6
செழியன் மண்டபம் வரவும் அந்த இடமே போர்க்களமாக காணப்பட்டது அதற்கு காரணம் இந்துமதி தன்னுடைய அக்கா தன்னிடம் சொல்லிக் கொள்ளாமலே ஊர் சென்று விட்டாள் அதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
வேதா அங்கிருந்த செல்லும் போது யாரிடம் சொல்லிக்கொள்ள வில்லை தனது தாய் தன்னை திருமணம் முடித்து ஓரேயடியாக கை கழுவி விட்டார்... என்று எண்ணியதால் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கணவனின் பின்னே சென்று விட்டாள்.
இதை அறியாத இந்து அழுது புரண்டு கொண்டு இருக்கிறாள். ஒருவரையும் மதிய உணவு உண்ண விடவில்லை .
அனைவரும் அவளை பலவாறாக சமாதானப்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் யாருடைய சமாதானத்தையும் அவள் கேட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை முகம் முழுவதும் வீங்கும் அளவிற்கு பயங்கரமாக அழுது காணப்பட்டாள்.
மண்டபத்தின் உள்ளே வந்த செழியனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை என்னவாயிற்று எல்லோருக்கும் என்று ஒவ்வொருவரையும் பார்க்க அனைவர் முகத்திலும் திருமணம் நடந்ததற்கான சந்தோஷம் துளிகூட இல்லை.
முகத்தில் கவலையுடன் அவனது குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்திருக்க எதிர்புறம் இருந்த வேதாவின் தாய் தந்தையரும் கண்கலங்கியபடி நின்றுகொண்டிருந்தனர்.
இந்த பக்கம் இருந்த வேதாவின் தம்பி தலையைக் கோதியபடி நின்று கொண்டிருக்க எதுவும் தெரியாதவன் தனது மனைவி ராதிகாவை தேடி வந்தான்.
என்னாச்சி ராதிகா ஏன் எல்லாரும் என்னவோ மாதிரி இருக்கீங்க அதான் நல்லபடியா கல்யாணம் முடிஞ்சு அண்ணன் கூட ஊருக்கு போயாச்சு அப்புறம் என்ன பிரச்சனை எல்லாருக்கும் என்று நெத்தியை சுழித்தபடி தனது மனைவியிடம் கேட்டான்.
அதை ஏன் கேக்குறீங்க செழியன் நீங்க போன அஞ்சாவது நிமிஷத்துல ஆரம்பிச்ச பிரச்சனை இந்த நிமிஷம் வரைக்கும் முடிய மாட்டேங்குது.
அந்த குட்டி பொண்ணு கிட்ட அவளோட அக்கா சொல்லாம கிளம்பி போயிட்டாளாம் அதனால அவ இப்ப வரைக்கும் ஓயாம அழுதுகிட்டு இருக்கா அவ அழுகையை பார்த்து அவளோட அம்மா அப்பா அண்ணன் அத்தனை பேரும் அழ ஆரம்பிச்சாச்சு...ஆனாலும் அவ அழுகை நிக்கல…
நானும் எவ்வளவோ சமாதானப்படுத்தி பாத்தாச்சி ஆனா அவ அழுகையை நிறுத்தற மாதிரி தெரியல…
இப்போ என்னால முடியல அதனால ஓரமா வந்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன்...என்று சற்று விட்டேரியாக கூறினாள்.
ஒஒ…. அதுதான் பிரச்சனையா…?
அவ சின்ன பொண்ணு இல்லையா அதனால தான் அவ அக்கா சொல்லாம போனதும் அவளால தாங்க முடியல அந்த குட்டி பொண்ணை சமாதானம் பண்ணாம இப்படி அத்தனை பேரும் முகத்தை தூக்கி வைச்சிகிட்டு உட்கார்ந்து இருந்தா சரியாகுமா நீயும் இப்படி பொறுப்பில்லாமல் ஓரமா உக்காந்து இருக்கியே கிட்டத்தட்ட நாலு மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து அந்தப் பொண்ணு அழுதுக்கிட்டே இருந்தா அந்த பொண்ணோட உடம்பு என்னத்துக்கு ஆகுறது...என்று கடிந்து கொண்டவன் ஆமா…! எல்லாரும் சாப்பிட்டீங்களா…? என்று அக்கறையாகவும் விசாரித்தான்.
