கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி‌ எண்ணெய் 19 1

Akhilanda bharati

Moderator
Staff member
19. ஏர்போர்ட்


"நேரா உக்காரு சிந்து! வைதேகியைப் பாரு.. எவ்வளவு சமந்தா அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தா.."

சின்ட்ரெல்லாவின் தலைமுடியில் ராஜி ஃப்ரெஞ்ச் ப்ளாயிட் போட, அவள் செய்வது ஒவ்வொன்றையும் அருகிலிருந்து ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வைதேகி. சிந்து சட்டென்று தலைமுடியை அவள் பிடியிலிருந்து இழுத்து,

"போங்க நீங்க ஒன்னும் எனக்கு தலை பின்னி விட வேண்டாம். போனி டெயில் போட்டுக்கறேன்" என்று எழுந்திருக்க முயன்றாள்.

"அட! சிந்து பாப்பா.. இப்ப என்ன? உனக்கு நிறைய வேலை இருக்கு.. அதனால நீ எழுந்துக்க ட்ரை பண்ற.. எனக்கு உன்னோட தலை முடியை பின்னி விடனும்னு ஆசையா இருக்குல்ல.. உட்காரு" என்று தன் நிலையிலிருந்து இறங்கி வந்தாள் ராஜி.

ஜெயந்தி, ஒரு வேலை விஷயமாக வெளியில் சென்று வருகிறேன், வந்தவுடன் வெளியே ஷாப்பிங் செல்லலாம், குழந்தைகளைக் கிளப்பி விடு என்று சொல்லிப் போயிருக்க, அதைத் தான் செய்து கொண்டிருந்தாள் ராஜி. எல்லாரையும் போல வைதேகியை அவளுக்கும் மிகவும் பிடித்து விட்டது.

சிந்துவுக்கு இந்த சில நாட்களில் வைதேகி மேல் அவ்வளவு பொறாமை. 'எல்லாரும் அவளையே குட் கேர்ள்னு சொல்றங்க, இவ்வளவு நாள் என்னை தான் நல்ல பொண்ணுன்னு சொன்னாங்க.. இப்ப தல பின்ன விட மாட்டேங்குறேன்னு என் மேல கம்ப்ளைன்ட். அவளுக்கு இதுவரைக்கும் யாரும் தலை பின்னி விட்டிருக்க மாட்டாங்க, முடியும் குட்டியா இருக்கு, அதனால ஆடாம அசையாம உக்காந்திருக்கா.. நான் அப்படியா? என்னோட நீளமான முடியை பார்த்துட்டு, நான் பின்னி விடுறேன், நான் பின்னி விடுறேன்னு இந்த ஆன்ட்டீஸ், பாட்டீஸ் எல்லாரும் அவ்வளவு போட்டி போடுறாங்க.. இப்ப வந்து ராஜி ஆன்ட்டி திட்டுறாங்க' என்ற எண்ணம் ஓட, உர்ரென்று அமர்ந்திருந்தாள்.

ராஜிக்கு அவளுடைய எண்ண ஓட்டம் புரிந்தது போல, "இங்க பாத்தியா வைதேகி! சின்ட்ரெல்லா அக்காவுக்கு எவ்வளவு நீளமான முடி!" என்க,

"எனக்கும் இதே மாதிரி டை பண்ண சொல்லி தரீங்களா ஆன்ட்டி?" என்றாள் வைதேகி.

"எங்க மம்மியை பாரு ப்ரோ! அவங்களுக்கு கேர்ள் பேபி தான் பிடிக்கும். இரண்டு கேர்ள் பேபி கிடைச்சவுடனே என்னைக் கழட்டி விட்டுட்டாங்க பாத்தியா.. ஆனா கேட்டா நான் தான் அவங்கள கண்டுக்க மாட்டேங்கிறேன், மொபைல் பார்க்கிறேன்னு சொல்லுவாங்க" அந்த பெரிய ஹாலின் ஒரு மூலையில் இருந்த டேபிள் டென்னிஸ் போர்டில் சாய்பிரகாஷ், ப்ருத்வி இரண்டு பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

"டேய் விடுடா விடுடா இதெல்லாம் நார்மல் டா! கேர்ள் பேபி வெச்சிருக்கவங்க எல்லாம் பசங்க வேணும்னு சொல்றதும், பசங்க வெச்சிருக்கவங்க கேர்ள் பேபி தான் பெஸ்ட்னு சொல்றதும் இந்த அம்மாஸ்க்கே உரிய பழக்கம் டா. எங்க அம்மா கொஞ்சம் பரவாயில்லை. எங்களைப் பத்தி யார்கிட்டயும் குறை சொல்ல மாட்டாங்க" என்றான் சாய்பிரகாஷ்.

