Malini Sundar
Member
" நான் போடறேன் " என குரல் வந்த திசையில் நின்றிருந்தான் அவன்.
அவனை பார்த்து த்விஜா அதிர்ச்சியாக, ராகனோ சிரித்தான்.
" வாடா ஜூனியர் " என்றழைத்தான்.
" வணக்கம் சீனியர் " என்றான் அவன்.
" வா வா.. வந்து கை எழுத்து போடு.உனக்கு தா வெயிட்டிங் "
" வரேன்..வரேன்"
அருகில் வந்தவன், ரெஜிஸ்டாரிடம் தன் ஐ டி கார்ட்டை காட்ட, விவரங்கள் குறித்து கொண்டார்.
" நீங்க அவங்களுக்கு என்ன வேணும்? "
" நா அவங்க ஃப்ரெண்ட் தான். "
த்விஜாவின் முகத்தில் இருந்த அதிர்ச்சி , குழப்பம் ரிஜிஸ்டாருக்கும் தொத்திக்கொண்டது.எது எப்படியோ போகட்டும் என விட்டுவிட்டார்.
அனைவரும் கையெழுத்திட்ட பின்
" சார் . ஃபிஃப்டீன் டேஸ்ல ரெடியா இருக்கும் .நீங்க வந்து வாங்கிக்கலாம்." என அவர் கூறியதும், சரியென ஒப்புக்கொண்டு அனைவரும் கிளம்பினர். வழியில் ஹோட்டலில் சாப்பிட்டு வட்டு வீடு வந்தனர்.
வீட்டிற்கு வந்து நின்றது அவர்களின் கார். கல்பனா முதலில் இறங்கினார்.
" உள்ள வாம்மா " என அழைந்தார்.த்வானிக்கு ஏக சந்தோஷம். குதித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
த்விஜாவோ, தன் கழுத்தில் தொங்கும் தாலியை பார்த்துக்கொண்டிருந்தாள்.மனதில்
என்னென்னவோ வந்து போனது, கண்களில் கண்ணீரை விட்டுச்சென்றது.
" வா த்விஜா.." என ராகனும் அழைக்க, த்வானியுடன் திருமதி .ராகப்ரியனாக உள்ளே ப்ரவேசித்தாள்.
மாலை வரை த்விஜாவிற்கு மனம் சஞ்சலத்திலேயே இருந்தது, அவள் முகத்தில் நன்றாக ப்ரதிபலித்தது.
மாலை தேநீர் அருந்தி விட்டு, ராகனிடம் வந்த அவன்,
" சீனியர் அப்ப நா கிளம்பறேன். லக்கி டா நீ.. லவ் பண்ண பொண்ணயே எப்டியோ கல்யாணம் பண்ணிட்ட! "
" டேய்..நீ வேற ஏண்டா.. அவ காதுல விழுந்துட போகுது "
" அதெல்லாம் விழாது " என அவன் கூற, அனைத்தையும் கேட்டவாறு உள்ளே நுழைந்தாள் த்விஜா. இருவரையும் ஸ்கேன் செய்தன கண்கள்.
" அய்யயோ..அண்ணாத்த.. காதுல விழுந்துருக்கு மா? "
அவனை எரித்துவிடுவது போல் பார்த்தான் ராகன்.
" எல்லாம் சொல்லிட்டு அப்றம் என்ன.. கிளம்பு "
" ரைட்டு.. பை..எஞ்சாய் " என கிளம்பினான். த்விஜாவிடம் சென்றான். அவன் பேச ஆரம்பிப்பதற்கு முன் அவள் பேசினாள்.
" வந்து சைன் பண்ணினதுக்கு தேன்க்ஸ் " சிறிய முறுவல் எட்டிப்பார்த்தது.
" ஹாப்பியா இருங்க! நா வரேன் " என கிளம்பினான்.
" ஒரு நிமிஷம்.."
திரும்பினான்.
" என்ன எதோ லவ்னு சொல்லிட்டு இருந்தீங்க?"
" அத அவனையே கேளு. நா வரேன்." என கிளம்பினான் ராகுல். டாக்டர் ராகுல்.
த்விஜாவிற்கோ குழப்பமாக இருந்தது. ராகுல் ராகனை சீனியர் என அழைத்தது.காதல் பற்றி பேசியது என அனைத்தும் குழப்பமளித்தது. த்விஜாவின் குழப்பம் நிறைந்த முகத்தை பார்த்தவனுக்கோ வயிற்றில் புளியை கறைத்தது.பிறகு கேட்டுக்கொள்ளலாம் என த்விஜாவும் நகர, ராகனுக்கு மூச்சு சீராக இருந்தது.
த்வானி இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு இருந்தாள். கல்பனா பரபரவென இருந்தார்.ராகன் த்வானியை பார்த்து கொண்டு இருந்தான். த்விஜாவிற்கு தான் முகத்தில் இருந்த சந்தோஷம் முழுதுமாக துடைத்து வைத்தாற்போல் இருந்தாள். அதை அவ்வப்போது கவனித்து க் கொண்டு இருந்தான் ராகன்.
