கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-30

Nilaa

Moderator
Staff member
30
அழகிய பூவே!
மலரென மயங்கி நின்றேன்!
நீ தீயென அறிந்த பின்னும்
உனை நெருங்கி வந்தேன்!
உனக்காக வாழ்ந்திருப்பேன்!
நான் சாம்பலாகிப் போகும் நாளில்
காற்றாய் வந்து உனைக்
காத்திருப்பேன்!

முப்பது நாட்களுக்குப்
பின்பான ஒரு இரவுப் பொழுது.

நான்கு நாட்களுக்கு முன்
நடை பெற்ற மதிவதனன்
திருமணத்திற்கு வந்திருந்த
உறவுகளில் சிலர் எஞ்சியிருக்க,
அவர்களின் உற்சாக
உரையாடல்களால்
நிறைந்திருந்தது சாரதா இல்லம்.

மேல் தளத்தில் இருந்த
மதிவதனன் அறையில்,தன்
கண்களை மறைத்த
கணவனின் கைகளைத்
தொட்டுப் பார்த்துச்
சிரித்தாள் மதுரா.

“என்னோட மதன் என்னை
எங்க கடத்திட்டுப் போகப்
போறார்”

“உனக்கு ரொம்பப் பிடிச்ச
கிப்ட்டைக் காட்ட,உன்
ரூம்முக்குப் போகறோம் மது”

“எவ்வளவு கிப்ட் தான் கொடுப்பே
மதி”

“என் ஷர்ட்டை பத்திரப்படுத்தி
வைச்சிருந்ததுக்காக இந்த கிப்ட்”

“திருடா!என் வாட்ரோபை நீ எதுக்குத்
திறந்தே மதி”

“நீதான் உன்னோட ரெட் கலர்
துப்பட்டாவைக் காணோம்னு
அழுகாத குறையா புலம்பினயே.
தேடிக் கொடுப்பமேன்னு
திறந்தேன்.துப்பட்டாவும் கிடைச்சுது,
என் ஷர்ட்டும் கிடைச்சுது”

“எப்படிடா என் துப்பட்டா
திடீர்னு வந்துச்சுன்னு
பார்த்தேன்.என் சமர்த்து
வேலை தானா”

“இதோ ரூம்குள்ள வந்தாச்சு”
பேசிக் கொண்டே அறைக்குள்
சென்றிருந்தனர் இருவரும்.

“என்ன பண்ணி வைச்சிருக்கே
மதி”

“என்னோட ஸ்வீட்டான மது,
அவங்களுக்கு ரொம்ப ரொம்ப
ரொம்பப் பிடிச்ச பியர்ஸ்
பிராஸ்னன் படத்தை எப்ப
வேணாலும்,எத்தனை தடவை
வேணாலும் பார்த்துப் பார்த்து
ரசிக்கலாம்”மதுரா கண்களில்
இருந்து கைகளை விலக்கித்
தன் பரிசைக் காட்டினான்
மதிவதனன்.

“மதி!!இது என்ன இவ்வளவு
பெரிய ஸ்கீரின்...புது ஹோம்
தியேட்டர் வேற!எதுக்கு இப்ப
இது?நீ ஏன் தான் இப்படிப்
பணத்தை செலவு பண்றயோ?”

“பணம் சம்பாதிக்கிறதே
செலவு பண்ணத் தானே மது?
அதுவும் நமக்குப்
பிடிச்சவங்களுக்குத் தேடித்
தேடி கிப்ட் வாங்கறப்ப
ஏற்படற சந்தோஷம் இருக்கே.
அதுக்கு ஈடே இல்லை மது”

“கிப்ட் வாங்கிறது தான்,
அதுக்குன்னு ஒரு அளவில்லையா
மதி”

“நீ சந்தோஷப் படுவேன்னு
பார்த்தா...போ மது”நகர
முற்பட்டவனின் கை பிடித்து
நிறுத்தி அவன் கழுத்தில்
கைகளை மாலையாகக்
கோர்த்துக் கொண்டாள் மதுரா.

“நாலு நாளா என்னை உன்
கிப்ட்டால திணறடிச்சுட்டே
மதி.மது ரொம்ப ரொம்ப
ரொம்ப சந்தோஷமா இருக்கா.
இனிமேல் எனக்கு கிப்ட்
கொடுக்கணும்னு
ஆசையாயிருந்தா சிம்பிளா
எதாவது வாங்கிக் கொடு மதி”

“ம்”

“எனக்கு பியர்ஸ் பிராஸ்னனைப்
பிடிக்கும்னு என் மதிக்கு யார்
சொன்னது?பவியா?”

“ம்.அவன் தான் “அக்காவுக்கு
பியர்ஸ் பிராஸ்னன்னா உயிரு,
அவரோட ஒவ்வொரு படத்தையும்
அம்பது தடவையாவது
பார்த்திருப்பான்னு”சொன்னான்”

“உயிர் எல்லாம் இல்லை மதி.
பிடிக்கும். அவ்வளவு தான்.
அஞ்சு தடவைப் பார்த்ததைத்
தான் அம்பது தடவைன்னு
சொல்லி இருக்கான்”

“எப்படியோ உனக்கு அவரைப்
பிடிக்கும் தானே?ஜேம்ஸ்பான்ட்
படமா பார்த்துப் பார்த்துத் தான்
உனக்கு டிடெக்டிவ் ஆகணும்கிற
ஆசை வந்துச்சா மது?அந்தப்
பிஸ்டல்...அந்தப் பரபரப்பு...
அதெல்லாம் பிடிச்சுடுச்சா ”

“இல்லை...தெரியலை...இருக்கலாம்”

“ஒரு கேள்விக்கு எவ்வளவு பதில் மது”

“உனக்கு எந்த பதில் சரின்னு
தோணுதோ,அது தான் பதில்”

சிரித்த மதிவதனன்,“படம்
பார்க்கலாமா மதி”என்று மதுரா
கேட்டதில் உற்சாகமானான்.

திவதனன் அறைக்
கதவைத் தட்டக் கை
உயர்த்திய மயூரியின் கை
பிடித்துத் தடுத்தான் வசந்தன்.

“உங்கண்ணன் மேல வந்து
பத்து நிமிஷம் தான்
ஆகியிருக்கு.அதுக்குள்ள
வந்தாச்சா”

“நாங்க அண்ணாவுக்கும்,
அண்ணிக்கும் குட்நைட்
சொல்ல வந்தோம்”

“நாங்கன்னா...பவியும்,முகிலுமா”

“ஆமாம்.முதல் கையை
விடு வசு.யாராவது
பார்த்துடப் போறாங்க”

“பார்த்தா என்ன மயூ”
அவள் கை பிடித்து
அருகிலிருந்த அறைக்குள்
இழுத்தான் வசந்தன்.

“ஐயோ!வசு...நம்ம
காதலுக்குப் பச்சைக்கொடி
காட்டிட்டாங்கன்னு உனக்குக்
குளிர் விட்டுப் போச்சு”

“உன் வசந்த்துக்கு பயம்னா
என்னனே தெரியாது டார்லிங்”

“அப்படியா?மதிணா...”

“என்ன பண்றே மயூ”மயூரி
அலறியதில்,வசந்தன் அவள்
வாயைப் பொத்த,அவன்
கையைக் கடித்தாள் மயூரி.

“ஆ!!ஐயோ!அ...”

“கத்தாதேடா”இப்போது
மயூரி அவன் வாயைப் பொத்த,
அவள் கரத்தில் முத்தமிட்டான்
வசந்தன்.

“உன்னை...எதுக்குக் கூப்பிட்டே?
சீக்கிரம் சொல்லு”

“அதூ...”

“நீ இழுக்கிறதைப் பார்த்தா...
உடனே கல்யாணம்
பண்ணிக்கலாம்னு
சொல்லிடாதே வசு.நான்
கொஞ்ச நாள் மது கூட
இருக்கணும்னு நினைக்கிறேன்”

“கல்யாணமா?நான்
எப்பவுமே கல்யாணத்தைப்
பத்தி எல்லாம் யோசிச்சதே
இல்லை மயூ”

“என்னடா சொல்றே”

சுவற்றை ஒட்டி நின்றிருந்த
மயூரியின் தோளில் கை
வைத்த வசந்தன்,“கண்கள்
இருக்கத் தோரணம் ஏனோ,
கைகள் இருக்க மாலைகள்
ஏனோ”எனக் கேட்டபடியே
அவள் கரங்களை தன்
கழுத்தில் மாலையாக
சூடிக் கொண்டான்.

“இருமனம் ஒன்றானால்
திருமணம் ஏனோ”என்று
வினா எழுப்பி மயூரியின்
உதடுகளை நெருங்கிய வசந்தன்,
வெளியில் கேட்ட பலமான
சிரிப்புச் சத்தத்தில்
சுதாரித்து விலகி நின்றான்.

“மயூ,இவர் நம்ம எம்ஜிஆர்
பாட்டைப் பாடி,உன்னை
ஏமாத்தறார்”என்று முகிலன் சிரிக்க.

“ஆமாம் மயூக்கா”எனத்
தன்னை ஆமோதித்த
பவித்திரனை அழைத்துக்
கொண்டு அங்கிருந்து
நகர்ந்தான் முகிலன்.

“அப்பாடி,நல்லவேளை நான்
அடி வாங்கிறதைப்
பார்க்கணும்னு ஆசைப்
படாம போயிட்டாங்க.
போட்டுக் கொடுத்தாலும்
நல்ல பசங்க”

“ஏதோ கவிதை சொல்றேன்னு
பார்த்தா...என்னை ஏமாத்தறயா
நீ?”வசந்தனின் இரு
கன்னத்தையும் பிடித்து
வலிக்கும்படி கிள்ளினாள் மயூரி.

“ஆ...மயூ...போதும்...விடு.
அன்னைக்கும் இப்படித்தான்
என் தலையில குழி
விழுகிற மாதிரி கொட்டினே”

“ஓவர் ஆக்ட் பண்ணாதேடா”

“அந்தக் கொட்டுக்கும்,
உம்மாவுக்கும் என்ன
அர்த்தம் மயூ”

“என் ஓட்டை வாய்க்கு
பயந்து உண்மையை
மறைச்சதுக்கு தண்டனை.
என்னோட சூப்பர்
ஜேம்ஸ்பான்ட்டுக்கு உம்மா”

“என்ன மயூ,நீ ஜேம்ஸ்பான்ட்
படமெல்லாம் பார்த்ததில்லையா”
வசந்தன் பார்வை அவள்
உதட்டில் பதிய,அவன்
கையில் பட்டென்று ஒன்று
போட்டாள் மயூரி.

