கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

த்விஜாவந்தி- ஆரோஹனம் - 14

வீட்டை விட்டு வெளியேறிய வரைக்கும் அவன் கூறியிருக்க, த்விஜாவிற்கு அவளையும் மீறி கண்களில் கண்ணீர் வந்தது. வந்தனாவை நினைத்து ஒரு புறம் , அக்குழந்தை என்ன ஆனது என சந்தேகம் ஒரு புறம், கண்ணீர் சிந்தும் ராகனை சமாதானம் செய்ய தோன்றும் எண்ணம் ஒரு புறம் என குழப்பக்குட்டையில் இருந்தாள்.


“ ராகா..” பல வருடங்கல் கழித்து அவளிடமிருந்து அதை கேட்டவன், கண் இமைக்காமல் அவளை பார்த்தான்.

“ என்ன சொன்ன ?”

“ அது.. “ என தான் கூறியது பின்பே உறைத்தது.

“ இன்னொரு வாட்டி சொல்லேன் “

“ அதெல்லாம் விடுங்க “ என பேச்சை மாற்றினாள்.

“ எனக்கு தூக்கம் வருது .” என எழ போனவளை, நிறுத்தினான், கை பிடித்து.

“ ஜா. அத நா அனுப்பலன்னு நம்பறியா?”

அவன் கண்களை பார்த்தாள் அதில் உண்மை இருந்தது. அவன் கண்களின் ஆழத்தில் தொலைந்து போக தான் எத்தனை முறை ஆசை பட்டிருக்கிறாள். இன்று அவனருகில், அவன் கண்களை பார்த்த வண்ணம், அவன் மனைவியாய்.. ஆனால் இப்போது அதை ரசிப்பதற்கான மனநிலையில் அவள் இல்லை. வா என யாசிக்கும் கண்களிலிருந்து தப்பிக்க நினைத்தாள்.

“ ஜா. ராகவேந்திரன் ? ”

“ அவன எதுக்கு இழுக்கறீங்க இப்போ ?”

“ அவன் எங்க ?”

நீண்ட மூச்சை இழுத்து விட்டாள்.கண்கள் கலங்கின.

“ செத்துட்டான் “

“ அப்போ அன்னைக்கு ஆஃபீஸ்ல அந்த அடியாள் சொன்னது உண்மையா ?”

“ ம்ம்ம் “

“ எப்டி?”

“ ப்ளீஸ். எதையும் சொல்ற மனநிலையில நா இப்போ இல்ல. ரெண்டாவது, சொல்லி , ஒன்னும் ஆக போறதில்ல “ என கண்கள் நீரை உகுத்தன.

ராகனுக்கு ஏனோ மனம் பிசைந்தது. எழுந்தவன்,அவள் கண்ணீரை துடைத்துவிட்டான். தன் சொன்ன வார்த்தையையும் மீறி, அவள் நெத்தியில் முத்தமிட்டான், நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அளிக்கும் விதமாக இருந்தது. ஜாவிற்கு ஜில்லென்று இருந்தாலும், எதோ ஒன்று அவளை தடுத்துக்கொண்டே இருந்தது. அதை புரிந்து கொண்டவன்

“ நிம்மதியா தூங்கு ஜா .. எல்லாத்தையும் நா பாத்துக்குறேன் “ என கூறிவிட்டு , தன்னிடத்தில் போய் படுத்துக்கொண்டான்.

த்விஜாவும் தன்னிடத்தில் போய் படுத்துக்கொண்டாள். ஏனோ கண்களில் கண்ணீர் வந்தது. தன் வாழ்க்கையை அசை போட்டது மனம்.

அப்பா அம்மவின் ஆசை மகளாக இருந்தவள், அப்பாவின் இறப்பிற்கு பின் அமைதியாகிவிட்டாள். அம்மா ஆண்துணையில்லாமல் பெண்ணை வளர்க்க முடியாது என்ற சமூகத்தின் முட்டாள் அறிவுறைகளை கேட்டு, சரியாக ஒரு பணப்பேயிடம் மாட்டிக்கொண்டாள். அவனுக்கோ, த்விஜாவின் அன்னை மீது காமமும், அவளின் சொத்தின் மீதி காதலும் இருந்தது. பாவம் அந்த முட்டாள் பெண்ணும், தன் மீது அவனுக்கு இருப்பது காதல் என்று நினைத்துக்கொண்டிருந்தாள், அவனின் சுய ரூபம் தெரியும் வரை.


