கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

த்விஜாவந்தி - ஆரோஹனம் - 6

ராகன் கேட்ட கேள்வியில் வாயடைத்துப் போனாள். பதில் கூற முடியாமல் தவித்தாள். கண்கள் தன் வாட்டர் டேன்க்கை ஓபன் செய்தன. கலங்கிய கண்களுடன் மயங்கி கீழே விழுந்தாள்.

"த்விஜா..த்விஜா " என முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பினான் ராகன். விழித்தவள், தன்னைத் தொட்டுக்கொண்டிருந்த அவன் கைகளை தட்டிவிட்டாள். அதற்கு பிறகு அன்று முழுவதும் எதுவுமே பேசவில்லை. மாலை த்வானியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.


அவளை " த்விஜா "என்ற அழைப்பு நிறுத்தியது. நின்றாள். திரும்பாமல் நின்றிருந்தாள். அருகில் வந்தான் ராகன்.


" உன் முடிவை நீ சொல்லவே இல்ல "

" என்ன சொல்லணும்"

" என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன் "

நீண்ட மூச்சு ஒன்றை இழுத்து விட்டாள்.

" எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல "

" ஏன்? "

" காரணமெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை " என முன்னேறி நடந்தாள்.

போனவளின் கையை பிடித்தான். கையை பிடித்திருந்த அவனின் கையை பார்த்து கண்களில் கோபம் ஏறியது.

" கைய விடுங்க! பிஹெவ் யுவர்செல்ப் "

" என் பொறுமையை சோதிக்காத. நான் உங்க ரெண்டு பேர் நல்லதுக்கு தான் சொல்றேன் "

" என்ன நல்லது? எங்கள பத்தி நீ ஏன் கவலைப் படுறே? எங்க மேல உனக்கு என்ன அக்கறை? " என விளிப்பு ஒருமையானது. அவனும் இதைத்தான் எதிர்பார்த்ததுபோல்

" இப்ப எந்த உரிமையில உனக்குன்னு சொன்னியோ அதே உரிமையில அதே அக்கறையில் தான் சொல்றேன் "

தான் ஒருமையில் பேசியதை அப்போதே உணர்ந்தாள். த்வானிக்கு தன் அன்னையும் அங்கிளும் சத்தமாக பேசுவது புதிதாக இருந்தது.

ராகனிடம்

" அங்கிள் அம்மாவை ஏன் கத்த வைக்கிறீங்க? "

" அது ஒன்னும் இல்ல உன்னையும் உன் அம்மாவையும் எங்க வீட்டுக்கு வர சொல்றேன். அம்மா வரமாட்றாங்க "

" ஏன்மா? நம்ம போலாமே! ப்ளீஸ்மா! " என்றது துவானி.

" சும்மா இரு. எனக்கு தெரியும் "

அவனிடம் திரும்பி

"இங்கே பாருங்க ராகன். அனாவசியமா என் வாழ்க்கையில நுழைய நினைக்காதீங்க " எனக் கூறிவிட்டு
"அதுக்கான உரிமையை நீ எப்போ இழந்துட்ட " என மனதுக்குள் நினைத்தாள்.

த்வானியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

" உன்னை எப்படி ஒத்துக்க வைக்கணும்னு எனக்கு தெரியும்" என மனம் கூறியது.

இரண்டு நாட்களில் தன் வீட்டில் நடக்கவிருக்கும் தன் பிறந்த நாளுக்கு தன் அலுவலகத்தில் அனைவரையும் அழைத்தான் ராகன். முதலில் மறுப்பு தெரிவித்தாள் த்விஜா. இருப்பினும் பெரிய முதலாளி தன்னை தன் சொந்த மகளை போல் நடத்தியது நினைவுக்கு வந்ததால் வர ஒப்புக் கொண்டாள்.

அன்று மாலை பங்க்ஷன் என்பதால் அலுவலகத்திற்கு விடுப்பு விட்டிருந்தார்கள். வீட்டிற்கு வந்து இருவரும் தூங்கினர்.பின் மாலை எழுந்து ராகன் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

த்வானிக்கு ஃப்ரில் வைத்த டூட்டூ பார்க் ஒன்றை போட்டு விட்டாள். தானும் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு கிளம்பினான்.

