கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-25

Nilaa

Moderator
Staff member
25
நீ என் தோளில்
சாய்ந்து கொள்ளும்
சுகமானது
என் பிணி தீர்க்கும்
மருந்தாவது!
திவதனன் தோளில்
சாய்ந்து அமர்ந்திருந்தாள்
மதுரா.இருவர் மனதிலும்
அமைதி நிறைந்திருந்தது.

தங்கள் வேதனையைக்
கண்ணீரில் கரைத்து விட்டு,
இயல்பிற்குத் திரும்பி
இருந்தனர் மதுராவும்,மதிவதனனும்.

“நாம என்ன பேசிட்டு
இருந்தோம் மதி”

“ரெஜீஸ்ஸைப் பத்தி தான்
மது.அவன் ராங்கால் ஆசாமின்னு
எப்படித் தெரிஞ்சுது மது?உங்க
பாஸ் சிடியைக் கொண்டு வர்ற
பொறுப்பை வசந்த்கிட்ட
ஒப்படைச்சாரா?அப்புறம் ஏன்
இந்த லவ் டிராமா?”

“உன்னோட எல்லா
கேள்விகளுக்கும் பதில் இது
தான் மதி.பொறுமையா
கேட்கணும்.நடுவுல பேசக்
கூடாது”

“நீ பேசி முடிக்கிற
வரைக்கும் வாயே திறக்க
மாட்டேன்.போதுமா”

“குட்பாய்”

நிமிர்ந்து அமர்ந்து நடந்த
அனைத்தையும் அப்படியே
மதிவதனனிடம் சொல்லத்
தொடங்கினாள் மதுரா.

“நான் சொன்னனே ஒரு
பெரும்புள்ளி,அவங்க பேர்
புஷ்பான்னு வைச்சுக்கலாம் மதி”

“ம்”

“புஷ்பா மேம்,அவங்க
பொண்ணோட நடவடிக்கையில
சந்தேகப்பட்டு ஏதோ
பிரச்சனைன்னு அவங்க
பொண்ணை பாலோ பண்ணிப்
போயிருக்காங்க மதி.அங்க
ரெஜீஸ்சும்,அவங்க பொண்ணும்
பேசிட்டு இருந்ததைப்
பார்த்திருக்காங்க.அவங்க
ரெண்டு பேரும் கோபமா
பேசிக்கிறதைப் பார்த்து,
ஏதோ பிரச்சனைன்னு
பக்கத்துல போய்,
போலீஸ்ஸைக் கூப்பிடட்டுமான்னு
மிரட்டி இருக்காங்க மதி”

ரெஜீஸ்ஸாவது பயப்படுவதாவது?
அப்பெண்ணின் படம் கையில்
இருக்கையில் எதற்கு பயப்
படுகிறான்?

மதிவதனன் எண்ணியது
சரியென்பது போல,
“அவன் கொஞ்சம் கூடப்
பயப்படலை மதி.
“போலீஸ்சுக்குப் போனா,
உனக்குத்தான் நஷ்டம்னு”
மரியாதை இல்லாமப் பேசி
இருக்கான்.“போலீஸ்சுக்கு
போறது,இல்லை என்னை
எதாவது செய்யணும்னு
எல்லாம் நினைச்சுடாதே.
உன் பொண்ணு போட்டோஸ்
என்கிட்ட இருக்கு.அதை ஒரு
நொடியில பரப்பிடுவேன்.நான்
கேட்கிற பணத்தைக்
கொடுக்கிறது தான் உனக்கு
நல்லதுன்னு”
மிரட்டிட்டு கிளம்பி இருக்கான்
மதி”என்றாள் மதுரா.

பாவம் அந்தத் தாய்.இப்படி
ஒரு இடியை எதிர்பார்த்திருக்க
மாட்டார்கள்.