“ஆசை,தோசை,அப்பளம்,
வடை!நாம லவ் பண்ண
ஆரம்பிச்சவுடனே
உண்மையைச் சொல்லாம
எத்தனை நாள் கழிச்சு
சொன்னே?உனக்கு ஒண்ணும்
கிடையாது.மது மங்கிக்குத்
தான் மூடு சரியில்லை.
உனக்கு என்ன?என்ன
தான் நான் ஓட்டை வாயா
இருந்தாலும்,ரகசியத்தை
எல்லாம் ரகசியமா வைச்சிருப்பேன்”

“சாரிடா.மது சொல்றப்ப...
நானும் சொல்லிக்கலாம்னு
இருந்துட்டேன்”

“சரி விடு.எதுக்கு என்னைக்
கூப்பிட்டே?சீக்கிரம்
சொல்லு.நான் போகணும்
வசு.சாரு ரொம்ப
ஸ்ட்ரிக்ட் தெரியுமா?”

“எதுக்கு...எதுக்கு...ஞாபகம்
வந்துடுச்சு.நான் உன்னைக்
காதலிக்க ஆரம்பிச்சு எட்டு
மாசம் அஞ்சு நாள் ஆறு
மணி நேரம் ஆகப் போகுது.
இந்த நிமிஷத்தைக் கொண்டாட
ஏழு ஜென்மத்துக்கும் ஞாபகம்
இருக்கிற மாதிரி ஒரே ஒரு
கிஸ் கொடு மயூ கண்ணு”

“இவ்வளவு தானா?என் வசந்தா
கேட்டா கொடுக்காம இருப்பனா”

“எனக்கு ஒண்ணும்
வேண்டாம்.நீ வசந்தான்னு
ராகம் போடாம இருந்தாலே
போதும்.தள்ளு,நான் போறேன்”

“சரிசரி.கூப்பிடலை.
கரெக்டா நைட் பன்னெண்டு
மணிக்கு மொட்டை மாடிக்கு
வா.நீ கேட்கிற மாதிரி கிஸ்
கொடுக்கறேன் வசந்தகுமாரா”

“நடுராத்திரிலயா...
டிராகுலாவைக் காதலிச்சுட்டனே.
காத்திருக்கேன்”

வசந்தன் சிரிக்கவும்,அவன்
கன்னத்தைக் கடித்து விட்டு
ஓடினாள் மயூரி.சிரிப்பு
மாறாமல் அவள் பின்
சென்றான் வசந்தன்.

துரா அறையில்,மதுராவின்
பார்வை திரையில் பதியாமல்
அருகிருந்த கணவனிடம்
பாய்ந்து கொண்டிருந்தது.

“படம் வேண்டாமா”என்றான்
அவள் பார்வையை உணர்ந்தவனாய்.

“அப்புறம்..மெதுவா..ப்ரீயா
இருக்கறப்ப பார்க்கலாம் மதி”

“சரி”என்று அவளைக்
கைகளில் ஏந்திக் கொண்டான்
மதிவதனன்.

“மதி..இறக்கி விடு,கை வலிக்கும்”

“நாலு எட்டுல என் ரூம்முக்குப்
போகப் போறேன்.அதுக்குள்ள
பெரிசா வலிச்சுடாது மது”

மனைவியை சோபாவில்
அமர வைத்து விட்டு,
அவளருகில் அமர்ந்தான்
மதிவதனன்.

தன் கைக்காயத்தைப்
பட்டும்படாமலும் தொட்டுப்
பார்த்துக் கலங்கும்
மதுராவின் விழிகளைக்
கண்ட மதிவதனன்
மறுப்பாகத் தலையசைக்க,
அவளும் புன்னகை கொண்டாள்.

“இப்பக் கடைசி கிப்ட்.
இதை நீ மறுக்கவே மாட்டே
மது.சொல்லப் போனா,இது
தான் நான் கொடுத்ததுலயே
உனக்கு பெஸ்ட் கிப்ட்டா
இருக்கப் போகுது”

“என்ன கிப்ட் மதி”மதுரா
ஆர்வமுடன் வினவ.

“உன்னோட சின்னச் சின்ன
ஆசையைக் கூட
நிறைவேத்தணும்னு
நினைக்கிறவன் நான்.
உன்னோடப் பெரியக்
கனவுக்கு என்னால
எப்படித் தடையா இருக்க
முடியும் மது?நான்
சம்மதிக்கறேன் மது”

“என்ன கனவு...”என
யோசித்த மதுரா,நம்ப
முடியாமல் தன் விழிகளை
விரித்தாள்.

“நிஜமாவா மதி?அன்னைக்கு
வேண்டவே வேண்டாம்னு
சொன்னே.எப்படி உன்
மனசு மாறுச்சு?நீ நிஜமா
சொல்றயா...இல்லை
விளையாடறயா?”

“நான் நிஜமா தான்
சொல்றேன்டா.என் மது
மறுபடியும் டிடெக்டிவ்
ஆகணும்,ஆகணும்,
ஆகணும்!”

“என்னால இன்னும் நம்ப
முடியலை மதி”

“எனக்கு இப்பவும்
பயமாதான் இருக்கு.
இருந்தாலும்,நீ என் உயிரை
பத்திரமா பார்த்துக்குவேன்கிற
நம்பிக்கை பயத்தை விட
அதிகமாயிருக்கு”

“...........”

“என்ன பிரச்சனை
வந்தாலும் சமாளிச்சுடுவே,
ஒரு தடவை அடி பட்டனால
நீ முன்னாடி இருந்ததை
விட எச்சரிக்கையா இருப்பே,
ஆபத்தில மாட்டிக்க
மாட்டேன்கிற நம்பிக்கையில
சம்மதிக்கறேன் மது”

“.............”

“கொஞ்ச நாள் பொறுமையா
இரு.நான் அத்தைக் கிட்டப்
பக்குவமா பேசி சம்மதம்
வாங்கித் தர்..மதூ...”அவன்
முகமெங்கும் மதுரா பதித்த
முத்திரையில் தன் வசமிழந்து
அவளை அணைத்து
முத்தமழை பொழிந்தான்
மதிவதனன்.

நீண்ட பல நொடிகளுக்குப்
பிறகு,தன்னிடம் இருந்து
விலகிய மனைவியை
விலக விடாமல் அணைத்துக்
கொண்டான் மதிவதனன்.

“தேங்க்ஸ் மதி.ஐ லவ் யூ
மதி.நான் எப்பவும் கவனமா
இருப்பேன் மதி.உன்
நம்பிக்கையைக்
காப்பாத்துவேன்”மதுரா
குரலில் தெரிந்த நெகிழ்ச்சியால்
மதிவதனன் அணைப்பு
இறுகியது.

மதுராவின் நெகிழ்ச்சியான
குரலை மாற்ற விரும்பியவனாய்ப்
பேச்சை மாற்றினான் மதிவதனன்.

“நீ இன்வைட் பண்ண
பிரெண்ட்ஸ் எல்லாரும்
வந்திருந்தாங்களா மது”

“பாதி பேர் வந்திருந்தாங்க
மதி.மத்தவங்க ரிசப்ஷனுக்கு
வர்றதா சொல்லி இருக்காங்க”

“ம்.மயூ பிரெண்ட்ஸ் தான்
அதிகம்னு நினைக்கிறேன்”

“ஆமாம் மதி.மயூ
கல்யாணத்துக்கு நீங்க
பெரிய மண்டபமா பார்க்கணும்”

“நீங்க இல்லை.நாம”

விலகி அமர்ந்த மதுரா,
“சாரி.நாம”என்றாள்
அவன் முகம் பார்த்து.

மனைவியின் கன்னத்தை
மதிவதனன் வருட,
அவன் கரத்தை தன்
கன்னத்தோடு அழுத்திக்
கொண்டாள் மதுரா.

“நம்ம கல்யாணம் இவ்வளவு
சீக்கிரம் நடக்கும்னு நான்
நினைக்கவே இல்லை மதி”

“சீக்கிரம்மா...ரொம்ப லேட்டா
கல்யாணம் பண்ணி இருக்கோம்
மது.உனக்கு இருபத்தி ஏழும்,
எனக்கு இருபத்தி ஒன்பது
வயசும் ஆச்சு மது”

“அதில்லை மதி.நாம
காதலை சொல்லி...
கொஞ்ச நாள் காதலிச்சு...
அப்புறம் நம்ம கல்யாணம்
நடக்கும்னு நினைச்சுட்டு
இருந்தேன் மதி.இப்படி
திடீர்னு நடக்கும்னு
எதிர்பார்க்கலை”

“நானுமே எதிர்பார்க்கலை
மது.இருந்தாலும்...
சந்தோஷமா இருக்கு”

“எனக்கும்...”மெல்லிய
குரலில் சொல்லி அவன்
தோளில் தலை சாய்த்துக்
கொண்டாள் மதுரா.

தன் தோளில் சாய்ந்த
பூமகளை மென்மையாக
அணைத்துக் கொண்ட
மதிவதனன் இதழ்கள்
புன்னகை பூத்தது.

“உனக்கு ஞாபகம் இருக்கா
மது?சின்ன வயசுல நாம டூர்
போறப்ப நீ இப்படித்தான்
என் தோள்ல சாய்ஞ்சு
தூங்குவே”

“நல்லா ஞாபகம் இருக்கு
மதி.நாம அஞ்சு பேரும்
ஒரே சீட்டில
உட்கார்ந்திருப்போம்.
நானும்,மயூவும் உன்
தோள்ல சாய்ஞ்சுக்குவோம்.
பவி என் தோள்ல
சாய்ஞ்சுக்குவான்.முகில்
உன் மடியில உட்கார்ந்திருப்பான்”

தங்கள் சிறு வயதை
நினைத்துப் பார்த்த
தம்பதியர் முகத்தில்
மகிழ்ச்சி பொங்கியது.

