அத்தியாயம் 7
"அம்மா நீ இல்லாம அந்த ஊருக்கு போய் நான் என்ன பண்ண முடியும்? அங்க யார எனக்கு தெரியும். நீயும் வாம்மா." என்றான் ஆதி.
"நீ போக போறது கோவிலுக்கு தான். அதனால அங்க யாரையும் உனக்கும் தெரிய வேணாம். நீ யாருனு மத்தவங்களுக்கும் தெரிய வேணாம். அதுவும் இல்லாம நீங்க பசங்க கார்ல போயிட்டு வந்திடலாம்.அதுவுமில்லாம நீ குழந்தை இல்ல கைய புடிச்சி கூட்டிட்டு போக."
வித்யா கூறுவதில் இருந்த உண்மையை உணர்ந்து ராகேஷூம் செல்வாவும் ஆதியை ஒத்துக்கொள்ள வைத்தனர்.
அன்றைய நிலா வெளிச்சத்தில் ஜன்னலை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஆதியின் தோளை பற்றிய வித்யா,
"ஆதி அங்க எக்காரணம் கொண்டும் நீதான் எங்க பையன்னு தெரிய கூடாது. எப்பவும் போல விளையாட்டு தனமா நடந்துக்காதடா." என கன்னத்தில் கைவைத்து வாஞ்சையுடன் கூறினார்.
"அம்மா யாருக்கும் தெரியாது. ஆனா அவர் சொன்ன மாதிரி ஆபத்து காத்திருக்குது எனக்கு. அங்க போய் என்ன கிடைக்கும்னு தெரியல."
"அதெல்லாம் சாமி நல்லதே தரும். நீ எதுக்கும் கவலைப்படாத. ஆத்தா மேல பாரத்த போட்டுட்டு போயிட்டு வா. இப்போ போய் தூங்கு. காலையில நேரமே எந்திரிக்கனும்ல." வித்யா தனது அறைக்கு சென்றார்.
"ஆதித்யா உன் ஊருக்கு செல்லாதே. உன் உயிரை எடுக்க அங்க பலர் காத்திருக்கின்றனர். ஆபத்து காத்திருக்குது." பெண்ணின் குரல் ஒலித்தது.
"யார் நீ? சொல்லு முதல்ல?"
"ஆதித்யா நீ குலதெய்வத்தை பார்த்தாக வேண்டும். இல்லையெனில் உன் உயிருக்கு ஆபத்து. எத்தனை தடைகள் வந்தாலும் திரும்பி வந்துவிடாதே." என்றது ஆணின் குரல்.
"நீங்க ரெண்டு பேரும் யாரு? எதுக்கு என் பின்னாடி வர்றீங்க. எதுக்கு என்கிட்ட பேசுறீங்க?" என்றதும் இரண்டு குரல்களும் அடங்கி போனது. "சொல்லுங்க. எங்க போனீங்க? வாங்க?" கத்தினான். ஆனால் நிசப்தம் அந்த அறையை தனதாக்கிக் கொண்டது.
உறக்கம் தொலைத்து தலைக்கு மேல் சுற்றி கொண்டிருந்த மின்விசிறியினை பார்த்து கொண்டிருந்தவன் கண்கள் சட்டென்று மூடியது.
அன்று கனவில் தன்னோடு வரச்சொன்ன அந்த பெண்ணின் முகம்." ஆதித்யனே எதை பற்றியும் கவலை கொள்ளாதே. நாளை உனது கடமையை மட்டுமே செய். குரல்களின் பிரசவம் புரிய வரும்" என்று சொல்லிவிட்டு கனவோடு போனாள்.
காலை நான்கு மணிக்கு செல்வா ராகேஷ் வந்து சேர்ந்தனர். கூடவே யாசிகாவும் வந்தது அவனுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
"நீ எதுக்கு யாசி வந்த?"
"என்னடா கேள்வி இது. கோவிலுக்கு போற. ஏன் நானெல்லாம் சாமி கும்பிட கூடாதா?"
"கூட்டிட்டு போய்ட்டு வாடா. அவளும் வரட்டுமே!"
