கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-29

Nilaa

Moderator
Staff member
29
புது உலகொன்றை
படைத்திடு!
எனை அங்கு
குடியேற்றிடு!
வாழும் காலம் யாவும்
உன் காதல் மட்டும் போதும்!

ஹால் சோபாவில் அமர்ந்து
பத்திரிக்கை ஒன்றைப்
புரட்டிக் கொண்டிருந்தாள்
மதுரா.தொலைக்காட்சியில் பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது.

“ராதா,ராதா ”சாரதாவின்
அழைப்பில்,பத்திரிக்கையைப்
போட்டு விட்டு எழுந்தாள் மதுரா.

“வாங்கத்தை.வாங்க.
அம்மாவைக் கூப்பிடறேன்.
உட்காருங்க”கதவருகே
சென்று அழைத்தாள் மதுரா.

“இரு மது”என மதுராவின்
கைப் பிடித்து நிறுத்தினார்
சாரதா.

“மதி எல்லாம் சொன்னான்
மது.நான் நீ தான் வெளிநாடு
போகணும்னு ஆசைப்
படறயோன்னு தப்பா
நினைச்சுட்டேன்.என்னை ம..”

“அச்சோ!என்ன பேசறீங்க
நீங்க?அதை எல்லாம் விடுங்க.
நீங்க வந்து இப்படி உட்காருங்க”

“மதூ...யா..”பேச்சுக் குரல்
கேட்டு வந்த ராதா,
சாரதாவைக் கண்டு
புன்னகை பூத்தார்.

“வாங்க சாரதா.மது,நீ
போய் நேத்து செஞ்சமே
அந்த ஸ்வீட்,அப்புறம்
பாதாம் பால் இருக்கு,
கொண்டு வா தங்கம்”

மதுரா உள்ளே செல்ல,
தோழிகள் இருவரும்
பேசத் தொடங்கினர்.

“என்ன சாரு,எதாவது
முக்கியமான விஷயமா”

“ஆமாம் ராதா.என்
மருமகளைப் பார்த்துட்டுப்
போகலாம்னு வந்தேன்”

“ம்.இந்த பிரெண்டை இனி
கண்டுக்க மாட்டீங்க”

“அதெப்படி கண்டுக்காம
விட முடியும்?என் செல்லப்
பூனைக் குட்டிக்குக் கோபம்
வந்துடுமே”

“உங்களுக்கு இன்னும்
அதெல்லாம் ஞாபகம் இருக்கா
சாரு”

“என்ன ராதா இப்படிக்
கேட்டுட்டே?நான் தானே
மதுவுக்குப் பூனைக்குட்டி
மாதிரி மேக்கப் போட்டு
விட்டேன்.எவ்வளவு அழகா
இருந்தா?மறக்க முடியுமா?”

“மது சின்ன வயசுல அந்தப்
போட்டோவை அடிக்கடி எடுத்துப்
பார்த்துட்டு இருப்பா சாரு”

“காலம் எவ்வளவு வேகமா
ஓடிடுச்சு?நம்ம பசங்க
குழந்தைகளா இருந்த
அந்த நாட்கள் ரொம்ப
அழகானது ராதா”

“உண்மை தான் சாரு”

இருவரும் தங்கள் பிள்ளைகளின்
மழலைப் பருவத்தை நினைவு
கூர்ந்து ஆனந்தப் பட்டுக்
கொண்டனர்.

“இனி பேரப் பிள்ளைகளைப்
பார்த்து சந்தோஷப் பட
வேண்டியது தான் சாரு”

“ஆமாம் ராதா.சொல்ல
வந்த விஷயம் இப்ப தான்
ஞாபகம் வருது.நம்ம
மயூவுக்கும் கல்யாணத்தை
முடிச்சுடலாம்னு நினைக்கிறேன்
ராதா”

“செஞ்சுடலாம் சாரு.
மாப்பிள்ளை யாராவது
இருக்காங்களா”

“மதுவோட பிரெண்ட்
வசந்த்தைப் பத்தி என்ன
நினைக்கிறே ராதா?அவரோட
குடும்பம் எப்படி?உனக்கு
அவங்க கூட நல்ல பழக்கம்
இருக்கும் இல்லே?”

“வசந்த்...நல்ல பையன் தான்
சாரு.மயூ மாதிரியே
கலகலப்பா இருப்பான்.
அவன் இருக்கிற இடத்தில
சிரிப்புக்குப் பஞ்சமே
இருக்காது.எந்தக் கெட்டப்
பழக்கமும் கிடையாது.
மத்தவங்களுக்கு உதவற
குணம் அதிகம்.அவன் அப்பா,
அம்மாவும் நல்ல மனுசங்க.
வசந்த் ஒரே பையன்.எல்லா
வசதியும் இருக்கு.பிரச்சனை
இல்லாத குடும்பம் சாரு”

“சரி ராதா.மது,மதியோட
நிச்சயதார்த்தத்துக்கு
வசந்த் குடும்பத்தோட
வருவார்.அவர் அப்பா,
அம்மாவைப் பார்த்துட்டு
அப்புறம் முடிவு பண்ணுவோம்”

மதுரா இனிப்போடு வந்ததும்,
சிறிது நேரம் பேசிக்
கொண்டிருந்து விட்டுக்
கிளம்பினார் சாரதா.