அந்த வீடு அந்த தெருவின் கோடியில் பரந்திருந்தது. மாளிகை என்று கூறமுடியாது. கேட்டின் உள்ளே நுழைந்ததும் அவர்கள் வந்த ஆட்டோவை அனுப்பி விட்டு திரும்பினாள். த்வானி வீட்டை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். த்விஜா இங்கு வருவது இரண்டாவது முறை என்பதால் அவ்வளவு ஆச்சரியமில்லை. முதல் முறையாக ராகனின் தந்தை இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் வந்திருந்தாள், அவர் சொன்னதால்!!

" வாங்க வாங்க மா " என அழைத்தார் ராகனின் அன்னை கல்பனா.

" நல்லா இருக்கீங்களா மா? "என குசலம் விசாரித்தாள் த்விஜா.


" ஏதோ இருக்கேன் மா.. உள்ள வா " என அழைத்து சென்றார்.

உள்ளே வந்ததும் த்வானியின் கண்கள் விரிந்தன. எங்கும் வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. ஹாலில் ஒரு மூலையில் மேலே ஏறும் படிகள் விஸ்தாரமாய் நின்றிருந்தன. ஹாலின் நடுவில் பெரிய மேஜையில் கேக் வைக்கப்பட்டிருந்தது. விருந்தினர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர். ராகன் சுற்றி சுற்றி அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தான். அவனை வாழ்த்த நினைத்த தன் மனதை அப்போதைக்கு அடைக்கி வைத்தாள் த்விஜா.

" எல்லாரும் வாங்க " என கல்பனா அழைக்க அனைவரும் அந்த டேபிலின் முன் குழுமினர்.

" ஹாப்பி பர்த்டே " என எழுதியிருந்தது. த்வானியை தன்னிடம் வரவழைத்து நிறுத்திக் கொண்டான் ராகன். அனைவரும் பாட ராகன் கேக்கை வெட்டினான்.

முதல் வாய் கேக்கை த்வானிக்கு ஊட்டிவிட்டான். பின் அவரவர் வாழ்த்திவிட்டு சாப்பிட சென்றனர்.

கல்பனா த்விஜாவிடம்

" என் கூட கொஞ்சம் வாம்மா " என அழைத்தார். அவரின் பின்னால் சென்றாள் த்விஜா. அவர் தன் அறைக்குச் சென்று

" வாம்மா " என அழைத்தார். த்விஜாவிற்கு தன் அன்னை ஞாபகம் வர மறுக்க முடியாமல் உள்ளே நுழைந்தாள்.

அங்கே அறையில் ஒரு கோடியில் ஜன்னலை ஒட்டிய படுக்கை இருந்தது. படுக்கையை ஒட்டிய சுவர். அதில் ராகனின் பெற்றோர் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தனர். அடுத்த படத்தை பார்க்க பார்வையை திருப்பிய அவளின் கவனத்தை

" என்ன பாக்குற " என்ற வார்த்தை திசை திருப்பியது.

"சார தான் உனக்கு தெரியுமே மா " என்றார் ராகனின் அன்னை.

" ம்ம்ம் "

" சரி.. நா ஒன்னு கேப்பேன்.."

" கேளுங்கம்மா "

" என் பையன கல்யாணம் பண்ணிக்கறியா மா? "

இடியே விழுந்தது போல் இருந்தது த்விஜாவிற்கு. ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

" என்னம்மா..இப்டி கேக்கறேனேன்னு யோசிக்கறியா? "

அமைதியான பார்வையே பதிலானது.

" ராகன். என் புள்ள.. நிறைய இழந்துட்டான் மா "

புரியாமல் பார்த்தாள் த்விஜா.என்ன என்ற எதிர்பார்ப்பு பார்வையில் தெரிந்தது. ராகன் அன்னையின் பார்வை , அவர்களின் பக்கத்தில் இருந்த ஃபோட்டோவிற்கு சென்றது.

" வந்தனா" என்றார்

" ஓ!! அழகா இருக்காங்க.. யார் இவங்க? "

கண்களை மூடினார். நீ........ண்ட மூச்சை இழுத்து விட்டார். கண்களை திறந்தார். கண்கள் கலங்கி இருந்தன.பதில் கூறினார்:

" ராகனோட வைஃப் "


( இசைக்கும்....)
 
Top