தன்னுடனே வைத்திருந்த தன் மகளை ஹாஸ்டலில் சேர்த்தாள் அவனின் தொல்லை தாங்காமல்.அங்கு விழுந்தது அவளுக்கு முதல் அடி. த்விஜா அங்கிருக்க, இவனுக்கோ, தன் மனைவியாகிய அடிமையை சொத்தை கேட்டு சித்திரவதை செய்ய ஏதுவாக இருந்தது. விளைவு, அவள் இவ்வுலகத்தைவிட்டே மறைந்தாள்.

த்விஜா பள்ளி முடித்திருந்த காலமது. அன்னையின் இழப்பு ஒரு புறம், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஒரு புறமென அந்த வாலிப வயதில் மனம் குழம்பிய குட்டையாகியிருந்தது. த்விஜாவின் அன்னையின் கோடிக்கணக்கான சொத்துகளை தன் பெயரில் எழுதி கொடுக்க சொல்லி , இவளையும் கட்டாயப்படுத்த ஆரம்பித்தனர். அவர்களே அந்த அடியாட்கள். ஆனால் தன் லாயரிடம், த்விஜாவிற்கு திருமணம் ஆன பின்னரே , அவளுக்கு அது போய் சேர வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்ததால், அவளை மிரட்டுவதோடு நிற்கிறது.


இதற்கிடையில் ,த்விஜா டெல்லியில் கல்லூரியில் சேர்ந்தாள். யாரும் எடுக்காத அந்த மெகேனிகல் பிரிவில் சேர்ந்தாள். அங்கு தான் அவனைக் கண்டாள். தன் நண்பனுடன் நடந்து வந்துகொண்டிருந்தான். நண்பர்கள் இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டே வந்தனர். தங்கள் வகுப்பறைக்கு சென்ற அவர்களை பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள் அவள். யாரோ ஒரு பெண்ணை மனைவியாக நினைக்க முடியவில்லை என்று கூறிக்கொண்டிருந்தான் அவன். அவனை தேற்றிய அவனின் நண்பனை ஏனோ த்விஜாவிற்கு பிடிக்கவே இல்லை. அதில் இன்னும் எண்ணெய் ஊற்றும் வகையில் இருந்தது, அவன் முதல் வருட புது மாணவர்களை பற்றி கேட்டது.

அமைதியாக தன் வகுப்பில் அமர்ந்து கொண்டாள் த்விஜா, மனம் மட்டும் அன்பை யாசித்தது. தன் மீதி பாசத்தை கொட்டிய ஒரே ஜீவனும் இப்போது தன்னைவிட்டு மறைந்திருக்க, தனி மரமாய் நின்றிருந்தாள்.



அன்பை யாசிக்கும் மனது, அவ்வன்பு எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுகொள்ளும். அன்னையின் அன்பை தொலைத்தவளுக்கு, காதலனின் அன்பு கிடைத்தது.

அன்று முதல் நாள் ராகனும் , அவன் நண்பனும் முதல் வகுப்பு அறைக்குள் நுழைய, அங்கே அமர்ந்திருந்தாள் த்விஜா. பார்த்த மாத்திரத்தில், ராகனுக்கு அதிர்ச்சி, நண்பனுக்கோ ஈர்ப்பு, த்விஜாவோ, பயந்திருந்தாள்.

ராகன் மனதினுள் “ ஜா. இங்கயா? “ என நினைத்தான்.

“ ஃபர்ஸ்ட் இயரா? “ என்றான் ராகனின் நண்பன் , ராகவேந்திரன்.

“ ம்ம்ம் ஆமா சீனியர் “

“ பேர் என்ன? “

“ ஜா “ என இங்கு ராகன் மனதிலும், அங்கு அவள் “ த்விஜாவந்தி “ எனவும் பதிலளித்தனர்.

