கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

த்விஜாவந்தி - ஆரோஹனம்- 4

தன் பெயரை அழாக சொன்ன குட்டி தேவதையை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது ராகனுக்கு!

" ஹலோ..நா ராகன்..நீங்க யாரு? "
என சட்டென குழந்தையின் உயரத்திற்கு அமர்ந்த ராகன் மீண்டும் அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தான்.

" நா தான் த்வானி.."

" அது உங்க பேரு"

" ஹி ஹி ஹி.. நீங்களும் உங்க பேர தான சொன்னீங்க"

ராகன் அதிர்ந்தே போனான்.

" ஓ.. ஆமால்ல..நா உங்க அம்மாவோட ஃப்ரெண்ட்.."

" நா பொண்ணு" என தன் வாயால் மீண்டும் அசத்தினாள்.

" த்வானி " என்ற த்விஜாவின் அதட்டலில், அடங்கியது குழந்தை.

" நீ எதுக்கு இங்க வந்த. உங்க ப்ளே ஏறியா கீழ தானே " என த்விஜா கேட்டாள்.

"சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தேன் "

" பாத்துட்டல்ல.. இப்போ போய் சமத்தா, லஞ்ச் சாப்பிட்டுட்டு தூங்கு " என அனுப்பி வைத்தாள்.

த்வானி திரும்பி ராகனிடம்
" பாய் அங்கிள் " என கூறி நகர்ந்தது, அலுவலகத்தில் உள்ள குழந்தைகளுக்கான அறைக்கு.

இது ராகனின் தந்தையால் செய்யப்பட்ட ஏற்பாடு. தங்கள் அலுவலகத்தில் பெண்களும் வேலை செய்வதால் அவர்கள் குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு அறை ஒதுக்கி இருந்தார். அவர்களின் குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் அங்கு காத்திருப்பர். இவர்களின் வேலை முடிந்தவுடன் எப்பொழுதும் போல குழந்தைகளை அழைத்துக் செல்வர். இடைப்பட்ட நேரத்தில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஒரு காப்பாளரை நியமித்திருந்தார். அதை பெண்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டனர். தங்கள் பிள்ளைகளை அங்குள்ள காப்பாளரிடம் விட்டு விட்டு தங்கள் வேலைகளை கவனித்தனர். த்வானியை இப்போது த்விஜா அங்குதான் போக சொன்னாள்.

" சரி மா" என குழந்தை கூறியது. த்வானியை ராகனுக்கு மிகவும் பிடித்தது. காரணத்தை தான் அவனால் கணிக்க முடியவில்லை.
த்வானியை தினமும் சந்தித்தான். அவளின் பேச்சு அவனுக்கு யாரையோ நினைவுபடுத்தியது. ஒருநாள் திடுதிப்பென அடியாட்கள் போல் இருக்கும் இருவர் செக்யூரிட்டியை அடித்துவிட்டு அலுவலகத்தில் நுழைந்தனர்.

" த்விஜாவந்தி எங்க? " என்றான் ஒருவன் ரிசப்ஷனிஸ்டிடம்.

" நீங்க யாரு ? "

"ஏய் சொல்லுடி எங்க அவ? "

" மரியாதை பேசுங்க.. யார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு? "

" த்விஜாவந்தி இங்க தான வேலை செய்யுறா.. கூப்பிடு அவள " என மிரட்டினான்.

அதற்குள் சத்தம் கேட்ட கேபினில் இருந்து அவள் வெளியே வர அவனை கண்டவன்

" இந்தா இருக்கால்ல " என இரண்டே அடியில் அவள் கைகளை பிடித்தான்.அவனின் கைகள் பிடித்திருந்ததால் அவள் கைகள் வலித்தாலும் தைரியமாக

" முதல்ல கைய விடுங்க " என்றாள். வார்த்தையில் மரியாதை இருந்தாலும் குரலில் கோபம் கொப்பளித்தது.