“புஷ்பா மேம் இடிஞ்சு
போயிட்டாங்க.என்னை
ஏமாத்திட்டான்னு அந்தப்
பொண்ணு அழுதிருக்கு.
பொண்ணு விஷயம் வெளியில
போகக் கூடாது,போட்டோவையும்
வாங்கணும்னு,
புஷ்பா மேம் எங்க பாஸ்கிட்ட
விஷயத்தைச் சொல்லி உதவி
கேட்டிருக்காங்க மதி”

“ம்”

“எங்க பாஸ்சும்,வசந்த்தும்
அந்தப் பொண்ணுகிட்ட
விசாரிக்கப் போனப்ப,அவ
ரெஜீஸ்ஸைப் பத்தி
சொல்லவே பயந்தா மதி.
பாலாவுக்குத் தெரிஞ்சுடும்.
என் போட்டோவைப்
போட்டுடுவான்னே திரும்பத்
திரும்ப சொல்லிட்டு
இருந்திருக்கா.நான் பணம்
கொடுத்து என் போட்டோவை
வாங்கிக்குவேன்.நீங்க என்
விஷயத்தில தலையிடாதீங்கன்னு
பயங்கரமா கத்தி கலாட்டா
பண்ணதோட,தற்கொலை
பண்ணிக்கிறதுக்கும் முயற்சி
பண்ணி இருக்கா மதி”

“என்ன!!”

“வசந்த் அந்தப்
பொண்ணைக் காப்பாத்திட்டான் மதி”

“அப்பாடி”என்று நிம்மதியாக
மூச்சை வெளியிட்டான் மதிவதனன்.

பாவம்!புதைகுழி என்று
தெரியாமல் கால் வைத்தாயிற்று!
வெளியேறுவது அத்தனை
எளிதில்லையே!

“மதூ...ரெஜீஸ் வீட்டில
அந்தப் பொண்ணோட சிடி
கிடைச்சுதா”

“கிடைச்சுது மதி.தனியா
எடுத்து என் ஹேண்ட்பேக்ல
வைச்சுட்டேன்.வீட்டுக்குக்
கொண்டு போய் பழையப்
பொருட்களோடப்
போட்டு எரிச்சுட்டேன்”

“ம்.அந்தப் பொண்ணு எப்ப
சமாதானமாகி,
உங்ககிட்ட ரெஜீஸ்ஸைப்
பத்தி சொன்னா மது”

“எங்க பாஸ் அப்பப்
பேசாமத் திரும்பி வந்துட்டார்
மதி.ஆனா,“அவ என்
பொண்ணு மாதிரி.சீக்கிரமே
அவளை இந்தப் பிரச்சனையில
இருந்து வெளியில கொண்டு
வந்துடணும்னு”
வசந்த் கிட்ட வருத்தப்பட்டுப்
பேசி இருக்கார் மதி”

“வசந்த் உன்கிட்ட வந்து
சொல்லி இருப்பான்.நீ உடனே
உங்க பாஸ்சுக்கு உதவி
பண்ணக் கிளம்பி இருப்பே”

“ம்.அந்தப் பொண்ணு அவ
அப்பா மாதிரி இருக்கிற ஒருத்தர்
கிட்டப் பேச விரும்பாத,பேசத்
தயங்கின விஷயத்தை,
என்கிட்ட சொன்னா மதி.
ஒரு மாசமா அந்தப்
பொண்ணுகிட்ட ரொம்பப்
பொறுமையா பேசி,அவளைப்
பேச வைச்சேன் மதி”

“அவன் நல்லவன்னு
நினைச்சேன்கா...சும்மா
பார்க்கத்தான் போனேன்.
ஆனா அவன்...அந்த பிராடு...
எனக்கு என்ன கொடுத்தானோ
தெரியலை...நான் மயங்கிட்டேன்.
கண் விழிச்சப்ப...என் கார்ல
இருந்தேன்...என்ன நடந்துச்சுன்னே
எனக்குத் தெரியலைக்கா.
அவன்...அவன் என் போட்டோவை
எனக்கு அனுப்பினப்ப தான்...
நான்...என் வாழ்க்கையை...
என் முட்டாள்தனத்துனால
அழிச்சுட்டேன்னு புரிஞ்சுது.சிடி...
சிடியில போட்டோ...அதை அதை...
என்னை மிரட்டிப் பணம்
வாங்கிட்டே இருந்தான்கா.
சிடியைக் கொடுக்கவே இல்லை.
சிடியைக் கேட்டு சண்டைப்
போட்டு இருந்தப்ப தான்...
அம்மா வந்துட்டாங்க.அப்ப
இருந்து தினமும்...போட்டோவை
போட்டுடுவேன்...வீடியோ எடுத்து
வைச்சிருக்கேன்...அதையும்...
ஐயோ...அக்கா...நீங்க அந்த
சிடியை எப்படியாவது அவனுக்குத்
தெரியாம எடுத்துட்டு
வந்துடுங்கக்கா.. அங்கிள்...
வசந்த் அண்ணா...
அவங்க...அதைப் பார்க்கக்
கூடாதுக்கா...ப்ளீஸ்கா...”

