கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-22

Nilaa

Moderator
Staff member
22
உன் அரிதாரம்
அறிந்தே
ஆனந்த மழையில்
நனைந்தே
வாழ்த்திட வந்தேன்
உயிரே!

ழைப்புமணி ஒலித்துக்
கொண்டிருக்கும் போதே,
கதவையும் பலமாகத்
தட்டினாள் மதுரா.

“பவீ!!என்ன பண்றே?”

“தெய்வமே,கதவை
உடைச்சுடாதே”என்றான்
கதவைத் திறந்த பவித்திரன்.

“இவ்வளவு நேரமா கதவு திறக்க”

“மேல இருந்து கீழ
வர்றதுக்குள்ள உனக்கு
என்னக்கா அவசரம்”

“வெளியில வெயில் அப்படி
பவி.சீக்கிரம் போய் சில்லுன்னு
தண்ணி கொண்டு வா”

“மாமாவுக்குப் போட்ட
ஜூஸ்ஸே இருக்கு.
கொண்டு வர்றேன்”

“மதி வந்திருந்தாரா”

“ம்.வெயிட் பண்ணிட்டு
இருந்தார்.திடீர்னு எதோ
வேலையிருக்குன்னு கிளம்பிப்
போயிட்டார்”

“சரி.நான் அப்புறம்
போன் பண்ணி பேசிக்கறேன்”

“ஏன் இவ்வளவு நேரம் மதுக்கா”

“எனக்கு முன்னாடி பத்துப்
பேர் இருந்தாங்க பவி.யாரு
நிற்கிறது? பேங்க்குள்ளப்
போயிட்டேன்.செக் ஒண்ணை
டெபாசிட் பண்ணிட்டு,வரும்
போது பணம் எடுத்துட்டு வந்தேன்”

அவர்கள் பேசிக்
கொண்டிருக்கும் போதே
வசந்தன் வர,“ஹாய் வசந்த்
அண்ணா,உட்காருங்க.
உங்களுக்கும் சேர்த்து ஜூஸ்
கொண்டு வர்றேன்”என்று
உள்ளே சென்றான் பவித்திரன்.

“ஆன்ட்டி எங்கப்
போயிருக்காங்க மது”

“நகைக் கடைக்குப்
போயிருக்காங்க வசந்த்.
தினு கிளம்பிட்டானா”

“கிளம்பிட்டான் மது.
நானும் ரெண்டு நாள்ல
கிளம்பிடலாம்னு
இருக்கேன்.ரெஜீஸ்ஸை
இனி போலீஸ்
கவனிச்சுக்கும்.நமக்கு
எந்த வேலையும் இல்லை”

“ம்.பாஸ் உன்னை வர
சொன்னாரே,கிளம்பு
வசந்த்.கடமைக்கு
அப்புறம் தான் காதல்”

“அப்படி எல்லாம் இல்லை
மது”வசந்தன் முணுமுணுக்க.

“எனக்குத் தெரியும் வசந்தா.
நீ மயூவுக்காக இங்கயே
இருக்கிறது”

“மதூ...அடி வாங்குவே”

பவித்திரன் வர,மூவரும்
நேரம் போவது தெரியாமல்
பேசிக் கொண்டிருந்தனர்.

சாரதா இல்லம் அமைதியில்
மூழ்கி இருந்தது.

மணி ரெண்டுக்கு மேல்
ஆகிறது.ஐயா இன்னும்
வீடு வந்து சேரவில்லை.
இவன் எப்போது வந்து
நான் எப்போது சாப்பிடுவது?

இவனுக்காக நான் ஆபிஸ்சுக்குக்
கூடப் போகாமல்,வீட்டையே
சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.
இவன் ஊரைச் சுற்றச்
சென்று விடுகிறான்.

வசந்தனுக்காகக் காத்திருந்து
காத்திருந்து பொறுமை இழக்கத்
தொடங்கினாள் மயூரி.

“ஹாய் மயூ,எதுக்கு இந்த
நேரத்தில அதுவும் ஹால்ல
வாக்கிங் பேபி”

“என் ராசா வந்துட்டாரா?
நாலு போட்டேன்னா
எதுக்குன்னு தெரியும்”

“நிஜமா தெரியலை மயூ”

“லன்ச்சுக்கு வீட்டுக்கு
வந்துடுன்னு எவ்வளவு
தடவை சொன்னேன்?
இது தான் வர்ற நேரமா”

“சாரிடா.மதுவைப்
பார்க்கலாம்னு போனேன்.
பவியும் இருந்தான்னா,
பேசிட்டு இருந்ததுல டைம்
ஆனது தெரியலை”

“எனக்குப் பொறாமையாயிருக்கு
வசந்த்.நானும் உன் பிரெண்டாவே
இருந்திருக்கலாம்”

வசந்தன் விழிகளில் தோன்றிய
கண்டிப்பு,மயூரியின் ஏக்கப்
பார்வையில் மறைந்தது.

