அத்தியாயம் 18
குறிப்பை படித்துவிட்டு ஒற்றை நிமிடம் அனைவரையும் பார்த்த ஆதி, "ரொம்ப சிரமம்டா இது!" என்றான்.
செல்வா, "ஏன் மச்சி? என்ன ஆச்சு?"
"சந்திர கிரகணத்தன்று உடைந்த தந்தம் கொண்ட அதுவும் இடது பக்கம் உடைந்த தந்தம் கொண்ட யானையின் வால் முடியை கொண்டு வந்து எரித்து அந்த சாம்பலை யந்திரத்தின் மீது தூவ வேண்டும். பிறகு கீழே உள்ள மந்திரத்தை 108 முறை சொல்லனும். பிறகு சேவலை பலிகொடுத்து விபூதி அபிஷேகம் செய்ய வீரன் தீரனாய் உடன் வருவான்!"
ராகேஷ், "சேவல் பிரச்சினை இல்ல. யானை முடி தான் இப்போதைக்கு பிரச்சனை. அதுலயும் இந்த மாதிரி கேட்கிறதெல்லாம் ரொம்ப சிரமம்."
செல்வா, "எழுதி வச்ச ஆளு அன்றைக்கு மாதிரியே இன்றைக்கும் இருக்கும்னு நினைச்சுட்டார் போல?" என்றான்.
"அந்தாளுக்கென்ன பண்றதெல்லாம் பண்ணிட்டு கடைசியில நம்மள கோர்த்துவிட்டுட்டாரு. ஏதாவது யானை முடின்னா கூட நாம போய் தேடலாம். கோவில்லயோ ஏதாவது யானை கேம்ப்லயோ கேட்டா கிடைக்கும். இந்த மாதிரி யானைக்கு எங்கடா நான் போறது?" என்று சலித்து கொண்டே சொன்னான்.
"விடு மச்சி. நம்ம கூட்டத்துல வல்லவன் நல்லவன் நாலும் தெரிந்தவன் நிறைய பிரெண்ட்ஸ் லிங்க் உள்ளவன் நம்ம டாக்டர் இருக்கிற வரைக்கும் நமக்கு என்ன கவலை. அவனை பலி கொடுத்தாவது சாபத்தை நீக்கிடுறோம். என்ன மச்சி சரிதானே?" செல்வா கூற,
"நீங்களாவது கல்யாணம் பண்ணி ஏதாவது பாத்துட்டீங்க. நானெல்லாம் இன்னும் சிங்கிளாக இருக்கேன்டா. 90'ஸ் கிட்ஸ்னு சொல்லி இப்படியே ஓட்டிறாதீங்க. ஒருவேளை அப்படி நீ என்ன பலி கொடுத்தா உங்களை எல்லாம் விட்டுட்டு நான் மட்டும் சொர்க்கத்துக்கு போவேன்னு நினைச்சீங்களா? நானும் தெய்வானை மாதிரி உங்கள எல்லாம் கூட்டிட்டு தான்டா போவேன்." ராகேஷ் கூற அந்த இடமே சிரிப்பில் ஆழ்ந்தது.
"மச்சி ஏதாவது பாரஸ்ட்காரங்ககிட்ட (forest) தான் கேக்கணும். ஆனா அது அவ்ளோ ஈஸியா கிடைக்கிற பொருள் இல்ல. எல்லா கேம்ப்லயும் சொல்லி வைக்கனும். ட்ரை பண்ணி பார்ப்போம்!" என்று சொன்னான்.
"இன்னும் 12 நாள் தான் இருக்கு. இந்த சந்திர கிரகணம் விட்டா அடுத்த ஆறு மாசம் கழிச்சு தான் மறுபடியும் வரும்!" என்றான்.
தனது கிளைன்டாக உள்ள சில ஃபாரஸ்ட் ஆபிஸரிடம் தேவையை சொல்லி வைத்தான் ராகேஷ். சொல்லி வைத்த பத்தாவது நாளில் யானைமுடி கிடைத்தது. காட்டு யானையுடன் சண்டை நடந்தபோது இடதுபக்க தந்தம் உடைந்த கும்கி யானையின் வால் முடிகள் கிடைத்தது.