கை கூப்பிக் கண்ணீரோடு
தன்னிடம் கெஞ்சிய இளமுகத்தை
நினைத்துப் பார்த்தாள் மதுரா.

“அந்தப் பொண்ணு கிட்டப்
பேசினதுல,ரெஜீஸ் ராங்கால்
மூலமா அந்தப் பொண்ணுக்குப்
பழக்கமானது தெரிஞ்சுது மதி.
பாலாங்கிற பேர்ல அந்தப்
பொண்ணு கிட்டப் பழகி
இருக்கான்.தன் போட்டோவை
எதாவது பண்ணிடுவானோன்னு
அந்தப் பொண்ணு பயந்து பயந்து
செத்துட்டு இருந்தா மதி.என்கிட்ட
எப்படியாவது அந்த சிடியைக்
கொண்டு வாங்கன்னு கெஞ்சிக்
கேட்டா மதி”

“உங்க பாஸ் என்ன சொன்னார்
மது?நீ சிடியைக் கொண்டு வர
ஒத்துக்கிட்டாரா?”

“ஆமாம் மதி”

“உங்க பாஸ் தப்புப்
பண்ணிட்டார் மது.அவர்
எப்படி ஒத்துக்கிட்டார்”

மதிவதனன் குரலில்
வெளிப்பட்ட உணர்வு என்னவென்று
அறிய முயற்சிப்பவள் போல,
அவன் முகத்தைப் பார்த்தாள்
மதுரா.

ரெஜீஸ் உடனான காதல்
நாடகம் தங்களுக்குள்
இடைவெளியை ஏற்படுத்தி
விடுமோ என்ற அச்சம்
மதுராவினுள் வேர் விட்டது.

மதுரா மௌனித்து விட்டதை
உணராமல்,தன் போக்கில் பேசிக்
கொண்டிருந்தான் மதிவதனன்.

“உனக்கு அவ்வளவு பெரிய அடி
பட்டு உயிர்ப் பிழைச்சு...அப்ப
தான் ஹாஸ்பிடல்ல இருந்து
வந்திருக்கே.நீ சிடியைக் கொண்டு
வர்றேன்னு சொன்னா..உங்க
பாஸ் எப்படி ஒத்துக்கிட்டார் மது?”

ஓ!இது தான் இவன் பிரச்சனையா
என முகம் மலர்ந்தாள் மதுரா.

“பொறுமை பொறுமை.நான்
சிடியைக் கொண்டு வர்றேன்னு
சொன்னவுடனே,எங்க பாஸ் ஒ
த்துக்கலை மதி.உன்னை
மாதிரியே பேசி நான் ரெஸ்ட்
எடுக்கணும்னு சொல்லிட்டார் மதி”

“அப்புறம் எப்படி மது நீ
சிடியை எடுக்கப் போனே”

“எங்க பாஸ் என்னோட
நிலைமையை,அந்தப்
பொண்ணோட மனநிலையை,
அவ பயத்தைப் பத்தி
எல்லாம் யோசிச்சு,ரெஜீஸ்ஸை
தந்திரமா நெருங்கி,அவனுக்குத்
தெரியாம சிடியை எடுக்கணும்,
அவனுக்குத் தண்டனையும்
கிடைக்கணும்னு ஒரு
திட்டத்தோட எங்களை
சந்திச்சார் மதி”

“என்ன திட்டம் மது”

“தந்திரத்தைத் தந்திரத்தால
வீழ்த்தற மாதிரி,
ராங்கால் ரெஜீஸ்ஸை அந்த
ராங்கால் காதலாலயே
வீழ்த்தணும்கிற திட்டம்
தான் மதி”

இப்படித்தான் உருவானதா
மதுவின் காதல் நாடகம்?

“உடனே சிடியைக் கொண்டு
வர முடியாதது,ஒரு குறையா
இருந்தாலும்,இந்தத் திட்டத்தோட
பயன் பெரிசு மதி”என்று மதுரா
வாய் சொன்னாலும்,
மனது முரண் பட்டது.

என்ன தான் நன்மை
இருந்தாலும்,நான் இந்தக்
காதல் நாடகத்தை ஏற்றிருக்கக்
கூடாது.என் மதி மனது
மிகவும் வேதனைப் பட்டிருக்கும்.