“வாழ்க்கையோட ஓட்டம்
நெருக்கமானவங்க கிட்ட
இருந்து கூட நம்மளைப்
பிரிச்சுடுது இல்லே மது”

இருகுடும்பமும் எத்தனை
அன்பாக,ஒற்றுமையாக இருந்தது?
நாங்கள் வேறு ஊருக்குச்
சென்ற பின்னும் தொலைபேசியில்
நட்பு தொடர்ந்து.ஆனால் நாட்கள்
செல்லச் செல்ல இருபக்கமும்
அழைப்புகள் குறைந்து
நின்றே போய் விட்டது.
குடும்பம்,படிப்பு,வேலை
என்று அவரவர் ஓட்டத்தோடு
காலமும் ஓடி விட்டது.

“மதூ...”என அவள்
முகத்தை நிமிர்த்திப்
பார்த்தான் மதிவதனன்.

“இப்ப தான் நாம
எப்பவும் பிரியாத
மாதிரி சேர்ந்துட்டமே
மது.கடந்து போன
இடைவெளியைப் பத்தி
எதுக்கு நினைக்கணும்?
சாரிடா.நான் உளறி உன்...”

“இல்லை மதி.என் மூடு
நல்லாதான் இருக்கு.நீ
உடனே கவலைப் பட
ஆரம்பிச்சுடாதே”மதுரா
புன்னகைக்க,எப்போதும்
போல் அவள் சிரிப்பை
ரசித்தான் மதிவதனன்.

“கேட்கணும்னு நினைச்சேன்.
பவி என்னவோ உன்கிட்ட
சீரியஸா பேசிட்டு இருந்த
மாதிரி இருந்துச்சு.எதுவும்
பிரச்சனை இல்லையே மது”

நிமிர்ந்து அமர்ந்த மதுரா,
“அதூ... கல்யாணத்தில...
பவி யாரோ பேசறதைக்
கேட்டிருக்கான்.அதை தான்
என்கிட்ட சொல்லிட்டு
இருந்தான் மதி”
என்றாள் தயக்கத்துடன்.

“என்ன பேசுனாங்க மது”

“........”

“தயங்காம சொல்லுடா”

“மதீ...“எங்க சுஜியைப்
பையனுக்குப் பிடிச்சிருந்துச்சு.
சுஜி தான் இந்த வீட்டு
மருமகளாகி இருக்கணும்.
ஜாதகம் பொருந்தாதனால
வேற பொண்ணு
பார்த்துட்டாங்கன்னு...”
பேசிட்டு இருந்திருக்காங்க”

மதிவதனன் அதிர்ச்சியை
அவன் முகம் அப்பட்டமாய்க்
காட்ட,அவனை ஆறுதல்
படுத்துவது போல அவன்
தோளில் கை வைத்தாள் மதுரா.

“மதூ...சுஜி நல்ல பொண்ணு
தான்.ஆனா எனக்கு அவ மேல..
அந்த மாதிரி ஈர்ப்பு...
இல்லை மது.உனக்குப்
புரியுதில்லடா”

“எனக்குப் புரியுது மதி.
நீ எதுவும் சொல்ல வேண்டாம்”

“இல்லைடா.நீ தெரிஞ்சுக்கணும்.
சுஜி பேரண்ட்ஸ் ஆசைப்
பட்டாங்க. மத்தபடி
எனக்கோ,சுஜிக்கோ
அந்த மாதிரி எண்ணம்
எதுவும் இல்லை.நம்ம
வீட்டிலயும் எல்லார்
மனசுலயும் நீ தான்
இருக்கே.சுஜியை நினைச்சு
நீ எப்பவும் உன் மனசைக்
குழப்பிக்கக் கூடாது.
பவி...”அவன் உதட்டில்
விரல் வைத்து அவன்
பேச்சிற்குத் தடை
விதித்தாள் மதுரா.

“எனக்கும் தெரியும்.
பவிக்கும் தெரியும்.ஏன்
இந்த உலகத்துக்கே தெரியும்”

“..............”

“மதி பிறந்தது மதுக்காக!
மதி இதயம் துடிப்பது
மதுக்காக!அவன் காதல்
என்றும் என்றும் மதுக்காக!”

மதுரா பாடலில் மதிவதனன்
சிரிக்க,அவன் நெற்றியில்
செல்லமாக முட்டினாள் மதுரா.

“அநாவசியமா கவலைப்பட்டா
இது தான் தண்டனை.இப்படி
அழகா சிரிச்சா...இது கிடைக்கும்”
என அவன் கன்னத்தில் ஓர்
முத்தம் வைத்தாள் மதுரா.

“அந்தம்மா எப்படி ரீல்
விடறாங்கன்னு பாருக்கான்னு
சொன்னானே தவிர,
உன்னைப் பத்தி அவன்
எதுவுமே சொல்லலை மதி.
அவனோட மதி மாமாவைப்
பத்தி அவனுக்கு நல்லாவே
தெரியும்”

தன் உதட்டின் மீதிருந்த
விரலில் முத்தமிட்ட
மதிவதனன்,மனையாளின்
கரம் பிடித்து மென் விரல்
ஒவ்வொன்றிலும் இதழ் பதித்தான்.

“உனக்குத் தெரியுமா மது?
உன்னைப் பார்க்கிறதுக்கு
முன்னாடி...காதல்,கல்யாணம்...
இதைப் பத்தி எல்லாம் நான்
யோசிச்சதே இல்லை.அந்த
மாதிரி ஆசைகள் ஏனோ
எனக்கு வந்ததே இல்லை.
மதூ..எதுக்கு சிரிக்கறே”

“மயூ உங்க அருமை
பெருமைகளை எல்லாம்
சொல்லிட்டா மதி”

“அந்த வாலு அவ
இஷ்டத்துக்கு எதாவது
கதை விட்டிருப்பா”

“அண்ணன் எதாவது
மடத்துல போய்ச் சேர்ந்து
சன்னியாசி ஆயிடுவானோன்னு
பயந்துட்டு இருந்தேன் மது.
நல்லவேளை,நீ வந்து
அண்ணனைக் காதல்
மன்னனா மாத்தி,
லேப்டாப்பைக் கட்டிப்பிடிச்சு
டூயட் பாடற அளவுக்கு காதல்
பித்தை முத்த வைச்சு எங்க
வானர வம்சத்தோட குலவிளக்கு
அணையாம காப்பாத்திட்டே.
உனக்கு என்ன கைம்மாறு
செய்வேன்?சொல்லு மது.
சொல்லு”

மயூரியின் பேச்சை
நினைத்துச் சிரித்த மதுரா
அதைக் கணவனிடம்
கூற,மதுராவின் சிரிப்பை
எதிரொலித்தான் மதிவதனன்.

“நான் உன்னை நேசிக்கிறதை
யார்கிட்டயுமே சொல்லலை
மது.மயூ அவளாவே ஒரு நாள்
கேட்கவும்,நான் உன்னை
விரும்பறதை ஒத்துக்கிட்டேன்.
உடனே ஓடிப் போய்
அம்மாகிட்டயும்,முகிகிட்டயும்
சொல்லிட்டா.அம்மா ரொம்ப
சந்தோஷப் பட்டாங்க.
ஆனா நான் தான் நொந்து
போயிட்டேன்”

“ஏன் மதி”

“அப்ப இருந்து உன்
பேரைச் சொல்லி சொல்லி
மயூ பண்ற அலும்பு இருக்கே.
ஏன்டா உண்மையை
ஒத்துக்கிட்டோம்னு ஆயிடுச்சு”

“நம்ம காதல் நமக்குப்
புரியறதுக்குள்ள நம்மைச்
சுத்தி இருக்கிறவங்களுக்குப்
புரிஞ்சுடுது மதி.மயூ மாதிரி
தான் வசந்த்தும் நான் உன்னை
விரும்பறதை தெரிஞ்சுக்கிட்டான் மதி”

இக்காதலை மட்டும்
மறைக்கவே முடியாது.
மலர்ந்து விட்ட மலரின்
மணத்தை எங்ஙனம்
மறைக்க முடியும்?

“அத்தை நாலு வருஷத்துக்கு
முன்னாடியே உனக்குக்
கல்யாணம் பண்ண ஆசைப்
பட்டதா மயூ சொன்னா மதி.
அம்மா பேச்சைத் தட்டாதவன்
,இந்தக் கல்யாண விஷயத்தை
மட்டும் ஒத்துக்கவே இல்லைன்னு
வருத்தப்பட்டு பேசினா.மயூ உன்னை
நினைச்சு ரொம்பக் கவலைப்பட்டு
இருந்திருக்கா மதி”

“உண்மை தான் மது.நான்
என் காதலை சொல்லவே
மாட்டனோன்னு பயந்து தான்
அந்த ராத்திரி நேரத்தில உன்
வீட்டுக்கு வந்திருப்பான்னு
நினைக்கிறேன்.சரியான
வாலு.வசந்த்கிட்ட சொல்லி
வைக்கணும்”

“ரெண்டு பேரும் சரியா
இருப்பாங்க மதி.
ரெண்டுமே சரியான வாலுக”
மதுராவின் கூற்றை
ஆமோதித்துத் தலை
அசைத்தான் மதிவதனன்.

“ஏன்னு தெரியலை,அப்பெல்லாம்
எனக்குக் கல்யாணத்தைப் பத்தின
எண்ணமே வரலை மது.எனக்கு
எந்தப் பொண்ணையாவது
பிடிச்சா நானே சொல்றேன்மான்னு
சொல்லிட்டேன்.அம்மாவும்
புரிஞ்சுக்கிட்டாங்க”

மதுரா பார்வையைச் சந்தித்த
மதிவதனன்,“இப்ப தான் புரியுது.
என் மனசு இந்த தேவதையோட
காதலுக்காக காத்துட்டு
இருந்திருக்குன்னு”என்றான்
மென்மையாக.

“உன்னை ப்ளூ சல்வார்ல
பார்த்த அந்த நிமிஷம்,யார்
இந்த தேவதைன்னு நான்
இமைக்க மறந்து நின்னேன்
மது.நம்ம மதுவா இதுன்னு
ஆச்சர்யப் பட்டேன்.உன்
கூடப் பழக ஆரம்பிச்சதுக்கு
அப்புறம்...நான் நானாவே
இல்லை.அந்த உணர்வுகள்
எல்லாம் எனக்குப் புதுசு மது.
நான் உன்னைக் காதலிக்கிறதைப்
புரிஞ்சுக்கிட்டேன்.உன் பார்வைகள்
எனக்கு நம்பிக்கை கொடுத்துச்சு”

“........”