ஊருக்கு சென்று குலதெய்வம் கோவிலில் பூஜை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வாளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
கிழக்கு மலையை நோக்கி அன்றிரவு குறிப்போடு கிளம்பினார்கள். கரடுமுரடான காட்டு வழியில் குரங்குகளை தாண்டி சென்றார்கள். சில குரங்குகள் இவர்களை தொந்தரவு செய்ய அடித்து விரட்டினார்கள்.
"மச்சி எங்க கருப்பன் சிலை இருக்குன்னு ஏதாவது குறிப்பு இருக்கா?"
"மலையின் உச்சியில் ஒற்றை கல் வேலும் தூணும் இருக்கும். ஒரு அடி கல்லாக கருப்பன் இருப்பார்னு போட்டுருக்கு. அதுக்கு முன்னாடி ஒரே மாதிரியான ஏழு கற்கள் அடுக்கி வைத்து இருக்கும் அதற்கு அடியில் யந்திரம் இருக்கும்." என்றான்.
"ஏன்டா மச்சி. காவல் தெய்வங்களை கீழ வச்சா ஆகாதா? ஏண்டா இப்படி மலை உச்சில வெச்சு சாகடிக்கிறீங்க. மலையேற முடியல." பேசிக்கொண்டே உச்சியை அடைந்தார்கள்.
கல்லால் ஆனா வேலும் தூணும் இருந்தது. சுற்றியும் தேட ஆரம்பித்தார்கள். சில அடி தூரத்தில் ஐந்து கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
"மச்சி மழை காத்துன்னு மண் மூடி இருக்கலாம். சுத்தி இருக்கிற மண்ண எடுத்தா கல்லு இருக்கலாம். ஏன்னா வேற எங்கேயும் இந்த மாதிரி தெரியல." என்று செல்வா சொல்ல பறிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் பெரிய பாறை தான் வந்தது.
"ஒரே மாதிரியான கல்லுன்னு சொன்னாங்க. வேற எங்கேயுமே தெரியலையே ராக்கி!"
"ஏன் மச்சி அது மொத்தமா மண்ணுக்குள்ள புதைஞ்சு இருக்க கூடாது. ஒரு அடி கல்லுன்னு சொல்லியிருக்கு. ஆனா அங்க வேலுக்கு முன்னாடி அரையடி தான் இருக்கு. அதே மாதிரி ஏன் அந்த ஏழு கல்லும் மண்ணுக்குள்ள பக்கத்திலேயே புதைந்திருக்கக் கூடாது." ராகேஷ் கேட்க,
"ஆனா சுத்தியும் மண்ணு இறுகி பாறை மாதிரி இருக்கு. இதுல எங்க தேடி எங்க எடுக்கிறது சொல்லு."
"ஓலைச்சுவடி எடுத்து அந்த கல்லு முன்னாடி வைடா. கட்டாயம் அது வழி சொல்லும். இது உக்கிரவீரமாத்தி உத்தரவு." என்று சொன்னான் செல்வா. இருவரும் அவனை ஒற்றை நிமிடம் உற்று பார்த்துவிட்டு எடுத்து வெளியே வைத்தான்.
சிறிது நேரம் காத்திருக்க அசைவின்றி அப்படியே இருந்தது. "என்னடா ஒன்னும் ஆகல?"
"ஆதி கையில குத்தி ரத்தத்த கொட்டு அதுல." என்றதும் அதேபோல செய்தான் ஆதி. சில நொடிகளில் ஓலைச்சுவடி உருண்டு செல்ல ஆரம்பித்தது. அது நின்ற இடத்தில் கடப்பாரையால் சுற்றி தோண்ட ஆரம்பித்தார்கள். ஒரு அடிக்கும் குறைவாக ஏழு கற்கள் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
கையில் இருந்த யானை முடிகளை ஒன்றாக சுற்றி அதனை உருட்டி அதனை தீயில் காட்டி எரிக்கவும் முடி கருகியது. அதில் கிடைத்த சிறிதளவு சாம்பலை எடுத்துக்கொண்டான்.
