சற்று நேரம் வரை அப்படியே நின்று பார்த்த வேதா மாறன் சென்ற அறையை பக்கம் சென்று தலையை மட்டும் சாய்த்து எட்டி பார்த்தாள்.
உள்ளே அலுவலக அறை போல் ஒரு டேபிள் சுற்றும் நாற்காலி இருந்தது அருகிலேயே ஒரு அலமாரி இருக்க அதில் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
உடனே அவளுக்கு புரிந்தது இது புத்தகங்கள் வாசிப்பதற்காக பிரத்யேமாக அமைக்க பட்டிருக்கும் அறை...யாரின் தொந்தரவும் இருக்கக்கூடாது என அறைக்கு உள்ளேயே சிறிய அளவு இடம் ஒதுக்கி கட்டியிருக்கிறார்கள்.
எல்லாம் சரி தனக்கு தாலி கட்டிய மணாளன் எங்கே என்று மீண்டும் தலையை மட்டும் அறைக்குள் விட்டு பார்க்க அந்த அறையின் மூலையில் கிடந்த ஒரு கௌச்சில் தலையை பிடித்தபடி மாறன் படுத்துக் கொண்டிருந்தான்.
இவள் எட்டிப்பார்ப்பதை அவனது உள்ளுணர்வு சொன்னதோ என்னவோ தலையிலிருந்து கையை எடுத்தவன் விழித்து பார்க்க தலையை மட்டும் விட்டு எட்டிப் பார்த்த வேதாவை கண்டதும் கோபமாக எழுந்தவன் நேராக வேதாவை நோக்கி வந்தான் அவன் வருவதை கண்டதும் பயந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்தாள் .
வேகமாக அவளிடத்தில் வந்தவன் கொஞ்சம் கூட உனக்கும் மேனர்ஸ் கிடையாதா இப்படித்தான் அடுத்தவங்க என்ன பண்ணுவாங்கன்னு எட்டி பாத்துட்டு இருப்பியா என்று வார்த்தைகளை அமிலமாக கொட்டினான்.
ஒரு நிமிடம் அவன் திட்டவும் கண்களிலிருந்து கண்ணீர் எட்டி பார்க்கவா என அவளிடம் அனுமதி கேட்க... கடினப்பட்டு கண்ணீரை உள்ளே இழுத்தவள்... உங்களுக்கு கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா இப்படித்தான் கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணு கிட்ட என்ன ஏதுன்னு கேட்காம அறிமுகம் இல்லாத இடத்தில் உங்க ரூம்குள்ள விட்டுட்டு எனக்கு என்னனு உள்ள போய் ஓளிஞ்சிப்பீங்களா என்று அவனுக்கு திருப்பிக் கொடுத்தாள்.
மத்தவங்க கிட்ட பேசுற மாதிரி என்கிட்ட வாய் பேசினா சின்ன பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன் அப்படியே ஓங்கி ஒன்னு விட்டுடுவேன் இதுவரைக்கும் யாரும் என்கிட்ட இப்படி பேசினது கிடையாது தெரியுமா உனக்கு என்று மிரட்டும் தொனியில் அவளைப் பார்த்து கேட்டான்.
இப்பொழுது வேதாவின் கண்களிலிருந்த கண்ணீர் அவளிடம் அனுமதி கேட்காமல் கன்னத்தில் வழிந்து ஓட ஆரம்பித்தது...உதடுகள் துடிக்க இதுவரைக்கும் நீங்க வேதா மாதிரி ஆளுக கிட்ட பேசி இருக்க மாட்டீங்க அதனால யாரும் உங்க தப்பை உங்ககிட்ட சொல்லிருக்க மாட்டாங்க மத்தவங்க மாதிரி நான் கிடையாது நான் வேதவல்லி என் கிட்ட அன்பா இருந்தா நான் அன்பா பதில் சொல்லுவேன் இப்படி மிரட்டுற மாதிரி பேசினா அதற்கான பதிலையும் நான் கொடுப்பேன் என்று கூறினாள்.