தன்னருகில் அமர்ந்து
தன்னையே பார்த்துக்
கொண்டிருக்கும் மகளின்
காதைப் பிடித்துத் திருகினார்
ராதா.

“என்ன கேட்கணும் உனக்கு”

“ராதுவுக்கு வசந்த்தைப்
பிடிக்காதே.எப்படி வசந்த்தைப்
பத்தி ஆஹோ ஓஹோன்னு
சொன்னீங்கம்மா?”

“என் சொந்த விருப்பு
வெறுப்புக்காகப் பொய்
சொல்ல முடியுமா மது?மயூ
எனக்குப் பொண்ணு மாதிரி.
அவ சந்தோஷத்துக்கு நான்
எப்படித் தடையாவேன்?
மயூவுக்கு வசந்த் மேல
விருப்பம் இல்லாம சாரு
வசந்த்தைப் பத்திக்
கேட்டிருக்க மாட்டாங்க”

“ம்”

“அப்புறம் நீ நினைக்கிற
மாதிரி வசந்த்தை எனக்குப்
பிடிக்காம இல்லை.அவனை
நான் வெறுத்ததும் இல்லை.
வசந்த் இங்க வரப் போக
இருந்தா நீ உன் வேலையை
மறக்க மாட்டே.வேலைக்குப்
போறேன்னு அடம் பிடிப்பே.
என் கூட சண்டைப்
போடுவேன்னு நினைச்சேன்.
அதான் வசந்த் இங்க
வர்றதுல,உங்க நட்பு
தொடர்றதுல எனக்கு
விருப்பம் இல்லாம இருந்துச்சு”

“என் செல்ல அம்மாவைப்
பத்தி எனக்குத் தெரியாதா”
என்று சிரித்தாள் மதுரா.

“ஆனா,இப்ப நீங்க உறவாகப்
போறீங்க.நீங்க இனிமேல்
ஒற்றுமையா,சந்தோஷமா
வாழணும்னு ஆசைப் படறேன்
மது.அதே மாதிரி நீ எனக்கு
செஞ்சு கொடுத்த சத்தியத்தை
மீற மாட்டேன்னும் நம்பறேன்”

“உங்க சம்மதம் இல்லாம
நான் வேலைக்குப் போக
மாட்டேன்மா.நீங்க கவலைப்
படாம இருங்க.எனக்கு ஒரு
விஷயம் சொல்லுங்கம்மா”

“என்ன மது”

“நீங்க ஏன் சென்னையில
இருந்து நம்ம கிராமத்துக்குப்
போகாம இங்க வந்தீங்கம்மா?
ஏன் கோவை வர முடிவெடுத்தீங்க?”

“அதுவா,என் செல்லப்
பொண்ணு அப்ப பயங்கர
கோபத்தில இருந்தா.இதுல
நான் கிராமத்துக்கு வேற
கூப்பிட்டுப் போயிருந்தேன்னா...
அவ்வளவு தான்.என்னை
இப்படிப் பட்டிக்காட்டில
அடைச்சு வைச்சுட்டீங்களேன்னு
அம்மா கூட பேசியிருக்கவே
மாட்டா”

“பரவாயில்லையே.ராது கூட
சரியா யோசிச்சிருக்காங்களே”

“வாலு”மகளின் கன்னத்தைச்
செல்லமாகக் கிள்ளினார் ராதா.

“உன்னோட சின்ன வயசு
முழுக்க நீ இங்க தான் இருந்தே
மது.இந்த இடம் உனக்கு
ரொம்பவே பிடிச்ச இடம்.அதான்
அம்மா நம்ம ஊருக்குப்
போகாம இங்க வந்தேன் மது”

“தேங்க்ஸ்மா.லவ் யூம்மா”

“போதும் போதும்.விடு மது”
கழுத்தைக் கட்டிக் கொண்ட
மகளின் கைகளை விலக்கி
விட்டு எழுந்த ராதா,“மதியும்,
வசந்த்தும் இப்ப வந்துடுவாங்க.
போய் ரெடியாகு மது”என்றார்.

“சரிம்மா”

“நம்ம கார்ல போறீங்களா,
மாப்பிள்ளை காரா”

“உங்க மாப்பிள்ளை கார்ல
தான் போறோம்மா.வசந்த்
பிளைட் கிளம்பினதும்
வந்துடுவோம்.உங்க போன்
அடிக்குது பாருங்க”

மதுரா படிகளில் ஏறிச் செல்ல,
கதவைச் சாத்தி விட்டுத்
தன்னறைக்கு விரைந்தார் ராதா.

ரபரப்பான விமான நிலையத்தில்
இருந்து வெளி வந்த மதுராவும்,
மதிவதனனும் வீடு நோக்கிப்
புறப்பட்டனர்.

மதுரா காரை ஓட்ட,அவளருகில்
அமர்ந்திருந்தான் மதிவதனன்.