என் மது பிறர் நலன் கருதியே
இக்காதல் நாடகத்தை
ஏற்றிருக்கிறாள்.இது அத்தனை
எளிதான காரியமில்லையே!
தன் மனதோடு எத்தனை
போராடி இருப்பாள்?என்
மது மனது யாருக்கும் வராது.

மதுவின் காதல் நாடகத்தால்,
அந்தப் பெண்ணிற்குப் பாதிப்பு
ஏற்படாமல் ரெஜீஸ் அறியாமல்
சிடியைக் கைப்பற்றியதோடு,
ரெஜீஸ் இனி எந்தப் பெண்ணோடும்
காதல் நாடகம் ஆடாமல் தடுத்தும்
ஆயிற்று.என் மதுவால் பல
பெண்களின் வாழ்வு
காப்பாற்றப் பட்டிருக்கிறது.

“மதீ...”

“நீ இந்தத் திட்டத்துக்கு
ஒத்துக்கிட்டு,ரெஜீஸ்ஸோட
காதல் நாடகத்துக்கு
முற்றுப்புள்ளி வைச்சிருக்கே
மது.ரெஜீஸ்ஸோட காதல்
வலையில இருந்து பலப்
பெண்களைக் காப்பாத்தி
இருக்கே.உங்க பாஸ் சரியா
தான் யோசிச்சிருக்கார் மது”

“எங்க பாஸ் சொன்னதும்,
நான் முதல்ல ஒத்துக்கலை
மதி.வசந்த்தும் வேண்டாம்னு
சொன்னான்.அவனுக்கு இந்த
லவ் டிராமா சுத்தமா
பிடிக்கலை.வேண்டவே
வேண்டாம்னு சொன்னான் மதி”

மதுவிற்கு ஆபத்து வந்து
விடுமோ,பின்னாளில் அவள்
வாழ்க்கையில் குழப்பம்
வந்து விடுமோ என்றெல்லாம்
யோசித்து அஞ்சியிருப்பான்.
வசந்த்திற்கு எப்போதும்
மது மீது அதிக அன்பு.

“சிடியை எடுக்கிறதுக்கு
மட்டும் இல்லை.பல
பெண்களோட வாழ்க்கை
பாழாகாமத் தடுக்கவும்
தான் இந்த நாடகம்னு”எங்க
பாஸ் சொல்லவும்,
என்னால மறுக்க முடியலை
மதி.மது ரெஜீஸ் கிட்டப்
போன்ல மட்டும் தான்
பேசுவான்னு சொல்லி
வசந்த்தையும் சமாதானப்
படுத்திட்டார் மதி”

“ரெஜீஸ் கிட்ட எப்படிப்
பேச ஆரம்பிச்சே மது?
அவனுக்கு உன் மேல
சந்தேகம் வரலையா”

“புஷ்பா மேம் பொண்ணு
கிட்ட ரெஜீஸ்ஸோட ரெண்டு
நம்பர் இருந்துச்சு மதி.அவன்
பேசிட்டிருந்த நம்பர்,
இன்னொன்னு அவன்
பிளாக்மெயில் பண்ற
நம்பர்.நான் அவன்
பிளாக்மெயில் பண்ண
யூஸ் பண்ற நம்பருக்குப்
போன் பண்ணேன் மதி.சும்மா
ஒரு பேர் சொல்லி கேட்டுட்டு,
சாரி, ராங்நம்பர்னு உடனே
கட் பண்ணிட்டேன்.நாங்க
நினைச்ச மாதிரியே பத்து
நாள் கழிச்சு ஒரு புது நம்பர்ல
இருந்து எனக்கு மெசேஜ்
வர ஆரம்பிச்சுது மதி”

“பிளாக்மெயில் பண்ண
யூஸ் பண்ற நம்பர்ல இருந்து
பேசினா எதாவது பிரச்சனை
வந்துடும்னு புது நம்பருக்கு
மாறிட்டானா”

“ம்ஹூம்!ஒவ்வொரு
பொண்ணுக்கு ஒவ்வொரு
நம்பர்னு வைச்சிருப்பான்
மதி.அவன் வீட்டில
அவ்வளவு சிம் குவிஞ்சு
கிடந்துச்சு மதி”

“ஏன் மது,உன்கிட்டப் பேச
ஆரம்பிச்சதுக்கு அப்புறமும்
ரெஜீஸ் அந்தப் பொண்ணை
பிளாக்மெயில் பண்ணினானா”

