அத்தியாயம் 11
அரண்மனை நந்தவனத்தில் நிலவினை ரசித்துக்கொண்டிருந்தான் குலசேகரன். நந்தவனம் முழுக்க நடந்து நடந்து வானத்தை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தான்.
“வணக்கம் அரசே. தங்களின் இந்த புன்சிரிப்புக்கு காரணம் என்னவோ?” தர்மசீலன் கேட்டுகொண்டே அருகில் வந்தான்.
“வாருங்கள் சேனாதிபதி தர்மசீலரே! உங்களை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தேன்.”
“அரசருக்கு என்னை பற்றி என்ன சிந்தனையோ?”
“நண்பா எனக்கு ஒரு சந்தேகம். இந்த பெண்களின் அழகிற்கு என்ன காரணம்?”
“அரசியாரிடம் கேட்டால் தெரியும். நானே ஒரு கட்டப் பிரம்மச்சாரி அரசே.”
“இன்று அரசியார் மிக அழகாக தெரிந்தார் தர்மசீலா. என்னை அவள் கண்களால் கட்டிபோட்டுவிட்டாள்.” குலசேகரன் நிலவை ரசித்து கைகளை நீட்டி கூறினான்.
“காதல் என்பது ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தலில் தான் உள்ளது அரசே. தாங்கள் இங்கு நிலவைப் பார்த்து கொஞ்சும் வரிகளை அங்கு அரசியாரிடம் சொன்னால் விரைவில் உங்களுக்கு ஒரு குட்டி இளவரசர் கிடைக்க வாய்ப்புண்டு என்று நம்புகிறேன்.” தர்மசீலன் கூற,
“பிரம்மச்சாரி! பிரம்மச்சாரி! என்று சொல்லி அனைத்து காதல் வித்தையையும் தெரிந்து வைத்துள்ளீர் சேனாதிபதியாரே. விரைவில் உங்களுக்கும் கால்கட்டு கட்ட வேண்டும்.” சொல்லி கொண்டே வந்தாள் பூங்குழலி.
“ஆம் குழலி. இவனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்தால் தான் நான் படும்பாட்டை இவனும் படுவான். எப்போதும் கேலியே செய்கிறான்.” குலசேகரனும் கூட்டு சேர்ந்தான்.
“அரசியாரே! என்னை சிறையில் அடைக்க உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என்று புரியவில்லை. இப்பொழுது நான் சுதந்திரப் பறவை!”
“அப்படி தான் உங்கள் அரசரும் சொல்லிக்கொண்டே இருந்தார். கடைசியில் என் மனசிறையில் அடைபட்டு ஆயுள் கைதி ஆகிவிட்டார்.”
“அருகாமையில் இருக்கும் பல சிற்றரசுகளை வென்ற எங்கள் மன்னருக்கு உங்கள் இதயத்தை வெல்வதா கடினம். எங்கே உங்கள் ஆசையை கூறுங்கள். இப்போதே அரசர் நிறைவேற்றுவார்.” என்று தர்மசீலன் கூற,
“தர்மசீலா உனக்கு நான் என்ன செய்தேன். ஏன் இப்படி மாட்டிவிட்டாய்? வேண்டாம் குழலி! நான் பாவம் இல்லையா?”
“அரசே நீங்களா இப்படி பயம் கொள்வது?”
“அந்த சிவபெருமானே சக்தியிடம் இறங்கி போய் பாதி இடம் உடலில் கொடுத்தார். நானெல்லாம் எம்மாத்திரம் தர்மசீலா?” என்று சொல்ல நந்தவனமே சிரிப்பினில் ஆழ்ந்தது.
அங்கிருந்து வேகமாக வந்த காவலாளி, “வணக்கம் அரசே! கீழைராசபுரத்தில் இருந்து ஒற்றன் செய்தியோடு வந்துள்ளான்.”
“வரச்சொல்.” என்று ஆணையிட பூங்குழலி அவ்விடம் விட்டு அரண்மனைக்குள் சென்றாள்.
“வணக்கம் அரசே. கீழைராசபுர அரசர் விக்கிரமசேனன் நம் நாட்டின் மீது படையெடுக்க முடிவு செய்துள்ளார். அதனால் அருகில் இருக்கும் சில தேசங்களையும் உதவிக்கு அழைத்துள்ளார். மேலும் நம் நாட்டில் அவரின் ஒற்றர்கள் அதிகமாக உள்ளதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளது அரசே. இதோ இந்த ஓலையில் அவர்கள் பற்றிய குறிப்பும் உள்ளது.” என நீட்டினான்.