பிறகு கீழேயுள்ள யந்திரத்தை வெளியே எடுத்தான் ஆதி. நள்ளிரவில் சந்திர கிரகணம் ஆரம்பித்தவுடன் சாம்பலை யந்திரத்தின் மீது துவி மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்ல ஆரம்பித்தவுடன் பிணம் எரியும் வாடை வீச ஆரம்பித்தது. மந்திரங்கள் சொல்ல சொல்ல அந்த வாடை அதிகரித்தது. 108வது முறை மந்திரம் சொன்னவுடன் அந்த வாடை நின்றது.
பிறகு சேவலை வாளால் வெட்டி வேல் தூண் வீரகருப்பண்ணன் மீதும் ரத்ததுளிகளை விட்டார்கள். சேவலை அந்த யந்திரத்தின் மீது வைக்க சில நொடிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
மாலை அணிவித்து விபூதி கொண்டு கருப்பண் மீது அபிசேகம் செய்ய மந்திரகட்டு முறிந்து வசியம் ஆனார். காலமுனியும் வீரகருப்பண்ணனும் ஆதியின் கட்டுக்குள் வந்தார்கள்.
மலையில் இருந்து கீழே வந்து யாருக்கும் தெரியாமல் மீண்டும் வாளை உள்ளே வைத்தார்கள். பொன்னாத்தாவை சந்தித்தவுடன், "ஆதித்யா மனதை திடப்படுத்தி கொள். வரும் நாட்களில் நீ அதிகம் கண்ணீர் சிந்தவேண்டி வரும். மூன்றாவது கட்டை உடைப்பதற்கு முன்பு மீண்டும் விடாரபுரம் செல்!" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
மூன்றாவது வடக்கேயுள்ள காவல் தெய்வத்தின் கட்டை உடைக்க மூன்று மாதம் காத்திருக்க வேண்டியதாக அமைந்தது. திங்கள் கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் பிரதமை திதியும் சேர்ந்து வரும் நாளுக்காக காத்திருந்தார்கள்.
யாசிகாவிற்கும் அவ்வப்போது ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டியதும் கட்டாயமாகியது.
"ஆதி ரெண்டு நாளைக்கு முன்னாடியே டேட் வந்திருக்கனும். இன்னும் வரல. வரும்போது ப்ரெட்கார்டு வாங்கிட்டு வர்றியா?''
"என்னடி சொல்ற? அய்யோ சந்தோஷம் தாங்கலயே. இதோ இப்பவே போய்டு வரேன்" என்று வேகமாக மெடிக்கல் போய் வாங்கி வந்தான்.
"சீக்கிரம் சொல்லுடி."
"பொறுடா." என்று சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டே கண்ணீரோடு வந்தாள்.
"ஹே... யாசி... என்னடி ஆச்சு? ஏன் அழற?" என பதட்டம் கொள்ள, கார்டை கையில் நீட்டினாள்.
கைநடுங்க வாங்கியவன் இரட்டை கோடுகள் இருப்பதை பார்க்கவும் அவன் கண்களிலும் நீர் வடிந்தது. அவள் முகத்தை நிமிர்த்தி "ஐ லவ் யூ டி யாசி!" என்று கட்டிக்கொண்டான்.
"ஐ லவ் யூ டூ ஆதி!"
மறுநாள் டாக்டரிடம் சென்று டெஸ்ட் எடுத்துவிட்டு மாத்திரை வாங்கி வந்தார்கள்.
இரவு அறைக்குள் ஆதியின் மார்பின் மீது படுத்துக்கொண்டு, "ஆதி சாபத்த நீக்கிடலாமா? எனக்கு குழந்தை வேணும். எதும் ஆகிட கூடாதுடா"
"யாசி ஏற்கனவே ரெண்டு தெய்வத்தோட கட்ட அவுத்தாச்சு. இன்னும் ரெண்டு தான். அடுத்த மாசம் ஒன்னு. அதிகபட்சம் அதுக்கு அடுத்த மூனு மாசத்தில அவிழ்த்திடலாம். அப்புறம் சாபம் நீங்கிடும். அதனால நீ தைரியமா இரு" என தலையை தடவி கொடுத்தான்.
அவன் மனதிற்குள்ளும் எப்படி சாபத்தை விரைவாக தீர்ப்பது என்பதைப்பற்றி ஆழமாக யோசித்து கொண்டிருந்தான். ஆனால் நேரம் அவனுக்கு சவாலாக இருந்தது. நாட்களையும் எண்ண ஆரம்பித்தான்.