பின்னால் வந்த ராகன் அவளின் கையை பிடித்திருந்தவனின் கையை எடுத்துவிட்டு

" யார் நீ ? என் ஆபீஸ்ல வந்து பிரச்சனை பண்ற ?" என்றான்.

" ஓ! இப்ப பணக்காரனை புடிச்சிட்டதால தான் இங்கே இருக்கியா? பழைய புருஷன் என்ன ஆனான்? ஓ!!! பரலோகம் போய்ட்டான்ல!!" என்றான் .

அவன் கூறிய இச்செய்தி த்விஜாவை தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.அவள் இங்கு வேலைக்கு சேர்ந்து வருடங்கள் ஆகின்றன. இருப்பினும் அனைவரிடமும் அன்பாக பழகுவாளே தவிர தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொண்டது இல்லை. அந்த பேச்சு வந்தாலும் அதை தட்டிக்கழித்து விடுவாள்.
இன்று இந்த ஓட்டை வாய் அடியாள் அனைவரின் முன்னும் அதை போட்டுடைப்பான் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளின் நினைவை கலைக்கும் விதமாக

" அம்மா...." என த்வானி ஓடிவந்தாள்.

" அம்மாவா...? ஏன் டி யாரு குழந்தை இது? ஓடிப் போன கொஞ்ச நாள்லயே தான் அந்தப் பிச்சைக்காரன் செத்துட்டானே. அப்புறம் இந்த குழந்தை எப்படி?? " என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினான்.

அதுவரை தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த த்விஜாவின் கண்கள் நீரை சுரந்தன. இருப்பினும்

" அதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது " என்றாள்.

" எது தேவை இல்லாதது? கெளம்பு முதல்ல..உங்க அப்பாகிட்ட போகணும்" என மீண்டும் அவளை இழுத்தான்.

த்வானி ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த முழித்தது. இழுத்து சென்றவனை

" நில்லு " என்ற வார்த்தை நிறுத்தியது. இழுத்துச் சென்ற அவன் நின்றான். திரும்பினான். " பளார் " என கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

அடித்தது யார் என அனைவரும் யோசிக்க அடியாளின் கன்னத்தை மீண்டும் பதம் பார்த்தது ராகனின் கை.

" எங்க வந்து என்ன பேசுற ? " என்று மிரட்டினான். அதற்குள் கால் செய்து அழைத்தபோலீஸ்காரர்கள் வந்து இரண்டு அடியாட்களையும் பிடித்துச் சென்றனர்.

நீர் தடாகமோ என நினைக்கும் அளவிற்கு குளமாகி இருந்தன த்விஜாவின் கண்கள் . அனைவரின் மனதிலும் பல கேள்விகள் எழுந்தன. இவை அனைத்திற்கும் விடை த்விஜாவின் மனதினுள் தான் உள்ளது என்பதை யாவரும் அறிவர். இருப்பினும் அவளை சங்கடப்படுத்த மனமில்லாமல் தத்தமது வேலைகளை பார்க்க சென்றனர்.

ராகனுக்கு த்விஜாவின் இந்நிலை கவலையை அளித்தது. தன் தந்தைக்குப் பின் தன் அலுவலகத்தை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டு இந்நிலையை அடைய செய்திருக்கும் பெண்ணிற்கு தான் எதாவது செய்ய வேண்டும் என நினைத்தான்.

" நீங்க லீவு எடுத்துக்கோங்க. நாளைக்கு ஃப்ரெஷ்ஷா பேசலாம் " என அவளை வீட்டிற்கு செல்லும் படி பணித்தான்.

" ஓகே சார் " என அவளும் கூறினாள். தனக்கு அது தேவையானதாக அவளுக்கும் தோன்றியது. த்வானியை அழைத்துக்கொண்டு தன் வண்டியை உயிர்பித்து தன் வீட்டை நோக்கி பறந்தாள்.