வாயை மூடு உன் வாயாடி தனத்தை உன் வீட்டோட வச்சிக்கோ...இது என் வீடு இங்க நான் சொல்லற படிதான் நீ இருக்கனும்... உன்னை இங்கு இருக்க சொன்னா நான் வர்ற வரைக்கும் நீங்க தான் இருக்கணும் அத விட்டுட்டு நான் எங்க போயிருக்கேனு வந்து பார்க்க வேண்டிய வேலை உன்னோட வேலை கிடையாது புரியுதா இது தான் முதலும் கடைசியுமாக இருக்கணும் இனிமே இது போல அதிகப்பிரசங்கித்தனம் பண்ணிக்கிட்டு இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் முதல்ல ஒழுங்கா இங்க உட்காரு பாட்டி வந்து உன்னை வெளியே கூப்பிடுற வரைக்கும் எதுவும் பேசக்கூடாது என்று கூற
கோபம் கொண்ட வேதா நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரி கிடையாது நீங்க உட்காருன்னா உட்காரவும் நில்லுனா நிக்கவும் புரியுதா…?
நான் உங்களோட மனைவி நீங்க என்னோட கணவர் உங்களை காணோம்னா நான் தேடி வர தான் செய்வேன்.
எதுக்காக நான் தேடி வருவது போல நீங்க நடத்துகறீங்க முதல்ல நீங்க ஒரு நல்ல கணவரா நடந்துக்க முயற்சி பண்ணுங்க அதுக்கு அப்புறமா எனக்கு புத்திமதி சொல்லுங்க நீங்க சரியா நடந்துக்காம நான் மட்டும் சரியா நடந்துக்கணும்னு எப்படி நீங்க எதிர்பார்க்கலாம் என்று பதில் கொடுக்க.
கோபம் கொண்டவன்
பதிலுக்கு பதில் பேசினா அடித்து பல்லை உடைச்சிடுவேன் என்று அவனையும் மறந்து கையை ஓங்கினான்.
ஓங்கிய கையையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் ஓவென அழ ஆரம்பித்தாள் என்னால உங்க கூட இருக்க முடியாது கல்யாணம் பண்ணி இன்னும் ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள என்ன அடிக்க கை ஓங்கறீங்க என்ன எல்லா இடத்துலேயும் விட்டுட்டு போறீங்க…முதல்ல மண்டபத்துல அப்புறமா ஏர்போர்ட்ல...இப்போ இந்த ரூம்க்குள்ள...
ஒவ்வொரு முறையும் உங்க பின்னாடி என்னாலும் ஓடி வர முடியாது என்னை இப்பவே கொண்டு போய் என் அம்மா வீட்டுல விட்டுடுங்க என்னைக்குமே உங்களுக்கும் எனக்கும் ஒத்துப் போகவே போகாது எனக்கானவர் நீங்க இல்ல எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் எதுவுமே வேண்டாம் நான் போறேன் என்று கூறியபடி கத்தி அழ ஆரம்பித்தாள் அவளின் அழுகை சத்தம் அந்த அறையை தாண்டி வெளியில் கேட்டு விடுமோ என்ற பயந்த மாறன் அவளின் வாயை அழுத்தி பொத்தினான்.
ஹேய்...ஷ்ஷ்….கத்தாத என்று அவளை சமாதானப் படுத்த முயன்றார்.
வேதா அவனின் கைகளை விடுவிக்கப் போராடியபடி திமிர ஆரம்பித்தவள் முடியாமல் போக அவனின் கையை கடித்து வைத்தாள்.
ஷ்ஆ... என்று கையை உதறியவன்...லூஸூ கையை இப்படிதான் கடிச்சி வைப்பியா என்று திட்டியபடியே காயமான தனது உள்ளங்கையை தேய்த்து விட்டபடி அவளை பார்க்க .
அவளோ எதையும் கண்டு கொள்ளாமல் நான் வீட்டுக்கு போகனும் என்னை கூட்டிட்டு போய் விடுங்க இல்ல நானே போய்கறேன் என்று கூறியபடி வேகமாக கதவை திறக்க ஓடினாள்.
