கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன் 15

Akila vaikundam

Moderator
Staff member
15


எழுந்துட்டியா வேதா...சரி சீக்கிரமா கிளம்பு நாம இப்பவே சென்னை போறோம்.


என்ன இப்போவேவா…?


ஆமா வந்த வேலை முடிஞ்சது...இனி எதுக்காக இங்க இருக்கனும் ஊருக்கு போகலாம்.


வந்த வேலை முடிஞ்சதுன்னா எதை சொல்லறீங்க என்று சற்று கோபமாகவும் யோசனையாகவும் கேட்டாள்.


ஷீட் என்று தலையில் அடித்துக்கொண்டவன்...பர்சேஸ் பத்தி சொல்ல வந்தேன் நீ என்ன நினைச்ச என்று இயல்பாக கேட்டவனை பார்த்து முறைத்தவள்


நீங்க என்ன நினைச்சு சொன்னீங்களோ அதைத்தான் நானும் கேட்டேன் என்று முடித்துக்கொண்டாள்.


அவளின் குழப்பங்கள் எல்லாம் சற்று முன்பு தான் மட்டு பட்டு இருந்தது இப்பொழுது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இருந்தது .


ஒருவேளை அவனுக்கு ஆளுகைக்குள் தன்னை கொண்டு வருவதற்காகத்தான் டெல்லி வரை கடத்தி வந்தானா…? அவனுடைய தேவைகளை பூர்த்தி செய்த உடனேயே இன்று சென்னை கிளம்பலாம் என்று கூறுகிறான்.



இதை தானே அவளும் கடந்த வாரத்திலிருந்தே கூறி வருவது டெல்லி பிடிக்கவில்லை சென்னை செல்லலாம் என்று ஆனால் அவன்தான் விடாப்பிடியாக இங்கேயே தங்க வைத்து இருக்கிறான் அவன் மட்டும் அவ்வப்போது பக்கத்து மாநிலங்களுக்கு பறந்து சென்று அவனது வேலைகளை முடித்து விட்டு வருகிறான்...இவளை பெயருக்கு வெளியில் அழைத்துச் சென்றதாகத் தான் தற்சமயம் தோன்றுகிறது…


ஆனால் அவளின் முகபாவனைகள் எல்லாவற்றையும் அவனின் வேலைக்கு நடுவே கவனித்துக்கொண்டிருந்த மாறன் மேலும் அவளை யோசிக்காத வண்ணமாய் முதல்ல எந்திரிச்சு கடகடன்னு கிளம்பு என்று கூறியவன் அவளை எழுப்பி குளியல் அறைக்குள் தள்ளும் பொழுது ஆமா ராத்திரி முழுக்க தூங்காம ஏன் கொட்ட கொட்ட முடிச்சுட்டு இருந்த என்று கேட்டான்.


அதிர்ச்சியில் குளியலறையின் கதவை பிடித்தபடியே நின்று கொண்டிருந்த வேதா நான் தூங்கலனு உங்களுக்கு எப்படி தெரியும் ஏன் நீங்களும் தூங்கலையா…?


நீ தூங்கலைனு தெரிஞ்சிக்கறதுக்காக நான் முழிச்சு இருக்கணும் அப்படிங்கிற அவசியம் கிடையாது உன்னோட முகமே சொல்லுது நீ ராத்திரி தூங்கலனு எது உன் தூக்கத்தை கெடுத்தது... நேத்து நமக்குள்ள நல்லாத்தானே புரிதல் இருந்தது... அப்படி இருக்கும் பொழுது உனக்கு மட்டும் ஏன் தூக்கம் கெட்டது…


நமக்குள்ள இருந்த நெருக்கமா...இல்லனா நெருக்கத்தை உருவாக்கின நானா…?
என்று அவளைப் பார்த்து கேள்வியெழுப்பினான்.


அவனிடத்தில் என்ன பதில் கூறுவது நீ தான் காரணம் என்றா..?


உன்னுடைய சுயநலத்திற்காக என்னை நேற்றிரவு பயன்படுத்திக் கொண்டாய் என்றா கணவனிடத்தில் முகத்தில் அடித்தது போல் கூறமுடியும்.


ஒருவேளை இவளது புரிதல் தவறாக இருந்தால் அது அவனை காயப்படுத்தி நிரந்தரமாக அல்லவா பிரித்து வைத்துவிடும் அதனால் பதில் சொல்ல யோசிக்கும் பொழுதே…


நாம இங்கிருந்து சென்னைக்கு போக முழுசா மூணு மணி நேரம் இருக்கு அதனால பொறுமையா குளிச்சுகிட்டு யோசனை பண்ணிட்டு இரு.


சென்னை போறதுக்குள்ள காரணம் என்னனு என்கிட்ட சொல்லு என்று அவளை குளியலறைக்குள் தள்ளி கதவை பூட்டினான்.


அதன் பிறகு அவளுடன் எதையும் கேட்டுக் கொண்டானில்லை.