“மலரா என் மதுவைப்
பார்த்திருந்த நான்,ஒரு நாள் என்
மதுவை தீயாவும் பார்த்தேன்.என்
காதல் அதிகமாச்சே தவிர
குறையலை.என் ம...”

“தீ ஆபத்தானது மதி.
சுவடே இல்லாம அழிக்கக்
கூடியது.தீ...”அவள் உதட்டில்
விரல் வைத்து மதுராவை
மௌனிக்கச் செய்தான் மதிவதனன்.

“நீ அழகான தீ மது.என்
வாழ்க்கையை ரம்மியமாக்க
வந்த தீ!எனக்குக் காதலைக்
கத்துக் கொடுத்தப்
பவித்திரமான தீ!நான்
உருகிக் கரைஞ்சு கலந்து
காணாமப் போக விரும்பற
தித்திக்கும் தீ என் மது!”

மதுராவின் பார்வையில்
மையல் கூட,தனக்காகத் துடிக்கும்
நெஞ்சத்தில் சாய்ந்து
மிருதுவாக முத்தமிட்டாள்.

“அன்னைக்கு உன்கிட்ட
ஒரு விஷயம் சொல்ல
வந்தேன்.ஆனா சொல்ல
முடியாமப் பேச்சு மாறிடுச்சு”

“என்ன விஷயம் மது”

“எனக்கு அடிபட்டதுக்கு,
வேலையை விட்டுட்டு இங்க
வந்ததுக்கு எல்லாம் நிறைய
வருத்தப் பட்டிருக்கேன் மதி.
ஆனா எப்ப உன்னைக்
காதலிக்கிறது புரிஞ்சுதோ...
அப்ப...உன்னை
சந்திக்கிறதுக்காகத்தான்
எல்லாமே நடந்திருக்குன்னு
நான் வருத்தப் படறதை
விட்டுட்டேன் மதி”

“மதூ...எதுக்காகவும் உனக்கு
அந்த மாதிரி அடி பட்டிருக்கக்
கூடாதுடா.நீயும் நானும்
சேரணும்னு எழுதியிருக்கு.
அது எதாவது ஒரு வழியில
கண்டிப்பா நடந்திருக்கும்”

கணவனின் உள்ளத்து
வேதனையை உணர்ந்தவளாய்,
மீண்டும் தன் இதழொற்றி
மருந்திட்டாள் மதுரா.

“இன்னொன்னு சொல்லணும் மதி”

“சொல்லு குட்டி”

“நான்...எப்ப உன்னைக்
காதலிக்கிறதை உணர்ந்தேனோ...
அந்த நொடியே உன்கிட்ட
ஓடி வந்து ஐ லவ் யூ மதின்னு
சொல்லணும்னு ஆசைப்
பட்டேன்.ஆனா...ரெஜீஸ்
விஷயம் முடியட்டும்னு
அமைதி ஆயிட்டேன்”

எத்தனை நாட்கள் தன்
காதலைச் சொல்லாது
என் மது தவித்திருப்பாள்?
நிஜத்திற்கும்,நிழலிற்கும்
நடுவில் அவள் மனது எத்தனை
துன்பப் பட்டிருக்கும்?

“மதீ...உனக்கு...நிஜமாலுமே...
என் மேல கோபம்...வருத்தம்
இல்லை தானே...நான்...
ரெ..”நிமிர்ந்து அவன் முகம்
பார்த்து வினவினாள் மதுரா.

“என்னோட அதிபுத்திசாலியான
பொண்டாட்டி,சில நேரம்
அசடாயிடறாங்க.இப்படித்
தப்புத் தப்பா யோசிக்கிறதுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்?”
மதிவதனன் விளையாட்டாகப்
பேசினாலும் அவன் விழிகள்
கண்டிப்பைக் காட்டியது.

“நீ என்னைப் பத்தி என்ன
நினைப்பேன்னு...என் மனசுல...
பயம்...குழப்பம் இருந்துச்சு மதி.
ஆனா அதெல்லாம் நீ என்
வீட்டுக்கு வந்து கல்யாணத்தை
முடிவு பண்ண நொடியே
மறைஞ்சு போயிடுச்சு.
இருந்தாலும்...ரெஜீஸ் பேச்சு
வந்ததும்...உன் மனசு கஷ்டப்
படுமோன்னு கேட்டேன் மதி”

“கஷ்டமெல்லாம் எதுவும்
இல்லைடா.ரெஜீஸ்ஸை நினைச்சா...நீ
துப்பாக்கியோட வந்து
அட்டகாசமா என்ட்ரி
கொடுத்தியே,அது தான் என்
மனசுல படமா ஓடும்.என்
மதுங்கிற கர்வத்தைத் தவிர
வேற எதுவுமே தோணாது”

“தேங்க்ஸ் மதி”

“போதும்.இனிமேல் இதைப்
பத்தி பேச உனக்கு அனுமதி
கிடையாது ஹனி.இதைப்
பத்தி மட்டும் இல்லை,வேற
எதைப் பத்தி பேசவும் அனுமதி
கிடையாது மது.இதுக்கு மேல
உன் மதனால நேரத்தை
வீணடிக்க முடியாது”

“இல்லை.இனி நான் பேசலை
மதி.இதை மட்டும் சொல்லிடறேன்.
ப்ளீஸ்..”

“ஒரு செகண்ட் தான் டைம்”

“ஐ லவ் யூ மதி”

“ஐ டூ லவ் யூடா மது”

“என்னை எப்பவும் இதே
மாதிரி லவ் பண்ணனும்”

“இல்லை மது.இதை விட
அதிகமா லவ் பண்ணுவேன்”

“ஐ லவ் யூ மதி.ஐ லவ் யூ.
நானும் என் மதியை,என்
மதனை ரொம்ப ரொம்ப
நேசிக்கிறேன்...நேசிப்பேன்...”

தன்னை மயக்கிய மதி
முகத்தில் மதுரா தன்
முத்தங்களைப் பதிக்க,
மதிவதனன் அதற்குப்
பதிலளிக்க,அவர்களின்
முத்தத்தின் தித்திப்பில்
கரைந்தது நிமிடங்கள்!


🌺🌺🌺சுபம்🌺🌺🌺


ஹாய் பிரெண்ட்ஸ்,

கதையை முழுமையாகப் பதிவு
செய்து விட்டேன்.மது,மதி உங்கள்
உள்ளத்தைக் கவர்ந்தார்களா,
உங்கள் வாசிக்கும் நேரத்தைத்
தித்திக்கச் செய்தார்களா
என்றறிய
ஆவலுடன்
காத்திருக்கிறேன்.
பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி🙏🙏

ப்ரியமுடன்,
நித்திலா
🙂
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
30
அழகிய பூவே!
மலரென மயங்கி நின்றேன்!
நீ தீயென அறிந்த பின்னும்
உனை நெருங்கி வந்தேன்!
உனக்காக வாழ்ந்திருப்பேன்!
நான் சாம்பலாகிப் போகும் நாளில்
காற்றாய் வந்து உனைக்
காத்திருப்பேன்!

முப்பது நாட்களுக்குப்
பின்பான ஒரு இரவுப் பொழுது.

நான்கு நாட்களுக்கு முன்
நடை பெற்ற மதிவதனன்
திருமணத்திற்கு வந்திருந்த
உறவுகளில் சிலர் எஞ்சியிருக்க,
அவர்களின் உற்சாக
உரையாடல்களால்
நிறைந்திருந்தது சாரதா இல்லம்.

மேல் தளத்தில் இருந்த
மதிவதனன் அறையில்,தன்
கண்களை மறைத்த
கணவனின் கைகளைத்
தொட்டுப் பார்த்துச்
சிரித்தாள் மதுரா.

“என்னோட மதன் என்னை
எங்க கடத்திட்டுப் போகப்
போறார்”

“உனக்கு ரொம்பப் பிடிச்ச
கிப்ட்டைக் காட்ட,உன்
ரூம்முக்குப் போகறோம் மது”

“எவ்வளவு கிப்ட் தான் கொடுப்பே
மதி”

“என் ஷர்ட்டை பத்திரப்படுத்தி
வைச்சிருந்ததுக்காக இந்த கிப்ட்”

“திருடா!என் வாட்ரோபை நீ எதுக்குத்
திறந்தே மதி”

“நீதான் உன்னோட ரெட் கலர்
துப்பட்டாவைக் காணோம்னு
அழுகாத குறையா புலம்பினயே.
தேடிக் கொடுப்பமேன்னு
திறந்தேன்.துப்பட்டாவும் கிடைச்சுது,
என் ஷர்ட்டும் கிடைச்சுது”

“எப்படிடா என் துப்பட்டா
திடீர்னு வந்துச்சுன்னு
பார்த்தேன்.என் சமர்த்து
வேலை தானா”

“இதோ ரூம்குள்ள வந்தாச்சு”
பேசிக் கொண்டே அறைக்குள்
சென்றிருந்தனர் இருவரும்.

“என்ன பண்ணி வைச்சிருக்கே
மதி”

“என்னோட ஸ்வீட்டான மது,
அவங்களுக்கு ரொம்ப ரொம்ப
ரொம்பப் பிடிச்ச பியர்ஸ்
பிராஸ்னன் படத்தை எப்ப
வேணாலும்,எத்தனை தடவை
வேணாலும் பார்த்துப் பார்த்து
ரசிக்கலாம்”மதுரா கண்களில்
இருந்து கைகளை விலக்கித்
தன் பரிசைக் காட்டினான்
மதிவதனன்.

“மதி!!இது என்ன இவ்வளவு
பெரிய ஸ்கீரின்...புது ஹோம்
தியேட்டர் வேற!எதுக்கு இப்ப
இது?நீ ஏன் தான் இப்படிப்
பணத்தை செலவு பண்றயோ?”

“பணம் சம்பாதிக்கிறதே
செலவு பண்ணத் தானே மது?
அதுவும் நமக்குப்
பிடிச்சவங்களுக்குத் தேடித்
தேடி கிப்ட் வாங்கறப்ப
ஏற்படற சந்தோஷம் இருக்கே.
அதுக்கு ஈடே இல்லை மது”

“கிப்ட் வாங்கிறது தான்,
அதுக்குன்னு ஒரு அளவில்லையா
மதி”

“நீ சந்தோஷப் படுவேன்னு
பார்த்தா...போ மது”நகர
முற்பட்டவனின் கை பிடித்து
நிறுத்தி அவன் கழுத்தில்
கைகளை மாலையாகக்
கோர்த்துக் கொண்டாள் மதுரா.