“எனக்குப் பசியில்லை.நீ
சாப்பிட்டு வா.பேசலாம்”சொல்லி
விட்டு நகர்ந்தான் வசந்தன்.

பசியில்லையாம்.
புழுகுவதைப் பார்.
இதற்குத்தான் இத்தனை
நேரம் காத்திருந்தேனா?
இப்போது நான் என்ன
சொல்லி விட்டேன்?இவனை..

தன் கோபத்தை எல்லாம்
கால்களில் காட்டி,புயலென
வசந்தன் அறைக்குச் சென்றாள்
மயூரி.

சோபாவில் அமர்ந்து தலையில்
கைகளைக் கோர்த்துக் கொண்டு
எங்கோ வெறித்துக்
கொண்டிருந்தவனைக்
கண்டு,தன் தலையில்
அடித்துக் கொண்டு அவன்
அருகில் சென்று இடுப்பில்
கை வைத்துக் கொண்டு
முறைத்தாள் மயூரி.

“டைட்டானிக் கவிந்து
வருஷம் என்ன?இப்ப
உட்கார்ந்து பீல் பண்ணிட்டு
இருக்கே”

“உனக்குப் பசிக்கும்.போய்
சாப்பிடு மயூ”

“என்னடா பிரச்சனை உனக்கு”

“நீயும்,மதுவும் ஒற்றுமையா
இருக்க மாட்டீங்களோன்னு
எனக்குக் கவலையா இருக்கு மயூ”

“உங்க பிரெண்ட்ஷிப்பைப்
பார்த்து எனக்குக் கொஞ்சம்
பொறாமையா தான் இருக்கு.
இருந்தாலும்,மது என் அண்ணி
ஆச்சே.அதனால அந்தப்
பொறாமையை நான் வளர
விட மாட்டேன்.நீ இதுக்கெல்லாம்
கவலைப்பட்டு சோக
கீதம் வாசிச்சு என்னை
டென்சன் பண்ணிப்
பிரஷரை ஏத்தி பேஷண்ட்
ஆக்கிடாதே”

“மது மேல நான் ரொம்ப அன்பா,
அக்கறையா இருக்கிறதா
நீ நினைக்கிறே.சரியா?”

“ம்.உண்மை அதானே?
நீங்க பல வருஷமா
பிரெண்ட்ஸ்ஸா இருக்கீங்க.
அன்பு இருக்கத் தானே செய்யும்”

“மதுகிட்ட நான் அதிக
அன்பு,அக்கறை
காட்டறதுக்கு,நட்பு
மட்டும் காரணமில்லை மயூ.
நன்றிக்கடன்..என்னோட
குற்றவுணர்ச்சியும் கூட
ஒரு காரணம் தான்”

“நன்றிக்கடன்,
குற்றவுணர்ச்சி?என்ன
சம்மந்தம்?எங்கே சுருக்கமா
உன்னோட பிளாஷ்பேக்கை
சொல்லு கேட்போம்”

“மது இங்க எப்படி
வந்தான்னு உனக்கு
ஞாபகம் இருக்கா மயூ”

“ஓ!மண்டை உடைஞ்சு மது
மங்கி ரிடன்ஸ்ன்னு என்ட்ரி
கொடுத்தாளே”

“மது இங்க யாருக்கும்
உண்மையான காரணத்தைச்
சொல்லலை மயூ.மது
தலையில அடிபட்டதுக்கு
ஒரு வகையில நானும்
காரணம்.மது எவ்வளவோ
தடவை என் உயிரைக்
காப்பாத்தி இருக்கா.ஆனா...
நான்...அவ பக்கத்திலயே இருந்தும்
அவளைக் காப்பாத்தாம...
அவளுக்கு அப்படி ஒரு
மரண அடி பட விட்டுட்டேன்”

மதுவைக் காக்கத் தவறி
விட்டோம் என்ற குற்றவுணர்ச்சியில்
பேசுகிறான்.