வேகமாக பாய்ந்து சென்று அவளை இழுத்து மெத்தையில் போட்டவன் அவள் மீது படர்ந்தான்...அவனின் பாரத்தை தாங்கிக் கொள்ள முடியாதவள் மூச்சுவிட சிரமப்பட்டு தன் மீது கிடந்தவனை இரு கைகளாலும் தள்ளிவிட முயற்சித்தாள்...
அதைப் பொருட்படுத்தாது மேலும் அவனின் முழு பாரத்தையும் அவளின் மீது கொடுக்க இப்பொழுது அவள் முற்றிலும் ஓய்ந்து விட்டாள்.
மூச்சுவிட சிரமப்பட்டபடியே என்னை விட்டு விடேன் என்று கெஞ்சுவது போல் அவனைப் பார்த்தாள்.
அவளின் அந்த முகபாவம் மாறனை ஏதோ செய்ய அவளின் மீதிருந்த அவனின் பாரத்தை மெல்ல விலகிக் கொண்டான்.
பிறகு அவளை பார்த்தபடி ஒரு சைடாக படுத்தவன் அவளின் முகத்தை தனது கை கொண்டு அவன் பக்கமாகத் திருப்பினான்.
அதிர்ச்சியோடு அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வேதாவைப் பார்த்து
ஒழுங்கா அடங்கியிரு….இல்லனா நடக்குறதே வேற என்னை தயவு செஞ்சு கோபக்காரனா மாத்தாதே... நீயே ஆசைப்பட்டா கூட உன்னை என்னோட வெச்சுக்க எனக்கு துளிகூட விருப்பம் இல்லை.
நான் சொல்ற வரைக்கும் பொறுமையா இருந்தா நானே உன்னை கூட்டிட்டு போய் மொத்தமா தலைமுழுகி உன் வீட்ல விட்டுட்டு வந்துடறேன் அத விட்டுட்டு ஏதாவது வேலைதனம் பண்ணிக்கிட்டு இந்த மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருந்தா காலத்துக்கும் இந்த நாலு சுவத்துக்குள்ள தான் உன்னோட வாழ்க்கை புரியுதா அதனால ஒழுங்கா நான் சொல்றபடி செய் ஒழுங்கா நான் வர்ற வரைக்கும் இங்கயே இப்படியே இருக்கற புரியுதா என்று மிரட்டும் தோணியில் கேட்க புரிகிறது என்பது போல் தலையாட்டினாள்.
ம்ம்...குட்… மொதல்ல எழுந்து உன் டிரஸ்ஸை சரி பண்ணிக்கோ என்று கூறியபடி வேகமாக அறையை விட்டு வெளியேறினான் .
அவன் என்ன கூறுகிறான் என்று கிரகித்துக் கொண்டு அவள் எழுவதற்குள் அவன் கதவை சாத்திவிட்டு வெளியே சென்று விட்டான்.
அப்பொழுதுதான் அவளின் ஆடையை கவனித்தாள் அவனுடன் நடந்த களேபரத்தில் அவளின் புடவை முற்றிலும் நெகிழ்ந்து ஏதோ அவளது உடலில் சுற்றியிருந்தது.
கடவுளே இந்த கோலத்திலா இவ்வளவு நேரம் அவனின் முன்பு கிடந்தோம் என்று அவளுக்கு அவளே மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டவள் வேகமாக எழுந்து அவளின் புடவையை சரி செய்தாள்.
பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்த கௌச்சில் ஓரமாக அமர்ந்து கொண்டு நேரத்தை கடத்த ஆரம்பித்தாள் .
சற்று நேரத்திற்கெல்லாம் உள்ளே வந்த மாறன் அவளின் அருகே வந்து தயங்கியபடி என்னோட பிசினஸ் பண்ற ஒருத்தர் குடும்பத்தோட நம்ம ரெண்டு பேரையும் பாக்கறதுக்காக வந்திருக்கிறார் அவர் முன்னாடி கொஞ்சம் அனுசரணையாக நடந்துக்கோ அவர் இங்கிருந்து கிளம்பிப் போனதும் உன்ன நான் கூட்டிட்டு போய் உன் வீட்டுல விட்டுறேன் எனக்காக இப்போ இதை செஞ்சு கொடு என்று அவளிடம் கேட்டான்.