நாட்கள் நகர, அவர்களுக்கு இடையே நல்ல நட்பு, மலர்ந்திருந்தது. ராகனுக்கு த்விஜாவை ஏற்கனவே தெரியும் என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை. அங்கு த்விஜாவும் ராகனிடம் நல்ல மனிதனை கண்டுகொண்டாள். தன் தாயின் இறப்பையும், அது முதல் தான் அனுபவிக்கும் தனிமையையும் ராகனிடம் பகிர்ந்தவளின் மேல் மேலும் காதல் கூடியாது. பாவம் சொல்லத்தான் இல்லை. ஒரு வேளை அன்றே சொல்லியிருந்தால் !



இவர்கள் பழகுவது , நடுவில் இருக்கும் இன்னொருவனுக்கு தான் வயிற்றெரிச்சலாக இருந்தது. ராகனை எப்படியேனும் வந்தனாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைத்துவிட்டால் தன் ரூட் க்ளியராகும் என நினைத்தான். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டான். ஆனாலும் அவன் முயற்சிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் படி, இவர்களின் உறவு வளர்ந்தது.காதலை வாய் விட்டு சொல்லவில்லை. அவ்வளவு தான் . அது போக, அவர்களின் அணுக்கம் அனைவருக்கும் தெள்ளதெளிவாக தெரிந்தது.



காதலை வாய் விட்டு சொல்லததை தன் ஆயுதமாக்க ஆயத்தமானான், ராகவேந்திரன். அதற்கு தேவையானதை செய்து வைத்திருந்தான். படிப்பு முடிந்து , ராகன் ஊறுக்கு கிளம்பினான். பெரிய அதிர்ச்சியை எதிர்கொள்ள. ராகவேந்திரனோ அந்த வாய்ஸ் மெசேஜை ராகன் ஃபோனிலிருந்து த்விஜாவிற்கு அனுப்பிவிட்டு, தானும் கிளம்பினான், வீட்டை நோக்கி. அவன் எதிர்பார்த்தபடியே த்விஜா முன்பைபோல் சோகமானாள். இச்சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டான் இன்னொருவன். த்விஜாவிற்கு கால் செய்தான்

“ ஹலோ “

“ நா ராகவேந்திரன் பேசறேன் “

“ ம்ம் சொல்லுங்க “

“ உங்கள பாக்கணுமே “

“ எதுக்கு ?”

“ ஒரு உண்மைய சொல்லணும் “

“ என்னது ?”

“ நா நாளைக்கு ரூம் வெகேட் பண்ண வரேன் கேன்டீன்ல மீட் பண்ணலாம் எவினிங் நாலு மணிக்கு “

யோசித்தவள் “ சரி “ என்றாள்.



அடுத்தநாள் வகுப்புகள் முடிந்து த்விஜா கேன்டீனுக்கு சோர்வாக செல்ல , அவன் அங்கு ஃப்ரெஷாக அமர்ந்திருந்தான்.

“ வா த்விஜா “

அவன் ஒருமையில் அழைத்தது அவளுக்கு பிடிக்கவே இல்லை.

“ சொல்லுங்க. ரூம்கு போகணும். வார்டன் செக்கிங்க்கு வந்துடுவாங்க “

“ ராகன் கூட கதையடிக்கும்போது வார்டன் வரமாட்டாங்களா? “

சுறுக்கென்றது அவளுக்கு.

“ என்ன விஷயம்னு சொல்றீங்களா? “

“ நா உன்ன லவ் பண்றேன் “

த்விஜாவிற்கு இடையை எறக்கி வத்தாற்போல் இருந்தது.

“ என்ன உளரிட்டு இருக்கீங்க? நா ராகன லவ் பண்றது தெரியாதா ?” என கர்ஜித்தாள்.

“ எது.. லவ் பண்றியா? அவன் கிட்ட சொல்லிட்டியா ?” பதில் இல்லை.