"இல்லமா. இவ ஒரு லூசு. ஏதாவது உளறி வச்சிட போறா காரியம் கெட்டுரும்."அவன் சொன்னதும் அவளின் கண்ணில் கோபத்தீ தெரிந்தது.
"டேய் அவ கோவிலுக்குன்னு கிளம்பி வந்துட்டா. இனி விட்டுட்டு போக கூடாது. அதுவும் இல்லாம அவ சின்ன குழந்தை கிடையாது. நீ போய்ட்டு வா யாசி!" என்றதும் வித்யாவை அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு காரில் ஏறினாள் யாசிகா.
"எல்லாம் உன்னால தான்டா. எனக்கு ஏழரை கொடுக்கவே சனியை தூக்கிட்டு வருவீங்களாடா. போய்ட்டு வந்து உன் மண்டைய பொழக்குறேன் பாரு. இல்லனா அங்கயே உன்னைய பலி கொடுத்திடுறேன்."
"போடா! போடா! உன்னையெல்லாம் அப்ப இருந்து பாத்துட்டு தான் இருக்கேன். வந்து வண்டியில ஏறு." என்றதும் ஏறினான். கார் ஆதியின் சொந்த ஊரை நோக்கி பயணம் செய்தது. மலைகளுக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது அவன் ஊர்.
சுற்றியும் பச்சை பசேலென்று நெல் வளர்ந்திருந்தது. மறுபுறம் மக்காச்சோளம் கம்பும் கண்வலி கிழங்கு பந்தல்களும் அவர்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தது.
இடையில் அங்கங்கே நின்று தனது செல்போன் மூலம் போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்கள்.
"யாசிகா இப்ப நாம ஆதியோட குலதெய்வம் கோவிலுக்கு வந்திருக்கோங்கிறத மறந்திடுங்க. ஏதோ ஒரு கோவில்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க." என்றான் ராகேஷ்.
ஊர் எல்லையினை கார் நெருங்கியவுடன் பஞ்சர் ஆனது. எல்லையில் வேலும் கத்தியும் ஒரு புறம் இருக்க மறுபுறத்தில் சுமை தாங்கி கற்கள் இருந்தன. கார் டயரை மாற்றிக்கொண்டிருந்தனர்.
"யார் தம்பி நீங்கெல்லாம்? புதுசா இருக்கே ஊருக்குள்ள?" ஆடு மேய்த்து கொண்டு சென்றவர் கேட்க
"ஐயா நாங்க சென்னை. இங்க இருக்கற உக்கிரவீரமாத்தி அம்மன் கோவிலுக்கு வந்திருக்கோம்." என்று ஆதி சொல்ல,
"இந்த கோவிலுக்கா சென்னையில் இருந்து வந்திருக்கீங்க. அட போங்க தம்பி"
"ஐயா! என்ன ஆச்சுங்க? கோவில் இங்க தானே இருக்கு? வந்த ஊரு சரிதானே?"
"தம்பி இந்த கோவில்ல இருக்கறது சாமி இல்ல. வெறும் கல்லு தான். இதுக்கு அம்புட்டு தூரத்தில இருந்து வந்திருக்கீங்க." என்றார்.
"ஓய் சித்தப்பா. யாருகிட்ட பேசிக்கிட்டு இருக்க, யார் இவங்க?"
"நம்ம ஊரு கோவிலுக்கு வந்திருக்காங்க. இவங்கள என்ன சொல்றதுன்னு தெரியல." என்று சொல்லி விட்டு நகர்ந்தார் அந்த பெரியவர்.
"தம்பி என்ன விசயம். எதுக்கு அந்த கோவிலுக்கு வந்திருக்கீங்க"
"அண்ணா நாங்க சென்னை. ஜாதகம் பார்த்தப்போ ஒருத்தர் இந்த கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு வா. சீக்கிரம் உனக்கு கல்யாணம் ஆகும்னு சொன்னாரு. அதான் வந்திருக்கோம்." என்றான் செல்வா.
