கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

த்விஜாவந்தி- ஆரோஹனம் - 17

த்விஜாவந்தி – ஆரோஹனம் – 17



பயண அசதியில் இருவரும் படுத்துறங்க, ராகனுக்கு முழிப்பு தட்டிய போது, ஜன்னலின் வழியே, இருள் எட்டிப்பார்தது. மூடிய அறையில், விளக்குகள் ஏறியாமல் இருக்க, அங்கே அறை அரை இருட்டாக இருந்தது, ராகனுக்கு பிடித்தது. திரும்பியவனின், பக்கத்தில், கையை முகத்துக்கு கீழே கொடுத்து குப்புற படுத்து உறங்கிக்கொண்டு இருந்தாள் த்விஜா.

அவளை மீண்டும் நெற்றில் முத்தமிட ஆசை எழுந்தது. அவளும் தூங்கிக்கொண்டு தானே இருக்கிறாள் என நினைத்து, அருகில் வந்து உச்சி முகர்ந்தான். முத்தமிட்டவன் விலகி செல்ல, அங்கே த்விஜா கண்விழித்திருந்தாள்.

அதை பார்த்தவனுக்கு

“ஐய்யயோ. இப்போ அவ சாமி ஆடுவாளே “ என நினைத்து , அவளை பார்க்காமல் எழ போனான்.

“ ராகா ..” என்ற அவளின் அழைப்பில் திரும்பினான்.

“ இரு .போகாத. “

அவளைபார்த்தவன், அவள் முகம் வாடி இருந்ததை கவனித்தான்.

“ ,ம்ம்ம் “ என மீண்டும் அமர்ந்தான்.

“ என்ன “ என்பது போல் அவளை பார்க்க, பக்கத்தில் படுத்திருந்தவள், அவன் மடியில் தலை வைத்தாள். அனிச்சையாக ராகனின் கைகள் அவளின் தலையை கோத தொடங்கியது.

“ ராகா…” என மீண்டும் அழைத்தாள். குரல் இப்போது சற்று ஆட்டம் ஆடியது.

“ சொல்லு ஜா. “

“ எனக்கு நீ பழைய ராகனா, நா பேசறதெல்லாம் கேக்கற ராகனா, என்ன ஜட்ஜ் பண்ணாத ராகனா வேணும் “

“ நா அப்டியே தான் இருக்கேன் ஜா “

“ம்ம்ம்ம் “

சற்று அங்கே அமைதி நிலவியது. த்விஜா ஏதோ யோசனையாக இருந்தாள். ராகனுக்கு அவன் நண்பன் என்ன ஆனான், அவன் எப்படி இறந்தான், த்வானி யார் என்று பல கேள்விகள் கனைகளாக உருமாறி துளைத்தன. இருப்பினும் அவளே பேசட்டுமென அமைதி காத்தான்.

“ ராகா.. ராகவேந்திரன் …” என நிறுத்தினாள்.



அவளையே பார்த்தான். நான்கு கண்களும் ஊடுறுவ, அங்கே நிசப்தம் காதை கிழித்தது. ராகனுக்கு என்னவோ போல் இருக்க

“ ஜா. எதோ சொல்லணும்னு சொன்னியே.. “ என்றான் பார்வையை திருப்பியபடி.

“ ம்ம்ம். நீ போன அப்றம் அவன் வந்து அப்டி சொன்னதும் எனக்கு ஒன்னும் புரியல. அதுக்கு ஏத்த மாதிரி நீயும் எதும் ஃபோன பண்ணல. அந்த ஒரு வருஷம் எப்படியோ ஓட்டிட்டேன். “

ராகன் கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தான்.

“ ஃபைனல் எக்ஸாம் முடிஞ்ச அப்றம் “ என நிறுத்தினாள். அவளால் அதற்கு மேல் கோர்வையாக பேச வரவில்லை. கண்களில் நீர் வழிந்தது.ராகனுக்கு அதற்கு மேல் த்விஜா அழுவதை தாங்க முடியவில்லை. குனிந்தவன், அழும் அவளின் கண்களுக்கு தன் முத்தத்தையே கைகுட்டையாக்கினான். கொடுத்தவனை கண் திறந்து கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ ம்ம்..மேலே சொல்லு. ஆனா அழாம சொல்லு. “ என கண்ணடித்தான். அறையின் அரை இருட்டில், அவள் முகம் தத்தெடுத்ததை அவனால் பார்க்க முடியவில்லை.

“ அவன் எதேதோ ப்ளான் பண்ணினான். ஒன்னும் வேலைக்கு ஆகல. கடைசியா ஸ்யூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டான் “

“என்ன? “

“ ம்ம்ம். அதும் பொய் “ என அந்நாளின் நினைவிற்கு சென்றாள்.

ராகவேந்திரனின் ஃபோனில் இருந்து த்விஜாவிற்கு கால் வந்தது.

“ ஹலோ “

“ மேடம். நீங்க த்விஜாவந்தியா ?”

“ ஆமா. நீங்க யாரு ?”

“ நாங்க ****** ஹாஸ்பிட்டல்லேந்து பேசறோம் “

“ என்ன. யாருக்கு என்ன ?”

“ இங்க ராகவேந்திரன்னு ஒருத்தர் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டாருன்னு அட்மிட் ஆகிருக்காரு “

விழுந்தடித்து ஓடினாள், அந்த மருத்துவமனைக்கு.அவனின் பெயரை கேட்டு அவ்வறைக்கு போக அங்கே பெட்டில் படுத்திருந்தான்.மணிக்கட்டில் ஒரு கட்டு இருந்தது.

“ என்ன இது ?”

“ நா போகலாம்னு முடிவு பண்ணிட்டேன் த்விஜா . எனக்கு நீ இல்லாம் இருக்க முடியாது “ என பாசாங்கு வார்த்தைகள் வந்து விழுந்தன.

“ இதென்ன முட்டாள் தனம் ?”

“ நீ வேணும் த்விஜா எனக்கு “ என கூறிக்கொண்டே மயங்கினான்.

“ டாக்டர் . என்ன ஆச்சுன்னு பாருங்க “ என பதறினாள்.

“ மேடம் நிறைய ப்ளட் லாஸ் ஆகிடுச்சு . நீங்க பேஷண்ட்ட ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க . கொஞ்சம் வெளிய இருங்க “

அவளும் சரியென வெளியேறினாள். பரபரவென பணியாட்கள் உள்ளேயும் வெளீயேயும் போக , த்விஜாவிற்கு பதட்டமானது. சற்று நேரத்தில் வந்த செவிலி

“ மேடம் அவரு உங்கள கூப்பிடறாரு . “ என நகர்ந்தாள் செவிலி

உள்ளே நிழைந்தாள் த்விஜா. அவன் கண்கள் மூடியிருந்தன.

“ இப்போ எப்டி இருக்கு ?”

“ ம்ம்ம். என்ன கல்யாணம் பண்ணிக்கறியா? இல்லைனா நா செத்துபோறத தவிர வேற வழி இல்ல. “ என பக்கத்தில் இருந்த இரும்பு எதையோ கையிலெடுத்து மீண்டும் மிரட்டினான்.

சூழ்நிலை கைதியானாள். யோசிக்க தொடங்கினாள். அதை பயன்படுத்திய அவன் மேலும் பேசினான்

“ த்விஜா உனக்கும் அம்மா இல்ல. எனக்கும் யாருமில்ல. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் .நா உன்ன நல்ல வெச்சுப்பேன். “ என ஏதெதோ கூறி அவளை மூளை சலவை செய்தான். மனம் சற்று ஆட்டம் கண்டது. தான் விரும்பியவன் தன்னை நிராகரிக்க,ம்பாசத்திற்கு ஏங்கிய மனம் அவனை ஏற்க முடிவு செய்தது.

“ த்விஜா ., உனக்கு ஓகே தான ? “

“ ம்ம்ம் “ என அரை மனதாக ஒத்துக்கொண்டாள்.

“ இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம் “ என சட்டைபையில் இருந்து தாலையை எடுத்தான். த்விஜாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது . இதென்ன ஒரே அடியாக அதும் தடாலடியாக தாலியுடன் சுத்துகிறானே என தோன்றியது.

“ வா “ என அவன் கூற, அவளுக்கு ஏதோ சரியில்லை என தோன்றியது.

“ இல்ல வெயிட் பண்ணலாமே. என்ன அவசரம். உடம்பு சரியானதும் வெச்சுகலாமே “

“ அதெல்லாம் முடியாது. டாக்டர்…” என கத்தினான்.

கதவு வெளியே அடைக்கப்பட்டது. படுக்கையிலிருந்து எழுந்தான். தாலியை கையில் எடுத்தான். த்விஜா அருகில் வந்தவன், வலுக்கட்டாயமாக அவள் கழுத்தில் கட்டினான். கட்டிவிட்டு சத்தமாக சிரித்தான். அறையே அதிரும்படி சிரித்தான்.

“ எதுக்கு இப்டி செய்ற நீ?” என கண்ணீர் வடித்தாள்.

“ உன்ன பாத்தப்போவே புடிச்சிது டீ. ஆனா நீ அவன தான விரும்பின.அதான் .எனக்கு நீ வேணும் . அதுக்கு தான் இந்த ட்ராமா “

அவள் கூட அந்த ஒரு நிமிடம் அவன் ராகனை பற்றி கூறுகிறான் என நினைத்தான். அவள் நினைத்துக் கொண்டிருக்கும்போதே தன் கை கட்டை அவிழ்த்தான். கட்டை.. போலியான கட்டை. அதை பார்த்தவளுக்கு தான் ஏமாற்றப்பட்டது அப்போதே புரிந்தது.

அவளை நெருங்கி வந்தவன் வலுக்கடாயமாக அவளை தன் கைச்சிறையில் பிடித்து, தன் நெடு நாள் ஆசையை தீர்த்துக்கொள்ள, அவளின் உதடு நோக்கி குனிந்தான். தன்னை விடுத்து ராகனை காதலித்தது, அவனோடு நெருங்கி பழகியது,என தன் அனைத்து கோவத்தை அவள் உதடுகளில் காட்டினான்.வலியில் கத்த கூட முடியாமல் சிலையாகினாள். ரத்தம் எச்சிலோடு கலக்க, அவளை விடுவித்தவன், கீழே சரிந்தான்.



ராகனிடம் அது வரை கூறி முடித்தவள் தேம்பி தேம்பி அழுதாள். அவளை எவ்வாறு சமாதானம் செய்வதென்று தெரியாமல் , தன்னோடு அணைத்துக்கொண்டான். அவளுக்கும் அந்த அணைப்பு தேவையாய் இருந்தது. தன் ஆற்றாமை மொத்தத்தையும் அழுது கறைத்தாள். சற்று தெளிவானவள்,

“ அவன் என்ன மட்டும் இல்ல, உன்ன மட்டும் இல்ல. எனக்கு அப்பன்னு ஒருத்தன் இருக்கானே , அவனையும் ஏமாத்த பாத்தான். “

“ என்ன சொல்ற ?”

“ ஆமா “ என மீண்டும் அந்நாளிற்கு சென்றாள்.

அவளை வலுக்கட்டாயமாக முத்தமிட்டவன் , கீழே சரிந்தான், அவன் உடம்பில் கத்தி ஏறியதால்.

“ என்ன ஆளுயா இவன். இந்த பொண்ண கரெக்ட் பண்ணி ஐயாகிட்ட கூட்டிட்டு வர சொன்னா, இவன் , அவள கல்யாணம் பண்ணிகிட்டு , சொத்தெல்லாம் அடிக்கலாம்னு பாக்கறான் “ என்றான், அவனில் கத்தியை பாய்ச்சியவன்.

த்விஜாவிற்கு இது மேலும் அதிர்ச்சியளித்தது. அவனும் தன்னை தன் சொத்துக்காக பின் தொடர்ந்தவனா. உண்மையான காதல் என எதுவும் இல்லயா என மனம் நினைத்தது. உதட்டிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தவளை

“ மா.. நீங்களா வந்துட்டீங்கன்னா ஓகே. உங்க அப்பா கிட்ட கூட்டிட்டு போவோம். இல்ல வரமாட்டேன்னு எதா ப்ரச்சனை பண்ணீங்கன்னா, தூக்கிட்டு தான் போகணும் “ என்றான்.


தன் வாழ்வு அவ்வளவு தான் என நினைத்துக்கொண்டாள். தாலி கட்டியவனை பார்த்தாள். கண் நிலைகுத்தி இருந்தது. மூச்சு நின்றிருந்தது. அவனையும் தாலியையும் மாறி மாறி பார்த்தாள். கழட்டி அவன் மூஞ்சியில் விட்டெறிந்தாள்.

“ வாங்க போலாம் “ என்றாள். அவர்களுக்கே ஆச்சரியம் .

“ சரி “ என அழைத்து சென்றனர்.


“ அங்கேந்து போன கார் ஆக்சிடன்ட் ஆகிடுச்சு. அவங்க அங்கயே செத்துட்டாங்க. எனக்கு அது எந்த ஊருன்னே தெரியல. அங்கேந்து ஒரு ஹாஸ்டல்ல போய் சேர்ந்தேன் “ என முடித்தாள்.

த்வானியை பற்றி கேட்க நினைத்து வாயை திறந்தவனை

“ ராகா..” என்ற அவளின் அழைப்பு நிறுத்தியது.

“ என்ன ஜா ?”

“ அன்னைக்கு எனக்கு என் லைஃப் மொத்தமா முடிஞ்சிட்ட ஃபீலிங் வந்துச்சு. அம்மா இல்ல, அப்பன்னு இருக்கறவன் என் சொத்து பின்னாடி அலையுறான். நான் காதலிச்சவன் விட்டு போய்டான்.என்ன காதலிக்கறேன்னு சொல்லி கல்யாணம் பண்ணவனும் ஒரு ஃப்ராடு. என்னயே எனக்கு பிடிக்கல அன்னைக்கு. அவன் கட்டிபிடிச்சது, கிஸ் பண்ணதெல்லாம் என்னை என்னவோ அழுக்காக்கின மாதிரி இருந்துச்சு. அவ்ளோ வாட்டி குளிச்சும் அந்த புழுக்கம் போகல. எனக்கு வேற எதும் வேணாம்னு அப்போ முடிவு பண்ணினேன்.” என நிறுத்தினாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மேல் இருந்த காதல் அதிகமாவதை அவன் மனம் அவனுக்கு எடுத்துரைத்தது.

“ நா அசிங்கம் ராகா..நா உனக்கு வேணாம் “ என்ற இடியை இறக்கினாள்.

“ என்ன உளறிட்டு இருக்க? “

“ உளறல. நீயும் என்ன விட்டு போவன்னு நா எதிர்பாக்கல. ஆனா, நா வெயிட் பண்ணினேன். ஆனா நீ வரல. நடுல இவன் வந்து என்னன்னவோ ஆட்டம் போட்டுட்டான் “

“ நா என்ன இக்கட்டுல் இருந்தேன்ன்னு உனக்கு சொன்னேன் “

“ ம்ம்ம். அதே தப்ப தான் வந்தனா செஞ்சாங்க.. ஆனா அவங்க உன் மேல வெச்சிருந்த காதல் உண்மையா இருந்துச்சு. “


ராகன் அமைதி ஆகினான்.

“ ஜா. நா வந்திருக்கணூம். உன்ன கூட்டிட்டு வந்திருக்கணும். ஆனா முடியல. வரல..தப்பு தான். “

“ ராகா. உன் இடத்துலேந்து நீ செஞ்சது தான் சரி. என் தலை எழுத்து இப்டின்னா, நீ என்ன செய்வ ..என்ன செய்ய முடியும்.” கேட்டவள் எழுந்தமர்ந்தாள்.

“ உன்ன நா சந்தோஷமா பாத்துக்க முடியும். உன் மனசுக்கு நா இதமா ஆக முடியும். “

அவளுக்கும் மனம் அடித்துக்கொண்டது. தன்னை தானே இவ்வளவு நாள் துன்புறுத்திக்கொண்டதை அவளாலும் மறுக்க முடியவில்லை. தனக்கு யாரும் அன்பு செய்ய மாட்டார்களா என ஏங்கியதை நினைத்தது மனம்.

“ஜா..”

“ ம்ம்ம் “

“ இங்க வா “ என கையை விரித்தான். சற்று யோசித்தவள், அவன் கை வளைவிற்குள் அடைக்கலம் புகுந்தாள். அரைகுறையாய் இருந்த ஏதோ ஒன்று சரியான இடத்தில் பொருந்தி முழுமையடைந்ததாக தோன்றியது இருவருக்கும்.

“ ஒரு வாட்டி தப்பு பண்ணிட்டேன். அந்த தப்ப திருப்பி செய்ய மாட்டேன் டீ “ என உச்சந்தலையில் உறுதிமொழி முத்தம் ஒன்றை அளித்தான். த்விஜாவின் கண்கள் கலங்கின. இந்த ஆறுதலுக்காக, இந்த அணைப்பிற்காக, இந்த புரிதலுக்காக அவள் எவ்வளவு வருடம் காத்திருந்தாள். அது இன்று கிட்டியதில் மகிழ்ச்சி அடைந்தவள், அவன் இதயத்திற்கு ஓர் முத்திரை பதித்தாள்.

அவளின் முகத்தை நிமிர்த்தியவன், அவள் கண்களை பார்க்க, அவளோ, முகத்தை திருப்பிக்கொண்டாள். அவள் காயங்களை ஆற்ற, அவளின் சில நிமிட கணவன் கொடுத்த முத்தத்தின் ரணங்களுக்கு தன் முத்தத்தினை ஔடதமாக்கிக்கொண்டு இருந்தான் த்விஜாவின் ராகா….

( இசைக்கும்…)
 
Top