உடனே ராதிகா சற்று சலித்தபடி எங்க சாப்பிட விட்டாதானே சாப்பிடறது...அங்க ஒரு குடும்பம் உட்கார்ந்து அழும் போது மத்தவங்களால எப்படி சாப்பிட முடியும்…? கல்யாணத்துக்கு வந்தவங்கலெல்லாம் மண்டபத்துல இப்படி இருக்கும் போது எப்படி சாப்பிடுறதுன்னு தயங்கி கிட்டு அவங்கவங்க வீட்டுக்கு கிளம்பி போயிட்டாங்க.
இப்போ மண்டபத்துல வேதா அக்காவோட குடும்பமும் நம்மளோட குடும்பமும் மட்டும்தான் உட்கார்ந்து இருக்கோம் அதுவும் பட்டினியா என்று கூற …
உடனே அதிர்ச்சி அடைந்த செழியன் என்ன இவ்வளவு நேரம் நீயும் சாப்பிடாம இருக்கியா முதல்ல எந்திரி போய் சாப்பிடு என்று அவளை எழுப்பினான்.
உடனே அவள் எப்படிங்க அந்த பொண்ணு சாப்பிடாம அழுதுகிட்டு இருக்கும்போது என்னால சாப்பிட முடியும் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறினாள்.
இல்லல்ல நீ போ நான் இப்போ அந்த குட்டி பொண்ணை சாப்பிட கூப்பிட்டு வர்றேன் அது மட்டும் இல்லாம ரெண்டு நிமிஷத்துல அவளோட அழுகையையும் நிறுத்தறேன் என்று அனைவரையும் சாப்பிட அனுப்பியவன் இந்துமதியை தேடி அவள் இருந்த அறைக்குள் சென்றான்.
இந்துமதிக்கு அழுது அழுது மிகவும் களைத்து முகமெங்கும் சிவந்து கண்விழிக்க முடியாத அளவிற்கு வீக்கம் உண்டாகி கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள்.
அச்சு அசல் வேதாவின் ஜெராக்ஸ் போல இருந்தாள் இந்து..என்ன வேதா சற்று பூசியது போன்ற தோற்றம் என்றால் இவள் நல்ல மெலிந்த தேகம்... வேதாவின் உயரமே தான் இந்துவும்..
வேதாவிற்கு நன்கு அடர்த்தியான சுருள்முடி..
இந்துவிற்கு நல்ல நீளமான கூந்தல்...அவள் மாநிறம்..இவள் சிவந்த நிறம் இந்த வித்தியாசங்களையும் தவிர்த்துப் பார்த்தால் வேதாவை உரித்து வைத்தது போல் இருப்பாள் இந்துமதி .
காலையில் அழகாக அணிந்திருந்த பட்டு பாவாடை தாவணி இப்பொழுது கண்ணீரில் நனைந்திருந்தது. ஒப்பனை எல்லாம் கலைந்து அச்சிறு பெண்ணின் முகத்தில் அதுகூட அழகாகத்தான் தெரிந்தது...அழுகை மட்டுபட்டிருக்க சிறு கேவல் மட்டும் வந்துகொண்டிருந்தது.
கட்டிலில் அவளது உடலை முற்றிலும் குறுக்கிய படுத்தபடி உடல் மட்டும் குலுங்கிக் கொண்டிருந்தது.
அவளின் கோலத்தை கண்டு ஒரு நிமிடம் பரிதாபப்பட்டு வாசலிலே தயங்கி நின்ற செழியன் தன்னை பயன்படுத்திக்கொண்டு அவள் அருகில் சென்றான்.
