கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன்-14

Akila vaikundam

Moderator
Staff member
14


ஒருவழியாக ஏர்போர்ட்க்கு அவளை கூட்டி வந்தவன் தூங்கி கொண்டிருந்தவளை தட்டி எழுப்பி இம்முறை அவளை விட்டுச் செல்லாமல் கை வளைவிலேயே வைத்துக் கொண்டான்.


அதன் பிறகு டெல்லி சென்று முடிக்கும் பொழுது இரவை நெருங்கி இருந்தது இம்முறை வேதாவிற்கு விமானம் புறப்படும் சமயத்தில் வந்த பயமும் பதட்டமும் இல்லை... தலைசுற்றலும் இல்லை.


ஏற்கனவே ஒருமுறை வந்ததால் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்து கொண்டவள் அவளே சீட் பெல்ட்டினை அணிந்து கொண்டு அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொண்டாள்.


விமானம் தரையிறங்கவும் மீண்டும் அவளை தனித்து விடாமல் அவனருகில் வைத்துக் கொண்டான்.


ஏனோ வேதாவிற்கு அவனின் செயல் எரிச்சலை ஏற்படுத்தியது.
இப்படி ஏன் என்னை ஒட்டிகிட்டே வர்றீங்க என்று கடிந்து கொண்டவளிடம்‌


உன் ஊர்ல தனியா விட்டதுக்கே இன்னும் சொல்லி காட்டற...இது வேற ஊர்... உனக்கு புரியாத பாஷை இங்க விட்டா அவ்ளோதான் காலத்துக்கும் இதையே சொல்லி குத்தி காட்டுவ என்றான்.


அது மட்டும் தானா என்பது போல் பார்த்தவளிடம்...அது மட்டுமில்ல நீ என்ன நினைக்கறியோ அதுவும் தான் என்றவனைப் பார்த்து…


நான் என்ன நெனச்சேன்….ஒன்னுமில்ல…


சரி..சரி கூட வா...கூட கூட வாய் பேசாத…


ம்கூம்...என்று முகத்தை அவளது தோள் வளைவில் இடித்துக் கொண்டவளை கைப்பிடித்தவன் ஹோட்டல் அறைக்குள் வந்ததும்தான் விட்டான்.


உள்ளே வந்ததுமே வேதாவிற்கு ஒருவித பயம் தொற்றிக்கொண்டது முகம் வியர்க்க கை கால்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தது...அவளின் பயத்தை உணர்ந்து கொண்டவன் மிக மெதுவாக அவளின் கைகளை விடுவித்தான்.


பிறகு அவளின் கண்களைப் பார்த்து இங்கப் பாரு வேதா நீ என்னை பார்த்து இப்படி பயப்படனும்னு அவசியம் கிடையாது உன் அனுமதி இல்லாமல் தப்பான நோக்கத்தோடு என்னோட சுண்டு விரல் கூட உன் மேல படாது அதனை நம்பலாம் என்று கூறியவன் பிளைட்ல வந்தது டயர்டா இருக்கும் நீ போய் குளிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு நான் நைட் டின்னர் ஆர்டர் பண்றேன் என்று கூறியபடி அறையை விட்டு வெளியேறினான்.


அதன்பிறகுதான் வேதாவிற்கு நிம்மதி பிறந்தது.பிறகு பெட்டியை திறந்து அவளிடமிருந்த சுமாரான ஒரு காட்டன் புடவையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.


டெல்லி குளிருக்கு இதமாக குளியலறையில் தண்ணீர் வெதுவெதுப்புடன் இருக்கவும் அலுப்புத் தீர ஷவருக்கு அடியில் நிற்க ஆரம்பித்தாள். எவ்வளவு நேரம் நின்றாள் என்று தெரியாது ஆனால் போதும் என்று அவளின் மனம் அறிவுறுத்தவும் குளியலை முடித்துவிட்டு புடவையை பெயருக்கு கட்டிக்கொண்டாள்.

பிறகு
தலையில் ஒரு துவாலையை சுற்றிக்கொண்டவள் புடவை அவிழாதவாறு தோள் பகுதியில் ஒரு கையையும் வயிற்றுப் பகுதியில் ஒரு கையையும் அழுத்திப் பிடித்தபடி வெளியே வந்தாள்.

