்
இருந்து விலகி நின்றாள்
மதுரா.
நான் இன்னும் ரெஜீஸ்
குறித்து எந்த விளக்கமும்
அளிக்கவில்லையே!அப்படி
இருந்தும் மதி என்னைப்
பெண் கேட்டு வந்திருக்கிறான்.
“எனக்குத் தெரியும் மது.
உனக்கு வேற எந்த வழியும்
இருந்திருக்காது.அதனால
தான் நீ இந்தக் காதல்
வழியைத் தேர்ந்தெடுத்திருப்பே.
நான் உன்னைத் தப்பா
நினைக்கலை மது.
யாருக்கோ உதவி பண்ண,
நீ உன் வாழ்க்கையைப்
பணயம் வைச்சு,ஆபத்தைத்
தேடிப் போயிருக்கியே!
உன்னை எப்படி நான்
வெறுப்பேன் மது?”
மதுரா பதில் ஏதும்
சொல்லாமல்,அவன்
முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தாள்.
இது தான் என் மதி!
மதியை விட என்னை
யாரால் சரியாகப் புரிந்து
கொள்ள முடியும்?நான்
எதுவுமே சொல்ல
வேண்டாம்.இவன் மனதே
எனக்காகப் பேசி விடும்.
“நீ உண்மையாவே
யாரையாவது காதலிச்சிருந்தாலும்...”
“என் மதியோட அன்பு
மாறியிருக்காது.என்னை
ஏத்துக்கிட்டு,என் மனசைத்
தேத்தி,என்னை சந்தோஷப்
படுத்த எல்லா முயற்சியும்
எடுத்திருப்பான்”
“உன் மதியை இவ்வளவு
சரியா புரிஞ்சு வைச்சுக்கிட்டு,
எதுக்காகக் கலக்கம் மது?”
“நான் ஒண்ணும் அதுக்காக
அழலை”
“அப்புறம்”
“அம்மா...மாப்பிள்ளைன்னு
யாரையோ கூப்பிட்டு
வந்திருக்காங்க... என்னைக்
கேட்காமயே சம்மதம்
சொல்லிடுவாங்க...என்ன
செய்யலாம்னு யோசிச்சுட்டு
இருந்தப்ப...உன்னைப்
பார்த்ததும் எனக்கு
சந்தோஷம் தாங்கலை மதி”
“ஓ!அப்ப இது ஆனந்தக் கண்ணீரா”
“ம்”
“அத்தை உனக்கு சர்ப்ரைஸ்
கொடுக்கணும்னு
நினைச்சிருப்பாங்க மது”
இந்த ராதுவிற்கு என்னிடம்
வம்பு செய்து கொண்டே
இருக்க வேண்டும்.
“மதூ...”
“சொல்லு மதி”
“நீ எனக்கு ஒரு பிராமிஸ்
பண்ணிக் கொடுக்கணும் மது”
“பிராமிஸ்ஸா?”
திடீரென்று இவனுக்கு
என்னவானது?எதற்கு
சத்தியமெல்லாம் கேட்கிறான்?
“இனிமேல் நம்ம வாழ்க்கை
சம்மந்தமா நான் எடுக்கிற
எல்லா முடிவையும்,நீ
எந்தக் கேள்வியும்
கேட்காம ஏத்துக்கணும் மது”
எதற்காக இவன் இப்படி
ஒரு சத்தியத்தைக்
கேட்கிறான்?இது எவ்வாறு
சாத்தியமாகும்?
“ப்ளீஸ் மதூ..”
என் மதியின் முடிவுகள்
எப்போதும் என்
நன்மைக்காகவே
இருக்கும்.இருந்தாலும்...
“மதூ...”
நீட்டிய மதிவதனன்
கரத்தையும்,அன்பைப்
பிரதிபலிக்கும் அவன்
கண்களையும் கண்ட
மதுரா,தன் கரத்தை
அவன் கரத்தில் வைத்தாள்.
இனி வரும் காலம்
முழுவதும்,இக்கரங்கள்
இணைந்து பயணிக்கும்
என நினைத்தவர்களாய்
இருவரும் புன்னகைத்தனர்.
இணைந்த கரங்கள்,
இணைந்திருக்கப் போவது
காலம் முழுமைக்குமா?
வெகு சில நாழிகைகள்
மட்டுமா?
தித்திக்கும்



ஹாய் பிரெண்ட்ஸ்,
அத்தியாயம் 15 பதிந்து
விட்டேன்.வாசித்து உங்கள்
கருத்துக்களைப் பகிர்ந்து
கொள்ளுங்கள் தோழமைகளே.
நன்றி


அன்புடன்,
நித்திலா