அவன் கேட்ட தோரணை அவளுக்கு சற்று மன இளக்கத்தை கொடுக்க சரி என்று தலை அசைத்தாள்...பிறகு அவர் போனதும் என்னை ஊருக்கு கூட்டிட்டு போவீங்க தானே பேச்சு மாற மாட்டீங்களே என்று கேட்டாள்.
உடனே அவன் மொபைலில் இருந்த ஒரு மெசேஜ்ஜை அவளுக்கு காட்டினான் இங்கே பாத்தியா ஃப்ளைட் டிக்கெட் இப்ப தான் போட சொல்லி டிக்கெட்டை கன்ஃபார்ம் பண்ணிட்டேன் நீ தைரியமா என்னை நம்பலாம் பேச்சு மாறமாட்டேன்.
எனக்கும் உன்னை இங்க வெச்சுக்கிறதுல துளிகூட விருப்பம் இல்ல அதனால அவங்க இங்கிருந்து போனதுமே நாம கிளம்பிடலாம்….
இந்த வீட்ல இருந்து ஏதாவது எடுத்துட்டு போகணும்னு தோனினா தாராளமாய் எடுத்துக்கோ இல்ல உனக்கு வேற ஏதாவது வேணும்னாலும் சொல்லு நான் உனக்கு வாங்கி கொடுக்கிறேன் என்று கூறவும்
எனக்கு எதுவும் வேண்டாம் என் அம்மா அப்பா வீட்ல என்ன கொண்டுபோய் விட்டாலே போதும் என்று கூறினாள்.
ம்ம்… என்று தயங்கியபடியே அங்கு மாறன் நிற்க…
என்ன என்று யோசனையாக அவனின் முகத்தை பார்த்தாள்.
சாரி வேதா என்னை மன்னிச்சிடு தேவையே இல்லாம உன்ன கல்யாணம் பண்ணி ஒரு நாள் முடியறதுக்கு முன்னாடி உன்னை உன் வீட்ல கொண்டு போய் விடற அளவுக்கு சூழ்நிலை அமைஞ்சிடுச்சி…
இதுக்கு என்ன சமாதானம் சொன்னாலும் அது சரியா வராது தப்பு முழுக்க என்னோடது தான் தேவையில்லாமல் உன்னோட வாழ்க்கையை பாழாக்கிக்கிட்டேன்.
ஒரு பத்து நாள் பொறுத்துக்கோ சட்ட ரீதியா இருக்கிற எல்லா பிரச்னையும் தீர்த்து உனக்கு நானே வேற ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்... மறுபடியும் உன்கிட்ட மனசார மன்னிப்பு கேக்கறேன் என்னை மன்னிச்சிடு.
இன்னைக்கு நடந்த எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு என்று கூறினான்.
அவன் கூறியவற்றை பொறுமையாக கேட்டுக் கொண்ட வேதவல்லி நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு தெரிஞ்சும் கூட இவ்வளவு தூரம் வந்து உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டேன்.
காலையிலிருந்து நீங்க எனக்கு அதை புரிய வைச்சீங்க அது புரிந்தும் நான்தான் விளையாட்டுத்தனமா இவ்வளவு தூரம் வந்து உங்களை தர்மசங்கட படுத்தீட்டேன்.
தப்பு ரெண்டு பேர் மேலயும் இருக்கு... நம்ம ரெண்டு பெயரையும் அந்த கடவுள் பக்கம் பக்கம் எழுதி வைக்கல...அதனால தான் இத்தனை குழப்பம்... அப்படி எழுதி வச்சிருந்த கல்யாணமாகி முழுசா ஒரு நாள் முடியறதுக்கு முன்னாடி நாம இப்படி பிரியறதா முடிவு எடுத்திருக்க மாட்டோம் .
நேத்து நைட் உங்களை பார்த்ததும் ஒரு நிமிஷத்துல என்னை மறந்து உங்களை காதலிக்க ஆரம்பிச்சது என்னமோ உண்மைதான் ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம் தான் புரியுது நமக்குள்ள என்னைக்குமே ஒத்துப்போகாதுங்கற விஷயம்.