வேதா வெளியே வரும் பொழுது அவளோட தையும் எடுத்து வைத்திருந்தவன் ஏதாவது மிஸ் ஆயிடுச்சானு பாத்துக்கோ ஆல்மோஸ்ட் உன்னோடதும் பேக்கிங் முடிஞ்சதுன்னு நினைக்கறேன் உன் திருப்திக்காக சரி பார்த்துக்கோ என்று கூறியவன் பெட்டிகளை எடுத்துச் செல்ல ஹோட்டல் பணியாளரை அழைத்தான்.


வேதாவிற்கு எதுவுமே புரியவில்லை எதற்காக இவ்வளவு அவசரம் இன்னும் காலை உணவைக் கூட உண்ண வில்லை அவனிடம் எப்படி கேட்பது எனக்கு பசிப்பது போல் இருக்கிறது ஏதாவது சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று...இரவு உறக்கம் இல்லாததால் தலைவேறு பாராமாக இருக்கிறது...அது எதையும் மாறன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை...சுடுநீரை காலில் உற்றியது போல் பதறிக்கொண்டு இருக்கிறான்…


அவளை ஹோட்டலை விட்டு வெளியே அழைந்து வந்தவன் தயாராக இருந்த வாகனத்தில் பின் இருக்கையில் வேதாவுடன் அமர்ந்து கொண்டான்.


பத்து நிமிடம் வெயிட் பண்ணு வேதா ஏர்போர்ட் போனதும் உன் தலைவலிக்கு சூடா ஒரு கப் காஃபியும் பசிக்கு டிஃபனும் சாப்பிடலாம் என்று கூறியபடி சாலையை வேடிக்கை பார்க்க தொடங்கினான்.


ஆச்சரியமாக அவனைப் பார்த்தவள் எப்படிங்க எல்லாத்தையும் மனசுல இருந்து படிக்கிற மாதிரி சொல்றீங்க என்னை கவனிச்ச மாதிரியே தெரியல ஆனா எனக்கு தலை வலிக்கிறது... பசிக்கிறது... எல்லாம் தெரியுது…. ஏதாவது மந்திரம் போடுறீங்களா…?.


உன்னை பத்தி தெரிஞ்சுக்க மந்திரம் போட வேண்டியதில்லை...உன் முகம் தான் எல்லாத்தையும் சொல்லுது…


ம்ம்... என்றவள் அவளின் கை கொண்டு முகத்தை தடவிப் பார்க்க சிரித்தவன் அவள் நெற்றியில் விழுந்திருந்த ஒரு கற்றை முடியை ஒதுக்கி விட்டபடி உன் முகம் ஒரு யூனிக் தெரியுமா…?.


எதையும் நீ வாய் விட்டு சொல்ல வேண்டியது இல்ல..உன் முகமும் கண்ணும் சொல்லிடும்...என்று கூறியவனிடம் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டாள்.


ஏன் வேதா தலை குனிஞ்சிட்ட நான் பேசறது பிடிக்கலையா…?


ஏன் இப்படி எப்பவும் பிடிக்கலையா…? பிடிக்கலையானு….கேக்கறீங்க... நீங்க இப்படி கேக்கறது தான் எனக்கு சுத்தமா பிடிக்கல... நானா எதையும் வாய் திறந்து பேசாத போது நீங்களா ஏன் கண்டதை நினைச்சு கற்பனை பண்றீங்க என்று முகத்தில் சற்று சிடுசிடுப்பு காண்பித்தாள்.


ம்ம் உனக்கு நல்லாவே கோபம் வருதே...என்று சற்றென்று சூழ்நிலையை இயல்பாக்கியவன் அவளின் கையை பிடித்தபடி வேதா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அது எப்படி ஆரம்பிக்கிறது என்று எனக்கு தெரியல ஆனா சொல்ல போற விஷயத்தை நீ ரொம்ப சரியா புரிஞ்சுக்கணும்…


நான் சொல்லறதை பொறுமையா கேட்டுக்கணும் பாதியிலேயே எதுவும் தப்பா முடிவு எடுத்திட கூடாது நான் சொல்ல போற விஷயத்தைக் கேட்டு என்னை விட்டுட்டு போயிட மாட்டியே என்று அவளின் முகம் பார்த்து கேட்டான்.


உடனே நெற்றியை சுருக்கி அவனை சற்று ஆச்சரியமாக பார்த்தவள் விட்டுட்டு போற அளவுக்கு உங்ககிட்ட என்ன ரகசியம் இருக்கப் போகுது என்று சாதாரணமாக கேட்டவள் ஏதோ ஒன்னு இருக்குன்னு தெரியும் அது விட்டுட்டு போற அளவுக்கு இருக்காதுனு நம்பறேன் அதனால தைரியமா சொல்லுங்க என்று கூறி முடிக்கவும் வாகனம் ஏர்போர்டை அடையவும் சரியாக இருந்தது.



அவனாக கூறும் வரை எதுவும் கேட்டக்கூடாதென்று பொறுமை காக்க ஆரம்பித்தாள் வேதா…


பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் திண்டாட ஆரம்பித்தான் மாறன்.


விமானநிலையத்தின் உள்ளே இருந்த கடையில் உணவை வாங்கி அவளுக்கு கொடுத்தவன் காஃபி வாங்குவதற்கு மீண்டும் சென்று வந்தான்.


