Malini Sundar
Member
த்விஜாவின் கேபினை விட்டு வெளியே வந்தவன் அலுவலகத்தை நோட்டமிட்டான். அவனின் பின்னே வந்தாள் த்விஜா.ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டாக அவனுக்கு சுற்றி காட்டினாள். வேலைகள் அனைத்தும் செவ்வனே நடந்துகொண்டு இருந்தன. அனைத்தையும் பார்த்துவிட்டு கேபினுக்கு திரும்ப மதியம் ஆகியிருந்தது.
" இங்க ஹவுஸ் கீப்பிங் இன்சார்ஜ் யாரு? " என ராகப்ரியன் கேட்டான். த்விஜா
" மிஸ்டர். முத்து.." என அழைத்ததும் வந்தார், ஐம்பது வயதையொத்த ஒருவர்.
" ஹலோ சார் " என்றார் முத்து.
" ஹலோ..அந்த கேபின்ல அந்த சோஃபாவ எடுத்துட்டு அங்க இன்னொரு டெஸ்க் போட்டுடுங்க மிஸ்டர் முத்து " என கூறிய ராகனை வியப்பாக பார்த்தனர் அனைவரும். இந்த வியப்பிற்கு என்ன காரணமாக இருக்கும். இதுவரை, முதலாளியை பற்றி அவர்கள் கேள்விபட்டதற்கும், இப்போது நேரில் பார்ப்பதற்குமான வித்தியாசமே அதற்கு காரணம். முதலாளி பயங்கரமாய் கோபப்படுவார்,பெரியவர் , சிறியவர் மரியாதை கிடையாது,பெரிய அய்யாவின் ( ராகனின் தந்தை) பண்பு துளிகூட இவரிடம் இல்லை என என்னவோ செய்தி வந்தன காற்று வாக்கில்.
அதை எல்லாம் எண்ணி வியந்தனர் அனைவரும்.
" மிஸ்டர்.முத்து...உங்களத்தான். என்ன யோசிக்கறீங்க?? " என்ற பேச்சில் நிடப்பிற்கு வந்தவர்,
" ஹா சரி சார்...பண்ணிடலாம்." என்றார். அதற்குள் மணி மதிய இடைவேளையை நெருங்கியது.
" ஆனந்த யாழை மீட்டுகிறாயடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்" என்ற பாடல் கணீரென ஒலித்தது, த்விஜாவின் ஃபோனில். எங்கே இவன் கத்துவானோ என நினைத்து அவசர அவசரமாய் அதை கட் செய்தாள் யார் என்று கூட பார்க்காமல். மீண்டும் ஃபோன் அலறியது.மீண்டும் கட் செய்தாள்.மீண்டும் அலறியது.மீண்டும் கட் செய்தாள்.
" அத பேசிடுங்க.." என ராகன் சொல்வதற்குள்
" ஏன் ஃபோன கட் பண்ணிட்டே இருக்க? " என்று குரல் வந்த திசையை நோக்கினான் ராகன்.அங்கு நின்றிருந்த நபரை பார்த்து வாயடைத்துப்போனான்.
நேரே வந்து ராகனை சிறிதும் சட்டை செய்யாமல், த்விஜாவிடம் சென்ற அந்த நபர்
" ஃபோனை ஏன் கட் பண்ற? எவ்ளோ நேரமா கால் பண்றேன்" என கேட்க
" நா கொஞ்சம் வேலையா இருந்தேன். அதா கட் பண்ணேன்.நீ எதுக்கு இப்போ இங்க வந்த? " என எகிறினாள் த்விஜா.
பார்வைக்கு பஸ்மமாக்கும் சக்தி இருந்திருந்தால் இந்நேரம் த்விஜா பஸ்மமாகியிருப்பாள். வந்த நபரின் அதட்டல் தோரணையில் ராகனும் சற்று வியந்தான்.
" சரி..நீ மொதல்ல இடத்த காலி பண்ணு.எனக்கு நிறைய வேலை இருக்கு " என வந்த நபரை வெளியேற்ற அனைத்து விதத்திலும் முயற்சித்து கொண்டு இருந்தாள் த்விஜா.
" எக்ஸ்யூஸ் மீ " என்ற ராகனின் குரலில் திரும்பினர் சண்டை போட்டுக்கொண்டிருந்த இருவரும். இருவரும் அவனை பார்த்து பேந்த பேந்த முழித்தனர்.
"என்ன சொல்ல போறானோ " என த்விஜாவும்
" யாரிவன் புதுசா " என அந்த நபரும் யோசித்தனர்.
டக் டக் என ராகனின் ஷூ தரையின் டைல்ஸோடு கவி பாட, புது நபரின் முன் வந்து நின்றான்.
" ஹலோ யார் நீங்க?? " என்றான்
" நீங்க யாரு ? " என்ற எதிர் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகத்தில் தென்பட்டது.
" நா.. ராகப்ரியன்..இந்த கம்பனிய நடத்துறவன் " என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மரியாதை நிமித்தம் கையை நீட்டினான். நீட்டிய கையையும், கையை நீட்டிய ராகனையும் மாறி மாறி பார்த்த நபர், கையை கொடுக்கலாமா வேண்டாமா என தன்னுள் யோசித்து கொண்டிருந்தார். நொடி நிமிடமாகியது. நீட்டிய கையை மடக்காமல் வைத்திருந்தான். பலத்த யோசனைக்கு பின் முடிவெடுத்த நபரின் கை நீண்டு ராகனின் கையோடு சேர்ந்தது.
ராகனுக்கோ, உள்ளே ஒரு இனம் புரியாத உணர்ச்சி பரவுவதாய் தோன்றியது. உடம்பில் மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது. பல நாள் தேடிய ஸ்பரிசம் மீண்டும் கிடைத்ததாய் தோன்றியது. அக்கையை விடாமல் பிடித்துக்கொள்ள மனம் பரபரத்தது. அவனின் உணர்சசிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்த குரல்.
" ஹலோ.. நா.. த்வானி. த்வானி ராகவேந்திரன் " என தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் குட்டி தேவதை.
( இசைக்கும்...)