ஊருக்கு சென்று குலதெய்வம் கோவிலில் இருந்த வாளை எடுத்துக்கொண்டு போலியான வாளை அங்கு வைத்தான்.
இந்த முறை தனியாக காட்டு வழியில் சென்று விடாரபுரத்தை அடைந்தான். நள்ளிரவு வரும்வரை அமைதியாக காத்திருந்தான். குதிரை ஓடிவரும் குழம்பொலி கேட்க அந்த திசையில் திரும்பினான்.
"வா ஆதித்யா. ரகசியங்களை தெரிந்துகொள்ள விரைவில் வந்துவிட்டாயோ".
"எல்லாத்தையும் படிச்சுட்டேன் தர்மசீலரே. இதை மாற்ற வழியே இல்லையா? இதுக்கு முடிவு தான் என்ன?"
"உனது உயிர் மட்டும் தான் ஆதித்யா விலை. நீ படித்ததே முதலில் தவறு தான். வேதனையில் உன் மனம் உன்னையே கொல்ல சொல்லும். நீ நரகத்தில் தான் வாழ வேண்டும் ஆதித்யா. அரசரின் பிடிவாதம் போல உனக்கும் உண்டு." என்றான்.
"தர்மசீலா அன்று நான் தெரியாமல் செய்த செயல் அது. அறிவிழந்து செய்துவிட்டேன். மாற்றுக்கு இத்தனை வருடங்களாய் தவிக்கிறேன்!" என்றான் குலசேகரன்.
"அரசே இது நீங்கள் தெரியாமல் செய்த காரியம் அல்ல. நாட்டின் மீது நீங்கள் கொண்ட பேராசை. உங்களை பலமுறை எச்சரித்தேன். கெஞ்சினேன். நீங்கள் தான் கேட்கவில்லை."
"ஆனால் அதற்கு என் வம்சம் என்ன செய்யும். எனக்கு இதைவிட பெரிய தண்டனையை தெய்வானை கொடுத்திருக்கலாமே தர்மசீலா!" என குலசேகரன் கேட்க,
"அரசே அன்று நீங்கள் மிகவும் நிதானமாக தான் இருந்தீர்கள். ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தீர்கள். காத்திருந்தீர்கள். தெய்வங்களை கட்ட வேண்டாம் என்று சொன்னேன். நிறைமாத கர்ப்பிணியை தாக்க வேண்டாம் என்றேன். யுத்த தர்மம் அறிந்த நீங்கள் அன்று பிரபஞ்சத்தின் தர்மத்தை மறுத்துவிட்டீர்கள் அரசே!"
"கோவிலை மூட வேண்டாம் என்று கெஞ்சினேன். உங்கள் உடலில் காயங்களை ஏற்படுத்திவிட்டாள் என்ற கோபத்தில் கோவிலோடு சேர்த்து மூடினீர்கள். காலில் விழுந்து கெஞ்சிய என்னையும் என் கரம் கொண்டே மடிய செய்தீர்கள். இதெல்லாம் தவறென்று தெரியவில்லையா அரசே?"
"அதை பிறகு தான் உணர்ந்தேன் தர்மசீலா!"
"கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் அரசே. என்னைவிட தர்மமும் அதர்மமும் அறிந்தவர் நீங்கள். சாஸ்திர அறிவும் கொண்டவர். எல்லாம் சுயநினைவோடு செய்துவிட்டு தற்போது வருந்தி என்ன பயன் அரசே?"
தர்மசீலன், "தெய்வானையின் சாபம், பிறந்த குழந்தையின் சாபம், தெய்வத்தின் சாபம் எல்லாமே தலைமுறைகளை தான் பாதிக்கும் அரசே. நீங்கள் அன்று எப்படி உங்கள் எண்ணத்தில் தவறு செய்தீர்களோ உங்கள் ரத்தமும் அப்படியே."
"ஆதித்யா. மகாகாளியின் கோபம் என்பதை சாதாரணமாக நினைத்துவிட்டாய் போலும். வாள் உன் கையில். அதில் தர்மமும் உள்ளது. ரத்த கறைகளும் உள்ளது. இனி முடிவு உன் கையில்." என்றான் தர்மசீலன்.