“நாலு நாளா என்னை உன்
கிப்ட்டால திணறடிச்சுட்டே
மதி.மது ரொம்ப ரொம்ப
ரொம்ப சந்தோஷமா இருக்கா.
இனிமேல் எனக்கு கிப்ட்
கொடுக்கணும்னு
ஆசையாயிருந்தா சிம்பிளா
எதாவது வாங்கிக் கொடு மதி”

“ம்”

“எனக்கு பியர்ஸ் பிராஸ்னனைப்
பிடிக்கும்னு என் மதிக்கு யார்
சொன்னது?பவியா?”

“ம்.அவன் தான் “அக்காவுக்கு
பியர்ஸ் பிராஸ்னன்னா உயிரு,
அவரோட ஒவ்வொரு படத்தையும்
அம்பது தடவையாவது
பார்த்திருப்பான்னு”சொன்னான்”

“உயிர் எல்லாம் இல்லை மதி.
பிடிக்கும். அவ்வளவு தான்.
அஞ்சு தடவைப் பார்த்ததைத்
தான் அம்பது தடவைன்னு
சொல்லி இருக்கான்”

“எப்படியோ உனக்கு அவரைப்
பிடிக்கும் தானே?ஜேம்ஸ்பான்ட்
படமா பார்த்துப் பார்த்துத் தான்
உனக்கு டிடெக்டிவ் ஆகணும்கிற
ஆசை வந்துச்சா மது?அந்தப்
பிஸ்டல்...அந்தப் பரபரப்பு...
அதெல்லாம் பிடிச்சுடுச்சா ”

“இல்லை...தெரியலை...இருக்கலாம்”

“ஒரு கேள்விக்கு எவ்வளவு பதில் மது”

“உனக்கு எந்த பதில் சரின்னு
தோணுதோ,அது தான் பதில்”

சிரித்த மதிவதனன்,“படம்
பார்க்கலாமா மதி”என்று மதுரா
கேட்டதில் உற்சாகமானான்.

திவதனன் அறைக்
கதவைத் தட்டக் கை
உயர்த்திய மயூரியின் கை
பிடித்துத் தடுத்தான் வசந்தன்.

“உங்கண்ணன் மேல வந்து
பத்து நிமிஷம் தான்
ஆகியிருக்கு.அதுக்குள்ள
வந்தாச்சா”

“நாங்க அண்ணாவுக்கும்,
அண்ணிக்கும் குட்நைட்
சொல்ல வந்தோம்”

“நாங்கன்னா...பவியும்,முகிலுமா”

“ஆமாம்.முதல் கையை
விடு வசு.யாராவது
பார்த்துடப் போறாங்க”

“பார்த்தா என்ன மயூ”
அவள் கை பிடித்து
அருகிலிருந்த அறைக்குள்
இழுத்தான் வசந்தன்.

“ஐயோ!வசு...நம்ம
காதலுக்குப் பச்சைக்கொடி
காட்டிட்டாங்கன்னு உனக்குக்
குளிர் விட்டுப் போச்சு”

“உன் வசந்த்துக்கு பயம்னா
என்னனே தெரியாது டார்லிங்”

“அப்படியா?மதிணா...”

“என்ன பண்றே மயூ”மயூரி
அலறியதில்,வசந்தன் அவள்
வாயைப் பொத்த,அவன்
கையைக் கடித்தாள் மயூரி.

“ஆ!!ஐயோ!அ...”

“கத்தாதேடா”இப்போது
மயூரி அவன் வாயைப் பொத்த,
அவள் கரத்தில் முத்தமிட்டான்
வசந்தன்.

“உன்னை...எதுக்குக் கூப்பிட்டே?
சீக்கிரம் சொல்லு”

“அதூ...”

“நீ இழுக்கிறதைப் பார்த்தா...
உடனே கல்யாணம்
பண்ணிக்கலாம்னு
சொல்லிடாதே வசு.நான்
கொஞ்ச நாள் மது கூட
இருக்கணும்னு நினைக்கிறேன்”

“கல்யாணமா?நான்
எப்பவுமே கல்யாணத்தைப்
பத்தி எல்லாம் யோசிச்சதே
இல்லை மயூ”

“என்னடா சொல்றே”

சுவற்றை ஒட்டி நின்றிருந்த
மயூரியின் தோளில் கை
வைத்த வசந்தன்,“கண்கள்
இருக்கத் தோரணம் ஏனோ,
கைகள் இருக்க மாலைகள்
ஏனோ”எனக் கேட்டபடியே
அவள் கரங்களை தன்
கழுத்தில் மாலையாக
சூடிக் கொண்டான்.

“இருமனம் ஒன்றானால்
திருமணம் ஏனோ”என்று
வினா எழுப்பி மயூரியின்
உதடுகளை நெருங்கிய வசந்தன்,
வெளியில் கேட்ட பலமான
சிரிப்புச் சத்தத்தில்
சுதாரித்து விலகி நின்றான்.

“மயூ,இவர் நம்ம எம்ஜிஆர்
பாட்டைப் பாடி,உன்னை
ஏமாத்தறார்”என்று முகிலன் சிரிக்க.

“ஆமாம் மயூக்கா”எனத்
தன்னை ஆமோதித்த
பவித்திரனை அழைத்துக்
கொண்டு அங்கிருந்து
நகர்ந்தான் முகிலன்.

“அப்பாடி,நல்லவேளை நான்
அடி வாங்கிறதைப்
பார்க்கணும்னு ஆசைப்
படாம போயிட்டாங்க.
போட்டுக் கொடுத்தாலும்
நல்ல பசங்க”

“ஏதோ கவிதை சொல்றேன்னு
பார்த்தா...என்னை ஏமாத்தறயா
நீ?”வசந்தனின் இரு
கன்னத்தையும் பிடித்து
வலிக்கும்படி கிள்ளினாள் மயூரி.

“ஆ...மயூ...போதும்...விடு.
அன்னைக்கும் இப்படித்தான்
என் தலையில குழி
விழுகிற மாதிரி கொட்டினே”

“ஓவர் ஆக்ட் பண்ணாதேடா”

“அந்தக் கொட்டுக்கும்,
உம்மாவுக்கும் என்ன
அர்த்தம் மயூ”

“என் ஓட்டை வாய்க்கு
பயந்து உண்மையை
மறைச்சதுக்கு தண்டனை.
என்னோட சூப்பர்
ஜேம்ஸ்பான்ட்டுக்கு உம்மா”

“என்ன மயூ,நீ ஜேம்ஸ்பான்ட்
படமெல்லாம் பார்த்ததில்லையா”
வசந்தன் பார்வை அவள்
உதட்டில் பதிய,அவன்
கையில் பட்டென்று ஒன்று
போட்டாள் மயூரி.

“ஆசை,தோசை,அப்பளம்,
வடை!நாம லவ் பண்ண
ஆரம்பிச்சவுடனே
உண்மையைச் சொல்லாம
எத்தனை நாள் கழிச்சு
சொன்னே?உனக்கு ஒண்ணும்
கிடையாது.மது மங்கிக்குத்
தான் மூடு சரியில்லை.
உனக்கு என்ன?என்ன
தான் நான் ஓட்டை வாயா
இருந்தாலும்,ரகசியத்தை
எல்லாம் ரகசியமா வைச்சிருப்பேன்”

“சாரிடா.மது சொல்றப்ப...
நானும் சொல்லிக்கலாம்னு
இருந்துட்டேன்”

“சரி விடு.எதுக்கு என்னைக்
கூப்பிட்டே?சீக்கிரம்
சொல்லு.நான் போகணும்
வசு.சாரு ரொம்ப
ஸ்ட்ரிக்ட் தெரியுமா?”

“எதுக்கு...எதுக்கு...ஞாபகம்
வந்துடுச்சு.நான் உன்னைக்
காதலிக்க ஆரம்பிச்சு எட்டு
மாசம் அஞ்சு நாள் ஆறு
மணி நேரம் ஆகப் போகுது.
இந்த நிமிஷத்தைக் கொண்டாட
ஏழு ஜென்மத்துக்கும் ஞாபகம்
இருக்கிற மாதிரி ஒரே ஒரு
கிஸ் கொடு மயூ கண்ணு”

“இவ்வளவு தானா?என் வசந்தா
கேட்டா கொடுக்காம இருப்பனா”

“எனக்கு ஒண்ணும்
வேண்டாம்.நீ வசந்தான்னு
ராகம் போடாம இருந்தாலே
போதும்.தள்ளு,நான் போறேன்”

“சரிசரி.கூப்பிடலை.
கரெக்டா நைட் பன்னெண்டு
மணிக்கு மொட்டை மாடிக்கு
வா.நீ கேட்கிற மாதிரி கிஸ்
கொடுக்கறேன் வசந்தகுமாரா”

“நடுராத்திரிலயா...
டிராகுலாவைக் காதலிச்சுட்டனே.
காத்திருக்கேன்”

வசந்தன் சிரிக்கவும்,அவன்
கன்னத்தைக் கடித்து விட்டு
ஓடினாள் மயூரி.சிரிப்பு
மாறாமல் அவள் பின்
சென்றான் வசந்தன்.

துரா அறையில்,மதுராவின்
பார்வை திரையில் பதியாமல்
அருகிருந்த கணவனிடம்
பாய்ந்து கொண்டிருந்தது.

“படம் வேண்டாமா”என்றான்
அவள் பார்வையை உணர்ந்தவனாய்.

“அப்புறம்..மெதுவா..ப்ரீயா
இருக்கறப்ப பார்க்கலாம் மதி”

“சரி”என்று அவளைக்
கைகளில் ஏந்திக் கொண்டான்
மதிவதனன்.

“மதி..இறக்கி விடு,கை வலிக்கும்”

“நாலு எட்டுல என் ரூம்முக்குப்
போகப் போறேன்.அதுக்குள்ள
பெரிசா வலிச்சுடாது மது”

மனைவியை சோபாவில்
அமர வைத்து விட்டு,
அவளருகில் அமர்ந்தான்
மதிவதனன்.

