அத்தியாயம் 15
இரண்டு நாட்டின் படைகளும் எதிரெதிரே நின்றது. பெரும் திரளாக தேனீயின் கூட்டம் போல மொத்தமாக நின்ற படைகளை அந்த சிறு கூட்டம் எதிர்த்து நிற்பதை கண்ட குலசேகரன் சத்தமாக சிரித்தான்
“நரேந்திரா உன் நாட்டை என் ராஜ்ஜியத்தோடு இணைத்து கொண்டு எனக்கு கீழே நீ ஆட்சி செய். நீயும் உன் நாட்டு மக்களும் உயிரோடாவது இருப்பீர்கள்.” என்ற குலசேகரனுக்கு
“குலசேகரா விடாரபுரத்தை இதுவரை யாரும் வென்றதும் இல்லை. வெல்ல போவதும் இல்லை. முடிந்தால் அப்படியே சென்று விடு. நீ தோற்ற கதை வரலாற்றில் பதிவாகாமல் இருக்கும்.” என்றான் நரேந்திரன்.
“நரேந்திரா இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் உன் மீது போர் தொடுக்கிறேன் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் இருக்கிறாயே. மலையில் இருக்கும் தெய்வங்களும் உங்கள் மகாகாளியும் இப்போது மந்திரகட்டில் சக்தி இழந்து இருக்கிறார்கள்.”
“தளபதியாரே இந்த ரகசியம் எப்படி அவனால் கண்டுபிடிக்க முடிந்தது?” நரேந்திரன் கேட்க,
அதிர்ச்சியுடன் “தெரியவில்லை அரசே! இனி இறைவன் சித்தம். நமது பலம் இனி நமது மனோபலம் மட்டுமே. தொடர்ந்து போராடுவோம்.” என்றார் ருத்ரன்.
வாளை உருவியபடி நரேந்திரன் கையை உயர்த்தி தாக்க உத்தரவிட்டு குதிரையில் குலசேகரனை நோக்கி வேகமாக முன்னேறினான்.
இருவரின் படைகளும் மாறி மாறி தாக்குதல் நடத்த மலையின் மீதிருந்து மொத்தமாக அம்புகள் குலசேகரன் படையின் மீது தாக்க ஆரம்பித்தன.
குலசேகரனின் படைகளில் வேகமாக வீரர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. மலையின் மீது ஏறி அதிக பழக்கம் இல்லாததாலும் வீரர்கள் பதுங்கியிருக்கும் இடம் தெரியாததாலும் ரத்தினபுரி வீரர்களுக்கு சிரமமாக இருந்தது.
ருத்ரன் ஆக்ரோஷமாக தர்மசீலனை தாக்கினார். வயதாகி இருந்தாலும் அவரின் வாள்வீச்சுக்கு தர்மசீலனால் ஈடுகொடுக்க முடியவில்லை.
“குலசேகரா நீ செய்த பாவத்திற்கு தண்டனை மரணம் மட்டுமே. உன்னை கொன்று அந்த ரத்தத்தால் கட்டை அவிழ்ப்பேன்.” என்று வாளை அவன்மீது வீச ஆரம்பித்தான்.
“பரவாயில்லையே நரேந்திரா. இத்தனை ஆண்டுகளில் சிறப்பாக வாள்வீச கற்றுக்கொண்டாய். ஆனால் என் பலத்தின் மீதும் திறமை மீதும் குறைத்து எடை போட்டு விட்டாய் என்று தோன்றுகிறது. இப்போது கூட சரணடைந்து விடு. நாட்டை உனக்கே தருகிறேன்.’’
“என் உயிர் இருக்கும் வரை என் நாட்டின் ஒருபிடி மண்ணைக் கூட உன்னால் கொண்டு போக முடியாது குலசேகரா.” கடுமையாக தாக்கினான்.
ரத்தகாடாய் மாறிபோன அந்த போர்க்களம் நோக்கி அம்பு வீசிய வீரர்களை ரத்தினபுரி ஆட்கள் கண்டுபிடிக்க அங்கேயே சண்டைகளும் நடந்தன.