“பாட்டுப் போடட்டுமா”என்று
கேட்ட மதுரா,ஒலிக்கத் தொடங்கியப்
பாடலில் உடனே பாடலை
நிறுத்தினாள்.

“உனக்கு நான் திரும்ப உன்
வாழ்க்கையில வந்தது
பிடிக்கலையா மதி”

“என்னடா பேசறே”

“மின்னலே நீ வந்ததேனடின்னு
எப்பப் பார்த்தாலும் கேட்டுட்டு
இருக்கியே.அதான் கேட்டேன்”

“என்ன குட்டி இது?அந்தப்
பாட்டு பிடிச்சிருக்கு,கேட்கறேன்.
அவ்வளவு தான்”

“அவ்வளவு தானா?நான்
வந்ததுக்கு அப்புறமும் உனக்கு
இந்தப் பாட்டுத் தான் பிடிக்குதா?”

“என்ன மது சொல்ல வர்றே”

“உனக்கு நிஜமாலுமே
என்னைப் பிடிச்சிருந்தா,
நீ இந்நேரம் வேற பாட்டை
விரும்ப ஆரம்பிச்சிருப்பே.
இப்படி சோக கீதம்
கேட்டுட்டு இருக்க மாட்டே”

“..........”

“நீ நியாயமா என்னைப்
பார்த்ததும்,“மின்னல் ஒரு
கோடி எந்தன் உயிர் தேடி
வந்ததே!லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாகப் பூத்ததேன்னு”
பாடிட்டு இருக்கணும்.அதை
விட்டுட்டு,நம்ம கதை
என்னவோ சோகக் கதை
மாதிரி ஒரு பாட்டைப் பாடிட்டு
இருக்கே”

“என் பட்டுக்கு இந்தப் பாட்டு
தான் பிரச்சனையா?அதான்
பட்டுன்னு ஆப் பண்ணிடுச்சா”
என்று சிரித்தான் மதிவதனன்.

“உனக்குப் பாட்டுத் தெரிஞ்சா
பாடு மதி.கேட்கணும்னு
ஆசையாயிருக்கு”

“நான் பாடினா ஹீரோயின்
என் கூட ஆடணும்”

“நான் அப்புறமா உன் கூட
ஆடறேன்.இப்ப எனக்காக
ரெண்டு லைன் பாடு,ப்ளீஸ்
மதி”

“மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய
ராணி நீ என் காதல்
தேவதையே”

மதிவதனன் உடனே பாடி
விட,”உம்மா!!தேங்க்ஸ் மதி”
என்றாள் மதுரா.

“ஹேய்!இப்படியெல்லாம்
உம்மா கொடுக்கக் கூடாது மது”

“இது ரோடு ஹீரோ”

“சரி.எல்லாத்தையும் சேர்த்து
வைச்சு வட்டியோட அப்புறம்
வாங்கிக்கறேன்”

“சமர்த்து.உனக்கு மியூசிக்
கேட்கணும்னா சந்தோஷமான
மெலடியா கேளு மதி.இப்படி
சோகப் பாட்டைத் தினமும்
கேட்காதே.எப்பவாவது கேளு”

“தங்கள் உத்தரவுப்படியே தேவி”

மதிவதனனின் சிரிப்பை
ரசித்தபடியே காரை ஓட்டிய மதுரா,
வசந்தனைக் குறித்து சாரதா
விசாரித்ததைக் கூற,
பரபரப்புற்றான் மதிவதனன்.

“என்ன சொல்றே மது?வசந்த்,
மயூ பத்தி அம்மாவுக்கு
எப்படித் தெரிஞ்சுது?”

“அத்தை மயூவும்,வசந்த்தும்
பேசறதைப் பார்த்திருக்கலாம்,
கேட்டிருக்கலாம்”

“எனக்கு வேலை இல்லாமப்
போச்சா சரி.பரவாயில்லை”

“மயூ வசந்த்தைப் பத்தி
எதாவது சொன்னாளா மதி”

“இல்லை மது.வசந்த் பேச்சை
எடுத்தாலே ஓடிடறா”

“ம்”

“நான் பயந்துட்டு இருக்கேன்.
மயூ என்னடானா மது மாதிரி
நானும் டிடெக்டிவ் ஆகப்
போறேன்னு குதிச்சுட்டு
இருக்கா மது”என்று சிரித்தான்
மதிவதனன்.

“பயத்தை விடு மதி.நல்லதா
நினை.மயூ டிடெக்டிவ் ஆகணும்னு
ஆசைப்பட்டா ஆகட்டும் மதி.
வசந்த் பார்த்துக்குவான்”

“மயூ நிஜமா சொல்றாளா,
விளையாட்டுக்கு சொல்றாளான்னு
தெரியலை மது.பார்ப்போம்”

“கேட்கணும்னு நினைச்சேன்.
அத்தையை எப்படி சமாதானப்
படுத்தினே மதி”

தாயிடம் பேசியதை
மதிவதனன் கூற,மதுரா
முகத்தில் சிந்தனை ரேகைகள்!

