அத்தியாயம் 16
அடுத்த சில நாட்களுக்கு தமிழ்ச்செல்வன் பார்கவி இருவருக்குள்ளும் எந்த ஒரு உரையாடலோ குறுஞ்செய்தித் தொடர்போ நடைபெறவில்லை. பார்கவி கோபித்துக் கொண்டிருப்பாளோ என்ற கவலையே தமிழ்ச்செல்வனைப் பிடித்து வாட்டியது. "இப்படியா உளறி வைக்கிறது?" என்று தன்னைத்தானே மீண்டும் மீண்டும் திட்டிக் கொண்டான். அடுத்த அடி எப்படி வைப்பது, அவளாகவே அழைப்பாளா? என்ன காரணம் இருக்கிறது அழைப்பதற்கு? நானாகத் தானே ஃபோனைக் கட் பண்ணினேன். என்றெல்லாம் தோன்ற, அஷோக்கைத் தேடியது மனம்.
'பக்கத்துல நண்பன் இல்லாதது எவ்வளவு கஷ்டமா இருக்கு? நாலு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியலையே! நடக்கிற விஷயத்தை எல்லாம் அவன் கிட்ட சொல்லி ஐடியா கேட்கணும் போலத் தோணுது. ஒருவேளை உலகம் பூரா காதலர்களுக்கு அப்படித்தான் தோணும் போல.. அதுதான் எல்லா ஹீரோவும் கூட ஒரு ஃபிரண்டை வச்சுக்கிட்டு சுத்துறாங்க. பக்கத்துல நண்பன் நாலு நாளா இல்லாததே ஒரு மாதிரி இருக்கே.. சிலர் எப்படி வாழ்க்கை முழுசும் தனியா இருக்காங்க?' என்று யோசித்தான்.
வாழ்க்கை முழுசும் தனியா இருக்கிறவங்களை விட வாழ்க்கை முழுசும் வேலைவெட்டி இல்லாம இருக்காங்களே, அவங்க தான் பெருசு.. 'சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமாடா? கொஞ்ச நாள் இருந்து பாருடா!' என்று வடிவேலு ஒரு திரைப்படத்தில் கூறியது நினைவுக்கு வந்தது.
வேலை செய்தே பழக்கப்பட்டவர்கள் இப்போதும் சும்மா இருக்காமல் இணையதளத்தில் ஏதேதோ செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான். நண்பன் ஒருவன் கொரோனாவைக் கலாய்த்து வீடியோ போட்டிருந்தான். அது நல்ல வரவேற்பைப் பெறவே யூடியூப் சேனல் ஆரம்பித்து தினமும் எதையாவது ஒன்றை வீடியோவாக எடுத்துப் போட்டான். 'ஒருநாள் வீடியோ போடலைன்னாக் கூட கோவமா வருதுடா' என்றான்.
முகநூலில் தினமும் ஒரு குழு ஆரம்பமாகியது. இவனை சேரச் சொல்லி வரவேற்றார்கள். சிலவற்றில் ஆர்வமாகச் சேர்ந்தான். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் அதில் உரையாடல்கள் அதிகமாக இருந்தன, அதன்பின் மந்த நிலைக்கு வந்துவிட்டன. தினமும் பத்து நட்பு அழைப்புகள் வந்தன. எப்போதோ ஒருவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னது போய், தினமும் மூன்று அல்லது நான்கு பேருக்குச் சொல்ல வேண்டியதாக இருந்தது. முகநூலைத் திறக்காத நாளொன்றில், "டேய் மகேந்திரனுக்கு மட்டும் ஹாப்பி பர்த்டே சொன்ன? எனக்குச் சொல்லல!" என்று ஒருவன் கோபித்துக் கொண்டான்.