" கேக்கலாமா " என தோன்றியது. இருப்பினும் " சொல்லுவாளா " என சந்தேகம் எழுந்ததால், அமைதி காத்தான். அவளின் கண்கள் கண்ணீரை ப்ரசவித்த நொடி, அவளின் முன் நின்றிருந்தான் அவன்.
" வா இங்க " என அவன் கத்தியதில் கண்ணீரை விட மறந்தாள். தரதரவென கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவனின் அறைக்கு சென்றான். கல்பனா அங்கு எதையோ செய்து கொண்டிருக்க
" அம்மா. கொஞ்சம் வெளிய இருங்க "
" அதுக்குள்ள என்ன டா அவசரம் "
" அம்மா!!! " என கத்தினான்.
கல்பனா அப்போது தான் த்விஜாவின் முகத்தை கவனித்தாள்.
" பாத்துக்கோ தம்பி " என வெளியேறினார்.
கதவை அடைத்தவன் த்விஜாவிடம் நகர்ந்தான். த்விஜாவின் தலை தொங்கியிருந்தது. கண்கள் கலங்கி மிரண்டிருந்தன.
" என்ன ஆச்சு?? "
பதில் இல்லை
" உன்ன தா கேக்கறேன் "
கண்கள் அவனை பார்த்தன.
" ஒன்னும் இல்ல..என்ன போக விடுங்க! " என கதவை நோக்கி நகர்ந்தாள். போனவளை போன வேகத்தில் இழுத்தான். இழுத்த இழுப்பில் வந்தவள்,அவனுக்கு மிக அருகாமையில் நின்றிருந்தாள்.
" ப்ளீஸ் விடுங்க.. என்னமோ அன்னைக்கு நல்லவன் மாறி ஒத்துகிட்டீங்க..இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க! "
" நீ எதுக்கு இப்டி இருக்க! "
" எல்லாத்தையும் உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல " என வெளியேறினாள்.
இரவு உணவு முடித்து, த்வானியை தன்னுடன் அழைத்து செல்ல கல்பனா எத்தனிக்க, ராகன் மறுத்துவிட்டான்.
" த்வானி குட்டி ..தூங்கலாமா? "
" ஓகே அங்கிள் "
" இனிமே என்ன அங்கிள்னு கூப்பிடாம அப்பான்னு கூப்பிடறியா? "
" ஏன்? "
" நா அம்மாவ கல்யாணம் பண்ணிகிட்டேன்ல..அதுனால "
" அதா ஏன்? "
" அப்ப தா அம்மா இங்கயே இருப்பாங்க த்வானிக்குட்டியோட "
" ம்ம்ம் ஓ..ஹோ "
" சரி வா தூங்கலாம் " என இருவரும் படியேறினர். த்வானியை அழைத்து சென்றதை பார்த்தவளுக்கு அப்போது தான் மூச்சு சீரானது.
" நீ போ மா " என கல்பனா அவளையும் அனுப்பி வைத்தாள். குழப்பத்துடனேயே படியேறினாள். கதவை திறந்தவள் பார்த்தது, அங்கு இருந்த பூக்கள் அனைத்தையும் குப்பை தொட்டியில் போட்டுக்கொண்டிருந்த இருவரையும்.
" அம்மா நா நீ வரத்துக்கு முன்னாடியே சூச்சூ போய்ட்டேன். தூங்கலாமா? "
" சரி செல்லம் " என படுக்கையில் அமர வந்தவளை
" என்ன நீ. ட்ரெஸ் மாத்தலையா? டைலி நைட்டிலதான நம்ம தூங்குவோம். பாரு நா மாத்திட்டேன். "
என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
" த்வானிகுட்டி..அம்மா அப்றமா மாத்திப்பாங்க என்ன..வா நம்ம தூங்கலாம் " என ராகன் அழைத்தான்.
" சரி " என படுத்துக் கொண்டது.
அரைமணி நேரம் கழிந்த நிலையில், த்வானி தூங்கியிருந்தாள். த்வுஜாவின் முகமோ அவள் ஆழ்ந்த யோசனையில் இருப்பதை உணர்த்தியது.
அவளிடம்
" என்ன யோசனை? "
" ஒன்னும் இல்ல..நீங்க எத்தன வாட்டி கேட்டாலும் இதான் என் பதில் "
சற்று அமைதியானவன், மனதில் தோன்றியது. அவளை கூப்பிட்டான்.
" ஜா.... "
அடுத்த நொடி கோவம் தலைக்கு ஏறியது அவளுக்கு.
" என்ன கூப்ட ?"
" ஜா.... "
" என்ன அப்டி கூப்பிடற உரிமைய நீ எப்பவோ இழந்துட்ட! "
( இசைக்கும் )