“வருத்தப் படாதே வசு.
நீ மதுவைக் காப்பாத்த
முடிஞ்சிருந்தா...உன்
உயிரைக் கொடுத்துக்
காப்பாத்தி இருப்பே.
அவளுக்கு அடி பட
விட்டிருக்க மாட்டே.
திடீர்னு...நீ எதிர்பாராம
நடந்திருக்கும்.நீ உன்னைக்
குற்றம் சொல்லிக்காதே வசு”

எதிர்பாராது நடந்த
தாக்குதல் தான்.நாங்கள்
சுதாரிக்கும் முன்
கண்ணிமைக்கும்
நொடியில் நடந்து விட்டது.
எப்படியோ நான்
அவர்களைத் தாக்கி மதுவை
சரியான நேரத்தில்
மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்று விட்டேன்.மது மட்டும்
உயிர் பிழைக்கவில்லை
என்றால்...நான்
குற்றவுணர்ச்சியிலேயே
மடிந்திருப்பேன்.

“வசு...”

“டாக்டர்ஸ் மது கோமாவுக்குப்
போகிற வாய்ப்பிருக்குன்னு
சொன்னாங்க மயூ.
நல்லவேளை அப்படி
எதுவும் நடக்கலை.
மதுவுக்குத் தலையில
பலமா அடி பட்டனால,
வேற எதாவது பாதிப்பு
வந்துடுமோன்னு பயந்தோம்.
கடவுளோட கருணை
அவளுக்கு நிறையவே
இருக்கு.மது நல்லபடியா
குணமாயிட்டா”

“என்னடா...நீ என்னென்னவோ
சொல்லி பயமுறுத்தறே?
உயிருக்கு ஆபத்து வர்ற
அளவுக்கு நீங்க ரெண்டு பேரும்
என்ன பண்றீங்க?நேத்து
உன் பெட்ல பிஸ்டலைப்
பார்த்தேன்.வெளியில
கிளம்பிட்டு இருந்தியேன்னு
அப்புறம் கேட்டுக்கலாம்னு
விட்டுட்டேன்.ரெண்டு பேரும்
எதுக்குப் பிஸ்டலும்
கையுமாவே இருக்கீங்க?
உங்களுக்கு என்ன
ஆபத்து?யாரால ஆபத்து?
ஒழுங்கா உண்மையை
சொல்லிடு வசந்த்”மயூரியிடம்
முதல்முறையாகப் பதட்டம்
தென்பட்டது.

“உண்மையை மறைச்சுட்டேன்னு
நீ என்கிட்டக் கோவிச்சுட்டுப்
பேசாம எல்லாம் இருக்கக்
கூடாது மயூ”

“வசந்த் சத்தியசீலன்னு மது
சர்டிபிகேட் கொடுத்திருக்காளே.
எப்படிக் கோபப் படுவேன்?
தயங்காமல் உண்மையைச்
சொல் வசந்தகுமாரா”

அது நாள் வரை மயூரியிடம்
மறைத்த உண்மையைச்
சொல்லத் தொடங்கினான்
வசந்தன்.

மௌனமாக அவன் பேச்சை
செவிமடுத்த மயூரி முகத்தில்
எந்த உணர்வுமில்லை.

“பார்த்தியா..கோவிச்சுட்டே
தானே”

வசந்தன் தலையில் நறுக்கென்று
குட்டு வைத்த மயூரி,
பரிதாபமாக விழித்தவன்
கன்னத்தில் தன்
இதழ்களைப் பதித்தாள்.

“எனக்கு ரொம்பப் பசிக்குது.
வா,சாப்பிடலாம்”தனது துள்ளல்
நடையோடு வெளியேறினாள் மயூரி.

மயூரியின் செய்கைக்குப்
பொருள் விளங்காதவனாய்,
அவள் முத்தமிட்ட
கன்னத்தைத் தொட்டுப்
பார்த்தான் வசந்தன்.

ரவுப் பொழுது.

தன் உடைகளை அடுக்கிக்
கொண்டிருந்தான் பவித்திரன்.
அவனுடைய உடைமைகளை
எடுத்துக் கொடுத்துக்
கொண்டிருந்தாள் மதுரா.

