கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-27

Nilaa

Moderator
Staff member
27
உனைக் காப்பதே
என் காதலாகும்!
கணை வந்து தாக்கினால்
என் காதல் ஏற்கும்!
நீ வீழாமல் காக்கும்!

ள்ளிரவு.

மதிவதனன் தன்
படுக்கையில் சாயவும்,
அவன் கைபேசி
ஒலிக்கவும் சரியாக
இருந்தது.

“வீட்டுக்கு வந்துட்டேன்,
பெட்ல படுத்துட்டேன்,
தூங்கப் போறேன் மது.
நீயும் தூங்கு,குட்நைட்.
ஸ்வீட் ட்ரீம்ஸ்”சிரிப்புடன்
இணைப்பைத் துண்டித்து
விட்டுக் கைபேசியில்
இருந்த மதுராவின்
புகைப்படத்தைப்
பார்த்தான் மதிவதனன்.

உன் மதி என்ன சின்னக்
குழந்தையா மது?வீட்டில
கொண்டு வந்து விடறேன்னு
அடம் பிடிக்கறே?உன்
மதினால நல்லா நடக்க
முடியுது.ஏன் நம்ப
மாட்டீங்கறே?நான் பத்திரமா
வீட்டுக்கு வந்துட்டேன்.என்
பட்டு இப்ப அமைதியா
தூங்குமாம்.

மதுராவுடன் பேசி
முடித்து விட்டு,அருகிருந்த
மேஜையில் கைபேசியை
வைத்து விட்டுக்
கண்களை மூடினான்
மதிவதனன்.

விழிகள் உறங்க மறுக்க,
மதுராவை நினைத்தபடியே
விழித்திருந்தான் மதிவதனன்.

ஒரு வழியாக மதுவைச்
சுற்றியிருந்த புதிர்
அனைத்தும் நீங்கி விட்டது.

பாவம் என் மது.எப்படித்
தான் அந்தக் கயவனின்
உளறல்களை சகித்துக்
கொண்டிருந்தாளோ?

வசந்த்தால் ரெஜீஸ்
இடத்திற்குச் சென்று அந்த
சிடியைக் கொண்டு
வந்திருக்க முடியும்.
ஆனால்,அது பிரச்சனைக்குத்
தீர்வாகி இருக்காது.
அவனை உள்ளேயும் தள்ளி
இருக்க முடியாது.

அப்பெண்ணின் படங்களை
சிடியில் மட்டும்
வைத்திருப்பானென்று என்ன
நிச்சயம்?அவன் மொபைல்லில்
இருக்கலாம்,அவன் நண்பர்கள்
மொபைல்லில் இருக்கலாம்.
கம்ப்பியூட்டர்,
லேப்டாப் எத்தனை இருக்கிறது?

அது மட்டுமின்றி,குறிப்பிட்ட
ஒரு சிடி மட்டும் இல்லை
என்றால்,அவனுக்குச் சந்தேகம்
வரும்.மறுநொடியே அப்பெண்ணின்
புகைப்படத்தை இவ்வுலகமே
பார்க்கும்படி செய்திருப்பான்.
பெரும் விபரீதம் நடந்திருக்கும்.

பல கோணங்களிலும் நன்கு
யோசிக்கப் பட்டே மதுவின்
நாடகம் தொடங்கி இருக்கிறது.
இன்று அக்கயவனின் கதைக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்
பட்டிருக்கிறது.

என் மது ஏற்றுக் கொண்ட
வேலையை வெற்றிகரமாக
முடித்து விட்டாள்.நான் அங்கு
சென்றிருக்கக் கூடாது.என்னால்
எதாவது குழப்பம் ஏற்பட்டு
ரெஜீஸ் தப்பிச் சென்றிருந்தால்...
கடவுளே!மது,வசந்த்தின்
உழைப்பு வீணாகி இருக்கும்.
ரெஜீஸ் எங்காவது
தலைமறைவாகி இருப்பான்.
அனைவருக்கும் தொல்லை.

அந்த ஹோட்டலில் கூட
நான் மது பெயரைச்
சொன்னேனே.நல்லவேளை
ரெஜீஸ் கவனிக்கவில்லை.
என்னைக் கண்டதும் தன்
திட்டம் பாழாகி விடுமோ
என்று மது பயந்திருப்பாள்.