“தர்மசீலா!” என அந்த ஓலையை அவனிடம் நீட்ட, வாங்கியவன் தன் மடியில் வைத்துக்கொண்டான்.
“அரசே போருக்கு நமது படையை தயார் செய்கிறேன். கீழைராசபுரமும் இனி நமது கட்டுப்பாட்டில் இருக்கும்.” என்றான் தர்மசீலன்.
“ஒற்றனே அவர்களின் படை நமது நாட்டில் வந்தடைய எத்தனை நாட்கள் ஆகும்?’’
“நான்கு நாட்கள் தேவைப்படும் அரசே! மற்ற நாட்டு படைகளுடன் சேர்ந்து வந்தால் ஆறு நாட்கள் தேவைப்படும்.”
“அரசே நாளை காலை நமது படைகளை தயார் செய்வோம். நாளை மறுநாள் பட்டிதுறை நோக்கி நகர்வோம். மல்லீஸ்வரர் மலை மீது இருந்து நமது தாக்குதலை நடத்த ஒரு படையையும் தயார் செய்வோம்.”
“இல்லை தர்மசீலா. விக்கிரமசேனனுக்கு அவ்வளவு வியூகம் தேவையில்லை. அவனுக்கு நமது காலாட்படையே போதும். குதிரைகளையும் யானைகளையும் ஓய்வெடுக்க சொல்லுங்கள்”
“குருகுலத்தில் பயின்ற நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக அவனது நாட்டை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல் இருந்தேன் தர்மசீலா. விதி வசம் அவனே நமக்கு கப்பம் கட்டி என்னை அரசனாக ஏற்றுக் கொள்ள விருப்பப்படும் போது நான் ஏன் கவலைப்பட வேண்டும்.” என்றான் குலசேகரன்.
அங்கிருந்த அனைவரையும் கிளம்ப சொன்னான் தர்மசீலன்.
“உங்கள் எண்ணம் தவறானது அரசே. அவன் படைகளின் வீரர்கள் எண்ணிக்கை அதிகம். மேலும் அண்டை நாடான சீரங்கபாளையம், தேவனூத்துபுரம் படைகளையும் கட்டாயம் இணைத்திருப்பான் அரசே.”
“தர்மசீலா நீ ஒன்றை மறந்துவிட்டாய். சரியான தலைவன் இல்லாத படைகள் சரித்திரத்தின் கல்வெட்டில் குறிப்பிடப்படுவதில்லை. அவனின் செயல்பாடும் அப்படி தான். அவன் மரணம் என் கையில் எனும்போது வேறென்ன செய்ய முடியும்?”
“உத்தரவு அரசே. நாளை இதுபற்றி ஆலோசனை செய்வோம். இப்போது உறங்க செல்லுங்கள்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் தர்மசீலன்.
மறுநாள் காலையில்,
“அரசே! விக்கிரமசேனன் அனுப்பிய ஒற்றர்கள் இவர்களே. மேலும் சில நாட்டு ஒற்றர்களை நாம் தற்போது சிறைபிடித்து உள்ளோம். இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அரசே?”
“அமைச்சரே எப்போதும் நாம் நமது ஒற்றர்களுக்கு என்ன தண்டனை கொடுப்போம்?”
“தேனீக்களை கொண்டு கொத்தவிடுவோம்! கருந்தேள் விசத்தை உடலில் இறக்கி கொல்வோம்! கட்டுவிரியனின் விசத்தை நரம்புகளில் செலுத்தி மெல்ல மெல்ல உயிரை எடுப்போம்!”
“அரசே! எங்களை மன்னித்து விடுங்கள். தெரியாமல் வந்துவிட்டோம். ஒருமுறை உயிர் பிச்சை கொடுங்கள். இனி ரத்தினபுரி எல்லைக்குள் வரவே மாட்டோம்.”
“ரத்தினபுரி அரசன் மக்களிடம் அன்பாக நடந்து கொள்வதால் எதிரிகளிடமும் அப்படியே நடந்து கொள்வேன் என்று நினைத்தீர்களோ?” என கர்ஜனை சிரிப்போடு அவர்களிடம் நெருங்கினான் வாளை உருவியபடி.
“அரசே என்னிடம் ஒரு மிகச்சிறந்த யோசனை ஒன்று உள்ளது. இந்த ஒற்றர்களை அனுப்பிய விக்கிரமனுக்கே இவர்களை பலியாக்கினால் என்ன?” தர்மசீலன் கூறினான்.
“புரியவில்லை தர்மசீலா!”
“போருக்கு தயாராவோம் அரசே. மொத்த படைகளையும் நாளை பட்டித்துறையில் தயார் நிலையில் நிற்க செய்வோம்”
“நண்பா இந்தப் போருக்கு வியூகம் நீ அமைக்கிறாயா? அல்லது நான் அமைக்கட்டுமா?” குலசேகரன் கேட்க,
“அரசே தாங்கள் போர்க் கலையில் வல்லவர். சாணக்கியம் நிறைந்தவர். உங்கள் எண்ணம் போல விக்கிரமசேனனை வீழ்த்துவது சுலபமான காரியம் எனில் அதற்கு நானே வியூகம் அமைக்கிறேன்.” என்றான்.
படைகள் அனைத்தும் போர்க்களம் நோக்கி நகர, பூங்குழலி வெற்றி திலகமிட்டு தனது கணவன் குலசேகரனை அனுப்பி வைத்தாள்.
விக்கிரமசேனன் படைகள் போர்க்களம் நோக்கி வர அங்கே ஒற்றர்களை வரிசையாக கயிறை கழுத்தில் கட்டி நிற்க வைத்து இருந்தான்.
விக்கிரமசேனனை கண்ட ஒற்றர்கள், “அரசே எங்களைக் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்.” என கூச்சலிட காற்றை கிழித்து வேகமாக வந்த அம்பு ஒவ்வொருவரின் கழுத்திலும் சரியாக பாய்ந்து குருதியை மண்ணில் விழச் செய்தது.
“விக்கிரமா! ஏதோ நான்கு படைகளைத் திரட்டிக் கொண்டு வந்தால் ரத்தினபுரியை கைப்பற்ற முடியும் என்று நினைத்தாயோ?” சிம்மக் குரலில் கர்ஜித்தான் தர்மசீலன்.
“எங்கே உனது அரசன்? நான் வரும் செய்தி கேட்டு ஒளிந்துகொண்டானா?”
“ஒழுங்காக வாள் பிடிக்கத் தெரியாத உனக்கு எங்கள் படையின் சாதாரண வீரனாக இருந்தாலே போதும். உன்னுடன் போர் புரிய எங்கள் அரசர் தேவையா?”
“போதும் உங்கள் வாய்ச்சொல். ஓடி ஒளிந்து கொண்ட உங்கள் அரசனை வரச்சொல். அவன் தலையைக் கொய்து எனது சமஸ்தானத்தின் முன்பு தோரணமாக தொங்க விட வேண்டும் என்று வந்துள்ளேன்” என்றதும்,
அகண்ட மார்பும் ஆறடி உயரமும் கொண்ட குலசேகரன் தனது குதிரையில் பாய்ந்து கொண்டு படையின் முன்பு வந்து நின்றான்.
“நண்பா விக்கிரமா! நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே உன்னை விட்டு வைத்தேன். நாம் இருவர் மட்டும் நேருக்கு நேர் மோதலாமா அல்லது மொத்த படைகளையும் மோத விடலாமா?” என்றான் குலசேகரன்.
“அரசே சிறு நரிக்கு சிங்கம் எதற்கு? இவன் ஓநாய் போன்றவன். தனித்துப் போரிட தெரியாதவன். இவன் தலையைக் கொய்து இவன் ஊருக்கே ஊர்வலமாக அனுப்பி வைப்போம்.” தர்மசீலன் கத்தினான்.
விக்கிமரசேனனுக்கு தனித்துப் போரிட்டால் தோல்வி நிச்சயம் என்று தெரியும். அதனால் அவன் ஒப்புக் கொள்ளாமல் மொத்த படைகளையும் மோத விட எண்ணி உத்தரவிட்டான்.
தர்மசீலனும் குலசேகரனும் மாறி மாறி எதிரியின் தடைகளை வெட்டி வீழ்த்தினார்கள். தர்மசீலன் வாள் வீச்சு மின்னலைப் போல அதிவேகமாக இருந்தது.
எதிரிகள் சீறிப் பாய்ந்து வர வந்த வேகத்தில் அனைவரின் தலைகளையும் வெட்டி வீசினான்.
விக்கிரமசேனனின் நட்பு அரசர்கள் ஒவ்வொருவராக சிறைபட தர்மசீலன் அவனை நோக்கி முன்னேறிச் சென்றான்.