பெரும்படைகளை சந்திக்க திணறினாலும் விடாரபுர வீரர்கள் அவர்களை கொன்று மலையில் குவிக்க ஆரம்பித்தார்கள். மலையோடு மலையாக வாழ்ந்த அந்த வீரர்களின் திறமையை குலசேகரன் சற்று குறைத்து தான் எடைபோட்டிருந்தான்.
பல வீரர்கள் மலையிலிருந்து கீழே வந்து அமைச்சரிடம் சொல்ல முப்பது மடங்கு வீரர்கள் மீண்டும் அனுப்பினார்.
ஒருகட்டத்தில் விடாரபுரத்து வீரர்கள் எண்ணிக்கை மலையின் மீது குறைய தொடங்கியது. அதே வேளையில் ரத்தினபுரியின் குருதி மலையின் பாறைகளில் ஓடியது.
விடாரபுர அரண்மனையின் பின் பகுதி மலையில் வீரர்கள் இறந்து ரத்தினபுரி வீரர்கள் உள்ளே நுழைய வாளுடன் நின்ற பெண்களைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
“பெண்களே வாள் எதற்கு உங்கள் கையில். வந்துவிடுங்கள் எங்களோடு.” என்று சத்தமாக அடுத்த கணமே அவன் கழுத்தில் அம்பு பாய்ந்தது.
தெய்வானையின் தனுசில் இருந்து பாய்ந்தன அம்புகள். குதிரையின் மீது ஏறி படைகளுக்குள் புகுந்த அவள் வாள் காற்றில் உக்கிர தாண்டவம் ஆடியது.
பலரின் தலைகள் உருண்டோடின. பெண்கள் படையை எள்ளி நகைத்த பெரும்கூட்டம் அவளை சமாளிக்க முடியாமல் பின்னோக்கி நகர்ந்தது. ஆனால் அவர்களின் துர்திர்ஷ்டம் அவர்கள் படையை பெண்கள் சுற்றி வளைத்தனர்
அவர்களின் ஆயுதத்தை பிடிங்கி வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீராங்கனை கொண்டு தலையை வெட்டி வீழ்த்தினாள் தெய்வானை. அத்தனை தலைகளையும் போர்க்களம் நோக்கி அனுப்பினாள்.
அதேநேரத்தில் தர்மசீலனுக்கு உடலில் அங்கங்கே கீறல்கள் விழுந்தன. ருத்ரனின் கோர பசிக்கு பல வீரர்கள் பலியாகினர்கள்.
குலசேகரனோ நரேந்திரனை கொல்வதே முக்கியம் என்று தொடர்ந்து சண்டையிட்டான். படைகளின் பலமும் விடாரபுரத்தில் குறைய ஆரம்பித்தது. ஒவ்வொரு வீரனும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்களை கொல்லும் நிலையில் இருந்தார்கள்.
படைபலம் குறைய குறைய ருத்ரனின் மனோபலமும் குறைய ஆரம்பித்தது. அதனை சரியாக அறிந்துகொண்ட தர்மசீலன் தன் முழு பலத்தையும் கொண்டு ருத்ரனை தாக்க ஆரம்பித்தான். முதல் முறையாக ருத்ரன் உடலிருந்து ரத்தம் போர்க்களத்தில் விழுந்தது. படைகள் அவரை சூழ சமாளிக்க முடியாமல் திணறினார்.
தர்மசீலன் மூர்க்கத்தனமாக அவரை தாக்கி மண்ணில் விழச்செய்தார். அவர் இறக்கப்போகும் செய்தி கோட்டை வாசலில் என்ற தெய்வானைக்கு சென்றது.
மறுகணமே குதிரையில் ஏறி போர்க்களம் நோக்கி வேகமாக வந்தாள். தான் கர்ப்பவதி என்பதையும் மறந்து.
