கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

த்விஜாவந்தி - ஆரோஹனம் - 2

காலை ஐந்தரைக்கு அவளது போனின் அலாரம் சிணுங்கியது. ஸ்னூஸ் பட்டனை அழுத்தி அழுத்தி பதினைந்து நிமிடங்கள் ஒரு நொடி போல் மின்னல் வேகத்தில் கடந்தது.

பின் எழுந்தவள்,பல் துலக்கிக்கொண்டே ஹீட்டரை போட்டுவிட்டு, வாசலில் தண்ணீர் தெளித்தாள். பல் துலக்கி முடித்ததும், டிகாஷன் போட்டுவிட்டு, பாலை காய்ச்ச, பால் குக்கரில் வைத்துவிட்டு போய் கோலம் போட்டுவிட்டு வரவும், குக்கர் அவளை சீட்டியடித்து அழைக்கவும் சரியாக இருந்தது.காபி கலந்து குடித்துவிட்டு, தன் நாட்குறிப்பை எடுத்து பார்த்தாள்.அப்போது தான் அவளுக்கு அன்று வெளிநாட்டில் இருந்த தங்கள் கம்பனியின் முதலாளி அன்று ஆஃபீஸ் வருவது ஞாபகம் வந்தது. அரக்க பறக்க, வேலைகளை முடித்து, த்வானியை தயார் செய்து அவள் பள்ளி செல்லும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு, தன் வண்டியை உயிர்பித்து தன் அலுவலகம் நோக்கி விரைந்தாள்.

அந்த கட்டிடம் பழமையானதாக தோற்றமளித்தது.வண்டி நிறுத்துமிடத்தில் தன் வண்டியை நிறுத்திவிட்டு, படிகளில் ஏறி தன் கேபினுக்கு போய் அமர்ந்தாள்.தண்ணீர் குடித்தாள்.ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தன் பீ ஏவை அழைத்து அன்றைக்கான வேலைகளை தன் கணினியில் குறித்துக்கொண்டாள்.
பி ஏவிடம் முதலாளி வரும் நேரத்தை கேட்டுக்கொண்டாள்.அவருக்கு காண்பிக்க தேவையான ஆவணங்களை சரிபார்த்தாள். அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்த பின்னரே, இன்னும் காலை உணவு சாப்பிடாதது நினைவு வந்தது. தன் பையிலிருந்து டப்பாவை எடுத்து,திறந்தாள். ஸ்பூனால் அந்த ரவா கிச்சடியை ஒரு வாய் எடுத்து, வாயில் வைத்தது தான் தாமதம், கதவை படா.......ரென திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அவன்.

ரவா கிச்சடி இருந்த வாய், ரவா அப்பத்தை போல் உப்பியிருந்தது.உள்ளே வர, கதவை திறந்து கொண்டு வந்தவன், அவளை பார்த்தான். வாயில் சாப்பாடு, கையில் ஸ்பூன் என முதலாளி தன்னிடம் வேலை செய்பவரை இப்படி எதிர்பார்ப்பது நடைமுறையில் அரிதான ஒன்று தான்.

வாயில் சோற்றுடன், இருக்கையிலிருந்து எழுந்தாள், மரியாதை நிமித்தமாக.ஆனால் அவனோ, அவளை அமரும்படி கையசைத்தான். பின் மேஜையில் அவள் வைத்திருந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து அவற்றை பார்க்க தொடங்கினான். பார்வை பேப்பரில் இருந்ததே தவிர, தன் முன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் இவளை இங்கு தான் சற்றும் எதிர்பார்க்காததால், அதற்கான அதிர்ச்சியில் இருந்து மீள முயற்சித்துக் கொண்டு இருந்தான்.
இருப்பினும் தன் எண்ணவோட்டத்தை முகத்தில் காட்டாமல் ஒரு பாவம் இல்லா முகமூடியை அவன் அணிந்து வருடங்கள் ஆகின்றனவே!

இங்கு அவளும், கிச்சடியை குச்சியை வைத்து உள்ளே தள்ளாத குறையாய் தள்ளிக்கொண்டு இருந்தாள்.

"இவன் எப்டி இங்க, இவன் கம்பனின்னு தெரியாம போச்சே! எத மறக்கணும்னு நினைக்கிறேனோ, அதே திரும்ப திரும்ப கண்ணு முன்னாடி வர மாறி இருக்கே! " என நொந்து கொண்டாள். ஒரு வழியாக டப்பாவை காலி செய்யும் தருவாயில் தான் தன்னை பார்க்கும் அவன் கண்களை கவனித்தாள்.

" சாப்டுடீங்கன்னா.. வேலைய கவனிக்கலாமா? மிஸ்......?? " என நிறுத்தினான் பெயரை அவள் கூற விழைந்து.

" எஸ் எஸ் சர்.." என பதட்டமானாள் அவள்.

" மிஸ்....? "

" மிஸஸ்... மிஸஸ் த்விஜாவந்தி "

" ஓஹ்ஹ்.. ஓகே மிஸஸ்..த்விஜாவந்தி..இந்த டாகுமென்ட்ஸ்லாம் பாத்துட்டேன்..சரியா இருக்கு " வாய் முணுமுணுத்தாலும் மிஸஸ் என்பது மட்டும் காதில் ரீங்காரமிட்டது!

" தேங்க்யூ சார் "

" பை த வே நம்ம மத்த ஆர்டர்ஸ் பத்தின டீட்டெயில்ஸ் வேணும்.அப்றம், இனி உங்க சீட் இங்க இல்ல! வேற இடம் அரேன்ஜ் பண்றேன் ஓகே! " என எழுந்தான். கதவு வரை சென்றவன், திரும்பினான்.

" அப்பா போனதுலேந்து நீங்க தான் இந்த ப்ரான்ச்ச கவனிச்சிக்கறதா கேள்வி பட்டேன். கீப் இட் அப் அண்ட் தேன்க்ஸ் " என கூறிவிட்டு நிற்காமல் வெளியேறினான் ராகப்ரியன், பின்னகில் பப்ளிஷிங் கம்பனியின் டைரெக்டர்.



(இசைக்கும்....)
 
Top