ரெண்டு பேரோட வாழ்க்கை முழுக்க ஒத்துப்போகாம இழுத்துக்கிட்டு வாழறதுக்கு இன்னைக்கே ஒரு நல்ல முடிவா எடுத்து பிரியறது ரொம்ப சரி அதனால நீங்களும் என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டாம்... நானும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வேண்டாம் ரெண்டு பேருமே அவங்க அவங்க சுயநலத்துக்காக அடுத்தவங்களோட வாழ்க்கையை பழாக்கி கிட்டோம் என்று அவளும் குரல் கம்ம கூறினாள்.
ஏனோ வேதாவின் பேச்சு மாறனுக்கு துளி கண்ணீரை வரவழைக்க அதை அவளுக்கு தெரியாத வண்ணம் துடைத்துக் கொண்டவன்...
சரி வா அவங்க வந்து ரொம்ப நேரமா வெளியே காத்துகிட்டிருக்காங்க என்று கூறியபடி அவளை அழைத்துச் சென்று அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.
அவர்களும் இவர்கள் இருவரையும் பார்த்து ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லாயிருக்கு என்று கூறிவிட்டு மனதார வாழ்த்தினார்கள்.
பிறகு சற்று நேரம் உரையாடிவிட்டு அவர்கள் சென்றுவிட மாறன் அவளை நன்றிப் பெருக்குடன் பார்த்து ரொம்ப தேங்க்ஸ் இவர் நான் பிசினஸ் ஆரம்பிச்ச காலத்துல இருந்து எனக்கு பெரிய சப்போட்டா இருந்தவர் இவர்கிட்ட எனக்கு இது விருப்பமில்லாத திருமணம் என்று சொல்ல மனசு வரலை அதேசமயம் அவர் கிட்ட உன்னை அறிமுகப்படுத்தாமலும் இருக்க முடியல.
எப்படியோ அவர் கிட்ட ரொம்ப நல்ல விதமான நடந்துகிட்ட இதுக்கு நான் உனக்கு கடமை பட்டு இருக்கேன் சரி ஒரு பத்து நிமிஷம் வரை காத்திரு நான் போய் ஒரு முக்கியமான மெயில் அனுப்பிட்டு வந்து உன்னை ஊருக்கு கூட்டிட்டு போறேன் என்று கூறிய விட்டு அவனின் அறையை நோக்கிச் சென்றான்.
சற்று நேரத்திற்கெல்லாம் ஊரில் இருந்து மாறனின் மொத்த குடும்பமும் வீட்டு வாசலில் வந்து இறங்க முதல் ஆளாக இந்துமதி உள்ளே ஓடி வந்தாள் அக்கா அக்கா என்று கூறியபடி அவள் ஓடி வரவும் அதிர்ச்சியில் அமர்ந்திருந்த ஷோபாவில் இருந்து எழுந்து நின்றாள்.
உள்ளே வேகமாக ஓடி வந்த இந்து அவளின் அக்காவை கண்டதும் இருக்க கட்டி அணைத்துக் கொண்டாள்.
பிறகு ஏன்கா என்கிட்ட சொல்லிட்டு வரல...அதுக்குள்ள என்னை மறந்துட்டல்ல என்று கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.
அவளை எப்படியெல்லாமோ சமாதானப்படுத்த முயன்று முற்றிலும் வேதா தோற்றுப் போனாள் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி அழுத வண்ணம் இருந்தாள்.
அக்கா தங்கைகளின் பாசப்பிணைப்பை கண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அவரவர் அறைக்குள் சென்று விட ஒரு வழியாக வேதாவே இந்துவை சமாதானம் செய்தாள்.
பிறகு என்ன திடீர்னு நீ இங்க வந்துருக்க…. யார் உன்னை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வர சம்மதிச்சது...அம்மா எப்படி ஒத்துகிட்டாங்க என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டாள்.
இந்து இப்பொழுது கூலாக நீ என்கிட்ட சொல்லிட்டு வரலனு நான் அழுதேனா அதை பார்த்து சின்ன அத்தான் அம்மாகிட்ட சொல்லிட்டு அவங்க கூட கூட்டிட்டு வந்துட்டாங்க…
வந்திட்ட சரி எப்படி ஊருக்கு போவ இந்து...பரவால்ல விடு நான் உன்னை கூட்டிட்டு போறேன் கிளம்பு என்று தங்கையை கிளப்பினாள்.
