கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தொடரும் பந்தங்கள் அத்தியாயம் 4

அத்தியாயம் 4

கரடு முரடாக தெரிந்த அந்த பாதையில் ஐவரும் பயணிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் யாசிகாவால் ஏற முடியவில்லை.

“ஏம்மா இதுக்கே உக்காந்துட்டா என்ன பண்றது. நாலு கிலோமீட்டர் நடக்கனும். போலாம் எந்திரிங்க” கைடு சொல்ல,


“என்னது நாலு கிலோமீட்டரா? நான் வரல. கொல்ல பாக்குறியாடா? நான் திரும்பி போறேன்” யாசிகா திரும்ப,

“ஆமா செல்வா. என்னாலயும் முடியல. கால் ரொம்ப வலிக்குது. பாதைய பாத்தாலே பயமா இருக்கு. நானும் யாசியும் கார்ல இருக்கோம். நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்”

“கரெக்ட் சாரா. நேத்து போனதுக்கு இன்னும் கால் வலி போகல. நாங்க வெயிட் பண்றோம். நீங்க போங்க”

“செல்வா நீ இவங்க கூட இரு. நான் போயே ஆகனும். இவங்களுக்கு துணையா நீ இரு. அண்ணா நாம போலாம்.” என்றான் ஆதி.

“ஆதி உனக்கு தான் இப்போ துணை தேவை. செல்வா நீ அவன் கூட போ.. நாங்க இருந்துப்போம். போர் அடிச்சா வேற எங்காவது போய்க்குவோம். நீங்க கால் பண்ணினா வரோம்.” என்றாள் யாசிகா.

“நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. ஆனா நான் என்ன நினைக்கிறேனு என்னை யாராவது கேட்டீர்களா? நான் ஆதி கூட போறேன் யாசி சொல்றது கரெக்ட் தான்”

“சரி ஜாக்கிரதையா இருங்க” என்று சொல்லிவிட்டு மேலும் நடக்க ஆரம்பித்தார்கள்


“அண்ணா இந்த கோவில் பத்தி சொல்லுங்க” செல்வா கேட்க,

“தம்பி இவர் மாசி பெரியண்ணன் சாமி. மாசி கருப்புன்னும் சொல்வோம். ஆதி கோவில். கொல்லிமலைய சுத்தி நாலு தெய்வம் காவல் காக்குது. அதுல இவரும் ஒருத்தர். கொல்லிமலையோடு உச்சி பகுதி தான் மாசி குன்று. அதுல தான் நாம போறோம்”

“ஏகப்பட்ட வரலாறும் கதையும் இவருக்கு உண்டு. ரொம்ப சக்தியுள்ள சாமி. அங்க போற வரைக்கும் அவர பத்தி பேசிக்கிட்டே வரேன். அவ்வளவு இருக்கு” என்று நடந்த பல விசயங்களை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வந்தார்



முட்புதர்களும் கரடு முரடான பாறைகளும் செங்குத்து ஏற்றங்களும் அவர்களை களைப்படைய செய்தது.

“தம்பி இன்னும் கொஞ்சம் தூரம் தான்” என்று சொல்லி சொல்லியே முக்கால்வாசி பகுதியை தாண்ட வைத்திருந்தார்.

“தம்பி அந்த வழுக்கு பாறைய தாண்டினா கோவில் தான். வாங்க போலாம். அண்ணன் நமக்காக காத்திட்டு இருக்காரு. வாங்க வாங்க” தன் பேச்சால் உத்வேகம் கொடுத்து கூட்டிச்சென்றார்.


வேல்களும் கம்புகளும் சூழ்ந்திருக்க, மரத்தில் கட்டப்பட்ட தொட்டிலும் கயிறுகளும் மணிகளும் பிரம்மிப்பை ஏற்படுத்தியது. குளுமையான இயற்கை காற்று வாசமும் அவர்களை இன்னும் ஆனந்தம் கொள்ள வைத்தது.

கூரையில் மேய்ந்த கட்டிடத்தில் வேங்கையை கொன்றவாறு வீற்றிருந்தார் பெரியண்ணன்.
சில நிமிடங்கள் அங்கு அமர்ந்திருக்கும் வேளையில் திடீரென்று சாமி ஆடிய பூசாரி, “உனக்கு நேரம் சரியில்ல. எஞ்சி இருக்கும் உன்னை மிச்சமெல்லாம் தேடுது. போகாத ஊருல்ல‌ ஏக்கமாய்‌ இருக்கா உன்ன பெத்தவ. கடைசி உயிரும் போற வரைக்கும் காத்திருக்காதே. அவளிடம் சென்று கேளு” என்று சொன்னவர் பாட ஆரம்பித்தார்.


“கண்ணுல உறக்கமில்லஅஅஅ... கனவுல‌ பொய்யுமில்லஅஅஅஅ... கன்னி புள்ள ஒன்னு கைகட்டி நிக்குதடாஆஆஆ... போக வழியுமில்லஅஅஅஅ.. பொறப்பும் தீரவில்லஅஅஅ... பொறப்பும் தீரவில்லஅஅஅ... ரத்தம் கேட்குதடாஆஆஆஆ... ரத்தம் கேட்குதடா... காவலுக்கு நானுண்டு... கட்டி போட கயிறுண்டு.... தொட்டியெல்லாம் நிரம்பினாக்கா நோய் தீர வழியுண்டு.... கட்டிடத்த கண்டுபுட்டா கடை தேர வழியுண்டு கடை தேர வழியுண்டு.... கண்ண மூடும் முன்னேனேனே காய்ந்த மரம் ஏங்குதடாஆஆஆஆஆ... காக்கும் கடவுளுமே கைகட்டி நிக்குதடா...” என்று சொல்லி அமைதியாகிவிட என்னவென்று புரியாமல் விழித்து நின்றார்கள்.


அங்கிருந்த பூசாரி கையில் ஒரு எலுமிச்சை பழத்தை கொடுத்து அவர் பாதத்தில் வைத்து பூசிக்கப்பட்ட தாயத்து எந்திரம் கொண்ட கயிறு இருவருக்கும் கொடுத்தார்.

“தம்பி வண்டியில போகும் போது வரும்போது கவனமா போ.. ஆபத்து இருக்கு. ஆனா காக்க பெரியண்ணன் உன் கூடவே இருக்காரு. கவலைப்படாம போ” என்று அனுப்பி வைத்தார்.

பாடலுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றாலும் அந்த பாடல் அவனுள் புதைந்து போனது.

“செல்வா நடந்த விசயம் எதுவும் யாருக்கும் தெரிய வேணாம். நமக்குள்ளயே இருக்கட்டும்.
நேத்து அந்த சாமியார் சொன்ன மாதிரியே பெரிய கேள்விகளோட தான் இருங்கிருந்து கிளம்பறேன்” என்றான்


“ஆதி எதுக்கும் கவலப்படாத. எப்பவும் நான் கூட இருக்கேன். நீ கனவு பத்தி சொன்ன. அதோட வீரியம் இந்த அளவுக்கு இருக்கும்னு நினைக்கலடா. நல்லதே நடக்கும் வா” கீழே இறங்கி வந்து யாசிகாவை அழைக்க காரை‌ ஓட்டி வந்தாள் யாசிகா...


“என்னடா ஒரு மாதிரி இருக்கீங்க? என்ன ஆச்சு” சாரா அவன் கண்களை கண்டு கேட்க,

“ரொம்ப தூரம் நடந்து வந்தமில்ல... நீங்க எல்லாம் வந்து இருந்தா அங்க போய் இருக்கவே முடியாது. அவ்வளவு கஷ்டமான பாதை” என்றான் செல்வா.


“யாசி தான் புலம்பிக் கொண்டே இருந்தா. நேத்து நடந்த சம்பவத்தை பத்தி பேசிக்கிட்டே இருந்தா?” என்றதும் கண்கள் சிமிட்டி தலையை ஆட்டினாள்.

“அவளுக்கு ஆதி மேல பாசம் அதிகம்டி செல்லம். சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ் தானே”

“அது மட்டுமா???” ஓரக்கண்ணால் அவளை பார்த்து இழுக்க,

“என்னடி சொல்ற?”

“வெங்காயம் ஈரமா இருக்கு. எடுத்து வெயில்ல போடனும்னு சொல்றா!” என்றான் ஆதி.

“பசிக்குதுடா. சீக்கிரம் போலாம்” என்று பேச்சை மாற்றி அழைத்து சென்றான். கைடுக்கு பணம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்கள்.



சரியாக மூன்று மணி நேரத்திற்கு முன்பு…

“யாசி ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”

“கேளு சாரா... அப்படி என்ன நான் தப்பா நினைக்கிற மாதிரி கேட்க போற?” என்றாள்‌ பேச்சில் ஒரு முடிச்சோடு.

“நேத்து ஆதிக்கு நடந்த விசயம் பார்த்து...” இழுக்கவும்

“ஆமா சாரா. நான் ரொம்ப பயந்துட்டேன். எனக்கெல்லாம் உயிரே இல்ல. என்னாச்சோ ஏதாச்சோனு ரொம்ப அழுதுட்டேன். நீயும் ரொம்ப பயந்து இருப்ப இல்ல.”

“பேச்சை மாத்தாத யாசி”

“புரியல சாரா. நீ என்ன சொல்ற?”

“நான் நேரடியாக கேட்கறேன். நீ ஆதிய லவ் பண்றியா? இல்லையா?” என்று கேட்டவுடன் சடன் பிரேக் அடித்தாள் யாசி.


“வாட்... சாரா...” கண்கள் விரிய சத்தமாக அழைக்கவும்,


“உன் கண்ணுல நான் பாத்தேன் யாசி. நீ பயந்த விசயம். அவன் பின்னாடி போனது. அவனுக்காக அழுதது. அவன் மேல நீ காட்டும் அக்கறை”


“அவன் ப்ரெண்ட் சாரா. கண்ணு முன்னாடி அப்படி சம்பவம் நடக்கும் போது எப்படி நான் அழாம இருப்பேன். செல்வாக்கு ஏதாவது ஆச்சுன்னா நீ எப்படி இருப்ப?”


“அதே தான் யாசி சொல்றேன். அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா எப்படி நான் துடிப்பேனோ அதே துடிப்ப உன்கிட்ட பாத்தேன். ப்ரெண்ட தாண்டி உன்கிட்ட சொல்ல இருந்த தவிப்பு எனக்கு சொன்ன விசயம் அது தான்”

“நானும் அவனும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ். ஸ்கூல்டேஸ்ல இருந்து‌ ஒன்னா இருக்கோம் சாரா. நான் அந்த மாதிரி நினைச்சது இல்ல”

“அப்போ நான் ஆதிய அப்பப்போ ப்ரோன்னு சொல்வேன். நீ தான் ப்ரெண்ட் ஆச்சே. அப்படி சொல்ல முடியுமா?”

“சைல்டிஸ் மாதிரி இருக்கு சாரா நீ பேசறது. ப்ரோன்னு சொன்னா உடனே அண்ணன் ஆகிடுவார்னு நினைக்கறியா?”

“நான் அதுக்காக கேட்கல யாசி. என் ப்ரெண்ட் வித்யா உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். அன்னைக்கு எங்க லவ் ஆன்னிவெர்சனிரில பாத்திருப்ப. அவளுக்கு ஆதி மேல க்ரஷ்ஷாம்....” என்று சொன்னவுடன் மீண்டும் காரின் ப்ரேக் வேகமாக அழுத்தப்பட்டது.

“என்னாச்சு யாசி. கார் எடு சீக்கிரம். இது பெண்ட். வேற கார் ஏதாவது வந்து அடிச்சு தூக்கிட போகுது” தன் புருவங்களை உயர்த்தி சிமிட்டி சொல்ல அவள் சொல்லும் வார்த்தைகள் யாசிகாவிற்கு புரிந்தது.


காரை எடுத்தவள், “உன் ப்ரெண்ட் வித்யாவ அவன் கிட்ட லவ் சொல்ல வேணாம்னு சொல்லு. ஏற்கனவே சொன்ன பொண்ணுங்க நிலைமை என்ன ஆச்சுன்னு செல்வா சொல்லி இருப்பான்னு நினைக்கறேன் சாரா. பாத்துக்க” என்று சொன்னாலும் அவள் முகத்தை வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் சாரா.

“யாசி உனக்கு ஒரு விசயம் சொல்றேன். டெய்லியும் ஆதியும் வித்யாவும் பேசிட்டு தான் இருக்காங்க. ஒருவேளை நீ லவ் பண்ணலனா அவ ப்ரப்போஸ் பண்றதா சொன்னா”

“பண்ணிக்க சொல்லு. யார் வேணாம்னு சொன்னாங்க”

“ஏற்கனவே அவனுக்கு காம்படீஷன் அதிகம்”

“ஸ்டாப் இட் சாரா.... எனாஃப்...” என்று கத்தினாள் காருக்குள்.

“உள்ள இருக்கற கஷ்டத்த வெளிய சொல்லிடு யாசி. தேக்கி வச்சு சிரமப்படாத. ஒருநாள் அவன் உனக்கு கிடைக்காம கூட போலாம்” என்று சாரா சொன்னதும் யாசிகாவின் கண்கள் நீரை தேக்க ஆரம்பித்தது.

“யாசி வித்யா ஆதிய அண்ணான்னு தான் கூப்டுட்டு இருக்கா. கவலைப்படாத. அப்படியே உன் கண்ணுல இருக்கற நீரையும் துடைச்சுக்கோ. நான் எதுவும் பாக்கல” என்றதும் காரை கொண்டு சென்று ஓரத்தில் நிறுத்தியவள் எழுந்து வெளியே வந்தாள்.


அங்கே இருந்த சாலையோர திட்டின் மீது அமர்ந்தவள் முகம் மூடி அழ ஆரம்பித்தாள். சில நிமிடங்கள் அவளை அழுகையை ரசித்தவளாய் அவள் முன் அமர்ந்து கைகளை விலக்கினாள்.


“ஏன் யாசி இவ்வளவு காதல உள்ள வச்சிட்டு சொல்ல யோசிக்கற. கடைசியில சொல்ல முடியாமலே போயிட போகுது யாசி. அதோட வலி ரொம்ப கஷ்டம்”

“என்னால அவன்கிட்ட சொல்ல முடியாது சாரா!!!”

“ஏன்?”

“சொல்ல முடியாது”

“அதான் ஏன்னு கேட்கிறேன்”

“ஏன்னா அவன் என் ப்ரெண்ட்!!!” சத்தமாக கத்தி சொன்னாள்.

“அவன் உன் காதல ஏத்துக்க மாட்டான்னு நினைக்கறியா?”

“ஆமா சாரா. நான் சொல்லி அவன் வேணாம் யாசின்னு சொன்னா கூட பரவாயில்ல. திட்டினாலும் அடிச்சாலும் கூட வாங்கிக்கலாம். ஆனா உன்ன ப்ரெண்டா தான் நினைக்கறேன்னு சொன்னா அப்பவே எல்லாம் போச்சு சாரா. எங்க இத்தன வருச ப்ரெண்ட்ஸிப்ப நானே அசிங்கப்படுத்தின மாதிரி இருக்கும் சாரா”

“அதுமட்டுமல்லாம அதுக்கு அப்புறம் நான் அவன் கூட பேசறப்ப எனக்கு கில்டியா இருக்கும். அவனும் என்கிட்ட இருந்து விலகி நடப்பான். இதெல்லாம் பாக்குற சக்தி எனக்கில்ல சாரா” என மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“யாசி என்னோட உள்ளுணர்வு எப்போதும் தப்பா நடந்தது இல்ல. நீ கட்டாயம் ஆதிய கல்யாணம் பண்ணுவ. ஆனா அதுக்குள்ள நீ நிறைய கஷ்டப்படுவ. ஆனா உன்னோட திருமண வாழ்க்கை அவனோடு தான்” என்று சாரா சொன்னவுடன் எழுந்து அவளை ஆரத்தழுவி கொண்டாள் கண்ணீரோடு.

அதன் பின்னர் இருவரும் ஆதி அழைக்கும் வரை காரில் பல விசயங்களை பேசிக்கொண்டே கொல்லிமலையில் சுற்றினார்கள்.




“ஆதி நான் ஒன்னு கேட்பேன். எனக்கு நீ ஃபேவரா பண்ணி தரனும்”


“சொல்லு சாரா. முடிஞ்சா பண்றேன்”

“நான் இங்க வந்ததே செல்வா கூட டைம் ஸ்பெண்ட் பண்ண தான். ஆனா எங்கையுமே ஸ்பெண்ட் முடியல ஆதி. அட்லீஸ்ட்” என்று இழுக்க,

“சாரி சாரா. நாம நினைச்ச மாதிரி எதுவும் அமையல. தயங்காம கேளு”

“நானும் அவனும் பின்னாடி சீட்டுலயாவது ஒன்னா உக்கார்ந்துட்டு வரோமே... அவனும் ரொம்ப ஆசையா வந்திருப்பான் என் கைகோர்த்து நடக்கனும்னு” என்றதும் ஆதிக்கு புரிந்தது.


“சாரி மச்சி. உன்னையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். நான் கார் ஓட்டறேன். நீங்க பின்னாடி உக்காருங்க” என்றான் ஆதி.

“ஏற்கனவே உனக்கு கால் வலி. நான் வண்டி ஓட்டிக்கறேன். நீ ரெஸ்ட் எடு. நீங்க போய் லவ்ஸ் பண்ணுங்க” என்று சாராவை பார்த்து சொல்ல அவள் கண்ணடித்து சிரித்தாள்.


அப்போது தான் யாசிகாவிற்கு புரிந்தது அவள் தனக்காக ஏற்படுத்திய வலை என்று. பெண் மனது பெண்ணிற்கு தான் புரியும் என்பது உண்மை தான் போல என்று நினைத்தாள்.

யாசிகா கார் எடுக்க ஆதி முன்பக்கம் அமர்ந்து கண்களை மூடினான். சாரா செல்வாவின் அருகில் அமர்ந்து அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்



“என்னடி செல்லம் அப்படி பாக்குற. உன்ன ரொம்ப ஏங்க வச்சிட்டேனா? சாரிடி என் செல்லகுட்டி. ஐ லவ் யூ” என்று தன் கண்களாலேயே சொன்னான் செல்வா.

அவன் கைவிரலுக்குள் தன் கை விரல்களை கோர்த்து அவன் தோளில் சாய்ந்தாள். அவளை அறியாமல் கண்களில் நீர் கசிய ஆரம்பித்தது.


சாரா, “டேய் மாமா... எத்தனை நாள் இந்த மாதிரி தலை சாய்க ஏங்கி இருப்பேன் தெரியுமா? எத்தனை இரவுகள் தூங்காமல் இருந்திருப்பேன் தெரியுமா? எனக்கு உன் மேல அவ்வளவு ஆசை இருக்கு!!”


அவன் கைகளை இறுக்கி பிடித்து தன் தலையின் மீது முகம் பதித்து கைகளில் கோலமிடும் தன் காதலனின் முகத்தில் தலையை ஆட்டி கன்னத்தில் வருடினாள்.

“சாரா உன்னோட இந்த மாதிரி இருக்க எத்தன தடவ கெஞ்சி இருப்பேன். இப்ப நீயே கேட்டு வாங்குற. அந்த அளவுக்கு காதல் இருந்தும் ஏன்டி இப்படி நடிக்கற”


“நீ மட்டும் நடிக்கலயா? நேத்து என் கூட பேசவே இல்ல. எனக்கு உன் மேல கோவம்” என்று விலகியவளை ஒரு நொடி ஏக்கமாய் பார்த்தான்.

நகர்ந்து சென்று அருகில் அமர்ந்து இரண்டு கைகளை தன் காதில் வைத்து மௌன மொழியில் மன்னிப்பு கேட்க புன்சிரிப்புடன் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் சாரா



சட்டென்று காரின் வேகம் குறைந்து ஓரத்தில் நிற்க இருவரும் பயந்து போனார்கள்.

செல்வா, “ஏன் யாசி என்ன ஆச்சு?” எனறு என்று பதற்றத்துடன் கேட்க,

“ரெண்டு நாளா லவ்வர் கூட சுத்தறோமே. அவளுக்கு ஆசையா ஒரு பூ வாங்கி கொடுக்கனும்னு தோணுச்சாடா உனக்கு” என்று கேட்க,

“இதுக்கு நீ அருகம்புல்ல தூக்கு மாட்டி தொங்கலாம்டா. இவ எல்லாம் காதல் பத்தி சொல்ற அளவுக்கு முட்டா பயலா இருந்திருக்கியேடா செல்வா” என்று ஆதி கிண்டலடிக்க,


“ஏதோ ப்ரப்போஸ் ஓவரா வருதுன்னு துள்ளாதீங்க ஆதி சார். உன் கூட ரெண்டு நாள். இல்ல இல்ல. ரெண்டு மணிநேரம் பேசுனா போதும். அவளே ஓடி போய்டுவா. நீ என்னைய பத்தி சொல்றியாடா தடிமாடு.”


இவர்கள் சண்டையிட்ட நேரத்தில் தன்னவளுக்காக ரோஜா பூவும் மல்லிகை பூவும் வாங்கி வந்தான்.

“டேய் என்னடா வாங்கி வந்த உடனே வச்சுவிடுற” யாசிகா கேட்க,

“ஹேய் என் பொண்டாட்டி நான் வச்சு விடுறேன். உனக்கு என்ன வந்திச்சு?”

“நான் என்ன என் பொண்டாட்டினா சொன்னேன். அவ உன் பொண்டாட்டி தான். ஆனா ஒரு ரோஸ் வாங்கிட்டு வந்தா லவ் ஓட ப்ரப்போஸ் பண்ணி கொடுக்கனும். எங்க முன்னாடி ப்ரப்போஸ் பண்ணு.”

“போடி லூசு” என்று வெட்கம் கொள்ள, சிரிப்போடு சாராவின் முகத்தில் நாணம் எட்டிப்பார்த்தது.

“ஏதோ ப்ளான் பண்ணிட்ட. நீ நடத்து யாசி” என்று சப்போர்ட் செய்ய ஆரம்பித்தான் ஆதி



“டேய் முட்டி போடு. அவள பாத்து இந்த ரோஸ கொடுக்கனும். சாரா நீ வாங்காம அவன கெஞ்சவிடனும். நீ கெஞ்சி ஐ லவ் யூ சொல்லனும். இது தான் இப்போ டாஸ்க். ஆதி எல்லாம் வீடியோ ரெக்கார்ட் பண்ணு”

“அதெல்லாம் வேணாம் யாசி” என்று உதடுகள் சொன்னாலும் சாராவின் மனம் ஏங்கியது அந்த செயலுக்காக...

தன் மொபைலில் ஆதி வீடியோ எடுத்து கொண்டிருக்க, செல்வா தன் வலது காலை முன்னிருத்தி முட்டியிட்டு ரோஜாவை நீட்டி, “ஐ லவ் யூ சாரா” என்றான்.

மறுகணமே அதை கையில் வாங்கியவள் அவன் கையின் பின்புறம் முத்தமிட்டாள். “ஐ லவ் யூ டு செல்வா” என்றாள்.

“ஏன்டி லூசு. நான் உன்கிட்ட என்ன டாஸ்க் சொன்னேன். நீ என்ன பண்ணி வச்சிருக்க. நான் எவ்வளவு எக்ஸ்பெட்டேஷனோட இருந்தேன் தெரியுமா?”

“ஹேய் அவன் பேசுனாலே நான் உருகுவேன். இப்ப இப்படிலாம் பண்ணினா எப்படி யாசி அமைதியா நடிக்க முடியும். எனக்கு அந்த அளவுக்கெல்லாம் சீன் இல்ல.” என்றாள்


“மச்சா அங்க பாருடா எவ்வளவு வெளிச்சமா இருக்கு. அந்த பல்பு எங்க கிடைக்கும்னு கேட்டு பாருடா.” ஆதி கிண்டலடிக்க முகம் சிவந்து போனாள் யாசிகா.


“நீயெல்லாம் கடைசி வரைக்கும் சிங்குள் தான்டா.” என்று ஆதியை பார்த்து கத்திவிட்டு காருக்குள் கோபத்துடன் புகுந்தாள் யாசிகா.

செல்வா சாராவிற்கு பூ வைத்துவிட அதை அழகாக ரசித்து பார்த்த ஆதியை ‘அதேபோல் எனக்கு எப்ப வைத்துவிட போற ஆதி’ என்று மனதிற்குள் கேட்டாள் யாசிகா.

தன் காதலனை ரசித்து கொண்டிருந்த வேளையிலும் கூட யாசிகாவின் கண்களில் தெரிந்த ஏக்கத்தை சாராவால் உணர முடிந்தது.


கொல்லிமலையில் தீராத மர்மங்கள் நிறைய உள்ளதாக சொல்லப்படுகின்றன. அதே போல தான் இன்று ஆதியும் மர்மங்கள் நிறைந்த அந்த குரலின் தேடல் புரியாமல் மலையை விட்டு இறங்குகிறான்.

யாசிகா காரை ஓட்ட களைப்பில் தன் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான். இருள் சூழ்ந்த அந்த மலை பகுதியில் அவள் காரை ஓட்டிக்கொண்டு இறங்க சாலையில் அங்கங்கே பாம்புகள் குறுக்கிட்டு சென்றன.


40 கொண்டை ஊசி வளைவுகள் தாண்டிய பிறகு ஆதியின் அசைவுகளில் மாற்றம் காண ஆரம்பித்தாள் யாசிகா....

“உன்ன சாகாடிக்காம விட மாட்டேன். உன் சாவு என் கையில்ல தான். மொத்தமா பழி தீர்க்க தான் இங்க வந்துட்டு போறேன். இனி தான் இருக்கு உனக்கு! போ…!போ…!” காருக்குள் ஆதி கத்தவும் யாசிகா வண்டியை நிறுத்த பின்னால் தூங்கி வந்த சாராவும் செல்வாவும் அதிர்ந்து போனார்கள்.

சுயநினைவு அடைந்த ஆதி சுற்றியும் பார்வையை செலுத்த அவர்கள் சென்ற பாதையில் விபத்து நடந்திருந்தது…
 
Top