"நாம வேணா அம்மாக்களை எக்சேஞ்ச் பண்ணிக்கலாமா?" என்று பிரித்வி கேட்க,

"சேச்சே! சான்சே இல்ல! எங்க அம்மாவை யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்" என்றான் சாய்பிரகாஷ்.

தங்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று உணர்ந்து கொண்ட ராஜி ஒரு கண்ணையும் ஒரு காதையும் இவர்கள் புறமாக வைத்திருந்தாள். இருந்தாலும் தெளிவாக எதுவும் கேட்கவில்லை. சின்ட்ரெல்லாவின் நீளமான முடியை பாதிக்கு மேல் பின்னி முடித்த நேரம் அவளது அலைபேசி அடித்தது. அதை எடுத்துக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்த ப்ருத்வி, "அம்மா! அப்பா காலிங்!" என்றான்.

அவ்வளவு நேரம் பிரயத்தனப்பட்டு பின்னிய ஜடையை அப்படியே விட்டுவிட்டு பதறிப்போய் எழுந்தாள் ராஜி. "மச்சான்! சொல்லுங்க மச்சான்! இல்லங்க மச்சான்.. சும்மா தாங்க மச்சான் இருந்தேன்" என்று ஏகப்பட்ட மச்சான்களை ராஜி கூற,

மீண்டும் விளையாட்டைத் தொடங்கிய பிருத்வி, "பார்த்தியா எங்க அம்மாவோட ரெஸ்பான்ஸை? அப்பா காலிங்னு வந்த உடனேயே அட்டென்ஷன்ல தான் நிப்பாங்க. அவ்வளவு பயம் எங்க அப்பா மேல" என்றான்.

"அவ்வளவு டெரர் பீசா டா உங்க அப்பா? என்று சாய் கேட்டான். அதற்குள் வீட்டிற்குள் வந்த ஜெயந்தி, "டேய் கேர்ள்ஸ் ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க
நீங்க ரெண்டு பேரும் இன்னும் குளிக்கலையா?" என்று கேட்க,

"பாத்தியா ப்ரோ? இவங்களும் பார்ஷியாலிட்டி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க" என்றான் பிருத்வி.

"ஏன் டி? சாயங்காலம் எல்லாரையும் இங்கேயா வரச்சொல்லி இருக்க? பேசாம நாம போற மாலுக்கே வர சொல்லலாம்.. அங்கே வச்சு பேசலாம். இல்ல, அந்த தடிமாடு தண்ட குப்பை அஸ்வின் இருக்கானே.. அவன் வீட்டுக்கே போகலாம்" என்றாள் ராஜி. கணவனிடம் பேசி முடித்த கையோடு ஜெயந்தி பக்கம் திரும்பியிருந்தாள்.

"பார்த்தியா ப்ரோ? அப்படியே அப்புராணி அவதாரத்தை மாத்திட்டாங்க எங்க அம்மா" இன்னும் சாய்பிரகாஷும் ப்ருத்வியும் விளையாட்டை நிறுத்தவில்லை. "எங்க அம்மாவைக் தான் ஓவரா மிரட்டுறாங்க டா" என்றான் சாய்.

"எல்லாரும் இங்கேயே வந்து பழகிட்டாங்க.. அஸ்வினி ஃபர்ஸ்ட் டைமா வர்றா. ஏதாவது ஸ்பெஷலா ஸ்வீட் செஞ்சு வச்சுட்டு நாம வெளியே கிளம்புவோமா?" என்று ஜெயந்தி கேட்க, இடுப்பில் கையை வைத்து அவளை முறைத்தாள் ராஜி.

"இது என்ன சத்திரமா சாவடியா இல்ல போறவங்க வரவங்க எல்லாரும் வந்து கூத்தடிக்கிறதுக்கு?" என்க, கையைக் கட்டிக்கொண்டு அவளை புன்னகையுடன் பார்த்தாள் ஜெயந்தி.

