Malini Sundar
Member
த்விஜாவந்தி – ஆரோஹனம் 13
மனைவியாக நேசிக்க தொடங்கியிருந்த நாட்கள் அவை. தனக்கு சிறுவயதிலிருந்தே தெரிந்த வண்டுவை நேசிப்பது அவ்வளவு கஷ்டமாக இல்லை. இருப்பினும் அவ்வப்போது , காதலியின் ஞாபகம் வரும். அவள் ஏன் அப்படி செய்தாள் என்பது போல. யாரிடம் கேட்பது, என்ன கேட்பது என புரியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.
அப்போது வரை வந்தனாவிற்கு ராகன் இன்னொரு பெண்ணை காதலித்தது தான் தெரியாதே. வாழ்க்கை அழகாக ஓடிக்கொண்டிருந்தது. ராகன் தன் தந்தையின் பப்ளீஷிங்க் பிஸ்னஸை மேம்படுத்த வேண்டிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தான். ஒரு கிளையாக இருந்தது இரண்டாக வளர்ந்தது. புதுக்கிளையை ராகன் பார்த்துக்கொண்டான், வேறு ஊரில். வந்தனாவும் ராகனும் அங்கு வீடு பார்த்து அங்கு குடியேறினர். அப்படி ஒரு நாளில் தான் அவனுக்கு வீட்டிலிருந்து கால் வந்தது.
“ மாமா.. வீட்டுக்கு வரீங்களா ? “
“ என்ன விஷயம் வண்டு. வேலையா இருக்கேன் “
“ நீ வாங்க சொல்றேன். லன்ச்ல வாங்க “
“ சரி டீ பொண்டாட்டி “ என வைத்தான்.
வேலையில் கவனம் செலுத்தியவன், மதிய சாப்பாட்டு நேரம் வந்தது தெரியாமல் வேலை தொடர்ந்தது. அவனின் வேலையை நிறுத்தியது வண்டுவின் அழைப்பு.
“ மாமா. இன்னும் வரலியா நீங்க ?”
அப்போதே மணியை பார்த்தான்.
“ மறந்துட்டேன் வண்டு. தோ கிளம்பறேன் “
“ ம்ம்ம். சீக்கிரம் வாங்க “ என இணைப்பை துண்டித்தாள்.
வேலையை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பினான் வீடு நோக்கி.
வீட்டிற்கு வந்தவன் முகம் கழுவி, சாப்பிட அமர்ந்தான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை ஒன்றும் பேசவில்லை. சப்பிட்டவனுக்கோ சாப்பாடு இன்று சுவை அதிகமாக் இருப்பதாக தோன்றியது.
கை கழுவி வந்தவன்
“ என்ன இன்னைக்கு டேஸ்ட் ஜாஸ்தியா இருக்கு? “
“ அப்டியா ?” என்றவளின் குரலில் சந்தோஷம், சந்து பொந்தெல்லாம் ஓடியது.
“ என்ன விஷயம். சொல்லு. கொஞ்சம் அழகா வேற தெரியுற” என நெறுங்கினான்.
“ம்ம்ம்ம்ம்!!! தெரிவேன் . தெரிவேன்.. அங்கயே நில்லுங்க. என்ன எதாவது செஞ்சீங்க., அத கேக்க ஆள் இல்லைன்னு நினைச்சீங்களா ?”
“ யார் இருக்கா? அப்பா அம்மா வந்துருக்காங்களா?” என கண்கள் அவர்களை தேடின.
“ அங்க யார தேடுறீங்க ? அவங்கல்லாம் வரல “
“ அப்றம் “
“ நா சொல்ற ஆளு வர இன்னும் ஒரு பத்து மாசம் ஆகும். “
சொன்னவளின் கன்னங்கள் குங்குமத்தை தத்தெடுத்தன.அவள் கூறியது அவனுக்கு புரிய சில நிமிடங்கள் பிடித்தன. புரிந்தவனின் கண்கள் விரிந்தன.
“ நிஜமாவா வண்டு ? “ என நெறுங்கினான்.