ஐயோ அக்கா அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ எல்லாம் எனக்கு கூட்டிட்டு போக வேண்டாம் நம்மளோட அம்மா அப்பா கவின் எல்லாருமே அடுத்த வாரம் உன்னை பார்க்க வருவாங்களாம் அப்போ நான் அவங்க கூட கிளம்பிப் போயிருவேன் அதுவரைக்கும் ஒரு வாரம் என் அக்காவோட ஜாலியா இந்த வீட்ல இருக்கப் போறேன் என்று கூறியபடி சந்தோஷத்துடன் அணைத்துக்கொள்ளும் தங்கையிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் விழிக்க அந்த நேரத்தில் செழியன் வந்து இந்துவை அழைத்து
வா இந்து முதல்ல வீட்டை சுத்தி பாக்கலாம்…. அதுக்கப்புறமா உன் அக்காகூட ஜாலியா இருக்கலாம் என்று கூறினான்.
உடனே சரி அத்தான் என்று சந்தோஷமாக செழியனின் கைகளை பிடித்து தொங்கியபடி இந்து செல்ல இப்பொழுது என்ன செய்வது..
இன்னும் சற்று நேரத்தில் ஊருக்கு கூட்டிச் செல்கிறேன் என்று மாறன் கூறியிருக்கிறான்.
ஆனால் தங்கையோ இங்கு வந்திருக்கிறாள் இப்பொழுது அவளை இங்கே விட்டு விட்டு தான் மட்டும் எப்படி ஊருக்கு செல்வது.
அப்படியே அவளையும் உடன் அழைத்துச் செல்லலாம் என்றால் அவளுக்கு எப்படி தனது நிலையை புரிய வைப்பது….
அப்படியே அவள் புரிந்து கொண்டாலும் இந்த விஷயத்தை இச்சிறு பெண் எப்படித் தாங்குவாள் ஏற்கனவே காலையிலிருந்து அழுததாக கூறியிருக்கிறாள்.
மேலும் அவளை அழ வைக்க வேண்டுமா...என்று நினைத்த வேதவல்லி நேராக மாறனின் அறையை நோக்கிச் சென்றாள்.
மாறன் இவளைக் கண்டதும் வேகமாக லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு சாரி ரொம்ப நேரம் உன்னை காக்க வச்சிட்டேனா….
இல்ல….நான் அதுக்காக வரல...உங்க வீட்ல எல்லாருமே வந்துட்டாங்க….
ஓஓஓ அதான் பயந்துட்டியா... எங்கே ஊருக்கு கூட்டிட்டு போகாம விட்டுடுவேனோனு... ஒன்னும் கவலைப்படாதே அவங்களுக்கு எப்படி சொன்னா புரியுமோ அது மாதிரி நான் சொல்லி புரிய வைச்சிக்கறேன்…
நீ உன் வீட்டு ஆளுகளை பாத்துக்கோ...முடிஞ்ச அளவு நானும் அவங்களுக்கு புரிய வைக்கறேன் பயப்படாத...
ரெண்டு பேரோட மனநிலையையும் நம்மளை பெத்தவங்க புரிஞ்சிக்கிட்டாங்கன்னா பிரச்சனை பண்ண மாட்டாங்க சரி நீ கிளம்பு இப்ப போனா சரியாக இருக்கும் என்று கூறியபடியே இருக்கையை விட்டு எழ.
இடை மறித்து. வேதா இல்லல்ல அது வந்து ஒரு சின்ன பிரச்சனை அதான் உங்களை தேடி வந்தேன்.
என்ன என்று யோசனையாக அவளைப் பார்க்க .
இந்து ஊர்ல இருந்து வந்திருக்கா…
யாரு உன் தங்கை இந்துவா...அவ எப்படி இங்க...எப்படி வந்தா...யார் கூட்டிட்டு வந்தது…?