நீங்க சாப்பிடலையா என்று ஆச்சரியமாக கேட்டவளிடம்…


ல்ல...ஊர்ல போய் சாப்பிட்டுகறேன் என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தான்.


அதன் பிறகு அவர்கள் சென்னை வரும் பொழுது கிட்ட தட்ட மதியத்தை நெருங்கியிருந்தது.வீட்டில் அணைவரும் இவர்களின் வரவிற்க்காக ஆரத்தி தட்டுடன் காத்திருந்தனர்.


இருவரும் வாகனத்தை விட்டு இறங்கியதுமே கனகாவும் செல்வியும் வேகமாக கையில் வைத்திருந்த ஆரத்தி தட்டை தூக்கியபடி முன்வந்தனர்.


வேதாவின் முகத்தில் இருந்த வெம்மையும் மாறனும் வேதாவும் சேர்ந்து இறங்கிய தோரணைகளுமே அணைவருக்கும் சொல்லாமல் சொல்லியது.


அவர்கள் இருவரும் பரஸ்பர தம்பதிகளாக அன்னியோன்யமாக அவர்களின் வாழ்க்கையை வாழத் தொடங்கி விட்டார்கள் என்று .



அதைக் கண்டதும் குடும்பத்தாரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எப்படியோ மாறனின் வாழ்க்கையும் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டது இனி அவனைப் பற்றிய கவலைகளை தூக்கி வீசி விடலாம் என்று அனைவருமே சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



முகம் முழுவதும் மகிழ்ச்சியில் கனகா வேதாவை பார்த்து என்ன ஆச்சு இவ்வளவு நேரம் என்று கேட்டார்.


கடைசி நேரத்துல ஃப்ளைட் கேன்சல் ஆயிடுச்சு அத்தை அடுத்த ஃப்ளைட் வர நேரமாச்சி என்று கூறினாள்.


சரி ரெண்டு பேரும் இப்படி சேர்ந்து நில்லுங்க என்று கூறியவர் இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுப்பதற்காக கைகளை தூக்க அப்பொழுது மாறனுக்கு ஒரு போன் கால் வந்தது அதை எடுத்துப் பேசியவனின் முகம் பதட்டத்தை பூசிக்கொள்ள வேதாவிடம் .



கொஞ்சம் எனக்கு வேலை இருக்கு நீ உள்ள போ என்று கூறியபடி அங்கிருந்து கிளம்பினான்.


அருகில் இருந்த செல்வி...டேய் ஆரத்தி எடுத்து முடிச்சதும் வீட்டுக்குள்ள வந்து ஒரு தம்ளர் தண்ணி குடிச்சுட்டு போடா என்று கூற.


அதுக்கு எல்லாம் இப்போ நேரமில்ல அக்கா நான் கிளம்பனும்... நாங்க என்ன புது பொண்ணு மாப்பிள்ளையா என்று கேட்டபடி அவனது வாகனத்தில் ஏறி கிளம்பினான்.


மாறனின் செயலை கண்ட அனைவருமே அதிர்ச்சியில் சிலையென அங்கேயே நிற்க முதலில் தெளிவடைந்தது பாட்டிதான் முதிய பெண்மணி அல்லவா அவரும் சிறியவர்களை போல் யோசித்தால் குடும்ப நிம்மதி காணாமல் போய்விடுமே என்று உணர்ந்தவர் நொடியில் சுதாரித்துக்கொண்டவர்

தொண்டையை செருமி அதான் முக்கியமான வேலை இருக்குனு கிளம்பி போய்ட்டான்ல்ல இன்னும் எவ்வளவு நேரம் தூக்கின கையை வெச்சிகிட்டு அப்படியே நிற்ப கனகா மருமகளுக்கு ஆரத்தி எடுத்ததும் அவள உள்ள கூட்டிட்டு வா அவன் வந்ததுக்கப்புறம் சாயங்காலமா தனியா அவனுக்கு சுத்தி போட்டுக்கோ என்று கூறியபடி உள்ளே சென்றார்.



கவலையை மறைத்த கனகாவும் பாட்டி சொல்லியபடியே செய்தவர் வேதாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.



வேதாவிற்கு மனம் முழுவதும் ஏமாற்றம் என்னவாயிற்று இவனுக்கு இவனை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லையே இவன்தான் சரியில்லையா இல்லை நான் சரியில்லையா என்று பலவாறாக யோசிக்கத் தொடங்கி இருந்தாள்.



வரும் பொழுது ஏதோ முக்கியமான விஷயம் என பீடிகை போட்டான்... அதையும் கூறவில்லை... இப்பொழுது வந்ததும் வராததுமாக ஒரு போன் ஃகாலுக்காக பதறி அடித்தபடி ஓடுகிறான் ஒருவேளை அவனுக்கு தன்னைத் தவிர்த்து வேறு ஏதேனும் பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ என்று முதல் முறை அவளின் மனம் தவறாக யோசிக்கத் தொடங்கியது.



எது எப்படி இருந்தாலும் மாறன் வந்ததும் அவனிடத்தில் என்ன என்று இன்று தீர விசாரித்து விடுவது என்று நினைத்து காத்திருக்க ஆரம்பித்தாள்.