நரேந்திரனின் உடலிலும் அங்கங்கே ரத்த காயங்களும் ஏற்பட்டது. இதுவரை போரில் தோற்காத குலசேகரன் தன் வீரத்தை அங்கேயும் நிலைநிறுத்தி கொண்டிருந்தான்.
சமாளிக்க முடியாமல் திணறிய ருத்ரனின் தலையை வெட்டி எறிந்தான் தர்மசீலன். அசைக்க முடியாத நம்பிக்கையாய் இருந்தவர் தலை மண்ணில் உருண்டது. நரேந்திரனும் குலசேகரனை தாக்குபிடிக்க முடியாமல் குதிரையிலிருந்து கீழே விழந்தான்.
அவனோ தட்டு தடுமாறி நிற்கும் வேளையில் அவனை நோக்கி வாள் எறிய கழுத்தருகில் வந்த வாள் வேறுபக்கம் தூக்கி வீசப்பட்டது.
தூரத்தில் புரவியில் புயலென வந்த தெய்வானை வில்லிலிருந்து வந்த அம்புகள் வாளை தடுத்தது. அவளை நோக்கி வந்த வீரர்களை வெட்டி வீழ்த்தி நரேந்திரனுக்கு அரணாக வந்து நின்றாள்.
“போர்க்களத்தில் பெண்ணா?” என்று ஆச்சரியமாக பார்த்தான் குலசேகரன்.
“பெண்ணே இங்கிருந்து சென்றுவிடு. நிறைமாதம் வேறு. உன்னை மன்னித்து கொல்லாமல் விடுகிறேன். செல்.” என்றான் தர்மசீலன்.
“உனக்கு அரை நாழிகை நேரம் தருகிறேன். இங்கிருந்து வந்த வழியே சென்று விடு. இல்லையேல் பெண் கையால் இறந்த மன்னன் என்ற பெயரோடு உனது முண்டம் உன் நாட்டுக்குச் செல்லும்.” என்று கர்ஜித்தாள்.
“பெண்ணோடு சண்டை போட்டான் என்ற அவப்பெயர் எனக்கு வேண்டாம் என்று பார்க்கிறேன். வீரர்களே இவளின் ஆயுதத்தை பிடிங்கி சிறைபிடியுங்கள்.” என உத்தரவிட்டான் குலசேகரன்.
வீரர்கள் அவளை நெருங்க ஏற்கனவே இரத்தம் தோய்ந்த தனது வாளை உருவி சுழற்ற ஆரம்பித்தாள். தன்னையும் தன் கணவனையும் நெருங்கி வருபவர்களின் கழுத்தையே அவள் குறியாகக் கொண்டிருந்தாள்.
ஒரு நிறைமாத கர்ப்பிணி இவ்வளவு வேகமாக வாள் சுழற்ற முடியுமா என்று அனைவரும் ஆச்சரியமடைந்தார்கள். அவளை நோக்கிச் சென்ற ஒவ்வொரு வீரரும் அவள் வாளுக்கு இரையாகி போனார்கள். அவளைச் சுற்றி ரத்த ஆறே ஓட ஆரம்பித்தது.
நரேந்திரனும் சுற்றிவந்த வீரர்களை கொல்ல ஆரம்பித்தான். குதிரையிலிருந்து வேகமாக இறங்கிய தர்மசீலனும் குலசேகரனும் இருவரையும் தாக்க ஆரம்பித்தனர்.
நரேந்திரனை நோக்கி வந்த குலசேகரனை நோக்கி தெய்வானை வாள் சுழற்ற ஆரம்பித்தாள். தர்மசீலனோ நரேந்திரனை தாக்கினான்.
ஏற்கனவே சோர்ந்து போன நரேந்திரன் அவன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உடலில் பல இடத்தில் காயங்களை ஏற்றான். ஒரு கட்டத்தில் அவனது கைகள் வெட்டப்பட்டு கழுத்தில் கத்தியை சொருகினான் தர்மசீலன்.