“நான் இதை யோசிக்கவே
இல்லை மதி.அத்தை கல்யாணப்
பேச்சை எடுத்ததுமே,அம்மா
உண்மையை சொல்லி
இருப்பாங்க.அத்தை உன் கிட்ட
சொல்லாம இருக்க மாட்டாங்க.
ஆனா உண்மை தெரிஞ்சிருந்தா
நீ என்னை நினைச்சுக் கவலைப்
பட்டிருக்க மாட்டியே”

“நானும் இதை தான்
யோசிச்சேன் மது”

அத்தை ஏன் மதியிடம்
கூறவில்லை?என்னை நினைத்து
துன்பப் படாமல் இருந்திருப்பானே.

“நாம நினைக்கிற மாதிரி
இப்ப இல்லை மது.
முன்னாடியே நீங்க இங்க
வந்தப்பவே அத்தை அம்மாகிட்ட
சொல்லி இருக்காங்கடா”என்று
தனக்கும்,தங்கைக்கும் நடந்த
சம்பாஷணையைக் கூறினான்
மதிவதனன்.

அம்மாவிற்கும்,அத்தைக்குமான
நட்பை மறந்து போனேனே.
அம்மா அத்தையிடம் தன்
பயத்தை எல்லாம் கொட்டி
இருப்பார்கள்.அத்தை
எச்சரித்ததும் யாரும்
என்னிடம் கேட்காமல்
அமைதியாக இருந்திருக்கிறார்கள்.

நானும் அம்மா மீதிருந்த
கோபத்தில் எவரிடமும் எதுவும்
பேசாமல் தனித்திருந்து என்
மதிக்குப் பெரும் வேதனையைத்
தந்து விட்டேன்.நான்
உண்மையைச் சொல்லி
இருக்க வேண்டும்.நான்
உண்மையைச் சொல்லாததால்
தான் என் மதி துன்பப்
படும்படி ஆனது.

மதுரா அமைதியாகி
விட்டதைக் கண்டு அவள்
முகத்தைக் கூர்ந்தான்
மதிவதனன்.

“எதுக்கு இப்ப என் மது
குட்டி முகம் வாடுது”

“நான் உன்கிட்ட அப்பவே
உண்மையை சொல்லி
இருந்தா...உனக்கு எந்த
வலியும் ஏற்பட்டிருக்காது
மதி.நான்...”

“மது,இப்படிப் பேசக் கூடாதுன்னு
சொல்லி இருக்கனா இல்லையா”

“சாரி மதி”

“ஸ்மைல்லோட சொல்லணும்”

“சாரி சாரி.ஒரு விஷயத்தைத்
தான் என்னால நம்பவே
முடியலை மதி”

“என்னடா”

“மயூவும்,முகியும் எப்படி
என்கிட்ட என் வேலையைப்
பத்திப் பேசாம இருந்தாங்க?
ரிப்போர்ட்டர்னு நினைச்சாலும்,
அதைப் பத்தி எதுவும் கேட்காம..
அவங்கனால முடியாதே”

“உனக்கு அவ்வளவு பெரிய
அடி பட்டிருந்தனால,பேச
வேண்டாம்னு நினைச்சிருப்பாங்க
மது”

“ம்.ஏன் யாருமே என்
வேலையைப் பத்தி எதுவுமே
கேட்கலை,பேசலைன்னு
இப்பத் தான் புரியுது.
அத்தைக்காக மூணு பேரும்
அமைதியா இருந்திருக்கீங்க”

“ஆமாடா.அம்மாவுக்கு
அவங்க செல்லப் பூனைக்
குட்டியோட முகம் வாடவே
கூடாதுன்னு எங்களை
மிரட்டி வைச்சிருந்திருக்காங்க”

“அதெல்லாம் உனக்கு இன்னும்
ஞாபகம் இருக்கா”

“இந்த அழகான பூனைக்குட்டியை
அவ்வளவு சுலபமா மறக்க முடியுமா”

மதுரா புன்னகையுடன்
காரைச் செலுத்த,
மதிவதனன் எதையோ
யோசித்தபடி இருந்தான்.

“உன்னைப் பத்தின கவலை,
பயம் அத்தைக்கு நிறையவே
இருக்கு மது”

அம்மா பயத்தை எப்படித்
தான் போக்குவது?நான்
மரணத்தின் விளிம்பைத்
தொட்டு வந்ததை அவர்களால்
அவ்வளவு எளிதாக மறக்க
முடியாது.

“கொஞ்ச நாள் போனா
அத்தை பயம் போயிடும்
மது.கவலைப் படாதே”

“தேங்க்ஸ் மதி.என்ன
விஷயம் மதி?என்னவோ
யோசிச்சுட்டே இருக்கிறே?”

