கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நிறைவு பகுதி கனவு மலர்கள் அத்தியாயம்--18

sankariappan

Moderator
Staff member
கனவு மலர்கள் -----18

அத்தியாயம்---18

ஊருக்கு ஒதுக்குப் புறமான அந்த பங்களாவில் மித்ரா அடைக்கபட்டாள்.

“நாளை உனக்கு இறந்த நாள். இன்று தான் கடைசி...” வில்லனைப் போல் சிரித்துவிட்டுப் போகும் அந்தக் குடிகார ரௌடி கைதி தான் தாயம்மா மேடத்தின் முன்னாள் கணவன்...அமிர்தாவின் அப்பா என்று புரிந்து கொண்டாள் மித்ரா. அட்வோகேட் மேடம் மாலாவிடம் அவன் படத்தை சென்ட் பண்ணியிருந்தாள். அதனால் அவளுக்கு பார்த்தவுடனே அடையாளம் தெரிந்துவிட்டது. இதை மனதில் குறித்துக் கொண்டாள்.

மறு நாள் அவள் அறைக்கு அமிர்தா வந்து சேர்ந்தாள். ஆச்சர்யத்துடன் மித்ராவைப் பார்த்தாள் அமிர்தா.

“மித்ரா நீ எங்கே இங்கே? அய்யோ உன் தலையில் ரத்தம் வழிகிறதே..” என்று பதறினாள் அமிர்தா.

“என் காயத்துக்கு கட்டு போட்டுக்கலாம். இப்ப உன் மனக்காயதுக்கு கட்டு போட வேண்டாமா? அதுக்குத் தான் உன்னை வரவழைத்சேன்.”

“நீயா என்னை வரவழைச்சே? இரண்டு குண்டர்கள், தூங்கிக் கொண்டிருந்த என்னை குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு வந்துதிட்டாங்க. என்னதான் நடக்குது மித்ரா? அவங்க டேஞ்சரஸ் பீப்பிள்...”

“டேஞ்சரஸ் பீப்பிள் தான் சில சமயம் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவாங்க. அவங்களை நான் பயன்படுத்திக்கிட்டேன்.”

அப்பொழுது உள்ளே வந்த குடிகார அப்பாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் அமிர்தா. வாய் பிளந்து நின்றாள். மூன்று வயதில் பார்த்தது. ஆனாலும் மறக்கவில்லை. மறக்கக் கூடிய முகமா அது.? கள்ளத்தனம் நிறைந்த முகம். பயத்தை ஏற்படுத்திய முகம். இருளின் மொத்த வடிவம்.

“யார் உன்னை தூக்கி வந்ததுன்னு இப்ப புரியுதா அமிர்தா? இந்த தடியன் தான் உன்னிடம் தப்பாக நடந்த பேர்வழி...”

“என்னது இவனா? இல்லே...அது ரிஷி தான்.”

“உன்னை நான் தான் தூக்கிட்டு வரச் சொன்னேன்.”

“நீயா? நினச்சேன். நைசா என் குடிகார அப்பா மேல் பழியைப் போட்டு தாயம்மாவிடம் உன் விசுவாசத்தை காட்டத் தான் இப்படி பண்ணியா?”

“இல்லை...சில உண்மைகளை நீ நேரில் தெருஞ்சுக்றது நல்லது. அதுக்குத் தான். அமிர்தா....போலீஸ் இந்த பங்களாவை சுத்தி வளைச்சிருக்கு. தப்பியோடிய கைதியான உங்கப்பாவை பிடிச்சு கொடுக்கும் நோக்கத்துடன் நான் தான் போலீசுக்கு போன் செய்தேன். என்னைக் கடத்தி மிரட்ட நினைத்தான்...அவனை அவன் பொறியிலேயே சிக்க வச்சுட்டேன்....கொலை முயற்சி என்று உள்ளே தள்ளிவிடலாம்..”

“மெடல் குத்திக்கோ. அரசாங்கத்திடம் பரிசு வாங்கிக்கோ. ரிஷி செய்த காரியத்தை அப்படியே விட்டுடறதா? அவனை ஏன் காப்பாத்த நினைக்றே? சீ என்ன அவலம்? பெத்த அப்பா குடிகாரன். வந்த அப்பா பீடோபில்---- குழந்தைகளை நாசமாக்கும் நாய். எனக்கு அப்பாவே வேண்டாம். வேண்டாம். வேண்டாம்...நான் போலீஸ் கம்ப்ளைன் கொடுக்கப் போறேன்.”

