கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நாட்கள் - அத்தியாயம் 33

Nuha Maryam

Member
மூவரும் வீட்டை அடைந்த பின்னும் நித்ய யுவனி அமைதியாகவே இருந்தாள்.

சஜீவ்விற்கு நித்ய யுவனியின் அமைதி ஏதோ போல் இருந்தது.

தன்னுடன் சண்டை பிடிக்கவாவது அவள் வாயைத் திறக்க மாட்டாளா என எதிர்ப்பார்த்தான்.

அவர்கள் உள்ளே நுழையும் போதே பிரபு ஹாலில் அமர்ந்திருக்க காவ்யாவைக் கண்டதும் அவர்,

"காவ்யா இங்க வாடா..." என அழைத்தார்.

காவ்யா நித்ய யுவனியின் முகத்தைப் பார்க்க அவளோ வேறு உலகத்தில் இருந்தாள்.

சஜீவ், "எங்க அப்பா தான் கவிக் குட்டி... போ.." என்கவும் பிரபுவிடம் சென்றார் காவ்யா.

காவ்யா, "ஹாய் அங்கிள்..." எனப் புன்னகைக்க அவளைத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்ட‌ பிரபு,

"ஹாய் மா... எங்க போய்ட்டு வரீங்க.." என்க,

"பீச்சுக்கு போனோம் அங்கிள்... ரொம்ப ஜாலியா இருந்தது..." என்றாள் காவ்யா.

பிரபு, "ஓஹ்... அப்போ காவ்யாக்கு இப்போ பசிக்குமா இருக்குமே... நாம சாப்பிடலாமா.." என்க சரி எனத் தலையசைத்தாள்.

பிரபு, "சர்வா... நித்யாவைக் கூட்டிட்டு வாப்பா சாப்பிட..." என்க,

சிலையாக நெடுநேரம் நின்றிருந்தவளின் கரம் பிடித்து டைனிங் டேபிளிற்கு அழைத்து வந்தான் சஜீவ்.

பெயருக்கென்று ஏதோ கொரித்து விட்டு எழுந்தாள் நித்ய யுவனி.

இரவாகவும் சஜீவ்வும் காவ்யாவும் கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கையில் பால் க்ளாஸ்களுடன் நுழைந்தாள் நித்ய யுவனி.

முதலில் சஜீவ்விடம் நீட்ட அவன் ஒரு க்ளாஸை எடுக்கப் பார்க்கவும், "அது கவிக்கு... இதை எடுங்க..." என்றாள் அவசரமாக.

தன்னவள் வெகுநேரம் கழித்து பேசியதில் மகிழ்ந்தவன் ஏன் என்று தோண்டித் துருவவில்லை.

நித்ய யுவனி, "கவி ரொம்ப லேட் ஆகிடுச்சு... வா வந்து தூங்கு..." என்க,

"ம்ஹ்ம்ம்.. எனக்கு தூக்கம் வரலக்கா... நான் மாமா கூட பேசிட்டிருக்கேன்..." எனக் காவ்யா கூறவும் ஏற்கனவே நடந்த விடயங்களில் பாதிக்கப்பட்டிருந்த நித்ய யுவனி காவ்யா பிடிவாதம் பிடிக்கவும்,

"எப்பப்பாரு எல்லா விஷயத்துலயும் நீ பிடிவாதம் பிடிச்சிட்டிருக்க கவி... ஒழுங்கா வந்து தூங்கு... இல்ல நாளைக்கு காலையிலேயே உன்ன கொண்டு போய் வீட்டுல விட்டுருவேன்.." எனக் கோவத்தில் கத்தினாள்.

அதில் காவ்யா கலங்கி அழத் தயாராக சஜீவ் தான், "என்ன யுவி... சின்னப் புள்ள கிட்ட போய் உன் கோவத்த காட்டிட்டு இருக்க... அமைதியா இரு யுவி.." என சற்று அழுத்தமாகக் கூற,

"ஆமா... நான் அமைதியா இருக்க போய் தான் இன்னைக்கு என் வாழ்க்கை இந்த நிலமைல இருக்கு..." என்ற நித்ய யுவனி கோவமாக வந்து கட்டிலில் படுத்தாள்.

நித்ய யுவனி திட்டியதில் காவ்யா அழ கீழே மண்டியிட்ட சஜீவ் அவள் கண்களைத் துடைத்து விட்டு,

"கவிக் குட்டி குட் கர்ள் தானே... குட் கர்ள்ஸ் அழுவாங்களா..." என்க இட வலமாக தலையசைத்தாள் காவ்யா.

அவளைப் பார்த்து புன்னகைத்த சஜீவ், "அப்டின்னா நீ போய் இப்போ தூங்குவியாம்... மாமா நாளைக்கு உன்ன வெளிய கூட்டிட்டுப் போறேனாம்... டீலா.." என்க,

கண்களைத் துடைத்துக் கொண்ட காவ்யா, "நிஜமாத் தான் சொல்றீங்களா மாமா..." என்க,

"ஆமாடா... கண்டிப்பா நாளைக்கு மாமா உன்ன வெளிய கூட்டிட்டு போவேன்‌... நீ குட் கர்ள் மாதிரி அக்கா பக்கத்துல தூங்கு... ஓக்கேயா.." என சஜீவ் கேட்க சரி எனத் தலையசைத்தாள் காவ்யா.

_______________________________________________

மறுநாள் காலையில் சஜீவ் வாக்குக் கொடுத்தது போலவே காவ்யாவை வெளியே அழைத்துச் செல்ல, வர முடியாது என மறுத்த நித்ய யுவனியையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.

இரவு வரை மூவரும் சேர்ந்து ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு ஷாப்பிங் சென்று காவ்யாவிற்கு பிடித்த அனைத்தையும் வாங்கிக் கொடுத்தான் சஜீவ்.

திடீரென ராஜாராம் சஜீவ்விற்கு அழைத்து காவ்யாவைக் கொண்டு வந்து விட்டு செல்லுமாறு கூற,

சஜீவ், "ஏன் மாமா... என்னாச்சு... ஒரு வாரம் தங்குறதா சொன்னா... " என்க,

"தெரியல மாப்பிள்ளை... யுவனி தான் கால் பண்ணி சொன்னா கூட்டிட்டு போக சொல்லி... காவ்யா ஏதாவது பிரச்சினை பண்ணிட்டாளா.." எனக் கேட்டார் ராஜாராம்.

"ச்சேச்சே... அப்படி எதுவும் இல்ல மாமா... அவ இங்க எல்லாரு கூடவும் ரொம்ப அட்டேச் ஆகிட்டா... எந்தப் பிரச்சினையும் இல்ல.." என சஜீவ் கூற,

ராஜாராம், "பரவாயில்ல மாப்பிள்ளை... நீங்க கொண்டு வந்து விடுங்க.. யுவனி சொல்றான்னா ஏதாவது காரணமாத் தான் இருக்கும்..." என்க மனமேயின்றி சம்மதித்தான் சஜீவ்.

காவ்யாவிடம் கூற அவளோ அழுது அடம் பிடித்தாள் முடியாதென்று.

நித்ய யுவனியோ எதுவும் கூறாமல் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்க சஜீவ்,

"கவிக் குட்டி மாமா சொன்னா கேட்ப தானே... நானே கொஞ்ச நாள்ள வந்து உன்ன எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்... இப்போ மாமாக்கு வர்க் ஜாஸ்திடா... உன் அக்காவும் ஹாஸ்பிடல் போகணும்... லீவ் எடுக்க முடியாது... அப்போ கவிக் குட்டி மட்டும் வீட்டுல தனியா இருக்க முடியுமா என்ன... அங்க அந்த டெவில் லேடி வேற இருக்காங்கல்ல.." எனக் கண்ணடித்துக் கேட்கவும் சிரித்தாள் காவ்யா.

பல சமாதானங்களின் பின் காவ்யா ஒத்துக் கொள்ள அவளை ராஜாராமின் வீட்டில் விட்டு விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இருவரும் கிளம்பினர்.

பாதி வழியிலேயே கார் நிற்க சஜீவ் பல முறை முயற்சித்தும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை‌.

நித்ய யுவனி, "என்னாச்சு.." என்க, "தெரியல யுவி... நீ உள்ள உக்காரு... நான் போய் என்னன்னு பார்க்குறேன்.." என்ற சஜீவ் இறங்கி என்ன பிரச்சினை எனப் பார்த்துக் கொண்டிருக்க திடீரென மழை உரத்துக் கொட்டியது.

காரிலிருந்த நித்ய யுவனி சஜீவ் மழையில் நனைவதைக் கண்டு, "அச்சோ... சர்வேஷுக்கு மழைல நனஞ்சா ஒத்துக்காதே... என்னப் பண்ணிட்டு இருக்காரு.." என நினைத்தபடி இறங்கி சஜீவ்விடம் சென்றாள்.

நித்ய யுவனி, "உங்களுக்கு தான் மழை ஒத்துக்காதுல்ல... உள்ள வாங்க..." என்க,

"எதுக்கு யுவி நீ வெளிய வந்த... நீ போய் உள்ள உக்காரு... நான் வரேன்... இன்னும் கொஞ்சம் தான்..." என சஜீவ் கூற நித்ய யுவனி கேட்கவே இல்லை.

இருவரும் மாறி மாறிக் கூறிக் கொண்டிருக்க கடைசியில் இருவருமே முழுதாக நனைந்து விட்டனர்.

சற்று நேரத்தில் என்ன பிரச்சினை எனப் பார்த்து சஜீவ் சரி செய்து விட கார் வீட்டை நோக்கிப் பயணித்தது.

வீட்டில் அனைவரும் ஏற்கனவே உறங்கி விட்டிருக்க சுசித்ரா மட்டும் வாசலிலே காத்திருந்தாள்.

வெகுநேரம் ஆகியும் இருவரும் வராததால் சுசித்ரா என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ளக் காத்திருக்க சஜீவ், நித்ய யுவனி இருவருமே தொப்பலாக நனைந்தபடி உள்ளே வருவதைக் கண்டதும் அதிர்ந்தவள் அவசரமாக சஜீவ்விடம் சென்று,

"என்னாச்சு சர்வா... ஏன் இப்படி மழைல நனஞ்சிருக்க..." எனக் கேட்டபடி அவனைத் தொடப் பாரக்க அவள் கையைத் தட்டி விட்ட சஜீவ்,

"ச்சீ கைய எடு... ரொம்பத் தான் அக்கறை இருக்குறது போல நடிக்காதே... இந்தத் தொட்டுப் பேசுற வேலை எல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே... அதுக்கெல்லாம் வேற ஆள் பாரு... என் கிட்ட சரி வராது.." என மிரட்டியவன் தன் அறைக்குச் சென்றான்.

சஜீவ் சென்றதும் நித்ய யுவனி சுசித்ராவை ஏளனப் பார்வை பார்த்து விட்டு சமையலறைக்குச் சென்றாள்.

நித்ய யுவனியை வெறித்த சுசித்ரா, "இவ்வளவு நாளும் எதுவும் பண்ணாம அமைதியா இருந்தேன்... நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்டி... உன்னையும் சர்வாவையும் பிரிச்சி அவன அடஞ்சி அவனோட சொத்தெல்லாத்தையும் என் பேருக்கு மாத்தினதுக்கு அப்புறம் தான் மறுவேலை பார்ப்பேன்..." எனச் சூளுரைத்தாள்.

சமையலறை சென்ற நித்ய யுவனி வழமை போல் சஜீவ்விற்கு பால் எடுத்துக் கொண்டு அறைக்குச் செல்ல அவனோ குளியலறையிலிருந்து தலையைத் துவட்டியபடி வெளியே வந்தான்.

நித்ய யுவனி, "என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க... ஆல்ரெடி மழைல நனஞ்சிட்டீங்க... இப்போ எதுக்கு குளிக்க வேற செஞ்சீங்க..." எனக் கோவமாகக் கூறியவள் சஜீவ் கரத்திலிருந்த துவாலையை வாங்கி அவனைக் கட்டிலில் அமர வைத்து தானே துவட்டி விட்டாள்.

சஜீவ் நித்யாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், "என்னை மன்னிச்சிட்டியா யுவி.." என ஏக்கமாகக் கேட்கவும் துவட்டுவதை நிறுத்தியவள்,

"நா.. நான்.. நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்... பால் வெச்சி இருக்கேன்..‌ எடுத்து குடிங்க..." என்று விட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

நித்ய யுவனி குளித்து உடை மாற்றி விட்டு வரும் போது சஜீவ் பாலைக் குடித்து விட்டு அமர்ந்த வாக்கிலே கட்டிலில் பின்னே சாய்ந்து உறங்கி இருந்தான்.

சஜீவ்விடம் சென்ற நித்ய யுவனி அவனைக் கட்டிலில் நேராகப் படுக்க வைத்தாள்.

அவனோ அது எதையும் அறியாமல் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தான்.

அறை விளக்கை அணைத்து விட்டு கட்டிலில் அவனருகே அமர்ந்த நித்ய யுவனி மெல்லிய ஒளியில் தெரிந்த தன்னவனின் நிர்மலமான முகத்தையே பார்த்தபடி இருந்தாள்.

சஜீவ்வைப் பார்த்தவாறே நித்ய யுவனியை உறக்கம் தழுவிக் கொள்ள அமர்ந்து கொண்டே தூங்கியதால் சற்று நேரத்தில் கழுத்து வலி எடுக்கவும் கண் விழித்தாள்.

ஏதோ முனங்கல் சத்தம் கேட்கவும் என்னவெனப் பார்க்க சஜீவ் தான் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான்.

பதறிய நித்ய யுவனி, "சஜு... சஜு... என்னாச்சு..." என சஜீவ்வைத் தட்டி எழுப்ப அவன் உடல் வெப்பநிலை நன்றாகக் குறைந்திருந்தது.

மழையில் நனைந்ததால் வந்த வினை என நித்ய யுவனிக்குப் புரிந்தது.

சஜீவ்வுக்கு மழையில் கொஞ்சம் நனைந்தாலும் ஒத்துக் கொள்ளாது.

அதனால் தான் நித்ய யுவனி அவனை மழையில் நனைய வேண்டாம் என்றாள்.

நித்ய யுவனி அவசரமாக ஏசியை ஆஃப் செய்தாள்.

ஆனாலும் சஜீவ்விற்கு குளிர் குறையவே இல்லை.

நித்ய யுவனி, "சர்வேஷ்... கண்ண திற சர்வேஷ்... இதுக்கு தான் அவ்வளவு சொன்னேன் நனைய வேணாம்னு..." என்றவள் சுடுநீர் எடுத்து வரச் செல்லப் பார்க்க சஜீவ்வோ அவளை செல்ல விடாது பிடித்திருந்தான்.

நேரம் செல்லச் செல்ல சஜீவ்விற்கு குளிர் அதிகரித்துக் கொண்டே செல்ல நித்ய யுவனிக்கு என்ன செய்ய என்றே புரியவில்லை.

தான் ஒரு வைத்தியர் என்பதையே நித்ய யுவனி மறந்து விட்டாள்.

குளிர் அதிகரித்து சஜீவ் தன்னிலை இழந்து கொண்டு வர, "யுவி.. யுவி..." என முனங்கினான்.

தன்னிலையில் இல்லால போது கூட சஜீவ் தன் பெயரையே உச்சரிக்கவும் நித்ய யுவனியின் கண்கள் கலங்கின.

நித்ய யுவனி சஜீவ்வை தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள அவனோ குளிரைப் போக்க நித்ய யுவனியை சுற்றி கைகளைப் போட்டு இறுக்கமாக அணைத்தான்.

சஜீவ் தன்னிலையில் இல்லாததால் நித்ய யுவனியால் எதுவும் செய்ய முடியவில்லை.

சஜீவ் மேலும் மேலும் நித்ய யுவனியின் மார்பில் புதைய கண்களை அழுத்தி மூடி தன்னைக் கட்டுப்படுத்திய நித்ய யுவனி ஆபத்துக்குப் பரவாயில்லை என சஜீவ்வின் சட்டையைக் கலைத்து விட்டு தன் உடல் சூட்டை தன்னவனுக்கு வழங்க ஆரம்பித்தாள்.

நித்ய யுவனி தன்னவனின் நலனுக்காக தன்னையே அவனுக்கு மருந்தாக்க சஜீவ்வே அறியாது அவர்களின் திருமண பந்தத்தை அடுத்த கட்டம் நோக்கி எடுத்துச் சென்றான்.

_______________________________________________

விடியும் போது தன்னவளின் உடல் சூட்டில் சஜீவ் இதமாக உறங்க நித்ய யுவனியோ உறக்கத்தைத் தொலைத்துப் படுத்திருந்தாள்.

கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக வடிந்தோடியது.

தன் மனநிலையையே இன்னும் நித்ய யுவனிக்குப் புரியாதிருக்க அதற்குள்.....

சஜீவ்வின் உடல் வெப்பநிலை ஓரளவு சீராக இருக்க அவனின் உறக்கம் கலையாதவாறு அவனை விட்டு விலகியவள் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

காலையில் சஜீவ் கண் விழிக்கும் போது அடித்துப் போட்டது போல் அவனுக்கு உடல் வலித்தது.

இரவு நடந்த எதுவுமே அவனுக்கு நினைவில் இருக்கவில்லை‌.

அறையைச் சுற்றிப் பார்க்க நித்ய யுவனியை எங்கும் காணவில்லை.

சஜீவ் எழுந்து கீழே இறங்கிச் செல்ல ஹாலில் இருந்த பிரபு, "இப்போ எப்படி இருக்க சர்வா.. ஃபீவர் கொறஞ்சிடுச்சா.." என்க,

சஜீவ் புரியாமல், "ஃபீவரா..." எனக் கேட்க,

"ஹ்ம்ம் ஆமாடா.. நித்யா தான் சொன்னா நேத்து நீ மழைல நனஞ்சிட்டியாம்... நைட் ஃபுல்லா ஃபீவர்னு... ரூம்ல ஏதோ டேப்ளட்ஸ் வெச்சிருக்காளாம்.. உன்ன எடுத்து குடிக்க சொல்ல சொன்னா.." என்றார் பிரபு.

சஜீவ், "ஓஹ்... அதான் உடம்பு இவ்வளவு வலிக்கிதா.." என நினைத்தவன், "யுவி எங்கப்பா..." எனப் பிரபுவிடம் கேட்டான்.

பிரபு, "இமர்ஜன்சின்னு சொல்லிட்டு காலைலயே ஹாஸ்பிடல் கிளம்பி போய்ட்டாடா... நீ தூங்கிட்டு இருக்கேன்னு நீ எழுந்ததும் உன் கிட்ட சொல்ல சொன்னா.." என்கவும் சரி எனத் தலையசைத்தான்.

காலை உணவை எடுத்து விட்டு நித்ய யுவனி வைத்திருந்த மருந்தை எடுத்துக் குடித்தவன் அவள் நினைவில் கட்டிலில் கண் மூடிப் படுத்தான்.

ஏனோ இன்று தன்னவளின் நினைவு சஜீவ்வை அதிகமாக வாட்டியது.

உடனே நித்ய யுவனியைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றவும் ஹாஸ்பிடல் சென்று அவளைப் பார்க்க முடிவெடுத்தான்.

அப்போது சரியாக விஷமமாக சிரித்தபடி அவன் அறைக்குள் நுழைந்தாள் சுசித்ரா.

_______________________________________________

நித்ய யுவனி காலையிலேயே ஹாஸ்பிடல் கிளம்பி வந்திருக்க அவள் மனம் ஒரு நிலையில் இருக்கவே இல்லை.

மனதை ஏதோ ஒரு உணர்வு உறுத்தவும் என்னவெனப் புரியாது தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.

கதவு தட்டப்படவும், "யேஸ் கம் இன்.." என உள்ளே வர அனுமதிக்க பிரேமுடன் உள்ளே நுழைந்தாள் ஜனனி.

நித்ய யுவனி, "ஜெனி... பிரேம்ணா.." என எழுந்திருக்க,

பிரேம், "எப்படி இருக்கமா... ஜனனிக்கு இன்னைக்கு செக்கப்..‌அதான் வந்தோம்.." என்க,

"நான் நல்லா இருக்கேன் அண்ணா...‌ உக்காருங்க... உக்காரு ஜெனி..." என்றாள் நித்ய யுவனி.

ஜனனி, "என்னாச்சு நித்து... ஏன் டல்லா இருக்க..." என்க,

"திரும்ப சர்வா கூட ஏதாவது பிரச்சினையா... அவன் ஏதாவது தப்பு பண்ணிட்டானா.." என அவசரமாகக் கேட்டான் பிரேம்.

நித்ய யுவனி, "அப்படி‌ எதுவும் இல்லண்ணா... எங்களுக்குள்ள எந்தப் பிரச்சினையும் இல்ல... எப்போவும் போல தான் இருக்கோம்..." என்றவள்,

"வா ஜெனி... உன்ன செக் பண்ணிட்றேன்..." என வேறு ஏதாவது கேட்க முன் பேச்சைத் திசை திருப்பினாள்.

ஜனனியும் பிரேமும் நித்ய யுவனியைப் பின் தொடர ஜனனியை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்த நித்ய யுவனி அவள் வயிற்றில் ஜெல்லொன்றைத் தடவினாள்.

நித்ய யுவனி தன் கையிலிருந்த டேப் மெஷர் மூலம் ஜனனியின் வயிற்றில் மேலிருந்து கீழாகக் கொண்டு செல்ல அங்கிருந்து சிறிய திரையை நோக்கிக் கை நீட்டியவள் பிரேமிடம்,

"இந்த கார்னர்ல குட்டியா தெரியுதே... அது தான் பேபி..." என்றாள் புன்னகையுடன்.

பிரேம் மற்றும் ஜனனி இருவரும் மகிழ்ச்சியில் கண்கள் கலங்க பிரேம் ஜனனியின் கையை இறுக்கப் பற்றினான்.

பின்‌ மூவரும் அறைக்கு வர நித்ய யுவனி, "பேபி நல்லா இருக்கா... ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ்னால ரொம்ப கவனமா இருக்கனும்... அண்ணா நீங்க தான் ஜெனிய கவனமா பாத்துக்கனும்... அவ வேணான்னு சொன்னாலும் ஹெல்த்தி பூட்ஸ் சாப்பிட வைங்க..." என பல அறிவுரைகள் வழங்கினாள்.

ஜனனி, "பிரேம்... நீங்க வெளிய வெய்ட் பண்ணுங்க... நான் நித்து கூட கொஞ்சம் பேசிட்டு வரேன்.." என்கவும் பிரேம் வெளியேறினாள்.

பிரேம் சென்றதும் ஜனனி, "நீ இன்னும் சஜீவ் அண்ணாவ மன்னிக்கலயா நித்து... அவருக்கு அவர் பக்க நியாயத்த சொல்லவாவது ஒரு வாய்ப்பு குடுக்கலயா.." என்க,

"இல்ல டி... சர்வேஷ் என் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான்..." எனப் பெருமூச்சு விட்டவள்,

"முடியலடி... யாரு யாரோ எங்க லைஃப்ல விளையாடி இருக்காங்க... யாரோ பண்ணின தப்பால இத்தனை வருஷமா நாங்க ரெண்டு பேரும் தான் கஷ்டப்பட்டோம்... இப்போ எனக்கு சர்வேஷ் மேல எந்த கோவமும் வெறுப்பும் இல்ல ஜெனி... ஆதங்கம் தான்... அன்னைக்கே பிரச்சினைய தெளிவா என் கிட்ட சொல்லி இருந்தான்னா ஏதாவது பண்ணி இருக்கலாம்ல... அதை தான் என்னால ஏத்துக்கவே முடியாது... சுசித்ராவாலயும் சர்வேஷோட அம்மாவாலயும் எங்க வாழ்க்கையோட அழகான நேரங்களை எல்லாம் தொலச்சிட்டோம்டி.." என அழுதாள் நித்ய யுவனி.

ஜனனி எழுந்து வந்து நித்ய யுவனியை அணைத்துக் கொண்டவள், "சரி அழாதே நித்து... அதான் இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சே... சஜீவ் அண்ணா கூட மனம் விட்டு பேசு... நீங்க தொலச்ச நாட்களெல்லாம் திரும்ப அனுபவிக்க முடியும்..." என்க சரி எனத் தலையசைத்தாள்.

❤️❤️❤️❤️❤️

மக்களே... உங்க எல்லாருக்கிட்டயும் ஒரு பெரிய சாரி சொல்லிக்குறேன்... டைமுக்கு யூடி தர முடியல... கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்... இந்த யூடில என்னவோ மிஸ் ஆனது போலவே ஃபீல்... தலைல இருக்குற விஷயத்த டைப் பண்ண வர மாட்டேங்குது... கொஞ்சம் எட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... சாரி... இன்னைக்கு நைட்டுக்குள்ள இன்னொரு யூடி தரேன்... படிச்சிட்டு மறக்காம உங்க கருத்த சொல்லுங்க...

- Nuha Maryam -
 
Top