“ஆமாம் மதி.ரெண்டு தடவை
பணம் வாங்கி இருக்கான்.ஆனா
சிடியைக் கொடுக்கலை.பணம்
வாங்கிறதுக்கு ஒவ்வொரு
தடவையும்,
ஒவ்வொருத்தரை அனுப்பி
இருக்கான் மதி.
மாட்டிக்கக் கூடாதுன்னு
ரொம்பவே உஷாரா
இருந்திருக்கான்”

“பணம் கொட்டற சிடியைக்
கொடுப்பானா?இவனை எல்லாம்...”

“தெரிஞ்சது தானே மதி?
கோபப் படாதே.
மெசேஜ்லயே ரெண்டு மாசம்
பேசிட்டு,அப்புறம் தான்
போன் பண்ணிப் பேச
ஆரம்பிச்சான் மதி.
ரெஜீஸ் தானான்னு புஷ்பா
மேம் பொண்ணு கிட்டக்
கேட்டுக் கன்பார்ம்
பண்ணினோம்.எங்க
நாடகம் ஆரம்பமாச்சு.
பிரெண்ட்ஸ்ஸா இருக்கலாம்னு
சொன்னான்.ரொம்ப உத்தமனா
பேசுனான்.அம்மா,
அப்பாவுக்காகவே வாழ்றதா
உருகினான் மதி.ஏதோ
பிரைவேட் கம்பெனியில
வேலை பார்க்கிறதா
சொன்னான்.ரொம்பக்
கஷ்டப்பட்டு வாழ்க்கையில
முன்னேறிட்டு இருக்கேன்னு
பரிதாபமா கதை
சொன்னான் மதி”

மதிவதனன் சிரிக்க,
“எதுக்கு சிரிக்கறே மதி?”
என்று சிணுங்கினாள் மதுரா.

“நீ என்னவெல்லாம் ரீல்
சுத்தி இருப்பேன்னு
நினைச்சுப் பார்த்தேன் மது”

“நான் ரொம்ப சாது
பொண்ணா நடிச்சேன் மதி.
மேல நாலு பிளைட் பறக்குது.
கீழ நாலு கப்பல்
மிதக்குதுங்கிற அளவுக்கு
பெரிய ரீல்லா சுத்தினேன் மதி”

“ரெஜீஸ்ஸோட பணத்தாசை
அவனை உன்னை நோக்கி
வர வைச்சிருக்கும்”

“அதே தான் மதி.“எனக்குக்
கோயம்புத்தூர்ல வேலை
கிடைச்சிருக்கு.நாம சீக்கிரமே
சந்திக்கலாம்னு”டயலாக்
விட்டதும்,ரெஜீஸ் நாங்க
விரிச்ச வலையில
விழுந்துட்டான்னு புரிஞ்சுக்கிட்டோம்”

“அவன் உன் போட்டோ
கேட்டிருப்பானே.எப்படி
சமாளிச்சே மது”

“புது ட்ரிக்கா,அவன்
போட்டோவே கேட்கலை மதி.
உன்னைப் பார்க்காமயே
நேசிக்க ஆரம்பிச்சுட்டேன்
அஞ்சு.நீ எப்படி இருந்தாலும்,
நீதான் என் மனைவின்னு
அவன் உருகுனதைக்
கேட்டிருக்கணுமே”மதுரா
வாய் விட்டுச் சிரிக்க,
மதிவதனனும் அவளுடன்
இணைந்து சிரித்தான்.

“அவன் போட்டோவை
அனுப்பலையா”

“முகமே தெரியாத மாதிரி
ஒரு போட்டோவை
அனுப்பினான் மதி.அவன்
போட்டோ இல்லைன்னு
தான் சொல்லுவேன்.எந்த
வகையிலயும் மாட்டிக்கக்
கூடாதுன்னு உஷாரா
இருந்திருக்கான் மதி”

“அவ்வளவு உஷாரா இருந்தும்,
உன்கிட்ட ஏமாந்துட்டானே மது.
அவனை நீ நல்லாவே
முட்டாளாக்கி இருக்கே
மது.அஞ்சு அப்பாவி,
அழகிருக்கு,அறிவில்லைன்னு
சொன்னானே.
அந்த சூழ்நிலையிலயும் எனக்கு
சிரிப்பு வந்துடுச்சு மது.
அட முட்டாளே!என்
மதுவுக்கு ஆண்டவன்
அழகையும்,அறிவையும்
ஜாஸ்தியாவே வைச்சிருக்கான்னு
நினைச்சுக்கிட்டேன்”

“அவன் அஞ்சுன்னு
சொன்னதும் குழம்பிட்டயா”

“முதல்ல யோசிச்சேன்.அப்புறம்
புரிஞ்சுக்கிட்டேன்”

மதிவதனனின் கைக்காயத்தை
சட்டைக்கு மேலேயே மெல்ல
வருடினாள் மதுரா.