காலை கதிரவன் தன் செந்நிற கதிர்களை வானம் எங்கும் வீச இரவு முழுவதும் வேலை செய்த நிலா பூமிக்கு பைபை சொல்லி விட்டு உறங்கச் சென்றான். த்வானியை பள்ளிக்கு அனுப்பி விட்டு எப்பொழுதும் போல் தன் வண்டியை உயிர்ப்பித்து அலுவலகத்தை நோக்கி விரைந்தாள் த்விஜா. இடையில் என்றும் இல்லாமல் வண்டி பஞ்சர் ஆகி நின்றது. அது ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத சாலை. காலை நேரப் பணியில் அனைவரும் வேலைகளை கவனிக்க அந்தச் சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே வண்டிகள் நகர்ந்து கொண்டிருந்தன. த்விஜாவின் வண்டி சமயம் பார்த்து இப்படி செய்து விட்டதே என மனம் வருந்தினாள். பக்கத்தில் பஞ்சர் ஒட்டும் கடை எங்க இருக்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. தன் அலுவலகத்திற்கு கால் செய்தாள். காலை என்றுமில்லாமல் ராகன் அட்டென்ட் செய்தான்.

" ஹலோ " என்ற ஆணின் குரலை கேட்டதும் குழப்பம் அடைந்தாள்.

" ஹலோ நான் த்விஜா பேசுறேன் நீங்க யாரு பேசுறீங்க ?" என்றாள்.

" நான் ராகன். என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க? "

" இல்ல சார் வண்டி பஞ்சர் ஆகிடுச்சு."

" ஓ இப்ப எங்க இருக்கீங்க ?"

" ஆபீஸ்ல இருந்து ஒரு பத்து நிமிஷம் டிரைவில் தான் இருக்கேன்"
என பதிலளித்தாள்.

" சரி அங்கேயே இருங்க. நான் மெக்கானிக்க வர சொல்றேன் " என காலை கட் செய்தான்.

த்விஜா தன் பஞ்சரான வண்டியுடன் அங்கே காத்திருந்தாள். 10 நிமிடம் கழிந்த நிலையில் டூல்பாக்ஸ் சகிதமாக அங்கே வந்தான் ஒருவன்.

" என்ன மேடம் பிரச்சனை?"

" பஞ்சர் ஆகிடுச்சு சார் "

" சரி வண்டியை நிறுத்திட்டு என் வண்டி எடுத்துட்டு போங்க " என்று கூறினான்.

" உங்க வண்டியவா? "

" ஆமாம் மேடம்.. ராகன் சார் தான் சொன்னாரு "

" சரி " என தன் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு மெக்கானிக்கின் வண்டியை ஓட்டிக் கொண்டு தன் அலுவலகத்தை அடைந்தாள். மதிய இடைவேளையின் பொழுது த்விஜாவின் வண்டியை சரி செய்துவிட்டதாக கொண்டு வந்து நிறுத்தி விட்டு தன் வண்டியை வாங்கிக்கொண்டு சென்றான் மெக்கானிக். மாலை அலுவலகம் முடிந்ததும் த்வானியையும் அழைத்துக்கொண்டு தன் வீட்டை நோக்கி கிளம்பினாள். எப்பொழுதும் மிதமான வேகத்தில் ஓட்டுவதே அவள் பழக்கம். அன்றும் அப்படித்தான் ஓட்டிச் சென்றாள். எதிர்பாரா நேரத்தில் எங்கிருந்தோ வந்த கார் ஒன்று த்விஜாவின் வண்டியை இடித்தது. முன்னே நின்றிருந்த த்வானியோடு, வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த த்விஜாவும் தூக்கி எறியப்பட்டனர். இருவரும் மயக்கமடைந்த நிலையில் அங்கிருந்த யாரோ ஒருவர் அவர்களை ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சற்று நேரத்தில் கண் விழித்த த்விஜா த்வானியின் நிலையைப் பார்த்து அழத்தொடங்கினாள்...


( இசைக்கும்....)
 
Top