“கண்டிப்பா கொடு. உன்னை பலாத்காரமா கட்டிபிடித்து கேவலப்படுதிய அந்த மனிதனை நீ சும்மா விடக் கூடாது அமிர்தா.

டேய் போடா...அந்த ரிஷியை வரச் சொல்.”

அவன் தயங்கினான். “போடான்னு சொல்றேன்லே...”

“துரோகி...எனக்கு சாதகமா இருப்பது போல் நடித்து என்னை தோல் உரித்து காட்ட நீ போட்ட பிளானை நான் நம்பி மோசம் போயிட்டேன்.” என்று உறுமினான் முத்துச் செல்வன்.. அவளிடம் அவன் பயப்படுவது அப்பட்டமாக தெரிந்தது. அமிர்தாவுக்கு இது ஆச்சர்யமாக இருந்தது.

“அடி செருப்பாலே. நாயே...மரியாதையா நீ அந்த ரிஷியை கூட்டி வா..போ..”

அவள் கட்டளை இட அவன் மறைந்தான். சிறிது நேரத்தில் ரிஷி வந்தார்.

அமிர்தா திடுக்கிட்டுப் பார்த்தாள்.

“என்ன தைரியம்? இவ இருக்கிற தைரியத்திலே தானே என் முன்னால் தெனாவெட்டா வந்து நிக்றே? ராஸ்கல். மித்ரா நீ இவ்வளவு கேவலமானவளா இருப்பேன்னு நான் நினைக்கலை. ரிஷியின் கையாள் தானே நீ..”

“அமிர்தா கூல். இவனுக்கு நீ என்ன தன்டனை கொடுக்கணுமோ கொடு. நான் அனுமதி தரேன். பயப்படாதே. அவன் உன்னை ஒன்றும் செய்ய முடியாது.”

அமிர்தா கண்ணீர் வழியும் முகத்துடன் “யூ பாஸ்டர்ட்...என் அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லவன் போல் நடிச்சு. என்னை நாசம் செய்ய வந்தியா? நீ நல்லாயிருப்பியா?” அருகில் வந்து அவன் மேல் காறித் துப்பினாள் அமிர்தா. அவன் தலை குனித்தான்.

“அமிர்தா. நீ இப்படி துப்பினால் அது சரியா வராது. இப்ப துப்பு...அவன் நிஜ முகத்தில் துப்பு.”

அந்தச் சண்டாளனின் முகத் திரையை இழுத்துப் பறித்தாள் மித்ரா. அங்கு ரிஷி இல்லை...அந்தக் குடிகாரன் நின்றான். அமிர்தா வாய் பிளந்து பார்த்தாள். ரிஷி போல் முகக் கவசம் அணிந்து இவளை தப்பாக கட்டிப்பிடித்து அவளுடய.....நினைக்கவே கூசியது.

“ஸோ....அமிர்தா உன்னைப் பெற்ற அருமை தந்தை தான் அந்த பாஸ்டர்ட்...இவனும் சந்திரிகாவும் தான் ப்ளான் பண்ணி இந்தக் காரியத்தை செஞசிருக்காங்க. ப்ளான் போடும்போது சந்திரிகா உயிரோட இருந்தாங்க. இந்த முகத் திரையை போட்டுக் கொண்டு அவளோடு போட்டோ எடுத்திருக்கான். அந்த போட்டோ பார்த்து தான் எனக்கு உண்மை புரிந்தது. பிரசாத் தான் அதை கண்டுபிடித்தார். அதில் ரிஷி சாருக்கு இருப்பது போல் மச்சம் இல்லை. அதை வச்சு தான் ரிஷி குற்றவாளி இல்லை என்று கண்டுபிடிச்சோம். இவனை அரஸ்ட் பண்ண எண்ணியிருந்தேன். அதுக்குள்ளே எலி தானே வந்து என் வலையில் மாட்டியது. அமிர்தா இது சிலிக்கான் மாஸ்க். உன் ரிஷி அப்பாவின் முகம் போலவே செய்து மாட்டிக் கொண்டான். இதை செய்ய நிறைய செலவாகும். அந்தச் செலவை ஏற்றுக்கொண்டு இவனை தூண்டிவிட்டது சந்திரிகா தான். அவள் இறந்ததும் இவனும் ஒரு கொலை கேசில் உள்ளே போய்விட்டான். இப்ப தப்பி வந்து தான் இந்த மாஸ்க்கை போட்டுக்கிட்டு உன்னிடம் கேவலமாக நடந்து ரிஷி தான் அப்படி நடந்தது என்று நம்ப வச்சிட்டான். இப்ப இவன் முகத்தில் நீ துப்பலாம்.”