"நீயும் இப்ப இங்கே வந்து டேரா போட்ருக்கியேன்னு சொல்ல வரியா?" என்றாள் ராஜி கோபம் தணியாதவளாக.

"நான் எங்கே அப்படி சொன்னேன்? உனக்கு என் மேல எம்புட்டு பாசம்? எனக்காக மத்தவங்களைக் கோபிச்சுக்கிறியேன்னு சொல்ல வந்தேன். எனக்கு இந்த லைஃப் ஸ்டைல் பழகிடுச்சு ராஜி! இதோ பாரு நீ கூட ப்ரீத்தியைக் கரிச்சுக் கொட்டிட்டு இப்ப வைதேகி கூட அட்டாச் ஆகலையா? அதே மாதிரி தான். ஐ லைக் பீயிங் வித் பீப்பிள்" என்று கூறியபடி கிச்சனுக்குச் சென்றாள் ஜெயந்தி.

"இப்ப தானே வந்துருக்கே.. இப்படி நடுவுல கேப் விடாமல் வேலை பார்த்துகிட்டே இருக்காதே. அப்பப்ப ரிலாக்ஸ் பண்ணு" என்று கூறியபடி ராஜியும் அவளைத் தொடர, "ப்ரீத்தியும் அஸ்வினும் கட்டாயம் வந்துடுவாங்க. ஹுசைனுக்கு ஏதோ ஃபார்மாலிட்டீஸ் இருக்கும்னு நினைக்கிறேன்" என்றாள் ஜெயந்தி.

ப்ரீத்தியும் ஹுசைனும் ஒரு முழு நாளும் மனம் திறந்து பேசி கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். திருமணப் பதிவினை லண்டன் சென்று தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக நண்பர்களை சந்தித்து ஒரு சிறிய விருந்து கொடுத்துவிட்டுச் செல்லலாம் என்பது அவர்களின் திட்டம். அதை ப்ரீத்தி ஜெயந்தியிடம் சொல்லியிருந்தாள்.

"இவ்வளவு சீக்கிரம் முடிவு செய்றதைப் பத்தி ரொம்ப ஃபாஸ்டா டிசைட் பண்றோமோன்னு குழப்பமா இருக்கு ஜெயந்தி"

"சில சமயம் அப்படியே கிடப்பில் கிடக்கிற பிளான் எல்லாம் டைம் வந்ததுன்னா கடகடன்னு முடிஞ்சுடும்.. வைதேகி உன்னை லைட்டா மிஸ் பண்ற மாதிரித் தெரியுது.. ரெண்டு பேரும் இங்கே வாங்க.. அவளையும் சேர்த்து உட்கார வச்சு பேசுங்க.. ஏதாவது ஒரு ரிசார்ட்க்கு டூ டேஸ் போங்க. இனிமேல் யூ ஆர் எ ஃபேமிலி. அதை எஸ்டாப்ளிஷ் பண்ணு" யோசனை சொன்னாள் ஜெயந்தி.

ப்ரீத்தி சென்னைக்குக் கிளம்புகிறேன் என்றதும், அஸ்வின், "நானும் வரேன் என் பொண்டாட்டிக்கு எதோ ஃபுட் பாய்சனிங்காம்.. வழக்கமா வியாதி எல்லாம் அவளைக் கண்டா தெறிச்சு ஓடிடும், நான் ஓடுற மாதிரியே.. இந்த தடவை ஏதோ மிஸ்ஹிட் ஆயிப்போச்சு.. எனக்கும் சேர்த்து டிக்கெட் போடு.. ரெண்டு நாளா உன் ஃபியான்சிக்கு ட்ரான்ஸ்லேட் பண்ணி எண்டர்டெயினும் பண்ணினதுக்கு இந்த ஒரு தடவை டிக்கெட் செலவாவது எனக்கு மிச்சமாகட்டும். அடுத்த தடவை நீங்க இந்தியாவுக்கு வரும்போது உங்க செலவு பூரா நானே பாத்துக்குவேன்.. ஏன்னா ஐயா ரேஞ்சே வேற லெவலுக்கு போகப் போகுது" என்றான்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் யுனிவர்சல் நிறுவனத்தின் சார்பில் ஃபாரின் கார்ஸ் ஷோரூம் திறப்பதற்கான வேலைகள் துவங்குவதாக இருந்தது. கிருஷ்ணகுமாரின் நேரடி உதவியாளருடன் அஸ்வின் அடிக்கடி தொடர்பில் இருந்தான். திறப்பு விழா எப்போது வைக்கலாம் எங்கே இடம் பார்க்கலாம் என்ற பேச்சுக்கள் இப்போது தொடங்கியிருந்தன. இதெல்லாம் நடந்தால் யுனிவர்சல் ஸ்டார் உதய்குமாரை வேறு அடிக்கடி சந்திக்க வேண்டியதாக இருக்கும். அஸ்வினின் கால்கள் தரையிலேயே இல்லை.