இருவரும் வாள் வீச விக்கிரமசேனனின் மார்பிலும் காலிலும் முதுகிலும் தனது வாளால் கையொப்பமிட்டான் தர்மசீலன். இறுதியில் அவன் கழுத்தில் வாள் வைத்து அவனை மண்டியிட செய்தான்.
அவனின் மொத்த படைகளையும் துவம்சம் செய்துவிட்டு குலசேகரன் வந்து நிற்க, “தர்மசீலா இங்குள்ள ஒவ்வொரு அரசர்களின் தலையை கொய்து அவரின் ராஜ்ஜியத்திற்கு அனுப்பிவை. இனிமேல் அந்த ராஜ்ஜியம் நமக்கு கட்டுப்பட்டது என்ற செய்தியையும் முழங்க செய்!” என்று உத்தரவிட்டான்.
குலசேகரன் உத்தரவுபடி அனைத்தும் நடக்க மொத்த படைகளும் ரத்தினபுரி நோக்கி மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் வந்தது.
மங்கள ஆராத்தியுடன் வரவேற்கப்பட்ட குலசேகரன் பூங்குழலியிடம், “இன்று உனது தமையனின் வாள் வீச்சை பார்க்க வேண்டுமே! அடடா பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டும். குதிரையின் வேகத்தை விட அவன் வேகம் அதிகமாக இருந்தது. உண்மையில் இந்த திலகம் அவனுக்கானது.”
பூங்குழலி அவனுக்கும் திலகமிட, ஏற்றுக்கொண்டு மண்டியிட்டு “இந்த அடிமைக்கும் திலகமிட்ட உங்களுக்கு நன்றி அரசியாரே.” என்றான்.
“உங்களை அடிமை என்று யார் சொன்னது சேனாதிபதியாரே?”
“அரசியாரே! அனாதையான என்னை வளர்த்து போர்பயிற்சி கொடுத்து, சேனாதிபதியாக்கிய உங்களுக்கு நான் எப்போதும் அடிமை தானே” என்றதும்,
“இந்த ராஜ்யத்தில் என்னை நேருக்கு நேர் பெயர் சொல்லி அழைக்கும் தகுதியும் தைரியமும் வீரமும் உன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு தர்மசீலா. நீ எங்களது அன்பிற்கு மட்டுமே அடிமை. நீயும் என் குடும்பத்தில் ஒருவன் தான் நண்பா.” என தழுவிக்கொண்டான்.
“தமயனே இப்போது என்னை நீங்கள் கோபப்படுத்தியதற்கு உங்களுக்கு தண்டனை உண்டு. அரசே இவரை விரைவில் சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய தயாராகுங்கள்.” என்றாள் பூங்குழலி.
“தர்மசீலா எனக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துவிட்டது. இதை மீறினால் என் வாழ்க்கை அதளபாதாளத்தில் விழுந்து விடும். அதனால் விரைவில் உனக்கு திருமணம். உனது தங்கை பார்க்கும் பெண்ணே இனி உனக்கு மனைவி.” என்றான் குலசேகரன்.
“கவலைப்படாதே தர்மசீலா! திருமணத்திற்கு முன் நகர்வலம் செல்வோம் நேரம் கழிய. திருமணத்திற்கு பிறகு விட்டால் போதுமென்று நகர்வலம் செல்வோம். என்ன புரிகிறதா?” அமைச்சர் சொல்லவும்,
“என்ன அமைச்சரே உங்கள் வீட்டில் அல்லிராணி ராஜ்ஜியம்தானோ?” குலசேகரன் கேட்க,
“அனைவரின் வீட்டிலும் அது தானே அரசே. உலக வழக்கமும் அதுதானே.” என்றதும் அந்த
இடமே சிரிப்பினில் மூழ்கியது.
அடுத்த ஒரு மாதத்திற்குள் தர்மசீலனுக்கும் திருமணம் முடிந்தது. கீழைராசபுரத்து பெண்ணை திருமணம் செய்து அந்த பகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பையும் பெற்றான் தர்மசீலன்.
அதே நேரத்தில்...
“என்ன தந்தையே ஆழ்ந்த சிந்தனையில் உள்ளீர்கள்?” என்றாள் தெய்வானை.
“ஆம் தெய்வானை. ரத்தினபுரி அரசன் குலசேகரன் கீழைராசபுரத்தையும் அதை சுற்றியுள்ள சீரங்கபாளையம், தேவனூத்துபுரத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான்.” என்றார் ருத்ரன்.
“அதனால் என்ன தந்தையே?”