தன் கணவன் இறக்கப் போவதை அறிந்த தெய்வானை கோபத்தில் கத்தினாள். கண்கள் சிவந்தன. அவள் சுவாசத்தில் வந்த அனல் காற்றில் எரிமலையே சாம்பலாகும். அவ்வளவு உக்கிரம். அவளின் ஓலம் கோட்டை வாசல் வரை கேட்டது. தர்மசீலன் மீது அவள் எறிந்த கத்தி மார்பின் வலதுபுறம் பாய்ந்தது.
தன் ஆசை காதலனின் மரணத்தை கண்டவள் நடுங்கி போனாள். தன் வயிற்றில் வளரும் அவன் குழந்தையை காணாமல் இறக்கிறான் என்ற துக்கம் அவளை இரக்கமற்ற அரக்கியாக மாற்றியது. அந்நொடியில் அவளுக்குள் ஓடியது எல்லாம் எதிரியின் கூட்டத்தில் ஒற்றை உயிர் கூட திரும்பி செல்லக்கூடாது என்பது தான்.
இரு கைகளிலும் வாள் ஏந்தி குலசேகரனை தாக்கினாள். சிறிதும் எதிர்பாராத அவனின் உடலில் பல வெட்டுகள் விழந்தது. தர்மசீலனும் அவளை தாக்க இருவரையும் சரமாரியாக தாக்கினாள். இதற்கு இடையில் குறுக்கே வந்த வீரர்களின் தலை அந்தரத்தில் பறந்தது.
அவள் சத்தம் கேட்டு புறப்பட்டு வந்த பெண்கள் படை ரத்தினபுரி வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அவர்களின் வாள் வீச்சும் தாக்குதலும் இவர்களை நிலைகுலைய செய்தது.
இனி இழப்பதற்கு எதுவும் என்று எண்ணியவளின் மனதில் இருக்கும் ஆத்திரம் அவளின் வேகத்தில் தெரிந்தது. குலசேகரனும் தர்மசீலனும் மிரண்டு போனார்கள்.
போர்க்கலையில் சிறந்து விளங்கிய இரண்டு மாவீரர்களையும் திணறடிக்க கூடிய சக்தியாக விளங்கினாள் தெய்வானை.
இதுவரை எதிரியின் வாள் கூட படாமல் சண்டையிட்ட வீரர்களின் ரத்தத்தை மண்ணில் சிந்த வைத்தாள். ஒரு பெண்ணால் இந்த அளவிற்கு சண்டை போட முடியுமா? என்று நினைக்க வைத்தாள்.
அவளின் வேகத்தை விட அவனுக்கு ஆச்சர்யம் கொடுத்தது அவளின் வாள் பிடிக்கும் விதமும். சுழற்றும் விதமும் தான். தோள்கள் எப்புறமும் சாயாமல் நேராக வைத்து சண்டையிடும் யுக்தி மாபெரும் வீரர்களுக்கே கிட்டாத ஒன்று.
அந்தப் போர்க்களத்தில் இரத்த ஆறு ஓட விட்டு இதுவரை தோல்வியே சந்திக்காத வீரர்களை சிதறடித்தவளுக்கு விதி விளையாடியது.
கட்டுட்ட கடவுளும் வாய் பேசாமல் நிற்க, இவன் செய்த அனைத்து பூஜைகளுக்கும் பலனாக வெற்றி பெற விதி சாதகமாக மாறியது.
நிறைமாத கர்ப்பிணியாய் வேகத்தை காட்டிய தெய்வானையின் அடி வயிற்றில் குழந்தை எட்டி உதைத்தது. தான் இந்த உலகைப் போர்க்களத்தில் நான் காண வேண்டும் என்று நினைத்த குழந்தை பிரசவவலியை அவளுக்கு கொடுத்தது.