"மாதாஜி! இன்னைக்கு ஈவினிங் ஃப்ளைட்ல டிக்கெட் போட்டாச்சு மாதாஜி! நைட் வந்துடுவேன். நானும் ப்ரீத்தியும் முதல்ல வர்றோம். ஹுசைன் அங்க இங்கே பர்மிஷன் அது இதுன்னு அலையுறார். அவரை ஏதோ அடுத்த பிளைட்ல கவர்மெண்ட்டே பத்திரமா அனுப்புதாம்.. அதனால அவரு ஒரு ஒன் ஹவர் லேட்டா வருவார்.. இன்னொண்ணு சொல்லலையே.. ப்ரீத்தி தான் எனக்கு டிக்கெட் போட்டா. ஏர் இந்தியாவுக்கு லாபம். எனக்கும் மிச்சம். நேரா உங்க வீட்டுக்கு வந்து ப்ரீத்தியை விட்டுட்டு அப்புறமா எங்க வீட்டுக்கு போறேன்" என்றான் எக்ஸ்பிரஸ் வேகத்தில்.

"சரி வந்துரு.. நாங்க ஷாப்பிங் போறோம் சப்போஸ் லேட் ஆனா கீ வாட்ச்மேன் கிட்ட இருக்கும். வாங்கித் திறந்து நீயே பத்திரமா ப்ரீத்தியை உள்ள விட்டுடு" என்று ஜெயந்தி கூற,

படக்கென்று அவளிடம் இருந்து ஃபோனைப் பறித்த ராஜி, "என்ன எப்ப பாத்தாலும் ஜெயந்தி வீட்டுக்குத் தான் எல்லாரும் வரணுமா.. இன்னைக்கு ஃபார் அ சேஞ்ச் உங்க வீட்ல மீட் பண்ணலாம். இப்ப ஃபீனிக்ஸ் மாலுக்குப் போறோம். அது உங்க வீட்ல இருந்து பக்கம் தானே.. மூவி முடிச்சுட்டு நேரா அங்கே வரோம்.. நீ ப்ரீத்தியைக் கூட்டிட்டுப் போயிடு. இன்னைக்கு நைட் உங்க வீட்ல தான் டின்னர் முடிஞ்சா ஸ்டே கூட அங்கே தான்" என்று கூற,

ஞே என்று விழித்தான் அஸ்வின். "வேற வினையே வேண்டாம்.. ஏற்கனவே வேதாளம் முருங்கை மரத்துல இருக்கும். நீங்க வேற வரப்போறீங்களா, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என் பொண்டாட்டி மனசுல பாலிடாயிலைக் கலந்துடாதீங்க.. அவளுக்கே உடம்பு சரியில்ல பாவம், ஹலோ ஹலோ.." என்க, இணைப்பு எப்போதோ துண்டிக்கப்பட்டிருந்தது.

அஸ்வினும் ப்ரீத்தியும் ஏர்போர்ட்டுக்கு வந்த சமயம் எதிர்பாராத ஒரு நபரை சந்தித்தனர். "நீங்க தியாகராஜன் சாரோட ஃபேமிலி பிரண்ட் தானே? நானு அவரோட அசிஸ்டன்ட்டோட ஃப்ரண்ட், நான் ஒரு ரிப்போர்ட்டர்" என்றான் ஒரு பரபரப்பான இளைஞன்.

"பிஹைன்ட் டோர்ஸ் ரிப்போர்ட்டரா?" என்று சிறு அதிர்ச்சியுடன் பிரீத்தி கேட்க, "உன்னைத் தாண்டா தேடிட்டு இருக்கேன்" என்று முழுக்கைச் சட்டையை மேலே ஏற்றினான் அஸ்வின்.