“மதூ..இது சீக்கிரம்
சரியாயிடும்.நீ வருத்தப்
படாதே”

“இந்தக் காயம்...எனக்கு
ஏற்பட்டிருக்கணும்.நான்
உண்மையை மறைச்சனால...நீ
என் பின்னாடி வந்து...எனக்கு
நிறைய அடி பட்டிருக்கு மதி.
அப்பக் கூட எனக்கு
இவ்வளவு வலிச்சதில்லை...”

“காதல் இப்படித்தான் மது.
எத்தனையோ துன்பங்களைத்
தாங்கற மனசால,தன்னோட
வலியை சகிச்சுக்க முடியற
மனசால,தான்
நேசிக்கிறவங்களுக்கு ஏற்படற
சின்ன வலியைக் கூடத்
தாங்க முடியாது”

“உண்மை தான் மதி”

“வலியைக் குறைக்க
மருந்து போடாம இப்படி
வருத்தப் பட்டே இருந்தா
எப்படி மது”மதிவதனன்
அவள் சோகத்தை மாற்ற முயற்சிக்க.

“மருந்தா...நானா...”

“இப்படி என் தோள்ல
சாய்ஞ்சுகிட்டா போதும்.என்
வலி எல்லாம் பறந்து
போயிடும்”

மதுராவை தன் தோளில்
சாய்த்து அணைத்துக்
கொண்டான் மதிவதனன்.

“மதீ...”

“சொல்லுடா”

“நான் ரெஜீஸ் கூடப் பேச
ஒத்துக்கிட்டப்ப,புஷ்பா
மேம் பொண்ணுக்கு எந்த
பாதிப்பும் வந்துடக் கூடாது,
அந்த சிடியை எவ்வளவு
சீக்கிரம் முடியுமோ அவ்வளவு
சீக்கிரம் எடுத்துடணும்கிறது
மட்டும் தான் என் மனசுல
இருந்துச்சு”

“தெரியும்டா மது”

“அப்ப...நான் உன்னைப்
பார்க்கலை.என் மனசுல
காதல் இல்லை மதி.அப்ப
மட்டும் நீ என் மனசுல
இருந்திருந்தா...நான்
ரெஜீஸ் கூடப் பேச
சம்மதிச்சிருக்க மாட்டேன்
மதி.வேற எதாவது வழியில
அந்தப் பொண்ணுக்கு
பாதிப்பு வராத மாதிரி
சிடியை எடுத்திருப்பேன்.உன்
மனசைக் காயப் படுத்தற
எந்த ஒரு விஷயத்தையும்,
எதுக்காகவும்,யாருக்காகவும்
என்னால செய்ய முடியாது மதி”

“எனக்குத் தெரியும்டா.நான்
என்ன நினைப்பனோன்னு நீ
மனசைப் போட்டுக் குழப்பிட்டு
இருக்காதே.ரெஜீஸ்ஸைப்
பத்தி நீ எந்த விளக்கமும்
கொடுக்க வேண்டாம்.அது
முடிஞ்சு போன விஷயம்.
விட்டுடு”

“நிஜம்மாவா”மதுரா அவன்
முகம் பார்த்துக் கேட்க.

“நிஜமா தான் என்னோட
க்யூட் குட்டி மதுப் பொண்ணே”
மதிவதனன் புன்னகை மதுரா
முகத்திலும் புன்னகையை
வரவழைத்தது.

“எனக்கு ரெண்டு ஜடை
இப்பவும் அழகாயிருக்கா”

“எப்பவும் அழகா இருக்கும்”

அந்த நள்ளிரவில் காதலர்களைத்
தொந்தரவு செய்ய விரும்பாதது
போல் மெல்ல வீசியது காற்று.

தித்திக்கும்❤️❤️❤️
 
Top