சாரி மது.நீ என்னிடம்
சொல்லி இருந்தால் நான்
இடையிட்டிருக்க மாட்டேனே.

அந்த தடியன்...அவனும்
அஞ்சு என்றானே.
நானும் அதை
கவனிக்கவில்லை.
கவனித்திருந்தால்...
அப்போதும் மதுவைப்
பின் தொடர்ந்திருப்பேன்.
ஏன் இந்தப் பொய்ப்
பெயர் என்று அறியத்
துடித்திருப்பேன்.

இப்போது தான் ஞாபகம்
வருகிறது.அந்த அறை பூட்டி
இருந்ததே.மது எப்படி
உள்ளே சென்றாள்?

மதி!மதுவிற்குப் பூட்டைத்
திறப்பதெல்லாம் ஒரு
விஷயமே இல்லை.எதற்கு
இத்தனை யோசிக்கிறாய்?
உன் மது ஒரு டிடெக்டிவ்.
மறந்து விட்டாயா?

ஆம்.எந்தக் கதவையும்
மதுவால் சுலபமாகத் திறந்து
விட முடியுமே.அறையினுள்
சென்று தாழிட்டுக்
கொண்டவள்,என்னைக்
காக்க வெளிப்பட்டு
இருக்கிறாள்.

ரெஜீஸ் மதுவைப் பற்றி...
ம்ஹூம்!அஞ்சுவைப்
பற்றி அலட்சியமாக
நினைத்து அந்த அறை
அருகிலேயே செல்லாமல்
இருந்து விட்டான்.

மது துப்பாக்கியைப்
பிடித்து நின்ற அந்தக் காட்சி,
என் மனதில் சித்திரமாகப்
பதிந்து இருக்கிறது.மது
கண்களில் தான் எத்தனை
கோபம்?என்ன செய்வதென்ற
பயமோ,குழப்பமோ துளியும்
இல்லை!

என் நலனொன்றைத் தவிர,
வேறு எதற்கும் என் மது
அஞ்ச மாட்டாள்.

சிறு வயது முதலே மதுவிற்குத்
துணிச்சல் அதிகம் தான்!
போதாதற்கு,அத்தை சிறு
வயதிலேயே அத்தனை தற்காப்புக்
கலைகளையும் கற்கச்
செய்து விட்டார்.

பத்திரிக்கை வேலையில்
உன் மனது நிறைவு
கொள்ளவில்லையா மது?ஏன்
இந்தத் துப்பறியும்
வேலையில் ஆர்வம் கொண்டாள்?

அத்தை பயப்படுவது
நியாயமே!எனக்கும்
பயமாகத்தான் இருக்கிறது.
ஆனால் மது?அவள் கனவை
நான் கலைப்பதா?

மது தன் வேலையை மிகவும்
நேசிப்பதாகத் தெரிகிறது.
வேலையை விட்டு விட்டேன்
என்று சொன்ன போது அவள்
விழிகளில் தெரிந்த வேதனை.
நான் மறுத்தவுடன் தெரிந்த
நிராசை!

என்னை மன்னித்து விடு
மது.நீ ஆபத்தைத் தேடிச்
செல்வதைக் காணும்
தைரியம் உன் மதிக்கு
இல்லை.நிச்சயம் இல்லை.

என் மது ஒரு டிடெக்டிவ்
என்று சொல்வதற்குப்
பெருமையாகத்தான்
இருக்கிறது.ஆனால்,
பெருமையோடு அச்சமும்
உடன் எழுகிறதே!

மதிவதனன் கைபேசி
மதுரா அழைப்பதைச்
சொல்ல,குழப்பத்துடன்
எடுத்துக் காதில்
வைத்தான் அவன்.

ஏன் இவ்வளவு நேரம்
கழித்து அழைக்கிறாள்?

“என்னம்மா”

“உன்கிட்ட ஒரு விஷயம்
சொல்லலை மதி”

“சொல்லு குட்டி”

“மதீ..அதூ...நீ வசந்த்தைப்
பத்தி என்ன நினைக்கறே”

“வசந்த்தா....வசந்த் நம்ம
மயூவுக்குப் பொருத்தமா
இருப்பாருன்னு
நினைக்கிறேன் மது”
என்றான் குழப்பம் மறைய.

“மதீ!!உனக்கு...”