“மதூ...ரெஜீஸ் வெளியில
வந்தாலும் வரலாம்னு...வசந்த்
சொன்னார்.அப்படி அவன்
வெளியில வந்துட்டா...உன்னைத்
தேட ஆரம்பிச்சுடுவான் மது.
உன்னை விட மாட்டான்”

“சரியான முந்திரிக்கொட்டை.
அதுக்குள்ள உன் கிட்ட
சொல்லிட்டானா?நீ
கவலைப் படாதே மதி.
அவன் எவ்வளவு பெரிய
விஐபி கூட தொடர்பு
வைச்சிருந்தாலும் அவனால
வெளியில வர முடியாது.எங்க
பாஸ் ரெஜீஸ் வெளியில வர
விட மாட்டார் மதி.ரெஜீஸ்சுக்கு
எதிரா ஏகப்பட்ட ஆதாரங்களைக்
குவிச்சுட்டு இருக்கார்.ரெஜீஸ்
வெளியில வரணும்னா...ஜெயில்ல
இருந்து தப்பிச்சுத் தான்
வரணும் மதி”

கடவுளே!அவன் மது
சொல்வது போல் தப்பி விட்டால்...
அவனை ஏமாற்றியதற்கு
நிச்சயம் பழி வாங்க வருவான்.

மதிவதனன் முகத்தைப்
பார்த்த மதுரா,“மதீ...என்னாச்சு”
என்றாள் அவன் முகத்தில்
அப்பியிருந்த பீதிக்குக் காரணம்
புரியாமல்.

“மதூ...அவன் தப்பிச்சா...நேரா
உன் கிட்டத் தான் வருவான்”

மது!உன் வாயை வைச்சுட்டு
சும்மா இருக்க மாட்டியா?

மதியைப் பற்றித் தெரிந்திருந்தும்
நான் அவ்வாறு பேசியிருக்கக்
கூடாது.

“எதுக்கு என் செல்லம்
இவ்வளவு பயப் படறாங்க?
அவன் எப்படி என்கிட்ட வ
ருவான் மதி?என்னைப் பத்தி
அவனுக்கு எதுவும் தெரியாது.
மது,மதிங்கிற பாதிப் பேரை
வைச்சுட்டு நம்மளைக்
கண்டு பிடிக்கிறது எல்லாம்
நடக்கிற காரியம் இல்லை மதி.
என்னையோ உன்னையோ
நேருக்கு நேரா பார்த்தா
மட்டும் தான் அவனால
நம்ம கிட்ட வர முடியும்.
ஒரு வேளை அவன் என்னைக்
கண்டு பிடிச்சு வந்துட்டா...
நான் அவனை...அவனோட
இடம் எதுவோ அங்க
அனுப்பிடுவேன்.நீ
கவலைப் படாம இரு”

மது என்ன இவ்வளவு
சாதாரணமாகச் சொல்லி
விட்டாள்?அன்று அவன்
கண்களில் தெரிந்த வெறி...
அப்போதே அவன் கோபம்
கட்டுக் கடங்காமல் இருந்தது.
தன்னை ஏமாற்றி மாட்டி
விட்டிருக்கிறார்கள் என்பதை
இந்நேரம் அவன் அறிந்திருப்பான்.

மதுவை அழித்து விடும்
வன்மம் அவன் மனதில் குடி
புகுந்திருக்குமே.இவள் ஏன்
அவனை அலட்சியமாக
நினைக்கிறாள்?

மதி,எதற்கு அஞ்சுகிறாய்?
மது ரெஜீஸ்ஸைப் போன்று
எண்ணற்றோரைச் சந்தித்திருப்பாள்.
சமாளித்தும் இருப்பாள்.மதுவிற்கு
ரெஜீஸ்ஸை வீழ்த்துவது ஒரு
பெரிய விஷயமே இல்லை.
புரிந்து கொள்.உன் மது யார்
என்பதையே நீ மறந்து
போகிறாய்.

ஆம்.அவன் தான் மதுவைக்
கண்டு அஞ்ச வேண்டும்.
மதுவால் தன்னைக் காத்துக்
கொள்ள முடியும்.நானும்
அவளுடன் இருக்கிறேன்.
என் மதுவை எவர் நெருங்கவும்
அனுமதிக்க மாட்டேன்.என்
மதுவிற்கு எத்துன்பமும்
நேராது.

மது சொல்வது போல்
ரெஜீஸ்ஸிற்கு மதுவைப்
பற்றி எதுவும் தெரியாது.
பொய்யான தகவல்களை
வைத்துக் கொண்டு அவனால்
மதுவைக் கண்டறிய முடியாது.
மது அவனுடன் பேசிய சிம்...
அதை அன்றே அழித்து விட்டார்கள்.
எங்களை நேருக்கு நேர்
பார்ப்பது மட்டும் தான்
அவனுக்கு இருக்கும் ஒரே
வழி.எங்கு சென்று
தேடுவான்?என்ன சொல்லித்
தேடுவான்?ரெஜீஸ்ஸால்
என்றுமே என் மதுவைக்
கண்டறிய முடியாது.

“மதி,எதுக்கு இவ்வளவு
யோசிக்கறே?அநாவசியமா
கவலைப் படறதே உனக்கு
வேலையா போச்சு”

“இல்லை மது.நீ இவ்வளவு
சொன்னதுக்கு அப்புறம்
நான் எதுக்குக் கவலைப்
படப் போறேன்?இன்னொரு
விஷயம் கேட்கணும் மது”

“என்ன மதி”

“பிளாட்ல உன்னைத் தாக்கின
ஆள்...அவன்...வெளியில
வந்துட்டானா...”

