Nuha Maryam
Member
இரவு வசந்தி சமையலறையில் இருக்க திடீரென, "மா... பசிக்கிதுமா... சாப்பாடு எடுத்து வை..." என நித்ய யுவனியின் குரல் கேட்டது.
ஒரு நொடி அதிர்ந்தவர் பின சமையலறையில் இருந்து கொண்டே ஹாலில் ஆஃபீஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராஜாராமிடம்,
"நம்ம பொண்ணோட ஞாபகமாவே இருக்குங்க... இப்போ கூட அவ பேசுற போலவே கேக்குது..." என்க சத்தமாக சிரித்தார் ராஜாராம்.
ராஜாராம் சிரிக்கவும் கோவமாக ஹாலுக்கு வந்த வசந்தி டைனிங் டேபிளில் ராஜாராமுடன் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்த நித்ய யுவனியைக் கண்டு அங்கேயே நின்றார்.
ராஜாராம், "என்ன வசு... இப்போ கூட யுவனி என் பக்கத்துல இருக்குறது போலவே தெரியுதா என்ன..." என்றார் கேலியாக.
அதில் தன்னிலை மீண்ட வசந்தி நித்ய யுவனியிடம் சென்று அவளை ஆரத் தழுவிக் கொண்டார்.
வசந்தி, "எப்படி இருக்கடா... நல்லா இருக்கியா... அம்மாவோட கோவமா இருக்கியா யுவனி... ரெண்டு நாளா பேசவே இல்ல.." எனக் கவலையாகக் கேட்கவும்,
"நான் எப்படிம்மா உங்க ரெண்டு பேரு கூடவும் கோவமா இருப்பேன்... என்ன புரிஞ்சிக்காம இப்படி பண்றாங்களேன்னு ஆரம்பத்துல கோவம் இருந்தது.. அப்புறம் நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணினாலும் அது என் நல்லதுக்காக தான் இருக்கும்னு புரிஞ்சிக்கிட்டேன்... கொஞ்சம் டென்ஷன்மா... அதான் உங்க கூட பேச முடியல..." என்றாள் நித்ய யுவனி.
வசந்தி, "அங்க நீ நல்லா இருக்கியா யுவனி... எந்தப் பிரச்சினையும் இல்லல்ல... மாப்பிள்ளை உன்ன நல்லா பாத்துக்குறாரா..." என்க,
சற்று அமைதி காத்த நித்ய யுவனி, "ஹா மா... நான் அங்க ரொம்ப நல்லா இருக்கேன்... சர்வேஷ் கூட தானே எனக்கு பிரச்சினை.. மத்தபடி மாமா, ஜீவி எல்லாரும் நல்லா பழகுறாங்க..." என்றாள்.
பின் மூவரும் ஒன்றாக இரவுணவை எடுத்த பின் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பினாள் நித்ய யுவனி.
பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்ததில் நித்ய யுவனிக்கு நேரம் சென்றதே விளங்கவில்லை.
அதனால் சஜீவ்வின் வீட்டை அடையும் போது நன்றாக இரவாகி விட்டது.
உள்ளே நுழையும் போதே ஹாலில் ஈஷ்வரியும் சுசித்ராவும் அமர்ந்திருக்க அவர்களை கண்டு கொள்ளாமல் நித்ய யுவனி தன் அறைக்குச் செல்லப் பார்க்க,
அவளைக் கண்ட ஈஷ்வரி, "ச்சே... என்னத்த சொல்லிக் கொடுத்து இவ வீட்டுல வளர்த்து இருக்காங்களோ தெரியல... நல்லா ஊர் மேஞ்சிட்டு கண்ட நேரத்துல வீட்டுக்கு வருது... பாக்கவே சகிக்கல... இதெல்லாம் பார்க்கனும்னு எங்க தலையெழுத்து..." என நித்ய யுவனிக்கு கேட்க சத்தமாக கூறினார்.
