அத்தியாயம் 17
தஞ்சையில் உள்ள தொல்லியல் துறை மற்றும் தமிழ் ஆராய்ச்சியாளராக இருந்த தொல்காப்பியனிடம் சென்றார்கள் மூவரும்.
“சார் வணக்கம். நான் டாக்டர் ராகேஷ்!” என்றதும் முன்பே தனது மகன் கூறியதை நினைவுபடுத்தி அன்போடு அரவணைத்தார்.
ஆதி தனது வாழ்க்கையில் நடந்த விசயத்தையும் தற்போது எதற்காக வந்துள்ளோம் என்பதையும் விவரித்தான்.
“அந்த ஓலைச்சுவடி எங்கே?” என அவர் கேட்டதும் கையில் கொடுத்தார்கள். வாங்கிய உடனே அதை தூக்கி எறிந்தார். அதை பார்த்தவுடன் மூவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆதிக்கோ கோபம் தலைக்கேறியது. எனினும் அதை வெளிக்காட்டாமல் இருந்தான்.
தன் டிரைவரை அழைத்து சில மூலிகை இலைகளையும் பாலும் வாங்கி வர சொன்னார். மேலும் சில கொடிகளின் பெயரை சொல்லி அது இருக்கும் இடத்தையும் சொல்லி எடுத்து வரச்சொன்னார்.
“தம்பி இது மந்திரகட்டுல இருக்கிற ஓலைச்சுவடி. நீங்க சொல்றத வச்சு பார்த்தா உங்க ஒருத்தரால மட்டும் தான் இத தொடமுடியும். மத்தவங்க தொட்டா கட்டு சுடுது.”
“சார் மந்திரகட்டுன்னு சொல்றீங்க. சுடுதுன்னு சொல்றீங்க, இதெல்லாம்?” என இழுக்க,
“தம்பி தொல்லியல் துறைன்னா சும்மா மண்ண தோண்டி பழைய பொருட்கள எடுக்கறதும், கல்வெட்ட கண்டுபுடிச்சு படிக்கறதும்னு நினைச்சீங்களா? எத்தனையோ மர்மங்கள் நிறைந்த தேடல் இதுல உண்டு. கிடைத்த கல்வெட்டு ஓலைச்சுவடி வச்சு பல அதிசயங்களை தேடும் கூட்டம் அதிகம்.”
“செங்கிஸ்கான் கல்லறையை இன்னைக்கும் இந்த உலகம் தேடிகிட்டு தான் இருக்குது. அதே மாதிரி எத்தனை தமிழ் மன்னர்களுடைய சமாதியை தேடுதுன்னு எங்களுக்கு தான் தெரியும். தொலைந்துபோன அரண்மனைகளையும் பொக்கிஷங்களையும் எத்தனையோ கும்பல் தேடி அலையுது. உங்கள மாதிரி.” என்றார் தொல்காப்பியன்.
“சார் நாங்க ஒன்னும் பொக்கிஷத்த தேடல. என் சாபத்த நீக்க தான் ஓடுறேன்.” என்றான் ஆதி.
“தம்பி எல்லாம் ஒரு வகையில் தேடல்தான். மற்றவர்கள் கைக்கு கிடைக்கக்கூடாது என்று பல மந்திரகட்டுகளும் பொய்யான தகவல்களையும் எழுதி வைத்துவிட்டு தான் செல்வார்கள். பரிபாஷை என்பது ஒரு வார்த்தைக்குள் ஒரு வார்த்தையை மறைத்து வைப்பது. அதுபோல பல விஷயங்களையும் செய்து வைப்பார்கள். அதேபோல போலியான பல ஓலைச்சுவடிகளையும் தடயங்களையும் எழுதி வைத்துவிட்டு செல்வார்கள். அதை நம்பி சென்று இறந்தவர்கள் பலர்.” என்றார்.
“சார். அப்போ இது உண்மையான ஓலைச்சுவடியை பொய்யான ஓலைச் சுவடியான்னு எப்படி கண்டுபிடிக்கறது?” ராகேஷ் கேட்க,
“அத அந்த ஓலைச் சுவடியில் இருக்க குறிப்பு, படத்துல சொல்லப்பட்டிருக்கிற இடத்தையோ அல்லது பொருளையோ தேடிப் போயி பார்த்தா தான் அதுல உண்மை இருக்கா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியும். அதுல உயிருக்கே கூட ஆபத்து வரலாம். முதல்ல இதுல இருக்க மந்திரகட்டை உடைக்கனும்.” என்றார்.
சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் டிரைவர் அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு வந்தார். தன் வீட்டில் ஆராய்ச்சிக்கு என்றே தனியாக அமைத்திருந்த அறைக்குள் மூவரையும் அழைத்து சென்றார்.
செம்பு யந்திரத்தின் நடுவில் அதை வைத்து பாலை ஊற்றினார். கொண்டு வந்த மூலிகைகள் மற்றும் கொடிகளின் பட்டையை உறித்து அந்த பாலில் போட்டார். சில மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். மெல்ல மெல்ல அந்த கொடிகள் ஓலைச்சுவடியை சுற்ற ஆரம்பித்தன.
ஆதி கண் கொட்டாமல் பார்த்துகொண்டே இருந்தான். பாலின் நிறம் முழுவதும் கருப்பாக மாற தொடங்கியது. ஆதியின் சுண்டு விரலில் ஊசியில் குத்தி ரத்த துளிகளை பாலில் விட ஓலைச்சுவடி சட்டென்று நின்றது.
“தம்பி உங்க கையால இந்த கட்ட எடுங்க. எடுத்து அந்த கொடியை அவுத்துட்டு சுற்றி இருக்கற நூலையும் கழட்டுடங்க!” என்றார். ஓலைச்சுவடி எடுத்தவுடன் பாலின் நிறம் மீண்டும் வெண்மையாக மாறியது.
“தன்னோட வம்சத்துல இருக்கவங்க மட்டுமே இதை தெரிஞ்சுக்கணும்னு எழுதி வெச்சிட்டு தான் போயிருக்காரு. அதனால் அவர் பண்ணி வச்சிட்டு போய் இருக்கிற மந்திரக் கட்டு ரொம்ப சக்தி வாய்ந்தது. அதுக்கு சாட்சி இந்த பால் தான்.” என்றார் தொல்காப்பியன்.
ஆதி கட்டை பிரித்து முதல் ஓலையை திறந்தான். அதில் “சாபம் நசி நசி! சாபம் நசி நசி! சாபம் நசி நசி!!!” என்று எழுதி இருந்தது.
“தம்பி உங்க கையிலேயே ஓலை இருக்கட்டும். ஒவ்வொன்னா நீங்களே திருப்புங்க. நான் படிச்சு இருக்கிறத சொல்றேன். வாய்ஸ் ரெக்கார்ட் போட்டுக்கோங்க!” என்று சொல்லவும் செல்வா தனது போனில் பதிவு செய்ய ஆரம்பித்தான்.
“இதுல பல விசயங்கள் பாட்டு போல இருக்குது. அத நம்ம வழக்குல சொல்றேன். கன்னிப்பெண் ஒருத்தி கடை தெரியாம இருக்கு. அவள அள்ளி எடுத்து கொஞ்சி விளையாட வழி பிறக்கும்!”
“அப்படின்னா புரியல சார்?”
“கன்னிதெய்வம். அதாவது வயசுக்கு வராத பொண்ணுங்க இறந்திட்டா அவங்கள கன்னிதெய்வம், கன்னியாத்தான்னு கும்பிடுவாங்க. அப்படி இருக்கிற குழந்தைய எடுத்து கும்பிட சொல்லியிருக்கு.”
“அது எப்படி சார் எனக்கு தெரியும். அவரோட பொண்ணு தான் இறந்திருக்கனும். அதுக்கு அப்புறம் தான் பெண் குழந்தையே பிறக்கலயே?”
“அந்த பெண்ணை தான் எடுத்து கும்பிட சொல்கிறார். எத்தனை தலைமுறைகள் ஆனாலும் கன்னிதெய்வத்தின் அழுகை என்பது தலைமுறையை ஆட்டம் காண வைக்கும் சக்தி கொண்டது தம்பி. அந்த பெண்ணை முறையாக அழைத்து வீட்டுல வச்சு வணங்கனும். சிலபேரு கனவுல வந்து எடுத்து கும்பிட சொல்லும். உனக்கு இப்போ எழுதி வச்சி இருக்காங்க.”
“அதுக்கு என்ன சார் முறை?”