“ இனி அவனது எல்லையை விரிவுபடுத்த நமது ராஜ்யத்தையும் தாக்கக் கூடும் என்பதை பற்றிதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”
“இதுவரை தோல்வியே சந்திக்காத நாம் எதற்கு அஞ்ச வேண்டும் தந்தையே?”
“இதற்குப் பெயர் அச்சமில்லை தெய்வானை. முன்கூட்டியே யூகித்து வைத்தல். நமது மண் இதுவரை பல போர்களை சந்தித்துள்ளது. ஆனால் இந்த முறை குலசேகரன் வந்தால் மிகப்பெரிய உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்படும். அதை சரி செய்வதற்குள் வேறு ஒருவர் போர் தொடுத்தால் நமது தோல்வி உறுதி ஆகும்.”
“இதற்கு வேறுவழி உள்ளதா தந்தையே? “
“உண்டு தெய்வானை அதைப்பற்றி நான் அரசரிடம் பேசி முடிவெடுக்க வேண்டும். மற்ற அமைச்சர்களும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அதை செயல்படுத்த முடியும். நாளைய பொழுது அரசரிடம் பேசுகிறேன்.” என்றார்.
மறுநாள் காலையில் தனியாக நரேந்திரனை சந்தித்தார் ருத்ரன்.
“வாருங்கள் தளபதியாரே! அவசரமாக பார்க்க வேண்டும் என்று சொன்னீர்களாமே! என்ன விசயம்?” என்று கேட்டான் நரேந்திரன்.
“அரசே விக்கிரமசேனன் இறந்த செய்தி கேள்விப்பட்டிருப்பீர்கள். இரத்தினபுரி அரசன் கட்டுப்பாட்டில் நம்மை சுற்றியுள்ள பெரும்பான்மை பகுதிகள் உள்ளது. அவன் ராஜ்ஜியத்தின் கிழக்கு மேற்கு தெற்கு பகுதிகளில் உள்ள இடங்களை கைப்பற்றிவிட்டான்.”
“ஆம் அறிந்த விசயம் தான் தளபதியாரே!”
“அதில் ஒரு சிக்கல் உள்ளது அரசே!”
“என்ன சிக்கல்?”
“அவன் வடக்கு நோக்கி போர் செய்ய ஆரம்பித்தால் அவன் முதல் போர் நம்மோடு தான்.”
“நான்கு மலைகள் சுற்றி இருக்கும் நம்மை அவன் தொந்தரவு செய்ய வாய்ப்பு இல்லை தளபதியாரே! அதைவிட முக்கியம் நம்மை பற்றி அறிந்திருப்பான் அவன்.”
“அப்படி சொல்ல முடியாது அரசே. நம்மைவிட கிட்டத்தட்ட 50 மடங்கு படைபலம் அவனிடம் உள்ளது. அதைவிட முக்கியமான விஷயம் போர்க்கலையில் அவனுடைய அனுபவமும் வீரமும் போர் நுணுக்கங்களும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கூட எளிதில் வீழ்த்த கூடியதாக உள்ளது.”
“மேலும் அவன் சேனாதிபதி தர்மசீலன். மாபெரும் வீரன். அவன் வாள் சுழற்றுவதை நானே பார்த்திருக்கிறேன். அவன் நமக்கு பெரிய சவால் தான் அரசே. சிறந்த நிர்வாக திறமையும் கொண்டவன்.” என்றார்.
“நீங்களே ஆச்சரியம் கொள்ளும் அளவிற்கு அவன் பெரிய வீரனோ?”அடுத்து நாம் செய்ய வேண்டிய விசயம் என்ன தளபதியாரே?”
“அரசே நமது படை பலத்தை கூட்ட வேண்டும். உங்களுடைய சாஸ்திர அறிவும் சமயோசித புத்தியும் போர் வியூகமும் சிறந்ததாக இருந்தாலும் ஒரு அரசன் படைகளுக்கு முன் நின்று வழிநடத்தி செல்வது அவசியம். நீங்கள் அதற்கு தயாராக வேண்டும். போர் பயிற்சியில் நீங்கள் தேர்ச்சி பெறுவது அவசியம்.”
“அப்படியே ஆகட்டும் தளபதியாரே! அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். நம் நாட்டு இளம் வயதினரை விரைவாக போருக்கு தயாராகும்படி பயிற்சி கொடுங்கள். இதுவரை எந்த மன்னனும் வந்து ஆட்சியை பிடிக்காமல் வாழ்ந்த என் மண்ணுக்கு என்னால் அவப்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது.” என்றான் ஆவேசமாக.