“ நீ லவ் பண்றன்னு சொல்ற. சரி. அவன் உன்ன லவ் பண்ணினானா? எனக்கு தெரிஞ்சு இல்லயே.நேத்து கூட கால் பண்ணிருந்தான். அவனுக்கும் அவங்க வீட்ல இருக்குற அந்த பொண்ணு பேரு… ஆங்க். வந்தனாவுக்கும் வர முஹூர்த்தத்துல கல்யாணமாம். நேத்து சொன்னான். நீ என்னவோ, அவன லவ் பண்றேன்னு சொல்ற?” என்றான் எகத்தாளமாய்.

த்விஜாவின் மனது, அவன் கூறியதை ஆராயத்தொடங்கியது. அவள் தன் காதலை கூறததை போல , அவனும் இதுவரை அவளை காதலிப்பதாக கூறியதில்லை. இங்கிருக்கும்போதே, தினமும் ஃபோன் பேசும் அவன் , அங்கு சென்றபின் ஒரு முறை கூட தனக்கு கால் செய்யாமலும், அவனுக்கு கால் செய்து பேசியிருப்பதும் அவளை யோசிக்க வைத்தது.

“ என்ன அமைதி ஆயிட்ட? “

“ ஒன்னுமில்ல “

“ சரி, அவன விடு, நா உன்ன உண்மையா விரும்பறேன் . நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா ?”

“ எனக்கு எதுலயும் விருப்பம் இல்ல. ப்ளீஸ் என்ன விட்ருங்க “ என கையெடுத்து கும்பிட்டாள். அப்போதைக்கு அதை நிலுவையில் வைக்க எண்ணி,

“ சரி நீ டென்ஷனா இருக்க. அப்றம் பேசலாம் “ என கிளம்பினான்.



“ தூங்கலயா ?” என்ற ராகனின் குரலில் தான் வெகு நேரம் முழித்திருப்பது மனதில் உறைத்தது.

“ ம்ம்ம். தூங்கணும் “ என கண்ணை மூடிக்கொண்டாள்.

காலை த்வானி ராகனின் மேல் முழுமையாக படுத்திருந்தாள். தன் பிஞ்சு கையை அவன் முகத்தில் வைத்திருந்தாள். முதலில் எழுந்த த்விஜாவிற்கு அதை பார்த்து சிரிப்பு வந்தது. அவலின் சிரிப்பு சத்தத்தில் ராகன் கண்விழித்தான். சட்டென நின்றது அவளின் சிரிப்பு. துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறை புகுந்தாள்.

ராகன் எழுந்து கீழிறங்கி கல்பனாவிடம் இருவருக்கும் காஃபி வாங்கிக்கொண்டு மேலே வந்தான். மேலே வந்தவன் சோர்ந்து போய் அமர்ந்திருந்த த்விஜாவை தான்.

“ என்ன ஆச்சு ?”

“ அது… “ என இழுத்தாள்.

“ இன்னும் இது சரியா போகலயா உனக்கு ?”

அவன் எதை எல்லாம் நியாபகம் வைத்திருக்கிறான் என வியப்பாக இருந்தது. பூப்படைந்ததில் இருந்தே, அவளுக்கு மாத சுழற்றியின் போது வயிற்று வலி ஏற்படும். கல்லூரி நாட்களில் அவள் சோற்வாக இருப்பதை வைத்து அதை அறிந்துகொள்வான். ஒரு முறை கேட்டேவிட்டான்.

“ எதுக்கு அப்டி வலிய பொறுத்துக்கணும். எதாச்சும் மெடிசின் சாப்டலாம்ல ?”

“ இதுகெல்லாமா மருந்து சாப்டுவாங்க? அது இன்னும் ஹெல்த்த தான் ஸ்பாயில் பண்ணும் “

“ அதுக்குன்னு இப்டியா?”

“ ம்ம்ம். பரவால விடு. “ என பேச்சை மாற்றினாள். அப்போதை விஷயங்களை கூட இப்போது ராகன் நினைவு வைத்திருப்பதை நினைத்து மனது லேசாக சில்லிட்டது.

“ ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்..நீ போ “

“ம்ம்ம். இந்தா காஃபிய குடி “

“ம்ம்ம்ம் “ என வாங்கி குடித்தாள். இதமாக இருந்தது, நேரம் ஆக ஆக, வலி தாங்க முடியாமல் போனது. அமர்ந்திருந்தவள் படுத்துக்கொண்டாள். கண்ணீர் வழிந்தது. அவள் படுத்துக்கொண்ட போது எழுந்த த்வானி, கீழிறங்கி போய் ராகனை தேடியது. அவளுக்கு பல் துலக்கி விட்டு, காஃபி குடுத்தான்.

“ பா..” என்றது த்வானி.

ராகனுக்கு உறைக்கவில்லை.

“ பா…….” என்று கத்தியது.

அப்போது தான் அவளை அங்கிள் என கூறாமல் அப்பா என அழைக்க சொன்னது நியாபகம் வந்தது. மனம் பூரிப்பில் பெருகியது.

“ என்ன டா குட்டிமா ?”

“ அம்மா ஏன் அழறா?’

“ அழறாளா?”

“ ஆமா. நா எழுந்து வரும் போது பாத்தேன் “

“ அது….” என்ன சொல்வதென முழித்துக்கொண்டிருந்தான் ராகன்.

“ வயித்தவலி வந்துடுச்சா?”

த்வானியை ஆச்சரியமாக பார்த்தான் ராகன்.

“ ஆமா. உனக்கு எப்டி தெரியும் ?”

“ எப்போமே இப்டி தான் அம்மா அழுவா “ என வெள்ளந்தியாய் கூறியது.

“ சரி. அம்மாவ இன்னைக்கு டாக்டர்ட கூட்டிட்டு போலாமா ?”

“ ம்ம்ம். பாவம் அம்மா. “

“ சரி வா. நம்ம போய் அம்மாவ கூட்டிட்டு போலாம் “ என இருவரும் படியேறினர்.அறைக்குள் நுழைந்தவர்கள், அங்கே சுருண்டு படுத்தபடி, வயிற்றுக்கு தலையணையை வைத்து அழுத்தி பிடித்திருந்த த்விஜாவை. கண்ணீர் வழிந்த கண்களுடன் குறுக்கி படுத்திருந்தாள் படுக்கையின் ஒரு ஓரத்தில். பார்க்கவே பாவமாக இருந்தது.

“ ஜா.. எழுந்துறுமா “ என்றான்.அவனின் வார்த்தை ஏனோ அவளுக்கு அவளின் தாயை மீண்டும் நினைவு படுத்தியது. .

இந்த பெண்களே இப்படித்தான்.அதும் மாத சுழற்சியின் போது, அவர்களுக்கு இந்த செல்லம் தேவை என நினைப்பதும் தவறில்லையே. உடலுக்கு தேவயான ஓய்வை எடுப்பதே அப்போதைய , நிலைமைக்கு சாலச்சிறந்தது.

“ வலிக்குது ராகா..” என்றாள் முனகலாக.

ஏதோ சரியில்லை என மனம் கூற தன் தாயை அழைத்தான்.

“ மா….இங்க வாங்க “

அவரும் வந்து கேட்க , பின் த்விஜாவை ராகனுடன் டாக்டரிடம் அனுப்பிவைத்தார் கல்பனா.

தங்களின் வரிசைக்காக காத்திருந்தாள் த்விஜா. வலியில் ராகனின் கையை அழுந்த பிடித்திருந்தாள்.

“ டேக்கன் நம்பர் நாலு.” என செவிலி அழைக்க,ராகனுடன் எழுந்து சென்றாள்.

“ உக்காருங்க.. வாங்க மிஸ்டர் ராகன் “ என அழைத்தாள் அந்த பெண் மருத்துவர்.

“ ஹலோ டாக்டர்.”

“ சொல்லுங்க.. “

அவன் த்விஜாவை பார்த்தான்.

“ ரொம்ப பயின்னா இருக்கு டாக்டர்.தாங்க முடியல. “

“ ஓ.. எப்பவுமே இருக்குமா.. இல்ல இப்போ தானா ?”

“ எப்பவுமே இருக்கும். ஆனா இப்போ ஜாஸ்தியா இருக்கு “

“ ம்ம். லாஸ்ட் பீரியட்ஸ் எப்போ ?”

தேதி கூறினாள். கேலண்டரை பார்த்து கணக்கு செய்தாள் மருத்துவர்.

“ டிலே ஆகிருக்கு. அதுனால கூட இருக்கலாம் எதா மெடிசன் சாப்டீங்களா?”

“ ஆமா. டாக்டர். கல்யாணம் இருந்ததால, டேட் தள்ளி போக டேப்லட் போட்டேன் “

“ ஓஹ்.. அதுனால இருக்கும். நத்திங்க் டு வொரி “

“ ஓகே டாக்டர் “

“ நிறைய ஐயன் ரிச் ஃபூட்ஸ் சாப்பிடுங்க “

“ ம்ம்ம் “

“ டொன்ட் வொரி. இனி சரியா ஆகிடும் “

ராகன் முழித்தான் த்விஜாவோடு.

“ த்விஜா.. நீங்க உள்ள இருங்க. நா தோ வரேன் “ என செவிலியை விளித்து அவளை அழைத்து செல்லும் படி கூறினாள்.

“ எக்ஸ்க்யூஸ் மீ ராகன். ஐ வில் ஜஸ்ட் பீ பேக் “ என உள்ளே சென்றாள். த்விஜாவை பரிசொதித்துவிட்டு, இந்த நேரத்தில் வலி குறைய சில உடற் பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தாள்.

கை கழுவி விட்டு டாக்டர் ராகனிடம் வந்து

“ என்ன மிஸ்டர் ராகன் . மேரேஜ் ஆகிடுச்சுன்னு சொல்லவே இல்லயே “

“ கொஞ்சம் அவசரமா நடந்தது டாக்டர். உங்களுக்கு தான் தெரியுமே வந்தனாக்கு அப்றம் நா இங்க இல்லவே இல்லைன்னு. “

“ ம்ம்ம். அவங்களுக்கு பெயின் ரெட்யூஸ் ஆக எக்சர்சைஸ் சொல்லி குடுத்துருக்கேன்.யூசுவல்லா டெலிவரிக்கு அப்றம் சரி ஆகிடும்.”

“ வேற ஒன்னும் இல்லயே. பயப்படற மாதிரி . காலேஜ் டேஸ்லேந்தே அவ கஷ்ட படுவா “

“ ஓ.. உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சவங்க தானா.. குட்.. மிஸ்டர் ராகன். நா தான் சொன்னேனே, டெலிவரி ஆன அப்றம் சரி ஆகிடும். ஷீ இச் ஸ்டில் அ வெர்ஜின் “

“ என்ன ????” என்றான் அதிர்ச்சியாக.

டாக்டருக்கோ குழப்பம் வந்தது.

“ என்ன மிஸ்டர் ராகன். இதுக்கு ஏன் இவ்ளோ ஷாக்”

“ அது… ஒன்னுமில்ல டாக்டர்.. “ என கூற யோசித்தவன்,

“ அவளுக்கும் இது செகேண்ட் மேரேஜ். “ என்றான்.

“ ஓ.. ப்ளீஸ் லீவ் ஆல் தட். அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. போத் ஃபிசிகல்லி அண்ட் மென்டல்லி.. பாத்துக்கோங்க “ என முடித்தாள்.

த்விஜாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்த ராகனுக்கு காதில் டாக்டர் சொன்ன “ ஷீ இஸ் ஸ்டில்ல் அ வர்ஜின் “ நும், அன்று த்விஜா கூறிய

“ த்வானி யாரோட குழந்தைன்னு தெரியாது “ என்பதுமே எதிரொலித்துக்கொண்டு இருந்தது. தன் நண்பன் என்ன ஆனான்? அவர்கள் திருமணம் நடந்ததா? த்வானி யார் ? அவள் எப்படி த்விஜாவிடம் வந்தாள் ? என பல கேள்விகள் மனதினுள் எழ, அதை அவளிடமே கேட்டுவிட முடிவு செய்தான்.

(இசைக்கும் ..)
 
Top