அங்கு அறையில் இவளை எதிர்பார்த்த மாறன் பெயருக்கு தொலைக்காட்சி பார்த்தபடி இருந்தான்...


இவளைக் கண்டதும் குளிக்கிறதுக்கு இவ்வளவு நேரமா என்று கிண்டலாக கேட்டவன் தலையில் துவாலையை சுற்றி இருப்பதைப் பார்த்து சற்றுப் கோபமுற்றான்.


இந்த நேரத்தில் போய் தலைக்கு குளிச்சிருக்க முதல்ல நல்லா தலையை தூவட்டு என்று கூற அவளுக்கு இப்பொழுது தலையை துவட்டவா இல்லை புடவையை நன்கு கட்டவா என்ற குழப்பம் உண்டாயிற்று.


சொல்லிக்கிட்டே இருக்கேன் அப்படியே நின்னுக்கிட்டு இருக்க இந்த குளுர்ல ஜன்னி வந்திட போகுது என்ற படி அவளின் அருகில் வர அப்பொழுது தான் அவள் புடவையை சரிவர கட்டாததைக் கண்டான்.

அவள் புடவை கட்டும் வரை வெளியில் செல்லலாம் என்று சில வினாடிகள் யோசித்தான் மாறன் ஆனால் அவள் புடவை கட்டும் வரை தலையில் ஈரத்தோடு இருந்தாள் உடல் உபாதைகள் ஏதாவது வந்துவிடும் என்று உணர்ந்தவன் அவள் அருகில் சென்றவன் நீ அப்படியே நில்லு என்று கூறியபடி அவளின் துவாலையை கழட்டி தலை துவட்டி விட ஆரம்பித்தான்.



வேதாவிற்கு ஒன்றுமே புரியவில்லை என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே... இவன் என்னுடைய தலையை துவட்டி விடுகிறானா…?இதை இவ்வளவு நாள் தாய் கூட செய்து விட்டதில்லை...எப்பொழுதாவது இவள் தாயிடம் கேட்டால் அதற்கு அவர் உடனடியாக பதில் கொடுப்பார்.


இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்திருக்க உனக்கு தலையை துவட்டி விட ஒரு ஆள் வேணுமா நீ மட்டும் தான் இந்த வீட்ல இருக்கியா உன்னை விட சின்னவ இந்து அவ அவளோட வேலையை தனியா செய்யறா. ஆனா நீ மட்டும் தான் இப்படி அடிக்கடி வந்து சாப்பாடு ஊட்டி விடு ,தலையைத் துவட்டி விடு, எண்ணை வைச்சி விடுனு வந்து தொல்லை பண்ணிகிட்டு நிற்கற...அதெல்லாம் செஞ்சு விட முடியாது நீயே பண்ணிக்கோ என்று தான் கூறியிருக்கிறார் இப்படி அக்கறையாக ஒரு நாளும் வந்து செய்து விட்டது இல்லை.


எதனால் இந்த அக்கறை... ஏன் இந்த திடீர் மாற்றம் என்று அவளுக்குள் கேள்வி எழ தொடங்கியது.


தலையை ஓரளவுக்கு துவட்டி விட்டவன் பிறகு அவனது சூட்கேஸில் இருந்த ஹீட்டரை எடுத்து ஆன் செய்து அவளது தலைமுடியை காயவைக்க தொடங்கினான்.


சற்று நேரத்தில் தலை முற்றிலும் காய்ந்து விட்ட பிறகு ஹீட்டரை ஓரிடத்தில் வைத்தவன்...சரி நீ புடவையை சரியா கட்டிக்கோ நான் கொஞ்சம் நேரம் வெளிய போயிட்டு வரேன் என்று கூறியபடி எதுவும் நடக்காதது போல் வெளியே சென்று விட்டான்.


அவனது கண்ணியத்திலும் கவனிப்பிலும் அவளின் மனம் சற்று நெகிழ தொடங்கியிருந்தது அவன் சென்ற சில வினாடிகள் வரை பிரம்மை பிடித்தவள் போல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.