“ ம்ம்ம்”
“ நா ரொம்ப ஹாப்பியா இருக்கேன் வண்டூ “ என்றான், அதை அவன் முழுதுமாக அனுபவிக்க மாட்டான் என தெரியாமல்.
“ நானும் தா மாமா..”
“ எனக்கு பொண்ணு தா வேணும் . உன்ன மாதிரியே “ என அவளின் மூக்கை பிடித்து இழுத்து , நெற்றியில் முத்தமிட்டான். அவனுக்கு சட்டென தன் காதலியுடன் பேசிய விஷயம் நினைவு வந்தது.
“ நமக்கு கல்யாணம் ஆகி, எனக்கு பொண்ணு வேணும் “ என்றான் ராகன்
“ ஏன்?”
“ அது அப்டி தான். “
“ ஏன்னு சொல்லு “
“ என் பேரு என்ன? “
“ உன் பேரு தான் தெரியுமே “
“ ம்ம்ம் . உன் பேரு என்ன ?”
“ அதும் மறந்து போச்சா. “
“ இல்ல. எனக்கு பிடிச்ச ராகத்தோட பேரு “
“ சரி. அதுக்கும் நமக்கும் பொண்ணு பொறக்குறதுக்கும் என்ன சம்பந்தம் ?”
“ உன் பேரு ஒரு ராகம் அதும் எனக்கு பிடிச்ச ராகம்.நா ராகப்ப்ரியன். இது ரெண்டுத்தையும் இணைக்கிறது தான் அதுல இருக்கற நாதம். அதாவது த்வனி.. நா நம்ம பொண்ணுக்கு த்வானின்னு பேர் வைப்பேன். “ எங்கிற பழைய உரைடாடல் நினைவு வந்தது. இப்போது, நகழ்விலேயும் தனக்கு மகள் பிறந்தால் “த்வானி” என பெயர் வைக்க முடிவு செய்தான்.
மாதங்கள் உருண்டோட, அன்றைக்கு அவள் பிரசவத்திற்காக கிளம்பிக்கொண்டு இருந்தனர் இருவரும். திடீரென ஆஃபிசில் தீவிபத்து என ஃபோன் வர, ராகன் செய்வதறியாது முழித்தான். வந்தனா
“ மாமா, ஒரு மணி நேரம் தானே. ட்ரைவர் அண்ணா தான் இருக்காரே, நான் முன்ன போறேன். நீங்க் என்னன்னு பாத்துட்டு வாங்க “
“ இல்ல வண்டு.. இந்த நிலமையில உன்ன எப்டி தனியா அனுப்பறது.?”
“இல்ல மாமா. ஒன்னும் ப்ரச்சனை இல்ல. நா பாத்துக்கறேன். டெலிவரிக்கு இன்னும் நாள் இருக்குல. ஒன்னும் ஆகாது. அண்ணா மெதுவா தான ஓட்டுவாரு “
பலத்த யோசனைக்கு பின் , தன் தந்தைக்கு கால் செய்து, விவரம் கூறிவிட்டு, வந்தனாவை காரில் ஏற்றி அனுப்பி வைத்தான். அவனுக்கு தான் இனி வண்டுவை பார்க்க போறதில்லை என தெரியாமல் போனது.
அவர்களை அனுப்பிவிட்டு, அலுவலகம் விரைந்தவனுக்கோ, தென்பட்டது, பாதி எரிந்து சாம்பலான அலுவகம் தான். ஃபையர் எஞ்சின் வந்து அனைத்தையும் சரி செய்து, மற்ற ஃபார்மாலிட்டீஸ் செய்து கொண்டு இருந்தவனுக்கு வந்தது ஃபோன் கால்.
“ ஹலோ..”
“ஹலோ சார். TN 85.BA 2345 உங்க காரா சார் “
“ ஆமா ஏன் ? நீங்க யாரு./?”
“ சார் அந்த வண்டி ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. ரெண்டு பேர் சாப் அவுட் . அத சொல்ல தான் கால் பண்ணினேன். நா இங்க ஜீ ஹெச்லேந்து பேசறேன் “
“ என்ன சொல்றீங்க..தோ வரேன் “ என கூறியவனின் குரல் உடைந்திருந்தது.