அவன் பகல் முழுவதும் வரவே இல்லை இரவு நெருங்கும் வேளையில் தான் வந்தான்.


வந்தவனை கனகா சாப்பிட அழைக்க வெளியிலேயே சாப்பிட்டு விட்டேன் என்று கூறியபடி அவனின் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.


இப்பொழுது வேதாவிற்கு பலத்த சந்தேகம்...அவனறையில் சென்று தங்க வேண்டுமா... இல்லையென்றால் வழக்கம் போல வேறு அறையில் தங்க வேண்டுமா…யோசித்தபடியே ஹாலில் அமர்ந்திருக்க அதை கவனித்த பாட்டி உடனடி தீர்வை கொண்டு வந்தார்.


என்ன வேதா வுட்டுகாரன் சாப்பாடு வேணாம்னு சொன்னா நீ அப்படியே விட்டுடுவியா…. அவனுக்கு சூடா பாலாவது கொண்டு போய் குடு என்று அவருக்காக எடுத்து வந்த பால் தம்ளரை வேதாவின் கையில் திணித்து மாறனின் அறைக்குள் விரட்டிவிட்டார்.



தயங்கியபடியே அறைக்குள் செல்ல பலத்த சிந்தனையில் தலையை பிடித்துக்கொண்டு மாறன் அமர்ந்திருந்தான்.


இவளைக் கண்டதும் ஒரு வினாடி திகைப்புற்றவன் நொடியில் சமாளித்தான்…


அவனின் முகம் மாறுதல்களை வேதாவும் கண்டுகொண்டாள்.


ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவள்...இப்பொழுது மேலும் குழப்பமுற்று நிம்மதியிழந்தாள்.


இனியும் தாமதிக்க கூடாது என முடிவெடுத்தவள்... தொண்டையை செருமியபடி என்னங்க என்றாள்.


அதற்குள்ளாக முந்திக்கொண்ட மாறன் வேதா எனக்கு ரொம்ப தலை வலிக்குது அந்த செல்ஃப்ல தலைவலி மாத்திரைக்கு இருக்கு கொஞ்சம் எடுத்து தர்றியா என்று கேட்டவன் அவள் கையில் இருந்த பாலை வாங்கிக் கொண்டான்.


சரி என்று தலையசைத்தவள் மாத்திரையை எடுத்து வந்து கொடுக்க அவள் கொடுத்த பாலை குடித்த படி மாத்திரையை முழுங்கினான்.


பிறகு எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்கறேன் நீ படுக்கும் போது லைட் ஆஃப் பண்ணிடு என்று கூறியவன் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான்.



அவனின் தலைவலி அவளுக்கு வந்தாயிற்று...மனரீதியாக மாறன் வேதாவை துன்புறுத்துவதாக தோன்றியது...இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தனது பைத்தியம் பிடிப்பது உறுதி என புரிந்தது…


திருமண பந்தத்தை உதறி விட்டுச் செல்லலாம் என்று முடிவெடுத்த பொழுது கூட வேதா இத்தகைய துன்பத்தை அனுபவித்ததாகத் தெரியவில்லை.


எப்பொழுது அவனுடன் சேர்ந்து வாழலாம் என நினைத்து அவனோடு இல்வாழ்க்கையில் இணைந்தாலோ அப்பொழுது தான் இவளுக்கு இது போலெல்லாம் துன்பம் ஏற்படுவதாக நம்பினாள்...



கண்டிப்பாக இதை வளர விட கூடாது என்று அவன் வாயால் என்ன பிரச்சனை என்று கூற வேண்டும்…

அப்படி இல்லை என்றால் அதற்கான காரணத்தை இவளே தெரிந்துகொள்ளவேண்டும் முதல் விஷயம் கண்டிப்பாக நடப்பது கடினம் என புரியவும் இரண்டாவதாக தானே கண்டுபிடிப்பது என முடிவு எடுத்தாள்.


முடிவெடுத்ததுமே தாமதிக்காமல் அறையை முழுவதும் கண்களால் சுற்றி ஆராய்ந்தாள்... அறைக்குள் அவள் வந்தது இது தான் இரண்டாவது முறை...


ஒரே ஒரு நாள் இரவு மட்டும் இந்துமதி அழுதாள் என இந்த அறையில் உறங்கி இருக்கிறாள் மற்றபடி அந்த அறைக்கும் அவளுக்கு வேறு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை அதனால் இப்பொழுது தான் அறையை நன்றாக பார்க்கிறாள் .



எப்படி இருந்தாலும் நாளையிலிருந்து நான் இங்கே தானே இருக்க வேண்டும் அப்பொழுது பார்த்துக்கொள்கிறேன் என்று தூங்கும் அவனை பார்த்து கூறியவள் அதன் பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் உறங்கத் தொடங்கினாள்.


மறுநாள் காலையில் இருந்து மாறனிடம் சிறு ஒதுக்கத்தை காண்பித்தாள்... அத்தோடு நில்லாமல் அவனை சற்று உற்று கவணிக்க ஆரம்பித்தாள்.