அவனின் மூச்சுக்காற்று பட்ட பின்கழுத்துப்பகுதியில் இன்னமும் அதன் சூடு இருப்பதுபோல் உணர்ந்தவள் சட்டென்று கைகளை பின்நகர்த்தி அதைத் தொட்டுப் பார்த்தாள் உடல் முடிகள் சிலிர்த்து இருக்க ஒருவித மோன நிலை உருவாயிற்று.


சற்று நேரம் கழித்து கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு தான் நிஜ உலகுக்கு வந்தவள் ஒரு நிமிஷம் என்று சத்தம் கொடுத்தபடி வேகவேகமாக புடவையை சரி செய்தாள் அதன் பிறகு கதவை சென்று திறக்க வாசலில் மாறன் நின்று கொண்டு இருந்தான் யோசனையாக அவளைப் பார்த்தவன் என்னாச்சு உனக்கு டெல்லி வந்ததிலிருந்து ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்ல பாத்ரூமுக்குள்ள போய் மணிக்கணக்கா குளிக்கற…


பத்து நிமிஷத்துல புடவை கட்டிடுவனு பார்த்தா கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல பண்ற என்றபடி உள்ளே வந்தான்.


பிறகு வேதா குளிக்கும் போதே ஹோட்டல் பணியாளர் கொண்டு வந்திருந்த உணவை ஆராய்ந்த படி



எனக்கு ரொம்ப பசிக்குது குளிக்கலாம் நேரம் இல்லை நான் முதல்ல சாப்பிட போறேன் வந்து எனக்கு கம்பெனி கொடு என்று உரிமையாக அவளையும் எதிர்ப்புறமாக அமர வைத்தவன் சூடான உணவை அவளுக்கு பரிமாறத் தொடங்கினான்.



அவனும் ஒரு தட்டில் போட்டு வேகமாக உண்ண ஆரம்பித்தான்.



கிச்சடி போல் ஏதோ ஒன்றைச் சமைத்திருந்தார்கள் அதற்கு சைடு டிஷ்ஷாக காரமான சிவப்பு மிளகாய் சட்டினியும் இருக்க அந்த குளிருக்கு அது நன்றாக இருப்பது போல் தான் தோன்றியது அவனுக்கு.


அதன் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்த வேதாவை சில நிமிடங்கள் கழித்துதான் பார்த்தான்.



என்ன சாப்பிடாம அப்படியே வச்சிருக்க சாப்பிடு...என்று அவளை கூறியவன் அவளின் தட்டை கவனித்த படி ஒஒஒ சூடா இருக்கா அதான் கைல வச்சிருக்கியா...என்றபடி அவளின் தட்டை வாங்கி கிச்சடியை எடுத்து சாப்பிடுவதற்கு இலகுவாக பிரித்துக் கொடுத்தான்.


அவனின் செயல்கள் ஒவ்வொன்றும் அவளின் கண்களில் நீரை வரவழைத்தது இவ்வளவு அன்பை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது அதுவும் திருமணமான அன்று சாப்பிடுவதற்காக தான் இவளை விட்டுவிட்டு சென்றான் அப்படிப்பட்டவன் இன்று தான் சாப்பிடவில்லை என்பதற்காக கவலைப்படுகிறானா இது நடிப்பா இல்லையென்றால் மண்டபத்தில் அன்று நடந்தது நடிப்பா அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை புரியவும் இல்லை இயல்பிலேயே ஒருவனுக்கு இந்த அளவு இரக்ககுணம் இருந்தால் மட்டும்தான் இது போல் எல்லாம் செய்ய முடியும் நிமிடத்துக்கு நிமிடம் மாறமுடியாது என்று குழம்பத் தொடங்கினாள்.


எதுவும் பேசாமல் அவள் உண்ணும் வரை பொறுமை காட்ட அவள் சாப்பிட்டு முடித்ததும் சுடிதார் மாதிரி எதுவும் எடுத்துட்டு வரலையா எல்லாமே புடவைதான் எடுத்துட்டு வந்து இருக்கியா எல்லாமே என்று கேட்டான்.