“இல்லை மதி.அவனுக்கு
எதிரா அசைக்க முடியாத
ஆதாரங்கள் இருக்கிறனால
அவனால ஜெயில்லை
விட்டு அசைய முடியலை”

மதுராவின் பேச்சில்
புன்னகைத்த மதிவதனன்
பேசத் தொடங்குகையில்
அவன் கைபேசி ஒலிக்கத்
தொடங்கியது.

“ஆபிஸ்ல இருந்து கூப்பிடறாங்க மது”

“பேசு மதி”

மதிவதனன் அலுவல்
தொடர்பாக பேசிக் கொண்டிருக்க,
மௌனமாகக் காரைச்
செலுத்தினாள் மதுரா.

எத்தனை நேரம் பேசுகிறான்?
வேலை என்று வந்து விட்டால்
அதிலேயே மூழ்கி விட
வேண்டியது.என் பக்கமே
திரும்பாமல் பேசுவதைப் பார்!

மதி முகத்தில் வழக்கமான
மலர்ச்சி இல்லாததற்கு
ரெஜீஸ் தான் காரணமா?

மதி திறம்பட தொழிலை
நடத்துகிறான்.சவால்களை
சமாளித்து வெற்றியைத் தக்க
வைத்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால்,நானென்றால்,எனக்கு
ஒரு பிரச்சனை வந்து விடுமென்று
தெரிந்தாலே சிறுபிள்ளை போல்
அஞ்சுகிறான்.கலங்குகிறான்.
கவலைப் படுகிறான்.

“மது,காரை எடு.சிக்னல்
மாறிடுச்சு பார்”மதிவதனன்
பதறியதில் தன் கவனத்தை
சாலையில் பதித்தாள் மதுரா.

மது!உனக்குப் பைத்தியம்
முத்திப் போயிடுச்சு.
நடுரோட்டில இருக்கே,
ஒழுங்கா ரோட்டைப்
பார்த்து ஓட்டு!

கைபேசியில் பேசியபடியே
கை நீட்டி,மதுராவின் கன்னத்தில்
தட்டிக் கொடுத்தான் மதிவதனன்.

மதிவதனன் தொடர்ந்து
பேசிக் கொண்டிருக்க,
மதுரா அவன் பக்கமே
திரும்பாமல் காரை ஓட்டி,
மதிவதனன் வீட்டின் முன்
சென்று நிறுத்தினாள்.

“சாரிடா.உன் கிட்டப்
பேசவே முடியலை”

தன் கைபேசி உரையாடலை
முடித்த மதிவதனன்,காதைப்
பிடித்துக் கொண்டு மன்னிப்புக்
கோரினான்.

“பரவாயில்லை மதி”என
அவன் காதில் இருந்து கைகளை
இறக்கி விட்டு,“நீ ஆபிஸ்சுக்குக்
கிளம்பு.நாம அப்புறம்
பேசலாம்”என்றாள் மதுரா.

“அரைமணி நேரம் கழிச்சுத்
தான் போகணும்.உள்ள
போகலாம் வா”

“இல்லை மதி.அம்மாவும்,
நானும் ஷாப்பிங் போகலாம்னு
இருக்கோம்”

“ம்”

“என்ன “ம்”,உன் மனசுல
இன்னும் எதாவது கேள்வி
இருக்கா மதி”

“மதூ...ரெஜீஸ் கேஸை
விசாரிக்கறப்ப...ரெஜீஸ்ஸோ...
அவன் பிரெண்ட்ஸ்ஸோ நீ அங்க
வந்ததை சொல்லிட்டா...அந்த
தீ விபத்து...விபத்தில்லைன்னு
யாருக்காவது தெரிஞ்சு...
உங்களுக்குப் பிரச்சனை வ...”

“மதி,அது முடிஞ்சு போன
விஷயம்.அந்த விபத்தைப்
பத்தி யாரும் துருவ மாட்டாங்க.
அப்புறம்,ரெஜீஸ் என்னைப்
பத்தி என்னன்னு சொல்லுவான்
மதி?தன்னோடக் குற்றத்தை
தன் வாயாலேயே ஒத்துக்குவானா?
அவன் அந்த வீடு எரிஞ்சுப்
போச்சுன்னு சந்தோஷத்தில
இருப்பான்.என்னைப் பத்தி
எதுவும் சொல்ல மாட்டான் மதி”

“மதூ...ஜூஸ் டம்ளர்..அவன்
என்னைக் குத்தின பாட்டில்..
நான் அவனை அடிச்ச மரக்கட்டை...
என்னோட ரத்தம் அங்க
சிந்தியிருக்குமே.நான் சுவத்தில
சாய்ஞ்சப்ப..ரத்தம் ஆகியிருக்குமே.
மதூ...இதையெல்லாம் வைச்சு
நீ அங்க போனதைக் கண்டு
பிடிச்சுட்டாங்கன்னா...”

“அந்த பாட்டில்,டம்ளர்,
உன்னோட ஆயுதம்
எல்லாத்தையும் நாங்க
எடுத்துட்டு வந்துட்டோம்
மதி.ஹோட்டல் ரூம்மைக்
காலி பண்ணிட்டு வரும்
போது கார்ல இருந்து
எடுத்து வசந்த் என் கிட்டக்
கொடுத்தானே.நீ பார்க்கலையா?”