அமிர்தா அதீத வெறுப்புடன் வெறித்துப் பார்த்தாள். அவனை நெருங்கி வந்து பார்த்தாள். கோபம் உச்சத்துக்கு போனது.

“சீ....நீ குடிகாரன் என்றபோது கூட உன்னை நான் வெறுக்கலை. இப்ப வெறுக்கறேன். என் மேல் நிஜமான அன்பும் பாசமும் வச்ச ரிஷி அப்பா எங்கே? சொந்த மகளிடமே அசிங்கமா நடந்த நீ எங்கே?...சீ..உன்னை மன்னிக்கவே முடியாது. உன் மேல் துப்பக் கூட எனக்கு பிடிக்கலை. என் எச்சில் உன் மேல் படக் கூட உனக்கு அருகதை இல்லை. பாவி....எங்கம்மாவின் நிம்மதியை குலைக்க, உனக்கு இந்த வழி தான் கிடைச்சுதா? உனக்கு வெக்கமாயில்லை? மித்ரா இவனை சுட்டு பொசுக்கணும்..”

“அந்த வேலையை என்னிடம் விட்டுவிடு.....த்ரீ நாட் த்ரீ..” என்று அவள் அழைக்க, யூனிபாரம் போட்ட போலீஸ் கான்ஸ்டபிள்கள் மித்ராவின் கட்டளை கேட்டு ஓடி வந்தனர். அந்தப் பொறுக்கியையும் அவன் கும்பலையும் இழுத்துக் கொண்டு சென்றனர்.

“இவங்களை போலீஸ் கஸ்டடியில் வையுங்க. நான் வந்துதிடறேன்...”

“எஸ் மேடம்...” சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் அவளுக்கு சல்யுட் அடித்துவிட்டு குற்றவாளிகளை போலீஸ் வேனில் ஏற்றினார்.

“அவங்க எதுக்கு உனக்கு சல்யூட் அடிக்றாங்க? அப்படின்னா...”

“எஸ்...நான் இப்ப டி.எஸ்.பி மித்ரா. ஸ்டேட் போலீஸ் சர்வீஸ் எக்ஸாம் எழுதி பாஸ் பண்னேன். உங்க அம்மா தான் என்னை படிக்கச் சொல்லி என்கரேஜ் பண்னாங்க. அவங்க புண்ணியத்திலே தான் நான் இப்ப பெரிய பதவியில் கௌரவமா இருக்கேன். எனக்கு உடனே போஸ்டிங்ஸ் கிடச்சுது. சுலபமா இவனை மடக்க முடிஞ்சது....போலீஸ் கிட்டே எவ்வளவு நாள் டிமிக்கி கொடுக்க முடியும்? அவன் என்னையே கடத்திக் கொண்டு வந்தான். நான் போலீசுன்னு அவனுக்குத் தெரியாது. நான் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து போலீஸ் படையை வரவழைச்சேன். என்று விளக்கினாள் மித்ரா.

“மித்ரா....மை காட்...யூ ஆர் கிரேட்.”

“உங்கம்மாவிடம் நான் வாக்கு கொடுத்தேன். யார் குற்றவாளின்னு அமிர்தாவுக்கு புரிய வைக்கறேன்னு. புரிய வச்சிட்டேன்...”

அமிர்தா ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டாள்.

“நீ ரொம்ப கிரேட் மித்ரா. ஐ லவ் யூ...” மீண்டு மீண்டும் சொன்னாள்.