“தெரியும் மது.நானா
பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்”

“நானும்...நானா தான்
பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்
மதி.அத்தைகிட்ட சொல்லிட்டியா”

“இல்லைடா.இனி தான்
பேசணும்”

“வசந்த் ரொம்ப நல்ல
பையன் மதி.அவன் அப்பா
அம்மாவும் ரொம்ப நல்லவங்க.
மயூவை நல்லா பார்த்துக்குவாங்க.
உங்க அளவுக்கு வசதி
இல்லைனாலும்,ஓரளவுக்கு
வசதியானவங்க மதி.சொந்த
வீடு,கார் எல்லாமே இருக்கு
மதி.மயூவுக்கு எந்தக்
குறையும் இருக்காது”

“.........”

“வசந்த் வேலையை
நினைச்சுத் தயங்கறயா மதி”

“ம்”

“........”

“மயூ விருப்பத்துக்கு
மறுப்பு சொல்ல எங்கனால
நிச்சயமா முடியாது மது.நான்
அம்மாகிட்டப் பேசறேன்.நீ
கவலைப் படாதே.
வசந்த் தனக்காக ஒருத்தி
காத்திருப்பாங்கிறதை
மனசுல வைச்சுக்கிட்டு
கவனமா வேலை
செய்வாருன்னு நம்பறேன்”

“தேங்க்ஸ் மதி”

“தூங்கு.நாம நாளைக்குப்
பேசலாம்.குட்நைட்”

கைபேசியை அணைத்து
வைத்து விட்டுத் தங்கை
குறித்து யோசிக்கலானான்
மதிவதனன்.

மயூ விருப்பத்திற்கு என்னால்
தடையாக இருக்க முடியாது.
ஆபத்தான வேலை என்று நான்
மறுத்தாலும் மயூ கேட்க மாட்டாள்.
என்னைக் கேலி செய்வாள்.

மது சொல்வது போல் எந்த
வேலையில் தான் ஆபத்து
இல்லை?கவனத்தோடு
இருக்க வேண்டியது தான்!

மதிவதனன் யோசித்துக்
கொண்டே இருக்க அவன்
உறங்கட்டும் எனக்
காத்திருக்காமல் இரவு
வேகமாக நகர்ந்தது.

ந்த மதிய நேரத்தில்,
மதிவதனன் கையெழுத்திட்ட
பைல்களை எடுத்துக்
கொண்டு வெளியேறினார்
அவனுடைய உதவியாளர்.

“உள்ள வரலாமா”

“வாங்க வசந்த்.என்ன
இது கேட்டுட்டு,
உட்காருங்க”மதிவதனன்
அமர்ந்திருந்த சோபாவிற்கு
எதிர் சோபாவில் அமர்ந்தான்
வசந்தன்.

“பவி கிளம்பிட்டானா?பஸ்
ஏத்தி விட்டீங்களா”

“ம்.பஸ் கிளம்பினதும் தான்
வர்றேன் மதி.ப்ரீயா
இருக்கீங்களா,உங்ககிட்ட
இப்பப் பேசலாமா”

“சொல்லுங்க வசந்த்”

“நான் நாளைக்குக்
கிளம்பறேன் மதி.என்னை
உங்க வீட்டில தங்க வைச்சு,
நல்லா பார்த்துக்கிட்டீங்க.உ..”

“தேங்க்ஸ் சொல்லிடாதீங்க
வசந்த்.வேற எதாவது
சொல்லணும்னா சொல்லுங்க”

“.........”

“சொல்லுங்க வசந்த்.
என்கிட்ட என்ன பேச வந்தீங்க”

மயூரியைப் பற்றிப் பேச
வந்திருக்கிறானா?இல்லை...
வேறு எதாவதா...?

“மதீ...மது ரெஜீஸ்ஸோட
நாடகம் ஆடினது,
அந்தப் பொண்ணுக்கு
உதவி பண்ண மட்டுமில்லை,
ரெஜீஸ் கிட்ட இனி யாரும்
ஏமாறக் கூடாதுன்னு தான்.
அவனைத் தப்பிக்க விடக்
கூடாதுன்னு தான்.நீங்க
புரிஞ்சுக்குவீங்க.
மதுவைத் தப்பா நினைக்க
மாட்டீங்கன்னு எனக்குத்
தெரியும்.இருந்தாலும்,
என்னால சொல்லாம இருக்க
முடியலை.நீங்க எப்பவும்
மதுவைப் பத்திக் குறைவா
நினைக்கக் கூடாது மதி”

மதிவதனன் எழவும்
வசந்தனும் எழுந்து நின்றான்.