அந்த வலியில் பலம் இழந்து வாள் தூக்க முடியாமல் நிற்க குலசேகரன் அவளை நெருங்கினான். “பெண்ணே உன் வாள் வீச்சை கண்டு பிரம்மித்து போனேன். ஆனால் நீ இறக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.” என்றான்.
“அரசே! இந்த பெண்ணை விட்டுவிடலாம்.” தர்மசீலன் கூற,
“உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா தர்மசீலா? இவளின் வேகத்தை பார்த்தாயா? இவளை விட சொல்கிறாயே? மூடனே!”
“மன்னியுங்கள் அரசே. பிரசவ வலியில் துடிக்கும் ஒரு பெண்ணை கொல்வது பாவம் அரசே!”
“இது யுத்தகளம் தர்மசீலா! இங்கு வந்தால் போவது உயிர்மட்டும். இவளை விட்டு வைத்தால் நாளை நாட்டை பிடிக்க வருவாள்.”
“அரசே பெண்ணை இதுவரை யாரும் போர்க்களத்தில் கொன்றது இல்லை. யுத்தகளத்தில் வந்தார்கள் என்ற ஒரு காரணத்திற்காக அவர்களை கொல்லலாம். ஆனால் அவள் இப்போது இயற்கையோடு போராடும் நேரம் அரசே! தற்போது அறத்தை காக்க வேண்டும்.” தர்மசீலன் கூறினான்.
“அது அவளின் விதி. இதுவரையில் போர்க்களத்தில் ரத்தத்தை பார்க்காத எனது உடலில் ரணங்களை ஏற்படுத்திவிட்ட பெண்ணுக்காகவா இரக்கம் கொள்கிறாய் தர்மசீலா.” குலசேகரன் கேட்க,
“அரசே நீங்கள் கூறுவது யுத்த தர்மம். நான் கூறுவது பிரபஞ்சத்தின் தர்மம். அவளின் வாள்வீச்சை முறியடித்து மண்டியிட செய்திருந்தால் அவள் தலையை வெட்டி விடாரபுரம் முழுவதும் வலம் வந்திருப்பேன். ஆனால் தற்போது அவள் பெண்ணாக பிரசவ வேதனையில் துடிக்கிறாள். அவளை கொல்வது அதர்மம் அரசே. அந்த பாவம் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் தீராது.”
“தர்மசீலா உலகத்தின் மிகப்பெரிய ஆயுதம் எது தெரியுமா? ஒருவனின் விந்துவில் வரும் உயிரணுக்கள் தான். அதன் மூலம் முன்னோர்களின் அறிவு வீரம் கோபம் பகை புண்ணியம் சாபம் பாவம் என எல்லாமே கடத்தப்படுகிறது.”
“நாட்டை இழந்த எத்தனையோ அரசர்கள் தலைமறைவாகி பல ஆண்டுகள் கழித்தோ அல்லது அவர்களின் மகன்களோ மீண்டும் தன் நாட்டை மீட்க வேறு ஒரு படையோடு வந்து வெற்றி பெற்ற வரலாற்றை நீ அறிவாய். இங்கு இவளின் வீரமும் வேகமும் பெண் சிசு வயிற்றில் பிறந்தாலும் நமக்கு பிரச்சினையே.” என்றான் குலசேகரன்.
“அரசே இவை அனைத்தையும் நானும் அறிவேன். அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் சொல்வதை போல அனைத்தும் சொன்ன தாங்கள் கர்ப்பிணியை கொன்றால் வரும் சாபத்தின் தன்மையையும் கட்டாயம் அறிவீர்கள். அந்த பாவத்தை நீக்க எந்த பரிகாரமும் கிடையாது அரசே. நாம் செய்யும் தவறுக்கு நமது தலைமுறைகள் தண்டனை அனுபவிக்கக்கூடாது.” என்று விடாப்பிடியாக நின்றான்.
“சேனாதிபதியாரே யுத்தகளத்தில் அரசனை தடுக்காதீர்கள். ஒரு அரசனுக்கு தெரியும் எது தர்மம் என்று.”