தன் கைக்காயத்தைப்
பட்டும்படாமலும் தொட்டுப்
பார்த்துக் கலங்கும்
மதுராவின் விழிகளைக்
கண்ட மதிவதனன்
மறுப்பாகத் தலையசைக்க,
அவளும் புன்னகை கொண்டாள்.

“இப்பக் கடைசி கிப்ட்.
இதை நீ மறுக்கவே மாட்டே
மது.சொல்லப் போனா,இது
தான் நான் கொடுத்ததுலயே
உனக்கு பெஸ்ட் கிப்ட்டா
இருக்கப் போகுது”

“என்ன கிப்ட் மதி”மதுரா
ஆர்வமுடன் வினவ.

“உன்னோட சின்னச் சின்ன
ஆசையைக் கூட
நிறைவேத்தணும்னு
நினைக்கிறவன் நான்.
உன்னோடப் பெரியக்
கனவுக்கு என்னால
எப்படித் தடையா இருக்க
முடியும் மது?நான்
சம்மதிக்கறேன் மது”

“என்ன கனவு...”என
யோசித்த மதுரா,நம்ப
முடியாமல் தன் விழிகளை
விரித்தாள்.

“நிஜமாவா மதி?அன்னைக்கு
வேண்டவே வேண்டாம்னு
சொன்னே.எப்படி உன்
மனசு மாறுச்சு?நீ நிஜமா
சொல்றயா...இல்லை
விளையாடறயா?”

“நான் நிஜமா தான்
சொல்றேன்டா.என் மது
மறுபடியும் டிடெக்டிவ்
ஆகணும்,ஆகணும்,
ஆகணும்!”

“என்னால இன்னும் நம்ப
முடியலை மதி”

“எனக்கு இப்பவும்
பயமாதான் இருக்கு.
இருந்தாலும்,நீ என் உயிரை
பத்திரமா பார்த்துக்குவேன்கிற
நம்பிக்கை பயத்தை விட
அதிகமாயிருக்கு”

“...........”

“என்ன பிரச்சனை
வந்தாலும் சமாளிச்சுடுவே,
ஒரு தடவை அடி பட்டனால
நீ முன்னாடி இருந்ததை
விட எச்சரிக்கையா இருப்பே,
ஆபத்தில மாட்டிக்க
மாட்டேன்கிற நம்பிக்கையில
சம்மதிக்கறேன் மது”

“.............”

“கொஞ்ச நாள் பொறுமையா
இரு.நான் அத்தைக் கிட்டப்
பக்குவமா பேசி சம்மதம்
வாங்கித் தர்..மதூ...”அவன்
முகமெங்கும் மதுரா பதித்த
முத்திரையில் தன் வசமிழந்து
அவளை அணைத்து
முத்தமழை பொழிந்தான்
மதிவதனன்.

நீண்ட பல நொடிகளுக்குப்
பிறகு,தன்னிடம் இருந்து
விலகிய மனைவியை
விலக விடாமல் அணைத்துக்
கொண்டான் மதிவதனன்.

“தேங்க்ஸ் மதி.ஐ லவ் யூ
மதி.நான் எப்பவும் கவனமா
இருப்பேன் மதி.உன்
நம்பிக்கையைக்
காப்பாத்துவேன்”மதுரா
குரலில் தெரிந்த நெகிழ்ச்சியால்
மதிவதனன் அணைப்பு
இறுகியது.

மதுராவின் நெகிழ்ச்சியான
குரலை மாற்ற விரும்பியவனாய்ப்
பேச்சை மாற்றினான் மதிவதனன்.

“நீ இன்வைட் பண்ண
பிரெண்ட்ஸ் எல்லாரும்
வந்திருந்தாங்களா மது”

“பாதி பேர் வந்திருந்தாங்க
மதி.மத்தவங்க ரிசப்ஷனுக்கு
வர்றதா சொல்லி இருக்காங்க”

“ம்.மயூ பிரெண்ட்ஸ் தான்
அதிகம்னு நினைக்கிறேன்”

“ஆமாம் மதி.மயூ
கல்யாணத்துக்கு நீங்க
பெரிய மண்டபமா பார்க்கணும்”

“நீங்க இல்லை.நாம”

விலகி அமர்ந்த மதுரா,
“சாரி.நாம”என்றாள்
அவன் முகம் பார்த்து.

மனைவியின் கன்னத்தை
மதிவதனன் வருட,
அவன் கரத்தை தன்
கன்னத்தோடு அழுத்திக்
கொண்டாள் மதுரா.

“நம்ம கல்யாணம் இவ்வளவு
சீக்கிரம் நடக்கும்னு நான்
நினைக்கவே இல்லை மதி”

“சீக்கிரம்மா...ரொம்ப லேட்டா
கல்யாணம் பண்ணி இருக்கோம்
மது.உனக்கு இருபத்தி ஏழும்,
எனக்கு இருபத்தி ஒன்பது
வயசும் ஆச்சு மது”

“அதில்லை மதி.நாம
காதலை சொல்லி...
கொஞ்ச நாள் காதலிச்சு...
அப்புறம் நம்ம கல்யாணம்
நடக்கும்னு நினைச்சுட்டு
இருந்தேன் மதி.இப்படி
திடீர்னு நடக்கும்னு
எதிர்பார்க்கலை”

“நானுமே எதிர்பார்க்கலை
மது.இருந்தாலும்...
சந்தோஷமா இருக்கு”

“எனக்கும்...”மெல்லிய
குரலில் சொல்லி அவன்
தோளில் தலை சாய்த்துக்
கொண்டாள் மதுரா.

தன் தோளில் சாய்ந்த
பூமகளை மென்மையாக
அணைத்துக் கொண்ட
மதிவதனன் இதழ்கள்
புன்னகை பூத்தது.

“உனக்கு ஞாபகம் இருக்கா
மது?சின்ன வயசுல நாம டூர்
போறப்ப நீ இப்படித்தான்
என் தோள்ல சாய்ஞ்சு
தூங்குவே”

“நல்லா ஞாபகம் இருக்கு
மதி.நாம அஞ்சு பேரும்
ஒரே சீட்டில
உட்கார்ந்திருப்போம்.
நானும்,மயூவும் உன்
தோள்ல சாய்ஞ்சுக்குவோம்.
பவி என் தோள்ல
சாய்ஞ்சுக்குவான்.முகில்
உன் மடியில உட்கார்ந்திருப்பான்”

தங்கள் சிறு வயதை
நினைத்துப் பார்த்த
தம்பதியர் முகத்தில்
மகிழ்ச்சி பொங்கியது.

“வாழ்க்கையோட ஓட்டம்
நெருக்கமானவங்க கிட்ட
இருந்து கூட நம்மளைப்
பிரிச்சுடுது இல்லே மது”

இருகுடும்பமும் எத்தனை
அன்பாக,ஒற்றுமையாக இருந்தது?
நாங்கள் வேறு ஊருக்குச்
சென்ற பின்னும் தொலைபேசியில்
நட்பு தொடர்ந்து.ஆனால் நாட்கள்
செல்லச் செல்ல இருபக்கமும்
அழைப்புகள் குறைந்து
நின்றே போய் விட்டது.
குடும்பம்,படிப்பு,வேலை
என்று அவரவர் ஓட்டத்தோடு
காலமும் ஓடி விட்டது.

“மதூ...”என அவள்
முகத்தை நிமிர்த்திப்
பார்த்தான் மதிவதனன்.

“இப்ப தான் நாம
எப்பவும் பிரியாத
மாதிரி சேர்ந்துட்டமே
மது.கடந்து போன
இடைவெளியைப் பத்தி
எதுக்கு நினைக்கணும்?
சாரிடா.நான் உளறி உன்...”

“இல்லை மதி.என் மூடு
நல்லாதான் இருக்கு.நீ
உடனே கவலைப் பட
ஆரம்பிச்சுடாதே”மதுரா
புன்னகைக்க,எப்போதும்
போல் அவள் சிரிப்பை
ரசித்தான் மதிவதனன்.

“கேட்கணும்னு நினைச்சேன்.
பவி என்னவோ உன்கிட்ட
சீரியஸா பேசிட்டு இருந்த
மாதிரி இருந்துச்சு.எதுவும்
பிரச்சனை இல்லையே மது”

நிமிர்ந்து அமர்ந்த மதுரா,
“அதூ... கல்யாணத்தில...
பவி யாரோ பேசறதைக்
கேட்டிருக்கான்.அதை தான்
என்கிட்ட சொல்லிட்டு
இருந்தான் மதி”
என்றாள் தயக்கத்துடன்.

“என்ன பேசுனாங்க மது”

“........”

“தயங்காம சொல்லுடா”

“மதீ...“எங்க சுஜியைப்
பையனுக்குப் பிடிச்சிருந்துச்சு.
சுஜி தான் இந்த வீட்டு
மருமகளாகி இருக்கணும்.
ஜாதகம் பொருந்தாதனால
வேற பொண்ணு
பார்த்துட்டாங்கன்னு...”
பேசிட்டு இருந்திருக்காங்க”

மதிவதனன் அதிர்ச்சியை
அவன் முகம் அப்பட்டமாய்க்
காட்ட,அவனை ஆறுதல்
படுத்துவது போல அவன்
தோளில் கை வைத்தாள் மதுரா.

“மதூ...சுஜி நல்ல பொண்ணு
தான்.ஆனா எனக்கு அவ மேல..
அந்த மாதிரி ஈர்ப்பு...
இல்லை மது.உனக்குப்
புரியுதில்லடா”

“எனக்குப் புரியுது மதி.
நீ எதுவும் சொல்ல வேண்டாம்”

“இல்லைடா.நீ தெரிஞ்சுக்கணும்.
சுஜி பேரண்ட்ஸ் ஆசைப்
பட்டாங்க. மத்தபடி
எனக்கோ,சுஜிக்கோ
அந்த மாதிரி எண்ணம்
எதுவும் இல்லை.நம்ம
வீட்டிலயும் எல்லார்
மனசுலயும் நீ தான்
இருக்கே.சுஜியை நினைச்சு
நீ எப்பவும் உன் மனசைக்
குழப்பிக்கக் கூடாது.
பவி...”அவன் உதட்டில்
விரல் வைத்து அவன்
பேச்சிற்குத் தடை
விதித்தாள் மதுரா.