அவன் சற்று பதட்டத்துடன் இருப்பது போலவே தோன்றுயது.காரணத்தை எவ்வளவு பேச்சி கொடுத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை...மீறி துருவி துருவி கேட்கும் பொழுது எரிந்து விழுந்தான்...அதனால் அவனிடத்தில் பொறுமை காத்தவள்…



வீட்டு பணியாளர்கள்...கனகா, பாட்டி என அவர்களிடம் மாறனை பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்ள முயன்றாள்..பெரியதாக பயன் இல்லை...அந்த சமயத்தில் தான் மாறனிடத்தில் இருந்து வீட்டு லேன்ட்லைன் ஃபோனிற்க்கு ஒரு அழைப்பு வந்தது வேதா தான் அதை எடுத்து பேசினாள்.


முக்கியமானதொரு ஃபைல் அவனுடைய பிரோவில் இருப்பதாகவும் அதை எடுத்து அவன் அனுப்பும் ஆளிடம் கொடுத்து விடும்படியும் பணிந்தான்...சரி என்று கூறியவள் அறைக்குள் சென்று பிரோவை திறக்க முயற்சித்தாள்... அது பூட்டியிருக்க மீண்டும் மாறனுக்கு அழைத்து பிரோ பூட்டி இருப்பதை கூறவும் மன்னிப்பு கேட்டுக்கொண்டவன் சாவி வைத்திருக்கும் இடத்தை கூறிவிட்டு அழைப்பை தூண்டித்தான்.



அவன் சொன்னவற்றை எடுப்பதற்காக பீரோவை ஓபன் செய்தவள் மாறன் கூறிய கலரில் இருந்த ஃபைலை எடுத்தவள் வெளியே வந்தாள்.


அப்பொழுது கணவன் அனுப்பிய பணியாளரும் வந்து சேர அவரிடம் கோப்பினை கொண்டுபோய்க் கொடுத்தாள்.


அதை திறந்து பார்த்தவர் மேடம் சார் சொன்ன ஃபைல் இது இல்ல...என்று திருப்பிக் கொடுத்தார்.



யோசனையாக அதை கையில் வாங்கியவள் இந்த கலர்ல தான் சொன்னாங்க சரி வெயிட் பண்ணுங்க வேற இருக்கானு பாக்குறேன் என்று மீண்டும் பீரோவினை திறந்தாள்.


மற்றொரு கப்போர்டில் லேப்டாப்புடன் ஃபைலை பத்திரப்படுத்தி இருந்தான் லேப்டாப்பை எடுத்து வெளியே வைத்தவள் ஃபைலை வேளியே எடுத்தாள்.


பின்பு இதுதான் மாறன் கேட்டதா என்று திறந்து பார்த்தபடியே பணியாளரிடம் சென்று கொடுத்தவள் இதுதானானு பாருங்க...வேற இந்த கலர்ல எந்த ஃபைலும் இல்லை என்றாள்.



அதை வாங்கி திறந்து பார்த்தவர் இதுதான் மேடம் ரொம்ப தேங்க்ஸ் என்று கூறியபடி அவர் சென்றுவிட.



ஏற்கனவே வெளியே இருந்த ஃபைலை உள்ளே வைக்கலாம் என்று எடுக்கும்பொழுது கை தவறி ஃபைல் கீழே விழுந்தது .



உள்ளே இருந்த காகிதங்கள் அனைத்தும் சிதறியது….
அய்யோ இது வேறையா என்று சலித்தபடி கீழே கிடந்த காகிதங்களை சேகரிக்கும் பொழுது… பொழுது சில விஷயங்கள் அவள் கண்களில் பட்டது.



ஏதோ ஒரு காப்பகத்திற்கு அளவுக்கு அதிகமான பணம் ஒவ்வொரு மாதமும் கொடுப்பதற்கான ரசீது அது.



அதுமட்டுமின்றி சில நகல்களும் இருந்தது ஒவ்வொன்றையும் என்ன என்று எடுத்துப் பார்க்க எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையினுடையது என்று புரிந்தது.



அந்த குழந்தையின் பிறப்பு சர்டிபிகேட் ஆதார் அட்டை என எல்லாமும் இருக்க ஆச்சரியத்துடன் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராயத் தொடங்கினாள்.



குழந்தையின் பெயர் விஷாகா என்றும் தாய் பெயர் இருக்கும் இடத்தில் சீதா என்றும் தந்தை மற்றும் காடியன் பெயர் இருக்கும் இடம் காலியாக இருக்கவும் அதிர்ச்சி அடைந்தாள்.


பிறகு மற்ற காகிதங்களை எடுத்து ஆராய்ந்தாள் அதில் காப்பகத்தில் இருந்து வந்த கடிதங்களும் இவன் காப்பகத்திற்கு கொடுக்கும் நன்கொடைக்கான நகல்களும் அதிகமாக காணப்பட்டது.



பொதுவாக காப்பகத்திற்கு பொதுவாக மாதம் ஒரு தொகையையும் தனிப்பட்ட முறையில் விஷாக என்ற குழந்தைக்கு தனிப்பட்ட முறையில் சில ஆயிரங்களில் கொடுத்தது தெரியவந்தது.


அதுமட்டுமின்றி அந்த குழந்தைக்கு எந்த மாதிரியான செலவுகளை காப்பகம் செய்கிறது என்பதை தெளிவாக குறிப்பிட்டு கைப்பட எழுதிய ஒரு கடிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்திருப்பதை அறிந்தாள்.



அவளுக்கு ஏதோ புரிவது போல் தெரிந்தது யார் இந்த விஷாகா... மாறன் உதவி செய்யும் குழந்தை யாருடையது... தாயார் சீதா என்று தெரிகிறது தந்தை யார் என்று தெரியவில்லையே என்று யோசித்தபடி ஆராய்ந்தாள்.


மற்றொரு காகிதத்தில் அவர்களின் திருமணத்தை பாராட்டி காப்பக நிர்வாகி எழுதியிருந்தார்.


மேலோட்டமாக படிக்க ஆரம்பித்தவளுக்கு அதில் இருந்த விஷயங்கள் முதலில் அவ்வளவாகப் புரியவில்லை.


அதனால் மீண்டும் ஒருமுறை ஆரம்பத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.


இப்பொழுது தெள்ளத் தெளிவாக புரிய ஆரம்பித்தது அதில் இருந்தவற்றை சத்தமாக படிக்க ஆரம்பித்தாள்.



உயர்திரு மதிப்பிற்குரிய மாறன் அவர்களுக்கு தங்களுக்கு திருமணம் முடிந்தது என்று அறிந்தோம் மிக்க மகிழ்ச்சி. தங்களின் வாழ்வின் அனைத்து சந்தோஷங்களையும் இறைவன் தங்களுக்கு அருளட்டும்.


நீங்கள் இதுவரை நமது காப்பகத்திற்கும்... தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகள் செய்து வருகிறீர்கள் அது மேலும் தொடரட்டும்…


இனிமேல் நீங்கள் விஷாகாவை உங்களுடன் அழைத்து செல்ல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை இவ்வளவு நாள் நீங்கள் தனி ஒரு ஆணாக இருந்ததால் எங்களின் காப்பகத்தின் சட்டத்தின்படி பெண் குழந்தையை ஒரு தனிப்பட்ட ஆணுடனும் அனுப்ப இயலாது…



ஆனால் இப்பொழுது தங்கள் மனைவியுடன் இணைந்து இருப்பதால் தாராளமாக நீங்களும் உங்கள் மனைவியும் சட்டரீதியாக வந்து அழைத்துச் செல்லலாம்.


ஒருமுறை நேரில் வந்து எங்களுடைய காப்பகத்தின் மூலம் நடத்தப்படும் ஒரு கலந்தாய்வில் கலந்துகொண்டு சட்டரீதியாக விஷாகாவை அழைத்துக் கொள்ளுங்கள் ... குழந்தை விஷயத்தில் இனி மேலும் தாமதிக்க வேண்டாம் என்று இருக்க...

கடிதம் வந்த தேதியை பார்க்க சரியாக வேதாவை டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளில் தான் வந்திருக்கிறது.


அப்படி என்றால் அந்தக் குழந்தையை தத்தெடுப்பதற்காகத்தான் என்னை அவன் ஊருக்குச் செல்ல விடாமல் டெல்லிக்கு அழைத்துச் சென்றதா…? என்ற கேள்வி எழுந்தது.


எதுவுமே புரியவில்லை... மீண்டும் எல்லாவற்றையும் ஆராய்ந்தாள்…. பெரியதாக எதுவும் புரியாவிட்டாலும் ஒரு வளர்ப்பு குழந்தை இருக்கிறது அதை சட்டரீதியாக தத்தெடுப்பதற்காகத்தான் தன்னை சமாதானப் படுத்தி ஊருக்குச் செல்ல விடாமல் தடுத்து இருக்கிறான்.


ஆனால் ஏன் முதலில் திருமணத்தை மறுக்க வேண்டும் தத்து குழந்தைக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் செலவு செய்வது போல் இங்கு இருக்கும் ரசீதுகள் காண்பித்து கொடுக்கின்றன.



அப்படி என்றால் நான்கு ஆண்டுகளாகவே அவனுக்கு மனைவி என்னும் துணை தேவைபட்டிருக்குமே…. அவனுக்கு இல்லையென்றாலும் குழந்தையை தத்து எடுக்க தேவைப்பட்டிருக்குமே...பிறகு எப்படி திருமணமே வேண்டாம் என்று இருந்தார்.



இப்பொழுது ஏன் மனைவி என்பவள் தேவைபடுகிறாள்... என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தவள் காப்பகத்தின் விலாசத்தை குறிக்குக் கொண்டு எல்லாவற்றையும் எடுத்ததுபோல பீரோவில் வைத்துப் பூட்டினாள்.


இது பற்றி கேட்டால் கண்டிப்பாக மாறனிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரப்போவதில்லை... சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் திருமணத்திற்கு முன்பே அதைப் பற்றி என்னிடம் பேசி இருக்கலாம் அப்படி இல்லை என்றால் திருமணமான உடனே என்னிடம் பேசி இருக்கலாம் ஆனால் இதுபற்றி அவன் வாயே திறக்கவில்லை.



காப்பகத்தில் இருந்து குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கடிதம் வந்த உடனே அவன் என்னை இங்கேயே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி அழைத்துச் சென்று அவனது காரியத்தை சாதித்துக் கொண்டான்.



அவனோடு இணங்கி ஒத்து வாழ தொடங்கி விட்டால் அவனை விட்டு நான் பிரிந்து செல்ல மாட்டேன் என்று நம்பி இருக்கிறார் அதனால் தான் என்னை தனிமையில் தவிக்க விட்டு நானே அவரை தேடிச்செல்வது போல் செய்திருக்கிறான்…



இப்படி ஒரு குழந்தையை அவர் பராமரிக்கிறார் என்னும் விஷயம் குடும்பத்தாருக்கு தெரியுமா தெரியாதா என்ற கேள்வியும் எழாமலில்லை.


ஒருவேளை தெரியாமல் இருந்து அது ஏன் தன் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தவள் அவன் வாயை திறந்து என்னிடம் கூறும் முன் நாம் ஏன் அந்த விலாசம் சென்று நேரடியாக அந்தக் குழந்தையை பார்த்து விட்டு வரக் கூடாது என்று தோன்றியது.



தோன்றிய உடனே தாமதிக்காமல் அதை நிறைவேற்றுவதற்காக ராதிகாவின் அறைக்குச் சென்றாள்.


குழந்தை உறங்கிக் கொண்டிருக்க அருகிலேயே ராதிகாவும் படுத்திருந்தாள் ராதிகாவின் அறைக் கதவைத் தட்டி வேதா உள்ளே எட்டிப்பார்க்க அவளைக் கண்டதுமே வேகமாக எழுந்து அமர்ந்தவள் உள்ள வாங்க என்று சந்தோஷமாக வரவேற்றாள்.



பிறகு நேத்தே ஊர்ல இருந்து வந்துட்டீங்க ஆனா என்னையும் குழந்தையும் பாக்க இவ்வளவு நேரமா அக்கா ...நான் ஒவ்வொருமுறையும் உங்களை எதிர்பார்த்துகிட்டே இருந்தேன் என்று சற்று குறைபட்டாள்.



வேதாவிற்கு ராதிகாவை அவளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. நேற்று ஆரத்தி எடுக்கும் பொழுதே வேதா கவனித்தாள். ராதிகாவும் குழந்தையும் மட்டும் அந்த இடத்தில் இல்லை.



அவளுக்கு சிசேரியன் தானே அதனால் இன்னும் எழுந்து நடமாட முடியவில்லை போல என்று நினைத்துக் கொண்டாள்‌


அதன் பிறகும் ராதிகாவிற்கு இவர்கள் வந்த விஷயம் தெரியாததால் அவளும் தேடி வரவில்லை.


குழப்பங்கள் எதுவும் நடக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நேற்றைய தினமே வேதா ராதிகாவை தேடி வந்து இருப்பாள்.


இல்லையென்றாலும் காலையிலேயே தேடிச் சென்று இருப்பாள் ஆனால் அவள் தான் டெல்லியிலிருந்தே குழப்பத்தில் இருக்கிறாளே பிறகு எப்படி அவளால் இயல்பாக மற்றவர்களை தேட முடியும்.


அதனால் சமாளிக்கும் விதமாக இல்ல நேத்து ஊரில் இருந்து வந்தது ரொம்ப டயர்டா இருந்தது அதான் உங்களை வந்து பார்க்கல….


சரி இப்போ உங்களுக்கு உடம்புக்கு பரவால்லையா…? எழுந்து நடக்க முடியுதா…? குட்டி பொண்ணு தொல்லை பண்றாளா…? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டாள்.



சிரித்தபடியே எழுந்து அமர்ந்த ராதிகா நான் சாதாரணமாக நடக்க ஆரம்பிச்சுட்டேன்கா நேத்து நீங்க வரும்போது நான் தூங்கிட்டு இருந்தேன் போல அதான் என்னை எழுப்ப வேணாம்னு நினைச்சி சொல்லாம விட்டுடாங்க .



நானும் குழந்தையை வைத்திருக்கிற டென்ஷன்ல கவனிக்கல நைட் வந்து செழியன் சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியுது நீங்க வந்து விஷயம் சரி நைட் ஏன் உங்களை வந்து தொல்லை பண்ணனும்னு காலையில இருந்து வெயிட் பண்ணிட்டே இருந்தேன்.


ஆனா உங்களை வெளியே ஆளையே காணோம்… இப்போ தான் வெளியே வர்றீங்க போல என்று கூறியவள் கண்கலங்க ரொம்ப தேங்க்ஸ்கா அன்னைக்கு நீங்களும் அத்தானும் இல்லனா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்ன்னு எனக்கே தெரியல…


அதை நினைச்சி பார்க்கவே பயமா இருக்கு என்று கூறினாள்.


என்ன ராதிகா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க அது எங்களோட கடமை தானே என்று கூறியவள் குழந்தையை சற்று நேரம் தூக்கி வைத்து கொஞ்சியவள் மெல்ல விஷயத்துக்கு வந்தாள்.