சட்டென்று அவரின் கால்களை இறுக்கி பிடித்தவன், “அரசே இந்த இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் இந்நேரம் எனது வாள் அவரின் தலையை சீவி இருக்கும். தங்களுக்கு எதிராக வாளை உயர்த்தும் தைரியம் எனக்கு இல்லை. வேண்டாம் அரசே. சிவத்தால் கூட இதனை மாற்ற இயலாது.” என்று கதறினான்.
கீழே பிரசவ வேதனையில் துடித்த தெய்வானையை அங்கிருந்த இரண்டு பெண்கள் தூக்கி வைத்துக் கொண்டு திரும்பினார்கள். குலசேகரன் கையிலிருந்து சிறிய அம்புகள் அவர்கள் இருவரையும் கொன்றது. ஆனால் அந்த குதிரை நேராக மகாகாளியின் கோயிலுக்குள் சென்றது.
கருவறைக்குள்ளே தவழந்து சென்றவள் வலியால் துடித்தாள். பிரசவ வலியில் கதறினாள். அவளின் அலறல் சத்தம் பலமாக கேட்டது. வலியில் துடித்த வீரமங்கையின் உதிரம் ஓட கோவிலுக்குள்ளேயே பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் அழுகை கோவில் கோபுரங்களில் வழியாக எதிரொலித்தது.
“தர்மசீலா நீ என் நண்பன் என்பதால் மன்னித்துவிடுகிறேன். உன் எண்ணப்படி அவள் பிரசவம் முடிந்தது. இனி யுத்த தர்மப்படி அவளின் மரணம் நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது.” என்று கோவிலுக்குள் செல்ல முயன்றான்.
“அரசே தெய்வசக்தியோடு விளையாடாதீர்கள். அவளை சிறைப்பிடித்து அடைத்துவிடலாம். தற்போது கொல்வது அறமாகாது அரசே. கோவிலுக்குள் ரத்தவெறியோடு செல்ல வேண்டாம் அரசே!”
“இது கோவில் அல்ல தர்மசீலா. இப்போது கடவுளின் கற்சிலைகள் வைக்கப்பட்ட ஒரு கட்டிடம். இந்த கோவிலின் சக்தி அனைத்தும் எனது யந்திரத்தால் கட்டப்பட்டுள்ளது. மறந்துவிட்டாயா?” என்று உள்ளே நுழைந்தான்.
பெற்ற குழந்தையை கையில் எடுக்க முடியாமல் அழுத குழந்தையை கண்ணீர் வடிய பார்த்து கதறினாள். உடலெங்கும் ரத்த கறைகளோடு பிஞ்சு குழந்தை அழுகையில் தாயாய் தோற்றுபோனாள்.
உள்ளே நுழைந்த குலசேகரனின் உடலிலிருந்து சிந்திய இரத்தத் துளிகள் கோவில் மண்ணில் சிந்தியதும் மந்திர கட்டுகளுக்கு சக்தி இல்லாமல் போனது. கோவிலுக்குள் இருந்த கெட்ட சக்திகள் செல்ல காவல் தெய்வங்கள் அவனை தூக்கி வெளியே வீசியது. கோவில் கதவுகளும் தானாக மூடியது.
அதில் கோவம் கொண்ட குலசேகரன், “வீரர்களே விடாரபுரத்தை மயான காடாக மாற்றுங்கள். பிணக் குவியல் மட்டுமே இந்த நாட்டில் இருக்க வேண்டும். சிறியவர்கள் பெரியவர்கள் பெண்கள் என யார் மீதும் ஈவு இரக்கம் காட்டாமல் வெட்டி சாயுங்கள். கோவிலுக்குள் இருக்கும் அவள் இறந்தாக வேண்டும். கோவில் கதவை உடையுங்கள்.” என கட்டளையிட்டான்.