“உங்களுக்கு மதுவைப்
பத்தின எந்தக் கவலையும்,
பயமும் வேண்டாம் வசந்த்.
மது அவ கடமையை
செஞ்சிருக்கா.அதைத்
தாண்டி நான் எதுவும்,
எப்பவும் நினைக்க மாட்டேன்”

“தேங்க்ஸ் மதி.தேங்க்
யூ ஸோமச்”உணர்ச்சி
வசப்பட்டவனாய்
மதிவதனனை
அணைத்துக்
கொண்டான் வசந்தன்.

பாவம்!மது வாழ்வு
குறித்து மிகுந்த
கவலையுடன் இருந்திருக்கிறான்.

“வசந்த்...”

“சாரி மதி”கைகளை
விலக்கிக் கொண்டு,
மீண்டும் சோபாவில்
அமர்ந்தான் வசந்தன்.

“நாங்க உண்மையை
மறைச்சு...உங்களைப்
பிரச்சனையில மாட்டி
விட்டுட்டோம்.எங்களை
மன்னிச்சுடுங்க மதி”

“முதல்ல இந்த தேங்க்ஸ்,
சாரியை விடுங்க வசந்த்”

“உங்க உயிருக்கு
ஆபத்து வந்துடுச்சே மதி.
எங்கனால எவ்வளவு வலி
உங்களுக்கு?நாங்க
உங்களை அங்க
எதிர்பார்க்கலை மதி”

“என்னோட வலிக்கு நான்
தான் பொறுப்பு வசந்த்.
உங்களைக் குற்றம்
சொல்லாதீங்க.
அந்தக் காட்டுக்குள்ள என்
காரைப் பார்த்து,
மதுகிட்ட சொல்லி சரியான
சமயத்தில என்னைக்
காப்பாத்தினது நீங்க
தானே வசந்த்?நான் தான்
உங்களுக்கு நன்றி
சொல்லணும் வசந்த்”

“போதும் போதும்.நாம
அதிகமாவே தேங்க்ஸ்
சொல்லிட்டோம் மதி.
நண்பர்களுக்கு நடுவுல
இதெல்லாம் வேண்டாமே”

இது வரை மதிவதனன்,
வசந்தன் இடையேயான
நட்பு ஒரு இடைவெளியுடன்
இருந்து வந்தது.இப்போது
அவ்விடைவெளி குறையத்
தொடங்கியது.

“அந்த ரெஜீஸ்னால இனி
வெளியில வர முடியாதல்ல வசந்த்”

“வர முடியாதுன்னு தான்
நாங்களும் நினைச்சுட்டு
இருந்தோம் மதி”

“வசந்த்?”

“ரெஜீஸ்சுக்கு யாரோ ஒரு
பெரிய விஐபியோட
தொடர்பிருக்கிறதா
சொல்றாங்க மதி.அதனால
அவன் வெளியில வர
வாய்ப்பிருக்கு மதி”

வசந்தன் கைபேசி
ஒலி எழுப்ப,“எங்க பாஸ்
தான் கூப்பிடறார் மதி”
என்றான்.

“பேசுங்க வசந்த்.நாம
அப்புறம் பேசலாம்”

“தேங்க்ஸ் மதி”கைபேசியைக்
காதில் வைத்தபடி வெளியேறினான்
வசந்தன்.

மதிவதனனைப் புதிதாக ஒரு
பயம் பிடித்துக் கொள்ள,
தலையைப் பிடித்துக்
கொண்டான்.

அந்த ரெஜீஸ் வெளியில்
வரக் கூடாது. அவனால்
மதுவிற்கும்,வசந்த்திற்கும்
ஆபத்து ஏற்படும்.மதுவும்,
வசந்த்தும் தங்களைக்
காத்துக் கொள்ளும் திறன்
பெற்றவர்கள்.
அதில் ஐயமில்லை.ஆனாலும்,
என் மனது அமைதியுறாது.

ஆபத்தோடு போராடுவதை
விட ஆபத்து வராமல்
தடுப்பதே சிறந்தது.

ரெஜீஸ்ஸின் கதைக்கு
மதுரா வைத்த முற்றுப்புள்ளி
நிலைக்குமா?அன்றி அழியுமா?

தித்திக்கும்❤️❤️❤️
 
Top