"விதியோட ஆட்டத்தில இவ்வளவு சோதனைகள் வரக்கூடாது எனக்கு. என்றோ அவர் செய்த தப்புக்கு எத்தனை உசுரு போச்சு. எல்லாம் பொய்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்ப தான் புரியுது!" என கண்ணீர் சிந்தினான். அவனை பார்த்து குலசேகரனும் அழுதான்.
"நன்றாக அழு ஆதித்யா. அன்று என் கண்ணீரும் அப்படி தானே இருந்தது. இரண்டு தெய்வகட்டுகளை விடுவித்து நீ வசியம் செய்து கொண்டால் உன்னை விட்டுவிடுவேன் என்று நினைத்தாயோ?" தெய்வானையின் சிம்மகுரல் மலையை சுற்றியும் கேட்டது.
"என்ன ஆனாலும் சாபத்தை முறியடிப்பேன். காலத்தின் கட்டாயத்தை உணர்ந்தாலும் நீ எதிர்பார்க்காத வெற்றி அடைந்தே தீருவேன். இது சத்தியம்." என்றான் ஆதி.
"ஆதித்யா இனி ஆகவேண்டிய செயலில் இறங்கு. வெற்றிக்கு போராடு. நான் வருகிறேன். நான்கு தெய்வங்களின் கட்டையும் அவிழ்த்துவிட்டு வந்து அழை என்னை!" என்று சொல்லிவிட்டு குதிரையில் புறப்பட்டார் தர்மசீலன்.
வாளோடு சென்னை வந்தவன் யாரிடமும் இதை பற்றி பேசாமல் உள்ளேயே அழ ஆரம்பித்தான். இவன் மாற்றத்தை கண்ட ராகேஷ் உண்மையை அறிய தனது சைக்கார்ட்டிஸ்ட் வேலை செய்து அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டான்.
எல்லாம் நடக்க அந்த நாள் வந்தது. சிறிய வடிவிலான இரண்டு ஆண் பெண் பொம்மைகளை அரிசி மாவில் செய்துகொண்டு மலையின் மீது ஏறினார்கள். நாய் ஒன்று அவர்களுக்கு வழி சொல்லி அழைத்து சென்றது. பாம்புகள் நிறைந்த அந்த பகுதியில் இவர்களின் ஒவ்வொரு அடியும் மரண பயத்தோடே இருந்தது.
மலையின் மீது அமைந்துள்ள தாளம் காட்டில் பூவை பறித்து தட்டி பாம்பு இல்லை என்று உறுதி செய்த பின்னரே ஒவ்வொன்றாக சேகரிக்க ஆரம்பித்தார்கள். மலையேறி சென்றிட குகைக்குள் இருக்கும் துர்க்கையை காண தடுத்திட சூரிமுட்கள் மொத்தமாய் மறைத்திருந்தது.
ஆட்கள் செல்லும் அளவிற்கு மட்டும் முட்களை அப்புறப்படுத்த முடிவு செய்தார்கள். வெட்ட வெட்ட முட்கள் விழுந்துகொண்டே இருந்தது.
"ஆதி வாள் எடுத்து வெட்டுடா. ஏதாவது மாற்றம் இருக்கான்னு பார்ப்போம்?" என்று செல்வா சொல்ல வாளால் முதல் கொடியை வெட்டினான். மொத்த முட்புதரும் சில நொடிகளில் காய்ந்து போனது.
"என்னடா ஆச்சரியமா இருக்கு. தர்மசீலன் வாள் நிறைய மந்திர சக்தி கொண்டது போல? வா போலாம்!" என்று உள்ளே சென்றார்கள்.
மாவு பொம்மையை முன்னே வைத்து பல்லியை வெட்டி அதன் ரத்தத்தை பொம்மை மீது ஊற்றினான். 64 முறை மந்திரம் உச்சாடனம் செய்து வாளால் பொம்மைகளை வெட்டினான்.
பொம்மை தலைகள் விழுந்த இடத்தில் தோண்ட ஆரம்பித்தார்கள். ஆண் பொம்மை விழுந்த இடத்தில் ஒரு பெட்டியும் பெண் பொம்மை விழுந்த இடத்தில் பானையும் கிடைத்தது.
பானையை உடைத்து யந்திரத்தை வெளியே எடுத்து அதில் கருஊமத்தை மூன்றை வெட்டி வைக்க யந்திரம் காற்றில் கரைந்தது.
துர்க்கைக்கு குங்குமம் அபிசேகம் செய்து பீஜ மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தான். பிறகு நீர் பூசணிக்காயில் சிவப்பு துணி கொண்டு தீபம் ஏற்ற தெய்வசக்தியை உருவேற்றி கட்டை உடைத்தான். துர்க்கையும் வசியம் அடைந்தார்.
"ஆதி அந்த பெட்டிய உடைச்சு பாரு."
"இல்ல அது இங்கயே இருக்கட்டும் ராக்கி."
"எப்படி இருந்தாலும் தேவைப்படுற ஒன்னு தானே ஆதி. மறுபடியும் இத எடுக்க இவ்வளவு தூரம் வரனும்? அதுக்குள்ள என்ன வேணும்னாலும் நடக்கலாம் ஆதி."
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது. இது நமக்கு தேவையுமில்லை. நாம போகலாம்." என்று நடக்க ஆரம்பித்தான்.
"சாபம் தீரனும்னா இந்த பெட்டியில் இருக்க குலசேகரனோட வாள் நமக்கு வேணும் ஆதி. நீ என்ன பண்ணினாலும் நடக்கறது நடந்தே தீரும்!" என ராகேஷ் சொன்னதும் வேகமாக ஓடிவந்து அவனின் சட்டையை பிடித்தான். ராகேஷ் கண்களையும் உதட்டையும் உற்று பார்த்தான்.
"இதெல்லாம் எப்படி இவனுக்கு தெரியும்னு பாத்தியா? உன்னோட மனச எப்படி ரீட் பண்ணனும்னு எனக்கு தெரியாதா? நோட்டையோ ஆடியோவையோ நான் கேட்கல ஆதி. எல்லாத்தையும் நீ தான் உன்னோட வாயால் சொன்ன!" என்றான்.
"ச்சை. இதுக்கு நான் செத்தே போயிருக்கலாம்டா. ஏன் தான் இதெல்லாம் தெரிஞ்சுதோன்னு இருக்கு."
"எல்லாம் விதி தான். நீதான் சாபத்தை உடைக்கணும்னு விதி இருக்கு. இதெல்லாம் நடக்கனும்னு விதி இருக்கு. நீ வேணாம்னு நினைச்சாலும் விதி விடாது. வேற வழியில்ல ஆதி. அக்செப்ட் பண்ணிக்க ட்ரை பண்ணு."
"எந்த எழவும் வேண்டாம்டா. இப்படியே எங்காவது போலாம்னு தோணுது"
"போனா மட்டும் நடக்க இருக்கிறதை மாற்ற முடியுமா? எப்படி இருந்தாலும் நடந்துதான் தீரும். ஏத்துகிட்டு தான் ஆகனும். வா போலாம். இனி அடுத்த மலையில இருக்கிற வன்னியம்மனை விடுவிக்கனும். இந்த பெட்டிய உடை ஆதி!"
"வேணா மச்சி. வலிக்குதுடா!"
"வேற வழி இல்ல ஆதி. நீதான் பெட்டிய உடைக்கனும்!" என்று வாளை கையில் திணித்து அனுப்பினான்.
அழுதுகொண்டே தன் கையை கீறி ரத்த துளிகளை பெட்டியின் மேல்விட்டு பூட்டின் மீது வெட்டினான். பெட்டி உடனே திறந்தது.
அதில் சில மந்திரங்கள் எழுத்தப்பட்ட யந்திரமும் குலசேகரனின் வீரவாளும் இருந்தது. பளபளவென மின்னிய அந்த வாளை கையில் எடுக்க ரத்ததுளிகள் அந்த வாளின் நுனியில் இருந்து வந்தது.
அதை உறையில் எடுத்து போட்டுவிட்டு திரும்ப தெய்வானையின் சிரிப்பு சத்தம் அந்த குகையை நிரம்பி இருந்தது.