“கேபிஎன் டிராவல்ஸ் தானே
பவி”

“ஆமாக்கா”

“நான் பஸ் ஸ்டேண்டுக்கு
வர்றேன் பவி”

“சரிக்கா.அம்மா என்ன பண்றாங்க”

“உனக்கு ஸ்நேக்ஸ் பேக்
பண்ணிட்டு இருக்காங்க பவி”

“நிறைய வேணும்னு சொல்லுக்கா.
அப்ப தான் எனக்குக்
கொஞ்சமாவது கிடைக்கும்”

“அதெல்லாம் ஒரு ஊரே
சாப்பிடற மாதிரி தான் பேக்
பண்ணிட்டு இருக்காங்க”

“ஐயய்யோ!யாரு தூக்கிட்டுப்
போறது”

“உன் வயிறு நிறைய நீதான்
தூக்கணும்.இந்தப் பணத்தை
வைச்சுக்கோ பவி”

“எதுக்குக்கா?என்கிட்ட
இருக்கு.எனக்குக் கொடுக்கவா
பணம் எடுக்கப் போனே”

“ஆமாம்.பணம் இருந்தா
பரவாயில்லை.இதையும் வைச்சுக்கோ”

“முறைக்காதே,வாங்கிக்கறேன்”

“நேரத்துக்குச் சாப்பிடு.
உடம்பைப் பார்த்துக்கோ பவி”

“நீயும் உன் வேலையில
கவனமா இருக்கா.
வந்தவுடனே கேட்கணும்னு
நினைச்சேன்.கூட்டத்தில
கேட்க முடியலை.ஏதோ ஒரு
சிடியைத் தேடறதா
சொன்னயே. கிடைச்சுடுச்சா?
எதுவும் பிரச்சனை இல்லையே”

“கிடைச்சுடுச்சு பவி.
அந்தப் பிரச்சனையைப்
பிரச்சனை இல்லாம
முடிச்சாச்சு.நீ கவலைப்
படாதே.படுத்துத் தூங்கு.
குட்நைட்”

தம்பியைப் படுக்கச்
சொல்லி விட்டுத் தாயிடம்
சென்று அவரையும் உறங்க
அனுப்பினாள் மதுரா.

விளக்குகள் அனைத்தையும்
அணைத்து விட்டு மேலேறிச்
சென்றாள் மதுரா

ன் அறைக் கதவைச் சாத்தி
விட்டுக் கண்ணாடி முன்
அமர்ந்த மதுரா,தலைக்கு
எண்ணெய் வைத்து
சிக்கெடுக்கத் தொடங்கினாள்.

சில நிமிடங்கள் கழித்து,
கதவு தாழிடப்படும் சத்தத்தில்
திடுக்கிட்டுத் திரும்பியவள்,
மதிவதனனை எதிர்பார்க்கவில்லை!

“மதீ....”

“ஹாய் மது”

“எதுக்கு இந்த நேரத்தில
வந்தே மதி?அம்மாவுக்குத்
தெரிஞ்சா அவ்வளவு தான்...
நான் முடிஞ்சேன்.நீ கிளம்பு.
நாம போன்ல பேசலாம்”

“அத்தைக்குத் தெரியாது மது”

இந்தப் பவி வேலையாகத்தான்
இருக்கும்.அவன் தான் மதியை
ரகசியமாக உள்ளே அழைத்து
வந்திருக்க வேண்டும்.
அம்மாவைப் பற்றி
இவனுக்குத் தெரியாதா?

“நான் உடனே போயிடுவேன்
மது.கவலைப் படாதே”

“என்ன விஷயம் மதி?எதுக்காக
நீ இப்படி இந்த நேரத்தில
வந்திருக்கே”என்றாள்
அவனருகில் சென்று.

“உனக்கு வாழ்த்து சொல்ல
வந்தேன் மது”கையில் வைத்திருந்த
பூங்கொத்தை மதுராவிடம்
நீட்டினான் மதிவதனன்.

“வாழ்த்தா...எதுக்கு மதி”

“என் மது ஒரு டிடெக்டிவ்”

“மதீ!!”

“சன்லைட் பிரைவேட்
டிடெக்டிவ் ஏஜென்சியோட,
துணிச்சலான ஒரே ஒரு
பெண் டிடெக்டிவ்!
நினைக்கறப்பவே ரொம்ப
சந்தோஷமா,ரொம்பப்
பெருமையாயிருக்கு மது”

“மதீ...உனக்கு...”

“காலையில ஆல்பத்தைப்
புரட்டினப்ப,நீயும்,வசந்த்தும்
உங்க பாஸ் கூட நிற்கற
போட்டோவைப் பார்த்தேன்
மது.பேக்கிரவுண்டில இருந்த
உங்க ஆபிஸைப் பார்த்து
உண்மையைப் புரிஞ்சுக்கிட்டேன்”

மதிவதனன் மகிழ்ச்சி
பொங்க உற்சாகத்தோடு
பேசிய போதும்,அவன்
முகத்தில் தெரிந்த ஒரு
மெல்லிய சோகம்,மதுரா
நெஞ்சத்தில் அம்பைத் தைத்தது.


தித்திக்கும்❤️❤️❤️
 
Top