அதைக் கேட்டதும் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் சுசித்ரா விழுந்து விழுந்து சிரிக்க,
பெருமூச்சு விட்ட நித்ய யுவனி அவர்களை நோக்கி வந்தாள்.
நித்ய யுவனி, "மாமியாரே... கண்டவன் கூட நேரங்கெட்ட நேரத்துல வீட்டுக்கு வர நான் ஒன்னும் உங்க அண்ணன் பொண்ணு கிடையாது..." என்றவள் சுசித்ராவை ஏளனமாகப் பார்க்க,
"ஏய்.... " என அவள் முன் விரல் நீட்டினாள் சுசித்ரா.
அவள் கையைத் தட்டி விட்ட நித்ய யுவனி, "என் முன்னாடி குரல உயர்த்தாதேன்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன்... அடுத்த தடவ சொல்லிட்டு இருக்க மாட்டேன்..." என சுசித்ராவை மிரட்டியவள் ஈஷ்வரியிடம் திரும்பி,
"எங்க வீட்டுல என்னை ஒழுங்கா தான் வளர்த்து இருக்காங்க... ரொம்ப நல்லவங்க போல பேசுறீங்க... சொந்தப் பையன் வாழ்க்கைய அழிக்கனும்னு நெனக்கிற நீங்க எல்லாம் என் அப்பா அம்மாவோட வளர்ப்ப பத்தி பேசாதீங்க..." என்று விட்டு சென்றாள்.
நித்ய யுவனி அறைக்குள் செல்லும் போது சஜீவ் குளியலறையில் இருத்தான்.
அவன் அணிந்திருந்த சட்டையை கட்டிலில் போட்டு விட்டுச் சென்றிருக்க, "எதை எங்க வெக்கனும்னு கூட இவனுக்கு சொல்லி கொடுத்தில்ல.. இதுல என் அம்மா அப்பாவ பத்தி பேசுறாங்க..." என அதனை எடுத்து கீழே போடப் பார்க்க அதிலிருந்த லிப்ஸ்டிக் கறை நித்ய யுவனியின் பார்வையில் பட்டது.
புருவம் சுருக்கி அதைப் பார்த்த நித்ய யுவனி சஜீவ் குளியலறையிலிருந்து வெளியே வரவும் சட்டையை அவன் முகத்தில் தூக்கி எறிந்தாள்.
நித்ய யுவனி, "உன் லவ்வர் கூட நீ எப்படி வேணாலும் இருந்துக்கோ... ஆனா என் கண் முன்னாடி இதெல்லாம் பட வெச்சிக்காதே..." என்று விட்டு சஜீவ்வைத் தாண்டி குளியலறைக்குள் புகுந்தாள்.
சஜீவ், "சுசித்ரா... உன்ன..." எனப் பல்லைக் கடித்தான்.
சுசித்ரா தான் சஜீவ், நித்யா இருவருக்கும் இடையில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்காக சஜீவ் குளியலறையில் இருக்கும் சமயம் அவன் சட்டையை எடுத்து தன் உதட்டிலிருந்த லிப்ஸ்டிக் பதிய ஒற்றி எடுத்தாள்.
சுசித்ரா மனதில், "எனக்கு உன்ன பத்தி நல்லா தெரியும் நித்யா... உனக்கு நிச்சயமா சர்வாவ இப்படி ஏத்துக்க முடியாது... உன்ன சீக்கிரமா அவன் கிட்ட இருந்து பிரிக்கிறேன்..." என நினைத்தவள் நித்ய யுவனியின் பார்வையில் படுமாறு அந்த சட்டையை வைத்து விட்டு சென்றாள்.
குளியலறையில் இருந்த கண்ணாடியில் வெகுநேரம் தன் விம்பத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் நித்ய யுவனி.
மனசாட்சி - "உனக்கு தெரியாதா அது சுசித்ராவோட வேலைன்னு..."