“எனக்கும் தெரியும்.
பவிக்கும் தெரியும்.ஏன்
இந்த உலகத்துக்கே தெரியும்”

“..............”

“மதி பிறந்தது மதுக்காக!
மதி இதயம் துடிப்பது
மதுக்காக!அவன் காதல்
என்றும் என்றும் மதுக்காக!”

மதுரா பாடலில் மதிவதனன்
சிரிக்க,அவன் நெற்றியில்
செல்லமாக முட்டினாள் மதுரா.

“அநாவசியமா கவலைப்பட்டா
இது தான் தண்டனை.இப்படி
அழகா சிரிச்சா...இது கிடைக்கும்”
என அவன் கன்னத்தில் ஓர்
முத்தம் வைத்தாள் மதுரா.

“அந்தம்மா எப்படி ரீல்
விடறாங்கன்னு பாருக்கான்னு
சொன்னானே தவிர,
உன்னைப் பத்தி அவன்
எதுவுமே சொல்லலை மதி.
அவனோட மதி மாமாவைப்
பத்தி அவனுக்கு நல்லாவே
தெரியும்”

தன் உதட்டின் மீதிருந்த
விரலில் முத்தமிட்ட
மதிவதனன்,மனையாளின்
கரம் பிடித்து மென் விரல்
ஒவ்வொன்றிலும் இதழ் பதித்தான்.

“உனக்குத் தெரியுமா மது?
உன்னைப் பார்க்கிறதுக்கு
முன்னாடி...காதல்,கல்யாணம்...
இதைப் பத்தி எல்லாம் நான்
யோசிச்சதே இல்லை.அந்த
மாதிரி ஆசைகள் ஏனோ
எனக்கு வந்ததே இல்லை.
மதூ..எதுக்கு சிரிக்கறே”

“மயூ உங்க அருமை
பெருமைகளை எல்லாம்
சொல்லிட்டா மதி”

“அந்த வாலு அவ
இஷ்டத்துக்கு எதாவது
கதை விட்டிருப்பா”

“அண்ணன் எதாவது
மடத்துல போய்ச் சேர்ந்து
சன்னியாசி ஆயிடுவானோன்னு
பயந்துட்டு இருந்தேன் மது.
நல்லவேளை,நீ வந்து
அண்ணனைக் காதல்
மன்னனா மாத்தி,
லேப்டாப்பைக் கட்டிப்பிடிச்சு
டூயட் பாடற அளவுக்கு காதல்
பித்தை முத்த வைச்சு எங்க
வானர வம்சத்தோட குலவிளக்கு
அணையாம காப்பாத்திட்டே.
உனக்கு என்ன கைம்மாறு
செய்வேன்?சொல்லு மது.
சொல்லு”

மயூரியின் பேச்சை
நினைத்துச் சிரித்த மதுரா
அதைக் கணவனிடம்
கூற,மதுராவின் சிரிப்பை
எதிரொலித்தான் மதிவதனன்.

“நான் உன்னை நேசிக்கிறதை
யார்கிட்டயுமே சொல்லலை
மது.மயூ அவளாவே ஒரு நாள்
கேட்கவும்,நான் உன்னை
விரும்பறதை ஒத்துக்கிட்டேன்.
உடனே ஓடிப் போய்
அம்மாகிட்டயும்,முகிகிட்டயும்
சொல்லிட்டா.அம்மா ரொம்ப
சந்தோஷப் பட்டாங்க.
ஆனா நான் தான் நொந்து
போயிட்டேன்”

“ஏன் மதி”

“அப்ப இருந்து உன்
பேரைச் சொல்லி சொல்லி
மயூ பண்ற அலும்பு இருக்கே.
ஏன்டா உண்மையை
ஒத்துக்கிட்டோம்னு ஆயிடுச்சு”

“நம்ம காதல் நமக்குப்
புரியறதுக்குள்ள நம்மைச்
சுத்தி இருக்கிறவங்களுக்குப்
புரிஞ்சுடுது மதி.மயூ மாதிரி
தான் வசந்த்தும் நான் உன்னை
விரும்பறதை தெரிஞ்சுக்கிட்டான் மதி”

இக்காதலை மட்டும்
மறைக்கவே முடியாது.
மலர்ந்து விட்ட மலரின்
மணத்தை எங்ஙனம்
மறைக்க முடியும்?

“அத்தை நாலு வருஷத்துக்கு
முன்னாடியே உனக்குக்
கல்யாணம் பண்ண ஆசைப்
பட்டதா மயூ சொன்னா மதி.
அம்மா பேச்சைத் தட்டாதவன்
,இந்தக் கல்யாண விஷயத்தை
மட்டும் ஒத்துக்கவே இல்லைன்னு
வருத்தப்பட்டு பேசினா.மயூ உன்னை
நினைச்சு ரொம்பக் கவலைப்பட்டு
இருந்திருக்கா மதி”

“உண்மை தான் மது.நான்
என் காதலை சொல்லவே
மாட்டனோன்னு பயந்து தான்
அந்த ராத்திரி நேரத்தில உன்
வீட்டுக்கு வந்திருப்பான்னு
நினைக்கிறேன்.சரியான
வாலு.வசந்த்கிட்ட சொல்லி
வைக்கணும்”

“ரெண்டு பேரும் சரியா
இருப்பாங்க மதி.
ரெண்டுமே சரியான வாலுக”
மதுராவின் கூற்றை
ஆமோதித்துத் தலை
அசைத்தான் மதிவதனன்.

“ஏன்னு தெரியலை,அப்பெல்லாம்
எனக்குக் கல்யாணத்தைப் பத்தின
எண்ணமே வரலை மது.எனக்கு
எந்தப் பொண்ணையாவது
பிடிச்சா நானே சொல்றேன்மான்னு
சொல்லிட்டேன்.அம்மாவும்
புரிஞ்சுக்கிட்டாங்க”

மதுரா பார்வையைச் சந்தித்த
மதிவதனன்,“இப்ப தான் புரியுது.
என் மனசு இந்த தேவதையோட
காதலுக்காக காத்துட்டு
இருந்திருக்குன்னு”என்றான்
மென்மையாக.

“உன்னை ப்ளூ சல்வார்ல
பார்த்த அந்த நிமிஷம்,யார்
இந்த தேவதைன்னு நான்
இமைக்க மறந்து நின்னேன்
மது.நம்ம மதுவா இதுன்னு
ஆச்சர்யப் பட்டேன்.உன்
கூடப் பழக ஆரம்பிச்சதுக்கு
அப்புறம்...நான் நானாவே
இல்லை.அந்த உணர்வுகள்
எல்லாம் எனக்குப் புதுசு மது.
நான் உன்னைக் காதலிக்கிறதைப்
புரிஞ்சுக்கிட்டேன்.உன் பார்வைகள்
எனக்கு நம்பிக்கை கொடுத்துச்சு”

“........”

“மலரா என் மதுவைப்
பார்த்திருந்த நான்,ஒரு நாள் என்
மதுவை தீயாவும் பார்த்தேன்.என்
காதல் அதிகமாச்சே தவிர
குறையலை.என் ம...”

“தீ ஆபத்தானது மதி.
சுவடே இல்லாம அழிக்கக்
கூடியது.தீ...”அவள் உதட்டில்
விரல் வைத்து மதுராவை
மௌனிக்கச் செய்தான் மதிவதனன்.

“நீ அழகான தீ மது.என்
வாழ்க்கையை ரம்மியமாக்க
வந்த தீ!எனக்குக் காதலைக்
கத்துக் கொடுத்தப்
பவித்திரமான தீ!நான்
உருகிக் கரைஞ்சு கலந்து
காணாமப் போக விரும்பற
தித்திக்கும் தீ என் மது!”

மதுராவின் பார்வையில்
மையல் கூட,தனக்காகத் துடிக்கும்
நெஞ்சத்தில் சாய்ந்து
மிருதுவாக முத்தமிட்டாள்.

“அன்னைக்கு உன்கிட்ட
ஒரு விஷயம் சொல்ல
வந்தேன்.ஆனா சொல்ல
முடியாமப் பேச்சு மாறிடுச்சு”

“என்ன விஷயம் மது”

“எனக்கு அடிபட்டதுக்கு,
வேலையை விட்டுட்டு இங்க
வந்ததுக்கு எல்லாம் நிறைய
வருத்தப் பட்டிருக்கேன் மதி.
ஆனா எப்ப உன்னைக்
காதலிக்கிறது புரிஞ்சுதோ...
அப்ப...உன்னை
சந்திக்கிறதுக்காகத்தான்
எல்லாமே நடந்திருக்குன்னு
நான் வருத்தப் படறதை
விட்டுட்டேன் மதி”

“மதூ...எதுக்காகவும் உனக்கு
அந்த மாதிரி அடி பட்டிருக்கக்
கூடாதுடா.நீயும் நானும்
சேரணும்னு எழுதியிருக்கு.
அது எதாவது ஒரு வழியில
கண்டிப்பா நடந்திருக்கும்”

கணவனின் உள்ளத்து
வேதனையை உணர்ந்தவளாய்,
மீண்டும் தன் இதழொற்றி
மருந்திட்டாள் மதுரா.

“இன்னொன்னு சொல்லணும் மதி”

“சொல்லு குட்டி”

“நான்...எப்ப உன்னைக்
காதலிக்கிறதை உணர்ந்தேனோ...
அந்த நொடியே உன்கிட்ட
ஓடி வந்து ஐ லவ் யூ மதின்னு
சொல்லணும்னு ஆசைப்
பட்டேன்.ஆனா...ரெஜீஸ்
விஷயம் முடியட்டும்னு
அமைதி ஆயிட்டேன்”

எத்தனை நாட்கள் தன்
காதலைச் சொல்லாது
என் மது தவித்திருப்பாள்?
நிஜத்திற்கும்,நிழலிற்கும்
நடுவில் அவள் மனது எத்தனை
துன்பப் பட்டிருக்கும்?

“மதீ...உனக்கு...நிஜமாலுமே...
என் மேல கோபம்...வருத்தம்
இல்லை தானே...நான்...
ரெ..”நிமிர்ந்து அவன் முகம்
பார்த்து வினவினாள் மதுரா.