அடித்துபிடித்து ஜீ ஹெச்சுக்கு விரைந்தான் ராகன். ரிஷப்ஷனில் விசாரிக்க, அவர்கள் பின்னால் ஒரு அறைக்கு போகும் படி கூற, அங்கு ஓடினான் பைத்தியக்காரனைப்போல்.
அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாது என மனம் அடித்துக்கொண்டது. அவள் ஓருயிரல்லாமல், இன்னொரு உயிரை சுமந்துகொண்டு இருந்தாளே என மனம் படபடத்தது. அங்கு சென்றவனுக்கு உலகம் மொத்தமாக நின்றிருந்தது.
அடையாளம் தெரியாத அளவு முகம் சிதைந்திருந்தது. பக்கத்தில் டிரைவரும்
உயிரற்று இருக்க, இமைக்க மறந்தான்.
சட்டென ஏதோ நியாபகம் வர, அங்கிருந்த செவிலியிடம்
“ சிஸ்டர். குழந்த..குழந்த என்னாச்சு ?”
“ என்ன குழந்த..அங்க இவங்க ரெண்டு பேர் தா இருந்தாங்கன்னு சொன்னாங்க சார்.ஆம்புலன்ஸ் தான் பாடிங்கள எடுத்துட்டு வந்துச்சு.”
“ இல்ல இல்ல. .. அவங்க என். என் வைஃப் ப்ரெக்னனட்டா இருந்தாங்க “
“ சார். எங்களுக்கு கிடைச்ச இன்ஃபர்மேஷன் படி, இவங்க ரெண்டு பேர் தான் அங்க இருந்ததா சொல்லி இங்க கூட்டிட்டு வந்தாங்க “
ராகனுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. யாரிடம் என்ன கேட்பது . எடுத்து என்ன செய்வது என எதுவும் புரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டான்.கண்ணீர் தரை தாரையாக வழிந்தது. வண்டு போல தன்னை சுற்றி சுற்றி வந்த தன் வண்டுவிற்காக அழுவதா, இல்லை, என்ன ஆயிற்று என தெரியாத , தன் குழந்தைகாக அழுவதா, இல்லை அவர்களை தனியாக அனுப்பிய தன்னையே நொந்துகொள்வதா என தெரியாமல் குழம்பினான்.
“ சார். பாடிய எடுத்துட்டு போக ஏற்பாடு பண்ணுங்க சார். நிறைய போஸ்ட் மார்டம் கேச் இருக்கு “ என அங்கே இருந்த ஆள் கூற, தன் நினைவிற்கு வந்தான்.
என்ன செய்வதென தெரியாமல் தன் தந்தைக்கு ஃபோன் செய்தான்
“ அப்பா…” அழும் அவன் குரலை கேட்டவருக்கு வயிறு பிசைந்தது.
“ என்ன ராகா. என்ன ஆச்சு? குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு? வந்தனா எங்க ?” என கேள்விகளை அடுக்கினார்.
“ அப்பா… அ…அவங்க வந்த கார்..”
“ காரு..?”
“ ஆச்சிடென்ட் ஆகியிருச்சுப்பா.. ரெண்டு பேரும்…” என நிறுத்தினான்.
“ என்ன சொல்ற…” என கத்தினார்.
“ ஆமாப்பா… நீங்க உடனே ஜீ ஹெச்சுக்கு வாங்க “ என இணைப்பை துண்டித்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ராகனின் பெற்றோர் அங்கு வந்தனர்.
“ டேய்.. என் பொண்ண என்ன டா பண்ண?” என அவன் தந்தை கேட்டது, அவனின் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தவனின் கன்னத்தில் சரமாரியாக விழுந்தது அறைகள். சிலை போல நின்றிருந்தான். கண்கள் காய்ந்திருந்தன.வழிந்த கண்ணீர் கன்னத்தில் தடயத்தை விட்டுச்சென்றொருந்தது.
“ குழந்தை எங்க ?” என கல்பனா கேட்ட கேள்விக்கு பதில் கிட்டாமல் போனது.