நித்யா - "பார்த்ததும் புரிஞ்சிடுச்சி... அவளால மட்டும் தான் இப்படி கேடு கெட்ட வேலை எல்லாம் பார்க்க முடியும்..."
மனசாட்சி - "அப்போ எதுக்கு சர்வேஷ அப்படி திட்டின..."
சஜீவ் - "ஏன்னா எனக்கு அவன பிடிக்காது... நான் அவன வெறுக்குறேன்..."
மனசாட்சி - "இத யாருன்னாலும் நம்புவாங்க... ஆனா நான் உன் மனசாட்சி... என் கிட்டே மறைக்க பார்க்குறியா... அவன ஹர்ட் பண்ணிட்டு நீ தான் ஃபீல் பண்ற... இதுக்கு எதுக்கு அவன் கூட சண்டை போடனும்..."
நித்யா, "ஆமா... ஆமா.. ஆமா... அவன ஹர்ட் பண்ற ஒவ்வொரு தடவையும் அவன விட நான் தான் கஷ்டப்படுறேன்... ஆனா என்னால அவன மன்னிக்க முடியல... அவ்வளவு கஷ்டப்பட்டுட்டேன் நான்... இதனால தான் நான் அவன கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னேன்... நிச்சயம் என்னையே அறியாம நான் அவன ஹர்ட் பண்ணுவேன்..." என்று அழுதாள்.
சற்று நேரத்தில் குளித்து உடை மாற்றி வெளியே வர சஜீவ்வின் சட்டை கருகிய நிலையில் தரையில் ஒரு மூலையில் இருந்தது.
அறை விளக்கைக் கூட அணைக்காமல் ஒரு கரத்தால் கண்களை மூடியபடி படுத்திருந்தான் சஜீவ்.
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு சமையலறைக்குச் சென்றவள் முந்தைய நாள் போலவே பால் காய்த்து இரண்டு க்ளாஸில் ஊற்றி விட்டு ஒன்றில் மட்டும் மாத்திரையைக் கலந்தாள்.
நித்ய யுவனி, "நேத்து ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன்... இன்னைக்கு எப்படி இதை குடிக்க வைக்க... போதாத்துக்கு சும்மா இருந்தவன திட்டி வேற வெச்சிட்டேன்... என்ன பண்ணலாம்... யோசி நித்து..." எனத் தனியே புலம்பியபடி யோசித்தவள்,
"சரி பார்க்கலாம்... வரது வரட்டும்... ஏதாவது கேட்டா திட்டி சமாளிச்சிக்கலாம்..." என்று பால் க்ளாஸை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.
சஜீவ் இன்னும் அதே நிலையில் இருக்க அவனிடம் சென்றவள் அவனது கவனத்தைத் திருப்ப தொண்டையைச்செறுமினாள்.
கையை விலக்கி சஜீவ் நித்யாவைப் பார்க்க,
அவன் அருகில் பால் க்ளாஸை வைத்தாள்.
மனதில், "கடவுளே... சர்வேஷ் எதுவும் கேட்க கூடாது... ப்ளீஸ் ப்ளீஸ்..." என வேண்டிக் கொண்டு வெளியே சாதாரணமாய் காட்டிக் கொள்ள,
அவனோ அமைதியாக எடுத்துக் குடித்தான்.
குடித்து முடித்து க்ளாஸை வைத்தவன் நித்யாவிடம் ஒரு வார்த்தை பேசாது மீண்டும் படுத்துக் கொண்டான்.
நித்ய யுவனி, "சரியான திமிரு பிடிச்சவன்... ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல..." என முணுமுணுக்க,
"அவனுக்கே தெரியாம திருட்டுத்தனம் பண்ற... இதுல அவன் உனக்கு தேங்க்ஸ் வேற சொல்லனுமா.." என மனசாட்சி கேள்வி எழுப்ப,
"ச்சே... மூடிட்டு போ... எப்பப் பாரு அவனுக்கே சப்போர்ட் பண்ணிக்கிட்டு... நீ எனக்கு மனசாட்சியா.. இல்ல அவனுக்கு மனசாட்சியா..." எனத் தன் மனசாட்சியை கடிந்து கொண்டவள் அறை விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.
