கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

த்விஜாவந்தி - ஆரோஹனம் 18

த்விஜாவந்தி- ஆரோஹனம் – 18

காலை கதிரவன் ஜன்னல் வழியே இருவரும் அறியாமல் உள்ளே நுழைந்தான்.

லேசாக த்விஜாவிற்கு முழிப்பு தட்ட, பக்கத்தில் ராகன் உறங்கிக்கொண்டு இருந்தான்.

“ ராகா. உனக்கு நா சரியானவ தானா? “ என மனம் நினைத்தது. அடுத்தகணமே , தன் வலிகளனைத்தையும் போக்குவதாக ராகன் கூறியிருப்பது ஞாபகம் வர, புன்னகை மலர்ந்தது. தூங்கிக்கொண்டு இருந்தவனின் மூக்கை பிடித்து ஆட்டினாள்

“ கழுகு மூக்கு “ என மெல்லியதாக சொல்லிவிட்டு எழப்போனாள். போனவளின் கையை இழுக்க , ராகன் பக்கத்திலேயே விழுந்தாள்.

“ இந்த பழக்கத்த நீ இன்னும் விடலியா ? “ என அவளின் கண்ணை பார்த்து அவன் கேட்க, அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“ ஜா.. “

“ என்ன? “

“ இங்க பாரு .. “ என்றதும் திரும்பினாள்.

“ உனக்கு இந்த பழக்கம் இன்னும் போகலயான்னு கேட்டேன் “

சிரித்து மட்டும் வைத்தாள்.

“ கைய விடு ராகா. இப்படியே தூங்கிட்டே இருக்கலாம்னு ப்ளானா? நம்ம எதுக்கு வந்திருக்கோம் . தூங்கவா ? “

“ நம்ம ஹனி மூன் வந்திருக்கோம் டார்லிங். அதுமில்லாம. நாம பாக்காத டெல்லியா என்ன ? “

“ ஹனி மூன்னு சொன்னா போதுமா ? “

“ ஓ… என்ன பண்ணனும் டார்லிங்.. “ என விஷமமாக கேட்க, அவன் கேட்டது புரிந்ததும், தலையில் அடித்துக்கொண்டாள்.

“ ஒழுங்கா எழுந்து என்ன வெளிய கூட்டிட்டு போ “

“ ச. நா கூட என்னவோன்னு நினைச்சேன். “

“ நினைப்ப நினைப்ப “ என எழுந்து குளியலறையில் புகுந்து கொண்டாள். உள்ளே சென்றவளுக்கோ, நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. தன்னவன்.மனம் கவர்ந்தவன் , தன்னுடன் , தன் அருகினில் இருக்க மனம் படபடத்தது.



இங்கு ராகனும் த்விஜா சற்று தெளிவாக, தன்னுடைய பழைய குறும்புகளை செய்ய துவங்கியதில் நிம்மதியடந்தான். எப்படியும் தன் அன்பினால் அவளை முழுதாக மாற்றிவிடலாம் என நினைத்தான்.

குளித்து முடித்து இருவரும் கிளம்பும் நேரத்தில் ராகனின் ஃபோன் அடித்தது.

“ ஹலோ “ என்றான்

எதிர்முனையில் என்ன கூறினாரோ

“ ஆர் யூ ஷுவர் ?” என்றான்.

“ சரி. டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணி வைங்க. நா சென்னை வந்ததும் பேசலாம் “ என இணைப்பை துண்டித்தான்.

மனம் அடித்துக்கொண்டது. தான் எதிர்பாத்தது போலவே இருக்க மனம் இரட்டிப்பாய் சந்தோஷமடைந்தது. இப்போதே த்விஜாவை கட்டி சுத்தவேண்டும் போல் இருந்தது, த்விஜாவும் ராகனின் பாவனைகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“ராகா..”

“ என்ன ஜா ? “

“ என்ன ஆச்சு. யாரு ஃபோனல ? “

“ அது “

எப்படி சொல்வது , எவ்வாறு சொல்வதென யோசித்தான்.

“ சொல்றேன். அதுக்கு முன்னாடி நம்ம கிளம்பலாம் “

ராகன் ஏதோ மறைப்பதாக தோன்ற த்விஜாவிற்கு மனம் வறுந்தியது. அந்த வருத்தம் முகத்தில் தெரிந்தது. சுறுங்கிப்போன அவள் முகத்தை தன் கையிலேந்தினான் ராகன்.

“ ஜா. எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா, அது உண்மையான்னு முழுசா தெரிஞ்சிகாம என்னால இப்போ சொல்லமுடியல ஜா . அதான் வேற ஒன்னுமில்ல “

“ ம்ம்ம் “ என்று சொன்னாலும் அவள் முகம் வாடியதை தான் அவன் புரிந்து கொண்டானே.

“ ஜா.. இங்க பாரு “

தலையை நிமிர்த்தி பார்த்தாள். ஊடுறுவும் அவன் பார்வையில் தன்னை தொலைத்திருந்தாள். அவளின் காந்தக்கண்கள் அவனை இழுக்க, அவள் கண்களுக்கும் அதரங்களுக்கும் தன் கண்களால் நடை பழகியவன் , தன் இதழை அதன் இணையோடு சேரவிட்டான்.



மீண்டும் ராகனின் ஃபோன் அடித்து, அவர்களின் பிணைப்பை கலைத்தது. அழைந்திருந்தது த்வானி. ஸ்பீக்கரில் வைத்தான்.

“ அப்பா.. “

“ ஹாய் குட்டி. என்ன பண்றீங்க ? “

“ நானும் பாட்டியும் கோவிலுக்கு வந்தோம். நீங்க என்ன பண்றீங்க ? “

ராகன் என்ன சொல்வதென தெரியாமல் முழித்தான். த்விஜாவிற்கோ சிரிப்பு வந்துவிட்டது. ராகன் என்ன சொல்வதென யோசித்துக்கொண்டிருக்க

“த்வானி குட்டி… “

“ அம்மா.. “

“ எப்டி இருக்க ? “

“ நா நல்லா இருக்கேனே. நீ ? “

“ நானும் நல்ல இருக்கேன் தங்கம் . “

“ சரி என்ன பண்றீங்க ?

“ நாங்க வெளிய கிளம்பிட்டு இருக்கோம் “

“ ம்ம்ம் நானும் பாட்டி கூட டாட்டா வந்தேன் “

“ சமத்து. பாட்டிய படுத்தாம் இருக்கணும் என்ன ? “

“ ஓகே மா.. சரி வெச்சுடவா ? “

“ ம்ம்ம் ஓகே டா குட்டி “

“ ஓகே.. பை .. பை “ என கூறி இணைப்பை துண்டித்தது.

ராகன் இங்கு பொய்க்கோபத்துடன் நின்றுகொண்டிருந்தான். அவனை பார்த்த த்விஜாவிற்கோ ஒன்றும் புரியவில்லை.

“ என்ன ஆச்சு ? “ என்றாள்.

“ அம்மாவும் பொண்ணும் என்ன கிண்டல் பண்றீங்களா ? “ என மீண்டும் கோவப்பட்டான் பொய்யாக.

“ அச்சச்சோ , ராகாக்கு கோவம் வந்துடுச்சா? “ என அவன் மூக்கை பிடித்து அவள் ஆட்ட. அவள் கைகளை எடுத்துவிட்டவள், மீண்டும் அவளை சிறைபிடித்து, தனக்கு தேவையானதை, பாதியில் நிறுத்தப்பட்டதை எடுத்துக்கொண்டு விடுவித்தான்.

இருவரும் கிளம்பி ஊர் சுற்றினர். தாங்கள் படித்தா காலேஜ், இன்னும் சென்ற இடங்கள் என சுற்றி சுற்றி ஓய்து போயினர். காலை முழுதும் ஊரை சுற்றிபார்த்துவிட்டு, அறைக்கு திரும்பி தங்களுக்கான நேரத்தை செலவு செய்தனர். இந்நாட்களில் அவர்களுக்கு இடையே அந்த பழைய புரிதல் மீண்டும் முளைத்திருந்தது.

த்விஜாவிடம் அன்பாக பழகினாலும், தன்னுடனான வாழ்வில் அவளின் எதிர்பார்ப்பு தான் என்ன என்பதை புரியாமல் தவித்தான். காதல் மொழிகளை, அதை வெளிப்படுத்தும் விதத்தை தாண்டி , அவளிடம் தனக்கான கணவன் என்ற் உரிமையை கேட்கவோ, எடுத்துக்கொள்ளவோ அவனால் முடியவில்லை. எதோ ஒன்று அவனை தடுப்பதாக தோன்றியது. அதற்கு தான் செய்த சத்தியமும் ஒரு காரணமோ என்று கூட மனம் யோசித்தது. இருப்பினும், மனைவியே ஆயினும் அவனுக்கு தன் உரிமையை நிலைநாட்ட, அதுவும் அவள் விருப்பமில்லாமல் நிலைநாட்ட தோன்றவில்லை. தூங்கும் அவளை ரசிப்பதையே வாடிக்கயாக்கினான்.

மூன்று நாட்கள் கழிந்திருந்தன. மூன்றாம் நாள் ஊர் சுற்றிவிட்டு, அறைக்கு வந்தனர். உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ராகன் பால்கனில் நின்று வானை பார்த்துக்கொண்டு இருந்தான். த்விஜா அவனை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டாள். திரும்ப எத்தனித்தவனை

“ திரும்பாத அப்டியே இரு “

“ ம்ம்ம் “

“ நாளைக்கு ஒரு நாள் தான் இல்ல ! “

“ ம்ம்ம்ம் “

“ அப்றம் மறுபடியும் வேலை, டென்ஷன்னு சுத்தணும் “

“ ம்ம்ம்ம் . ஆமா.. ஒன்னு செய்யலாமா ? “

“ என்னது ? “

“ நம்ம இங்கயே இருந்துடலாமா..இப்டியே “ என நக்கலடித்தான்.

“ ம்ம்ம் “ இருந்துடலாம் ராகா. இந்த ஒரு வாரம் என் லைஃப்ல சந்தோஷமான நாட்கள். இதுலேந்து போக எனக்கு மனசு இல்ல “ அணைத்திருந்த இறுக்கம் சற்று தளர்ந்தது. திரும்பினான்.

“ என்ன ஆச்சு ஜா? நா தான் கூட் இருக்கேன்ல ! “

“ ம்ம்ம் “
“ இங்க பாரு ஜா. நா. ,, இந்த லவ், இதெல்லாமே பார்ட் ஆஃப் லைஃப் தான். இதுல எது இல்லைன்னாலும் நம்மளால் வாழ முடியணும். அது இல்லைன்னு துவண்டு போகிட கூடாது இல்லயா. அத திரும்ப எப்டி அடையறதுன்னு முயற்சி செய்யலாம். அவ்ளோ தான் நம்ம கைல இருக்கு. “

“ ம்ம்ம் “ என்றவளின் கண்கள் நீரை வடித்தன.

கண்ணீரை துடைத்துவிட்டான்.

“ என்ன டீ ? “

அமைதியாக இருந்தாள். எதையோ யோசித்துக்கொண்டு இருந்தாள். அந்த அழகிய இரவில், ஆங்காங்கே விளக்குகள் மிளிர, ராகன் கண்களுக்கு த்விஜா அழகாக தெரிந்து தொலைத்தாள். யோசிக்கும் அவள் முகம் வேறு அவனை படுத்த

“ ஜா போய் தூங்கு . நாளைக்கு பேசிக்கலாம் “ என நகர முற்பட்டான்.

போனவனை கை வைத்து தடுத்தாள்.

“என்ன “ என்பது போல் பார்த்தான் ராகன்.

“ ஏன் இப்டி போற ? “

“ ஜா ப்ளீஸ் போய்டு. புரிஞ்சிக்கோ. போய் தூங்கு . “ என நகர்ந்தான்.

த்விஜாவிற்கு அது ஏனோ அவன் தன்னை நிரகரித்ததாக தோன்ற, கண்கள் கலங்கின. பால்கனியை மூடிவிட்டு, அவளும் வந்து படுத்தாள்.

ராகன் தலைக்கு கையை வைத்து படுத்திருந்தான். கண்கள் இலக்கற்று எங்கேயோ நிலைகுத்தி இருந்தன.அருகில் வந்தாள் த்விஜா. அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்தாள். அழகாய் அவனின் இதய துடிப்பை கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு கண்கள் மீண்டும் நீரை வார்க்க, கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, அதை உணர்ந்தவள் சட்டென திரும்பி படுத்தாள். ஆனால், அந்த நொடிப்பொழிதில் , அவளின் கண்ணீர் அவளுக்கு எதையோ கூற, திரும்பியவளிடம் திரும்பினான்.

“ ஜா “

பதில் இல்லை.

“ உன்ன தான். எதுக்கு இப்ப அழற ? “

“ ஒன்னுமில்ல “

“ சொல்லு டீ. மனுஷன கொல்லாத “ பதில் இல்லை.

அவனுக்கு முதுகை காட்டி படுடத்திருந்தவளை திருப்பினான். அவள் விட்டத்தை பார்த்து படுத்திருக்க, அவன் அவளருகில் இருந்தாள்.

“ என்ன மா ? “

“ ஒன்னுமில்லன்னு சொல்றேன்ல “ அவள் எரிந்து விழுந்ததில் , அவன் முகம் வாடியது. அவளிய விட்டு நகர்ந்தவனின் சட்டையை கொத்தாக பிடித்து இழுத்தாள்.

முதல் முறையாக , முதல் முதல் முறையாக, தன் காதலை வெளிப்படுத்தினாள் அழகான இனிக்கும் முத்தத்தின் துணையோடு. அவள் கூற விழைந்ததை புரிந்தவனோ எதோ பொக்கிஷத்தை கையாளுவதை போல் இருந்தான்.

அவர்களின் காதல் தேவைகளை இருவரும், இரவின் சாட்சியாக, தங்களுக்குள் தங்களை தேடிக்கொண்டு இருந்தனர்.. வரப்போகும் ஆபத்து தெரியாமல்..

( இசைக்கும் )
 
Top