உங்க ஃபேமிலி மெம்பர்ஸோட வந்திருக்கா...அவ என்னை பாக்கனும்னு அழுதாளாம் இவங்க மனசு கேக்காம கூட்டிட்டு வந்திருக்காங்க என்று கூற
இது வேறயா சரி விடு... அவளையும் நம்மளோட அழைச்சிட்டு போகலாம்... டிக்கெட் கிடைக்குமானு தெரியல... ட்ரை பண்ணி பாக்குறேன் கிடைக்கலனா ஏர்போர்ட் போனதும் அங்க ஏதாவது டிக்கெட் அரேஞ்ச் பண்ணிக்கலாம்.
அப்படி இல்லைன்னா ட்ரெயின் மாதிரி ஏதாவது பார்த்துக்கலாம் என்று கூற.
இல்ல அவ ஒரு வாரம் இங்கு இருக்கப் போறதா சொல்றா இப்போ நீங்க என்னை சொல்லி அவளை ஊருக்கு கூட்டிட்டு போவீங்க சொல்லுங்க உன் அக்காவை எனக்கு பிடிக்கல... விருப்பமே இல்லாம எனக்கு திருமணம் செஞ்சி வச்சிட்டாங்க எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் எப்பவுமே ஒத்துப் போகாதுனு தெரிஞ்சதால உடனே அவளை ஊருக்கு கூட்டிட்டு போய் விடப் போறேன்னு சொல்ல போறீங்களா... அவ சின்ன பொண்ணு இதெல்லாம் சொன்னா அவளுக்கு புரியாது புரிஞ்சாலும் தாங்க மாட்டான்னு நினைக்கிறேன் என்று கவலையாக கூறினாள்.
உடனே நெற்றியில் கை வைத்தவன் சலிப்பாக அப்போ என்னை என்ன பண்ண சொல்ற என்று கேட்டான்.
தயங்கிய வேதா அவனின் முகம் பார்த்து தெளிவாக கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் வரும்போது நான் அவரு முன்னாடி நல்ல விதமா நடிக்கலையா அதே மாதிரி இந்து ஊருக்கு போற வரைக்கும் அவ முன்னாடி கொஞ்சம் நாம சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கலாமே அவ சின்ன பொண்ணு அவளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது .
ஆனா என் அம்மா அப்பா வரும்போது அவன் கிட்ட சொல்லி புரிய வச்சு நான் அவங்களோட ஊருக்கு போய்க்கறேன் ப்ளீஸ் என்று கெஞ்சுவது போல் அவனை பார்த்து கேட்டாள்.
யோசனையாக நெற்றியைக் தேய்த்துக் கொண்டவன் சரியா வருமா வேதா...ஒரு வாரம் கழிச்சி சொல்லறதுக்கு இன்னைக்கே சொன்னா பல பிரச்சனைல இருந்து ரெண்டு பேருமே தப்பிக்கலாம்... ஒரு வாரம் கழியும் போது வேற மாதிரி பிரச்சினைகள் நம்ம ரெண்டு பேருக்கும் வரும்னு எனக்கு தோணுது.
நாம பிரிய முடிவெடுத்ததுக்கப்புறம் யாருக்காகவும் நம்மளோட முடிவை மாற்ற வேண்டாம் ஒரு வாரம் கழிச்சு கஷ்டப்பட போறவங்க இப்பவே கஷ்டப்பட்டுக்கட்டும் அதனால நீ உன் தங்கைய கூப்பிட்டு கிளம்பு இது சரிவராது என்று உறுதியாகக் கூறினான்.
ப்ளீஸ்ங்க….பாவம் அவ ஆசையா அக்காவோட தங்கலாம்னு வந்திருக்கா அவளை ஏமாத்த வேணாமே...ஒரு வாரம் தானே என்னையும் என் தங்கையையும் சகிச்சிக்கோங்க...இந்த வீட்ல ஏதாவது ஒரு மூலைல இருந்துட்டு கிளம்பிடறோம் உங்களை எப்பவும் தொந்தரவு செய்ய மாட்டோம்...என் அம்மா அப்பா வர்ற வரைக்கும் ப்ளீஸ் முடியானு சொல்லாதீங்க என்று கெஞ்சினாள்.