“ம்,மது கிட்ட இருந்து உங்க
மெடிசனை வாங்கிட்டு
வர்றேன் மதின்னு சொல்லிட்டு
இறங்கினான்.ஞாபகம்
இருக்கு மது”

அன்று மது காருக்குத்
திரும்பிய போது நான்
பயத்தில் எதையும்
கவனிக்கவில்லை.

காரை விட்டு இறங்கும்
போது தானே அந்தப்
பணப்பையையே பார்த்தேன்.
அதே போல ஹோட்டல்
ரூம்மைக் காலி
செய்து விட்டு வரும்
போதும்,மது வீட்டின்
முன் நிறுத்திய போதும்,
நான் எதையும்
கவனிக்கவில்லை.

“உன் ரத்தம் அங்க
சிந்தலை மதி.சுவத்திலயும்
இல்லை.காயம் இல்லாத
தோள் பக்கம் சாய்ஞ்சு
நின்னிருப்பே.அங்க நாம
போனதுக்கான எந்த
அடையாளமுமே இல்லை.
அந்த வீடு மொத்தமா
எரிஞ்சுப் போயிடுச்சு.
அங்க எதுவுமே கிடைக்காது
மதி.நீ தயவு செஞ்சு
கவலைப் படாம இரு.
நமக்கு எந்தப் பிரச்சனையும்
வராது மதி.நீ அநாவசியமா
யோசிச்சு மனசைப்
போட்டுக் குழப்பிட்டு இருக்காதே”

“...........”

“இன்னும் என்ன மதி”

“மதூ...நீ அந்த ஹோட்டல்ல
சாப்பிட்டப்ப...
உன்னை அங்க இருந்த
யாராவது பார்த்து...”

“மதீ...!!”

“இல்லை....இல்லை.
ரெஜீஸ்ஸை யாருக்கும்
அடையாளம் தெரியாது.
அவன் முகமே சரியா
தெரியலையே.முகம்
முழுக்க தாடி...
கண்ணாடி...முகத்தை
மறைச்சு வேற
உட்கார்ந்திருந்தான்”

தனக்குத் தானே மறுத்து
சொல்லிக் கொண்டிருந்தவனை
விழி எடுக்காமல் பார்த்தாள் மதுரா.

“அப்புறம்...நம்ம கார்,
பைக்கோட டயர் மார்க்ஸ்...
அது பிரச்சனை இல்லை.அங்க
நிறைய வண்டி போன
அடையாளம் இருந்துச்சு.
ஆனா...அங்க இருந்த ஒண்ணு
ரெண்டு வீட்டில யாராவது
பார்த்திருந்தா....இருக்காது.
அந்தக் காட்டுக்குள்ள கதவு,
ஜன்னலை எல்லாம்
பூட்டிட்டுத்தான் இருப்பாங்க.
ஒரு வேளை பார்த்திருந்தாலும்
நாம நல்லது தான் பண்ணி
இருக்கோம்னு புரிய வைச்சுடலாம்”

எனக்கு எதிராக என்ன
சாட்சி எல்லாம் இருக்கிறது
என்று யோசித்து யோசித்து
இன்னும் அதையே நினைத்துக்
கொண்டிருக்கிறான்!

“வக்கீல் சார்,நீங்க இன்னும்
மர்டர் கேஸ்லயே இருக்கீங்க.
அதுல இருந்து முதல்ல
வெளியில வாங்க.ப்ளீஸ்
வக்கீல் சார்”

“மதூ...”

“ட்ரக்ஸ் சம்மந்தமா மட்டும்
தான் விசாரணை போயிட்டிருக்கு
மதி.ரெஜீஸ் தங்கி இருந்த வீடு,
அந்த வீட்டு ஓனர் பெரிய
கிரிமினல்னு தெரிய வந்திருக்கு.
அவன் எங்கயோ தலை
மறைவாகிட்டான்.போலீஸ் இப்ப
அவனைத் தேடிட்டு இருக்கு”

“ம்”

“இப்ப என்ன யோசிக்கறீங்க
வக்கீல் சார்”

“ரெஜீஸ்சுக்கு நீ தான் அந்த
விபத்தை உருவாக்கினேன்னு
புரிஞ்சிருக்கும் மது”

“எனக்கு மனசுக்குள்ள நன்றி
சொல்லிட்டு இருப்பான் மதி.அந்தத்
தீ விபத்து எப்பவும் விபத்தா
மட்டும் தான் இருக்கும் மதி.உன்
மது உன்னைக் கெஞ்சிக்
கேட்டுக்கறேன்.
ரெஜீஸ்ஸைப் பத்தி இனிமேல்
யோசிக்காதே மதி.உன் மதுவுக்கு
எதுவும் ஆகாது.எங்க பாஸ் எனக்கு
எந்தப் பிரச்சனையும் வர விட
மாட்டார்.புரிஞ்சுக்கோ மதி”என
அவன் கரத்தின் மீது தன் கரத்தை
வைத்தாள் மதுரா.