_______________________________________________
"எதுக்குடா இப்போ ஒரு பாக்ஸ் சிகரெட்ட காலி பண்ற... யுவனிக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா..." என ஒரு மணி நேரத்தில் ஒரு பாக்ஸ் சிகரெட்டை காலி செய்து கொண்டிருந்த சஜீவ்வைத் திட்டினான் ஆரவ்.
கையில் இருந்த சிகரெட்டை தூக்கி எறிந்த சஜீவ்,
"என்னை வேற என்னடா பண்ண சொல்ற... பைத்தியம் பிடிக்குது... ஒரு பக்கம் யுவி கொஞ்சம் கூட என் பேச்ச கேக்க மாட்டேங்குறா... இன்னொரு பக்கம் இந்த அம்மாவும் சுச்சியும் சேர்ந்துட்டு என்னையும் யுவியையும் பிரிக்க எங்கடா சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டு இருக்காங்க... பேசாம செத்துடலாம் போல இருக்குடா..." என்றான் கவலையாக.
அவன் முதுகில் ஆதரவாகத் தட்டிய ஆரவ், "விடுடா... எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்... நான் வேணா யுவனி கூட பேசவா..." என்க,
"வேணாம்டா... அவளாவே என்னை புரிஞ்சிக்கிறப்போ புரிஞ்சிக்கட்டும்... சரிடா நான் கிளம்புறேன்... ஆஃபீஸ்ல ஹாஃப்டே சொல்லி இருக்கேன்..." என்று விட்டு சென்றான் சஜீவ்.

நித்ய யுவனி அன்று சற்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்திருந்தாள்.
அவளின் நல்ல நேரம் எப்போதும் ஏதாவது குத்திக்காட்டிப் பேசும் இரண்டு ஜீவன்களும் அங்கு இருக்கவில்லை.
அறைக்கு வந்தவள் கப்போர்ட்டைத் திறந்து தன் ஆடைகளுக்கு கீழ் யாருக்கும் தெரியாதவாறு ஒரு ஃபைலை மறைத்து வைத்தாள்.
பின் மீண்டும் எங்கோ வெளியே சென்று விட அவ்வளவு நேரம் ஒளிந்திருந்து நித்ய யுவனியைக் கவனித்துக் கொண்டிருந்த சுசித்ரா அவசரமாக கப்போர்ட்டைத் திறந்து நித்ய யுவனியின் உடைமைகளைத் துலாவினாள்.
சரியாக அவள் கண்களில் நித்ய யுவனி மறைத்து வைத்திருந்த ஃபைல் சிக்க அதனைத் திறந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.
சுசித்ரா விஷமப் புன்னகையுடன், "ஓஹ்.. நித்யா... எவ்வளவு பெரிய விஷயத்த மறைச்சிருக்க... இதை வெச்சே உன்னையும் சர்வாவையும் பிரிச்சு காட்றேன்..." என்றவள் தனது மொபைலில் அவசரமாக அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

இரவு வெகுநேரம் கழித்தும் சஜீவ் வீட்டுக்கு வரவில்லை.
எப்பொழுதும் தனக்கு முன்னே வந்து காத்திருப்பவன் இன்று இன்னும் வராததால் நித்ய யுவனிக்கு சற்று பயமாக இருந்தது.
பல முறை யோசித்து விட்டு சஜீவ்வின் எண்ணுக்கு அழைத்துப் பார்க்க ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.
நித்ய யுவனியை பதற்றம் தொற்றிக் கொள்ள வாசலில் வந்து அங்குமிங்கும் நடந்தாள்.
ஆரவ்விற்கு அழைத்துக் கேட்கலாம் என நினைத்து மொபைலைக் கையில் எடுக்கும் போதே கதவு வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டது.
சஜீவ்வாக தான் இருக்கும் என வேகமாகக் கதவைத் திறந்தவள் அவன் நின்றிருந்த கோலம் கண்டு அதிர்ந்தாள்.
சஜீவ் நன்றாகக் குடித்திருக்க ஹரிஷ் அவன் தோளில் கை போட்டு விழாமல் பிடித்திருந்தான்.
சஜீவ், "யுவி... யுவி..." எனப் புலம்பியபடி இருக்க,
நித்ய யுவனிக்கு சஜீவ்வை அவ்வாறு காண கோவம் கோவமாக வந்தது.
நித்ய யுவனியின் முகத்தைப் பார்த்தே அவள் மனநிலையைப் புரிந்து கொண்ட ஹரிஷ்,
"தங்கச்சி... அது..." என இழுக்க,
"நான் பார்த்துக்குறேன்ணா..." என்ற நித்ய யுவனி மறுபுறம் வந்து சஜீவ்வைப் பிடித்தாள்.
சஜீவ்வை விழாமல் பிடித்துக் கொண்ட நித்ய யுவனி, "உள்ள வாங்கண்ணா..." என்க,
"இல்லம்மா... ரொம்ப லேட் ஆகிடுச்சு... நான் வரேன்... " என்ற ஹரிஷ் சற்றுத் தயங்கி விட்டு,
"சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதேமா... எனக்கு உங்க ரெண்டு பேருக்கும் இடைல நடந்தது கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்... சர்வாவால நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க... அவன் பண்ணது தப்பு தான்... ஆனா அதே அளவு அவனும் கஷ்டப்பட்டுட்டான்மா... சொல்லப் போனா உன்ன கஷ்டப்படுத்திட்டு அதை நெனச்சி இன்னைக்கு வரைக்கும் ஃபீல் பண்ணிட்டு இருக்கான்... நீங்க வேணும்ட ஒரே காரணத்துக்காக தான் அவன் இதெல்லாம் பண்ணான்... இப்போ கூட நீங்க அவன புரிஞ்சிக்கலன்னு சொல்லித் தான் ரொம்ப நாள் கழிச்சி குடிச்சான்...முடிஞ்சா அவன மன்னிச்சி அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுமா... ஒரு அண்ணனா உன் நல்லதுக்கு தான் இதை சொன்னேன்... தப்பா இருந்தா மன்னிச்சிக்கோமா..." என்று விட்டு சென்றான்.
ஹரிஷ் சென்றதும் சஜீவ்வை உள்ளே அழைத்து வந்த நித்ய யுவனி அவனை டைனிங் டேபிளில் அமர வைக்கவும் அப்படியே மேசையில் தலை வைத்து படுத்தான்.
சத்தம் கேட்டு அங்கு வந்த பிரபு சஜீவ்வின் நிலையைக் கண்டு, "என்னடா இது வந்திருக்குற கோலம்..." எனக் கத்த,
நித்ய யுவனி, "ப்ளீஸ் இப்போ எதுவும் சொல்லாதீங்க... நான் பார்த்துக்குறேன்... நீங்க போய் தூங்குங்க..." என்க,
"இல்லம்மா உனக்கு..." என பிரபு ஏதோ கூற வரவும்,
"அதான் சொல்றேன்ல... என் புருஷன் தானே... நானே பார்த்துக்குறேன்... எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல... நீங்க போங்க... முடிஞ்சா உங்க மனைவி கிட்ட இதை பத்தி சொல்லாம இருங்க..." என்றாள்.
நித்ய யுவனி அவ்வாறு கூறவும் தான் ஏதும் பேசி பிரயோஜனம் இல்லை என அங்கிருந்து சென்றார்.
சஜீவ், "சாரி யுவி... நான் வேணும்னு பண்ணல... யுவி.. யுவி.." எனப் போதையில் புலம்ப,
நித்யா சஜீவ்விற்கு இரவுணவை எடுத்து வரச் சென்றாள்.
சஜீவ்விற்கு சாப்பாட்டை எடுத்து வந்தவள் மேசையில் படுத்திருந்தவனை நேராக அமர வைத்தாள்.
நித்ய யுவனி, "சர்வேஷ் இந்தா சாப்பிடு..." என தட்டை மேசையில் வைத்தாள்.
"ம்ஹ்ம்...ம்ஹ்ம்... வேணா....." என உளரியவன் தட்டின் மீதே படுக்கப் பார்க்கவும் அவனை அவசரமாகப் பிடித்தாள் நித்யா.
பெருமூச்சு விட்டவள் தானே சஜீவ்விற்கு ஊட்டி விட நினைத்தாள்.
நித்யா, "சர்வேஷ் வாய தெற..." என்க,
"வேணாம்... எனக்கு சாப்பாடு வேணா... யுவிய வர சொல்லு... என்ன மன்னிக்க சொல்லு அவ கிட்ட.... ம்ம்ம்ம்ம்... ஆமா நீ யாரு..." என உளறினான் சஜீவ்.
தலையில் அடித்துக் கொண்ட நித்ய யுவனி, "வெலங்கிடும்... வாய திற..." என சஜீவ்வின் வாயில் உணவைத் திணித்தாள்.
"ம்ஹ்ம்... ம்ம்ம்..." என வாயில் உணவை வைத்துக் கொண்டே சஜீவ் ஏதோ கூறப் பார்க்கவும்,
"ஷ்ஷ்ஷ்... வாய மூடு... அமைதியா சாப்பிடு..." என மிரட்டியவள் பாதி உணவை சஜீவ்விற்கு ஊட்டி விட்டாள்.
பாதி உணவில் நித்யாவின் மீதே வாந்தியிட்டான் சஜீவ்.
மீண்டும் அவனின் மீதும் வாந்தி எடுத்த சஜீவ், "ஊப்ஸ்... சாரி மேடம்..." என்றான் சல்யூட் அடித்தபடி.
மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து சஜீவ்விற்கு புகட்டி விட்டு அவன் வாயைத் துடைத்து விட்டாள் நித்ய யுவனி.
பின் தன் மீதிருந்த வாந்தியைக் கழுவி விட்டு பாலில் மாத்திரை கலந்து எடுத்து வந்தவள் அதனை கஷ்டப்பட்டு சஜீவ்வை பருக வைத்தாள்.
சஜீவ்வை எழுப்பி அறைக்கு அழைத்துச் செல்ல,
சஜீவ், "டோன்ட் டச் மீ... ஐம் ஸ்டடி..." என தனியே நடந்து விழப் பார்த்தான்.
"சரியான கொழுப்பு பிடிச்சவன்..." என சஜீவ்வைக் கடிந்தவள் அவனின் கையை எடுத்து தன் தோளில் சுற்றிப் போட்டு அழைத்துச் சென்றாள்.
குளியலறைக்குள் சஜீவ்வை அழைத்துச் சென்று அவன் சட்டையைக் கழற்றப் பார்க்க நித்ய யுவனியின் கையைத் தட்டி விட்ட சஜீவ்,
"ஏய்...தொடாதே... என் யுவிக்கு மட்டும் தான் என் மேல உரிமை இருக்கு... நீ போய் அவள வர சொல்லு..." என்றான்.
கீழுதட்டைக் கடித்து தன்னை சமன்படுத்திய நித்ய யுவனி சஜீவ்வின் சட்டையைக் கழற்றி அவன் முகத்தைக் கழுவி விட்டு உடல் முழுவதையும் ஈர துவாலையால் துடைத்து விட்டாள்.
சஜீவ், "நீ ஏன் இதெல்லாம் பண்ற... நீ என் யுவியா..." என்றவன் கை இரண்டையும் குவித்து கண்ணில் வைத்து ஜும் செய்வது போல் நித்யாவின் முகத்தைப் பார்த்தான்.
சஜீவ் செய்வதையெல்லாம் நித்யா ஒற்றைப் புருவம் உயர்த்தி பார்த்துக் கொண்டிருக்க,
"யுவி..... வந்துட்டியா யுவி..." எனக் கூறி புன்னகைத்தான் சஜீவ்.
"இப்பவாவது தெரிஞ்சிதே..." என்ற நித்ய யுவனி சஜீவ்வை அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.
பின் அவனுக்குப் போர்வையைப் போர்த்தி விட்டு செல்லப் பார்க்க அவளால் முன்னே செல்ல முடியவில்லை.
சஜீவ் நித்யாவை செல்ல விடாது அவள் கரத்தைப் பிடித்திருந்தாள்.
நித்ய யுவனி அவன் கையை விடுவிக்கப் பார்க்க,
"என்னை விட்டுப் போகாதே யுவி.." என்றான் சஜீவ்.
நித்ய யுவனியின் கண்கள் கலங்கி விட சஜீவ்வின் அருகில் அமர்ந்தாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்த சஜீவ் திடீரென சோகமானான்.
சஜீவ், "என்னை உனக்கு பிடிக்கலையா யுவி... ஏன் முன்னாடி மாதிரி சஜுன்னு கூப்பிட மாட்டேங்குற... என்னை வெறுக்குறியா யுவி... ஆனா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் யுவி... ரொம்ப... ரொம்ப... " எனக் கைகளை நன்றாக விரித்துக் காட்டினான்.
நித்யா கண்கள் கலங்க சஜீவ்வையே பார்த்துக் கொண்டிருக்க, "ஆனா நீ தான் என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்கியே... எனக்கு சுச்சி வேணாம்... நீ தான் வேணும்... அவள் கூட என்னை சேர்த்து வெச்சி பேசாதே யுவி... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... ரொம்ப ஹர்ட் ஆகிடுச்சு... இதோ இங்க... " என தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.
"அதான் குடிச்சேன்... ஹரி வேணாம்னு சொன்னான்... நான் தான் கேக்கல... உனக்கு வலிச்சிருக்கும்ல யுவி... சாரி... உன் கோவம் போகும் வர என்னை அடிச்சிக்கோ யுவி... ஆனா என்னை வெறுக்காதே... என்னால தாங்க முடியல..." என்று அழுதவன் நித்ய யவனியின் மடியில் தலை வைத்து படுத்தான்.
சஜீவ், "ஐ லவ் யூ யுவி... லவ் யூ... யுவி... யுவி... யுவி..." எனப் புலம்பியபடியே உறங்கி விட்டான்.
நித்ய யுவனியின் கன்னத்தை தாண்டி கண்ணீர் வடிந்தது.
வாயை மூடி அழுதவள் சஜீவ்வின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, "எல்லாருமே உன்னை நம்ப சொல்றாங்க... உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க சொல்றாங்க... ஆனா என்னால முடியல சஜு... சாரி...." என உறங்கிக் கொண்டிருப்பவனிடம் கூறியவள் சஜீவ்வின் தலையை எடுத்து தலையணையில் வைத்து விட்டு எழுந்தாள்.
சஜீவ் உறக்கத்திலும் நித்ய யுவனியின் கையை விடாமல் இருக்க கண்ணீருடன் அவனின் கையை விலக்கி விட்டு சென்றாள் நித்ய யுவனி.

சாரி மக்களே... யூடி வர ரொம்ப லேட் ஆகிடுச்சு... இது கொஞ்சம் பெரிய கதை... அதான் கைதிய முடிச்சிட்டே இதை கன்ட்னியு பண்ணலாம்னு இருந்தேன்... இனி டெய்லி அப்டேட் வரும்... மறக்காம இந்த கதைக்கும் உங்க ஆதரவ வழங்குங்க.... நன்றி...
- Nuha Maryam -