“ஆடி மாதத்தில் புதன்கிழமை அன்று சிவப்பு துணி வாங்கி, அதில் காதோலை கருகமணி வச்சு வெண்பொங்கல் செஞ்சு அதுல வாழைப்பழம் வைக்கனும். பச்சரிசி மாவுல விளக்கு செஞ்சு, நெய் தீபம் ஏத்தி மாவுல விரதம் விடனும். முக்கியமா அந்த துணிய அடுத்த முறை கும்பிடும் போது தான் எடுக்கனும். அசைவம் சாப்டாலோ, அல்லது தீட்டு நாட்கள்ல தொட கூடாது. முக்கியமா இந்த பூஜை வீட்டு சுமங்கலிப் பெண்கள் தான் பண்ணனும்.” என்றார்.
அடுத்தடுத்த ஓலைகளை திருப்பினான். “சூரியன் கிரகணம் அன்று சதய நட்சத்திரத்தில் அமாவாசையில் பிறந்த தலைச்சம் காளையின் ரத்தத்தை தெளித்து தென்கட்டு மந்திரத்தை உச்சரித்து பன்றி பலிகொடுக்க காலமுனி கைவசம் அடைவார்.”
“அப்படின்னா சார்?”
“வர்ற சூரிய கிரகணம் அன்னைக்கு சதய நட்சத்திரம் அமாவாசை திதி பிறந்த மூத்த ஆண்மகன் அல்லது ஒற்றை ஆண்மகன் ரத்த துளிகளை தெளித்தால் அங்கிருக்கும் துஷ்ட சக்திகளை விரட்டலாம். பிறகு பன்றியை ஈட்டியால் குத்தி கொன்னு ரத்தத்தை தெளிக்க காலமுனி சக்தி பெற்று கட்டு நீங்கி உனக்கு வசியம் ஆவார்.” என்றார் தொல்காப்பியன்.
“சார் முதல்ல தெற்கு மூலையில் தான் எடுக்கணுமா? தெற்கு மூலையில் எங்க அத பண்ணனும்னு ஏதாவது சொல்லி இருக்கா?” ராகேஷ் கேட்க,
“சில குறிப்புகள் இருக்கு. ஆனா இத்தனை வருஷம் கழிச்சு அதே மாதிரி இருக்கும் ஆனா நம்ப முடியாதுபா. எதுக்கும் சொல்றேன். களி உருண்டை போல இரண்டு பாறைகளுக்கு நடுவே சென்று இடதுபக்கம் திரும்ப பாறைக்கு பின்புறத்தில் முன்றடி உருவில் முடியுடன் நிற்பான் முழுவதும் உணர்ந்த காலமுனி. இத தேடி பார்த்தால் கிடைக்கலாம்.” என்றார்.
“சார் மற்ற மலையில இருக்கற கட்ட எப்படி உடைக்கறதுன்னு சொல்லுங்க சார்!” என ஆதி கேட்க, மற்ற அனைத்து சுவடிகளையும் திருப்ப சொன்னார். பிறகு அந்த அறையை விட்டு வெளியே வந்து தனது அறைக்குள் சென்றவர் ஒரு நோட்டில் அனைத்தும் எழுதி ஒரு பென்டிரைவ்வோடு கொடுத்தார்.
“அதற்கான குறிப்பு எல்லாம் முதல் கட்டை உடைத்த பின்னர் தெரிந்து கொள்ளலாம். அடுத்து கிழக்கு, அடுத்து வடக்கு, அடுத்து மேற்கு. ஒரு தெய்வத்தின் கட்டு அவிழ்த்த பிறகே அடுத்த குறிப்பை தெரிஞ்சுக்கனும். முதலில நீ உன் மனைவியோடு இல்லறம் ஆரம்பிக்கனும். அதுக்கு அப்புறம் கன்னி தெய்வத்த எடுத்து வைக்கனும். அப்புறம் அந்த ரத்த துளிகளை தேடனும். எல்லாம் தயார் பண்ணிக்கோ. ஆபத்த தேடி போற”
“இல்லன்னாலும் எனக்கு ஆபத்து தானே சார். இப்போ எனக்கு இருக்கிறது ஒரே வழி மட்டும் தான். ரொம்ப தேங்க்ஸ் சார். முதல்கட்ட உடைச்சிட்டு உங்களை வந்து பார்க்கறேன் சார்!”