ராதிகா நான் கொஞ்சம் வெளியே போகணும் வாடகை கார் புக் பண்ணி தர்றிங்களா…. நான் இதுவரை அப்படி போனதில்ல அதான் தெரியல…




அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்கா….தாராளமா வெளிய போய்ட்டு வாங்க ஆனா அதுக்கு எதுக்காக வாடகை கார் நம்ம வீட்ல தான் கார் இருக்கே அதுல போங்க….



அது என்னனா என்று தயங்க…


அக்கா முதல்ல இந்த தயக்கத்தை தூக்கி போடுங்க இது நம்ம வீடு இங்க இருக்கிற எல்லா பொருள்ளையும் உங்களுக்கும் சம உரிமை இருக்கு அத தெரிஞ்சுக்கோங்க.



அப்புறம் முக்கியமான விஷயம் வீட்டில் இருக்கிற பொம்பளைங்க வெளியே போயிட்டு வர்றதுக்காகவே எப்போதும் நம்ம வீட்டு வாசலில் ரெண்டு கார் டிரைவரோட காத்திட்டு இருக்கும் யார் வேணாலும் என்ன வேணாலும் போயிட்டு வரலாம்.



எங்க போற…? ஏன்…? எதுக்குன்னு யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாங்க நமக்கு விருப்பப்பட்டா சொல்லிக்கிட்டே போகலாம் இல்லையா அதிகம் கேட்க மாட்டாங்க அதனால போய்ட்டு வாங்க என்றவள் ஓட்டுனரை வரை அழைத்து அண்ணா வேதா அக்கா வெளிய போறாங்க கொஞ்சம் கூட்டிட்டு போயிட்டு வாங்க அண்ணா என்று கூறியவள் இப்ப கார் வெளியே ரெடியா இருக்கு நீங்க போங்க என்று கூறினாள்.



சரி என்று தலையாட்டிய வேதா அவளைப் பார்த்து தேங்க்ஸ் என்று கூற.



என்ன கா தேங்க்ஸ் சொல்லி என்னை வேத்து மனுஷியா ஆக்கறீங்க என்று கூறியவள் .


அக்கா கைல பர்ஸ் வச்சிருக்கீங்களா என்று கேட்பாள்.



இல்லை என்பதுபோல் வேதா தலையசைக்க ஒரு நிமிஷம் இருங்க என்று அவளின் பர்சை எடுத்து வேதாவின் கையில் திணித்தாள்.


பிறகு இதுல கொஞ்சம் கேஷ் இருக்கு செலவுக்கு வச்சிக்கோங்க….
எப்பவுமே வெளியே போகும்போது பர்ஸ் வெச்சுக்கோங்க அக்கா தீடிர்னு தேவைப்படும் என்று கூறினாள்.


மீண்டும் சரி என்று தலையை ஆட்டிய வேதா என்கிட்டயும் பர்ஸ் இருக்கு செலவுக்கு உன்னோட அத்தான் நிறைய பணம் கொடுத்து இருக்காங்க அதனால எனக்கு தேவை படாது என்று ராதிகாவின் கையிலேயே திருப்பிக் கொடுக்க வாங்க மறுத்த ராதிகா.



தெரியும் அக்கா எங்களுக்கே பார்த்து பார்த்து செய்ற அதான் அவரோட மனைவியை விட்டுடுவாரா என்ன…?.



இருந்தாலும் இந்த பர்ஸ் நான் உங்களுக்காக தான் வாங்கினேன் இதே மாதிரி என்கிட்டயும் ஒன்னு இருக்கு என்று கூறி வேதாவை ஆச்சரியத்தில் மூழ்கடித்தாள் ராதிகா.



ம்ம்...சரி வீட்ல யாராவது கேட்டா வெளியே போயிருக்கேன்னு சொல்லு எங்க போறேன்னு வந்ததும் சொல்லறேன் என்று கூறியபடி வெளியே வந்தாள்.


வாகனம் தயாராக இருக்கவும் அதில் ஏறிக் கொண்ட வேதா குறித்து வைத்திருந்த விலாசத்தை அவரிடம் காட்டினாள்.



அதை பார்த்ததும் அவர் வேதாவைப் பார்த்து அம்மா இது கொஞ்சம் ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கு எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்று கூற சரி என தலையாட்டியவள் கண்களை மூடி சாய ஆரம்பித்தாள்.



மனம் முழுவதும் குழப்பம். நான் ஏன் இப்பொழுது அங்கே செல்கிறேன் அங்கே செல்ல வேண்டும் என்று எனக்கு என்ன தேவை இருக்கிறது.


இவ்வளவு சிரமப்பட்டுவதற்கு நேராக மாறனிடமே கேட்டு விடலாமா என்று கூட தோன்றியது .


ஆனால் அங்கு செல் என்று உள் மனம் உறுத்திக்கொண்டே இருக்கிறது அதனால் உள்மனதின் பேச்சை கேட்கலாம் என்று முடிவெடுத்து கிளம்பிவிட்டாள் வேதா.

தொடரும்..
 
Last edited:
Top