"கிஃப்ட் எதுவும் கொடுக்கப் போறீங்களா சார்?" என்று அந்த ரிப்போர்ட்டர் பையன் கேட்க,

"உன்னை இங்கேயே கொன்னு பொதைச்சு இந்த ஏர்போர்ட் வாசல்லையே சிலை வைக்கிறேன் டா.. குடும்பத்துல கும்மி அடிச்சு விட்டுட்டியேடா" என்று அவனை அடிக்கப் போக,

"சார் சார் வெயிட் வெயிட்!" என்றான் அவன்.

அந்த நிலையிலும் அஸ்வின், பிரீத்தி இரண்டு பேரையும் குறுகுறுவென்று பார்க்க, "என் பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் எனக்காக வீட்டில் வெயிட் பண்றாங்க.. இவங்க ஹஸ்பண்ட் பின்னாடியே வராரு அடுத்த பிளைட்ல.. அவர் கையில மட்டும் சிக்கு நீங்க கைமா தாண்டா.. பாகிஸ்தான் செங்கல் சூளைல வச்சு எரிச்சுருவாரு.. இல்லை தீவிரவாதிங்க உன்னை நரபலிக்கு யூஸ் பண்ணிக்குவாங்க.. மொத்தத்துல நீ காலி" என்றான் அஸ்வின்.

"சார் சார்! என்ன சார் புதுசா என்னல்லாமோ சொல்றீங்க? பாகிஸ்தான்ல செங்கல்சூளை இருக்கு? அதுவும் தீவிரவாதிங்க அதுக்கு ஓனரா?" என்று அந்த சந்தர்ப்பத்திலும் செய்தி சேகரிக்க ஆவல் கொண்டவன், தன் மொபைலில் பாகிஸ்தான், செங்கல் சூளை என்று தேட, அதற்குள் அஸ்வின் புக் செய்திருந்த கால் டாக்ஸி வந்தது.

அஸ்வின் முன்புறமும் ப்ரீத்தி பின்புறமும் ஏறிக்கொள்ள, "சரி சார் போற வழியில என்னைக் கொஞ்சம் இறக்கிவிட்டுடுங்க சார்! கோவிச்சுக்காதீங்க சார்!" என்று அவர்கள் அனுமதியே கேட்காமல், "அக்கா தள்ளி உட்காருங்க.." என்றபடி பின் சீட்டில் ஏறி ப்ரீத்தியுடன் அமர்ந்து கொண்டான்.

ப்ரீத்திக்கு ஒன்றும் புரியவில்லை. அவ்வளவு வேகமாக நடந்து முடிந்திருந்தது. "என்னைப் பாத்தா எப்படித் தெரியுது உனக்கு? எனக்குக் கூட பயப்பட வேண்டாம் தீவிரவாதிக்குக் கூட பயப்பட மாட்டேங்குற நீ?" என்று அஸ்வின் திரும்பி அவனைக் கொஞ்சம் பலமாகவே பிடித்துக் கொண்டான்.

"இருக்கட்டும். போற வழியில இறக்கிவிட்டுரலாம்" என்றாள் பிரீத்தி. "நீ எங்கப்பா போகணும்?" என்று அவள் கேட்க, "நீங்க எங்க போறீங்களோ அங்க தான் நானும் போகணும்.. அப்புறம் நீங்க இந்தியா சாரு பாகிஸ்தான். இந்த சானியா மிர்சா, ஷோயப் மாலிக் மாதிரி தானே அக்கா? உங்க காதல் கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று அவளிடம் பிட்டுப் போட்டான் ரித்தீஷ். 'இவனுங்க திருந்த மாட்டாங்க டா' இன்று முணுமுணுத்தபடியே அஸ்வின் திரும்பி அமர, மழையின் அளவு அதிகரித்தது. நீந்தி சென்றது டாக்ஸி.

'வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகி உள்ளது. சென்னைக்கு மழை அபாய எச்சரிக்கை' இன்று எஃப்எம்மில் கூறிக் கொண்டிருந்தார்கள்.‌ சென்னையில் புயல் வருமா என்று ஆலோசனை அங்கு துவங்க, எல்லா குட்டிப் புயல்களும் அஸ்வினின் வீட்டை நோக்கி நகர்ந்தன. அங்கேயே மையம் கொண்டிருந்த நிரந்தர புயல்சின்னம் இவர்களை சந்திக்கத் தயாராக இருந்தது.
 
Top