“அதற்கு வாய்ப்பு அமையாது தம்பி. உனக்கு இந்த ரகசியங்களை சொன்னதால என் மரணம் நாளை நடைபெறும். கிரகங்கள் தன் கடமையை செய்துவிட்டது. அந்த ஈசன் உனக்கு எப்பவும் துணையிருப்பார்.” என்று அனுப்பி வைத்தார்.
தனக்கு உதவி செய்யும் ஒவ்வொரையும் இந்த சாபம் பழிவாங்கும் என்ற எண்ணமே ஆதியை நிலைகுலைய செய்தது. இன்னும் இத்தனை உயிர்களை தன் சுயநலத்திற்காக பலி கொடுக்கப் போகிறோம் என்ற வேதனை அவனை வாட்டியது.
சென்னையில் தனது வீட்டிற்கு வந்தவன் யாசிகாவிடம் அனைத்தையும் சொன்னான். ஜோதிடரிடம் ஜாதகம் கொடுத்து சாந்தி முகூர்த்தம் வைக்க நாளும் நேரமும் குறிக்கப்பட்டது.
“உன் கணவனை நீ கூடினால் அவன் நாட்கள் எண்ணப்படும். அவனை கொல்ல போவதே நீதான். அவன் மரணத்தில் தான் உனது நன்மையும் அடங்கியுள்ளது.” தெய்வானையின் குரல் ஓங்கி ஒலித்தது.
“இல்லை. நீ கன்னி தெய்வத்தை எடுத்து வணங்க அவனோடு இணைய வேண்டும். அவன் வாழ்வு உன் கையில் தான். சாபத்தை நீக்க உன்னால் மட்டுமே முடியும். தயங்காதே!” குலசேகரனின் குரலும் கேட்க தொடங்கியது. அதிக அழுத்தத்தில் அவள் மனம் ஆதியை தேடியது. அதே நேரத்தில் தன்னால் அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமும் தோன்றியது.
இருவரும் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்து மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தனர். ஆடி மாதத்தில் முதல் புதன்கிழமை பௌர்ணமி அன்று வீட்டில் கன்னி தெய்வத்தை அழைத்து பூஜை செய்தாள் யாசிகா. பதிநான்காம் தலைமுறையில் தான் அந்த வீட்டிற்குள் கன்னிதெய்வம் அழைக்கப்பட்டு அமர்ந்தது.
ராகேஷ்க்கும் வரன் பார்க்க ஜோதிடரிடம் சென்றார்கள். “தம்பி கும்ப லக்கினம். கும்ப ராசி. சதயம் மூன்றாம் பாதத்தில் பிறந்திருக்கீங்க. நீங்க பிறந்தது அமாவாசை திதி. அதனால திதி சூன்யம் இல்லாத நல்ல ஜாதகம்.” என்று ஜோதிடர் சொல்வதை கேட்டு உறைந்து போனான். மற்ற பலன்களை கேட்டு அறிந்தவன் ஆதிக்கு இந்த விசயத்தை சொன்னான்.
“ராக்கி வேணாம். உனக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது. இந்த தேடல விட்ருவோம். இல்ல வேற யாராவது கிடைப்பார்களா என்று பார்ப்போம். இது உயிர் சம்பந்தப்பட்ட விளையாட்டு!” என்றான்.
“ஆதி உனக்கு ரகசியத்தை உடைக்க சொல்றவங்க மட்டும்தான் சாகுறாங்க. உதவி செய்யறவங்க இல்ல. அப்படின்னா நானும் செல்வாவும் செத்திருக்கனும். அதனால நீ தைரியமாக இறங்கலாம். சூரிய கிரகணத்திற்கு முதல்நாள் பிளட் பேங்க்ல என் ரத்தத்தை எடுத்துட்டு வந்துர்றேன்.” என சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்தான்.
நாட்கள் நகர யாசிகாவிற்கோ மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. தெய்வானையின் குரலால் அவள் மிகவும் பயந்து போனாள். ராகேஷிடம் தொடர்ந்து சிகிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானாள்.
சூரிய கிரகணத்திற்கு முதல்நாள் விடாரபுரத்தை அடைந்து தெற்கு மலையில் ஏற ஆரம்பித்தார்கள். அரிவாள் கடப்பாரை மண்வெட்டியோடு பன்றியை பிடித்து வரவும் என உள்ளூர் ஆட்கள் நால்வரை உடன் அழைத்து வந்தார்கள். பிடித்து வந்த பன்றிக்கு மாலையிட்டு முன்னே செலுத்த அது வேகமாக சென்று பெரிய முட்புதர் முன்பு நின்றது.