அவனை விடத் தமிழ்ச்செல்வனுக்கு அதிகக் கோபம் வந்தது. 'போங்கடா! இனிமேல் எவனுக்குமே வாழ்த்துச் சொல்ல மாட்டேன் டா!' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான். இதனிடையில் தமிழ்ச்செல்வனுக்கே பிறந்தநாள் வந்தது. அம்மா அவனை ஃபோனில் அழைத்து,
"தம்பி! உங்க தெருவுல கோயில் எதுவும் இருந்தா போயிட்டு வாடா. புது டிரஸ் இருக்கா? கேசரி கிண்டுறது எப்படின்னு சொல்றேன். நீயே செஞ்சு சாப்பிடுறியாடா?" என்று கேட்டாள். எப்படிச் சொல்வான், அஷோக்கின் உடையைத் தான் இப்போது தினமும் போடுகிறேன் என்று. அஷோக்கிற்கு ஒரு பழக்கம். புதியதாக வாங்கிய உடையை உடனே போட்டு விடுவான். அதனால் போடாத புதிய உடைகள் என்று ஒன்றுமே இல்லை. அம்மா சொன்னால் வருத்தப்படுவார் என்று 'புது லுங்கியும் புது டி- ஷர்ட்டும் இருக்கும்மா' என்று சமாளித்தான். அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வந்து கொடுக்கிறார்கள் அவர்களிடம் எனக்கு இன்று பிறந்தநாள்; புது சட்டை வாங்கித் தாங்க என்று சொல்ல முடியுமா? முதலில் அப்படிச் சொல்வதானால் கூட வாங்குவதற்குக் கடை எங்கே இருக்கிறது?
தன்னிடம் கொஞ்சமாவது பணம் இருக்கிறது. கொரோனாவும் இதுவரை வந்துவிடவில்லை. பாதுகாப்புக்காகத் தான் தனிமையில் இருக்கிறேன். எனக்கே இப்படி என்றால் வருமானத்துக்கு வழி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? இருப்பிடம் இல்லாதவர்கள் எங்கே போவார்கள்? வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊருக்கு நடந்து சென்றதை டிவியில் காட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமே என்னவழி? பார்கவியைச் சந்தித்த அன்று உணவு கொடுப்பதற்காக ஆட்டோவில் சென்ற போதும் சில மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தெருக்களில் இருந்தார்கள். கண்ணில் பட்ட இரண்டு பேருக்கும் ஆளுக்கொரு பொட்டலம் உணவு கொடுத்தாயிற்று. அடுத்த வேளை உணவை அவர் எப்படி சாப்பிட்டிருப்பார்? அதில் ஒரு நபர் முன்பு வழக்கமாக ஏதாவது ஒரு ஹோட்டல் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருப்பார். சில சமயம் மிஞ்சுவதைத் தருவார்கள். இப்போது ஹோட்டல்கள் ஏதும் இல்லை. அவர் உணவுக்கு என்ன செய்வார்? கொரோனா பற்றி அவருக்குத் தெரியுமா? அறிகுறி ஏதும் வந்தால் அவருக்கு யார் சிகிச்சை அளிப்பார்கள்?
முதல் சில நாட்கள் காதல் பற்றி நினைத்து மண்டை குழம்பினான் என்றால், இப்போது திடீரென சமூகப் பிரச்சனை மனதைக் கலைத்துப் போட்டது. 'உலகமே பதறிக்கிட்டு இருக்கு. நீ காதல் மயக்கத்தில் இருக்க? உருப்படியா ஏதாவது செய்டா' என்றது தவறாமல் சுட்டிக்காட்டி வரும் மனசாட்சி.