“வா...அம்மாக்கிட்டே போய் உண்மையை சொல்வோம். அவங்க கவலைப் படுவாங்க...உன்னை நான் தான் கடத்திக் கொண்டு வரச் சொன்னேன்னு அவங்களுக்குத் தெரியாது. இங்கே இவனுக்கும் தெரியாது. அவனுக்கு சாதகமா பேசறேன்னு அவன் நினச்சு ஏமாந்திட்டான். அதனாலே இந்த டீலுக்கு ஒத்துக்கிட்டான். அவனுக்கு இப்ப அதிர்ச்சியா இருக்கும். உன் மகளை கடத்திட்டு வான்னு சொன்னதும் ஏன்னு கேட்டான். உன் மனைவி தாயம்மாளுக்கு நீ கொடுக்கும் தண்டனை அது. அவளைக் காணாமல் துடிப்பாள்ன்னு சொன்னேன். உடனே ஒத்துக்கிட்டான். அந்த அளவு அவனுக்கு உங்கம்மா மேல் வெறுப்பு.

“அவனுக்கு நிஜமான அதிர்ச்சி. எனக்கு இன்ப அதிர்ச்சி.”

அமிர்தா நெஞ்சில் பலவித எண்ணங்கள்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லன்னு சொல்வாங்க. பெற்ற தந்தை என்பதாலேயே அந்த தகுதி வந்துவிடுமா? அந்தத் தகுதி ரிஷிக்குதான் உண்டு. ரிஷியை அவள் எவ்வளவு அவமானப்படுத்தியிருப்பாள்? அவர் முகத்தில் எப்படி முழிப்பாள்? அவர் அன்பில் களங்கம் கண்டாளே? அம்மா தான் அவரை எவ்வளவு நன்கு புரிஞ்சு வைச்சிருக்கா? எனக்கு அந்த நம்பிக்கையில்லாம போச்சே...சந்தேகப்பட்டுட்டேனே...மருகினாள் அமிர்தா....

“ரிஷி சாரின் ஷர்ட்டை அவன் திருடிக் கொண்டு போயிருக்கான். உங்க தெருவில் உள்ள ஐயர்ன்காரனிடம் ஐயர்ன் பண்ணக் கொடுத்திருக்காங்க உங்கம்மா. அதை அவனிடமிருந்து வாங்கியிருக்கான். நீங்க அயர்ன் பண்ண கொடுத்த ஷர்ட்டை இவன்... “ஐயா இந்த ஷர்ட்டை எனக்கு கொடுக்கச் சொல்லிட்டார்” ன்னு சொல்லி வாங்கிட்டுப் போயிட்டான். அதை போட்டுக் கொண்டு மாஸ்க்கையும் போட்டதும் நீ அது ரிஷி சார் தான்னு நினச்சிட்டே....ஷர்ட் வேற மிஸ்லீட் பண்ணிடுச்சு. உங்கம்மாவும் அப்பாவும் ஆனந்னும் வெளியே போனதை பார்த்திட்டு, பாம்பு உள்ளே நுழஞ்சிட்டுது. எல்லாம் நானும் பிரசாதும் கண்டு பிடிச்சோம்.”

“எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு மித்ரா. நான் அம்மாவை நம்பலை. ரிஷி அப்பாவை தப்பா நினச்சேன். எனக்கு அழுகை அழுகையா வருது.”

மித்ரா அவளை அணைத்துக் கொண்டாள்.

“நீ சின்னப் பொண்ணு தானே? இப்படியெல்லாம் வேஷம் போட்டால் யாருக்குத் தான் சந்தேகம் வராது? இப்ப என்ன? எல்லாம் தான் கிளியர் ஆச்சே. சிரி...”

“ரிஷி அப்பா என்னை மன்னிப்பாரா?”

“அவர் பிரசாத்தைவிட உன் மேல் தான் உயிரையே வச்சிருக்கார். அவர் உன்னை புரிஞ்சுக்குவார். டோன்ட் வொர்ரி.”

அமிர்தா முகத்தில் சந்தோஷ ரேகைகள் படர்ந்தது.