அந்த முட்புதரை அகற்ற ஒரு பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் இறங்கி சிறிது தூரம் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிகுள் நடக்க ஆரம்பித்தார்கள். இடையில் பாம்புகளும் பூச்சிகளும் அவர்களை அவ்வப்போது இடைமறிக்க கவனமாக அடியெடுத்து வைத்தார்கள்.
தங்களின் பாதுகாப்புக்கு மகாமுனி கருப்பணசாமியை துணைக்கு அழைத்து வந்ததால் தைரியமாக தான் இருந்தார்கள். பன்றி நின்ற இடத்தில் பெரிய மண் குவியல் மட்டுமே இருந்தது. அங்கே கடப்பாரை கொண்டு இடித்து மண்குவியலை அகற்ற உருண்டை பாறை இருந்தது.
பாறையின் இடது பகுதியில் சென்று மண்ணை அகற்ற காலமுனியின் சிலை இருந்தது. மறுநாள் விடியும் வரை அங்கேயே காத்திருக்க முடிவு செய்தார்கள்.
நள்ளிரவை தாண்டிய நேரத்தில் லேசான வாடைக்காற்று வீச தொடங்கியது. ஏதேதோ குரல்களும் உருவங்களும் தெரிய ஆரம்பித்தது.
புதிதாக வந்தவர்களுக்கு பயமும் நடுக்கமும் ஏற்பட்டது. அவர்கள் அங்கிருந்து செல்ல முயற்சிக்க, “இங்கிருந்து போனா உங்க உயிருக்கு ஆபத்து. அவங்களால நம்மள பயமுறத்த மட்டும்தான் முடியும். நம்மகிட்ட மந்திரகட்டு இருக்கு. நாம கண்டுக்காம தூங்கலாம்.” என ராகேஷ் சொன்னான்.
அன்றைய இரவும் அப்படியே கழிந்தது. மறுநாள் சூரிய கிரகணம் ஆரம்பித்தவுடன் ராகேஷ் தன் ரத்தத்தை கொடுக்க காலமுனியின் சிலையின் முன்பாக ஊற்றினான். ஊற்றிய ரத்ததுளிகள் அப்படியே மண்ணிற்குள் புதைந்து மறைந்தது. மண்ணிற்கு அடியில் இருந்த யந்திரத்தின் மீது படிந்தது. ஆதி மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பித்தான்.
மண்ணிற்குள் இருந்த எந்திரம் மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்தது. 108 முறை அந்த மந்திரங்களை உச்சாடனம் செய்ய யந்திரம் வெளியே வந்தது. காலமுனியை சுற்றி கட்டியிருந்த துஷ்டசக்திகள் மறைய ஆரம்பித்தது.
மந்திரகட்டு உடைந்தபின்னர் யந்திரம் உருகி மண்ணோடு கலந்த பின்னர் பன்றியை ஈட்டியால் குத்தி ரத்தத்தை காலமுனியின் மீது ஊற்றினார்கள். காலமுனி சக்தி பெற்றவுடன் மந்திரம் சொல்லி உக்கிரம் தணித்தான் ஆதி.
பிறகு மாலையிட்டு தீபாராதனை காட்டி விளக்கு ஏற்றி வைத்தான். கட்டு உடைத்து பூஜை செய்ததால் காலமுனி கட்டுப்பட்டார்.
“சாமி சாபம் தீர பக்கத்தில் இருந்து பாதுகாத்து கூடவே வரனும். மற்ற தெய்வகட்டுகளை உடைக்க அருள் புரியனும் சாமி.” என்று வேண்டிக்கொண்டான்.
கிரகணம் முடிந்த பிறகு மலையில் இருந்து வந்தவர்கள் அடுத்து கிழக்கு திசையில் உள்ள தெய்வகட்டை உடைக்கும் மந்திரத்தை வழிமுறையையும் உடைக்கும் குறிப்பை படிக்க ஆரம்பித்தான். படிக்கும் போது அவன் கண்கள் விரிந்ததை பார்த்தவுடன் அவர்களுக்கு புரிந்தது ஏதோ பெரிய ஆபத்து உள்ளது என்பது.