சரி அம்மா அப்பா வந்ததும் எல்லாத்தையும் சொல்லி புரிய வைச்சிட்டு நீ அவங்களோட கிளம்பி போயிடணும் ….உனக்கு எவ்வளவு பணம் வேணாலும் நான் தர தயாரா இருக்கேன் .
அதே மாதிரி உனக்கு வேற எது வேணும்னாலும் நீ தாராளமா என் கிட்ட கேட்டு வாங்கிக்கலாம்.
இப்போ நீ கேக்கற உதவியை என்னோட தப்புக்கு பிராயச்சித்தமா முழு மனசா ஏத்துகிட்டு செய்யறேன்...ஆனா ஒருவாரம் கழிச்சு நீ இங்க இருக்கணும்னு நினைக்ககூடாது புரியுதா…என்று கேட்ட மாறனின் முகத்தைப் பார்த்து புரியுது என்பது போல் தலையை ஆட்டினாள் வேதா.
மீண்டும் அவளைப் பார்த்து சந்தேகமாக இந்த வீடு... கார்...இங்க இருக்கிற வசதி இது எல்லாம் பார்த்து உன் மனசு மாறிடாதுல்ல என்று மீண்டும் அவளை பார்த்து கேட்டான்.
கோபம் கொண்ட வேதா நீங்களே ஆசைப்பட்டா கூட இன்னும் ஒரு வாரம் கழிச்சு ஒரு நிமிஷம் கூட நான் இங்க இருக்க மாட்டேன் போதுமா இப்ப என் தங்கச்சி முன்னாடி கொஞ்சம் நல்லவிதமா நடந்துக்கோங்க அது போதும் என்று கூறியபடி அவளும் தங்கையை தேடிச் சென்றாள்.
பிடிக்காத திருமணத்தை கட்டாயமாக செய்து வைத்துவிட்டனர் குடும்பத்தினர்.
சரி பெரியவர்கள் அவர்களுக்குத்தான் புரியவில்லை இந்த பெண்ணாவது தனது மன நிலைமையை புரிந்து கொண்டு விலகிச் செல்வாள் என்று பார்த்தால் இப்பொழுது மேலும் ஒரு வார காலம் இங்கு இருக்கிறேன் என்று கெஞ்சுகிறாள்.
ஒரு வாரம் இங்கு தங்குவது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது ஒருவாரம் கழித்த பின் அவளின் பெற்றோர் தன்னுடைய பெற்றோர் எல்லோருமே கேள்வி கேட்பார்களே...ஒரு வாரம் அவளுடன் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது வேண்டாம் என்று கூறினால் எப்படி என்று.
அப்பொழுது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே பதில் சொல்ல வேண்டி வருமே...என்ன செய்வது...சிறுபெண் தன்னிடம் இவ்வளவு தன்மையாக உதவி கேட்கிறாள் அவளின் கோரிக்கையை எப்படி நிராகரிப்பது என்று பலவாறாக யோசிக்கத் தொடங்கி இருந்தான்.
சற்று முன்பு அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவன் பக்கத்து ஆட்கள் வரும்பொழுது இவள் நல்ல விதமாக நடந்து கொண்டிருக்கிறாள் அதேபோல் இப்போது அவளின் பக்கத்தில் இருந்தும் ஒரு ஆள் வந்திருக்கிறார்.
பிரதியுபகாரமாக அவளும் அவனிடம் அதே கோரிக்கையை வைக்கிறாள்…
இப்பொழுது முடியாது என்று மறுத்தால் பாவம் சிறு பெண்கள் இருவரின் இதயமும் நொடியில் உடையும் அந்தப் பாவம் தனக்கு எதற்கு…
அந்தக் குட்டிப் பெண் இந்துவின் சந்தோஷத்திற்காக என்ன பிரச்சினை வந்தாலும் ஒரு வாரம் கழித்து அதை எதிர்கொள்ளலாம் இப்போதைக்கு வேதா தனக்கு செய்த உதவிக்குக் கைமாறாக தானும் அவளின் தங்கை சந்தோஷமாக இருக்க உதவலாம் என்று பலவாறாக யோசித்தவன் பாதியில் விட்ட வேலையை லேப்டாப்பை ஓபன் செய்து மீண்டும் தொடர ஆரம்பித்தான்.
தொடரும்...