“ உன்ன தான். குழந்தை எங்க?” என உலுக்கினாள்.
“ தெரீல “ என பதில் வந்ததும் மீண்டும் விழுந்தது ஒரு அறை.
குற்ற உணர்ச்கியில் தத்தளித்துக்கொண்டு இருந்தான் ராகன். பாடிகளை ஆம்புலன்ஸ்சில் ஏற்றிவிட்டு மூவரும் வீடு வந்து சேர்ந்தனர். டிரைவரை அவர் குடும்பத்திடம் ஒப்படத்துவிட்டு வந்தனாவிற்கு அவளின் இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு தன் அறறைக்கு சென்றான்.மனம் அழுத்தியது. எதற்கு அழுவதென்று தெரியாமல் தவித்தான். தன் குழந்தை என்ன ஆயிற்று. ஒரு வேளை பிறந்திருந்தால் அது எங்கே, இல்லை பிறக்காமல் வந்தனாவோடு.. என நினைப்பதற்கே மனம் வலித்தது. அப்படி இருந்தால், மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்குமா? என பல விதத்தில் யோசித்தும் விடை கிடைக்காமல் போனது.
அடுத்து வந்த நாட்களில் தன் தந்தையின் குத்தி காட்டும் பேச்சுகள், ஏற்றனவே முளைத்திருந்த அவனின் குற்ற உண்ர்ச்சியை மேலும் அதிகரித்து. கிட்ட திட்ட, பைத்தியம் ஆகியது போல்ச் இருந்தான். இப்படியே போனால் என்ன ஆவது என நினைத்து அந்த முடிவை எடுத்தான்.
இரண்டொரு நாள் கழிந்த நிலையில் , காலை வேலையில் தன் பட்டிய்யுடன் நின்ற ராகனை பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சியானது.
“ நா இங்கேந்து கிளம்பறேன் “
“ எங்க ?” கேட்டார் அவனின் தந்தை.
“ எங்கயோ போறேன் . உங்களுக்கு எதுக்கு அந்த கவலை. இங்க இருந்தா, உங்க குத்தல் வார்த்தையிலயே என்ன கொன்னுடுவீங்க! “
“ …..”
“ ஆமா, என் பொண்டாட்டி செத்துட்டா. புள்ள என்ன ஆச்சுன்னு தெரீல.. தப்பு தான் . நானும் கூட வந்திருக்கணும். வரல. முடிஞ்சிபோச்சு.. சும்மா அதையே சொல்லிட்டு இருக்கீங்க? “
“….”
“ இந்த மாறி குத்தல் பேச்ச கேட்டுட்டு என்னால வாழ முடியாது. நா போறேன். வண்டுவோட என் லைஃப் முடிஞ்சு போச்சு. நா எங்க இருக்கேன்னு தேடாதீங்க. எனக்கு வரணும்னு தோணுச்சுன்னா நானே வருவேன் “
“ தம்பி.. அப்பா எதா ஆதங்கத்துல சொல்லிருப்பாருப்பா..அதுக்காக..”
“ எனக்கு இல்லயா.. இல்ல தெரியாம் அதான் கேக்கறேன். அவ என் பொண்டாட்டி. அவ கூட குடும்பம் நடத்திருக்கேன். என் குழந்தைய அவள் சுமந்துட்டு இருந்தா. உங்கள விட எனக்கு இழப்பு ஜாஸ்தி. என்னமோ, நான் தான் காரணம்னு சொல்லிட்டே இருந்தா. எனக்கு என்னவோ, நா கொல பண்ணின மாதிரி இருக்கு “
“…”
“ இந்த மனநிலையில என்னால இங்க இருக்க முடியாது. நா போறேன் “ என கிளம்பினான்.
சிரித்துக்கொண்டே இருப்பவன்,சிரிப்பை மறந்து விட்டு போனான். உணர்வற்ற ஜடமாய், அனைத்தையும் தலைமுழுகிவிட்டு, தனிமையை மட்டும் துணையாக வைத்துக்கொள்ளும் முடிவோடு வீட்டை விட்டு வெளியேறினான் ராகன்…
(இசைக்கும்..)