“என்னோட அதிபுத்திசாலியான
பொண்டாட்டி,சில நேரம்
அசடாயிடறாங்க.இப்படித்
தப்புத் தப்பா யோசிக்கிறதுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்?”
மதிவதனன் விளையாட்டாகப்
பேசினாலும் அவன் விழிகள்
கண்டிப்பைக் காட்டியது.

“நீ என்னைப் பத்தி என்ன
நினைப்பேன்னு...என் மனசுல...
பயம்...குழப்பம் இருந்துச்சு மதி.
ஆனா அதெல்லாம் நீ என்
வீட்டுக்கு வந்து கல்யாணத்தை
முடிவு பண்ண நொடியே
மறைஞ்சு போயிடுச்சு.
இருந்தாலும்...ரெஜீஸ் பேச்சு
வந்ததும்...உன் மனசு கஷ்டப்
படுமோன்னு கேட்டேன் மதி”

“கஷ்டமெல்லாம் எதுவும்
இல்லைடா.ரெஜீஸ்ஸை நினைச்சா...நீ
துப்பாக்கியோட வந்து
அட்டகாசமா என்ட்ரி
கொடுத்தியே,அது தான் என்
மனசுல படமா ஓடும்.என்
மதுங்கிற கர்வத்தைத் தவிர
வேற எதுவுமே தோணாது”

“தேங்க்ஸ் மதி”

“போதும்.இனிமேல் இதைப்
பத்தி பேச உனக்கு அனுமதி
கிடையாது ஹனி.இதைப்
பத்தி மட்டும் இல்லை,வேற
எதைப் பத்தி பேசவும் அனுமதி
கிடையாது மது.இதுக்கு மேல
உன் மதனால நேரத்தை
வீணடிக்க முடியாது”

“இல்லை.இனி நான் பேசலை
மதி.இதை மட்டும் சொல்லிடறேன்.
ப்ளீஸ்..”

“ஒரு செகண்ட் தான் டைம்”

“ஐ லவ் யூ மதி”

“ஐ டூ லவ் யூடா மது”

“என்னை எப்பவும் இதே
மாதிரி லவ் பண்ணனும்”

“இல்லை மது.இதை விட
அதிகமா லவ் பண்ணுவேன்”

“ஐ லவ் யூ மதி.ஐ லவ் யூ.
நானும் என் மதியை,என்
மதனை ரொம்ப ரொம்ப
நேசிக்கிறேன்...நேசிப்பேன்...”

தன்னை மயக்கிய மதி
முகத்தில் மதுரா தன்
முத்தங்களைப் பதிக்க,
மதிவதனன் அதற்குப்
பதிலளிக்க,அவர்களின்
முத்தத்தின் தித்திப்பில்
கரைந்தது நிமிடங்கள்!


🌺🌺🌺சுபம்🌺🌺🌺


ஹாய் பிரெண்ட்ஸ்,

கதையை முழுமையாகப் பதிவு
செய்து விட்டேன்.மது,மதி உங்கள்
உள்ளத்தைக் கவர்ந்தார்களா,
உங்கள் வாசிக்கும் நேரத்தைத்
தித்திக்கச் செய்தார்களா
என்றறிய
ஆவலுடன்
காத்திருக்கிறேன்.
பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி🙏🙏

ப்ரியமுடன்,
நித்திலா
🙂
அருமையான கதை. நிறைவான முடிவு. விரைவில் விமர்சனத்தோடு வருகிறேன்.
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
நாவல் விமர்சனம்

தலைப்பு: தித்திக்கும் தீ நீ!

ஆசிரியர்: நித்திலா மதுகிருஷ்ணா

தலைப்பில் உள்ள தித்திப்பும், பெயரில் உள்ள மதுவும் சேர்ந்து இனிமையோ இனிமை !

மதிவதனன் என்ற மதி, மதுரா என்ற இருவரின் காதல் காவியம். கூடவே மதுராவின் சாகசங்கள், சமூக சிந்தனை, பெண்ணியம் என்று அனைத்தையும் சேர்த்து முழுமையான விருந்தாகப் படைத்திருக்கிறார் நித்திலா.

ராங் கால் மூலமாகப் பழக ஆரம்பித்து மாயப் புதைகுழியில் தள்ளும் வாட்ஸப் நண்பர்களிடம் ஜாக்கிரதையாகப் பெண்கள் பழக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கதை.

ரெஜிஸ் போன்ற அயோக்கியர்களிடம் எளிதாக வலையில் விழும் இளம் பெண்கள் , சிறுமிகள், இல்லத்தரசிகள் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய அவலத்தைத் தோலுரித்துக் காட்டிய சிந்தனைக்குப் பாராட்டுகள்.

ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்திய விதம் அழகு. கதையின் ஆரம்பத்திலும், இறுதியிலும் வந்த கவித்துவமான வரிகள் ஆபரணங்களாக அழகைக் கூட்டின.

ராதா, சாரதா, பவித்ரன், முகில், மயூரி, வசந்தன், தினா என்று அனைத்துக் கதாபாத்திரங்களும் கதையில் சுவாரஸ்யத்தைக் கூட்டின. கூடுதல் பரிசாக வசந்தன், மயூவின் காதல் வசனங்களும், காட்சிகளும் மனதைக் கொள்ளை கொண்டன.

காதல் ரசம் சொட்டும் உரையாடல்கள் இனிமை. மணம் முடிக்கப் போகும் பெண்ணின் ஆசையை உணர்ந்து கொண்டு ஆதரவு தரும் நல்ல வாழ்க்கைத் துணையாக மதி மனதைக் கவருகிறான்.

என்ன தான் நடக்கிறது மதி மற்றும் மதுவின் நடுவே, மது பிரச்சினையில் ஏன் மாட்டிக் கொள்கிறாள், மதுவை மதி சரியாகப் புரிந்து கொள்கிறானா, வசந்துக்கும் மதுவுக்கும் நடுவிலான நட்பு எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.

நல்லதொரு இனிமையான காதல் கதை. சமூக அக்கறையுள்ள காதல் கதை. நித்திலாவின் எழுத்தை இரசிக்கத் தவறாமல் படியுங்கள்.

ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

புவனா சந்திரசேகரன்,
20/03/2021.
 

Nilaa

Moderator
Staff member
அருமையான கதை. நிறைவான முடிவு. விரைவில் விமர்சனத்தோடு வருகிறேன்.

அருமையான கதை,நிறைவான முடிவுன்னு கேட்க ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாவும்,நிறைவாவும்
இருக்கு.ரொம்ப ரொம்ப ரொம்ப
நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 

Nilaa

Moderator
Staff member
நாவல் விமர்சனம்

தலைப்பு: தித்திக்கும் தீ நீ!

ஆசிரியர்: நித்திலா மதுகிருஷ்ணா

தலைப்பில் உள்ள தித்திப்பும், பெயரில் உள்ள மதுவும் சேர்ந்து இனிமையோ இனிமை !

மதிவதனன் என்ற மதி, மதுரா என்ற இருவரின் காதல் காவியம். கூடவே மதுராவின் சாகசங்கள், சமூக சிந்தனை, பெண்ணியம் என்று அனைத்தையும் சேர்த்து முழுமையான விருந்தாகப் படைத்திருக்கிறார் நித்திலா.

ராங் கால் மூலமாகப் பழக ஆரம்பித்து மாயப் புதைகுழியில் தள்ளும் வாட்ஸப் நண்பர்களிடம் ஜாக்கிரதையாகப் பெண்கள் பழக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கதை.

ரெஜிஸ் போன்ற அயோக்கியர்களிடம் எளிதாக வலையில் விழும் இளம் பெண்கள் , சிறுமிகள், இல்லத்தரசிகள் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய அவலத்தைத் தோலுரித்துக் காட்டிய சிந்தனைக்குப் பாராட்டுகள்.

ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்திய விதம் அழகு. கதையின் ஆரம்பத்திலும், இறுதியிலும் வந்த கவித்துவமான வரிகள் ஆபரணங்களாக அழகைக் கூட்டின.

ராதா, சாரதா, பவித்ரன், முகில், மயூரி, வசந்தன், தினா என்று அனைத்துக் கதாபாத்திரங்களும் கதையில் சுவாரஸ்யத்தைக் கூட்டின. கூடுதல் பரிசாக வசந்தன், மயூவின் காதல் வசனங்களும், காட்சிகளும் மனதைக் கொள்ளை கொண்டன.

காதல் ரசம் சொட்டும் உரையாடல்கள் இனிமை. மணம் முடிக்கப் போகும் பெண்ணின் ஆசையை உணர்ந்து கொண்டு ஆதரவு தரும் நல்ல வாழ்க்கைத் துணையாக மதி மனதைக் கவருகிறான்.

என்ன தான் நடக்கிறது மதி மற்றும் மதுவின் நடுவே, மது பிரச்சினையில் ஏன் மாட்டிக் கொள்கிறாள், மதுவை மதி சரியாகப் புரிந்து கொள்கிறானா, வசந்துக்கும் மதுவுக்கும் நடுவிலான நட்பு எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.

நல்லதொரு இனிமையான காதல் கதை. சமூக அக்கறையுள்ள காதல் கதை. நித்திலாவின் எழுத்தை இரசிக்கத் தவறாமல் படியுங்கள்.

ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

புவனா சந்திரசேகரன்,
20/03/2021.

எவ்வளவு வேகமான வாசிப்பு,உடனே
விமர்சனம்னு ஒரு பக்கம் பிரம்மிப்பா
இருக்கு.இன்னொரு பக்கம் இவ்வளவு
அழகான விமர்சனம் பார்த்து மனசு
அப்படியே நெகிழ்ந்து போயிருக்கு.
சந்தோஷமா இருக்கு.நிறைவா இருக்கு.
விருது வாங்கின மாதிரி இருக்கு மா.
பதில் சொல்லவே எனக்கு நாலு நாள்
ஆகும்னு நினைக்கிறேன்.

உங்களுக்கு எனது அன்பான நன்றிகள்
மா😍😍😍😍😍😍😍😍

எவ்வளவு முறை நன்றி சொன்னாலும்
போதாது.ஆயிரமாயிரம் நன்றிகள்
சொல்லவா,எண்ணிலடங்காத
நன்றிகள்னு சொல்லவா, என்ன சொல்றதுன்னே தெரியலை மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உங்களுக்கு எனது மனம் நிறைந்த
அன்பும்,நன்றியும் மா❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top