ஆமாம் என்பது போல் தலையை அசைக்க சரி ஒன்னும் பிரச்சினை இல்ல குளிருக்கு புடவையும் நல்லா தான் இருக்கும் என்றவன் அவனது ஜெர்கீனை எடுத்து கொடுத்து இதை போட்டுக்கோ மிட் நைட்ல ரொம்ப குளிர் இருக்கும் என்று கூறியவன் அவனது புத்தம் புதிய சாக்ஸ் ஒன்றையும் எடுத்துக் கொடுத்தான்.


புரியாமல் பார்த்த வேதா விடம் குளிருக்கு இதமா இருக்கும் கால்ல போட்டுக்கோ இந்த ரூம்ல ஹீட் வார்மர் வெச்சிருக்காங்க ஆனா அது எந்த அளவு பயனளிக்கும்னு சொல்ல முடியாது என்று கூறினான்.

சரி என தலையசைத்து அதை வாங்கிக் கொண்டவள் கவர் முன்னும் பின்னும் திருப்பி பார்த்தாள்.


சிரித்தபடியே கையிலிருந்த வாங்கிய மாறன் அதை பிரித்து அவளிடத்தில் கொடுத்தான்.



இது வரை சாக்ஸ் அணிந்திடாதவள் முதல் முறை என்றதும் அணிந்து கொள்ள திணறினாள்.அதுவும் அவன் முன்பு புடவையை தூக்கி காலில் அணிய கூச்சமும் உண்டாயிற்று.


கீழே குனிந்து அவன் பார்க்காத வண்ணம் போடலாம் என்று முயற்சித்தாள்.பலனில்லை அவனின் கடைக்கண் பார்வை அவ்வப்போது அவளை வருடிச்சென்றது.




அவனின் முன்பு அணிவதற்கு சிரமப் பட்டுக் கொண்டிருந்தவளின் எதிரில் வந்து அமர்ந்த மாறன் வேதாவின் கால்களை இழுத்து சாக்ஸை மாட்டி விட்டான்.


புடவை மேலே ஏறாதவாறு கெண்டைக்காலோடு அழுத்தி பிடித்தபடி அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேதா.



சாக்ஸை மாட்டிவிட்டவன் அவளின் முகம் பார்த்து ...வேதா ரிலாக்ஸா இரு..
எதுக்காக இந்த அளவு டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் ஆக்கற….நீ பதட்டம் ஆகறதை பார்க்கும் போதுதான் எனக்கு பயமா இருக்கு.



நான் ஏதாவது தப்பு செய்யறேனோனு…. எல்லாத்தையும் கேஷுவலாக எடுத்துக்கோ இங்க இருக்கப் போற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு நானும் எனக்கு நீயும் தான் துணை அதனால ஒருத்தருக்கு ஒருத்தர் பிரெண்லியா இருக்கலாம்.


கண்டிப்பாக உன் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்கப்போவதில்லை அப்புறம் எதற்காக இந்த அளவு உனக்கு பயம் வருது என்று பேசியவன்... சரி எனக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன் நீயும் படுத்து தூங்கு என்று கட்டிலில் ஓரமாக சென்று படுத்தவன் சற்று நேரத்தில் உறங்க ஆரம்பித்தான்.



தொட்டதற்கெல்லாம் தூங்க ஆரம்பிக்கும் வேதாவிற்கு தூக்கம் சுத்தமாக இல்லை என்ன இது நாம் ஒன்று நினைத்தால் இங்கு நடப்பது எல்லாம் வேறாக இருக்கிறதே…?


திருமண பந்தமே முடிந்துவிடும் என்று பார்த்தால் இப்பொழுது நட்பாக இருக்கலாம் என்று அழைக்கிறான் என் அனுமதி இன்றி எதுவும் நடக்காது என்று வாக்குக் கொடுக்கிறான்... அப்படி என்றால் காலம் முழுவதும் இவனுடன் தான் எனது பயணமா…? என்ற கேள்வி எழும்பியது...தூங்கும் மாறானை விழி மூடாமல் பார்க்க தொடங்கியவளுக்கு தூக்கம் காணாமல் போனது…


விடிய விடிய முழித்திருந்தவள் அதிகாலையில் விழி மூட ஆரம்பித்தாள்.
கண் விழிக்கும் பொழுது அறை முழுவதும் இருட்டாக இருந்தது. குளிருக்கு இதமாக கழுத்துவரை போர்த்தியிருந்த பிளாங்க் கேட்...கண் விழிக்காதே என்பதுபோல ஒரு கதகதப்பை கொடுத்தது.மீண்டும் ஒரு அரைமணி நேரம் அப்படியே கிடந்தவளுக்கு பசிப்பது போல் தோண்றியது.