என்னைப் பற்றியே சிந்தித்து
சிந்தித்து தன்னை வருத்திக்
கொள்கிறான் என
எண்ணியவளாய் முகம்
வாடினாள் மதுரா.

“நீ வருத்தப் படாதே மது.
அந்தத் தீ விபத்துனால உனக்கு
எதாவது பிரச்சனை
வந்துடுமோன்னு தோணுச்சு...
அதான் கேட்டேன்.நீ இவ்வளவு
உறுதியா சொல்றப்ப...
நான் இனிமேல் கவலைப் பட
மாட்டேன்”

“நீ அந்த நாளை மறந்துடு
மதி.அந்தக் குப்பை எல்லாம்
வேண்டாம் மதி.சந்தோஷமா,
நிம்மதியா உன் வேலைகளைக்
கவனி.அந்தப் பிரச்சனை
முடிஞ்சுது.அதையே நினைச்சுட்டும்,
யோசிச்சுட்டும் இருக்காதே”

மீண்டும் மீண்டும்
சொல்லி தனக்கு எந்தப்
பிரச்சனையும் இல்லையென
மதிவதனன் மனதில்
பதிய வைத்தாள் மதுரா.

“சரிடா.நீ வருத்தப்
படாதே.இனி நான் அந்த
நாளைப் பத்தி,ரெஜீஸ்
பத்தி எல்லாம் யோசிக்கவே
மாட்டேன்.நீ கிளம்பு.அத்தை
உனக்காக வெயிட்
பண்ணிட்டு இருப்பாங்க”

மதுரா காரை விட்டு
இறங்காமல் தன்னையே
பார்ப்பதற்குக் காரணம்
தெரியாமல்,அவள்
முகத்தைக் கேள்வியுடன்
பார்த்தான் மதிவதனன்.

“என்னடா”

“என்னோட இந்த மதி
முகத்தில இனி எப்பவும்
குழப்பம்,கவலை,பயம்
எதுவும் இருக்கக் கூடாது.
கண்டபடி கற்பனை
பண்ணிட்டுக் கனவு
கண்டுட்டு வேதனைப்
படவும் கூடாது”

“என் மது பேச்சை மீறாம
என் மது குட்டிக்குப் பிடிச்ச
ஸ்மைல்லோட தான் இனி
எப்பவும் இருப்பேன்”

“சமர்த்து.இனி நீ ஒரே
ஒரு கனவு மட்டும் தான்
காணனும் மதி”

“என்ன கனவு மது”

“ரொமான்டிக்கான ஒரு
இடத்தில,நீயும்,நானும் மட்டும்
இருக்கிற மாதிரி,நான் உன்
தோள்ல சாய்ஞ்சுட்டு “அக்கம்
பக்கம் யாருமில்லா பூலோகம்
வேண்டும்.அந்திப்பகல்
உன்னருகே நான் வாழ
வேண்டும்னு”பாடற
மாதிரி!நீ...எ...என்ன மதி..”

“அழகான கனவு தான்.
தினமும் இப்படிக் கனவு வந்தா
சுகமா தான் இருக்கும்.ஆனா...
இவ்வளவு தூரமா
உட்கார்ந்துட்டுக் கனவு காணச்
சொல்றயே மது.எப்படிக் கனவு
வரும்?பக்கத்தில வந்து...இங்க
ஒண்ணு கொடுத்து
சொல்லணும் மது”

மதிவதனன் கை நீண்டு
மதுராவின் செவ்விதழ்களை
ஒரு விரலால் தொட்டு விட்டு,
அவ்விரலைத் தன் உதட்டில்
வைத்துக் காட்ட, “திருடா”என
அவன் கன்னத்தைப் பிடித்துக்
கிள்ளி விட்டுக் காரில்
இருந்து இறங்கினாள் மதுரா.

இறங்கிய மதுரா சுற்றி
வந்து கார் கண்ணாடியைத்
தட்ட,கண்ணாடியை
இறக்கினான் மதிவதனன்.

“பை மதன்”மதிவதனனை
நோக்கிக் காற்றில் ஒரு
முத்தத்தைப் பறக்க விட்டு
விட்டு ஓடினாள் மதுரா.

காரை விட்டு இறங்கிய
மதிவதனன்,மதுரா கண்களில்
இருந்து மறையும் வரை
பார்த்திருந்து விட்டுத் திரும்பி
கேட் திறந்து,சில நொடிகளுக்குத்
தன் வீட்டைப் பார்த்துக்
கொண்டு நின்றான்.

என் மது வந்த பிறகு
இவ்வில்லத்தின் மகிழ்ச்சி
பல மடங்கு அதிகரித்து
விடும்.என் வாழ்க்கையில்
வசந்தத்தைக் கொண்டு
வந்ததற்கு நன்றி கிருஷ்ணா!

மதிற்சுவரோரம் நின்றிருந்த
பவழமல்லி,காற்றில் தன் பூக்களை
உதிர்க்க,தன் தலை மேல்
விழுந்த பூவில்,அந்த
மாயவனே தன்னை
ஆசீர்வதிப்பதாய் நினைத்து
மகிழ்ந்தான் மதிவதனன்.


தித்திக்கும்❤️❤️❤️
 
Top