சத்தமாக சிரித்தவர், "தம்பி அதுக்கு திருச்செந்தூர், திருமணஞ்சேரி, ஸ்ரீரங்கம், திருவேற்காடுன்னு போகாம இந்த ஊர் கோவிலுக்கு வந்து இருக்கீங்களே . ஏதோ ஜோசியக்காரன் காச வாங்கிட்டு ஏமாத்திட்டான். ஊர் பக்கம் போய் வேலையை பாருங்க தம்பி." என்றார்.
"அண்ணா இவ்வளவு தூரம் வந்துட்டோம்ங்க. நேரா கோவிலுக்கும் போய் பாத்துட்டு போய்விடுறோம்."
"தம்பி இந்த ஊர்ல சாமி எல்லாம் இல்ல. அது கோவில விட்டுப் போய் பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. வெறும் கல்லு தான். கோயிலுக்கு வெளியே இருக்க கருப்பணசாமி தான் ஊர பாத்திட்டு இருக்கு. ஏதோ அங்கிருந்து வரேனு சொல்றீங்க! பாத்துட்டு போங்க."
நால்வரும் ஊருக்கு மேற்கு பக்கம் இருந்த உக்கிரவீரமாத்தி கோவிலை அடைந்தார்கள்.
பெரிய கருங்கல் கட்டிடம். சுற்றுசுவரே சொன்னது நெடுநாள் வரலாறு கோவிலுக்கு உண்டு என்று. பெரிய உருவ சிலையோடு முனியப்பன் அரிவாளை ஏந்தி நின்றிருந்தார்.
கருப்பணசாமியும் குதிரையின் மீது அமர்ந்த நிலையிலும் தனி சந்நிதியிலும் இருந்தார். அவர் முன்பு இருந்த வேலும் அரிவாளும் சிறு கல்லும் சொல்லியது அது ரத்தபலி கொடுக்கும் இடம் என்று.
"மச்சி கோவில பார்க்கும்போதே தெரியுதுடா! எவ்வளவு பெரிய கோவில்னு. இவ்வளவு பெரிய குதிரை எல்லாம் நான் டீவிலயும் ஃபோட்டோலயும் தான் பார்ப்பேன். இப்ப தான் நேர்ல பாக்குறேன்." என்றான் ராகேஷ்.
"யாருப்பா அது புதுசா இருக்கு?"
"என்னடா இது வர்றவன் போறவன் எல்லாம் கேட்குறான்?" என முனுமுனுத்தான் செல்வா.
"தம்பி இது கிராமம். யார் உள்ள வந்துட்டு போனாலும் கேட்போம். உங்க சிட்டி மாதிரி பக்கத்துவீட்டுல யார் இருக்கானு கூட தெரியாம வாழ மாட்டோம். சொல்லுங்க யார் நீங்க?" என்றதும் அதிர்ந்து போனான் செல்வா.
'இவருக்கு காது இவ்வளவு ஷார்ப்பா. பாம்பு காது போல' என்று நினைத்து கொண்டு, வந்த காரணத்தை கூறினான் முன்பு சொல்லியது போலவே சொன்னான்.
"பூஜை சாமான்கள் ஏதாவது கொண்டு வந்து இருக்கீங்களா?"
"எல்லாம் இருக்குங்க. பூ, மாலை, தேங்காய், எண்ணெய், வாழைப்பழம், சூடம் பத்தின்னு எல்லாம் கொண்டு வந்து இருக்கோம்" என்றான்.
"கொஞ்ச நேரம் அப்படியே கோவில சுத்தி பாருங்க. நான் தான் கோவில் பூசாரி. கொஞ்ச நேரத்தில வந்திடுறேன்" என்று கிளம்பி போனார்.
"வாங்கடா உள்ள போலாம்." என்று யாசிகா துள்ளி சென்றாள். கோயிலுக்குள் நுழைந்தாள். ஆனால் அப்போது அதன் பின்விளைவுகளை அவள் அறிந்திருக்க மாட்டாள்.
செல்வா ராகேஷ் உள்ளே சென்றார்கள். ஆதி நுழைய செல்லும் போது, அவன் முன்னே கிழிந்த ஆடைகளுடன் ஒருவன் வந்து நின்றான்.
"வந்துட்டியா? வந்துட்டியா? இனி ஒன்னும் பண்ண முடியாது. உனக்கு எமன் பக்கத்திலயே இருக்கான்." என்று தன் தலையில் அடித்து கொண்டு சிரித்து சிரித்து சுற்றி வந்தான். குழப்பத்தில் மூவரும் பார்க்க, ஆதியின் கண்களில் தெரிந்த பயம் அவர்களை நிலைதடுமாற வைத்தது.
"டேய்! டேய்! போடா! போடா லூசு பயலே!" என ஒருவர் அவனை துரத்திவிட்டு, "நீங்க தப்பா நினைக்காதீங்க தம்பி. அவன் லூசு பைய. யாராவது வந்தா உனக்கு எமன் பக்கத்திலயேன்னு உளறிட்டு இருப்பான். ஆமா நீங்க யாரு தம்பி? எங்க இருந்து வர்றீங்க?" என்ற கேள்விக்கு மீண்டும் அதே பதிலை சொல்லி சோர்ந்து போனான்.
"என்ன தம்பி விளையாடுறீங்க. இந்த கோவில் அப்படி ஒன்னும் பெரிய கோவில் கிடையாதே. அதுவும் இல்லாம இந்த அம்மன் இப்போ பேசறது கூட இல்லையே. கட்டி கிடைக்கே" என்றார் அந்த பெரியவர்.
"என்ன சார் சொல்றீங்க. எங்களுக்கு எதுவும் புரியல. எங்களுக்கு ஜோசியர் சொன்னாருன்னு தான் வந்தோம்." என்றான் ஆதி.
"வாங்க உள்ள போலாம். நல்ல காரியத்துக்காக வந்திருக்கீங்க. வாங்க!" என்று கோவிலுக்கு உள்ளே அழைத்து வந்தார் ஆதியை.
"ஆதித்யா செல். உனக்காகவே காத்திருக்கிறாள் அன்னை உக்கிரவீரமாத்தி அம்மன். தன் மகன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் அவளின் எண்ணம் ஈடேற போகிறது. உள்ளே செல் ஆதித்யா"
அவன் கால் எடுத்து வைத்த நேரம் கோவில் மணியோசை கேட்டது. கோவிலில் சுற்றி திரியும் சேவல்கள் கொக்கரித்தன. புறாக்கள் மொத்தமாக பறந்தன. ஆதியில் மனதில் இனம் புரியாத ஒரு மாற்றம் தெரிந்தது. ஏதோ ஒரு மகிழ்ச்சி மனதில்.
ஆனால் அந்த நிம்மதி ஒற்றை நிமிடம் கூட நீடிக்கவில்லை.
"டேய் கொலைகார பாவி! இன்னும் எத்தனை உசுர வாங்க காத்திருக்க? நீ நல்லா இருக்க மாட்ட. நல்லாவே இருக்க மாட்ட. உங்க அட்டூழியம் தாங்காம தான்டா எங்க சாமி ஊரவிட்டே போயிடுச்சு!" என்று கத்திய பாட்டியை பார்த்த அந்த நபர்,
"ஹேய் கிழவி! போ போன்னு சொல்றேன்ல. வந்தேன்னா கைய கால முறிச்சு கிடைல போட்டுறுவேன் பாத்துக்க." என்று விரட்டி அடித்தார்.
"சார் எங்களுக்கு எல்லாம் வித்தியாசமா தெரியுது. பாக்குறப்போ ஏதோ மாதிரி இருக்கு" என்றான் செல்வா.
"தம்பி இது கிராமம். இங்க நிறைய இருக்கும். அது எல்லாமே உங்களுக்கு புதுசா தான் தெரியும். இவ்வளவு நேரம் என்னை திட்டியவங்க என்னோட அத்தை தான். வாங்க போலாம்" என்று நடை சுற்ற ஆரம்பித்தார்கள்.
"சார் கோவில் வரலாறு சொல்ல முடியுமா?" யாசிகா கேட்க,
"இந்த கோவிலுக்கு ஆயிரம் வருஷம் வரலாறு உண்டு. இந்த கோவிலுக்கு பூர்வகுடி எங்க மாமன் வீடு தான். கோவிலுக்கு பூஜை திருவிழான்னு எல்லாமே அவங்க குடிபாடு தான்"
"குடிபாடுன்னா?"
"வம்சம் தம்பி"
"இந்த கோவில் சுத்து மதில் கட்டி 800 வருஷம் ஆச்சு. இந்த ஊர் பேரு அன்னைக்கு சிவநாதபுரி. ராஜா ரத்தினேசுவரன் தான் இந்த சுவர் எழுப்பினது. அதுக்கு அப்புறம் நிறைய பேர் ஆண்டாங்க"
"சார் ரொம்ப இண்ட்ரெஸ்டிங்"
"அப்புறம் வெள்ளைக்காரன் ஆட்சில எல்லாமே மாறிப்போச்சு"
"சார் சாமி பேசல. சாமி இல்ல. வெறும் கல்லு தான் இருக்கு. இன்னும் ஏதேதோ சொல்றாங்க. ஏன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?" ஆதி கேட்க,
"இந்த கோவிலோட குடிபாட்டுக்காரங்க யாரும் இப்போ உயிரோட இல்ல. பத்து வருஷத்துக்கு முன்னாடி எல்லாரும் இறந்துட்டாங்க." என்று அவர் சொன்னதும் எங்கோ இருந்து சூறைக்காற்று வேகமாக வீசியது.
மண் புழுதி பறக்க மணிகள் ஆடி ஓசையை எழுப்பியது சில நிமிடங்கள்.
மண்டப தூணுக்கு பின்னால் மறைந்து அமர்ந்தவர்களிடம், "தம்பி வருசா வருஷம் சித்திரை மாசம் இந்த அம்மனுக்கு திருவிழா நடக்கும். இந்த வருசம் யாரு கும்பத்தை தலையில் எடுக்கிறது. வாள் யாரு எடுக்கிறதுன்னு ஆத்தா உத்தரவு கொடுப்பா."
"பத்து வருஷத்துக்கு முன்னாடி என் மருமகன் செந்தில் தான் பூசாரி. அவனும் அவன் பையனும் தான் எடுத்தாங்க அஞ்சு வருசமா. ஒரு ஆக்சிடென்ட்ல குடும்பத்தோட இறந்துட்டாங்க." என்றதும் அவர் கண்களில் நீர் பெருகியது.
"மத்த யாரும் இல்லையா அவங்க சொந்தகாரங்க? இப்ப கூட ஒருத்தர் நான் பூசாரின்னு சொல்லிட்டு போறாரு?" ராகேஷ் கேட்க,
"தம்பி இது அவங்களுக்கு தான் குலதெய்வம். அவங்க தான் கோயிலுக்கு சேர்ந்தவங்க. அவங்க தான் எல்லாம் பண்ணனும். நாங்க உறம்பறையான் கூட்டம். கோவில் வீணா போயிட கூடாதேன்னு கும்பிட்டுட்டு வரோம்" என்றார்.
"அதான் கோவில்ல பூஜை நடக்குதே. அப்புறம் ஏன் சாமி பேசலன்னு சொல்றாங்க?" ஆதி கேட்க,
"தம்பி பூஜை சாமான் எல்லாம் எடுத்துட்டு வாங்க." குறுக்கிட்டார் பூசாரி.
"யாசி எல்லாம் கார்ல இருக்கு, எடுத்துட்டு வா."
என ஆதி சொல்ல அனைத்தும் எடுத்து வந்து கொடுக்க,
"நான் எல்லாம் ரெடி பண்ணிட்டு கூப்டுறேன்!" பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றார் பூசாரி.
"சாரி சார். ஏன் சாமி பேசலன்னு சொல்ல முடியுமா?"
"என்ன தான் பூஜை நடந்தாலும் தன்னோட வம்சம் பண்ற மாதிரி வருமா? நாங்களும் திருவிழா நடத்த முயற்சி பண்ணினோம். ஆனா கும்பம் தூக்க ஆள் குறிச்சா அவங்க இறந்து போக ஆரம்பிச்சாங்க."
"ஏன்னு தெரியாதப்போ ஒரு சாமியார் வந்தார். இந்த கோவிலுக்கு சொந்தகாரன் தான் கும்பத்த தூக்க முடியும். மத்தவங்க யாராவது தூக்க நெனச்சா அவங்க உயிர் போயிடும்னு சொன்னார். அதுக்கு அப்புறம் நாங்க யாரும் முயற்சி பண்ணல."
"திருவிழா இல்லாம, கும்பத்தில் உயிர் கொடுக்காம, சாமிக்கு சக்தி கொடுக்க முடியாதுபா. அதுவுமில்லாம கோவில் குடிபாடு இல்லாதவங்க அதிலும் அதிகமாக வைக்கல. கோவில் மூடிட கூடாதுன்னு தான் இப்போ தொறந்து வைத்திருக்கோம்" என்றார்.
"ஏனுங்க சார் ஒரு சந்தேகம்! இந்த ஊரைவிட்டு வேலைக்காக வெளியூர் போனவங்க. இல்ல வேற ஊர்ல இருக்கிறவங்கனு யாரும் இல்லையா?"
"இருக்கலாம் தம்பி. ஆனா இங்க வந்து மண்ண மிதிச்சா தானே மறுபடியும் திருவிழா நடக்கும். ஊரும் செழிக்கும்" என்றார்.
"சார் அப்போ வெளிய கருப்பணசாமிக்கு கிடா வெட்டு எல்லாம்?"
"அவங்க காவல் தெய்வம் தம்பி. அதெல்லாம் நடக்குது. முனியப்பனுக்கு பங்குனி மாசம் முப்பூசை இருக்கு. வீரமாத்திக்கு மட்டும் எதுவும் இல்ல" என்றார்.
"சார் ஒருவேள இந்த கோவில் குடிபாட்டுகாரங்க இங்க வந்து பூஜை பண்ணினா சாமிக்கு சக்தி வந்திடுமா?"
"வரலாம் தம்பி. ஆனா ஆள் வரனுமே. சாமியும் உத்தரவு தரனுமே. போங்க தம்பி. உங்க வேண்டுதல நிறைவேத்திட்டு போங்க." என்று கிளம்பினார் அந்த பெரியவர்.
"தம்பி வாங்க! பூசை ஆரம்பிக்கலாம்." என பூசாரி சப்தமிட்டதும் நால்வரும் எழுந்து சென்றார்கள்.
தண்ணீர் ஊற்றிவிட்டு பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், மஞ்சள், சீகற்காய், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி என்று அனைத்து அபிஷேகமும் சாமிக்கு செய்யப்பட்டது.
பூசாரியின் வாயிலிருந்து வந்த மந்திரங்கள் அனைத்தும் அடிமனதில் இருந்து வெளிப்பட்டது.அன்று அந்த பூசாரிக்கு ஒரு வித மகிழ்ச்சி தோன்றியது.
கோவில் மணியோசை கேட்டு சிலர் அங்கு வந்தனர். அதில் சிறிது நேரத்திற்கு முன் திட்டிய அந்த கிழவியும் அடங்குவார்.
"தம்பி அரைமணி நேரம் ஆகும் அலங்காரம் முடிய. உக்காந்திருங்க." என்று திரைச்சீலைய போட்டார் பூசாரி.
"ஆதி எப்படி இருக்கு உனக்கு"
"பேச்சே வரலடா. அம்மா சொன்ன விசயம் எல்லாம் ஞாபகம் வருது. ஜிவ்வுன்னு இருக்கு." என்று தன் கைகளை நீட்டி முடிகளை காண்பித்தான். அப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
"தம்பி பாருங்க!" என்ற குரல் மட்டும் கருவறையில் இருந்து வெளியே வர அனைவரும் ஆவலோடு இருந்தார்கள்.
திரைச்சீலை விலக்கி ஆராதனை தீபம் முன்பு இருக்க மிரண்டு போனான் ஆதி. அவன் கண்களில் நீர் பெருகியது. அதிர்ச்சியில் கைகால் எல்லாம் உறைந்து போனது. கற்பூர ஆராதனை காட்டும் போது அவன் கண்கள் இறுகியது.மெல்ல இமைகளை மூடினான்.
பிறகு…
தொடரும்...