ஜெயிலில் சென்றும் தாயம்மாவை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடனே இருத்திருக்கிறான் அந்த கேடு கெட்ட தந்தை. பத்து வருஷமாக அது தான் அவன் கனவு. ரிஷியின் மனைவி சந்திரிகா அவனைத் தேடித் பிடித்து ரிஷி—தாயம்மா நன்றாக வாழக் கூடாது, அவர்களை பிரிக்கணும்னு சொன்னாள். ரிஷி போல் முகத் திரையை போட்டுக் கொண்டு உன் மகளை நெருங்கி பலாத்காரமாக கட்டிப்பிடி பழி ரிஷி மேல் விழும். அதற்கு ரிஷியின் சட்டையை திருடி வந்து மாட்டிக் கொள்.....தாயம்மா அவனை துரத்திவிடுவாள் என்று அவள் கணக்கு போட்டு சொல்லிக் கொடுத்திருக்கா. இந்தக் கயவனும் அதை மனசில் ஏற்றிக் கொண்டு அப்படியே செய்திருக்கான். பிறகு அவர்கள் பிரிந்ததும் சந்தோஷப்பட்டான். ஐடியா கொடுத்தவள் இறந்து போனாள். ஆனால் அவள் விட்டுச் சென்ற விஷ வார்த்தைகள் அவனின் ரத்தத்தில் கலந்துவிட்டது. “பார் உன் புது புருஷன் உன் மகளை நாசம் செய்துவிடுவான்” என்று தாயம்மா ரிஷியை கல்யாணம் செய்து கொண்டபோது, அதை பொறுக்காமல் சாபம் இட்டானே....வெறியுடன் அதை நிறைவேற்றிவிட்டான். ஆனால் மித்ரா வந்து அவனைக் கண்டுபிடித்துவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளை கொன்றுவிட முடிவு செய்து தான் அவளைக் கடத்தினான். அவள் மண்டையில் அடித்து அவளை காயப்படுதினான். மித்ராவிடம் அதிகாரமும் துப்பாக்கியும் இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரே போன் கால்.....மித்ராவின் கட்டளைப்படி போலிஸ் பங்களாவை சுற்றி வளைத்துவிட்டது. அவளே ஒரு போலிஸ் அதிகாரி என்று அவனுக்கு அப்ப தான் புரிந்தது. அவன் முகத் திரை கிழிந்தது. எல்லா உண்மையும் வெளி வந்தது. அவன் தளி குனிந்து நின்றான்.

ஜெயில் வாசம் முத்துச் செல்வனுக்கு புதிதல்ல. ஆனால் அவன் தீய எண்ணாம் நிறைவேறாமல் அகப்பட்டுக் கொண்டதும் அவன் தன் குற்றம் உணர்ந்தான். மனைவி தாயம்மா மேல் உள்ள பழி வாங்கும் உணர்வால் சந்திரிகாவுடன் சேர்ந்து அவன் செய்த சதி அவனுக்கு நினைத்துப் பார்த்த போது அவமானமாக இருந்தது. இந்திப் புத்தி முதலிலேயே இருந்திருந்தால் அவனுக்கு கிடைத்த பொக்கிஷத்தை இப்படி விட்டிருப்பானா? அந்த ரிஷியின் பெருந்தன்மையும் உயர்ந்த குணமும் அவனுக்குப் புரிந்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்? அவன் ஜெயில் கம்பிகளை என்னும் போது இதெல்லாம் சேர்த்தே எண்ணுகிறான். பெற்ற பெண்ணை அவனே சென்று அசிங்கமாக நெருங்கி அந்த பழியை வளர்த்த தந்தை ரிஷி மேல் போட்டு தாயம்மா அவமானப் படவேண்டும்...ரிஷியை பிரிய வேண்டும் என்று நினைத்தான். தரமாம் ஜெயித்துவிட்டது. அவனை அவன் மகளே காறித் துப்பிவிட்டாள். அந்த எச்சில் அவன் உள்ளத்தை சுத்தப்படுத்தியது. தாயம்மாவும் அவள் கணவன் ரிஷியும் அவனை ஜெயிலில் பார்க்க வந்தார்கள்.

“பெத்துட்டா மட்டும் தந்தை ஆயிட முடியாது. உனக்கு கிடைச்ச மலர்களை நீ நெருப்பிலே போட்டிட்டே. இதோ இவர், பெறாத தந்தை அந்த மலர்களை நெஞ்சில் தாங்கிக்கிட்டார். கருகாம காப்பாத்திட்டார். அது பொறுக்காம, அவர் மேல் களங்கம் கற்பிக்க எவ்வளவு கேவலமான காரியம் செஞ்சிட்டே. அவர் எங்கே நீ எங்கே? இனிமேலாவது திருந்தி வாழ முயற்சிக்கணும். அப்ப தான் நீ மனுஷன். நீ செய்த காரியத்துக்காக உன்னை ஜெயிலில் போட்டிருந்தா நீ வெளி வரவே முடியாதபடி சட்டம் உன்னை தண்டிச்சிருக்கும்.. மகள் அம்ருதாவின் நலம் கருதி....உனக்கு

போலீசை கொல்ல முயற்சித்தேங்கற பழியோட டீசெண்ட்டா போச்சு. உன் தண்டனை காலம் குறையலாம். பிழைச்சுப் போ.....இனிமே வாலாட்டினே அவ்வளோதான்...நீ உயிரோட இருக்க மாட்டே...” என்றாள் தாயம்மா காட்டமாக.

“என்னை மன்னிச்சிடு தாயம்மா. நான் வசவே அருகதை இல்லாதவன். எனக்கு ஈகோ....நான் நிராகரிச்ச மனைவி இப்ப சந்தோஷமா இருக்களேன்னு ஆத்திரம். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. சந்திரிகாவோடு சேர்ந்து தகாத செய்யலை செஞ்சிட்டேன். கடவுள் கூட என்னை மன்னிக்கக் மாட்டார். நான் திருந்திட்டேன் தாயம்மா. நீயும் பிள்ளைகளும் ரிஷியோட காலமெல்லாம் நல்லா வாழணும்னு வாழ்த்றேன்மா. அமிர்தாவை இந்த கேடு கெட்ட ஜென்மத்தை மன்னிக்கச் சொல்லுமா...” முகத்தை மூடிக் கொண்டு அழுதான்.

“தேங்க்ஸ். முத்துச் செல்வன். இப்ப தான் நீங்க முத்து. உங்க மன மாத்தத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...” என்று சொல்லிய ரிஷி அவனை மன்னித்துவிட்டதை உணர்த்தினார். .

தன்னோட ரத்தம் என்ற துடிப்பு கூட இல்லாமல் மகளின் பிஞ்சு மனசை எப்படியெல்லாம் சித்ரவதை செய்திருக்கான் அவன்? மித்ரா கசப்புடன் எண்ணினாள். ரிஷி சார் மகளை எவ்வளவு வாஞ்சையுடன் பார்த்தார்! ரிஷி அப்பா கால் தூசி பெறுவானா இவன்? இவெனெல்லாம் உயிருடன் இருப்பதே பாவம்!

“ஸாரி அப்பா...என்னை மனிச்சிடுங்க ப்ளீஸ்...” கண்ணீர் காவிரியாக வழிந்து ஓட அமிர்தா தந்தையின் நெஞ்சில் சாய்ந்தாள். தேம்பித் தேம்பி அழுதாள்.

“ஸ்வீட்ஹார்ட்....நீ அழக் கூடாது. உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டும்டா....எல்லாம் கெட்ட நேரம். போய்விட்டது. இனி எல்லாம் வசந்தமே.....நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் மகள் எனக்கு கிடைச்சிட்டா. நன்றி கடவுளே...”

அந்த வெள்ளை உள்ளம் மகத்தான அந்த தருணத்தை கொண்டாடியது. அது தான் தந்தை. மகள் நெஞ்சில் எட்டி உதைத்தாலும் பூவைத் தான் கொடுக்கும்.

எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. நைசாக அந்த இடத்தை விட்டு நழுவினாள் மித்ரா.

“எங்கே போறே?” அவள் கையை பிடித்து இழுத்தான் மோகன்.

“மோகன்....நான் எங்கே போவேன்? என் டியூட்டியை பார்க்கப் போறேன்.”

“மேடம்..இப்ப உங்களுக்கு ஒரு முக்கிய டுட்டி இருக்கு. உங்க அப்பாக்கிட்டே பேசிட்டுப் போங்க....”

“அப்பா எங்கே இங்கே?”

அதற்குள் மித்ராவின் தந்தை வந்தார்.

“மகளே நீ உடனடியாக இந்த மோகனை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும். கல்யாண நாள் பார்க்க உங்கம்மா பஞ்சாங்கத்தை பார்த்திட்டு இருக்கா. உன் அண்ணியும் அண்ணனும் வீட்டில் வந்து விருந்து சாப்பிட்டிட்டு போயிருக்காங்க. உன் நிச்சயதார்த்த தேதியை நீ இல்லாமலே முடிவு பண்ணியாச்சு. உன் மாமியாரும் ரிஷியும் சம்மதம் சொல்லியாச்சு.”

“அப்படியா அது எப்படி என்னைக் கேக்காமல் நீங்க முடிவு பண்ணலாம்?”

அமிர்தா ஓடி வந்தாள். அவள் கையில் ஒரு ஸ்லேட் இருந்தது. “உங்கப்பா சொன்னா கேக்கணும். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சிலேட்டில் எழுதியிருந்தது.

மித்ரா பிகு பண்ணிக் கொண்டு “விட மாட்டீங்களே...” என்று வெட்கத்துடன் சிரித்தாள். தாயம்மா அவள் அருகே வந்து

“வெளியிலே மட்டும் நீ புலியில்லை. வீட்டிலும் புலி...எங்க சந்தோஷத்துக்கு நீ தான் காரணம். தாங்க்ஸ் மித்ரா.” என்றாள். மாலாவும் பிரபுவும் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். வீட்டுக்குப் போய் அம்மாவிடமும், போனில் கஸ்தூரி அக்காவிடமும் ஆசிகள் பெற்றுக் கொண்டாள் மித்ரா.

தன் உயிரை கொடுத்தாவது மகளை காபந்து பண்ண தயாராக உள்ள பெறாத தந்தை ரிஷி. உயிர் வர காரணமாக இருந்தும், மகளை நாசம் செய்ய வந்த விஷக் கிருமி இந்த நிஜத் தந்தை. அவன் மேல் மகளை கெடுக்க வந்த பாவின்னு கேஸ் போட்டால் அமிர்தாவின் எதிர்காலம் பாதிக்கப் படும் என்பதால்......டி.எஸ்.பி மித்ராவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக என்று அவன் மேல் கேஸ் போடப் பட்டது.

ஒரு நல்ல தந்தையாக இருக்க ஒரு மகளை பெற வேண்டும் என்ற அவசியமில்லை. மனசால் பெற்றாலே போதும். அப்படிப்பட்ட தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் இருக்கப் போகிறது ஒரு பெண்ணுக்கு?.

“அப்பா...எனக்கு ஐஸ்கிரீம் வேணும்...இப்பவே...”

ஆரம்பிச்சிட்டியா? இப்ப உனக்கு மூணு வயசில்லை. பதிமூணு வயசு. பேசாம படு. ராத்திரி பத்து மணிக்கு என்ன ஐஸ்கிரீம்?” என்று அதட்டினாள் தாயம்மா.

“இரு ஸ்வீட் ஹார்ட்...” ரிஷியின் கார் அந்த இரவின் இருட்டை கிழித்துக் கொண்டு ஐஸ்கிரீம் வாங்க தார் ரோட்டில் வழுக்கிக் கொண்டு போனது.

ஐஸ்க்ரீமோடு வந்தவர் அமிர்தாவை அருகில் அமர்த்திக்கொண்டு சொன்னார்.

“அமிர்தா...உன் அப்பாவை நீ மன்னித்து விடவேண்டும்.”

“போப்பா...அந்தாள் எனக்கு அப்பாவே இல்லை. அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். நீங்க என்ன சொன்னாலும் கேப்பேன்...ஆனா இதை கேக்கமாட்டேன்.”

“நான் உன் கிட்டே ஒண்ணு சொல்லவா? இந்த ஐஸ்க்ரீம் நீ சாப்பிடறே, ஏன்னா உனக்கு காச்சல் ஒன்றுமில்லை. ஆனா காச்சல் இருந்தா சாப்பிட முடியுமோ?”

“முடியாது. ஏனப்பா இந்த ஆராய்ச்சி?”

“உங்கப்பாவுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட முடியாது. ஏன்னா அவருக்கு நோய்.”

“என்னப்பா சொல்றீங்க? ஐஸ்கிரீமை எனக்கு கொடுங்க. எனக்கு நோய் இல்லையே.....அந்தாள் பத்தி எனக்கென்ன? .”

“உனக்கு நோய் வந்துவிடக் கூடாது. அதான் மன்னிக்கச் சொல்றேன். ஒரு பெண் குழந்தை நமக்கு கிடைச்சா அது நமக்கு வரப்பிரசாதம். அப்படி ஒரு பிரசாதம் தனக்கு கிடைசிருக்குன்னே தெரியாத அறியாமை நிறைந்த மனசு உங்க அப்பாவுக்கு. ஐஸ்க்ரீம் போல் பிறந்திருக்கும் உன்னை சேதப்படுத்தலாமோ? அவருக்கு கொடுத்து வைக்கலை. அது தான் அவர் அவருக்கே கொடுத்துக்கிட்டே தண்டனை. உனக்கு புரியும்படி சொல்றதுன்னா.....உங்கப்பாவுக்கு ஐஸ்க்ரீம் போன்ற உறவுகள் வேண்டாம். யாருக்கு நஷ்டம்? அவருக்குத்தான். உங்களை நழுவ விட்டதால் வரும் குற்ற உணர்வு தான் அவருக்கு கிடைத்த பெரிய தண்டனை. தண்டனை கிடைச்ச ஒருவரை நாம் மன்னிப்பது தானே முறை. மறந்துவிடு மன்னித்துவிடு. நான் ஏன் சொல்றேன்னா...நீ உன் மனதை இதனால் பாதிக்க விடக் கூடாதுன்னு தான். புரியுதா ஸ்வீட்ஹார்ட்? இப்ப சாப்பிடு...” மிக எளிதாக ஒரு பதிமூணு வயசு பொண்ணுக்கு புரிய வைத்துவிட்டார். அமிர்தா அவளையும் அறியாமல் சொன்னாள்.

“அப்பா...நீங்க சொன்னா கேப்பேன். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.”

அமிர்தா தீர்ப்பு சொல்லிவிட்டாள். எல்லோருக்கும் நிம்மதி. பிரசாத் வந்து வாழ்த்து சொல்கிறான். அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டாள் தாயம்மா.

ரிஷி ஒரு அற்புதமான மனிதர். விளக்கை அணைக்க நேரும் போதெல்லாம் ஒரு பாபத்தை செய்வது போல் அவர் மனம் நடுங்கும். ஒரு பெண் குழந்தையின் மனதை காயப்படுத்தும் போது அவருக்கு எப்படியிருக்கும் தெரியுமா? ஒரு புன்னகையை கொல்வது போல் இருக்கும். ஒரு நாவை அறுப்பது போல் இருக்கும். எப்படி அமிர்தாவின் தந்தை அந்தக் காரியத்தை செய்தார் என்று ரிஷிக்கு விளங்கவேயில்லை. எவ்வளவு கொடூரமான செயல் அது! படிக்கத் தெரியாதவன் கையில் ஒரு அழகிய கவிதை கிடைத்தால் அவன் அதை வாசிக்கவா செய்வான்? தாயம்மா, அமிர்தா என்ற கவிதைகளை அவன் பொட்டலமாக கட்டி எறிந்துவிட்டான். அவருக்கு லாபம் தான். கடவுளே நான் வாழ, உன்னிடம் பூமியில் ஒரு சின்ன இடம் கேட்டேன். எனக்கு பூமியையே பரிசாக கொடுத்திட்டே. நன்றி இறைவா. என்று அவர் நன்றியோடு சாமியை வணங்குகிறார்.

பிரிந்து இருந்தபோது தாயம்மா என்ற மலர்

அமிர்தா என்ற மலர்

மோகன் என்ற மலர்

எல்லோரும் ரிஷிக்கு கனவில் காணும் மலர்களாக இருந்தனர். வெறும் கனவாகவே போய்விடுமோ என்று மறுகினார். இன்று அவை மனம் வீசும் நிஜ மலர்கள்.. குறிஞ்சி மலராக மகன் பிரசாத். ரிஷியின் உள்ளம் நிறைந்து போனது.

நிறைந்தது.
 
thankyou shanthi
 
Top