உத்தரவுக்கிணங்க கோவில் கதவை உடைக்க முயன்ற வீரர்கள் தூக்கி வீசப்பட்டார்கள். இதை கண்ட குலசேகரனுக்கு புரிந்தது தன் உடலில் இருந்து சிந்திய ரத்தத்தால் கட்டுகள் உடைக்கப்பட்டது என்று.
“வீரர்களே மண் கொண்டு இந்த கோவிலை மூடி விடுங்கள். இங்கே கோவில் இருந்ததற்கான அடையாளமே தெரியக்கூடாது.” என்று உத்தரவிட பதறி போனான் தர்மசீலன்.
“அரசே கட்டுகள் உடைக்கப்பட்டுவிட்டது. கோவிலினை மூடி பாவத்தை சேர்க்காதீர்கள் அரசே!” என்று அவன் சொல்ல வீரர்கள் தன் கண்ணசைவில் செயல்பட வைத்தான்.
ஒற்றை நிமிடம் கண்களை மூடியவனாய் சிந்தித்தான். “அரசு கோவிலை மூடுவதற்கு முன் என்னை கொன்றுவிட்டு மூடுங்கள். எனது இறப்பிற்கு பின்பு தான் இந்த ராஜ்ஜியம் பிரச்சினையை சந்திக்க முடியும். அதுவரை காப்பது எனது கடமை. என்னை மன்னித்து விடுங்கள்.” என்று வாளை உயர்த்தி கோவில் வாயில் முன் நின்றான்.
“தர்மசீலா என் நாட்டை பாதுகாக்க யார் உயிரையும் தியாகம் செய்ய கவலைப்படமாட்டேன். வீரர்களே!” என்று குலசேகரன் சொன்னதும் தர்மசீலனை தாக்க ஓடினார்கள்.
“ஓம் வயநமசி. ஓம் கோரக்கரே போற்றி.” என்று தனது வாளை தன் படை வீரர்களை நோக்கி வீச ஆரம்பித்தான். தாக்க வந்த தனது வீரர்களை வெட்டி வீழ்த்திய சேனாதிபதியை கண்ட குலசேகரன் வாளை உயர்த்திகொண்டு சென்றான்.
“அரசே என்னைக் கொன்று உங்கள் கைகள் கலங்க படவேண்டாம். நான் ராஜ துரோகியாகவே இருந்துவிடுகிறேன். இந்தக் கோவில் உங்களால் இப்போது புதைக்கப்படுகிறது. மீண்டும் இக்கோவிலை வெளிக்கொணரும்வரை எனது ஆன்மா சாந்தியடையாது. உங்கள் வம்சத்தை காக்கும் வரை இங்கேயே இருப்பேன்.” என்று தானே தன் கழுத்தை அறுத்துக்கொண்டு மண்ணில் சாய்ந்தான் தர்மசீலன்.
அங்கிருந்த கற்களையும் மண்ணையும் கொண்டு கோவில் முழுவதும் மூடப்பட்டது. இரண்டு துண்டாகி போன தன் தந்தை. தன் கண்ணெதிரே கழுத்தில் கத்தி இறங்கி மடிந்த கணவன். பல வருடங்கள் கழித்து உதித்த உயிரை ஒன்பது மாதங்கள் சுமந்து பெற்ற குழந்தையை கையில் ஏந்த முடியாமல் கண்ணீர் சிந்திய தெய்வானையின் அலறல் சத்தத்தில் கோவில் மூடப்பட்டது.
“ஆசையாய் சுமந்த குழந்தையை கையில் எடுத்து கொஞ்சம் முடியவில்லை. தாய்மைக்கே உண்டான தாயமுதம் தராமல் பாரமாகிபோன மார்பகங்களும் அழுகின்றன. ரத்த பெருக்கெடுத்து எனது உயிரும் உடலை விட்டு நீங்கப்போகிறது. இத்தனைக்கும் காரணம் இரக்கமற்ற குலசேகரனே காரணம்.” என்று கத்தினாள் தெய்வானை.