சரி சாப்பிட்ட பிறகு மீண்டும் உறங்கலாம் என்று நினைத்தவள் சோம்பல் முறித்த படி எழுந்து அமர்ந்தபடி மணி பார்க்க அது மதியத்தை தொட்டிருந்தது.


அய்யோ இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன் என்று அதிர்ச்சி அடைந்த வேதா பக்கத்தில் தூங்கிய மாறனைப்பார்க்க அவன் இல்லை…


பயந்து அறையை சுற்றி பார்க்க அவன் அறைக்குள் இருந்ததற்கான அடையாளம் அவனது உடமைகள் எல்லாம் நீட்டாக எடுத்து வைக்கப் பட்டிருந்தது.

அப்பாடா என்னை விட்டுட்டு எங்கேயும் போயிடல...இன்னும் இங்கதான் இருக்கிறான் என்று அவளுக்கு அவளே ஆறுதல் கூறிக்கொண்டாள்.


பிறகுதான் கவனித்தாள்.எதிர் புறமாக இருந்த டேபிளின் மீது ஒற்றை காகிதம் காற்றில் அசைவதை.


காகிதத்தை கையில் எடுத்தவள் ஜன்னல் திரைச்சீலைகளை ஒதுக்கிவிட்டு வெளிச்சத்தில் அதை படிக்க ஆரம்பித்தாள்.


மாறன் வேலை விஷயமாக வெளியே செல்வதால் வர எப்படியும் மதியத்தைத் தாண்டி விடும் நீ எழுந்ததும் காலை உணவு உனக்கு தயாராக டேபிளில் இருக்கிறது எடுத்து சாப்பிடு…


மதிய உணவு அறைக்கே வரும்... தாமதிக்காமல் சாப்பிட்டு விடு... அறைக்குளே இரு... போர் அடித்தால் டிவி பார்...இல்லையென்றால் ஹோட்டலின் தரைத்தளம் முழுவதும் வணிக நோக்கத்துடன் செயல்படும் கடைகள் நிறைய இருக்கிறது…


அங்கு சென்று சற்று நேரம் பொழுதை போக்கு... செல்லும் பொழுது மறக்காமல் வரவேற்பில் கூறிவிட்டு செல் என்று இருந்தது….அதை படிக்கவும் இதழோரத்தில் சிறு புன்னகை பூத்தது.


காகிதத்தை மடித்து பத்திரப்படுத்தியவள் வேகமாக குளியலறைக்குள் புகுந்தாள்.

குளித்து முடித்து வெளியே வந்தவள் காலை உணவை மதியம் உண்ண ஆரம்பித்தாள்.


சிறிது நேரம் டிவியை ஆன் செய்து பார்க்க மதிய உணவை‌ ஹோட்டல் பணியாளர் கொண்டு வந்திருந்தார்... இப்பொழுது தானே சாப்பிட்டோம் மீண்டும் எப்படி என்று யோசித்த படி அதை பெற்றுக் கொண்டாள்.


மீண்டும் டிவி முன்பு அமர கவனம் அதில் இல்லாமல் மாறனிடம் சென்றது.எங்கு போயிருப்பான் என்று யோசித்தபடியே உறக்க ஆரம்பித்தாள்.சற்று நேரத்திலே உள்ளே வந்த மாறன் மதிய உணவு அப்படியே இருக்க அதை பார்த்ததும் வேதாவை எழுப்ப தொடங்கினான்.



வேதா எழுந்திரு….


ம்ம்.. தூக்கம் வருது ப்ளீஸ்…


அதான் எப்பவுமே தூங்கறியே... முதல்ல எழுந்து சாப்பிடு அப்புறமா தூங்கலாம் என்று அவளை எழ வைத்தான்.


கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்தவள் அவனைப் பார்த்து இப்போதான் சாப்பிட்டேன்...இது உங்களுகாக தான் வாங்கி வச்சேன்…


சரி எனக்கு ரொம்ப பசிக்கிது வழக்கம் போல வந்து எனக்கு கம்பெனி குடு…


இல்ல எனக்கு வேணாம் என்று சினிங்கியவளை விடாபிடியாக அமர வைத்து அவனோடு சாப்பிட வைத்தான்.


சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமை காத்தவன் பிறகு அவனவளை பார்த்து வேதா இப்போ நான் கொஞ்சம் வெளிய போறேன் நீயும் கூட வாயேன் எவ்ளோ நேரமா அறைக்குள்ளே அடைஞ்சி கிடப்ப…?


ம்ம்...இல்ல நான் இங்கேயே இருக்கேனே ‌நீங்க போய்ட்டு வாங்க…


ம்கூம் நீ வரனும் மொதல்ல கிளம்பு..
என்று அவளை வெளியே அழைத்துச் சென்றான்…


நேராக அவளை ஹோட்டலின் தரை தளத்திற்கு அழைத்து வந்தவன் அங்கிருந்த ஷாப்பிங் மாலில் அவள் வேண்டாம் வேண்டாமெனத் தடுத்தும் பல பொருட்களை வாங்கி குவித்தான்.


அத்தோடு விடாமல் மாலை வேளையில் அங்கிருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றவன் டெல்லியில் பிரபலமாக இருக்கும் சிற்றுண்டியை வாங்கி அவளுக்கு கொடுத்தான்.


ரசித்து உண்டவள்
அவனின் கவனிப்பில் சற்று ஆடித்தான் போனாள்.
அதன் பிறகு அவனை விட்டு செல்ல வேண்டும் என்று முடிவையும் மாற்றிக்கொண்டாள்.


காலம் முழுவதும் இதே அன்புடன் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கடவுளிடம் மானசீகமாக வேண்டிக் கொண்டாள்.
அதன் பிறகு தினமும் ஒரு சராசரி மனைவியைப் போல் நடந்து கொள்ள ஆரம்பித்தாள்.


அவளின் மாற்றத்தில் மனமகிழ்ந்த மாறன் பத்து நாட்கள் மட்டும் வெளியூர் பயணம் என்று இருந்ததை பதினைந்து நாட்களாக மாற்றிக் கொண்டான்.



வேலை விஷயமாக காலை வேளையில் வெளியூர் செல்பவன் மாலை வந்ததும் தினமும் டெல்லியை சுற்றிபார்க்க அவளை அழைத்துச் செல்வான்.


தினம் தினம் ஒவ்வொரு இடம் தினம் தினம் புது புது பயண அனுபவம் என அவளை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க பதினைந்தாம் நாள் இரவில் அவர்களின் தாம்பத்யம் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மிக சாதாரணமாக நடந்து முடிந்தது.


இருவருக்குள்ளும் கூடல் மிக அழகாக நடந்து முடிந்திருந்த பொழுது அவன் முழுக்க முழுக்க அவளவனாக மாறி இருந்தான்.


ஆனால் வேதாவிற்க்கு தான் ஏதோ ஒன்று குறையாக தோன்றியது...அவன் அவசர கதியில் தன்னுடன் கலந்ததாக..?இல்லை அவனது ஒவ்வொரு அணுகுமுறையிலும்
ஏதோ ஒரு பதட்டம் தென்பட்டதாகவே தோன்றியது.



இயல்பாக நடந்து முடிந்த கூடலுக்கு மாறன் ஏன் இந்த அளவுக்கு பதட்டம் அடைய வேண்டும்..
தம்பதியினரின் கூடல் முடிந்தபிறகு வேதா குளியலறைக்குள் சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வெளியே வரும்பொழுது மாறன் ஹோட்டல் பால்கனியில் நின்றபடி இரு கைகளாலும் தலையை மாறிமாறி கொதித்துக் கொண்டவன் பிறகு இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான்.


சாதாரணமாக கணவன் மனைவிக்குள் நடக்கும் ஒரு விஷயத்திற்கு மாறன் ஏன் இந்த அளவு தத்தளிக்கிறான்...இருவருமே அவர்களின் எல்லைக்கோட்டை மிக கண்ணியமாக தானே தாண்டினார்கள்.


கணவன் மனைவி என்ற முழு புரிதலும் உண்டான பிறகு தானே இருவருக்குள்ளும் சாதாரணமாக ஆரம்பித்த தொடுதல் பிறகு அது முத்தத்தில் தொடங்கி முழுவதுமாக நிறைந்தது…


அதற்கு ஏன் ஏதோ பெரிய தவறு செய்தது போல் இந்த அளவு படபடப்புடன் காணப்படுகிறார் என்று யோசித்தவளுக்கு அன்றைய இரவு தூங்கா இரவானது.


ஏற்கனவே அவளின் அடி மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது தன்னைப் போன்ற ஒரு எளிமையான பெண்ணை ஏன் இந்தளவு ஒரு ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று.



மாறனிடம் அப்படி என்ன ரகசியம் இருக்கிறது முதலில் முற்றிலும் என்னை ஒதுக்கினார் பிறகு உன்னை என்னிடம் இருந்து பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று டெல்லி வரை கடத்தி வந்து அவனது காரியத்தை அவளின் அனுமதியோடு அவனது அன்பால் சாதித்துக் கொண்டான்.


பிறகென்ன இனி அவனாக நினைத்தாலும் கூட அவள் அவனை விட்டுச் செல்லப் போவதில்லை.



அவளைப் பொருத்தவரை திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை அது மாறனுடன் நடந்தாகிவிட்டது.


அதன் பிறகான தாம்பத்தியமும் மிக அழகாக அவளது முழு சம்மதத்துடன் நடந்தாகிவிட்டது இனி ஏன் அவள் அவனை விட்டுச் செல்லப் போகிறாள் என்றெல்லாம் இவள் யோசிக்க சற்று நேரத்தில் மாறன் அறைக்குள் வரவும் தூங்குவது போல் பாவனை செய்தாள்.


உள்ளே வந்தவன் தூங்கும் வேதாவை கைகளைக் கட்டியபடி சற்று நேரம் பார்த்தான்.


பிறகு அவளது நெற்றியில் மென்முத்தம் ஓன்றை பதித்தான் ...மிக மெதுவாக கிசுகிசுப்பான குரலில் என்னை மன்னித்துவிடு வேதா உன்னை என்கிட்ட தக்க வச்சிக்க எனக்கு வேறு வழி தெரியல எங்கே என்னை விட்டு நீ சென்று விடுவாயோ என்று எல்லாவற்றையும் அவசர கதியில் நடத்தி விட்டேன்.



என்னை பற்றிய சில உண்மைகள் தெரிந்தால் நீ என்னை விட்டுச் சென்று விடுவாயோ என்ற பயம் எனது அடி ஆழ் மனதில் நிறையவே இருக்கிறது அதற்காக தான் இன்று உன்னுடைய உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதை நான் பயன்படுத்திக்கொண்டேன்...ஆனாலும் எனது இன்றைய காதல் உண்மை...என்று கூறிவிட்டு செல்ல…


அவன் பேசிய எதுவும் வேதாவின் காதுகளில் விழவில்லை ஆனால் முதல் முதலில் கூறிய மன்னித்துவிடு வேதா என்ற வார்த்தை தெளிவாகக் கேட்டது எதற்காக மன்னிக்க வேண்டும் என்று நினைத்தவள் மனதில் வைத்துக்கொண்டு குமைவதற்கு நேரடியாகவே அவனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று விழி திறந்து அவனின் பக்கமாக திரும்ப மாறன் படுத்தவுடனே உறங்க ஆரம்பித்து விட்டான் போல அவனின் சுவாசம் சீராக இயங்கவும் தூங்கும் அவனை எழும்ப வேண்டாம் என்று நினைத்தவளுக்கு குழப்பம் மேலோங்கியதே தவிர குறையவில்லை.


அதிகாலை வேளையில் குழப்பத்துடன் குளிரும் சேர்ந்துகொள்ள வேதாவிற்கு தூக்கம் வர மறுத்தது ‌


கட்டிலில் அங்கும் இங்குமாக திரும்பி திரும்பி படுத்தபடியும் நெளிந்தபடியும் கிடக்க அவளது அசைவில் கண்விழித்த மாறன் அவள் விழித்திருப்பதை பார்த்து என்ன என்று கண்களாலேயே கேட்டான்.


பதில் சொல்ல திணறியவளை மீண்டும் அவனது ஆளுகைக்குள் கொண்டு வர முயற்சித்தான் ஆனால் வேதா முன்னிரவில் அவனுக்கு கொடுத்த ஒத்துழைப்பை போல இந்தமுறை முழுமனதாக அவனிடம் கொடுக்க முடியவில்லை ஏதோ ஒன்று அவனுடன் சேர மறுத்தது.


உடலில் ஒரு இறுக்கம் தானாகவே ஒட்டிக்கொள்ள அதை உணர்ந்தவன் அவனின் செயல்பாடுகளை நிறுத்தி விட்டு ஆச்சரியத்துடன் அவளை கவலையாக நோக்கியபடி வேதா உனக்கு இது பிடிக்கலையா என்று கேட்டான்.


அந்த நேரத்தில் அவனை ஏமாற்ற விரும்பாத வேதா இல்லை என்பது போல் தலையசைத்த படி அவனை தனக்குள் இழுத்துக் கொண்டாள்.


மேற்கொண்டு மாறனை எதுவும் பேச விடவில்லை முழுநிலவு மேகத்திற்குள் சென்று ஒளிந்து கொள்வதை போல தென்றல் காற்று பூக்களை வருடிச் செல்வதுபோல காலை சூரியன் பனித்துளிகளை தன்னிடம் அழைத்துக் கொள்வதை போல மிக அழகாக அவளுக்குள் அவனை இழுத்துக்கொண்டாள் வேதா.



முதலில் அவளின் உடல் இறுக்கத்தை கண்டு சற்று அதிர்ச்சி அடைந்த மாறன் பிற்பாடு அவளின் ஒத்துழைப்பை கண்டு முழு திருப்தியுடன் அவனது தேடலை முடித்துக் கொண்டான்.


அதன் பிறகுதான் வேதாவின் முகத்தை பார்க்க யோசனையுடனே இருக்கும் அவளின் புருவச் சுளிப்பை குழப்பத்துடன் பார்த்தவனுக்கு பல கேள்விகள் எழ ஆரம்பித்தது…

மென்மையாக அவளின் புருவத்தை கட்டைவிரல் கொண்டு நீவி விட்டவன்... என்னாச்சு வேதா இப்போ நடந்தது உனக்கு பிடிக்கலையா…? இல்ல உன்னை என்னால சரியா திருப்தி படுத்த முடியலையா…? என்று கூறி முடிக்கும் முன்பே அவனது வாயை அவளின் கரம் மூடியிருந்தது…


ஏன் இப்படி பேசறீங்க...என்று கடிந்து கொண்டபடி அவனது நெஞ்சினில் சாய்ந்தவள் அவன் மீண்டும் அவளிடம் எதும் கேட்காதவாறு கெட்டியாக அணைத்துக்கொண்டாள் அதன்பிறகு மாறனின் கேள்விகளும் குழப்பங்களும் எங்கு சென்றது என்று அவனுக்கே தெரியவில்லை சந்தோஷத்துடன்
அவளை கை வளைவுக்குள் வைத்தபடி மீண்டும் உறங்க ஆரம்பித்தான் .



அசைய முடியாத படி அவனின் இரும்பு கரங்கள் அவளை ஆக்டோபஸாக பிடித்து வைக்க எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் அவனது வயிற்றில் மீது உறங்கும் பூனைக்குட்டியை போல் அப்படியே படுத்து இருந்தாள்.



எப்போதடா விடியும் என்று காத்துக் கொண்டிருந்தவளுக்கு விடிந்ததும் மாறன் சென்னை கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்க ஆச்சரியத்துடன் எழுந்து அமர்ந்தாள்.

தொடரும்...
 
Top