நண்பர்கள் ஏதாவது செய்கிறார்களா என்று பார்க்க முகநூலில் ரத்ததானக் குழுவினரிடம் பக்கங்களைத் திறந்து பார்த்தான். விஸ்வநாதனைப் பற்றி விசாரிக்கையில் கடைசியாகப் பார்த்தது. அதன் பின் அந்த பக்கம் போகவே இல்லை. கண்டிப்பாக நண்பர்கள் ஏதாவது செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்த்தான். நம்பிக்கை வீண்போகவில்லை. சென்னையில் தொற்று அதிகரித்து அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்த நேரம். உடல்களை அடக்கம் செய்வதில் குழப்பம் இருப்பதாக ஏற்கனவே செய்தியில் பார்த்திருந்தான். நண்பர்கள் உடல்களை அடக்கம் செய்ய உதவி வருவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
நிறைய ஊர்களில் தேவைப்படும் மக்களுக்கு உணவளித்து, இட வசதி செய்து தந்து, பொருட்களை வாங்கித்தந்து என்று தம்மாலான உதவிகளைச் செய்து கொண்டிருந்தனர். "இந்தப் பேரிடர் மனித இனம் இதுவரை சந்தித்ததிலேயே மாபெரும் சவால்!" என்று தமிழ்ச்செல்வன் ஒரு பதிவினைப் போட, பலபேர் அது குறித்த ஆதங்கங்களை தெரிவித்திருந்தனர்.
ஒரு புதிய முகநூல் நண்பன், "வாழ்க்கையில ஒரு தடவை இயற்கை மனித இனத்தைப் புரட்டி போட்டதுக்கே இவ்வளவு பீல் பண்றீங்க ப்ரோ? இவ்வளவு யுகங்களா எத்தனையோ உயிரினங்களை உலகத்தை விட்டே ஓட வச்சிருக்கானே மனுஷன்? அதப்பத்தி யோசிச்சீங்களா?" என்று கேட்டிருந்தான்.
இதுவரை வந்த மற்ற செய்திகளை விட இந்த கமெண்ட் தமிழ்ச்செல்வனைப் பாதித்தது. 'உண்மை தானே! போக்குவரத்து எல்லாம் குறைஞ்சு போய், காத்தே சுத்தமாயிடுச்சாம். அப்ப மனுஷன் எவ்வளவு மோசம்? மனித உரிமைகள்னு பேசுறதை விட மிருகங்களுக்காகக் குரல் கொடுக்கிறது தான் முக்கியம் போல, என்று நினைத்தவன், அதான் பார்கவி உயிரினங்கள் மேல ஆர்வமா இருக்கா போல' என்று யோசித்தான்.
சும்மாயிருக்குமா மனசாட்சி, 'அங்க சுத்தி, இங்க சுத்தி பார்கவிகிட்டயே வந்து நிக்குறியே!' என்றது. அன்றைய கடிதத்தில்,
'பார்க்கும் இடமெல்லாம் பார்கவி!' என்று எழுதி வைத்தான்
தமிழ்ச்செல்வன் அஷோக்கைத் தேடித் தவித்ததை போலல்லாமல் பார்கவிக்குத் தன் மனதில் உள்ளவற்றைக் கொட்ட உடனடியாக ஒரு ஆள் கிடைத்து விட்டது. ரேணுகா அவளாகவே அழைத்து, "பார்கவி! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டி" என்றாள்.
'சுமித்ராவைப் பற்றிப் பட்ட கவலையில் பாதி கூட ரேணுவப் பத்தி யோசிக்கலையே.. அன்னைக்குத் தானே வந்து புலம்பிட்டுப் போனா.. அடுத்து எப்படி இருக்கான்னு கேட்கவே இல்லையே?' என்று வருந்தியவள்,
"கண்டிப்பா ரேணு! எனக்கும் உன்கிட்டப் பேசணும். இங்க வரியா?"
"எனக்குத் தனியாப் பேசணும் டி. உன் வீட்ல அம்மா இருப்பாங்களே.. அன்னிக்காவது பாட்டி வீட்டுல இருந்த.." என்று ரேணுகா பார்கவி வீட்டுக்கு வரத் தயங்க,
"சரி, நான் உங்க ஊருக்கு வரவா? தம்பியக் கூட்டிட்டு வரேன். அவனும் ஏதோ செடிகொடி எல்லாம் ஃபோட்டோ எடுக்கணும்னு சொன்னான்"
"அப்ப எங்க குலதெய்வம் கோயில் இருக்குல்ல, அந்தத் தோப்பு.. அங்கே வா" என்றாள் ரேணுகா.
அன்று வார விடுமுறை என்பதால் பார்கவி தம்பியுடன் கிளம்பிவிட்டாள். தம்பிக்கும் இவளைப் போலவே உயிரியலில் ஆர்வம் உண்டு. இவர்கள் படித்த பள்ளியில் உள்ள உயிரியல் ஆசிரியை ஆக்கப்பூர்வமான பல செயல்களைச் செய்ய வைத்து மாணவர்களை ஊக்கப்படுத்துபவர். பார்கவி மேற்படிப்பில் பொறியியல் படித்தாலும் ஆசிரியையுடன் இன்னும் தொடர்பில் தான் இருந்தாள். இப்போது நாட்டு மரங்கள், அதிலுள்ள பூச்சிகள், கிராமங்களுக்கேயுரிய பறவைகள் பற்றி ஒரு காணொளி தயாரித்து வந்தார்கள்.
ஸ்கூட்டியில் பார்கவியும் அவள் தம்பியும் தோப்பைச் சென்றடைய ரேணுகா ஏற்கனவே அங்கு காத்திருந்தாள். அங்கு ஒரு சிறிய கோயில் இருந்தது. அது தான் ரேணுகா குடும்பத்தினருடைய குலதெய்வக் கோயில்.
"பேசிட்டு இருங்க... நான் அப்படியே இந்தப் பக்கமா போயி போட்டோ எடுத்துட்டு வரேன்" என்று தம்பி கேமராவுடன் கிளம்பினான்.
"தம்பி நல்ல வளர்ந்துட்டான் என்ன.. நாம ஏதோ பேசப் போறோம்னு தனியா விட்டுட்டுப் போறான்" என்று ரேணுகா கூற,
"ஆமா, காலம் ஓடுதுல்ல.. பொறுப்பு தன்னால வருது. நீ சொல்லு, வீட்ல திரும்பியும் எதுவும் திட்டினாங்களா?"
"இல்லடி. அன்னைக்கு நான் போட்ட போடுல ரெண்டு பேரும் ஆடிப் போயிட்டாங்க. நானும் ரொம்பப் பேச்சு குடுக்கல" என்று கூறிக் கொண்டிருக்கையில் தலையில் விறகுக் கட்டுடன் அந்த வழியாகச் சென்ற நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி,
"ரேணுகா, இது யாரு? கூடப் படிச்ச புள்ளையா? சாமி கும்பிட வந்தீகளாக்கும்.." என்றாள்.
"ஆமாக்கா, அம்மா விளக்குப் போடச் சொன்னாங்க" என்றாள் ரேணுகா.
"இன்னும் என்ன அக்காங்கிற.. மதினின்னு சொல்லு. கல்யாணம் பேசியிருக்கிற புள்ள, இப்படி தோப்புத் துரவுல ரொம்ப நேரம் நிக்காத. காத்து கருப்பு அடிச்சுறப் போவுது. சீக்கிரம் வீட்டுக்குப் போங்க. வரட்டா? வரேன் தாயி" என்று பார்கவியிடமும் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
"கல்யாணம் பேசிருக்கா? என்னடி சொல்லிட்டுப் போறாங்க? யாரு இது?" என்று பார்கவி கேட்க,
"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். இவங்க எங்க தூரத்து சொந்தம்தான். இப்ப வந்துட்டு போறாங்களே இவங்க தம்பிக்குத் தான் என்னைப் பொண்ணு கேட்டு வந்தாங்க. கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரி தான்னு நினைக்கிறேன். எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு. அதான் ஐடியா கேட்கலாம்னு வரச்சொன்னேன்"
"என்ன பிரச்சனை? அதிகமா எதிர்பார்க்கிறாங்களா? நல்ல குடும்பம் தானே? பையன் என்ன படிச்சிருக்கார்? கெட்டப் பழக்கம் எதுவும் இருக்கா? இவங்களப் பாத்தா ரொம்ப சாதாரணமா இருக்காங்களே?" படபடவென்று கேள்விகளை அடுக்கினாள் பார்கவி.
"பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல. நல்லவங்க தான். இங்கே அடுத்த வயல் தான் அவங்க வயல். குடும்பத்தோட விவசாயம் பண்றாங்க. வெளியாள் வைக்காம அவங்களே உழைக்கிறாங்க.. ஓரளவு வசதி தான். இருந்தாலும் வர்ற பணத்தைத் திருப்பி விவசாயத்திலேயே போட்டுடுவாங்க.. ஆட்கள் ரொம்ப சிம்பிளா தான் இருப்பாங்க. மாப்பிள்ளை டிப்ளமோ படிச்சுட்டு விவசாயம் பாக்கார். பெரிய குடும்பம், இவர்தான் மூத்த பையன். இப்பப் போனாங்களே, அது அவரோட அக்கா. கல்யாணம் ஆகி இந்த ஊர்லையே இருக்காங்க. அம்மா வீட்டு வயல்லேயே அவங்களும் வேலை செய்ய வர்றாங்க" என்றாள்.
"நல்ல இடம் மாதிரிதான் தெரியுது. நீ சொல்ற விதத்திலேயே உனக்கும் பிடிச்சிருக்குன்னு தெரியுது. அப்புறம் என்ன? நகை, பணம் விஷயமா?"
"சேச்சே! இவங்க ஒரு ரெண்டு வருஷம் முன்னாடியே என்னைப் பொண்ணு கேட்டாங்களாம். நகை, பணம் எதுவும் எதிர்பார்க்கல.. அவங்களே கல்யாணச் செலவும் பாத்துக்கிறேன்னு சொன்னாங்களாம், எங்க அம்மா அப்பாவுக்கு இவங்க எளிமையா இருக்காங்களேன்னு யோசனை. இப்பல்லாம் பந்தா பார்ட்டிகளைத் தானே எல்லாருக்கும் பிடிக்குது. அப்பத்தான் நானும் மில்லுல ரெண்டாவது வருஷம் சேர்ந்திருந்தேன். வேண்டாம் இப்ப கல்யாணத்துக்குப் பார்க்கலைன்னு எங்க வீட்டில சொல்லி அனுப்பிருக்காங்க. இந்த விஷயம் எதுவுமே எனக்குத் என்ன தெரியாது. திரும்பியும் இப்ப பொண்ணு கேட்டு வந்துருக்காங்க"
"இந்த ரெண்டு வருஷத்துல வேற பொண்ணு பாக்கலயாக்கும்? கட்டுனா உன்னைத் தான் கட்டுவேன்னுட்டாராக்கும்?" பார்கவி ரேணுகாவின் கன்னத்தில் லேசாகக் கிள்ளினாள்.
"அதெல்லாம் தெரியல.. நான் கேட்டுக்கல.." ரேணுகாவுக்கு மெலிதாக வெட்கம் வந்தது.
"அப்புறம் என்ன? வெட்கம் எல்லாம் வருது, சரின்னு சொல்லிட வேண்டியதுதானே?" பார்கவி கேட்க,
"எங்க அப்பாவுக்கு கொஞ்சம் வாய் அதிகம், உனக்கே தெரியும்ல? அவங்க போன தடவை கேட்டுட்டுப் போன நேரம், 'என் மகளுக்கு 30 பவுன் போட்டு, கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு கட்டிக் குடுப்பேன், சேத்துல புரளுறவன் வந்து பொண்ணு கேக்குறான்' அப்படி இப்படின்னு வெளியே சலம்பிருக்கார். இப்ப அதெல்லாம் பிரச்சனையாயிடுமோன்னு பயமா இருக்கு. அதுவுமில்லாம நகை நட்டு சேக்குறதுக்காகத் தான் நானே திருப்பூர் போனது. இருந்தும் பெருசா ஒன்னும் சேத்துக்கலை. அதான் யாராவது எதுவும் சொல்லிக் காட்டுவாங்களோன்னு பயமா இருக்கு"
"நீ யோசிக்கிறது கரெக்ட் தான். ஆனா ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன மாதிரி இந்த அம்மாவப் பாத்தா அப்படி பேசுறவங்களாத் தெரியல. அப்ப குடும்பமும் நல்லா தான் இருக்கும். அப்புறம் என்ன, ஜாலியா இரு! நீயும் ஒரு உழைப்பாளி தானே.. களத்துல இறங்கி வேலை பார்க்க ஆரம்பிச்சுடு. என்ன ஓகேவா?" யோசனையுடன் இருந்த ரேணுகாவை கலகலப்பாக மாற்ற அவளது இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டினாள் பார்கவி.
அப்போதும் ரேணுகாவுக்கு முகம் தெளியாமல் இருக்கவும், "ஏண்டி! மாப்பிள்ளைக்கு வயசு அதிகம், ஆள் அழகு இல்ல, சொட்டைத் தலை அப்படி ஏதாவது பிரச்சனை இருக்கா?" என்று பார்கவி கேட்க,
"சீச்சீ.. அதெல்லாம் இல்ல!" ரேணுகா மறுத்த விதத்திலேயே அவளுக்கு பையன் மேல் உள்ள பிரியம் தெரிந்துவிட்டது.
"அன்னைக்கு நான் உன்னைப் பாக்க கோவத்தோட வேகமா சைக்கிள்ல வந்தேனே, அதைப் பாத்துட்டு என் தங்கச்சி கிட்ட என்ன விஷயம்னு கேட்டாராம். அவ விஷயத்தைச் சொன்னவுடனே, அவர் தன்னோட அம்மாட்ட 'நகை பணம் சேக்கணும்னு அந்தப் புள்ளையப் பாடாப் படுத்துறாங்க.. திரும்பியும் போயி அதட்டிக் கேளுங்க. இந்த தடவை கண்டிப்பா முடிச்சுடணும்' அப்படின்னு சொன்னாராம்" கீழே குனிந்து தன் நகத்தைப் பார்த்தவாறு கூறினாள் ரேணுகா.
"ஓஹோ! ரொம்ப நாளா ஒன் சைடு லவ் இருக்கிற மாதிரி இருக்கே? விட்டா தூக்கிட்டு போயி தாலி கட்டுவார் போல?"
"சீ போடி! சுமித்ரா மாதிரி பேசிட்டு இருக்க, எங்க அப்பா நானும் இவரை லவ் பண்றேன்னு நினைச்சுக்கப் போறாருன்னு தயக்கமா இருக்குடி"
"அதெல்லாம் நினைக்க மாட்டாங்க. நெனச்சாலும் பரவாயில்லை. கல்யாணம் ஆனா மறந்துடுவாங்க. திடீர்னு லைஃப்ல டர்னிங் பாயின்ட் வந்துருக்கு. கண்டதையும் யோசிச்சு மனசக் குழப்பாதே.. பீ ஹேப்பி!" என்றாள்.
"அப்புறம், நீ ஏதோ பேசணும்னு சொன்னியே? உங்க வீட்டு நிலவரம் என்ன?" என்று ரேணுகா கேட்கவும், சந்தோஷமான விஷயங்களைக் கூறிய இந்த மனநிலையில் தன் கோபங்கள் ஒன்றும் இல்லாததாக பார்கவிக்கு தோன்றியது. ஏதோ சொல்லி சமாளித்தாள். ரேணுகாவை அனுப்பிவிட்டுத் தம்பியுடன் நடக்கும்போது தா
ன் உரைத்தது, ஒரு வேளை தமிழ்ச்செல்வனை விட்டுக்கொடுத்துப் பேசத் தனக்கு மனம் இல்லையோ என்று.