“மகாகாளியே. குலசேகரனின் குடும்பத்தில் பெண் மகவு பிறக்க கூடாது. அவன் வம்சத்தில் பிறந்த முதல் குழந்தை பிறந்த அன்றே இறக்க வேண்டும். நான் இங்கு அழுவதுபோல அவர்களின் மனைவிகளும் வயிற்றில் அடித்துக்கொண்டு அழ வேண்டும். அந்த வம்சத்தின் கடைசி ஆணி வேரான உயிரும் இறந்த பின்னே ஆத்மா சாந்தி அடைய வேண்டும். பிறக்கும் ஒவ்வொரு ஆணின் உயிரும் பெரும் ரத்தம் சிந்தி இறக்க வேண்டும். இது பிள்ளையை கண் முன்னே காவு கொடுத்த துர்பாக்கியவதியின் சாபம். நாட்டு மக்களை காக்க முடியாமல் கோவிலோடு இறந்துபோகும் உயிருள்ள பிரேதத்தின் சாபம். கண்கள் கூட திறக்காமல் பசியால் அழுது இறக்கும் சிசுவின் சாபம்” என்று கூறினாள். மறுநிமிடமே அவளின் உடலில் இருந்து உயிர் பிரிந்து இறந்து போனாள்.
கோவிலும் முழுமையாக மூடப்பட்டு இருந்தது.
மகாகாளியின் மந்திரகட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டது. கருமேக கூட்டங்கள் மொத்தமாய் கூடி மின்னல்கள் நெருப்பை கக்கியது. அங்கிருந்த மொத்த வீரர்களும் இறந்து போனார்கள்.
கோபம் கொண்ட காளிதேவி, “குலசேகரா இன்னும் சில ஆண்டுகளில் நீ மரணிப்பாய். தெய்வானையின் சபதத்தை நிறைவேற்றுவேன். சாபத்தை நீக்க உதவும் ஒவ்வொரு உயிரும் ரத்தம் சிந்தி சாகும்” என்ற அசரீரியாக சொல்லிவிட்டு கோவிலோடு மறைந்து கொண்டாள்.
ஊருக்காக மறைத்து வைக்கப்பட்ட பெரியவர்களும் குழந்தைகளும் நாட்டில் அனைத்தையும் அழித்துவிட்டு வேறு பிரதேசத்தை நோக்கி விரைந்து சென்றார்கள்.
அடுத்த சில ஆண்டுகளில் குலசேகரன் மகள் கன்னிப் பெண்ணாகவே இறந்தாள். அதன்பின் தனது நாட்டை தனது மகனிடம் ஒப்படைத்து விட்டு சாபத்தை நீக்க பரதேசி போல சுற்றித் திரிந்தான். பல தேசங்கள் மலைகள் காடுகள் என தேடி அலைந்தான். பிறகு யாருக்கும் தெரியாமல் ரத்தம் கக்கி இறந்தான். இறக்கும் தருவாயில் அவன் கண்களுக்கு காளிதேவி உற்சாகமாய் காட்சி தர கிழக்கு பார்த்து கையெடுத்து கும்பிட்டு மண்ணில் சாய்ந்தான் குலசேகரன்.
பிணங்களின் குவியல்கள் மண்மூட, உறைந்து போன ரத்த வெள்ளங்கள் பாறைகளாவும் கற்களாகவும் மாறிப்போயின.
“மரண ஓலங்களும் தெய்வானையின் கதறலாலும் நிறைந்த இந்த மண்ணை மீண்டும் கைபற்ற வேண்டி நீ இன்று வந்திருக்கிறாய் என்பது தான் பிரபஞ்சத்தின் விளையாட்டு ஆதித்யா!” என்று தர்மசீலனின் ஆன்மா கூறியதும் மழை அங்கு மண்ணை நனைத்தது.
குலசேகரனின் ஆன்மாவும் தெய்வானையின் ஆன்மாவும் அந்த கொடிய நிகழ்வை எண்ணி கண்ணீர் சிந்தின.
தொடரும்...

Last edited: