கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நித்யா மாரியப்பன்

siteadmin

Administrator
Staff member
வணக்கம்

நான் நித்யா. எனது சொந்த ஊர் திருநெல்வேலி. கல்லூரிப்படிப்பு, தொழிற்கல்வி, பின்னர் வேலை என வேகமாய் பயணித்து பின்னர் அந்த வேகம் சலித்துப் போனதில் வீட்டில் ஓய்வாய் இருக்கும் சமயத்தில் எழுதத் தொடங்கினேன். எழுத்துலகில் ஒரு வருடத்தை முடித்துவிட்டேன்.

இது வரை 6 நெடுநாவல்களும், 3 குறுநாவல்களும் எழுதியுள்ளேன். எனது 6வது நெடுநாவலான கிருஷ்ணதுளசி ஸ்ரீ பதிப்பகத்தில் இந்த ஜூலை மாதம் புத்தகமாக வெளிவந்துள்ளது. மற்ற கதைகள் அனைத்துமே கிண்டிலில் மின் புத்தகங்களாக உள்ளது. புத்தகங்கள் படிப்பது என்பது சிறுவயதிலிருந்தே மிகவும் பிடிக்கும். திகில், அறிவியல் புனைவு மற்றும் திரில்லர் கதைகளை விரும்பி படிப்பேன்.

நகைச்சுவை கலந்த குடும்பக்கதைகள் தான் எனது எழுத்து பாணி. படிப்பவர்கள் முகம் சுளிக்கக் கூடாது என்பதிலும், வெறும் காதலை மட்டும் சொல்லாது மற்ற உணர்வுகளையும் அழகாய் எழுத்தில் வடிக்கவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறேன்.
 

Sspriya

Well-known member
எழுத்துபணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் dr 💞😍
 
Top