மெல்ல இந்து….எழுந்திருமா என்று அவளின் தோளைத் தொட்டு எழுப்ப இந்துவின் உடல் சற்று இறுக்கம் பெற்று அனிச்சை செயலாக தோள்களைக் குலுக்கியபடி செழியனின் கைகளை படுத்த வாக்கிலேயே தட்டிவிட்டாள்.
சாரிமா….நான் செழியன் உன் மாமாவோட தம்பி...உன்னோட சின்ன அத்தான்... என்று அவனை அவளிடம் அறிமுகப்படுத்தினான்.
இந்துவிற்கு செழியனை மிக நன்றாகவே தெரியும் தனது அக்காவை பெண் பார்க்க வந்தது முதல் இன்று விமான நிலையம் கொண்டு சென்றது வரை செழியன் தான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
செழியன் அவளுக்கு என்ன முறை என்பதும் தெரியும் ஆனால் பேசியது கிடையாது...அவனின் செயல்களை காலையிலிருந்து மண்டபத்தில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள்.
அதனால் செழியன் தான் தனது அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்ததும் மெல்ல கண்விழிக்க தலைவலி பிளந்து எடுத்தது.
தலையை அழுத்திப் பிடித்தபடி எழுந்து அமர்ந்தவள்... கண்களை மிகவும் கஷ்டப்பட்டு திறந்தாள் செழியனின் முகம் பார்வையில் படமுமே குத்துமதிப்பாக அவனின் சட்டையை எட்டிப்பிடித்தவள்.
நீங்கதானே என்னோட அக்காவை என்கிட்ட சொல்ல விடாம கூட்டிட்டு போனீங்க உங்களுக்கு இப்போ சந்தோஷமா... இப்படி நான் அழறதை பாக்கணும்னு தானே என் முன்னாடி உட்கார்ந்து கிட்டு இருக்கீங்க நல்லா பார்த்துக்கோங்க இன்னும் நான் அழனும்னு எதிர்பார்க்கிறீங்களா என்று கேட்டபடியே முகத்தை முடிக்கொண்டு மீண்டும் அழத் தொடங்கினாள் .
அவள் அழுவதை காண சகிக்காத செழியன் அவளின் தலையை மெல்ல வருடியபடி இங்க பாரு இந்து நீ அழறதை பாக்கறதுக்காக நான் இங்கு வந்து உட்காரல உன்னை சமாதானப்படுத்த தான் இப்போ நான் இங்க வந்தது.
காலையிலிருந்து ஒன்னுமே சாப்பிடாம இப்படி அழுதுக்கிட்டே இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும் சொல்லு
உன்னோட அக்கா கல்யாணம் பண்ணி அவங்களோட வீட்டுக்கு தான் போய் இருக்காங்க அங்க அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க நீ இப்படி அழறது தெரிஞ்சா அவங்க அவங்க எப்படி சந்தோஷமா இருப்பாங்க.
அண்ணா ஃப்ளைட்க்கு டைம் ஆயிடுச்சுன்னு அண்ணியோட வேகமாக கிளம்பி போனதால யார்கிட்டயும் சொல்ல முடியல அவங்களை கூட்டிட்டு போன என்னாலயும் யார்கிட்டயும் சொல்ல முடியல அதுக்காக நீ என் மேல இவ்வளவு கோபப்படக்கூடாது குட்டிமா நீ என் அண்ணிக்கு மட்டும் தங்கச்சி கிடையாது எனக்கு தங்கச்சி தான் அதனால இந்த அண்ணா மேல கோபப்படுற எல்லா உரிமையும் உனக்கு இருக்கு .
அதுக்காக இப்படி சாப்பிடாம அழுகிறது சரி கிடையாது உனக்கு கோவம் இருந்தா என்னை ரெண்டு அடி வேணாலும் அடி ஆனா இப்போ வந்து முதல்ல சாப்பிட்டு ….
பாரு அழுது அழுது முகமெல்லாம் வீங்கி கண்ணே திறக்க முடியாத அளவுக்கு வீங்கி கிடக்குது….தலைவலி வேற வந்தாச்சு….இப்படியே இருந்தேன்னா உடம்புக்கு வேறு ஏதாவது வந்துடும் என்று சமாதான படுத்த முயற்ச்சித்தான்.
அவனின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத இந்துமதி அதெல்லாம் முடியாது எனக்கு இப்பேவே
அக்காவை பார்த்து ஆகணும் அக்கா ஏன் என்கிட்ட சொல்லாம போனானு கேட்கணும் என்று மீண்டும் கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.
அவளின் அழுகையை சமாதானப் படுத்தும் பொருட்டு இப்போ என்ன உன்னோட அக்காவோட நீ பாக்கணும் ஏன் சொல்லிட்டு. போகலனு அவங்களை கேட்கணும் அவ்வளவுதானே….
அதுக்கு இங்கு உக்காந்து அழுதுட்டு இருந்தா எப்படி கேட்க முடியும் என்று கேட்டான்.
உடனே யோசனையாக வீங்கிய கண்களுடன் அவளை நோக்க அவன் சற்று புன்னகைத்தபடி இப்படி நீ அழுதுகிட்டு இருந்தா எப்படி உன்னால அக்காவை பார்த்து கேட்க முடியும் முதல்ல போய் சாப்பிட்டுட்டு எங்களோட கிளம்பி சென்னைக்கு வா அங்க நேர்ல உன்னோட அக்காவை பார்த்து எதுவா இருந்தாலும் பேசிக்கோ சரியா என்று கூற
நிஜமாவா சொல்றீங்க என்னைச் என்னை சென்னை கூட்டிட்டு போறீங்களா…? என் அக்கா கிட்ட கூட்டிட்டு போறீங்களா...
எனக்கு பொய் சொல்ல தெரியாது அதுவும் தங்கச்சின்னு சொன்ன குட்டி பொண்ணு கிட்ட கண்டிப்பா பொய் சொல்ல தெரியாது அடுத்த ஃப்ளைட்டுக்கு முழுசா மூனு இருக்கு நீ அதுக்குள்ள சாப்பிட்டு பிரஷ்ஷா கிளம்பினா எங்களோட உன்னையும் அழைச்சிட்டு போவேன்.அங்க போய்
உன் அக்கா முன்னாடி நிக்க வைக்க வேண்டிய பொறுப்பு என்னோடது என்னை நம்பலாம் என்று கூறினான்.
ஆனா அம்மா இதுக்கு ஒத்துக்கனுமே...
அதை நான் பாத்துக்கறேன்... அத்தையை சமாதானம் பண்ணி அவங்க வாயாலேயே உன்ன கூட்டிட்டு போக சொல்ல வைக்க வேண்டிய பொறுப்பும் என்னோடது…போதுமா...இப்போ அழுகையை நிறுத்திட்டு சாப்பிட போகலாமே இந்து... என்று கெஞ்சுவது போல் கேட்டான்.
நொடியில் சமாதானம் அடைந்தவள்... தேங்க்ஸ் சின்னத்தான்.. உங்களுக்காக நான் இனிமே அழல இப்போ நான் சாப்பிட போறேன் நீங்களும் வாங்க சேர்ந்து சாப்பிடலாம்...என்று அழைத்தாள்.
ல்ல...மா நீ போ நான் பின்னாடி வர்றேன்... சாப்பிட்டதும் வேற ட்ரஸ் மாத்திட்டு உனக்கு தேவையானதெல்லாம் சீக்கிரமா எடுத்து வை நாம எல்லாரும் உன் அக்காவை பார்க்க போகலாம் சரியா என்று அவளின் முகம் பார்த்து சிரித்தபடி கேட்க சந்தோஷத்துடன் அவளும் இதோ இப்பவே என்று கூறியபடி சந்தோஷமாக ஓடினாள்.
எல்லாவற்றையும் பொறுமையாக வெளியே இருந்து கேட்டுக்கொண்டிருந்த ராதிகா செழியனை சற்று முறைத்தபடி என்ன இது….இப்போ எதுக்காக அவளை சென்னை கூட்டிட்டு வரீங்க அவ வரனும்னா அவங்க அம்மா அப்பாவோட வரட்டும் எதுக்காக நம்மளோட வரச்சொன்னீங்க….
ஏன் ராதிகா இந்து நம்ம வீட்டுக்கு அவ அம்மா அப்பாவோட தான் வரணும்னு ஏதாவது சட்டமா என்ன…? இப்போ அவளுக்கு நீயும் ஒரு அக்கா தானே நீ அவளை உரிமையா கூட்டிட்டு வா என்று கூறினான்.
அவன் பேச்சைக் கேட்டு எதிர்ப்பதமாக தலையை ஆட்டியவள் எல்லாத்துக்கும் சரியா பதில் வச்சிருக்கீங்க செழியன் உங்ககிட்ட வாய் கொடுத்து என்னால மீளவே முடியாது சரி நீங்க போய் சாப்பிட்டுட்டு கிளம்புங்க முன்னாடி கார்ல போறவங்க எல்லாரையும் அனுப்பிட்டு பின்னாடி நாம கேப்ஸ் அரேஞ்ச் பண்ணி ஏர்போர்ட் போயிருக்கலாம் என்று கூற
அவனும் சரி நான் போய் எல்லாத்தையும் பேக் பண்ணி வெச்சிட்டு அப்புறமா சாப்பிடறேன் அதுக்கு முன்னாடி மண்டபத்தை காலி செய்வதற்கான வேலைகள் பார்க்கணுமே என்று ராதிகாவை பார்த்து கேட்டான்.
உடனே ராதிகா அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் அந்தப் பொறுப்பு எல்லாத்தையுமே வேதாக்காவோட அம்மா அப்பா கிட்ட கொடுத்தாச்சு இங்கு இருக்கிறது எல்லாத்தையும் அவங்க பார்த்துக்குவாங்க நீங்க முதல்ல போய் சாப்பிட்டு கிளம்பினா போதும்... பேக்கிங்கை நான் முடிச்சிட்டேன்….
உன்னை யார் ராதிகா இந்த மாதிரி சமயத்துல எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய சொன்னது என்று சற்று கடிந்து கொள்ள …
ஓவர் ஆக்டிங் வேண்டாம் செழியன் உங்களுக்கே தெரியும் பேக்கிங் எல்லாத்தையுமே வர்ஷினி தான் பண்ணி இருப்பான்னு நீங்க இந்துவ சென்னை கூட்டிட்டு வர்றதுக்கு நான் கொஞ்சம்கூட கோபப்படல்ல…
அதை மனசுல வெச்சுக்கிட்டு தேவை இல்லாம என்னை சமாதானபடுத்தறதா நினைச்சு கிட்டு அசடு வழியாம போய் சாப்பிட்டு கிளம்புங்க என்று கூறியபடி அவளின் அறையை நோக்கிச் சென்றாள்.
புத்திசாலி பொண்டாட்டி என்று வாய்க்குள் முணுமுணுத்தவன் உணவு பரிமாறும் இடத்தை நோக்கிச் சென்றான் அதன் பிறகு சற்று நேரத்திற்கெல்லாம் அனைவருமே சென்னை கிளம்புவதற்காக வேதாவின் பெற்றோர்களிடம் சொல்லிக் கொண்டு முறைப்படி கிளம்பினார்கள்.
அவர்களுடன் கிளம்பத் தயாராக இருந்த இந்துமதியை வேதாவின் பெற்றோர்கள் தடுத்து நிறுத்த மீண்டும் அவள் அழுகைக்கு தயாரானாள்.
ஆனால் செழியன் இடையில் புகுந்து அவர்களை சமாதானப்படுத்தி போராடி இந்துவை அவர்களுடன் சென்னைக்கு அழைத்துச் செல்வதற்காக அனுமதியையும் பெற்றான்.
எப்படி இருந்தாலும் உங்கள் மகளைப் பார்ப்பதற்காக ஒரு வாரத்திற்குள் நீங்கள் அங்க வருவீங்கல்ல அப்போ இந்துவை கூப்பிட்டுக்கோங்க அப்படி இல்லனா அண்ணாவும் அண்ணியும் இங்கே உங்களை பார்க்க வருவாங்கல்ல அப்போ இந்துவை கூட்டிட்டு வருவாங்க ..
பாவம் சின்ன பொண்ணு அக்கா சொல்லாம போயிட்டாங்கனு ரொம்ப கவலைப் படறா...எதுக்காக அவளை நாம கஷ்டப்படுத்தணும்... என்று செழியன் அவளுக்காக வேதாவின் பெற்றோரிடம் பரிந்து பேச மாறனின் பெற்றோரும் அதை ஆமோதித்தனர்.
செழியன் சொல்றதும் சரிதான் சம்பந்தி இந்து அங்க வந்து வேதாவோட தங்கினா அவளுக்கு அந்த வீடு புதுசா தெரியாது அதனால வேதா அங்க பழகுற வரைக்கும் இந்து அங்க இருக்கட்டுமே நாங்க அவளை பத்திரமா பாத்துக்கறோம் என்று கனகாவும் அவரின் பங்குக்கு கூற விருப்பமே இல்லாமல் அவர்களின் பின்னே இந்துமதியை அனுப்பி வைத்தார்கள் வேதாவின் பெற்றோர்கள்.
தனது அக்காவை காணப்போகும் சந்தோஷத்துடன் மாறனின் குடும்பத்தாருடன் இந்துமதி சென்னை நோக்கிப் பயணப்பட ஆரம்பித்தாள்.
அதே நேரம் இங்கே சென்னையில் மாறனின் தொழில்முறை நண்பர்கள் சிலர் அவனையும் வேதாவையும் வாழ்த்துவதற்காக வருகிறார்கள் என்று அவனை அழைத்துக் கூறவும் வேறு வழியில்லாமல் வேதாவை தயாராக இருக்கும்படி கூறுவதற்காக வெளியேவர சோபாவில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு வேதா நன்கு தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததுமே மாறனுக்கு மீண்டும் ஆச்சரியம் வந்தது. எப்படி இவளால் மட்டும் இப்படி உறங்க முடிகிறது .
காலையிலிருந்து இங்கு வருவதற்குள் இது நான்காவது முறையாக தூங்கிக் கொண்டிருக்கிறாள்.
ஒருவேளை இவளுக்கு உறங்கும் நோய் ஏதாவது இருக்குமோ என்று கூட சந்தேகப்பட்டான்.
அவன் நினைத்தது சரிதான் வேதாவிற்கு கிட்டத்தட்ட அது ஒரு நோய் தான் அவள் அதிகப்படியாக கவலைப்பட்டாலும்,அதிகப்படியாக சந்தோஷப்பட்டாலும்,அதிக குழப்பம்,அழுகை,பயம் எது வந்தாலுமே ஒன்று நன்றாக சாப்பிடுவாள்... இல்லையென்றால் தூக்குவாள்.
இது இரண்டையும் தான் எப்போதுமே செய்வது... பிரச்சினையை எதிர் கொள்ள தெரியாத பெண்.
இப்பொழுது அவளுக்கு அதிகப்படியான குழப்பம் மற்றும் பயம் அதனால் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள உறக்கத்தை கையில் எடுத்திருக்கிறாள்.
இது நாள் வரை வேதாவை பற்றி அவளின் தாய் தந்தையர் கூட கவனித்தது கிடையாது... எப்பொழுது பார்த்தாலும் சாப்பிடுவாள் இல்லை என்றால் தூங்குவாள் இதை தவிர அவர்களின் பெண்ணிற்கு வேறு எதுவும் தெரியாது என்று சலித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர அவள் எதனால் அப்படி செய்கிறாள் என்பதை அவர்கள் ஆராயவில்லை ஆனால் இங்கு வந்த சில மணி நேரத்திலேயே மாறன் கணித்து விட்டான்.
தூங்கும் அவளை எப்படி எழுப்புவது என யோசித்தவன் எழுப்புவதா வேணாமா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் பாட்டி மீண்டும் வெளியே வரவுமே இவன் எதுவும் பேசாமல் அவனின் அறைக்குள் செல்ல மாறனை பார்த்து புரிந்து கொண்ட பாட்டி தூங்கும் வேதாவை எழுப்பி விட்டார்.
வேதா எந்திரிமா... தூக்கம் வந்தா உள்ள போய் தூங்கணும் இப்படி ஹால்ல படுத்து தூங்கக் கூடாது நாலு பேர் வந்து போற இடத்தில பாக்குறவங்க நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க என்று சற்று அதட்டியபடி பேசினார்.
எழுந்து அமர்ந்த வேதா பாட்டி ஏன் இப்படி கடிந்து கொள்கிறாள் என புரியாமல் விழித்தாள்.
அதைக் கண்டு கொள்ளாத பாட்டி நேராகச் சென்று மாறனை திட்டத் தொடங்கினார் என்ன மாறா இது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இப்படி நாலு பேர் பார்க்கிறது போல ஹாலில் உட்கார வச்சு இருக்க.
அவ இந்த வீட்டோட மூத்த மருமகள் அவளுக்குனு ஒரு மரியாதை வேண்டாம் இப்படி நீ கண்டுக்காம விட்டா வீட்ல வேலை செய்றவங்க எப்படி அவளை மதிப்பாங்க கூட்டிட்டு வந்து உன்னோட அறையில் உட்காரவை என்று அவனிடம் கூறினார்.
பாட்டியை எதிர்த்து பேச தயங்கிய மாறன் எதும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
பாட்டி வெளியே வந்து வேதவல்லி உள்ள வா என்று சத்தமாக அழைக்க வேறு வழியின்றி வேதா தயக்கமாக எழுந்தாள்.
முதல் முறையாக அவளுக்கு ஒருவித பயம் தோன்றியது.முதல் முறையாக இதுவரை பழக்கமில்லாத ஆடவனின் அறைக்குள் செல்கிறாள் காலையிலிருந்து அவளை வேண்டுமென்றே தவிர்க்கும் ஒருவனை அவனது அறைக்குள் சென்று நேரடியாக சந்திக்க போகிறாள்…
வேதா தயக்கமாக மாறனின் அறை வாசலில் வந்து நிற்கவும் பாட்டி மீண்டும் அவளைப் பார்த்து என்ன வாசல்லேயே நிற்கற முதல்ல ரூம் உள்ள போ... இனி ஒவ்வொருத்தரா வருவாங்க நான் உன்ன கூப்பிட வரைக்கும் நீ வெளியே வரக்கூடாது புரியுதா என்று அவளை பார்த்து மிரட்டும் தோரணையில் கேட்க பயந்து தான் புரிகிறது என்பது போல் வேகமாக தலையசைத்தாள்... பிறகு பயந்தபடியே மெல்ல மாறனின் அறைக்குள் செல்ல அறையின் மூலையில் கைகளைக் கட்டியபடி வேதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் முறைப்பை கண்டு பயந்த வேதா பாட்டி திட்டினாலும் பரவாயில்லை வெளியே சென்று விடலாம் என்று கதவின் அருகில் வருவதற்குள் பாட்டி வெளிப்பக்கமாக இருந்து கதவை இழுத்து சாத்தினார்…
கதவு பட்டென்று சாத்தவும் பயந்த வேதா மாறனை பார்த்து நான் இல்ல பாட்டி தான் என்று வெளிப்பக்கமாக ஒற்றை விரலை நீட்டி அவனிடம் கூற தலையில் அடித்துக்கொண்ட மாறன் எல்லாம் என் தலையெழுத்து என்று கூறியபடி அறைக்குள் இருந்த மற்றொரு சிறிய அறைக்குள் சென்றான்.
என்ன செய்வது என்று புரியாத வேதா பூட்டிய கதவையும் மாறன் சென்ற அறையையும் மாறி மாறி பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.
தொடரும்...