“அது மட்டும் போதாது அரசே.”
“வேறென்ன வேண்டும் தளபதியாரே!” என்றதும்,
மெல்ல தயங்கியபடியே, “நம் நாட்டில் பெண்களுக்கும் போர் பயிற்சி அளிக்க வேண்டும் அரசே. ஒருவேளை ஆண்கள் இறந்தால் பெண்கள் போரிட்டு இந்த நாட்டை காப்பாற்றுவார்கள்.” என்றார் ருத்ரன்.
“என்னது பெண்களுக்குப் போர் பயிற்சியா? இது எப்படி சாத்தியமாகும். மேலும் இது விந்தையான செயலாக இருக்கும் தளபதியாரே?”
“ஏன் பெண்களுக்கு தைரியம் இல்லையா? அல்லது அவர்களுக்கு திறமை இல்லையா?” என்ற கேள்வியுடன் உள்ளே வந்தாள் தெய்வானை.
“தெய்வானை நீ இங்கு என்ன செய்கிறாய்? முதலில் இங்கிருந்து கிளம்பு. நாங்கள் தற்போது பேசிவது ராஜ ரகசியம். அனுமதியின்றி நீ இங்கு வந்ததற்கு உன்னை சிறையில் அடைக்க நேரிடும்.” என்றார் ருத்ரன்.
“மன்னிக்க வேண்டும் தந்தையே. தண்டனை ஏற்க நான் தயார். அதற்கு முன்பு என்னை போலவே இங்கு அனுமதியின்றி நுழைந்தவருக்கும் தண்டனை தருவது அவசியம் தானே.” என்றாள் தெய்வானை.
“ஆம் தெய்வானை. இங்கு பந்த பாசமோ,பதவியோ முக்கியம் இல்ல. அரசின் சட்டங்களே முக்கியம்.” என்றான் நரேந்திரன்.
“அப்படியானால் அந்த தூணின் பின்னால் நிற்பவருக்கும் அதே தண்டனையை நீங்கள் தருவீர்கள் தானே?” என்றதும் ஒளிந்திருக்கும் ஒற்றன் ஓட முயற்சித்தான்.
கணப்பொழுதில் பழத்தின் மீது குத்தப்பட்டு இருந்த கத்தியை எடுத்து அவனை நோக்கி வீசினாள் தெய்வானை. அது அவன் காலில் குத்த நிலை தடுமாறி கீழே விழுந்தவன் தன் கையில் வைத்திருந்த விஷத்தை உண்பதற்குள் அவனை சிறைபிடித்தான் ருத்ரன்.
“யார் நீ?”
“என்பெயர் கடம்பன். இந்த அரண்மனை பணியாள் நான்.”
“உண்மையை சொல். இல்லையென்றால் அணுஅணுவாய் உன் உயிர் பிரியும்.” என்ற மிரட்டலில் அவன் அஞ்சவில்லை.
மெல்ல மெல்ல துன்புறுத்தி கேட்கும் போது தான் ரத்தினபுரியை சேர்ந்தவன் என்ற ஒற்றை பதில் மட்டும் வந்தது. வேறு எதுவும் அவனிடமிருந்து கிடைக்கவில்லை.
தன் தந்தையின் உறைவாள் எடுத்து ஒரே வீச்சில் அவன் தலை வேறு உடல் வேறாக பிரித்தாள் தெய்வானை.
அதிர்ந்துபோன நரேந்திரனும், ருத்ரனும் அவளை ஒரு நிமிடம் வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள்.
“அரசர் முன்பு வாளை வீசியது மாபெரும் குற்றம் தெய்வானை. ஏன் இப்படி செய்தாய்?” பதறி போய் ருத்ரன் கேட்க,
“என் நாட்டை உளவு பார்த்து செல்லும் ஒற்றனை மன்னித்து விருந்து கொடுக்க சொல்கிறீர்களா தந்தையே?” கையில் ரத்தம் சொட்டும் வாளுடன் நெஞ்சை நிமிர்த்தி கேட்டாள்.
“தளபதியாரே! நம் நாட்டில் இருக்கும் பெண்களுக்கு போர் பயிற்சி கொடுங்கள். அவர்களுக்குள்ளும் வீரமும் பற்றும் ஒளிந்துள்ளது. மன்னர் முன் வாளை உயர்த்திய உனக்கு விரைவில் தண்டனை உண்டு.” என்றவன் அவளை பார்த்த பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது.